Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
‘இருவருமே காதலராகி விட்டனர்’
 

image_a7713015b1.jpgபனிபடர்ந்த மலைநாட்டின் வீதியோரத்தில் பஸ்ஸுக்காகக் காத்திருந்தாள் பருவ மங்கை. அவள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அந்த வீதிவழியே மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் அவள் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டான். உதவி வேண்டுமா எனக் கேட்டால் தப்பாக எடுத்தக்கொள்வாளோ என அஞ்சினான். என்றாலும் துணிவை வரவழைத்துக் கொண்டு, “பஸ் தாமதமாகும்; நீண்டதூரம் செல்ல வேண்டுமோ?” எனக் கரிசனையுடன் கேட்டான். 

அவளும், “ஆமாம்.. தூரம்தான், பரவாயில்லைப் பார்ப்போம்” என்றாள். “தப்பாக எண்ண வேண்டாம் எனது உதவி உங்களுக்கு தேவையா?” என்று கேட்ட அதே கணத்தில், ரவுடிகள் அங்கு வந்து, “என்னடா நம்ம, பொண்ணுடன் என்னவம்பு பண்ணுறாய்” என்றவாறு அவனைத் தாக்கினார்கள். புலியெனப் பாய்ந்த அந்தப் பெண், ரவுடிகளைத் துவம்சம் செய்தாள்.  

அவளிடம் அவன் இப்பொது சண்டைப்பயிற்சி பெறுகிறான். இருவருமே காதலராகி விட்டனர். எவ்வளவு காலத்துக்குத்தான் கதாநாயகன், நாயகியை வில்லன்களிடமிருந்து காப்பாற்றுவது?

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கல் சுவரைவிட வலுவானது, சிலந்திவலை! நம்பிக்கைக் கதை #MotivationStory

 
 

தன்னம்பிக்கை கதை

`ருவரை நம்பலாமா, வேண்டாமா என்பதைக் கண்டுபிடிப்பதற்குச் சிறந்த வழி அவரை நம்புவதுதான்’ என்று சொல்லியிருக்கிறார் எர்னெஸ்ட் ஹெம்ங்வே (Ernest Hemingway). மனிதர்களை நம்புவதில் மட்டுமல்ல... எதன் பொருட்டாக இருந்தாலும், அது ஆழமானதாக இருக்கவேண்டியது அவசியம். `நம்பினார் கெடுவதில்லை’ தொடங்கி `என்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை... நம்பாமல் கெட்டவர்கள் ஏராளம்’ என்கிற எம்.ஜி.ஆரின் பிரபல வசனம் வரை நம்பிக்கை உணர்த்தும் செய்திகள் ஏராளம். அழுத்தமாக, தீவிரமாகக்கூட வேண்டாம்... ஒரே ஒரு கணம் ஒன்றில் நம்பிக்கை வைத்தால்கூட அது நமக்கு அள்ளித்தரும் அற்புதம் அபாரமானது. அது எப்படி என்பதை விளக்குகிறது இந்தக் கதை.

 

அது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம். அமெரிக்காவின் கப்பற்படையைச் சேர்ந்த வீரன் அவன். ஓர் அசந்தர்ப்பமான சூழ்நிலையில் தன் படைப் பிரிவிலிருந்து பிரிந்துவிட்டான். ஒரு சின்னஞ்சிறிய தீவில் மாட்டிக்கொண்டான். `படைப்பிரிவைத் தேடி, அவர்களோடு சேர்ந்துகொள்ள வேண்டுமே...’ என்கிற ஏக்கம் ஒருபுறம். `எதிரிகளிடம் மாட்டிக்கொண்டுவிடக் கூடாதே’ என்கிற பயம் ஒருபுறம்.

ராணுவ வீரன்

அந்த கப்பற்படை வீரன் கடற்கரையோரமாக நடந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது... உணவும் கொஞ்சம் நீரும்கூட இருந்தது. ஆனால், எதிரிகள் குறித்த பயம் மட்டும் அவனைப் படுத்தியெடுத்தது. கொஞ்சம் தூரம் நடந்திருப்பான். ஒரு சத்தம் அவனை உலுக்கியது. காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு சத்தத்தைக் கவனித்தான். செடிகளை விலக்கிக்கொண்டு, சருகுகளை மிதித்துக்கொண்டு சிலர் வேகமாக முன்னேறி வரும் சத்தம். அவனுக்குப் பயம் உறுதியாகிவிட்டது. நிச்சயம் வருபவர்கள் எதிரிகளாகத்தான் இருக்க வேண்டும். தன்னந்தனியாக இருக்கிறான். கூட அவன் தோழர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது. ஒளிவதைத் தவிர வேறு வழியில்லை.

அவசர அவசரமாக ஒளிந்துகொள்ளத் தோதான இடம் ஒன்றைத் தேடினான். அருகில் ஒரு குன்று இருந்தது. அதன்மேல் வரிசையாகச் சில குகைகள் இருப்பது தெரிந்தது. விறுவிறுவென்று அந்தக் குன்றில் ஏறினான். நான்காவதாக இருந்த குகைக்குள் நுழைந்து உள்ளே போய் ஒடுங்கி, உட்கார்ந்துகொண்டான். கொஞ்சம் வசதியாக இருந்தது குகை; பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தான். கப்பற்படையில் இருந்ததால், ராணுவ நடைமுறைகளையும் செயல்பாடுகளையும் அவன் நன்கு அறிவான். வருபவர்கள் நடந்தவிதத்தை வைத்து அவர்கள் யாரையோ தேடிவருகிறார்கள் என்பதை அவன் உணர்வு சொன்னது. `அப்படித் தேடிவரும் பட்சத்தில் நிச்சயமாக இந்தக் குகைகளையும் விட்டுவைக்க மாட்டார்கள். அப்படியானால் என்னைக் கண்டுபிடித்துவிடுவார்கள். கண்டுபிடித்துவிட்டால்..? அவ்வளவுதான் உயிர் உடலில் தங்காது’ இப்படி நினைத்ததும் அவன் உடல் நடுங்கியது.

`இப்போது என்ன செய்வது? நாம் தப்பிப்போம் என்று நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. பிரார்த்தனை... அதை மட்டும்தான் இப்போது செய்ய முடியும்.’ அவன் கண்களை மூடி பிரார்த்தித்தான். `கடவுளே... என்னை என் எதிரிகளிடமிருந்து காப்பாற்று. உன்னை மனமார நம்புகிறேன்... மனமுருக வேண்டுகிறேன்...’ அவன் பிரார்த்தித்த அந்த ஒரு கணத்தில், தான் நிச்சயம் காப்பாற்றப்படுவோம் என்று முழுமனதோடு நம்பினான்.

`ஆனால்... அது என்ன..? கும்பலாகச் சிலர் அந்தக் குன்றின் மேல் ஏறிவருவதுபோலச் சத்தம் கேட்கிறதே..! நிச்சயம் அவர்கள்தான்... எதிரிகள்தான். அய்யோ... நான் என்ன செய்வேன்?’

இப்படி அவன் யோசித்துக்கொண்டிருந்தபோதே அதைப் பார்த்தான். அது ஒரு சிறிய சிலந்தி. உள்ளே ஒரு மனிதன் இருக்கிறானே என்கிற பயமில்லாமல், அது பாட்டுக்கு வேலையில் இறங்கியது. அந்தக் குகையின் வாசலில் ஒரு வலையைப் பின்ன ஆரம்பித்தது. அந்த வீரனுக்கு அது வேடிக்கையாக இருந்தது.

`நான் என்ன கேட்டேன்... கடவுள் என்ன செய்கிறார்? கல்லாலான ஒரு சுவரைக் கொண்டு இந்தக் குகை வாசலை கடவுள் மூடியிருக்க வேண்டாமா? ஒரு சிலந்தியை அனுப்பிவைத்திருக்கிறாரே...’ என்று நினைத்தான்.

இப்போது சில படை வீரர்கள் வரும் சத்தம் நன்றாகக் கேட்டது. அவர்கள் மேலே வந்துவிட்டார்கள். முதல் குகையருகே அவர்கள் நிற்பதும் அதற்குள்ளே ஓர் ஆள் நுழைந்து, `இங்கே யாரும் இல்லை’ என்று சொல்வதும் அவன் காதில் விழுந்தது. அவனுக்கு உடல் தூக்கிவாரிப்போட்டது. குகையின் கடைசி நுனிக்குப்போய் கற்பாறையை ஒட்டி உட்கார்ந்துகொண்டான்.

அந்தச் சிலந்தி வெளியே கேட்கும் ஆள் அரவம், உள்ளே அவன் இருப்பது எதையும் கண்டுகொள்ளவில்லை. அதுபாட்டுக்கு வலை பின்னுவதில் பிஸியாக இருந்தது.

சிலந்தி வலை

அவர்கள் இரண்டாவது குகைக்குள் நுழைந்து தேடிப் பார்த்தார்கள். எதுவும் அகப்படாமல் அடுத்த குகைக்குள் நுழைந்தார்கள். அதற்கடுத்து அவர்கள் இவனிருக்கும் குகைக்குள்தான் வந்தாக வேண்டும். எப்படியும் ஒருவன் உள்ளே வந்து பார்க்கத்தான் போகிறான். `கடவுளே...’ அவன் கண்களை மூடிக்கொண்டான். அவன் இதயம் வேகமாகத் துடித்தது. அவனிருந்த குகை வாசலில் சிலர் நிற்பதும், `நிச்சயம் இதுக்குள்ள யாரும் இருக்க மாட்டாங்க’ என்று ஒருவன் சொல்வதும் கேட்டது. அவர்கள் குகைக்குள் தேடாமலேயே அங்கிருந்து நகர்ந்துபோனார்கள். அன்றைக்கு அந்த வீரன் உயிர்பிழைத்தேவிட்டான்.

இப்போது அவனுக்குக் காரணம் புரிந்துவிட்டது. குகை வாசலில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறது ஒரு சிலந்தி. அப்படியானால், சிறிது நேரத்துக்கு முன்னால் யாரும் அதற்குள் நுழைந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி நினைத்துத்தான் எதிரிகள் உள்ளே நுழையாமல் சென்றுவிட்டார்கள்.

அவன் கண்களை மூடிக்கொண்டு சொன்னான்... `கடவுளே... மிக்க நன்றி. என்னை மன்னித்துவிடு கடவுளே... ஒரு கல் சுவரைவிட நீ அனுப்பிய சிலந்தியின் வலை வலுவானது என்பதை நான் மறந்துவிட்டேன்.’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
இலங்கையில் சீனர்கள் திருமணம்...
 

image_9257b6a634.jpgசீன நாட்டைச் சேர்ந்த 100 தம்பதிகள் இலங்கை சம்பிரதாயப்படி, கொழும்பில், நேற்று (17) திருமணம் பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர். இந்த வைபவம் கொழும்பு மாநகர சபை வளாகத்தில் நேற்று (17) பிற்பகல் நடைபெற்றது. (படப்பிடிப்பு: நிசல் பதுகே)

image_32b18ae277.jpgimage_73af99a6e4.jpgimage_1d01f1bd44.jpgimage_e4fcb3207a.jpgimage_c4c260ca00.jpgimage_5c49f5d83c.jpgimage_b9972e5d4d.jpgimage_e17d2d694f.jpgimage_c080b6e4db.jpgimage_7c75a71ff0.jpgimage_4bbdd23df8.jpgimage_788aec89f2.jpgimage_70a2c76639.jpg

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

தேயிலைக் கட்டிடங்கள்

 

 
16jkrGlenburn%20Tea%20Estate

கிளன்பார்ன் தேயிலைத் தோட்டம், டார்ஜிலிங்

 

சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகத் தேயிலை உற்பத்திசெய்யும் நாடு இந்தியா. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவில் தேயிலை பயிரிடப்பட்டு உற்பத்திசெய்ப்பட்டது தொடங்கியது.

             
16jkrBanyan%20Grove%20on%20Gatoonga%20Te

பான்யன் க்ரோவ், டார்ஜிலிங்

 

அசாமைச் சேர்ந்த மணிராம் தேவன் இந்தியாவில் முதன் முதலாகத் தேயிலைப் பயிரிட்டவர் எனச் சொல்லப்படுகிறது. தொடக்க காலத்தில் இந்தியாவில் தேயிலைப் பயன்பாடு பரவலாகவில்லை.

16jkrhappyvalley

ஹேப்பி வேலி, டார்ஜிலிங்

 

தேயிலைப் பயன்பாட்டை அதிகரிக்க நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக அறியப்பட்ட தேயிலை பிராண்ட் சஞ்சீவனி. கிழக்கிந்தியக் கம்பெனி அசாமில் அதிக அளவில் தேயிலை உற்பத்திசெய்தது.

16jkrkannanDevanMuseum

தேயிலை அருங்காட்சியகம், மூணாறு

 

தொடக்கத்தில் அசாமில் மட்டும் உற்பத்திசெய்யப்பட்ட தேயிலை பின்னர் டார்ஜிலிங், மூணாறு, ஊட்டி போன்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

16jkrteaKolkatta

டீ போர்டு அலுவலகம், கொல்கத்தா

 

உலகின் முதல் தரமான தேயிலையை உற்பத்திசெய்யும் நாடாகவும் இன்று இந்தியா இருக்கிறது.

16jkrtantea

டான் டீ, குன்னூர்

 

டாடாவின் டீ பாக்ஸ் உலக அளவில் மிகச் சிறந்த தேயிலையைத் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. தேயிலை உற்பத்திக்குத் தொடக்க காலத்தில் அடிமைகள்தாம் பயன்படுத்தப்பட்டனர்.

16jkrteaCupBalcony

தேயிலைக் கோப்பைக் கட்டிடம், ஜப்பான்

 

ஆனால், இன்று சுதந்திர இந்தியாவில் இந்த நிறுவனங்கள் மூலம் மக்கள் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

16jkrtantea1

ராயன் டான் டீ தொழிற்சாலை

 

தமிழ்நாட்டில் நீலகிரி மலைப்பகுதியில் தமிழ்நாடு தேயிலை உற்பத்தி நிறுவனமான டான்டீக்கு ஆலைகள் உள்ளன. உலகத் தேயிலை தினத்தை ஒட்டி இந்தியாவிலுள்ள பிரபலமான தேயிலைத் தயாரிப்பு நிறுவனங்களின் ஒளிப்படங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

3 மணி நேரத்தில் 21,619 மீம்கள்! மீம் மாரத்தானில் பின்னிப் பெடலெடுத்த க்ரியேட்டர்கள

 
Chennai: 

ஜெயிச்சாலும் தோத்தாலும் முதலில் மீசையை முறுக்குகிறார்களோ இல்லையோ, மீம்ஸ் போட்டு நொறுக்குகிறார்கள் மீம் க்ரியேட்டர்கள். (மன்னிச்சுடுங்க பாஸ்... சட்டுனு வேற யோசிக்க முடியலை ) சினிமா, அரசியல், சமூகம், குடும்பம், நட்பு என எதையும் பாரபட்சம் பார்க்காமல் வெச்சு செய்து வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய தேதிக்கு, கழுத்தைப் பிடித்து நெரிக்கும் பிரச்னைகளை மறந்து தமிழன் வயிறு வலிக்க சிரிக்கிறான் என்றால், அதற்கு காரணம் இந்தக் க்ரியேட்டர்கள்தான். அவர்களை அங்கீகரித்து கௌரவித்திருக்கிறது `மீம் மாரத்தான்'.

மீம் மாரத்தான்

 

 

`கும்பலா ஓடினா அது மாரத்தான், கும்பலா மீம்ஸ் போட்டா அது மீம் மாரத்தான்' என்ற விளக்கத்தோடு ஆரம்பித்தது  நிகழ்ச்சி. கையில ஒரு போன், மண்டை ஃபுல்லா ப்ரெய்ன், அவனுக்குனு ஒரு நேம், போடுறதெல்லாமே மீம்ஸ்' என மாரத்தான் பற்றிய ப்ரோமா வீடியோவை சில நாள்களுக்கு முன் யூடியூப்பில் வெளியிட்டிருந்தனர். அதையே கலாய்த்து எந்த க்ரியேட்டரோ மீம்ஸ் போட, `எவன் பார்த்த வேலைடா இது' என அதை மேடையிலும் ஒளிபரப்ப, அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. சென்னை, கிண்டியிலுள்ள ஹில்டன் இந்தியாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை  நடிகர் டேனியல் தொகுத்து வழங்கினார். `பார்ட்டி' படக்குழுவிலிருந்து வெங்கட் பிரபு, கயல் சந்திரன், சஞ்சிதா, `சென்னை 2 சிங்கப்பூர்' படக்குழுவிலிருந்து ஜிப்ரான், இயக்குநர் அப்பாஸ் அக்பர் மற்றும் அப்படத்தின் நடிகர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். மேலும், மீம் க்ரியேட்டர்களின் ஃபேவரைட்டான ஆர்.ஜே.பாலாஜி, `சினிமா விமர்சகர்' பிரசாந்த், `மெட்ராஸ் சென்ட்ரல்' கோபி மற்றும் சுதாகர் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்.

மேடையில், ஒவ்வொரு சிறப்பு விருந்தினரையும் டேனியல் அழைத்துப் பேசிக்கொண்டிருக்கும்போதே, டைமிங்கில் சுடச்சுட மீம்களைப் போட்டு தாளித்தனர் மீம்ஸ் க்ரியேட்டர்கள். அதிலும் வெங்கட்பிரபுவை வைத்து `அவர் படத்தைவிட ப்ளூப்பர்ஸ் நல்லாருக்கும்' என மீமைப் போட, வெங்கட்பிரபுவே `குபீர்' என சிரித்துவிட்டார். `சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்ல சினிமா விமர்சகர்களைக் கலாய்ச்சது மாதிரி, அடுத்தப் படத்துல மீம்ஸ் க்ரியேட்டர்களை கலாய்க்குறோம்' என மேடையிலேயே சபதம் எடுத்து கலகலப்பாக்கினார் வெங்கட்பிரபு. அதைத் தொடர்ந்து பேசிய ஜிப்ரான், `மீம்ஸ் க்ரியேட்டர்கள் ரொம்ப க்ரியேட்டிவான ஆட்கள். அவங்களுக்கு ஒரு படம் பிடிச்சிருந்தால், அதை  சிறப்பாக ஓட வைக்க அவங்களால் முடியும். நான் `சென்னை 2 சிங்கப்பூர்' படத்தை தைரியமாக தயாரிச்சதுக்கு மீம்ஸ் க்ரியேட்டர்களும் ஒரு காரணம்' என நன்றி கூறினார். `அதே கண்கள்', `அறம்', `மகளிர் மட்டும்', `தீரன்', `மாயவன்' என இந்த வருடத்தில் அவர் இசையமைத்து வெளியான அத்தனைப் படங்களுமே கவனிக்கவைத்தது. அதைச் சொல்லி டைமிங்கில் மீமை தட்டிவிட, நெகிழ்ந்துவிட்டார் ஜிப்ரான். 

கோபி சுதாகர்

 

 

மூன்று மணிநேரத்தில் 2 ஆயிரம் மீம்கள் என்ற இலக்கோடு மாரத்தானை ஆரம்பித்திருக்கிறார்கள். வெற்றிகரமாக இலக்கை அடைந்து `ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸி'ல் இடம்பெறுவதே குறிக்கோள். ஆனால், 2 ஆயிரம் எண்ணிக்கையெல்லாம் அசால்டாக தாண்டி, மூன்று மணிநேரத்தில் 21,619 மீம்ஸ்களை உருவாக்கி சாதனைப் படைத்திருக்கிறார்கள் நம் க்ரியேட்டர்கள்.  விருதினைப் பெற்றுக்கொண்டு பேசிய இந்த மாரத்தானின் ஒருங்கிணைப்பாளர் லோகேஷ், இதில் பங்கெடுத்த அனைத்து க்ரியேட்டர்களுக்கும் நன்றி கூறினார். பங்கெடுத்தவர்களில் அதிக எண்ணிக்கையில் மீம்ஸ் உருவாக்கிய மீம்ஸ்வாலாக்களுக்கு பரிசாக, அவர்களைப் பேங்காக் அழைத்துச் செல்லவிருக்கிறார்கள். வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சொன்னது ஒன்றே ஒன்றுதான் `மீம் க்ரியேட்டர்கள் அனைவரும் சமூக பொறுப்போடும் செயல்படவேண்டும்". சரிண்ணே... சரிண்ணே...

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

தமிழில் பேசி ஆங்கிலேய நீதிபதியைத் திணறடித்த ஆறுமுக நாவலர்! பிறந்ததினச் சிறப்புப் பகிர்வு!

 
 

ஆறுமுக நாவலர்

“தமிழும் சைவமும் என் இரண்டு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன்கொள்வதே என் கடன்; அவை வாழப் பணிபுரிவதே என் வாழ்வின் குறிக்கோள்” என்று சொல்லி அதன்வழி வாழ்ந்தவர் ஆறுமுக நாவலர். அவருடைய பிறந்த தினம் இன்று. 

 

ஓலைச்சுவடியில் இருந்த தமிழ், கரையான்களாலும் செல்களாலும் அழிவதைக் கண்டு மனம் வருத்தப்பட்ட ஆறுமுக நாவலர், அதைப் பதிப்பிக்கும் பணியில் களமிறங்கினார். ஓலைச்சுவடியில் இருந்த தமிழை அப்படியே பதிப்பிக்காமல், அதனைப் பல பிரதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதன்பிறகே பதிப்பித்தார். அவர் பதிப்பித்த நூல்களில் அனைத்தும் அதாவது, பக்க எண்கள்கூடத் தமிழ் எண்களாகவே இருக்கும். அதுபோல, பதிப்பித்த ஆண்டும் மாதமும் தமிழிலேயே இருக்கும். இப்படி அவர் பதிப்பித்த நூல்கள் 46. எழுதிய நூல்கள் 24.
தமிழுக்காகத் தம் இறுதிமூச்சுவரை வாழ்ந்த ஆறுமுக நாவலர், “கல்வியை விரும்பும் ஏழைக் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது பெரும் புண்ணியம்” என்று வலியுறுத்தினார். இதுகுறித்து ‘புத்தகம்’  என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், “கல்வியை விரும்பிக் கற்கும் மாணவர்களுக்கும், கல்வியிலே நன்கு தேர்ச்சியடைந்த ஆசிரியர்களுக்கும், இனி கற்க முயல்பவர்களுமாகிய எல்லாருக்கும் புத்தகங்கள் இன்றியமையாதவை. புத்தகங்கள் இன்றிக் கற்கப் புகுவோர் கோலின்றி நடக்கக் கருதிய குருடர்போல் ஆவர். யாதாயினும் ஒரு தொழிலைச் செய்பவனுக்கு அதனைச் செய்வதற்குரிய ஆயுதம் இன்றியமையாததுபோல, கல்வி கற்கும் மாணவர்களுக்கு அதனைக் கற்றலுக்குரிய புத்தகம் இன்றியமையாததேயாகும். ஆதலால், கல்வியை விரும்பிக் கற்கும் மாணவர்கள் புத்தகங்களைச் சம்பாதித்து, அவற்றைக் கிழிக்காமலும் அழுக்குப் படியாமலும், கெட்டுப் போகாமலும் பாதுகாத்து வைத்துப் படித்தல் வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார். 

தமிழ் மட்டுமல்லாது அன்றையக் காலத்திலேயே நன்கு ஆங்கிலப் புலமை பெற்றிருந்த ஆறுமுக நாவலர், ஒருமுறை சென்னைக் கடற்கரையில் நடந்து சென்றபோது, அருகிலிருந்த குடிசையில் தீப்பிடித்துவிட்டது. இந்த வழக்குச் சம்பந்தமாக சாட்சியம் அளிக்க வேண்டித் தன் சீடர்களுடன் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார். அங்கு நீதிபதியிடம், தன் தரப்பு விஷயங்களை ஆறுமுக நாவலர் ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பித்தார். இவர் ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு பொறாமைப்பட்ட அந்த ஆங்கிலேய நீதிபதி... ஆறுமுக நாவலரிடம், “நீங்கள் தமிழிலேயே சொல்லுங்கள்; அதை, நீதிமன்ற அதிகாரி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறுவார்” என்று உத்தரவிட்டார். 

ஆறுமுக நாவலரும் சரியென ஒப்புக்கொண்டு, “அஞ்ஞான்று எல்லிஎழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலோட்டப்புக்குழி” என்று தொடங்கினார். அவரின் செந்தமிழின் பேச்சைக் கேட்டு, அதை மொழிபெயர்க்க முடியாமல் ஆங்கிலேய மொழிபெயர்ப்பாளர் திணறிப்போனார். கோபமுற்ற நீதிபதி, மீண்டும் ஆறுமுக நாவலரிடம் ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட்டார். ஆனால், ஆறுமுக நாவலரோ மறுத்து தமிழிலேயே கூறினார். அவர் சொன்னதை அவரது சீடர், மொழிபெயர்த்துக் கூறினார். “சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர், கடற்கரையோரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது” என்பதுதான் ஆறுமுக நாவலர் கூறியதற்கு அர்த்தம். 

“வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம்தான்”  என்பதை 1874-ம் ஆண்டு வெளியிட்ட ‘இலங்கைப் பூமி சரித்திரம்’ நூலில் தெளிவுப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அந்த நூலில், “மதுபானம் மூலம் ஆங்கிலேயருக்கு ஆண்டுக்குப் பல லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. ஆங்கிலேயர், தமக்குச் சாராயத்தால் எய்தும் பொருளைப் பிறவாயில்கள் சிலவற்றால் எய்துவிக்கத் தலைப்பட்டுக்கொண்டு சாராயத்தை ஒழிப்பாராயின், இலங்கை மக்கள் செல்வமும் ஆரோக்கியமும் அடைவார்கள்” என்று மதுவுக்கு எதிராக அன்றே குரல்கொடுத்துள்ளார். 

 

இன்றைய நூற்றாண்டிலும் ஆறுமுக நாவலர் போன்ற தமிழறிஞர்கள் உயிருடன் இருந்திருந்தால்... தமிழுக்கு என்றுமே அழிவிருக்காது என்பது நிச்சயம். 

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

1935 : இலங்கையின் முதல் அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது

வரலாற்றில் இன்று…

டிசம்பர் – 18

 

1271 : குப்லாய் கான் தனது சீனப் பேர­ரசின் பெயரை ‘யுவான்’ என மாற்றிக் கொண்டான். சீனா, மொங்­கோ­லி­யாவில் யுவான் வம்சம் ஆரம்­ப­மா­னது.

1505 : பெல்­ஜிய மன்னன் ஜோன் யுவான் ஹோர்ன் தூக்­கி­லி­டப்­பட்டார்.

Lanka-Sama-Samaja-Party.jpg1642 : ஏபெல் டாஸ்மான் நியூ­ஸி­லாந்தில் காலடி பதித்த முத­லா­வது ஐரோப்­பி­ய­ரானார்.

1878 : கத்­தாரில் அல் தானி குடும்பம் ஆட்­சிக்கு வந்­தது.

1911 : சேர் பொன்­னம்­பலம் இரா­ம­நாதன் இலங்­கையின் சட்­ட­ச­பைக்கு தேசியப் பிர­தி­நி­தி­யாகத் தெரி­வானார்.

1926 : துருக்கி கிற­கோ­ரியன் நாட்­காட்­டிக்கு மாறி­யது.

1935 : இலங்­கையின் முத­லா­வது அர­சியல் கட்­சி­யான லங்கா சம­ச­மாஜக் கட்சி ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1941 : ஹொங்­கொங்கின் பிரித்­தா­னிய ஆளுனர் சர­ண­டைய மறுத்­ததைத் தொடர்ந்து ஹொங்கொங் மீது ஜப்பான் படை­யெ­டுத்­தது.

1944 : இரண்டாம் உலகப் போர்: ஐக்­கிய அமெ­ரிக்­காவின் விமா­னப்­படை விமா­னங்கள் சீனாவின் ஹன்கோவ் நகரில்
ஜப்­பா­னிய இரா­ணு­வத்­த­ளத்தின் மீது குண்­டு­களை வீசின.

1958 : உலகின் முத­லா­வது தொலைத்­தொ­டர்பு செய்­ம­தியா Project SCORE அமெ­ரிக்­கா­வினால் விண்­வெ­ளிக்கு ஏவப்­பட்­டது.
1966 : சனிக் கோளின் சந்­தி­ர­னான எப்­பி­மேத்­தியஸ் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

1973 : சோவியத் விண்­கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகி­யோ­ருடன் விண்­ணுக்கு ஏவப்­பட்­டது.

Chandrika1999-314x400.jpg1973 : இஸ்­லா­மிய அபி­வி­ருத்தி வங்கி சவூதி அரே­பி­யாவில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1978 : ஐ.நாவில் டொமி­னிக்கா இணைந்­தது.

1987 : லரீ வோல் தனது பேர்ள் கணனி நிர­லாக்க மொழியை வெளி­யிட்டார்.

1997 : எச்.டி.எம்.எல் 4.0 பதிப்பு வெளி­யி­டப்­பட்­டது.

1999 : கொழும்பு நக­ர­சபை வளா­கத்தில் நடை­பெற்ற தேர்தல் பிரச்­சார கூட்­டத்தின் போது, ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மீது நடத்­தப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் அவர் காய­ம­டைந்தார்.

1999 : ஜா-–எ­ல யில் நடை­பெற்ற ஐ.தே.க. தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் குண்டுத் தாக்­கு­தலில் ஓய்வு பெற்ற இரா­ணுவ அதி­காரி மேஜர் ஜெனரல் லக்கி அல்­கம கொல்­லப்­பட்டார்.

2005 : சென்­னையில் வெள்ள நிவா­ரணம் பெறு­வதில் ஏற்­பட்ட நெருக்­க­டியில் 42 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2006 : மலே­ஷி­யாவில் பாரிய வெள்ளம் ஏற்­பட்­டது. இதனால் 118 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 4 லட்சம் பேர் இடம்­பெ­யர்ந்­தனர்.

2006 : ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதலாவது தேர்தல் நடைபெற்றது.

2010 : டுனி­ஷி­யாவில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் ஆரம்­ப­மா­கின. ‘அரபு வசந்த’ புரட்­சியின் ஆரம்­ப­மாக இது அமைந்தது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

தொட்டிகளில் வளர்க்கப்படும் பவளப்பாறைகள், பவளப்பாறையடுக்குகளை பாதுகாக்குமா?

அழிவின் விளிம்பிலுள்ள பவளப்பாறையடுக்குகளை, தொட்டிகளில் வளர்க்கப்படும் பவளப்பாறைகள் மூலம் பாதுகாக்கும் முயற்சி பெரிய பவளப்பாறையடுக்கு அறக்கட்டளையின் நிதி ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

சோவியத் யூனியன் என்ற பெரும் சாம்ராஜ்யம் முன்னர் இருந்தகாலத்தில் மிகப்பெரும் சர்வாதிகாரத் தலைவராக விளங்கிய ஜோசப் ஸ்டாலின் பிறந்தநாள்.

இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது; அதன் பொருளாதாரம் மேம்பட்டது. ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதாரச் சீரமைப்புகள் குறுகிய கால நோக்கிலும் தொலை நோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930 களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைப்படுத்தல் கொள்கையை (Great Purge) பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாகக் கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் பயங்கரவாதி (Great Terror) என்றும் அழைக்கப்பட்டார்.

  • தொடங்கியவர்

ஓபாமாவை பதற்றத்துடன் பேட்டி கண்ட இளவரசர் ஹரி

Prince-Hari-who-was-nervous-about-Obama-
பி.பி.சி. வானொலி நிறுவனத்துக்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை பிரித்தானிய இளவரசர் ஹரி பதற்றத்துடன் பேட்டி கண்ட சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.  பி.பி.சி. வானொலி 4 – அலைவரிசைக்காக பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசர் ஹரி கௌரவ நேர்காணலாளராக செயல்பட்டிருந்தார்.

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பராக் ஒபமாவை நேர்காணல் செய்யும் பொறுப்பு இளவரசர் ஹரிக்கு வழங்கப்பட்டிருந்தது. குறித்த நேர்காணலின் ஒரு பகுதியை இளவரசர் ஹரியின் கென்சிங்டன் மாளிகை தற்போது வெளியிட்டுள்ளது. வீடியோவாக வெளியாகியுள்ள இந்த பதிவில் ஜனாதிபதி பதவிக் காலத்தின் இறுதிநாளில் ஒபாமாவின் மனநிலை, ஓய்வுக்கு பிந்தைய அவரது எதிர்கால திட்டம் போன்றவற்றைப் பற்றி ஒபாமா மனம் திறந்துள்ளார்.

முன்னதாக, தன்னை பேட்டி காணவந்த ஹரியிடம் ‘நான் பொறுமையாக பேசக் கூடியவன். இந்த பேட்டிக்காக வேகமாக பேச வேண்டுமா? என்று ஒபாமா கேட்க – அதற்கான அவசியமில்லை என ஹரி கூறுகிறார்.  பின்னர் பிரித்தானிய ஆங்கில சாயலில் பேச வேண்டுமா? என சிரித்தபடி ஒபாமா கேட்க ஹரி பதற்றத்துடன் சமாளிக்கும் காட்சி இந்த முன்னோட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் பிரித்தானிய அரச குடும்பத்தாருடன் ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேலும் நெருக்கமாக பழகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் குறித்த நேர்காணல் எதிர்வரும் 27-ம் திகதி பி.பி.சி.வானொலி 4 – அலைவரிசையில் ஒலிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Prince-Hari-who-was-nervous-about-Obama-Prince-Hari-who-was-nervous-about-Obama-Prince-Hari-who-was-nervous-about-Obama.

http://globaltamilnews.net

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘தவறு செய்தவர், பாவங்களைப் பற்றிக்கொள்கிறார்’
 

image_7b627e5d58.jpgஉங்களை ஒருவர் அநாவசியமாக, நியாயமற்றுத் திட்டி அவமானப்படுத்தும் போது, நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ, செய்த பாவங்களின் எடைகள் குறைக்கப்படுகின்றன. தவறு செய்தவர்களே அந்தப் பாவங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்.  

எங்களது தவறுகளுக்கான தண்டனைகள் பலவாறு அனுபவிக்கப்படுகின்றன. ஆனால், ஒருவரின் மேல் சுமத்தப்படும் வீண் பழிகளை இன்னுமொருவர் பாரம் சுமப்பது பரிதாபம்.  மனிதனின் சுமைகள் ஏதோ ஒரு விதமாக இறக்கப்பட்டு விடுகின்றன. எல்லோரும் சுதந்திர புருஷராகத் திகழ, செய்த தவறுகளுக்கு தண்டனையும் மன்னிப்பும் வழங்கப்படவேண்டும்.  

சிலர் படும் துன்பங்களில் அனேகமானவை, அவர்களால் உற்பத்தி செய்யப்பட்டவைதான்.  

விடுதலை பெறுவது என்பது, உலகின் நன்மதிப்பை முழுமையாகப் பெறுவதிலிருந்தே பெறப்படுகின்றது.  

கட்டுகளைக் களைய, செய்த பாவங்களை ஏற்று, உண்மைகளை உணர்வதுதான் ஒரே வழி. 

  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸ் சீசனை கொண்டாடும் வகையில் டூடுல் வெளியிட்ட கூகுள்

 

piPNG
34PNG
piPNG
34PNG

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் விடுமுறை சீசன் தொடங்குவதை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் சீசன் விடுமுறைகள் தொடங்க உள்ளன. இதனை முன்னிட்டு கூகுள் தனது முகப்புப் பக்கத்தில், தனது பயன்பாட்டாளர்களைக் கவரும் வகையில் டூடுல் வெளியிட்டுள்ளது.

முகப்புப் பக்கத்தில், பென்குவின்கள் மற்றும் கிளி ஒன்று விடுமுறை சீசனை கொண்டாடும் வகையில் தொலைபேசியில் உரையாடுகின்றன.

அதனை க்ளிக் செய்தால் அடுத்த பக்கத்தில் பென்குவின்கள் தங்களது நண்பர்களைக் காண தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு புறப்படும் டூடுலும், வாழ்த்துக் கடிதம் வாசிக்கும் டூடுலும் இடப்பெற்றுள்ளன.

2PNG
 

இந்த டூடுல் குறித்து கூகுள் நிறுவனம், "விடுமுறை சீசன் தொடங்கிவிட்டது. இந்த உடன்பிறப்புகள் (பென்குவின்கள்) இந்த சீசனை தங்களது உறவினர்களுடன் கொண்டாட மிகுந்த  உற்சாகமாக உள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவை புரியும் வேடிக்கையைப் பார்க்க காத்திருங்கள்" என்று கூறியுள்ளது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

திருடுவதைவிட மோசமானது வதந்தி! வார்த்தைகளின் சக்தியை உணர்த்தும் கதை #MotivationStory

 
 

கதை

`ருவரைப் பற்றிய வதந்தியையோ, எதிர்மறையான கருத்துகளையோ ஒருபோதும் பரப்பாதீர்கள்: அது அவர்களின் மரியாதையை மட்டுமல்ல, உங்களின் மரியாதையையும் குறைத்துவிடும்’ என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் பேச்சாளருமான பிரையன் கோஸ்லாவ் (Brian Koslow). `பெருசா விளம்பரமெல்லாம் இல்லை... மௌத் டாக்லேயே அது நல்ல படம்னு சேதி பரவி, நல்லா ஓட ஆரம்பிச்சிருச்சு’ என்று ஏதோ ஒரு படத்தைப் பற்றி, யாரோ பேசுவதைக் கேட்டிருப்போம். நேர்மறையான விமர்சனங்களுக்கே நம் மக்களிடம் இப்படி ஓர் அபாரமான வரவேற்பென்றால், எதிர்மறையான விமர்சனம், கருத்துகள், வதந்தி ஒருவரை என்னவெல்லாம் செய்யும்? நினைத்தாலே மனதை என்னவோ செய்கிறது அல்லவா! மோசமான ஒரு வதந்தியால் ஒருவர் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருப்பார், என்னவிதமான அவஸ்தைகளையெல்லாம் எதிர்கொண்டிருப்பார்? பேசுவதற்கு முன் யாருமே இது குறித்து யோசிப்பதில்லை. உண்மையில், நாம் உதிர்க்கும் வார்த்தைகளைத் திரும்ப அள்ளவே முடியாது என்பதுதான் நிதர்சனம். அதனால்தான், `வார்த்தைகளை அளந்து, தெரிந்து பேச வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள். இதை எளிமையாக விளக்குகிறது இந்தக் கதை...

 
 

அந்த முதியவர், பணி ஓய்வு பெற்றவர். வீட்டில் தனிமையில் இருந்தார். மனைவி இல்லை. பிள்ளைகளும் இல்லை. படித்தவர், ஒருகாலத்தில் பெரிய பதவியிலிருந்தவர்தான். ஆனால், கொஞ்சம் துடுக்குத்தனம் நிறைந்தவர். மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர். அவருடைய பக்கத்து வீட்டுக்கு ஒருவன் குடிவந்தான். அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை. யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான். மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான். இவருக்கு அவன் மேல் சந்தேகம். திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்... காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான். சில நாள்களில் மாலையில் போகிறான்... இரவில் வீடு திரும்புகிறான். நேரம் கெட்ட நேரத்துக்குப் போகிறான். இவரிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசுவதில்லை. இது ஒன்றே அவருக்குப் போதுமானதாக இருந்தது. ஒருவேளை அவன் திருடனாக இருப்பானோ..! இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது.

வதந்தி

காலை, மாலை வேளைகளில் பூங்காவில் உலாவப் போனபோது, தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார். காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றிய சந்தேகத்தைச் சொன்னார். `அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது. ஒருகட்டத்தில், போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து கொண்டுபோனார்கள். ஆனால், அவன் அப்பாவி, உண்மையிலேயே அவன் ஒரு டிரைவர்தான் என்பது நீருபணம் ஆனதும், அவனை விடுவித்துவிட்டார்கள்.

ஆனால், அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது. `நான் என்ன திருடனா... என்னைப் போய் கைதுசெய்துவிட்டார்களே... எல்லாம் இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால்தானே நடந்தது’ என்கிற கோபமும் ஆற்றாமையும் எழுந்தது. அவன், முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான். வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி விசாரித்தபோது முதியவர் இப்படிச் சொன்னார்... ``நான் யாரையும் காயப்படுத்தவில்லை. வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன்... அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.’’

டிரைவரோ, தன் தரப்பு நியாயத்தையும், தான் எப்படியெல்லாம் போலீஸால் அழைக்கப்பட்டான் என்பதையும், தனக்கு நேர்ந்த அவமானம் மனதை எப்படியெல்லாம் பாதித்தது என்பதையும், எல்லாம் பெரியவர் பரப்பிய வதந்தியாலும்தான் நடந்தது என்பதையும் எடுத்துச் சொன்னான்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கொஞ்சம் விவரமானவர். டிரைவரின் நிலையும், பெரியவரின் வீம்பும் அவருக்குப் புரிந்தது. ``சரி... இந்த வழக்குக்கான தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைக்கிறேன்’’ என்றவர், முதியவரை அழைத்தார். ``நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் ஒரு காகிதத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டுக்கு நீங்கள் காரில்போகும்போது, அந்த பேப்பரை கிழித்துத் துண்டு துண்டாக்குங்கள். போகிற வழியெல்லாம் ஒவ்வொரு துண்டாகப் போட்டுக்கொண்டே செல்லுங்கள். நாளை காலையில் வாருங்கள்’’ என்றார்.

அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். நீதிபதி, முதியவரை அழைத்தார். ``நான் சொன்னதுபோலச் செய்தீர்களா?’’

``ஆமாம் ஐயா.’’

``நேற்று நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக்கொண்டு வாருங்கள். அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன்.’’

``அது எப்படி ஐயா முடியும்? அந்தக் காகிதத் துண்டுகளையெல்லாம் காற்று எங்காவது கொண்டுபோய் போட்டிருக்கும். அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது?’’

நீதிபதி

``முடியாதில்லையா... அப்படித்தான் நீங்கள் சொன்ன வார்த்தைகளும். திரும்பப் பெற முடியாதவை. ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டவை. ஒருவரைப் பற்றி நல்லவிதமாக உங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லையென்றால், அவரைப் பற்றி எதையுமே சொல்லாதீர்கள். நம் வாய்க்கு நாம்தான் எஜமானனாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு நாம் அடிமைகளாக மாறாமல் இருப்போம். உண்மையில், வதந்தி என்பது ஒரு திருடனைவிட மோசமானது. ஏனென்றால், அது ஒரு மனிதனின் மதிப்பு, மரியாதை, கண்ணியம், நல்ல குணம் அனைத்தையும் களவாடிவிடுகிறது. அவற்றை அந்த மனிதருக்கு யாராலும் திரும்பத் தர முடியாது. ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... உங்கள் நடை தடுமாறினால், எப்படியாவது பேலன்ஸ் செய்து சரிசெய்துவிடலாம்; உங்கள் நாக்குத் தடுமாறினால், உங்கள் வார்த்தைகளை திரும்ப மீட்கவே முடியாது.’’

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படியும் இருக்கட்டும்... நீதிபதி முதியவருக்குச் சொன்ன அறிவுரை மிக முக்கியமானது, இல்லையா?

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

1983 : உலகக் கிண்ண கால்­பந்­தாட்டச் சம்­பியன் கிண்ணம் திரு­டப்­பட்­டது

வரலாற்றில் இன்று…

டிசம்பர் – 19

 

1154 : இங்­கி­லாந்தின் மன்­ன­ராக இரண்டாம் ஹென்றி முடி­சூ­டினார்.

1606 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் 13 குடி­யேற்ற நாடு­களில் முத­லா­வ­தான வேர்­ஜீ­னி­யாவின் ஜேம்ஸ்­டவுன் நகரில் இங்­கி­லாந்தில் இருந்து மூன்று கப்­பல்­களில் ஆங்­கி­லே­யர்கள் வந்­தி­றங்­கினர்.

varalaru.jpg1871 : யாழ்ப்­பா­ணத்தில் முதல் தட­வை­யாக கத்­தோ­லிக்க மத­குருப் பத­விகள் வழங்­கப்­பட்­டன.

1907 : பென்­சில்­வே­னி­யாவில் நிலக்­கரிச் சுரங்­கத்தில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 239 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1916 : முதலாம் உலகப் போரில் பிரான்ஸில் வேர்டன் என்ற இடத்தில் இடம்­பெற்ற சமரில் ஜேர்­ம­னியப் படை­களை பிரெஞ்சுப் படைகள் தோற்­க­டித்­தன.

1941 : அடோல்ஃப் ஹிட்லர் ஜேர்­ம­னிய இரா­ணு­வத்தின் தள­ப­தி­யானார்.

1961 : போர்த்­துக்­கேய குடி­யேற்ற நாடான டாமன் டையூ பகு­தியை இந்­தியா தன்­னுடன் இணைத்­துக்­கொண்­டது.

1963 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து சான்­சிபார் சுதந்­திரம் பெற்று, சுல்தான் ஹமூட் பின் முஹமட் தலை­மையில் முடி­யாட்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

1967 : இரு நாட்­களின் முன்னர் கடலில் நீந்­தும்­போது காணாமல் போன அவுஸ்­தி­ரே­லியப் பிர­தமர் ஹரல்ட் ஹோல்ட் இறந்து விட்­ட­தாக அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டது.

1972 : சந்­தி­ர­னுக்கு கடைசித் தட­வை­யாக மனி­தரை ஏற்றிச் சென்ற அப்­பல்லோ 17 பாது­காப்­பாக பூமிக்குத் திரும்­பி­யது.

1983 : உலக கிண்ண கால்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்­டி­களில் சம்­பியன் அணிக்கு வழங்­கப்­படும் அசல் ஜுலேஸ் ரிமேட் கிண்ணம் பிரே­ஸிலில் அந்­நாட்டு கால்­பந்­தாட்ட அமைப்பின் தலை­மை­ய­கத்தில் வைத்துத் திரு­டப்­பட்­டது. இக்­கிண்ணம் மீண்டும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

1984 : ஹொங்­கொங்கின் ஆட்­சியை ஜூலை 1,1997 இல் மக்கள் சீனக் குடி­ய­ர­சிடம் மீண்டும் ஒப்­ப­டைக்கும் ஒப்­பந்தம் சீனத் தலைவர் டெங் க்ஸியா­வோபிங், பிரித்­தா­னியப் பிர­தமர் மார்­கரெட் தட்சர் ஆகி­யோ­ருக்­கி­டையில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1986 : சோவியத் எதிர்ப்­பா­ளி­யான அந்­திரேய் சாகரொவ் வீட்டுக் காவலில் இருந்து விடு­விக்­கப்­பட்டார்.

1997 : இந்­தோ­னே­ஷி­யாவில் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்­கி­யதில் 104 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1997 : ஜேம்ஸ் கெமரூன் இயக்­கிய டைட்­டானிக் திரைப்­படம் வெளி­யா­னது.

2001 : ஆர்­ஜென்­டீ­னாவில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக பாரிய ஆர்ப்­பாட்­டங்கள் ஆரம்­ப­மா­கின.

2010 : இந்­திய கிரிக்கெட் நட்­சத்­தி­ர­மான சச்சின் டெண்­டுல்கர் டெஸ்ட் போட்­டி­களில் 50 ஆவது சதத்தைக் குவித்து புதிய மைல்­கல்லை எட்­டினார்.

2012 : தென் கொரியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக பார்க் குவென் ஹை தெரிவானார்.

2016 : ஜேர்மனியின் பேர்லின் நகரில் நத்தார் சந்தையில் மக்கள் மீது வாகனமொன்று மோதியதால் 12 பேர் உயிரிழந்ததுடன், 50 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

கின்னஸ் சாதனை படைத்த பிரான்ஸ் மணமகளின் திருமண ஆடை!

 

கின்னஸ் சாதனை படைத்த பிரான்ஸ் மணமகளின் திருமண ஆடை!

பிரான்ஸ் நாட்டில் பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு அணிந்த விசேட ஆடை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

8,095 மீற்றர் நீளம் உடையை அந்த ஆடையை ஒரு கட்டுமான நிறுவனம் உருவாக்கியுள்ளது. அதை 15 தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் 2 மாதங்களாக வடிவமைத்துள்ளனர்.

இத்திருமண உடை இதற்து முன்னைய கின்னஸ் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு 1203.9 மீற்றர் நீளமுடைய திருமண ஆடை தயாரிக்கப்பட்டது.

தற்போது அதை விட மிக நீளமாக உருவாக்கப்பட்ட இந்த ஆடை புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. மிக நீளமாக இருக்கும் இந்த ஆடை பல துண்டுகளாக வெட்டி எடுக்கப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதில் இருந்து கிடைக்கும் பணம் அறக்கட்டளை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை படைத்த பிரான்ஸ் மணமகளின் திருமண ஆடை!

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

உலகின் மிகவும் ஆபத்தான இடத்திற்குச் சுற்றுலா செல்ல ஆசையா?

 
செர்னோபில்

உக்ரைனின் செர்னோபில் நகரம் முன்பு பார்வையாளர்கள் செல்லக்கூடாத இடமாக இருந்தது. ஆனால், தற்போது உலகம் முழுவதிலும் உள்ள புதிய அனுபவத்தைத் தேடுபவர்களையும், ஆர்வமிக்க சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் காந்தமாக மாறியுள்ளது செர்னோபில்.

இங்கு சமீபத்தில் அரசு ஒரு விடுதியை திறந்தது. 31 வருடத்திற்கு முன்பு உலகின் மோசமான அணு விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் இந்த விடுதி உள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ்-வில் இருந்து இரண்டு மணிநேர பயணத்தில் 30 கிலோ மீட்டர் சுற்றளவிலான செர்னோபில் விலக்கு மண்டலத்திற்குச் செல்லலாம். இது உலகின் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்று. இங்கு வரையறுக்கப்பட்ட சில காலம் மட்டுமே மக்கள் தங்கலாம்.

நேரடியாக இங்கு சென்றுவிட முடியாது.

கதிர்வீச்சு கண்காணிப்பு கருவி மற்றும் அரசின் சிறப்பு அனுமதி கடிதத்துடன் இங்கு சென்றோம்.

செர்னோபில்

டிசம்பர் காலையில் கடும் பனி இருந்தபோதிலும், நாங்கள் மட்டும் இங்கு செல்லவில்லை. கைவிடப்பட்ட பகுதியை பார்வையிடுவதற்காகத் தினமும் காலை பேருந்துகளில் பார்வையாளர்கள் வருகிறார்கள். 2011-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் உக்ரைன் அரசு சுற்றுலாவை தொடங்கியதில் இருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் கைவிடப்பட்ட செர்னோபில் மற்றும் பிரிப்யாட் நகரத்தைப் பார்வையிட வருகிறார்கள்.

வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் அதிகரித்ததால், விலக்கு மண்டலத்தின் உள்ளே புதிய விடுதி திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஓர் இரவுக்கு 500 ரூபாய் செலவில் தங்கலாம். 96 படுக்கை வசதி கொண்ட இந்த விடுதிக்கும் அமெரிக்கா, பிரேசில், போலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து விருந்தினர்கள் வருகின்றனர்.

''அதிக நேரம் வெளியில் இருப்பது நல்லதல்ல என இங்கு சுற்றுலா பயணிகள் வந்தவுடன் எச்சரிக்கப்படுவார்கள்'' என்கிறார் விடுதியின் மேலாளர் ஸ்வித்லானா க்ரிட்சென்கோ.

செர்னோபில்

செர்னோபில்லை பார்வையிடுவது தனித்த அனுபவத்தைத் தரக்கூடியது. கதிர்வீச்சு பரிசோதனைக்கு பிறகே அனைவரும் செல்ல வேண்டும், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. எங்கு நடக்க வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. பொருட்களை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளைப் பின்பற்றுவோம் என உறுதியளிக்கும் படிவத்தில் எங்கள் வழிகாட்டி ஒலெக்ஸண்ட் கையெழுத்து வங்கிக்கொண்டார்.

சாப்பிடவோ, குடிக்கவோ, புகைபிடிக்கவோ வேண்டாம் என்றும் உலோக பொருட்களை தொட வேண்டாம் என்றும் எங்கள் வழிகாட்டி கேட்டுக்கொண்டார்.

ஆனால், இதுபோன்ற எச்சரிக்கைகள் சுற்றுலாப் பயணிகளைத் தடுக்கவில்லை.

செர்னோபில்

''ஒரு முழுமையான கைவிடப்பட்ட நகரத்தைப் பற்றி என் நண்பர் கூறினார். அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை.'' என்கிறார் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ள கிம்.

1986-ம் ஆண்டு செர்னோபில் அணு மின் நிலையத்தின் 4-ம் அணு உலை வெடித்ததில் இருந்து, இப்பகுதியில் நேரம் அப்படியே நின்றுவிட்டதைப் போல தோன்றுகிறது. வெடித்த அணு உலையால், கதிரியக்கம் மிக்க வேதிப் பொருள் பரவியது. பிரிப்யாட் நகரத்தில் வாழ்ந்த அனைத்து மக்கள் உட்பட, 2 லட்சம் மக்கள் உடனடியாக இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

செர்னோபில்

ஆளில்லாத கட்டடங்களையும், பனி படர்ந்த கார்களையும் தற்போது வரும் சுற்றுலா பயணிகள் பார்க்கலாம். மழலையர் பள்ளியில் துருப்பிடித்த படுக்கையின் மீது ஒரு குழந்தையின் பொம்மை கிடக்கும் படம் மறக்க முடியாதது.

விதிகளின்படி நடந்துகொண்டால் இந்த இடம் ஆபத்தானது அல்ல என உக்ரைன் அரசு கூறுகிறது.

செர்னோபில்

''கடுமையான நடத்தை விதிகளைப் பின்பற்றினால் நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்கள்'' என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களுக்கான உக்ரைன் அமைச்சர் ஓஸ்டாப் செமர்ராக் பிபிசியிடம் கூறுகிறார்.

அணு விபத்து நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பிய 80 வயதான இவன் செமினியூக், அப்போது முதல் இங்கு வாழ்ந்து வருகிறார். இவர் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

செர்னோபில் Image captionஇவன் செமினியூக்

''இரவு நேரத்தில் அணு உலை வெடித்தது'' என தனது சிறிய சமையலறையில் அமர்ந்துகொண்டு கூறுகிறார் இவன் செமினியூக்,

இங்கு வாழ்வது மிகவும் பாதுகாப்பானது என்கிறார் அவர்.

''சுற்றுலா பயணிகள் இங்கு வருவது மிகவும் நல்ல விஷயம் என நினைக்கிறேன். அவர்கள் பயப்படக்கூடாது'' என்கிறார் அவர்.

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

'எல்லாராலயும் அங்கே போய்டமுடியாது.... மர்மதேசம் அவலாஞ்சி! - ஊர் சுத்தலாம் வாங்க பாகம் 4 #Avalanche

 

avalanche

`நான் பல்பு வாங்கிற பையன்... அதனால என் லைஃப் ஒளி வீசுது..!’ என்று விஜய் சேதுபதி பாடியது எனக்கு நிச்சயம் பொருந்தும். ஸ்கூல் படிக்கும்போது பொண்ணுங்களிடம், அலுவலகத்தில் மேனேஜரிடம், வீட்டில் மனைவியிடம் என எல்லோரிடமும் பல்பு வாங்கியிருக்கிறேன். ஆனால், `தெய்வத்திருமகள்’ படத்திடம் நான் வாங்கிய பல்பு, அந்த இயற்கையே என்னைப் பார்த்துக் கேவலமாகச் சிரிப்பதுபோல் இருந்தது. ``ஊட்டிக்குப் பக்கத்துல அவலாஞ்சி... சாக்லேட் ஃபேக்டரி’’ என்று `தெய்வத்திருமகள்’ விக்ரமைவிட நான் அதிகமாக உளறியிருப்பேன். `இந்தத் தடவை அவலாஞ்சி ட்ரிப்பில் நிச்சயமாக அந்த சாக்லேட் ஃபேக்டரிக்குப் போய் ஒரு செல்ஃபி எடுத்துட்டு வந்துடணும்’ என்று சவால் விடாத குறையாகக் கிளம்பியவன், இப்போது விக்ரம் மாதிரியே `ஊட்டிக்குப் பக்கத்துல அவலாஞ்சி... அவலாஞ்சி’ எனப் பினாத்திக்கொண்டிருக்கிறேன். நிலாவைவிட அவலாஞ்சியின் அழகு அப்படி! இயற்கையின் மொத்த அழகும்கொண்டு குடியேறிய அவலாஞ்சியில், நான் சாக்லேட் ஃபேக்டரியைத் தேடியது என் தப்புதான். எனக்கு ஆழ்ந்த நன்றிகள்!

நீங்கள் ஊட்டிக்குப் போயிருக்கலாம்; மலர் பூங்காவில் ரோசாப்பூக்களோடு செல்ஃபி எடுத்திருக்கலாம்; உறையும் குளிரில் சில்லென போட்டிங் போயிருக்கலாம். அதேபோல் இதையும் நீங்கள் மிஸ் பண்ணியிருக்கலாம்! ஊட்டிக்குப் பக்கத்தில் பிரியும் சாலை வழியாக 28 கி.மீ பயணித்தால், அற்புதமான இரண்டாம் உலகமாக விரியும் அவலாஞ்சிதான் இந்த வார டூர் ஸ்பெஷல். 

avalanche

 

அவலாஞ்சி என்றால், பனிச்சரிவு என அர்த்தம். 1800-களில் இங்கே அடிக்கடி பனிச்சரிவு ஏற்படுமாம். அதனால், ஆங்கிலேயர்கள் இந்தப் பெயர் சூட்டியதாக வரலாறு. கோவையில் இருந்து கிளம்புவது அவலாஞ்சிக்கு பெஸ்ட் ரூட். `சென்னையிலிருந்து கோவைக்கு எதுக்கு ஆக்ஸிலரேட்டர் மிதிச்சுக்கிட்டு’ என்று கோவை வரை ரயில் ஏறினேன். அங்கிருந்து கார் பயணம். இங்கிருந்து நீங்கள் காரில்தான் போயாக வேண்டும். ஏனென்றால், அவலாஞ்சிக்கு பஸ் ரூட் கிடையாது.

மறுநாள் காலை, ரெஃப்ரெஷ்மென்ட். ஒரு நிஸான் காரில் புகைப்பட நிபுணர் சகிதமாகக் கிளம்பினேன். ஜி.பி.எஸ் ஆன் செய்தால், இரண்டு வழிகள் சொன்னது. மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி போவது ஒரு வழி. மாங்கரை, ஆனைகட்டி, முள்ளி வழியாக அவலாஞ்சி போவது இன்னொரு வழி. `கோயம்புத்தூர்க்காரங்க தடுக்கி விழுந்தா ஊட்டியிலதான் போய் விழுவாங்க’ என்றொரு பழமொழி உண்டு. நானும் அந்தப் பழமொழியில் சிக்க வேண்டாம் என ஒரு சின்ன ஆசை. ஊட்டி வழிக்குத் தடா!

முள்ளி ரூட்டை செட் செய்துகொண்டேன். இது கேரளா - தமிழ்நாடு பார்டர். `அடப்பாவி, அருமையான ஹில் ரோட்டை மிஸ்பண்றியே’ என்று நீங்கள் கவலைப்படுவது புரிகிறது. ஆனால், `கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்று டிராஃபிக்கே இல்லாமல், கார்களுக்கும் நமக்கும் சரியான ஆசை மூட்டும் இந்த முள்ளி மலைச்சாலை. அதைவிட, `அமைதி... அமைதியோ அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி’ என்று இந்த மலைச்சாலை அமைந்திருக்கும் விதம் `கண்ணா, இன்னொரு லட்டு தின்ன ஆசையா’ எனக் கூவுகிறது.

எனக்கு பங்ச்சுவாலிட்டி ரொம்ப முக்கியம். 11:30 மணியாகிவிட்டால், டீ/காபி சாப்பிட்டே ஆக வேண்டும். ஆனைகட்டிக்கு முன்னால், மாங்கரை என்றோர் ஊர் வந்தது. தயவுசெய்து மாங்கரையில் காரை பார்க் பண்ணிவிட்டு, சுக்குக்காபி சாப்பிட மறக்காதீர்கள். செம என்டர்டெயின்மென்ட் அம்சத்தை மிஸ்பண்ணிய பாவத்துக்கு ஆளாவீர்கள். மாங்கரை எல்லைக்குப் பக்கத்தில், அந்தக் கோயிலைப் பார்த்தேன். கூரை முழுக்க எம்.ஜி.ஆர் படங்கள். குஷ்பூவுக்குக் கோயில் கட்டியது தெரியும். இப்போ நயன்தாராவுக்குக்கூட கோயில் கட்டும் ப்ராசஸ் நடந்துகொண்டிருப்பதாகத் தகவல். எம்.ஜி.ஆருக்கு எப்போ கோயில் கட்டினார்கள்? இறங்கிய பிறகுதான் தெரிந்தது... அது டீக்கடை!

avalanche

ஸ்பீக்கரில் `தலைவன் இருக்கிறான் மயங்காதே...’ என்று எம்.ஜி.ஆர் பாடிக்கொண்டிருந்தார். விசாரித்தேன். டீ மாஸ்டர், படு... பயங்ங்ங்ங்ங்கரமான எம்.ஜி.ஆர் விசிறி. ``இந்தக் கடை எம்.ஜி.ஆர்-தானுங்க வெச்சுக் கொடுத்தது. நான் எம்.ஜி.ஆர் ப்ரியன் இல்லை; எம்.ஜி.ஆர் வெறியன்!’’ என்று ரைமிங்காக மிரட்டினார். பயந்துகொண்டே சுக்குக்காபியை உறிஞ்சினோம். எம்.ஜி.ஆர் பற்றி விமர்சித்தால், சுக்குக்காபியை மூஞ்சியில் ஊற்றிவிடுவார்போல! அவர் எம்.ஜி.ஆர் மேனரிசம் பண்ணியபடி டீ போட்டது, எம்.ஜி.ஆருக்குச் சூடம் ஏற்றி பிரார்த்தனை செய்தது, எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தது... எல்லாமே பத்து பக்கத்துக்கான ஆர்ட்டிக்கிள். இந்நேரம் `டைம்பாஸ்’ பத்திரிகை இருந்தால் எப்படி இருந்திருக்கும்? மிஸ் யூ டைம்பாஸ்!

ஆனைகட்டியைத் தாண்டியதும் முள்ளி மலைப்பாதை வந்திருந்தது. இது கேரளா பார்டர். கேரளவாசிகள் ரொம்ப நேர்மையானர்கள்போல. தமிழ்நாடு பார்டரில் கால் வைக்காமல், கேரள எல்லை தொடும் வரை லாட்டரிச் சீட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். `அந்தப் பயம் இருக்கணும்!’ 

செக்போஸ்ட் வந்தது. கடுமையான சோதனை நடந்தது. போலீஸ் சேட்டன்களின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதில் சொன்னேன். பிளாஸ்டிக் பொருள்கள், காலி வாட்டர் பாட்டில்கள் என எதற்கும் அனுமதி இல்லை. இதற்காகத்தான் நிறைய பேர் முள்ளி பாதையைத் தேர்ந்தெடுப்பதில்லைபோல! செக்போஸ்ட் தாண்டி இடதுபுறம் திரும்பினால், பில்லூர் அணைப்பகுதி. இது தமிழ்நாடு. நேராகப் போனால் கேரளா. இங்கு செக்கிங் முடித்துவிட்டு, தமிழ்நாட்டு ரூட்டைத் தேர்ந்தெடுத்தேன். பில்லூரிலிருந்து 50 கி.மீ தூரம்... கெத்தை, மஞ்சூர்... 37 கொண்டை ஊசிகள்... சில வளைவுகள்... அப்புறம் அவலாஞ்சி.

avalanche

பில்லூர் வழி மிரட்டியது. வழியில் மான்கள், கீரிகள், வரையாடுகள் என சின்னச் சின்ன விலங்குகளுக்கு `ஹாய்!' சொன்னோம். தமிழக விலங்கான வரையாடுகள், சில ஹாயாக வழியிலேயே படுத்துக்கிடந்தன. ஸாரி, நாம்தான் அதன் பாதையில் இல்லீகலாகச் சென்றோம். வரையாடுகளின் ஸ்பெஷல், மலை உச்சிகளில் எப்படிப்பட்ட சறுக்கல்களிலும், கிட்டத்தட்ட 90 டிகிரியில்கூட `ஸ்பைடர்மேன்’ போல அசால்ட்டாக ஏறி/இறங்கும் ஆற்றல்கொண்டவை. அதனால், வேட்டை மிருகங்களிடமிருந்து தப்பிக்க, மலை உச்சிகளில் செங்குத்தாக நின்றுகொள்ளுமாம். 

`ஆத்தாடி, குளிர ஆரம்பிச்சிடுச்சு!’ என்று உங்கள் கைகள் ஜெர்க்கினைத் தேட ஆரம்பித்துவிட்டால், அவலாஞ்சி வரப்போகிறது என அர்த்தம். ஸ்வெட்டரை அணிந்துவிட்டால், அவலாஞ்சி வந்துவிட்டது என அர்த்தம். நான் ஜெர்க்கினைப் போட்டுவிட்டேன். அவலாஞ்சி வந்திருந்தது. இதில் தூரல் வேறு அவ்வப்போது அடித்து, குளிர் கூட்டியது. குளிர், மழை என்றாலே மிளகாய் பஜ்ஜி, டீ சாப்பிட்டபடி செல்ஃபி எடுத்து போஸ்ட் போடுவதுதானே ஃபேஸ்புக் போராளிகளுக்கு அழகு. ஒரு டீக்கடைகூட இல்லை. எம்.ஜி.ஆர் விசிறியின் சுக்குக்காபியை மிஸ் செய்தேன்.

`அவலாஞ்சியில் தங்குவதற்கு இடம் இல்லை’ என யாராவது 20-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில், ஏதாவது பிளாக்கில் சுற்றுலாக் கட்டுரை எழுதியிருப்பார்கள். இப்போது கதையே வேறு! அவலாஞ்சியில் ரூம்கள் கிடைக்கின்றன. தமிழ்நாடு வனத்துறை நடத்தும் டார்மெட்டரிகூட உண்டு. ஆனால், இங்கு தங்குவதற்கு எக்கச்சக்க விதிமுறைகள் உண்டு. தமிழகத்தில் மிகவும் பழைமைவாய்ந்த கெஸ்ட்ஹவுஸ் இதுதான். 1852-ம் ஆண்டில் கட்டப்பட்டது என்றார்கள். ஊட்டியில் இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்றார்கள். ஆனால், எல்லாமே செம காஸ்ட்லி. இன்னொரு விஷயம் - `ரூம்தான் புக் பண்ணியாச்சே’ என்று நீங்கள் ஹாயாக அவலாஞ்சியில் கால் வைத்தால், லன்ச் நேரத்தில் நீங்கள் சோற்றில் கை வைப்பது சிரமம். 

avalanche

நான் `டெஸ்ட்டினி’ என்கிற ஹோட்டலில் ரூமை ஆன்லைனிலேயே புக் செய்திருந்தேன். கொஞ்சம் காஸ்ட்லிதான். மனசில்லாமல்தான் புக் பண்ணினேன். ஆனால், அவலாஞ்சியின் கறை படாத அழகைப் பார்த்ததும், `பணம் என்னடா பணம்!’ என்று பணத்தை விசிறிவிட்டுப் பாடத் தோன்றியது. கொடுத்துவைக்காத மகராசன்கள் ஊட்டியில் தங்கிவிட்டு, காலையில் கிளம்பி வருவது பெஸ்ட். அவலாஞ்சி செல்வதற்கு, ஊட்டி வனத்துறை அலுவலகத்திடம் அனுமதி வாங்க வேண்டும். முற்றிலும் ரிசர்வ் ஃபாரஸ்ட் என்பதால், குறிப்பிட்ட ஓர் எல்லை வரைதான் அனுமதி. அதனால்தான் அவலாஞ்சி அழகாக இருக்கிறது. 

`ஸ்டாப், இதுக்கப்புறம் கார் போகாது’ என்று விஜயகாந்த் படத்தில் வரும் வில்லன்கள்போல் இருந்த சிலர், ஓர் இடத்தில் காரைத் தடுத்தனர். டெஸ்ட்டினி ஹோட்டல் ஊழியர்கள் என்றார்கள். எங்களை இறக்கி, பழைய லேண்ட்ரோவர் மாடல் காரில் ஏற்றினார்கள். சேறு, சகதி, மேடு, பள்ளம் எனப் பயணித்தோம். ஆப்பிரிக்கா காடுகளில் ஊர்க்காரர்களைக் கடத்திச் செல்லும் எஃபெக்ட் தெரிந்தது. கடல் மட்டத்திலிருந்து 2,240 மீட்டர் உயரத்தில், மலைகளுக்கு நடுவில் அமைந்திருப்பதால் இந்த இடத்தில் சாலைகள் போடவில்லையாம். ஏன் சாலை போடவில்லை என்பதற்கு முக்கியமான காரணம் ஒன்றைச் சொன்னார் ஹோட்டல் சிப்பந்தி. ``ரோடு போட்டா, வெஹிக்கிள்ஸ் அதிகமாகி, பொல்யூஷன் ஜாஸ்தியாகிடும்னுதான் ரோடு போட கவர்ன்மென்ட் பெர்மிஷன் தரலை’’ என்ற தகவலைச் சொன்னார். கரெக்ட்தான்!

avalanche

இரண்டரை கி.மீ தாண்டியதும், ரூம் வந்திருந்தது. ``இங்கேயா தங்கப்போறோம்...’’ என்று தாங்க முடியாத சந்தோஷத்தில் கேட்டார் புகைப்பட நிபுணர். இங்கு சில நேரங்களில் 7 டிகிரிக்கும் கீழாகவெல்லாம் குளிர் மிரட்டும் என்று மிரட்டினார்கள். எனவே, மலிவு விலை ஸ்வெட்டர்கள், அவலாஞ்சியில் வேலைக்கு ஆகாது என்பதை நினைவில்கொள்க. 

ஹோட்டலில் தங்கிவிட்டு, மறுநாள் கிளம்பினேன். முதல் நாள் அடிக்கடி பெய்த மழையால், தோழியின் திருமணத்துக்குப் போகும் பருவப் பெண்ணைப்போல செம அழகாக இருந்தது அவலாஞ்சி. சுற்றிலும் ஏரி, அதைத் தாண்டி கடவுள் கன்னாபின்னாவென கையெழுத்துப் போட்டதுபோல் மேற்குத் தொடர்ச்சி மலை, டிராஃப்ட்டில் விழுந்த மெயில்போல உள்ளே என்ட்ரி ஆக முடியாமல் தவித்த வெயில், வார்த்தை சொல்ல விழைந்தால் வாயில் வட்டமிடும் புகை... வாழ்த்த வார்த்தையில்லை; மயங்குகிறேன் அவலாஞ்சி. `தெய்வத்திருமகள்’ படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா என ஞாபகம். நீரவ்ஷா என்றில்லை; யார் கேமராவைக் கையில் எடுத்தாலும், அழகு  தானாக வந்து அப்பிக்கொள்ளும்போல! ஸாரி நீரவ்ஷா!

avalanche

மறுபடியும் லேண்ட்ரோவர் பயணம். `அவலாஞ்சி ஏரியைப் பார்க்க மறந்துடாதீங்க’ என்று மறக்காமல் சொல்லியனுப்பினார், லேண்ட்ரோவர் டிரைவர். மறுபடியும் எங்கள் காரில் பயணம். நிலவு பார்க்கும் நிலைக்கண்ணாடிபோல் தெளிந்து காணப்பட்டது ஓர் ஏரி. இதுதான் எமரால்டு ஏரி என்றார்கள். சில விஷயங்கள் பார்த்துப் பரவசப்பட மட்டும்தான். அப்படித்தான் எமரால்டு ஏரி. `தொப்’பென விழுந்து டைவ் அடித்துக் குளிக்கவெல்லாம் முடியாது; தெளிந்த நீரை விலக்கி படகில் உல்லாசமாகப் பயணம் செய்ய முடியாது. ஆனால், அதைவிடப் பரவசத்தை உணர முடிந்தது. அவலாஞ்சியில் உள்ள பவர் ஸ்டேஷனான `குண்டா’ ஹைட்ரோ பவர் புராஜெக்ட்டுக்கு பவர் சப்ளை செய்வதே இந்த எமரால்டு ஏரிதான். இங்கே சின்னச் சின்ன பட்ஜெட் ரூம்கள் வாடகைக்குக் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். 

ஏரியில் நச்சென ஒரு போட்டோ ஷூட். அவலாஞ்சியில் இன்னொரு ஸ்பெஷல் - செடிகொடிகள். கிட்டத்தட்ட 2,700-க்கும் அதிகமான தாவர வகைகள் இங்கே மண்டிக் கிடக்கின்றன என்றார்கள். `அனகோண்டா’ படம் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். `ஆர்க்கிட்' எனும் மஞ்சரிப் பூக்கள். நம் ஊரில் அடிக்கடி வரும் இடைத்தேர்தல் மாதிரி ஓயாமல் பூக்காது இந்த ஆர்க்கிட் பூக்கள். எப்போதாவது பூக்கும் இந்த ஆர்க்கிட், அவலாஞ்சியைத் தவிர வேறு எங்கேயும் இல்லை என்கிற ஆச்சரியத் தகவலும் சொன்னார்கள். நாங்களும் அனகோண்டா ஹீரோக்கள் மாதிரி ஆர்க்கிட்டைத் தேடினோம். ஆர்க்கிட் எங்களைப் பார்த்திருக்கலாம். 

avalanche

ஏரியில் இறங்கத்தான் தடை. அதைச் சுற்றியுள்ள மணல் மேடுகள், புல்வெளிகள், குட்டிக் குன்றுகள் என்று ஏரிக்குப் பக்கத்தில் ஹாயாக நடந்து பார்த்தேன். சில கனத்த புல்வெளிகளில் சறுக்கி விளையாடவெல்லாம் செய்தோம். குழந்தைகள், தங்கள் அப்பாக்களின் தொப்பை மேல் சறுக்கி விளையாடுவதுபோல் உணர்ந்தேன். ஓர் இடத்தில் குட்டிக் குட்டியாகப் புழுக்கைகளாகக் கிடந்தன. `மான் புழுக்கைகள்’ என்று தகவல் சொன்னார்கள். அப்படியென்றால், மான்கள் விளையாடும் இடத்தில் நாங்கள்... வாவ்! இங்கே ஓநாயெல்லாம் திரியும் என்றார்கள். நாங்கள் ஓநாய் பார்க்கவில்லை; ஓநாயும் எங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், குட்டிக் குட்டியாக கீரிப்பிள்ளைகளைப் பார்த்தோம். வேடந்தாங்கல் எல்லாம் ச்சுசூப்பி போல் தோன்றியது. `ஊட்டி வழியா போனா பேர்ட்ஸ் பார்க்கலாமில்ல' என்று எனக்கு அட்வைஸ் செய்த நண்பருக்கு, அவலாஞ்சியில் திரிந்த பறவைகளைப் படமெடுத்து, `பெப்பே' ஸ்மைலியுடன் வாட்ஸ்-அப் செய்தேன். 

avalanche

இங்கே சாக்லேட் ஃபேக்டரியெல்லாம் இல்லை. அதற்குப் பதிலாக ஒரு மீன் ஃபேக்டரி இருந்தது. அதாவது, மீன்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. `Trout’ எனும் வகையான மீன்களை செயற்கை முறையில் கருத்தரிக்கவைத்து உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். `ட்ரவுட்' என்பது ஆங்கிலேயர்கள் விரும்பி உண்ணும் ஏரி மீன். அவர்கள் இங்கே ஆட்சி புரிந்தபோது, `ட்ரவுட் வறுவலை’ அவலாஞ்சியில் சாப்பிட விரும்பி, ட்ரவுட் மீன்களை வளர்க்க முற்பட்டார்கள். ட்ரவுட் மீன், தன் முட்டைகளைத் தானே உண்ணுமாம். மீன் வளர்க்கும் முயற்சிகள் பல தோல்வியில் முடிந்தன. இறுதியாக, வில்சன் எனும் ஆங்கிலத் துரை வெற்றிகரமாக `ட்ரவுட்’ மீன்களை இங்கே வளர்த்து வெற்றிகண்டாராம். அவரின் நினைவாக ஒரு நடுகல்கூட இருந்தது. இப்போது `Trout' உற்பத்தி நடந்துகொண்டிருக்கிறது. 

avalanche

அவலாஞ்சியில் பக்திப்பழங்களுக்கு அருமையான ஓர் இடம் பவானி கோயில். இதைப் பார்த்தாலே பக்தி சும்மா பொங்கி வழிகிறது. காரணம், மலையிலிருந்து ஓடும் நீரூற்றுகளுக்கு நடுவில் இந்தக் கோயில் அமைந்திருப்பதுதான். `தலை பவானி’ எனும் அப்பர் பவானி நீர்த்தேக்கத்துக்கு சப்ளையே இந்த ஓடைதான். இதுதான் பவானி ஆற்றின் ஆரம்பம் என்றார்கள். `திறந்த வீட்டில் ஏதோ நுழைவதுபோல'... ஸாரி... திறந்த காட்டில் மனிதர்கள் நுழைவதுபோல் ஈஸியாக இங்கே நுழைய முடியாது. வனத்துறையினரிடம் அனுமதி பெற்றுத்தான் மலையேற வேண்டும். 

`கொலரிபெட்டா' என்றோர் இடம் சொன்னார்கள். மலையடிவாரத்தில் இருந்து சுமார் 5 கி.மீ போக வேண்டும் எனச் சொல்லப்பட்டது. வரையாடுகள் மட்டும்தான் இந்தப் பாதையில் பயணிக்க முடியும் என்பதுபோல், செங்குத்தாக ஏறியது மலைப்பாதை. ``ஜீப்தான் சார் போக முடியும்’’ என்றார்கள். முதல் காதலி காதலை மறுத்தபோதுகூட பின் வாங்காத நான், முதன்முறையாக கார் விஷயத்தில் பின்வாங்கினேன். ட்ரெக்கிங்கில் ஏறலாம் என்றால், திரும்புவதற்குள் இருட்டிவிடும். கவலையாக இருந்தது. வேறு வழியில்லை.

Avalanche

இங்கே கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் - ஒரு நாளைக்கு 20 முதல் 25 பேருக்கு மட்டும்தான் வனத்துறையின் அனுமதி கிடைக்கும். ஊட்டியிலிருந்து இதற்காகவே கைடுகள், ஜீப்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. ஒரு ஜீப்புக்கு 1,400 ரூபாய் கட்டணம். `கார்தான் இருக்கே’ என்கிற மிதப்பில், சில முக்கியமான என்ஜாய்மென்ட்களைக் கோட்டைவிட்டுவிட வேண்டாம் என்பதற்காக இதைச் சொல்கிறேன். மேலே இன்டீரியராக உள்ள பகுதியில்தான் `தோடர்’ எனும் பழங்குடியினர் வசிக்கிறார்களாம். சிறுத்தை, புலி, காட்டெருமை, மான், நீலகிரி குரங்கு என வெரைட்டியாக விலங்குகள் தரிசித்திருக்கலாம் என்றார்கள்.

முகம் சுளிக்க வைக்காத குழந்தையின் நிர்வாணம்போல, நிர்வாணம் தரித்திருந்த அவலாஞ்சி மலையிலிருந்து ஊட்டி வழியாக இறங்க ஆரம்பித்தேன். ஊட்டி மாதிரி அவலாஞ்சியில் ஸ்வெட்டர் பிசினஸ் இல்லை; மிளகாய் பஜ்ஜிக்கடை இல்லை; என்ஜாய் பண்ண போட்டிங் இல்லை; வாகன மாசு இல்லை; சாப்பிடுவதற்கு நல்ல ஹோட்டல்கள் இல்லை; தங்குவதற்கு ரெஸ்டாரன்ட்டுகள் அவ்வளவாக இல்லை. எனக்கு அவலாஞ்சியைப் பிரிய மனமே இல்லை. 

மறுநாள் இரவு, தூக்கத்தில் நான் புலம்பியதை போனில் பதிவுசெய்து போட்டுக்காட்டினார் என் மனைவி. ``ஊட்....டிக்குப்..... பக்கத்.....துல....... அவ....லாஞ்சி....’’

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

லாங் ஷ்ரக் முதல் கலம்காரி வரை... பெண்களுக்கான டாப் 10 ஃபேஷன் கலெக்ஷன்!

 
 
Chennai: 

அரசியல் குழப்பங்கள், போராட்டம், ஏமாற்றம், புதிய படைப்பாளிகளின் அறிமுகம், வித்தியாச திரைப்படங்கள் என இந்த ஆண்டில் நாம் கடந்துவந்த நிகழ்வுகள் ஏராளம். அந்த வரிசையில் 2017-ல் பெண்களின் மனதைக் கவர்ந்த சில சூப்பர் ஃபேஷன் காஸ்ட்யூம்களின் அணிவகுப்பு இதோ.

2017 ஃபேஷன்

 

 

கலம்காரி:

ஆடை

என்னடா பேரு இப்படி இருக்கேனு யோசிக்கிறீங்களா? ஆனா, இதுதான் இப்போ பலரோட சாய்ஸ். சிம்பிளா சொல்லனும்னா ‘யாஞ்சி யாஞ்சி’ பாட்டுல ஷ்ரதா ஸ்ரீநாத் போட்டிருக்கும் புடவையில் உள்ள டிசைனுக்கு பேருதான் ‘கலம்காரி’. டாப் ட்ரெண்டுல போய்ட்டு இருக்கிற இந்த கலம்காரி, பிளாக் பிரிண்ட் (Block Print) மற்றும் கைகளால் பெயின்ட் செய்யப்படும் டிசைன் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நம் நாட்டின் பாரம்பரிய டிசைன்களில் ஒன்றான இது, புடவை, சுடிதார் உள்ளிட்ட காஸ்ட்யூம் முதல் வீட்டில் மாட்டப்படும் விண்டோ ஸ்க்ரீன் வரை அனைத்திலும் பிரிண்ட் செய்யப்பட்டு ட்ரெண்ட் செட் செய்துள்ளது. பண்டையகால வடிவமைப்புகளைக் கொண்டு அச்சிடப்படுவதால், இதை அனைவரும் விரும்பி வாங்குகிறார்கள். வேலைப்பாடுகளுக்கு ஏற்ப விலை!

கலம்காரி ஃபேஷன்


லாங் ஷ்ரக்:

இப்போதெல்லாம் கோட், ப்ளேசர் போன்ற ஆண்களுக்கென வடிவமைக்கப்பட்ட உடைகளை அதிகம் விரும்பி வாங்குவது பெண்கள்தான். விதவிதமான டிசைன், பேட்டர்ன், நிறம் என பெண்களுக்குத்தான் ஏராளமான ஆப்ஷன். ஷர்ட், டீ-ஷர்ட், குர்த்தா என எந்த உடை அணிந்தாலும், மேலே ஒரு  லாங் ஷ்ரக் உடுத்தினால் அதோட லுக் டாப் க்ளாஸ்.

Long Shrug

பிளைன் உடையாக இருந்தாலும், இக்கட், கலம்காரி போன்ற பேட்டர்னிலான ஷ்ரகை போட்டால் முற்றிலும் வேறு தோற்றம் கிடைக்கும். மலிவான விலையில் கடைகளில் கிடைக்கும் இந்த ஷ்ரக் 2017-ஆம் ஆண்டின் கல்லூரிப் பெண்களின் பெஸ்ட் சாய்ஸ். எல்லாரோட ஃபேவரைட் சமந்தா கூட ‘நீ தானே’ பாடலில் இந்த லாங் ஷ்ரக் அணிந்திருப்பார்.

Samantha with Long Shrug


லாங் டியூநிக் (Long Tunic):

லாங் டியூநிக் கண்டிப்பா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ‘டோரா’ படம் முழுக்க நயன்தாரா இந்த உடையில்தான் இருப்பார். பார்ப்பதற்கு குர்த்தா போல இருக்கும். ஆனால் இதை ஸ்பகெட்டி (Spaghetti) அல்லது பிளைன் டீ-ஷர்டுடன் இணைந்து போட வேண்டும். எந்த விதமான கூடுதல் வேலைப்பாடின்றி எளிமையாக வடிவமைத்த இந்த உடை அனைவருக்கும் பொருந்தும். இதற்கு மேட்சாக லெக்கிங்ஸ் அல்லது ஜீன்ஸ் உடுத்தலாம். ரோல் அப் (Roll Up) ஸ்லீவ் மற்றும் பேண்ட் காலர் (Band Collar) டியூநிக் ஆடைகளின் ஹைலைட். இதன் விலையும் மிகக் குறைவு.

Nayanthara Tunics

கிராப் டாப் :

கல்லூரிப் பெண்களின் ஃபேஷன் ஸ்டேட்மென்ட் ‘கிராப் டாப்’. சாதாரண டாப்களின் நீளத்தை குறைத்து உடுத்தினால் அது கிராப் டாப். வெஸ்டர்ன், இண்டோ-வெஸ்டர்ன் உடைகள் இரண்டிலும் பல டிசைன்களில் வெளிவந்த கிராப் டாப், இந்த ஆண்டில் அதிகம் விற்பனையான உடை. இதற்கு மேட்சாக ஸ்கர்ட், பலாசோ பேன்ட், ஜீன்ஸ்  உடுத்தலாம். ஒல்லிபெல்லி இடையழகிகளுக்கு இந்த உடை பக்கா ட்ரெண்ட். வெஸ்டர்ன் தோற்றத்துக்கு இதனுடன் பிரேஸ்லெட், டேங்க்லர்ஸ், ஹய் ஹீல்ஸ் போன்றவற்றைப் போட்டுக்கொள்ளலாம்.

ஃபேஷன்

இண்டோ-வெஸ்டர்ன் உடையாக இருந்தால், ஜிமிக்கி, வளையல், மொஜிரீஸ் போன்றவற்றை உபயோகப்படுத்தலாம். மிகக் குறைந்த விலையில் பரபரப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் இந்த கிராப் டாப்பை காஜல் அகர்வால் மெர்சல் திரைப்படத்தில் வரும் 'மாச்சோ' பாடலில் உடுத்திருப்பார்.

  Crop Top


ஜம்ப்சூட்:

ஜம்ப்சூட் என்பது முதலில் பாராஷூட்டர்களால் உபயோகிக்கப்பட்ட உடை. பிறகு விண்வெளி வீரர்கள், விமானிகள் என மிக உயரத்தில் பயணம் செய்கிறவர்களுக்கு கவச உடையாக பயன்பட்டது. நாளடைவில் அனைவரும் உடுத்தும் உடையாகவும், பல புதுமைகளைப் புகுத்தி முற்றிலும் ஃபேஷன் உடையாகவும் மாறிவிட்டது. இடுப்பின் மேல் (ப்ளவுஸ்) மற்றும் கீழ் (பேன்ட்) ஆடையின் பகுதிகளை இணைத்து, கழுத்திலிருந்து கால் வரை ஒரே உடையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் உடைதான் ஜம்ப்சூட். சிம்பிள் டிசைன் முதல் அதிக வேலைப்பாடுகள் கொண்ட டிசைன் வரை, எல்லா நிறங்களிலும் மார்க்கெட்டில் கிடைக்கும் இந்த ஜம்ப்சூட்டின் விலையும் அதிகமில்லை. அதிலும் இப்பொழுது பெல்ட், குறுக்கிய கழுத்து பேட்டர்ன், ஸ்லீவ்லெஸ் என பல வெரைட்டி உள்ளன.

ஆடை


சாலிட் புடவை :

இக்கட், கலம்காரி என நம் நாட்டுப் பாரம்பரிய டிசைன்களில் உருவாகும் உடைகள் ஒரு பக்கம் விற்பனையில் களைகட்டியிருக்க, மறுபக்கம் சாலிட் உடைகளும் ட்ரெண்டாகி வருகிறது. பூக்கள் அச்சிட்ட உடைகள் சென்ற வருட ட்ரெண்ட். இந்த ஆண்டு பிளைன் அல்லது சாலிட் உடைகள்தான் ஃபேஷன். பிளைன் புடவை, அதற்கு மேட்சாக அதிக வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ். அதை மெருகேற்ற ஜிமிக்கி, வளையல், சோக்கர் என சிம்பிளாகத் தோன்றினாலும், இதுதான் 2017-ம் ஆண்டின் கிளாசிக் அப்டேட். 'காதலாட' காஜல் அகர்வால், 'நல்லை அல்லை' அதித்தி ராவ், 'நில்லாயோ' கீர்த்தி சுரேஷ் பாடல் காட்சிகளில் சாலிட் புடவையில் அழகோவியம் போல் தோன்றிருப்பார்கள். பிளைன், பேட்டர்ன் எதுவாக இருந்தாலும், புடவைக்கு என்னிக்குமே மார்க்கெட் போகாதுனு சொல்றது சரிதானே.

ஃபேஷன்

பேஸ்டல்ஸ்:

ட்ரெண்ட் என்றால் காஸ்ட்யூம் மட்டுமல்ல நிறங்களும் அதில் அடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் ட்ரெண்டி நிறம் 'பேஸ்டல்ஸ்'. அடர்த்தியான நிறத்தில் வெண்மை தன்மையை அதிகரிப்பதால் உருவாகும் நிறம் பேஸ்டல். சமந்தா திருமணம் முதல் ‘விருஷ்கா’ திருமணம் வரை, அனைவரது உடைகளும் பேஸ்டல் நிறத்தில் உருவானவைதான். பிங்க், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் முதலிய நிறங்களின் பேஸ்டல் ஷேட்ஸ் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அதிலும் இண்டோ-வெஸ்டர்ன் மற்றும் இந்திய உடைகள் இந்த நிறங்களுக்கு தனி அழகு சேர்க்கும். உடைகளுக்கு மேட்சாக பேஸ்டல் கலர் கற்கள் பதித்த ஆபரணங்களும் அவ்வளவு அழகு. பேஸ்டல் நிறங்கள் அனைத்தும் இந்த ஆண்டில் மட்டுமல்ல, என்னிக்குமே சூப்பர் ஆப்ஷன்.

ஆடை

கோல்ட்-ஷோல்டர் ஸ்லீவ்:

இந்த ஆண்டு இறுதியில், முக்கியமா தீபாவளி ஷாப்பிங் நேரங்களில், நம் அனைவரது கண்களிலும் அதிகம் காணப்பட்டது கண்டிப்பா கோல்ட்-ஷோல்டர் வகை ஆடைகளாகத்தான் இருக்கும். ஸ்லீவ்லெசும் (Sleeveless) இல்ல, ஃபுல் ஸ்லீவும் இல்ல, என்ன வகை டிரஸ் இதுனு எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வந்திருக்கும். அவை கோல்ட்-ஷோல்டர் உடைகள்தான். முழு நீளச் சட்டைகளில் தோள்பட்டைப் (Shoulder) பகுதியில் சிறு பிளவை ஏற்படுத்துவதுதான் இந்த கோல்ட்-ஷோல்டர் ஸ்லீவ். ஃபுல் டிரஸ், டீ-ஷர்ட், ஷர்ட், டாப், குர்த்தா என எல்லா வகை உடைகளிலும் இந்த கோல்ட்-ஷோல்டர் ஸ்லீவை பொருத்தி பெரிய ட்ரெண்ட் செட் செய்தது 2017.

ஆடை

கேப்ஸ் அண்ட் போன்ச்சோஸ் (Capes and Ponchos):

போன்ச்சோ என்பது முன்றைய காலத்தில் ப்ளாங்கெட்டாக (Blanket) பயன்படுத்திய ஒன்று. சில நேரங்களில் மழையிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் பயன்பட்டது. ஆனால், தற்போது அதுவே ஃபேஷன் ஆகிவிட்டது. லெஹெங்கா, கவுன், டாப் போன்றவைகளில் ஸ்லீவ்களுக்கு பதிலாக, எம்ப்ராய்டரி போன்ற கூடுதல் வேலைப்பாடுகள் நிறைந்த தனிப்பகுதியை, தோள்பட்டை முதல் இடை வரை நீண்டு அமைக்கப்படும் உடைதான் யுவதிகள் இன்று அணியும் போன்ச்சோ. இது தற்போது சல்வார்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. டீனேஜ் பெண்களுக்கு கண்டிப்பா இந்த மாடல் ஃபேவரைட்.

ஆடை

ஃப்ரன்ட் ஸ்லிட் (Front Slit):

 

முன்பெல்லாம் சல்வார் கமீஸ்களில் இருபக்க முடிவில்தான் ஸ்லிட் எனப்படும் சைட் ஓபன் (Side Open) இருக்கும். ஆனா, இப்போதைய ட்ரெண்ட் ஃபிரன்ட் அல்லது சென்டர் ஸ்லிட். வெஸ்டர்ன் உடைகள், இந்திய எத்னிக் உடைகள் இரண்டிலும் சென்டர் ஸ்லிட் பொருத்தி வடிவமைப்பதால் பார்ப்பதற்கு மிக அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். கல்லூரி/அலுவலகம் செல்லும் பெண்கள் முதல் திருமணத்துக்குத் தயாராகும் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த வகையான ஆடைகள் கிளாஸிக் டச் கொடுக்கும்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

கிறிஸ்துமஸுக்காக கருமை நிற பொம்மைகளை வாங்கும் ஆஃப்ரிக்கா முஸ்லிம்கள்

செனகலில் பெரும்பான்மை மக்கள்தொகை முஸ்லிம் சமூகத்தினர் என்றபோதும் அங்கு பரவலாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸை முன்னிட்டு பொருட்களை வாங்க இவர்கள் சந்தைக்கு வந்துள்ளனர். இந்த ஆண்டு, சந்தைக்கு வந்துள்ள புதிய வரவான, கருமை நிற பொம்மைகள் மக்களிடையே பிரபலமைடந்து வருகிறது

  • தொடங்கியவர்

ஒரு கிலோ கொம்பு 2 கோடி ரூபாய்... காண்டாமிருகம் என்றால் காசு! #AnimalTrafficking -

 

ந்த நிமிடம் ஒவ்வொரு நாட்டிலும் சட்டவிரோதமாக நடைபெறும் மூன்று நடவடிக்கைகளில் ஒன்று, விலங்குகள் கடத்தல் தொடர்பானதாகவே இருக்கும். தும்மல் வந்தால் உடலின் உள்ள எல்லா உறுப்புகளும் ஒரு நொடி நின்றுவிடும் என்பார்கள்; விலங்குகள் கடத்தல் குறித்த செய்திகளைக் கேட்டால் தும்மலே நின்றுவிடும்! அந்தளவிற்கு சோகம் மிகுந்ததாக இருக்கின்றன இந்தக் கதைகள். இன்றைய கடத்தல் அத்தியாயம் காண்டாமிருகம் பற்றியது....

காண்டாமிருகம்

 

இணையதளத்தில் காண்டாமிருகம் தொடர்பான சில காணொளிகளைப் பார்க்க முடிந்தது. உயிருடன் இருக்கிற ஒரு காண்டாமிருகத்தின் கொம்பை கடத்தல்காரர்கள்  வெட்டி எடுத்துவிடுகிறார்கள். கொம்பு வெட்டப்பட்ட காண்டாமிருகம், முகம் சிதிலமான நிலையில் ரத்தம் சொட்டச் சொட்ட உணவைத் தேடிவருகிறது. கண் முன்னே உணவு இருப்பதை பார்க்கிற காண்டாமிருகத்தால் அதை உண்ண முடியாமல் காலை நொண்டியபடி கடந்துபோகிறது. நிச்சயம் அதன் வாழ்நாள் அடுத்த இரண்டொரு நாள்களில் முடிந்திருக்கும். இன்னொரு காணொளியில், பிறந்து  ஒருமாதம் ஆன குட்டியுடன் இருக்கிற காண்டாமிருகம் ஒன்று வயல்வெளியின் ஓரத்தில் முகம் புதைந்துகிடக்கிறது. அதன் கொம்புகள் மூர்க்கத்தனமாக வெட்டப்பட்டிருக்கின்றன. தன் குட்டிக்காக உயிருடன் இருக்கப் போராடுகிறது. ஆனால், அடுத்த பத்து நிமிடங்களில் இறந்து விடுகிறது. தாய் இறந்தது தெரியாமல் ஒரு மாத குட்டி காண்டாமிருகம் பால் குடிக்க முயன்று கொண்டிருக்கிறது. இவை இரண்டும் சாதாரணமாகக் காணக்கிடைப்பவை மட்டுமல்ல. சாதாரணமாக இந்த பூமியில் நடந்துகொண்டிருப்பவை. காண்டாமிருகத்திற்கு எதிரான போரில் மனிதர்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றுவிட்டார்கள். காரணம், உலகம் முழுக்கவே சொற்ப எண்ணிக்கையிலான காண்டாமிருகங்களே தற்போது உயிரோடு இருக்கின்றன. அதன் கொம்புக்காக ஆண்டுக்கு 7000 காண்டாமிருகங்கள் என்கிற அளவில் கடந்த இருபது ஆண்டுகளாக வேட்டையாடப்பட்டிருக்கின்றன.

ஏன் காண்டாமிருகத்தின் கொம்புகளுக்கு இவ்வளவு பெரிய மார்கெட்? கொம்புகளை வைத்து என்ன செய்கிறார்கள்? ஒரு கிலோ கொம்புக்கு சர்வதேச சந்தையில் ஏன் 3,00,000 டாலர்கள்? (சுமார் 2 கோடி ருபாய்) இவை எல்லாவற்றிற்கும் காரணமான ஒரு சிறுகுறிப்பில் இருந்து தொடங்குவோம். 1597-ம் ஆண்டு சீனாவில் லீஷிசென் என்கிற ஒருவர் எழுதிய மருத்துவக் குறிப்பில் காண்டாமிருகத்தின் கொம்பில் இருக்கும் கெரட்டின் என்கிற வேதிப்பொருள் உடல் உபாதைகளுக்கு... அதாவது, இயல்பான தலைவலியிலிருந்து புற்றுநோய்வரை அனைத்திற்கும் சர்வரோக நிவாரணி என எழுதிவிட்டு இறந்து போகிறார். அங்கிருந்து தொடங்கியதுதான் காண்டாமிருகத்தின் அழிவும். சீனாவில் விலங்குகளின் உடல்பொருள்களை மருந்தாகப் பயன்படுத்தும் முறை தொன்றுதொட்டே இருந்துவருகிறது. எறும்புதின்னியிலிருந்து பாம்பு, தேவாங்கு, உடும்பு என எல்லா வனவிலங்குகளின் அழிவிற்கும் காரணமாக, சீனா இருந்துவருகிறது. 

காண்டாமிருகம்

காண்டாமிருகத்தின் கொம்பை பயன்படுத்தி சீனாவில் எல்லாவகையான நோய்களுக்கும் மருந்து தயாரிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், கொம்பின் மருத்துவக் குணம் குறித்து அறிவியல்ரீதியாக இப்போதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை; ஆனால், காண்டாமிருக கொம்பு சர்வரோக நிவாரணி என நம்ப ஆரம்பித்தார்கள். வியட்நாமிலும் சீனாவிலும் அரசின் அனுமதியுடனேயே கொம்புகள் பயன்படுத்தபட்டிருக்கின்றன. உலக நாடுகளின் நிர்பந்தம் காரணமாக 2009-ம் ஆண்டு காண்டாமிருகத்தின் கொம்பை இறக்குமதி செய்ய சீனா தடைவிதித்தது. தடை, அதை உடை என்பதுதான் கடத்தல்காரர்களின் தாரகமந்திரம். தடை செய்யப்பட்டதால் கொம்பிற்கான மதிப்பு மடமடவென உயர ஆரம்பிக்கிறது. ஒரு கிலோ கொம்பின் விலை ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் டாலர்களிலிருந்து மூன்று லட்சம் டாலர்கள்வரை நினைத்துப் பார்க்கமுடியாத விலைக்கு வருகிறது.

மற்ற கடத்தல்களோடு ஒப்பிடும்போது காண்டாமிருகக் கொம்பின் கடத்தலுக்கான விலை அதிகம் என்பதால் கடத்தல் தொழிலின் அத்தனை பேருடைய பார்வையும் காண்டாமிருகத்தின் மீது பதிந்தது. இந்தியா, நேபாளம், பூட்டான், கென்யா, தென் கொரியா, தென் அமெரிக்கா, சுமத்ரா தீவுகள் என எல்லா இடங்களிலும் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுகின்றன. தப்பிப்பிழைத்த காண்டாமிருகங்களை மனித மிருகங்கள் துரத்த ஆரம்பிக்கின்றன. துடிதுடிக்க வெட்டி எடுக்கப்படுகிற கொம்புகள் ஏஜென்டுகள் வழியாக முக்கியபுள்ளிகளிடம் வந்து சேருகிறது. அரசு அதிகாரிகள் கவனிக்கிற விதத்தில் கவனிக்கப்படுகிறார்கள். அவர்களிடமிருக்கிற “சரக்கு” எந்த வில்லங்கமும் இல்லாமல் சேரவேண்டிய இடத்திற்கு சேர்ந்து விடுகிறது. எல்லா வகையான கடத்தலுக்கும் முக்கிய இடமாக தாய்லாந்து இருந்துவருகிறது. தாய்லாந்திலிருந்து கடல்வழியாகவும் தரைவழியாகவும் வியட்நாம், சீனா என நாடுவிட்டு நாடு எளிதாகக் கடத்திவிடுகிறார்கள்.  

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை காண்டாமிருகங்களை வீழ்த்த குழிவெட்டியவர்கள் இப்போது வேறு தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டார்கள். காண்டாமிருக வேட்டைக்கு ஹெலிகாப்டர்களையே பயன்படுத்துகிறார்கள்; அப்படியென்றால், கொம்புகளின் மதிப்பை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். வான்வழியாகப் பயணிக்கிற கடத்தல்காரர்கள் தென்படுகிற காண்டாமிருகத்திற்கு துப்பாக்கி மூலம் விஷ ஊசியைச் செலுத்துகிறார்கள். அப்படிச் செலுத்துகிற ஊசிகள் காண்டாமிருகத்தை செயலிழக்க வைக்கிறது. நேரம் பார்த்து அங்கு செல்கிற கடத்தல்காரர்கள் காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். கொம்புகளை வெட்டுவதற்கு மின் ரம்பங்ளைப்  பயன்படுத்துவதால் நேரமும் உழைப்பும் மிச்சமாகிறது. 2000 கிலோ எடைகொண்ட ஓர் உயிரினத்தை வெறும் 1400 கிராம் கொண்ட மனித மூளை என்னவெல்லாம் செய்கிறது பாருங்கள்!

காண்டாமிருகத்தின் அழிவைத் தடுக்கவேண்டுமானால் கடுமையான தண்டனைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட நாடுகள் முயன்றன. தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக காண்டாமிருகங்களைக் கொன்று, அதன் கொம்புகளை வெட்டி விற்பனை செய்வது அதிகரித்துவருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு க்ரூகர் சரணாலயத்தில் மண்ட்லா சௌகே என்பவர் 3 காண்டாமிருகக் குட்டிகளைச் சுட்டுக்கொன்றதாகக் கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றத்துக்காக இதுவரை இல்லாத வகையில் மொத்தம் 77 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நெல்ஸ்ப்ரூயிட் நகர நீதிபதி ஷீலா மிசிபி தீர்ப்பளித்துள்ளார். “தண்டனைகள் கடுமையானால் குற்றம் குறையும் என்கிற விதி அமலுக்கு வந்தால் மீதமிருக்கும் காண்டாமிருகங்களைக் காப்பாற்றிவிடலாம்” என்றது அவரது தீர்ப்பு. 

கடந்த 15 ஆண்டுகளாக வேட்டையாடப்படுவதால் அழிந்துவரும் விலங்கினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் செஸ்டர் பல்கலைக்கழகம், ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு 6 மணிநேரத்துக்கும் ஒரு காண்டாமிருகம் அதன் கொம்புக்காக வேட்டையாடப்படுவதாக தெரிவித்துள்ளது. அழிவின் விளிம்பிலிருக்கும் இந்த வகை மிருகத்தைக் காக்கும் வகையில் ஸ்பை கேமராவை அதன் கொம்புக்குள் பொருத்த தென்னாப்பிரிக்க அரசு முடிவு செய்துள்ளது. செயற்கைகோள் மூலம் இந்த உளவு கேமரா காண்டாமிருகத்தை கண்காணிக்கும். இந்தக் கருவிகள் எஞ்சியுள்ள காண்டாமிருகங்களுக்குப் பொருத்தப்படும் என்று தென்னாப்பிரிக்க அரசு 2015-ல் அறிவித்தது. இவற்றின் உதவியினால் வேட்டையாடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு கொள்ளையர்களைப் பிடிக்கமுடியும் என்று நம்பியது. ஆனால் கடத்தல்காரர்கள் கேமராவோடு கொம்பையும் கடத்திக்கொண்டு போன சம்பவங்களைப் பார்த்து மிரண்டுபோனது அரசாங்கம்.

காண்டாமிருகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் சன்டியாகோ மிருகக்காட்சி சாலையில் இருந்த ஆண் வெள்ளைக் காண்டாமிருகம் 2014-ம் ஆண்டு இறந்தது, அந்த இறப்பு அந்த இனத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை அப்போது எழுப்பியது. காரணம், இப்போது உலகில் ஆப்பிரிக்க வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் மொத்தத்தில் ஐந்து மட்டுமே எஞ்சியிருந்தன. ஆங்கலீஃபூ எனும் பெயருடன் இருந்த அந்த ஆண் காண்டாமிருகத்துக்கு 44 வயது. முதுமையின் காரணமாக அது உயிரிழந்தது. அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த இனத்தின் எஞ்சியுள்ள ஐந்து மிருகங்களில் ஒன்று கலிஃபோர்னியாவிலும், மற்றொன்று செக் குடியரசின் மிருகக்காட்சி சாலையிலும் உள்ளன. இதர மூன்றும் கென்யாவின் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளன. ஆங்கலீஃபூவை அதே மிருகக்காட்சிசாலையில் அங்கிருந்த பெண் கண்டாமிருகமான நோலாவுடன் சேரவிட்டு இனப்பெருக்கம் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. 

மற்ற மூன்று காண்டாமிருகங்களும் கென்யாவில் உள்ள சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவற்றில் இரண்டு பெண் காண்டமிருகமும் ஓர் ஆண் காண்டாமிருகமும் இருக்கின்றன. ஆண் காண்டாமிருகத்திற்கு சூடான் எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்.  தற்போது, ஆப்பிரிக்க வடக்கு வெள்ளை இனத்தில் உலகில் இருக்கும் கடைசி ஆண் காண்டாமிருகம் சூடான். சூடானோடு பெண் காண்டாமிருகங்களைப் பயன்படுத்தி இயற்கையாக இனப்பெருக்கம் செய்ய சரணாலய அதிகாரிகள், ஊழியர்கள் பல வழிகளில் முயற்சி செய்திருக்கிறார்கள். எல்லா முயற்சியும் தோல்வியில் முடிய இப்போது செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்ய முயன்று வருகிறார்கள். இனப்பெருக்கம் நடந்தால் இனம் செழிக்கும். இல்லையேல் வெள்ளை காண்டாமிருகத்தின் கடைசி மிருகம் சூடானாகவே  இருக்கும். மிச்சமிருக்கும் உலகின்  கடைசி காண்டாமிருகங்கள் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பில் இருக்கின்றன. சில நிமிட கண்ணயர்வில் அதையும் கடத்துவதற்கு நேரம் பார்த்து காத்திருக்கிறார்கள் கடத்தல்காரர்கள். ஏனெனில், காண்டாமிருகம் என்றால் காசு! 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: சனிப் பெயர்ச்சி- வர்லாம் வர்லாம் வா!

 

 
2539907513698961697878458308255878234331

படம்: ஜெய் முனி கோபிநாத்

இந்து மத நம்பிக்கையின்படி சனி பகவான் இன்று விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குச் செல்கிறார். இதுகுறித்து நெட்டிசன்கள் கலவையான கருத்துகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Srinivasa Mba

         

யாரோ சனினு ஒருத்தர் தனுஷ் வீட்டுக்கு போறாராம்... #சனிப்பெயர்ச்சி.

Latha Swaathi

சனி பகவான் மூலம் கர்மாவை கழித்த திருப்தியில்... இனி சாதகமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் புது வருடத்திற்கு வெயிட்டிங்.....

குருபிரசாத் தண்டபாணி

வெற்றிக்கொடி கட்டு

பகைவரை முட்டும் வரை முட்டு

லட்சியம் எட்டும் வரை எட்டு

படையெடு படையப்பா

#டெடிகேட்டட் டூ கும்ப ராசி @ சனிபெயர்ச்சி

Vijay Sivanandam

சனி எந்த வீட்ல இருந்தாலும் நமக்கு மட்டும் வாழ்க்கை எப்பவும் அடியும் மிதியும் உதையும்தான் குடுக்குது.....

அதனால பெயர்ச்சியெல்லாம் பழகிடுச்சி..

1
 

Mano Red

துலாம் ராசி அன்பர்களே - 7.5 வருஷம் ஒண்ணுமண்ணா பழகிட்டு இன்னொருத்தர் வந்ததும் விட்டுட்டு போறார் சனி. #துரோகி

விஷ்வா விஸ்வநாத்

சோதிடக்காரங்க முக்காவாசிப் பேர் தமிழ் டிவி சீரியல் டயலாக் ரைட்டர்கள் போலத்தான் இருக்காங்க.

காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனித குலம் நேர் மறை எண்ணங்களால்தான் உயர்வு பெற்று இன்றளவு மனித உயரத்தை எட்டியிருக்கிறது. எந்த விதமான எதிர்மறை எண்ணங்களையும் விதைக்காமல் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தாத எவராக இருந்தாலும், அவரை அலட்சியப்படுத்துவதும் நிராகரிப்பதுமே நம் முன்னேற்றத்தின் முதல் படி. பகுத்துணர்வில் தொகுத்துணர்வது, பகுத்தறிவது. மற்றபடி இறை வழிபாடு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது.

Praveen Kumar L

அடுத்த இரண்டரை வருடம் எங்கள் ராசியில் ஜென்மசனியாக வசிக்க இன்று வருகை தந்திருக்கும் சனி பகவானை வாழ்த்தி வரவேற்கிறோம். - தனுசு ராசிக்காரர்கள்.

Sathish Sangkavi

சனிபெயர்ச்சி யாருக்கு நல்லா இருக்கோ இல்லையோ, பரிகாரம் செய்பவர்களுக்கு நல்லா இருக்கு. அவர்களுக்கு சனி வாரி வழங்கி விட்டார் இந்த வருடம். இப்போது எல்லாம் சனிப் பெயர்ச்சி, குருபெயர்ச்சி, வருட ராசி, மாத ராசி பலன்கள், பரிகாரங்கள் என்று சம்பாரிக்க நல்ல வழி.

Shalini Chandra Sekar

வெல்கம் பேக் மிஸ்டர்.சனி பகவான்.

#தனுசு_ராசி #ஏற்கனவே_ஜென்மசனி #முடியல

2544301813699928231115134543208378316565
 

Vasantha Raja Padaiyatchi

சனி பிடித்திருக்கும் போது எமனும் நெருங்குவதில்லை. துன்பம் வரும்; ஆனால் ஆயுள் தீர்க்கம்.

Arun Kumar

வாட் ஈஸ் த ப்ரொசீஜர் டூ ஓபன் அக்கவுண்ட் இன் ஸ்விஸ் பேங்க்...

#சனிப்பெயர்ச்சி #ஆஹாஓஹோ.

Krishna Kumar

மகர ராசிக்கு ஏழரை சனி ஆரம்பிக்குது ஏற்கனவெ நிலைமை டாப் லெவல்ல இருக்கு. இப்போ இதுவேற. வர்லாம் வர்லாம் வா சனீஸ்வரா!

Ezhumalai Venkatesan

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017: ரிஷப ராசிக்காரர்கள் வாயை மூடி பேசவும்..

சனி விட்டு விட்டு புடிச்சாதான் ஏதாவது வித்தியாசம் தெரியும்...நமக்குதான் பொறந்ததுல இருந்தே ஒரு மாற்றமும் தெரியலையே..

சனீஸ்வரா, மாற்றுப்பாதையில் போய் மற்றவரை பயமுறுத்தவும்.

KR Athiyaman

வரும் சனிப்பெயர்ச்சியில், விஜயகாந்த்தின் துலாம் ராசிக்கு ஏழரை சனி முடியுது. ரஜினியின் மகர ராசிக்கு ஏழரை சனி ஆரம்பிக்குது.

கணக்கு கரெக்டாதான் இருக்கும் போல!

Thiruvengimalai Saravanan

எல்லாத்தையும் போலவே இதுலயும் பாதி மிகைப்படுத்தல், வியாபாரம், பணம் பண்றது எல்லாம் கலந்திருக்கு...

ஆன்மீகமும் இப்போ வியாபாரமாயிடுச்சு. ஜனங்களோட பயத்தை பணம் பண்றாங்க.

பக்தியோட இல்லை... இப்பல்லாம் பாதி பேர் பயத்தோடதான் கோவிலுக்குப் போறாங்க.

2549804513699988264442464922235606706849
 

Amudhan Shanthi

சனிப் பெயர்ச்சி பலன்களை ஒய்ஃபுக்கு படிச்சு காமிச்சிட்டு இருந்தேன்.. முடிக்கறப்போ, 'கணவனுக்கு கேட்டதை செய்யவும், கணவன் சொல் மதிக்கவும்' அப்படி இப்படின்னு நாலஞ்சு பிட்ட சேர்த்து வாசிச்சு முடிச்சேன்...

கரெக்டா கடைசில வாசிச்சது மட்டும் என் சரக்குன்னு புரிஞ்சுகிட்டு அவங்க கொடுத்த லுக்குல எனக்கு சனி பிடிச்சது புரிஞ்சிடுச்சு...

கவிஞர். மணி பாரதி

எனக்கு துலாம் ராசி!

ஏழரை முடிந்தது!

எட்டும் இடத்தில் எனது

எண்ணங்கள் யாவும்!

தமிழன்டா @hai2pandian

சனி வந்துட்டு போறவங்கதான் சனிப்பெயர்ச்சி பார்ப்பாங்க; நான்லாம் சனி கூடவே வாழ்றவன், இதப்பத்திலாம் கவலை இல்லை.

Nironjanee T Niraj

கடைசியா ஒன்னு சொல்வாய்ங்க.. எவ்வளவு கெடுதல்கள் வந்தாலும் ராசி அதிபதி சனியேன்பதால் ஓரளவுக்கு நன்மை பயக்கும்னு. இப்படியாவது மனசை தேத்திப்போம்.

Tomorrow @abinesh

சனி பகவானுக்காச்சும் நம்மல புடிச்சிருக்கே அதுபோதும் எனக் கூறியபடி நகர்ந்தார் அந்த தனுசு ராசிக்காரர்... #சனிப்பெயர்ச்சி

2555013682795191405104266405086058926360
 

இளங்கோ

எனக்கொரு சந்தேகம். இந்த சனி ஏன் மற்ற மதத்தினரை பிடிப்பதில்லை.

மாடசாமி முருகன் @Madas_1984

இப்போ பாத சனியாம்..

நமக்கென்னவோ இன்னும் வாயிலதான் சனி இருக்கு..

சசி

''இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...!''- திஸ் சாங் டெடிகேட்ஸ் டூ மை டியர் சனி பகவான்.

ரிட்டயர்டு ரவுடி @rittyardurowdy

இன்னிக்கு டூட்டில இருக்குற ஐயருக்கும் வெளில சூடம் சாம்புராணி கடை போட்டவருக்கும்தான் இந்த சனிப்பெயர்ச்சி அதிக பலன் தரும்...

Srinivasan Rahul @Srinivtwtz

சனி நமக்கு எதாவது கெடுதல் தந்திடுவாரோனு கோயிலுக்கு ஓடுற பயலுக முக்கால்வாசி பேர் ஊர அடிச்சி உலையில போட்டவங்கதான். #பாவக்கணக்கு

Thiyagarajan Saran

சனிப்பெயர்ச்சி பலன்கள்

1.மேஷம் பாசமாகும். 2.ரிஷபம் மோசமாகும். 3.இருவர் பகையாகும். 4.நண்டு சுவையாகும். 5.சிங்கம் ராஜாவாகும். 6.கன்னி கூஜாவாகும். 7.தராசு தங்கமாகும். 8.தேள் விஷமாகும். 9.தனுசு தினுசாகும். 10.மகரம் தகரமாகும். 11.கும்பம் கோபுரமாகும். 12.மீனம் ஞானமாகும்.

2550796010215372926740227191646763611200

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘இளைய தலைமுறையினர் மயங்கிக் கிடக்கின்றனர்’
 

image_9a3ed1e735.jpgதவறுகள், குற்றங்கள் செய்பவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்படியானால், இன்றைய சூழலில், உலகில் பலகோடி மக்கள், சிறைக்கூடங்களில்த்தான் வாசம் செய்ய வேண்டிவரும்.  

எனவே, குற்றம் செய்யாத சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பதே விடை தெரியாக வினாவாக உள்ளது. குற்றம் செய்யும் நபர்களே, நியாயம்தீர்க்கப் புறப்படுகின்றார்கள்.  

ஒழுக்கம் கெட்ட தனிமனிதர்களை ஆதரிக்க, ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கின்றது. மக்களை விழிப்பு நிலையில் இருப்பதைத் தவிர்ப்பதற்கு, மாயவலைகள் பின்னப்படுகின்றன. தவறான உபதேசங்கள், தப்பான ஆசைகளை விதைத்தல், எதையும் எப்படியும் செய்யலாம் என்ற மனநிலை நோக்கி நகர்த்திச் செல்ல, ஆத்ம துரோகிகள் செய்யும் காரியங்களில் இளைய தலைமுறையினர் மயங்கிக் கிடக்கின்றனர்.  

தர்ம சிந்தனை ஆத்மவிருத்திக்கான அறச் சிந்தனைகளை வலுக்கூட்டும். கனிவான இயல்பைக் காட்டுக; பொய்மையை வீழ்த்துக.  

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று….

டிசம்பர் – 20

 

1192 : சிலுவைப் போரை முடி­வுக்குக் கொண்டு வந்த உடன்­ப­டிக்­கையில் கையெ­ழுத்­திட்டு விட்டு இங்­கி­லாந்து திரும்பும் வழியில்
இங்­கி­லாந்து மன்னர் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்­தி­ரி­யாவின் ஐந்தாம் லியோ­போல்­டினால் கைது செய்­யப்­பட்டார்.

varalru.jpg1606 : வேர்­ஜீ­னியா கம்­ப­னியின் மூன்று கப்­பல்கள் ஆங்­கி­லே­யர்­களை ஏற்றிக் கொண்டு வேர்­ஜீ­னி­யாவின் ஜேம்ஸ்­ட­வுனை நோக்கிக் கிளம்­பின. இதுவே, அமெ­ரிக்க கண்­டத்தில் இடம்­பெற்ற முத­லா­வது நிரந்­தர ஆங்­கிலக் குடி­யேற்றத்
திட்­ட­மாகும்.

1844 : இலங்­கையில் அடிமை முறை­மையை ஒழிப்­ப­தற்­கான சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

1917 : சோவி­யத்தின் முத­லா­வது இர­க­சியக் காவற்­து­றை­யான “சேக்கா” அமைக்­கப்­பட்­டது.

1951 : அணு சக்­தி­யி­லான மின்­சாரம் முதற்­த­ட­வை­யாக அமெ­ரிக்­காவின் ஐடஹோ மாநி­லத்தில் பிறப்­பிக்­கப்­பட்­டது. இது நான்கு மின்­கு­மிழ்­களை எரிப்­ப­தற்குப் பயன்­பட்­டது.

1952 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் வான்­படை விமானம் வோஷிங்­டனில் மோதி வெடித்­ததில் 87 பேர்
கொல்­லப்­பட்­டனர்.

1971 : பாகிஸ்­தானின் 4 ஆவது ஜனா­தி­ப­தி­யாக ஸுல்­பிகார் அலி பூட்டோ பத­வி­யேற்றார்.

1973 : ஸ்பானியப் பிர­தமர் “லூயிஸ் கரேரோ பிளாங்கோ” மட்றிட் நகரில் கார்க் குண்­டு­வெ­டிப்பில் கொல்­லப்­பட்டார்.

Varalaru-20-12-2017.jpg1984 : இங்­கி­லாந்தில் சுரங்க ரயில் பாதையில் 1 மில்­லியன் பெற்­றோ­லியப் பொருட்­களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயி­லொன்று தடம் புரண்டு தீ பர­வி­யதில் பலத்த சேதம் ஏற்­பட்­டது.

1987 : பிலிப்­பைன்ஸின் பய­ணிகள் கப்­ப­லான எம்.வி. டோனா பாஸ், பிலிப்­பைன்ஸின் தப்லாஸ் நீரி­ணையில் வெக்டர் எனும் எண்ணெய்த் தாங்கிக் கப்­ப­லுடன் மோதி மூழ்­கி­யதில் 4,000 (அதி­கா­ர­பூர்­வ­மாக 1,749 என அறி­விக்­கப்­பட்­டது) பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1988 : போதைப்­பொருள் கடத்­த­லுக்கு எதி­ரான ஐ.நா. சாசனம் வியன்­னாவில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1989 : பனா­மாவின் ஜனா­தி­பதி மனுவேல் நொரி­யே­காவைப் பத­வி­லி­ருந்து அகற்ற ஐக்­கிய அமெ­ரிக்கா தனது படை­களை பனா­மா­வுக்கு அனுப்­பி­யது.

1995 : அமெ­ரிக்க விமா­ன­மொன்று கொலம்­பி­யாவில் மலை ஒன்­றுடன் மோதி­யதில் 160 பேர் கொல்­லப்­பட்­டனர்.

dona-paz-ship-varalaru-20-12.jpg1999 : மக்கவ் பிராந்­தி­யத்தை மக்கள் சீனக் குடி­ய­ர­சிடம் போர்த்­துக்கல் கைய­ளித்­தது.

2007 : பிரிட்­டனில் இரண்டாம் எலி­ஸபெத் அரசி, மிக அதிக வயதில் பத­வி­யி­லி­ருந்த அந்­நாட்டு அர­சி­யானார் (அப்­போது 81 வரு­டங்கள் 7 மாதங்கள், 29 நாட்கள் வயது) அவ­ருக்­குமுன் விக்டோரியா அரசி மிக அதிக வயதில் பதவியிலிருந்தவராக விளங்கினார்.

2013 : மன்னார் மாந்­தையில் திருக்­கே­தீஸ்­வரம் ஆல­யத்­துக்கு அருகில் மனித எலும்­புக்­கூ­டு­க­ளுடன் பாரிய மனிதப் புதை­கு­ழி­யொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

http://metronews.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.