Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

அமெரிக்க ராணுவத்தில் ரோபோக்கள்... நிஜமாகிறதா 'எந்திரன்' க்ளைமாக்ஸ்?!

 
 

ராணுவத்தில் ரோபோக்கள்

உலகம் முழுவதும் இருக்கும் கடினமான பணிகளில் ஒன்று ராணுவம். ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையான பாதுகாப்பை அளிப்பதுதான் ராணுவத்தின் வேலை. அது பாலைவனமோ, பனிப்பிரதேசமோ உலகத்தின் எந்த மூலையாக இருந்தாலும் பாதுகாப்பு என்று வந்துவிட்டால் அங்கே ராணுவம் செயல்பட்டாக வேண்டும். அதற்கு ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகள் ராணுவ வீரர்களுக்குக் கடினமான பயிற்சிகளை அளிக்கின்றன. உலக நாடுகளோடு ஒப்பிடும்போது அமெரிக்கா தனது ராணுவத்தைப் பலமாக வைத்திருக்கிறது.பட்ஜெட்டில் அதிக தொகையை ராணுவத்திற்கு ஒதுக்கும் நாடுகளில் முதலிடம் அமெரிக்காவுக்குத்தான். கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர்களை ஒவ்வோர் ஆண்டும் ராணுவத்திற்காகவே ஒதுக்குகிறது.

 

மற்ற நாடுகளில் எப்படியோ அமெரிக்காவில் ராணுவத்தினருக்கான பயிற்சிகள் சற்று கடினம்தான். ராணுவத்தில் சேர்ந்துவிட்டால் போதும் உடலைப் பிழிந்து எடுத்துவிடுவார்கள். கடினமான பயிற்சிகள் இருக்கும், அந்தப் பயிற்சிகள் எல்லாம் முடிந்த பின்னர் உயிர்பிழைக்கவே கடினம் என்ற சூழ்நிலைகளைக் கூட சமாளிக்கும் திறனை ராணுவ வீரர்கள் பெற்று விடுவார்கள். தரைப்படை, கப்பற்படை, வான்படை சில ரகசியப் படைகள் எனப் பல பிரிவுகளைக் கொண்ட அமெரிக்க ராணுவத்தில் இன்னும் சில காலத்தில் ரோபோ படைப்பிரிவு இடம்பெறலாம்.

ராணுவமும் ரோபோக்களும்

ரோபோ

 
எவ்வளவுதான் கடினமான பயிற்சியளித்தாலும் போரின்போது மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியவில்லை. அதற்கு மாற்றுத் தீர்வாக முன்வைக்கப்படுவது ரோபோக்கள்தாம். திரைப்படங்களில் காட்டுவது போல ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்தலாம் என்ற யோசனை பல காலமாகவே இருந்து வருகிறது. தற்பொழுது இராணுவத்தைப் பொறுத்தவரை வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது மற்றும் அதைச் செயலிழக்க வைப்பது, மீட்புப்பணிகள் போன்றவற்றில் ரோபோக்கள் செயல்படுகின்றன. போரிடுவதற்காகவோ திருப்பித் தாக்கும் வகையிலோ இன்னும் ரோபோக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் ரோபோக்களுக்குக் கட்டளை இடுவதில் இருப்பதில் இருக்கும் சிரமம்தான். ஒரே ஒரு ரோபோ என்றால் அதை எளிதில் கட்டுப்படுத்த முடியும். ஆனால் ஒரு பெரும் கூட்டமாக இருக்கும் ரோபோக்களுக்குக் கட்டளை இடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதுவும் போர் நடக்கும்பொழுது சமயத்திற்கு தகுந்தவாறு செயல்படவேண்டியிருக்கும் என்பதால் தனித்தனியாக வெவ்வேறு வேலைகளைச் செய்யச் சொல்லி ரோபோக்களுக்குக் கட்டளை இடுவது சாத்தியமில்லாதது. இதற்கு தீர்வு என்பது இரண்டே இரண்டுதான். ஒன்று ரோபோக்கள் சுயமாகச் சிந்திக்க வேண்டும் அல்லது சுயமாகச் சிந்திக்கும் திறன் படைத்த ஏதாவது ஒன்று ரோபோக்களுக்குக் கட்டளையிட வேண்டும். 

செயற்கை நுண்ணறிவுத் திறன்

இப்படிப்பட்ட வேளையில்தான் கைகொடுக்கிறது செயற்கை நுண்ணறிவுத் திறன். சமீப காலமாக அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் திறன் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்தி ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ரோபோக்களை பயிற்றுவிக்க முடியும் என்பதை அமெரிக்க ராணுவத்தின் ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் குழுவினரும் இணைந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இவர்கள் கண்டறிந்துள்ள TAMER என்ற புதிய அல்காரிதம் மூலமாக ரோபோக்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்த முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள். செல்லப்பிராணிகளுக்குக் கொடுக்கப்படும் எளிமையான கட்டளைகளைப் போலவே ரோபோக்களுக்கு 'இது சரி' 'இது தவறு' என்று இதன் மூலமாக உணர்த்த முடியும். ரோபோக்களில் இருக்கும் மெஷின் லேர்னிங் மற்றும் AI தொழில்நுட்பம் அதை பதிவு செய்துகொள்ளும் அடுத்த முறை அதே கட்டளை பிறப்பிக்கப்படும் பொழுது முன்பை விட அதிவேகமாகக் கட்டளையைச் செயல்படுத்தும். இதன் விளைவாக எதிர்காலத்தில் களத்தில் போரிடும் ராணுவ வீரர்களுக்குப் பக்க பலமாக ரோபோக்கள் செயல்படும் வாய்ப்பை இந்தத் தொழில்நுட்பம் அதிகப்படுத்தியிருப்பதாகக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

எந்திரன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிட்டி ரோபோ தனக்காகப் போரிட ரோபோ படையையே உருவாக்கும். ரோபோக்களுக்கான கட்டளையையே சிட்டியே வழங்கும். அந்தக் காட்சி விரைவில் நிஜமாகலாம்.

அமெரிக்காவிற்கு முன்னரே உலகில் மற்றொரு வல்லரசாகத் திகழும் ரஷ்யாவும் இந்தத் தொழில்நுட்பத்தை ஏற்கெனவே பரிசோதித்துப் பார்த்துள்ளது. ராணுவத்தில் ரோபோக்களைப் பயன்படுத்தும் திட்டத்தில் புதிதாக இணைந்திருக்கும் நாடு இந்தியாதான். செயற்கை நுண்ணறிவுத்திறன் பயன்பாட்டை அதிகரிக்கவும் ரோபோக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் ஜப்பானோடு இணைந்து செயல்பட இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்காலத்தில் போரின்பொழுது ராணுவ வீரர்களுக்கு நிகராக ரோபோக்களும் களத்தில் போரிடக்கூடும்.

https://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: பக்கோடா விக்கிற அளவுக்கு படிச்சிருக்கேன்..!

 

 
mem%201
mem%2010
mem%202
mem%203
mem%204
mem%205
mem%209
  • தொடங்கியவர்

50000 தோல்வி... 2000 பேடண்ட்... எடிசன் என்னும் ஃபீனிக்ஸ் மனிதன்! #HBDEdison

 
 

எடிசன்


நான்கு வயது வரை அந்தக் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. ஏழு வயதில்  ஒற்றையாசிரியர் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது ‘மண்டு’ என்றும் ‘மூளை வளர்ச்சி இல்லாதவன்’ என்றும் ஆசிரியரால் வசைபாடப்பட்டான். கவனக்குறைவு நோய்க்குறியினால் பாதிக்கப்பட்டவன் (ADHD -attention deficithyperactivity disorder) என்று சொன்னார்கள். காதுகேளாதவன். தன் பெயரையே ஒரு சமயம் மறந்தவன். இப்படிப்பட்ட குழந்தை தானே கற்பித்துக்கொண்டு உலகம் முழுவதும் 2,332 காப்புரிமைகளைப் பெற்றான் என்றால் நம்பமுடிகிறதா? 

 

ஆம், இருபதாம் நூற்றாண்டின் தலையெழுத்தை மாற்றியமைத்த மிகப்பெரும் அறிவியல் விஞ்ஞானி ‘தாமஸ் ஆல்வா எடிசன்’ தான் இத்தனை குறைபாடுகளுக்கு ஆளான அந்தக் குழந்தை. இத்தனை குறைபாடுகளையும் தாண்டி வென்றவர் எடிசன்.

1847ஆம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தார். குடும்பத்தின் கடைக்குட்டி இவர்தான். நான்கு வயது வரை பேசாமல் இருந்த எடிசன், பின்னர்ப் பேச ஆரம்பித்தவுடன் பேசிக்கொண்டே இருப்பார். எதற்கெடுத்தாலும் “இது என் இப்படி?”, “அது ஏன் அப்படி?” எனக்கேள்வி கேட்டே ஆளைக் கொன்றுவிடுவார். இவர் கேள்வி கேட்பார் என்று பலர் பயந்து ஓடியதும் உண்டு. ஏனென்றால் அவர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாவிட்டாலும் “ஏன் உங்களுக்குத் தெரியவில்லை?” என்று மற்றுமொரு கேள்வியும் கூடவே வரும். அப்படி இல்லையெனில் 1093 அமெரிக்கக் காப்புரிமையும், 1239 வெளிநாட்டுக் காப்புரிமையும் சாத்தியமாகுமா? 

சிறு வயது முதலே யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பிவிடமாட்டார், எந்த விஷயமானாலும் அதை ஆய்ந்து கண்கூடத் தெரிந்து கொண்டால் தான் நம்புவார். அப்படி ஒரு நாள், குஞ்சு பொறிப்பதற்காக வாத்து முட்டையை அடைகாப்பதைப் பார்த்தார். அடைகாப்பதினால் தான் குஞ்சு பொறிக்கிறதா என எடிசனுக்கு ஐயம் எழ, ஆய்ந்தே அதைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தானே முட்டை மீது குஞ்சு பொறிக்கும் வரை அடைகாக்க உட்கார்ந்தாராம். இந்தச் சம்பவம் நடை பெற்ற போது எடிசனுக்கு ஐந்து வயதுதான். இந்த ஆய்ந்தறியும் தன்மைதான் பிற்காலத்தில் பிரபல புகைப்படக்காரரான மைப்ரிட்ஜ் “இயங்கும் படமெடுப்பது சாத்தியம் அன்று!” என்று சொன்ன போது ஆய்வில் இறங்கி கைனடாஸ்கோப்பை கண்டறிய உதவியது.

எல்லோருக்கும் தெரிந்தவரையில் தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு விஞ்ஞானி. பலருக்கும் தெரியாதது அவர் ஒரு நல்ல தொழில்முனைவர் என்பது.  முதன்முதலில் ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்து, செய்யச் செலவு அதிகம் ஆகும். அந்தச் சாதனத்தை பெரும் அளவில் உற்பத்தி செய்யும்போது பெரிய இழப்புகள் ஏற்படும். அதனாலேயே அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை எக்கச்சக்க கண்டுபிடிப்புகள் நடைமுறையில் சாத்தியமாகாமல் போனது. ஆனால் எடிசன் எப்பொழுதும் தான் கண்டுபிடித்த சாதனத்தை, எளிய மக்கள் வாங்க வசதியாக மலிவு விலையில் உற்பத்தி செய்யும் வழிமுறையைக் கண்டறியும் வரை ஓயமாட்டார். ஐந்து மணி நேரத்திற்கு ஒருமுறை அரை மணி நேரத் தூக்கம். அது தான் அவரின் ஓய்வு நேரம். ஆய்வு தீவிரமான காலகட்டங்களில் இவர் வெறும் அரை நிமிடம் (முப்பது நொடிகள்) மட்டும் தூங்கிய காலமெல்லாம் உண்டு   

தனது ஏழாம் வயதில் ஒற்றையாசிரியர் பள்ளியில் சேர்க்கப்பட்டார் அங்குள்ள ஆசிரியர் இவரை மண்டு, மூளை வளர்ச்சி அடையாதவன் எனக் கூற, கோபம் கொண்ட எடிசனின் தாய் எடிசனின் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். பிறகு தானாகவே புத்தகங்கள் படித்து கற்க ஆரம்பித்தார். ரசாயனம் மீது அதிக ஈடுபாடு கொண்டதால் தானே புத்தகங்களைப் பார்த்து, வீட்டிலேயே ஆய்வுக்கூடம் அமைத்து ஆய்வுகளை மேற்கொள்வார். வயது ஆக ஆக ஆய்வும் பெரிதானது. அதற்குத் தேவையான பொருட்களை வாங்க பணம் அதிகம் தேவைப்பட்டது. எனவே ரயில் வண்டியில் பத்திரிகை விற்க அனுமதி பெற்றார். இரயிலில் சரக்கு பெட்டி ஒன்றினில் ஆய்வுக்கூடம் அமைத்துக்கொண்டார். ஆனால் ஒரு முறை பாஸ்பரஸ் தவறியதில் ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. அப்போது, எடிசனை ரயில் பொறுப்பாளர் கன்னத்தில் அறைய, முன்னரே செங்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு செவிப்புலன் பாதிப்புற்று இருந்ததால், இவருக்குக் காது இன்னும் மோசமாகி விட்டது.

 

தந்தி அலுவலராகப் பணிபுரிந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த எடிசன், தனது இருபத்தி இரண்டாம் அகவையில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டறிந்து காப்புரிமை வாங்கினார். இதுதான் அவரின் முதல் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பு. இது வாக்குகளைத் துல்லியமாய் பிரித்துக் காட்டியதால் அன்றைய அரசியல்வாதிகள் அந்த இயந்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் பொதுமக்களுக்கு பயன்படும் பொருட்களை மட்டுமே கண்டுபிடிப்பேன் என்று உறுதிமொழி எடுத்தார். 

கார்பன் டிரான்ஸ்மிட்டர், போனோகிராப், மின்விளக்கு, மின்சார ரயில், சேம மின்கலம், இரும்புத்தாது பிரித்தெடுக்கும் முறை, கான்கிரிட் தயாரிக்கும் முறை என எக்கச்சக்க சாதனங்கள் செய்து இவரே அதைப் பெருமளவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் துவங்கினார். ஒலியைப் பதிவு செய்து, பதிவு செய்த அதே ஒலியை மீண்டும் ஒலிபரப்பும் போனோகிராப் என்கிற கருவியை கண்டுபிடித்து, அதை மெருகேற்றி அதில் பல மாற்றங்களையும் செய்தார். போனோகிராப்புக்காக மட்டும் அறுபத்தைந்து காப்புரிமைகள் பெற்றுள்ளார்.                 

விடாமுயற்சி என்னும் சொல்லுக்கு இவரைத் தவிர சிறந்த உதாரணம் யாராகவும் இருக்க முடியாது. மின்விளக்கு நீண்ட நேரம் எரிய எந்த மின்னிழை ஏதுவானதாக இருக்கும் எனக் கண்டறிய கிட்டத்தட்ட 5,000 த்திற்கும் மேற்பட்ட மின்னிழைகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார். 5000 இழைகள் மின்விளக்கிற்குப் பொருந்தாமல் போனபோதும் கூட மனந்தளராமல் விடாமுயற்சியோடு சரியான மின்னிழையை கண்டறிந்தார். இந்தச் சம்பவம் கூட சில பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சேம மின்கலத்தை கண்டுபிடிக்க முனைந்தபோது, சரியான நேர்மறை மின்தகட்டை கண்டுபிடிக்கும்முன் ஐம்பதாயிரம் (50,000) பொருள்களை ஆராய்ந்து எடிசன் தோல்வியுற்றிருக்கிறார்.

 

ஆனால் அவரோ “நான் ஐம்பதாயிரம் முறை தோற்கவில்லை, ஐம்பதாயிரம் பொருள்கள் இதற்கு உதவாது என்று கண்டறிந்து வெற்றியடைந்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார். ஆமாம் எடிசன் நீங்கள் வெற்றியாளன் தான். தோல்வியையும் வெற்றியாய் மாற்றி, இருபதாம் நூற்றாண்டு மட்டுமல்ல வரும் பல நூறு நூற்றாண்டுகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்த தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற விஞ்ஞானியின் பிறந்தநாள் இன்று (11-2-2018)

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

2002 : யூகோஸ்­லா­விய முன்னாள் ஜனா­தி­பதி மீதான போர்க்­குற்ற விசா­ரணை ஆரம்பம்

வரலாற்றில் இன்று…

பெப்ரவரி – 12

 

55 : ரோமின் முடிக்­கு­ரிய இள­வ­ரசன் டிபே­ரியஸ் கிளோ­டியஸ் சீசர் பிரிட்­டா­னிக்கஸ் மர்­ம­மான முறையில் இறந்தார். இவரின் மர­ண­மா­னது நீரோ மன்­ன­னாக வர வாய்ப்­ப­ளித்­தது.

1502 : இந்­தி­யா­வுக்­கான தனது இரண்­டா­வது கடற் பய­ணத்தை வாஸ்கொட காமா லிஸ்­பனில் இருந்து ஆரம்­பித்தார்.

1593 : 30,000 பேர் கொண்ட ஜப்­பா­னிய படையின் படை­யெ­டுப்பை சுமார் 3000 பேர் கொண்ட கொரியப் படை வெற்­றி­க­ர­மாக முறி­ய­டித்­தது.

1733 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஜோர்­ஜியா பிராந்­தியம், ஆங்­கிலக் குடி­யேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்­லிதோர்ப் என்­ப­வரால் அமைக்­கப்­பட்­டது.

vararu-copy.jpg1771 : சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெ­டெரிக் இறந்­ததை அடுத்து அவரின் மகன் மூன்றாம் குஸ்டாவ் மன்னன் ஆனான்.

1818 : ஸ்பெயி­னிடம் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக சிலி அறி­வித்­தது.

1832 : லண்­டனில் கொலரா பர­வி­யதில் 3000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1909 : நியூஸிலாந்தில் கப்­ப­லொன்று விபத்­துக்­குள்­ளா­னதால் 75 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1912 : சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தார்.

1912 : சீனக் குடி­ய­ரசில் கிரெ­கோ­ரியன் நாட்­காட்டி அமு­லுக்கு வந்­தது.

1927 : முத­லா­வது பிரித்­தா­னியப் படைகள் சீனாவின் ஷங்காய் நகரை அடைந்­தன.

1934 : ஆஸ்­தி­ரி­யாவில் உள்­நாட்டுப் போர் ஆரம்­ப­மா­கி­யது.

1947 : சோவியத் யூனியனில் விண்­கல்­லொன்று” வீழ்ந்­ததால் பாரிய குழி­யொன்று ஏற்­பட்­டது.

1961 : வெனேரா 1 விண்­க­லத்தை சோவியத் ஒன்­றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவி­யது.

1999 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில் கிளின்டன் மீதான அந்­நாட்டு செனட் சபையின் குற்­றப்­பி­ரே­ரணை விசா­ர­ணையில் அவர் நிர­ப­ரா­தி­யாக அறி­விக்­கப்­பட்­டது.

2001 : நியர் ஷுமேக்கர் என்ற விண்­கலம் 433 ஈரோஸ் என்ற சிறு­கோளில் தரை­யி­றங்­கி­யது. சிறுகோள் ஒன்றில் தரை­யி­றங்­கிய முத­லா­வது விண்­கலம் இது­வாகும்.

2002 : யூகோஸ்­லா­வி­யாவின் முன்னாள் ஜனா­தி­பதி சிலொ­படான் மிலோ­செவிச் மீதான போர்க் குற்­றச்­சாட்­டுகள் குறித்து ஹேக் நக­ரி­லுள்ள ஐ.நாவின் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றில் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­யின.

2002 : ஈரானின் விமானம் ஒன்று கோர­மபாத் நகரில் வீழ்ந்­ததில் 119 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2004 : அமெ­ரிக்­காவின் சான் பிரான்­சிஸ்கோ நக­ரத்தில் ஒரு­பா­லினத் தம்­ப­தி­களின் திரு­ம­ணத்­துக்கு திருமண பதிவுச்சான்றிதழ் அளிக்கத் தொடங்கியது.

2009 : நியூயோர்க் நகரில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் விமானத்திலிருந்த 49 பேரும் தரையிலிருந்த ஒருவரும் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

பாசத்தின் விலை 10 டாலர்! ஒரு நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory

 
 

நெகிழ்ச்சிக் கதை

`ன்பை விலை கொடுத்து வாங்க முடியாது; பாசத்துக்கு விலையே இல்லை’ என்கிறார் 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனிதர் ஜெரோம் (St.Jerome). பாசம்... அன்னைக்குத் தொப்புள் கொடி உறவு; தந்தைக்குப் பெயர் பெற்றுத்தரும் பேறு; சகோதர, சகோதரிகளுக்கு ரத்த பந்தம். உண்மையான பாசம் வெளிப்படுத்தும் உணர்வு பிறரால் அறிந்துகொள்ள முடியாதது... அளவிட முடியாதது. அதை உணர்த்தும் கதை இது.

 

அப்பாவும் மகனும்

அவர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவருக்கும் அவருடைய ஒரே மகனுக்கும் அரிய ஓவியங்களை சேகரிப்பதுதான் முழுநேர, முக்கியமான வேலை. இருவரும் சேர்ந்து பிக்காஸோவின் ஓவியத்திலிருந்து இத்தாலியின் ரஃபேல் ஓவியம் வரை சேகரித்து வைத்திருந்தார்கள். இருவரும் அவ்வப்போது தாங்கள் வைத்திருக்கும் ஓவியங்கள் குறித்துப் பேசுவார்கள்; சிலாகிப்பார்கள்; மகிழ்வார்கள்; பார்த்துப் பார்த்து ரசிப்பார்கள். அந்தப் பணக்காரர், தன் மகனைப் பிரியவேண்டிய சந்தர்ப்பமும் ஒருநாள் வந்தது. அது வியட்நாம் போர். மகன் போருக்குப் போனான்.

அவன் மன உறுதியும் தைரியமும் கொண்டவன். போரில் தன்னுடனிருந்த சக வீரனைக் காக்கும் ஒரு போராட்டத்தில் அவன் உயிரை இழந்திருந்தான். இந்தத் தகவல் அவனுடைய அப்பாவுக்குச் சொல்லப்பட்டது. அவர் வேதனையில் கலங்கிப்போனார்... கண்ணில் நீர் வற்றும் வரை அழுது தீர்த்தார்.

ஒரு மாதம் கழிந்தது. அது ஒரு குளிர்கால மாதம். அவர் வீட்டின் கதவை யாரோ தட்டினார்கள். அவர் கதவைத் திறந்தார். வெளியே ஓர் இளைஞன் நின்றுகொண்டிருந்தான். அவனுடைய கையில் ஒரு பார்சல் இருந்தது.

அவன் சொன்னான்... ``ஐயா... உங்களுக்கு என்னைத் தெரியாது. நான் ஒரு போர் வீரன். என்னை உங்கள் மகன்தான் காப்பாற்றினான். என்னைப்போல எத்தனையோ வீரர்களை உங்கள் மகன் காப்பாற்றியிருக்கிறான். என் நெஞ்சில் பாயவேண்டிய துப்பாக்கிக் குண்டை தன் நெஞ்சில் வாங்கிக்கொண்டு உயிர்விட்டான். உங்களைப் பற்றியும், நீங்கள் சேகரித்துவைத்திருக்கும் அரிய ஓவியங்களைப் பற்றியும் அடிக்கடிப் பேசுவான். அது தொடர்பாகப் பேசுவதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். அதோடு உங்கள் மகனின் ஓவியத்தையும் நான் வரைந்திருக்கிறேன்...’’ என்ற அந்த வீரன், தன் கையிலிருந்த ஒரு பார்ஸலை எடுத்து அவரிடம் கொடுத்தான்.

ஓவியம்

அது மிக மிகச் சுமாரான ஓவியம். இறந்துபோன  அவருடைய மகனின் உருவத்தை வரைந்துகொண்டு வந்திருந்தான் அந்தப் போர் வீரன். ``சார்... உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் ஓவியத்தின் மேல் இருக்கும் பிணைப்பை நான் அறிவேன். இது, நானே உங்கள் மகனை வரைந்த ஓவியம்.. இதைப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் பெரிய ஓவியனில்லை. ஆனால், உங்கள் மகனுக்கு நிச்சயம் இது பிடித்திருக்கும்...’’ என்றான்.

அவர், அந்த ஓவியத்தை வாங்கிக்கொண்டார். அது ஒரு போர்ட்ரெய்ட் Portrait. அவருடைய மகனின் முகத்தை ஓவியத்தில் கொண்டுவருவதற்கான முயற்சி. அப்படித்தான் அதைச் சொல்ல வேண்டும். அதைப் பார்க்கப் பார்க்க அவர் கண்ணில் நீர் வழிந்தது.

``சரிப்பா... இந்த ஓவியத்துக்கு நான் என்ன தரணும்? எவ்வளவு பணம் வேணும்னாலும் கேளு..’’ என்றார் அவர்.

``ஐயய்யோ... இல்லை சார். உங்க மகன் எனக்கு செஞ்சதே ரொம்ப ரொம்ப அதிகம்... இது கிஃப்ட் சார்...’’ அந்த இளைஞன் கிளம்பிப் போனான்.

அவர், அந்த ஓவியத்தை வரவேற்பறையின் முக்கியமான இடத்தில் மாட்டிவைத்தார். அவர் வீட்டிலிருக்கும் ஓவியங்களைப் பார்க்க வருபவர்களுக்கெல்லாம், முதலில் அந்த ஓவியத்தைக் காட்டிவிட்டு, பிறகு மற்ற பிரபல ஓவியர்களின் ஓவியங்களைப் பார்க்க அழைத்துச் சென்றார். அதுவும் சில மாதங்கள்தான். அந்தப் பெரிய மனிதர் இறந்துபோனார்.

***

அவர் அத்தனை நாள்கள் சேகரித்துவைத்திருந்த ஓவியங்கள் ஏலத்துக்கு வந்தன. அவர் சேகரித்துவைத்திருந்த பிரபல ஓவியர்களின் அற்புதக் கலைப் படைப்புகளை வாங்க நிறையப் பேர் ஏலத்துக்கு வந்திருந்தார்கள். ஏலம் ஆரம்பமானது.

ஏலம் விடுபவர், முதலில் இறந்துபோனவரின் மகனின் ஓவியத்தை எடுத்தார்... ``இந்த ஓவியத்திலிருந்து ஆரம்பிப்போம்... யார் இதை ஏலம் கேட்கப் போகிறீர்கள்?” என்று ஆரம்பித்தார். அது அந்தப் போர்வீரன் வரைந்திருந்த சுமாரான ஓவியம்.

``ஏங்க... இதை வாங்குறதுக்கா நாங்க வந்திருக்கோம். முதல்ல புகழ்பெற்ற மத்த ஓவியங்களைக் காமிங்க...’’ ஒரு குரல் பின்னாலிருந்து கேட்டது.

ஏலம் விடுபவர் மறுபடியும் பேசினார்... ``சரி... இந்தப் பையனின் ஓவியத்தை 100 டாலரிலிருந்து ஏலம் ஆரம்பிக்கலாமா?’’

கூட்டத்திலிருந்து ஓர் ஆக்ரோஷமான குரல் ஒலித்தது... ``நாங்க இதை வாங்க வரலை. வான்கோ, ரெம்ப்ராண்ட்ஸ் ஓவியமெல்லாம் இருக்குமில்லை. அதை ஏலம் விடுங்க...’’

ஆனால், ஏலம் விடுபவர் சொன்னார்... ``சரி...இந்த மைந்தனின் ஓவியத்தை யார் வாங்கப் போகிறீர்கள்?’’

``இதெல்லாம் ஒரு ஓவியமா... தூக்கிப் போடுங்க அந்தப் பக்கம்...’’ இன்னொரு குரல் கோபமாக ஒலித்தது.

``இந்தக் குமாரனின் ஓவியத்தை யார்தான் விலைக்கு வாங்கப் போகிறீர்கள்? ஆரம்ப விலை 10 டாலர்...’’

கூட்டத்திலிருந்த ஒருவர்கூட அந்த ஓவியத்தை 10 டாலர் கொடுத்து வாங்க முன்வரவில்லை.

``இந்த மைந்தனின் ஓவியம் 10 டாலர் ஒரு தரம்...’’

அந்த ஏலத்துக்கு வந்திருந்தவர்கள் அந்த சுமாரான ஓவியத்தை வாங்க வரவில்லை. புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை வாங்க வந்திருந்தவர்கள் அவர்கள்.

சிலுவை

``பத்து டாலர் ரெண்டு தரம்...’’ ஏலத்துக்கு விடுபவர் குரல் பலத்து ஒலித்தது.

உட்கார்ந்திருந்தவர்களின் வரிசையைத் தாண்டி கடைசியில் நின்றிருந்த ஒருவரின் குரல் ஒலித்தது. அவர் அந்த வீட்டில் பல வருடங்களாகத் தோட்ட வேலை பார்ப்பவர். ``பத்து டாலர்... ‘’ அவரிடமிருந்த மொத்தப் பணமே அவ்வளவுதான்.

``பத்து டாலர் ஒரு தரம்... பத்து டாலர் ரெண்டு தரம்... பத்து டாலர் மூணு தரம்...’’ ஏலம் முடிந்தது... மொத்தமாக!

ஏலம் எடுக்க வந்திருந்தவர்கள் கொந்தளித்துப் பேச, ஏலம் விடுபவர் சொன்னார்... ``என்னை மன்னிச்சிருங்க... ஏலம் முடிஞ்சு போச்சு. நான் இந்த ஏலத்தைவிட வரும்போதே எனக்கு ஒரு உயிலைக் கொடுத்திருந்தாங்க. இந்த வீட்டோட சொந்தக்காரர் எழுதின உயில் அது. அவரோட மகனின் ஓவியத்தை யார் வாங்குறாங்களோ... அவங்களுக்கே இந்த வீடு, சொத்து, ஓவியங்கள் எல்லாம் போய்ச் சேரணும்னு அவர் எழுதிவெச்சிருக்காரு. அதனால... இந்தத் தோட்டக்காரருக்குத்தான் எல்லா சொத்தும்...’’

ஏலம்விடுபவர் சொன்ன வார்த்தைகளில் இன்னோர் அர்த்தமும் உண்டு. அவர், `மகன்... குமாரன்... மைந்தன்...’ என்றெல்லாம் அழைத்த பெயர் 2,000 வருடங்களுக்கு முன்னர் சிலுவை சுமந்த அந்த இயேசுபிரானுக்கும் பொருந்தும்தானே!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

குரங்குகளைக் கார்ட்டூன் பார்க்க வைத்து என்ன செய்தது ஃபோக்ஸ்வாகன்?!

 
 

மொத்தம் 10 குரங்குகள். எதற்காக அந்த அறையில் இருக்கிறோம் என்பது அவற்றுக்குத் தெரியவில்லை. சாப்பிட நிறைய உணவுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. பத்தில் ஒன்று கூட அமைதியாக இருந்தபாடில்லை. அதன் இயல்பே அதுதான் என்பது மிக சிலருக்கு மட்டுமே புரியும். இந்தக் குரங்கு இனத்திற்கு "Cynomolgus Macaque Monkey" என்று பெயர். தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் இருக்கும். ஆனால், தற்போது அது அடைபட்டிருக்கும் அந்த அறை இருப்பது நியூ மெக்ஸிகோவின் ஆல்புகுர்க்கி (Albuquerque) நகரத்தில். மனிதர்களோடு மிக நீண்ட கால உறவைக் கொண்டவை இந்த வகை குரங்குகள். ஆனால், இந்தக் குரங்குகளோடு எந்த உயிரினமும் ஒத்திசைந்து வாழ்வது சற்று கடினமான விஷயம். அதன் இயல்பே அப்படித்தான். தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் இந்தக் குரங்குகளை மிகவும் புனிதமானதாக மதிக்கிறார்கள். உலகின் பெரும்பாலான பகுதிகளில் இவை "ஆராய்ச்சிக் குரங்குகள்" அல்லது "சோதனைக் குரங்குகள்" . 

இப்போது இந்த அறையில் அவை அடைக்கப்பட்டுக் கிடப்பதும் ஒரு சோதனைக்காகத்தான். இந்தக் கதைகள் நடப்பது 2014 ம் ஆண்டு. குரங்குகள் அடங்கவே இல்லை. அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. சோதனைத் தொடங்கப்போகிறது. இனி என்ன வேண்டுமானாலும் அந்தக் குரங்குகளுக்கு நடக்கலாம். குரங்குகளைச் சற்று சாந்தப்படுத்த வேண்டும். அவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதன் உடற்கூறில்...குறிப்பாக அதன் சுவாசக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களை மிகக் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். ஒரு பெரிய தொலைக்காட்சி அங்கு வைக்கப்படுகிறது. அதில் கார்ட்டூன் படம் போடப்படுகிறது. குரங்குகள் ஆச்சர்யமாக அதைப் பார்க்கத் தொடங்குகிறது. அதே சமயம் அங்கு...அந்தக் கார் ஸ்டார்ட் செய்யப்படுகிறது. அதில் வரும் புகை, குழாய் வழியே குரங்குகள் இருக்கும் அறைக்குள் அனுப்பப்படுகிறது.

 

ஃபோக்ஸ்வாகன் மேற்கொண்ட குரங்கு ஆராய்ச்சி

அந்தக் காரை கொஞ்சம் நெருங்கி, உற்றுப்பார்த்தால் அது ஃபோக்ஸ்வாகன் பீட்டல் (Volkswagen - Beetle) வகையைச் சேர்ந்தது என்பது தெளிவாகத் தெரியும். உலகப் புகழ்பெற்ற ஒரு கார் அது. குறிப்பாக,  உலகளவில் இளம்பெண்களுக்கு மிகவும் பிடித்த கார். சரி... இந்த சோதனை எதற்கானது?

டீசல் கார்களிலிருந்து வரும் புகை மனிதர்களுக்கு எந்தளவிற்கு கேடு விளைவிக்கும் என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டதுதான் இந்த ஆராய்ச்சி. உலகின் மிக பிரபலமான கார் நிறுவனங்களான ஃபோக்ஸ்வாகன், டெய்ம்லர் (பென்ஸ்), பிஎம்டபிள்யூ மற்றும் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான "பாஷ்" ஆகியவை இணைந்து "The European Research Group on Enviroment and Health in Transport Sector" (EUGT) எனும் ஆராய்ச்சி நிறுவனத்தை ஆரம்பித்தனர். இந்தக் குழுவினர், மெக்ஸிகோவிலிருக்கும் "Lovelace Respiratory Research Institute" ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டது. இது மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. 2015 ம் ஆண்டு அமெரிக்காவில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தன்னுடைய கார்களில் "காற்று மாசுபாடு அளவீட்டுக் கருவியில்" சில தகிடுதனங்களைச் செய்தது நிரூபணம் ஆனது. அதற்காகப் பல கோடி ரூபாய் அபராதம் கட்டியதோடு மட்டுமல்லாமல் மன்னிப்பும் கேட்டது. அந்தச் சமயங்களில் கூட இந்த ஆராய்ச்சி விவகாரம் வெளிவரவில்லை. ஆனால், கடந்த வாரம் "தி நியூயார்க் டைம்ஸ்" செய்தி நிறுவனம் குரங்குகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியினை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர். 

ஃபோக்ஸ்வாகன் பீட்டல் - Beetle

பழைய டீசல் வாகனங்களில் புகையின் அளவு அதிகமாக இருக்கிறது, ஆனால், புதிதாக வரும் டீசல் வாகனங்களில் பல புதிய தொழில்நுட்பங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதால், அதில் கேடு விளைவிக்கும் புகையின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கிறது என்று வாதாடின பல முன்னணி கார் நிறுவனங்கள். அதற்காக அவை பல ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டன. ஃபோக்ஸ்வாகனும் அப்படித்தான் சொல்லியது. ஆனால், கடந்த 2015 ல் அதன் சாயம் வெளுத்தது. அது கொடுத்த ஆராய்ச்சி முடிவுகள் அத்தனையும் பெரும் பொய் என்பது நிரூபணம் ஆனது. அதேபோல், குரங்குகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியும் ஒரு பொய்யை நிரூபிப்பதற்காகத்தான்.

டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையில் கேன்சர் ஏற்படுத்தும்  "கார்சினோஜென்" (Carcinogen) அளவு அதிகமாக இருக்கிறது என்று பல சூழலியலாளர்கள் முன்வைத்த கருத்துகளைப் பொய்யாக்கும் நோக்கிலேதான் இந்த ஆராய்ச்சியும் நடந்துள்ளது. ஆனால், இதன் முடிவுகள் கடைசி வரை வெளியிடப்படவில்லை. இந்தக் கார் நிறுவனங்கள் இணைந்து ஆரம்பித்த "EUGT" எனும் அமைப்பு ஜூன் மாதம் 2017 ம் ஆண்டு கலைக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக இந்த மூன்று கார் நிறுவனங்களுமே இதற்கான பொறுப்பை ஏற்க மறுக்கின்றன. ஃபோக்ஸ்வாகனும், பென்ஸ் நிறுவனமும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சொல்லியிருக்கின்றனர். பிஎம்டபிள்யூ இது குறித்து இன்னும் எதுவும் சொல்லவில்லை. ஒரு பக்கம் இந்தப் பெரு நிறுவனங்களின் ஏமாற்று வேலைகளுக்குக் கண்டனம் குவிந்துகொண்டிருக்கிறது. மற்றொரு புறம், இப்படிக் குரங்குகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முற்றிலுமாக சட்ட விரோதமானது என்று கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள், மிருக ஆர்வலர்கள். 

ஃபோக்ஸ்வாகன் மேற்கொண்ட குரங்கு ஆராய்ச்சி

 

எதுவாக இருந்தாலும், இந்தப் பெரு நிறுவனங்கள் அரசாங்கத்தையும், மக்களையும் ஏமாற்றி இயற்கை விரோத வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பரிணாமக் கொள்கை இருக்கட்டும்... டார்வினுக்கு திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? #DarwinDay

 
 

Charles darwin

Charles darwin 

 

“உங்கள் பலத்தை நிரூபிக்க என்ன செய்வீர்கள்?’ - எடை தூக்கலாம்; கல்லை உருட்டலாம்; பாறையைப் புரட்டலாம். ஆனால், தனது பலத்தை உணர ஒரு நாயைக் கொடூரமாக அடிக்கிறான் ஒரு சிறுவன்.

‘ஒருவன், ஒரு விஷயத்தைச் சொன்னால் நம்பிவிடுவீர்களா?’ - ஆராய்ந்து பார்ப்பீர்கள்; பரிசீலனைசெய்வீர்கள். ஆனால், ‘என் தலையில் இருக்கும் தொப்பியைக் குறிப்பிட்ட விதத்தில் ஆட்டினால், பேக்கரியில் கேக் இலவசமாகக் கிடைக்கும்’ என நண்பன் ஒருவன் சொன்ன விஷயத்தை நம்பி, பேக்கரி கடைக்காரரால் ஓட ஓட விரட்டப்படுகிறான் அதே சிறுவன். 

அந்தச் சேட்டைக்காரச் சிறுவனுக்கு ஹாஸ்டல் பிடிக்கும்தான். ஆனால், அடிக்கடி வீட்டுக்கு ஓடிவந்து இம்சை கொடுப்பான். மீன் பிடிப்பதைப் பொழுது சாயும்வரை வேடிக்கைபார்த்துக்கொண்டிருப்பான். பூச்சியைப் பிடித்து ஆராய்ச்சி செய்வான். பிடித்த பூச்சிகளை வைத்துக்கொள்ள இடமில்லாமல், வாயில் போட்டுத் துப்பிய வரலாறும் அவனுக்கு உண்டு. வேட்டை அவ்வளவு பிடிக்கும். பறவைகளைச் சுட்டுத் தள்ளுவதில் அவனுக்கு நிகர் அவன்தான். எலி பிடிப்பது, முயலை வேட்டையாடுவது, இன்னும் மிச்சமிருக்கும் அத்தனை இம்சைகளையும் அப்பாவுக்குக் கொடுப்பதுமாய் வளர்ந்த அந்தச் சிறுவனைப் பார்த்து, ‘நீ உனக்கும் நம் குடும்பத்துக்கும் அவமானமாய் இருக்கப்போகிறாய்’ எனச் சாபம் விடுகிறார் அவனது அப்பா. இப்படியாகப் பள்ளியில் படிக்கும்போது ஒட்டுமொத்த இம்சைகளின் அரசனாய் இருந்த அந்தச் சிறுவன்தான், சார்லஸ் டார்வின். 

ஒரு செடியைக் குறிப்பிட்டு, ‘அதில் கலர் கரைசலை ஊற்றினால் விதவிதமான வண்ணங்களில் பூ முளைக்கும்’ என்ற ஒரு பொய்யைச் சொல்கிறான் சிறுவன் டார்வின். ஏனெனில், ‘பொய் சொன்னாலும் அதில் ஒரு கிளர்ச்சி இருக்க வேண்டும்’ என்பது டார்வினின் எண்ணம். ஆனால், அவர் சொன்ன ஓர் உண்மைதான், உலகை உலுக்கிப்போட்டது. அது, ‘குரங்கு இனத்திலிருந்து பரிணமித்தவர்களே, மனிதர்கள்!’. 

கடந்த சில நாள்களுக்கு முன்புகூட, ‘டார்வினின் கோட்பாடு தவறு’ எனச் சொல்லி, வாங்கிக் கட்டிக்கொண்டார் மத்திய இணையமைச்சர் சத்யபால் சிங். 1859-ல் சொன்ன டார்வினின் கருத்துக்கு இன்றுவரை ஆயுள் இருப்பதுதான், சார்லஸ் டார்வின் என்ற அறிவியல் அறிஞரின் வெற்றி. என்றுமே இருக்கும் என்பதுதான் ஆய்வாளர்கள் கருத்து. 

1809-ம் ஆண்டு, பிப்ரவரி 12 ல் பிறந்தார் டார்வின். ‘மகனை எப்படியாவது மத குரு ஆக்கிவிடவேண்டும்; மருத்துவர் ஆக்கிவிட வேண்டும்’ என ஆசைப்பட்ட அப்பாவுக்கு, ‘ஸாரிப்பா’ என்று சொல்லாமல் தன் போக்கிலேயே திரிந்தவர் டார்வின். அவருக்கு, அறிவியலில் ஆர்வம் இருந்தது. பறவைகள், விலங்குகள், பவளப் பாறைகள், பூச்சிகளை ரசிப்பது, சுரண்டிப் பார்ப்பது, சேகரிப்பது, அவற்றைக் குடைந்து எதையாவது குறிப்பெழுதி வைத்துக்கொள்வதில் ஆர்வம் இருந்தது. 

அதற்கான காரணம், ‘எவையெல்லாம் என்னை ஆர்வப்படுத்தியதோ, அதையெல்லாம் எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது’ என்றார் டார்வின். இல்லையெனில், பள்ளிச் சிறுவனாக இருக்கும்போதே, ‘வொன்டர்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற புத்தகத்தின் உண்மைத்தன்மையை விடிய விடிய விவாதித்திருக்க மாட்டார். வேதியியலில் தீவிர ஆர்வமாக இருந்த அண்ணனுக்கு ஆய்வக உதவியாளனாக இருக்கிறேன்’ எனச் சொல்லி, அண்ணனின் ஆராய்ச்சிகளை வேவு பார்த்திருக்க மாட்டார். சீனியர், ஜூனியர் என வயது வித்தியாசம் இல்லாமல், கிடைக்கும் நேரங்களில் இயற்கையோடு ஒட்டிக்கொள்வதும், இயற்கை சார்ந்த நிகழ்ச்சிகள், விவாதங்கள், ஆய்வுகளில் பங்கேற்பதுமாய் இருந்திருக்க மாட்டார். 

இப்படி அறிவியலுக்காக நேர்ந்துவிடப்பட்டவராகத் திரிந்த டார்வினுக்கு, பூச்சிகளைப் பற்றிய ஒரு புத்தகத்தில், ‘டார்வினால் கண்டுபிடிக்கப்பட்ட’ என்ற வார்த்தைகள் இடம்பெற, எதிர்கால வெற்றிக்கான அடித்தளமாக இதையே தீர்மானித்துக்கொண்டார். 

கல்லூரியில் படிக்கும்போது பழக்கமான தாவரவியல் பேராசிரியர் ஒருவரின் உதவியால், ‘பீகிள்’ கப்பலில் இயற்கை ஆய்வாளராக இணைந்துகொன்டார். ‘பரிணாமவியல் கொள்கை’யை உலகிற்குச் சொல்ல மிக முக்கியக் காரணமாக அமைந்த இந்தப் பயணம், டார்வின் எதிர்பார்க்காத ஒன்றுதான். அந்தக் கூத்தை அவரே தனது சுயசரிதையில் இப்படி விவரித்திருக்கிறார், 

“பீகிள் கப்பலின் கேப்டன் பிட்ஸ் ராயுடன் நான் நெருக்கமாகப் பழகிய பிறகு, என்னுடைய மூக்கின் வடிவத்தை வைத்து நான் நிராகரிக்கப்படும் அபாயத்திலிருந்து தப்பித்ததாகக் கேள்விப்பட்டேன். ஏனெனில், ‘ஒரு மனிதனின் புறத் தோற்றங்களை வைத்தே அவனது குணத்தைத் தீர்மானிக்க முடியும்’ என நம்பியவர் அவர். என் மூக்கைப் பார்த்து ‘இவன் இந்தப் பயணத்துக்குத் தேவையான ஆற்றலையும் தைரியத்தையும் பெற்றிருப்பானா?’ எனச் சந்தேகப்பட்டாராம் அவர். பிறகு, என் மூக்கைப்பற்றி அவர் பேசியது தவறு என உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.” 

பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்களோடு பீகிள் கப்பலுக்கும் டார்வினுக்குமான உறவையும் ‘பீகிள் கடற்பயணம்’ என்ற தனிப் புத்தகமாகவே எழுதியிருக்கிறார் டார்வின். “நான் படித்தது, நினைத்தது எல்லாவற்றையும் நேரடியாகப் பார்த்து, ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தினேன். இது, ஆய்வில் ஈடுபட்ட ஐந்து ஆண்டுகளிலும் தொடர்ந்தது. இந்தப் பழக்கம்தான், நான் அறிவியலில் என்ன சாதிக்க நினைத்தேனோ அதைச் சாதிக்க உதவியது’’ என்கிறார் டார்வின். 

வாழ்வின் பெரும்பகுதியை ஆய்வுகளில் கழித்த டார்வினுக்குக் காதலும் பெரும் களம்தான். ‘ஆய்வுகளுக்கு மத்தியில் குடும்பத்துக்கும் சரியாக நேரம் ஒதுக்குகிறார் டார்வின்’ எனப் பக்கத்து வீட்டுக்காரர்கள் பொறாமைப்பட்ட சம்பவமும் டார்வின் டைரியில் உண்டு. யாரோ ஒருவரோடு கல்யாணம் என்ற நிலையில் தயாராக இருந்தார் ‘எம்மா’. சம்பந்தப்பட்ட நபர், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள, நாயகனாக என்ட்ரி கொடுத்தது டார்வின்தான். ‘எம்மாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என அவர் வீட்டுக்கே சென்று சொன்ன ஹீரோ டார்வின். 

Charles Darwin

1839-ல், டார்வினுக்கும் எம்மாவுக்கும் திருமணம். டார்வின் போல அறிவியலில் ஆர்வம் இல்லை என்றாலும், இலக்கியம் படிப்பதில் கில்லாடி எம்மா. சிறுவயதிலேயே தாயை இழந்த டார்வினுக்கு நண்பன், காதலி, அம்மா, மனைவி... என எல்லாமே எம்மாதான். இருவருக்குமான காதலுக்குப் பிறந்த பத்துக் குழந்தைகள் சாட்சி. அறிவியல் மொழிக்காரனுக்கு, காதல் வசனங்களும் வரும். ஒருமுறை காய்ச்சலில் கிடந்தபோது எம்மாவிடம் டார்வின் சொல்கிறார், ‘நீ இவ்வளவு அக்கறையாகப் பார்த்துக்கொள்வாய் என்றால், தினம் தினம்கூடக் காய்ச்சலில் படுப்பேன்’ என்று.

காதலில் மட்டுமல்ல, நட்புக்கும் உதாரணம் இருக்கிறது டார்வினிடம். டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு ஆதரவாகப் பேராசிரியர் ஹென்றிட் என்பவர், ‘மனிதனின் வளர்ச்சி’ என்ற நூலை வெளியிடுகிறார். ‘பைபிளுக்கு எதிராகப் பேசுகிறார்’ என ஏற்கெனவே டார்வின் மீது தீராக் கோபத்தோடு இருக்கும் பாதிரியார்களுக்கு, இந்த நூல் திரி கிள்ளிக் கொளுத்தியது. டார்வினுக்கு வந்த எதிர்ப்புகளையெல்லாம் தடுத்துத் தாங்கிக்கொண்டவர், தாமஸ் ஹென்றி ஹக்ச்லே என்பவர். அதிகம் பேசுவதையும் வாக்குவாதம் செய்வதையும் விரும்பாத டார்வினுக்கு, தாமஸ்தான் ‘ஆக்ஸன் டார்வின்’. டார்வினுக்கு ஆதரவாகப் பல மேடைகளில் பேசினார்; விவாதம்செய்தார்; மக்களுக்குப் புரியவைத்தார். 

 

ஆய்வுசெய்த டார்வினும் இப்போது இல்லை; புரியவைத்த தாம்ஸும் இல்லை. டார்வினின் தேவையைவிட, தாமஸ்களின் தேவைதான் இப்போது அதிகம் இருக்கிறது. ஏனெனில், டார்வின் சொன்னது இதுதான். ‘மனிதர்கள் குரங்கில் இருந்து பிறந்தவர்கள் அல்ல; குரங்கிலி ருந்து பிரிந்தவர்கள்!’.

https://www.vikatan.com

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பேசும் படம்: தாவரமும் தாவரம் சார்ந்ததும்

 

 
pesum%20padam%201

 

pesum%20padam%202
       

pesum%20padam%208
pesum%20padam%207
 
pesum%20padam%203
pesum%20padam%204
 

 

pesum%20padam%205
pesum%20padam%206
  • தொடங்கியவர்

யார் இந்த Priya Prakash Varrier? வாய்ப்பு கிடைத்தும் முதல் படம் மிஸ் ஆனது ஏன்?

 

  • தொடங்கியவர்

காதல் செய்வோம்: இது மனிதக் காதல் அல்ல

shutterstock25046854

உயிரினங்கள் காதலிக்குமா? இந்தக் கேள்வியும் சந்தேகமும் அர்த்தமற்றவை. சமூக விலங்காகிவிட்ட நம்மில் சிலர் வேண்டுமானால் காதலிக்காமல் இருக்கலாம். காதலுக்காக உயிரினங்களின் மெனக்கெடல்கள் கணக்கற்றவை.

தனது ஜோடி உயிரினத்தைக் கண்டறிவதற்காக உயிரினங்கள் ஆடுகின்றன, பாடுகின்றன, ஒன்றுடன் ஒன்று மல்லுக்கட்டுகின்றன, காதல் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றன. அடக்கமான, மூர்க்கமான, இப்படி ஏதோ ஒரு வகையிலான காதல் வெளிப்படுத்தல் இல்லையென்றால் உயிரினங்களின் அடுத்த சந்ததி உருவாகாது.

தனக்கான கச்சிதமான இணையைத் தேடவும் அதைத் தனதாக்கிக் கொள்ளவும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் இயங்குகின்றன. இதெல்லாமே இனப்பெருக்க வெளிப்பாடு (courtship display) எனப்படுகிறது. உயிரினங்கள் இப்படித் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் அம்சங்கள் ஒவ்வொன்றுமே அவற்றின் ஆரோக்கியத்தையும் உடல் வலுவையும் வெளிப்படுத்தக்கூடியவை. தன்னால் சிறப்பாக இரைதேட முடியும், வாரிசுகளுக்கு உணவளிக்க முடியும் என்பதை முன்கூட்டியே நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பு.

அதேநேரம் மனித இனத்தில் கற்பிக்கப்பட்டுள்ளதற்கு மாறாக பெரும்பாலான உயிரினங்களில் பெண்களே தங்களுக்கான இணையைத் தேர்ந்தெடுக்கின்றன, ஆண்கள் அல்ல. தற்போது முழுக்கவும் வணிகமயமான காதல் வெளிப்படுத்தல் சார்ந்தும் மனிதர்கள் மாறிவிட்டார்கள். நல்லவேளையாக ஆறாவது அறிவைப் பெறாத உயிரினங்கள் இன்னும் தங்கள் ஆதிக் காதலைத் தொலைக்காமல் இருக்கின்றன.

உயிரினங்கள் உலகில் கொட்டிக் கிடக்கும் காதல் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில மட்டும்:

பூநாரைகளின் வியத்தகு நடனம்

ஆண்டுதோறும் தான்சானியாவின் போகோரியா ஏரியில் ஆயிரக்கணக்கான பூநாரைகள் கூடி நடத்தும் நடனம் உலகப் புகழ்பெற்றது. உலகில் ஏதாவது ஓர் உயிரினம் தங்கள் இணையைத் தேடுவதற்கு பெரும் எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கூடுகிறது என்றால், அது இங்கேதான்.

shutterstock785896027

சமூகப் பறவைகளான பூநாரைகள் பெரும் கூட்டமாகவே வாழ்கின்றன. ஏரியில் தரையிறங்கும் பூநாரைகள் நடனமாடிக்கொண்டே ராணுவ அணிவகுப்பைப் போல நகர்த்துச் செல்லும். இப்படிச் செய்யும்போது ஒவ்வொரு பூநாரையும் எதிரே உள்ள பூநாரைகளின் இறக்கைகளை கவனமாக உற்றுப் பார்க்கும்.

பூநாரைகளின் கண் நிறமும் பிரகாசமான இறக்கைகளுமே சிறந்த ஜோடியைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் அடிப்படையில் எந்த ஜோடி தனக்குச் சரியாக இருக்கும் என்பதை பூநாரைகள் முடிவு செய்கின்றன. இணை முடிவான பின், பெரும்பாலும் அந்த ஜோடி வாழ்க்கை முழுக்கப் பிரிவதில்லை.

சில நேரம் தனது ஜோடியைத் தேடுவதற்கு ஆண், பெண் பூநாரைகள் தனித்தனி குழுக்களாக அணிவகுத்து நடனம் ஆடுவதும் உண்டு. இதில் ஒவ்வொரு பூநாரையும் தனது ஜோடிப் பூநாரையை திருப்திப்படுத்துவதற்கு முனையாமல், ஒரு குழு மற்றொரு குழுவை திருப்திப்படுத்துவது போலவே ஆடுவதும் உண்டு.

கொரில்லாவின் காதல் விளையாட்டு

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள மலை கொரில்லாக்களில் குழுவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆண் குரங்கு 'வெள்ளிமுதுகு' என்று அழைக்கப்படும். இந்த ஆண் குரங்கு குழுவில் உள்ள பெண் குரங்குகள், குட்டிகளுக்குப் பாதுகாப்பை வழங்கும். மனித அப்பாக்களைப் போலில்லாமல் குழந்தைகளை கவனித்துக்கொள்ளுதல், விளையாட்டுத் தோழனாக இருப்பது மட்டுமில்லாமல், வாழ்க்கையைக் கற்றுக்கொடுப்பதிலும் சிறந்த முன்மாதிரியாக இவை திகழுகின்றன.

shutterstock11497138

அதேநேரம் இளம் பெண் கொரில்லாக்கள் இந்த வெள்ளிமுதுகைக் கவர நினைக்கும். அது கருவுறத் தயாரான நிலையில் முதலில் வெள்ளிமுதுகைப் பார்த்துச் சிரிக்கும், அண்ணல் நோக்குவதற்காகக் காத்திருந்து தானும் கண்ணோடு கண் நோக்கும்.

இதற்கெல்லாம் வெள்ளிமுதுகு அசைந்து கொடுக்காதபோது முதிர்ச்சி அடையாத இரண்டு இளம் ஆண் குரங்குகளைச் சுமந்துகொண்டு அந்த பெண் கொரில்லா செல்லும். அதன் பிறகும் வெள்ளிமுதுகு பேசாமல் இருக்காது.

மனிதர்களைப் போன்ற போனபோ

போனபோ குரங்குகள் மனிதர்களைப் போலவே தன் பிரியத்தை வெளிப்படுத்த இணையைக் கட்டிப்பிடித்துக்கொள்ளுமாம், முத்தமும் கொடுக்குமாம்.

shutterstock550155748

அது மட்டுமில்லாமல் ஒரு போனபோ மற்றொரு போனபோவை அலங்கரித்து அழகு பார்க்கவும் செய்கிறது.

பெயரே காதல் சொல்லும்

காதல் பறவைகள் இல்லாமல் காதல் உயிரினங்கள் பட்டியலைத் தயாரிக்க முடியுமா? இந்தப் பறவைகள் ஒரு முறை ஜோடி சேர்ந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் பிரியாது. அதிலும் இவை சின்னதாக இருக்கும்போதே காதல் துளிர்த்துவிடும். இரண்டு மாதக் குஞ்சுகளாக இருக்கும்போதிலிருந்து காதல் நடைமுறைகளைத் தொடங்கிவிடுகின்றன. பெண் காதல் பறவை தன் இறக்கையை சிலிர்த்துக் காட்டும்.

அதற்கு பதிலாக வணக்கம் சொல்வதுபோல ஆண் காதல் பறவை தலையை மேலும் கீழும் இறக்கி நடனம் ஆடும்.

இதெல்லாம் மட்டுமில்லாமல் ஜோடி சேர்ந்த பிறகும், இவை அடிக்கடி செல்லமாகக் கொஞ்சிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

புது நிறம் காட்டும் கடல் குதிரைகள்

கடலில் வாழும் சிற்றுயிர்களில் கடல்குதிரைகள் விநோதமானவை. குதிரையைப் போன்ற தலையைக் கொண்டிருந்தாலும், இவற்றுக்குக் கால்கள் கிடையாது. நீந்தியபடியே கடலில் வாழ்கின்றன. கடல்குதிரைகளின் விநோத இனப்பெருக்க முறை பற்றி நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்.

shutterstock17010136

ஆண் கடல்குதிரையின் இனப்பெருக்கப் பையில் பெண் கடல்குதிரை முட்டைகளை இட்டுவிட்டு, இரை தேடப் புறப்பட்டுவிடும். ஆண் கடல்குதிரை முட்டையை அடைகாத்துப் பொரிக்க வைக்கும். ஆண் கடல்குதிரையின் பைக்கு முட்டைகளைக் கடத்திய பிறகு பெண் கடல் குதிரை ஒவ்வொரு நாள் காலையிலும் வந்து பார்க்கும்.

இதைவிடவும் கடல்குதிரைகளின் காதல் விளையாட்டுகள் சுவாரசியம் நிறைந்தவை. ஜோடிகள் வால்களைப் பிணைத்துக்கொள்ளும், மூக்கோடு மூக்கு உரசும், உடல் நிறத்தை மாற்றிக் காண்பிக்கும். இந்த விளையாட்டுகள் இணைசேரும்போது மட்டுமில்லாமல், அடைகாக்கும் பருவத்திலும் ஏன் முட்டை பொரிக்கும்வரை தொடருமாம். இந்த நடைமுறை ஒரு நாளில் எட்டு மணி நேரம் வரைகூட நடக்கும்.

பெண்ணைப் பராமரிக்கும் இருவாச்சி

இருவாச்சிகள் சற்றே விநோதமான பறவைகள். இவற்றில் ஆண்-பெண் பறவைகள் இடையிலான பிணைப்பு மிக முக்கியமானது. இரண்டும் இனப்பெருக்கப் பாடலைப் பாடிய பிறகு, பெருமரம் ஒன்றின் பொந்தில் அடைக்கலம் புகும். பெண் இருவாச்சி முட்டையிட்ட பிறகு பொந்தில் அலகு மட்டும் வெளியே தெரியும் வகையில் விட்டுவிட்டு, பொந்தின் வெளிப்பகுதியை மூடிவிடும்.

shutterstock627665054

ஆண் பறவை இரை தேடிக் கொண்டுவந்து கொடுக்கும். குஞ்சு பொரிந்த பிறகும் சில மாதங்களுக்கு பெண்ணுக்கும் குஞ்சுகளுக்கும் ஆண் பறவை இரைதேடிக் கொண்டுவரும். பிறகு குஞ்சுகளை பத்திரமாக உள்ளே வைத்துவிட்டு பெற்றோர் பறவைகள் ஒன்று மாற்றி மற்றொன்று இரை தேடிக் கொண்டுவரும்.

சுயமாகத் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலை வந்தவுடன் குஞ்சுகளே கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடும்.

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கைகோர்த்து இணைந்த ட்ரம்ப் - கிம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

 

தென் கொரியாவில் நடைபெற்ற விண்டர் ஒலிம்பிக்ஸ் போட்டியில், அமெரிக்க அதிபர் மற்றும் வடகொரியா அதிபர் போன்ற தோன்றத்தில் இருவர் வருகை தந்திருந்தது அனைவரது மத்தியிலும் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைகோர்த்து இணைந்த ட்ரம்ப் - கிம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தென் கொரியாவில் நடைபெற்ற விண்டர் ஒலிம்பிக்ஸ் 2018ல் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். விண்டர் ஒலிம்பிக்ஸ் தென் கொரியாவில் நடைபெறுவதால் வடகொரியாவைச் சேர்ந்த வீரர்கள், பார்வையாளர்கள் கலந்துகொள்வதற்கு உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை போல தோற்றம் கொண்ட டென்னிஸ் ஆலன் என்பவரும், வடகொரியா அதிபர் கிம் ஜங் உன் போல தோற்றம் கொண்ட, ஹாங்காங்கை சேர்ந்த எர்ஸ்டாட்ஸ் கிம் வருகை தந்திருந்தனர்.

கைகோர்த்து இணைந்த ட்ரம்ப் - கிம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதனை பார்த்த பொதுமக்கள் அனைவரும் இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விளையாட்டுப் போட்டிக்கு அமெரிக்காவின் துணை அதிபரும், வடகொரிய அதிபர் கிம் ஜங்-கின் சகோதரியும் வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கைகோர்த்து இணைந்த ட்ரம்ப் - கிம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

சாம்பா நடனம்... கார்னிவல் திருவிழா... ஆடித்திளைக்கும் பிரேசில்! #CarnivalBrazil

 
 
289605.jpg 289606.jpg 289607.jpg 289608.jpg 289609.jpg 289610.jpg  289612.jpg  289615.jpg 289618.jpg 289619.jpg 289620.jpg 289621.jpg 289622.jpg 289623.jpg 289624.jpg 289625.jpg 289626.jpg 289627.jpg 289628.jpg 289629.jpg 289630.jpg 289631.jpg 289632.jpg 289633.jpg 289634.jpg 289635.jpg 289636.jpg 289637.jpg 289638.jpg 289639.jpg 289640.jpg 289641.jpg 289642.jpg 289643.jpg 289644.jpg 289645.jpg 289646.jpg 289647.jpg 289648.jpg 289649.jpg 289650.jpg 289651.jpg   289661.jpg 289662.jpg 289663.jpg 289664.jpg 289665.jpg 289666.jpg 289667.jpg 289668.jpg 289669.jpg 289670.jpg 289671.jpg  289674.jpg 289675.jpg 289676.jpg 289677.jpg 289678.jpg 289679.jpg 289680.jpg 289681.jpg  289683.jpg  289685.jpg  289687.jpg 289688.jpg 289689.jpg 289690.jpg 289691.jpg 289692.jpg 289693.jpg 289694.jpg 289695.jpg 289696.jpg 289697.jpg 289698.jpg 289699.jpg 289700.jpg 289701.jpg 289702.jpg 289703.jpg 289704.jpg 289705.jpg 289706.jpg 289707.jpg 289708.jpg 289709.jpg 289710.jpg 289711.jpg 289712.jpg 289713.jpg 289714.jpg 289715.jpg 289716.jpg 289717.jpg 289718.jpg 289719.jpg 289720.jpg 289721.jpg 289722.jpg 289723.jpg 289724.jpg 289725.jpg 289726.jpg 289727.jpg 289728.jpg 289729.jpg 289730.jpg 289731.jpg  289734.jpg 289735.jpg 289736.jpg 289737.jpg 289738.jpg 289739.jpg 289740.jpg 289741.jpg 289742.jpg 289743.jpg 289744.jpg 289745.jpg 289746.jpg 289747.jpg 289748.jpg 289749.jpg 289750.jpg 289751.jpg 289752.jpg 289753.jpg 289754.jpg 289755.jpg 289756.jpg 289757.jpg 289758.jpg 289759.jpg 289760.jpg 289761.jpg 289762.jpg 289763.jpg 289764.jpg 289765.jpg 289766.jpg 289767.jpg 289768.jpg 289769.jpg 289770.jpg 289771.jpg 289772.jpg 289773.jpg 289774.jpg 289775.jpg 289776.jpg 289777.jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தடைகளை எதிர்த்து போராடும் சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட வீரர்

 

விளையாட்டுக்கு உடல் குறைபாடு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து வருகிறார் சோமாலிய பிரிட்டிஷ் கூடைப்பந்தாட்ட வீரர் அப்டி ஜாமா.

  • தொடங்கியவர்

பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை பரிசோதித்த நாள் (பிப்.13- 1960)

 

பிரான்ஸ் தனது முதல் அணுகுண்டை பரிசோதித்து பார்த்த நாள். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1914 - பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது. * 1934 - சோவியத் நீராவிக்கப்பல் செலியூஷ்கின் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது. * 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரை ஹிட்லரின் நாசிப் படைகளிடம் இருந்து மீட்டன. * 1960 - பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது. * 1971 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது. *

 
 
பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை பரிசோதித்த நாள் (பிப்.13- 1960)
 
பிரான்ஸ் தனது முதல் அணுகுண்டை பரிசோதித்து பார்த்த நாள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1914 - பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.
 
* 1934 - சோவியத் நீராவிக்கப்பல் செலியூஷ்கின் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
 
* 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரை ஹிட்லரின் நாசிப் படைகளிடம் இருந்து மீட்டன.
 
* 1960 - பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது.
 
* 1971 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.
 
* 1974 - நோபல் பரிசு பெற்ற அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
 
* 1975 - நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் தீ பரவியது.

* 1978 - சிட்னியில் ஹில்டன் உணவகத்தின் முன் குண்டு வெடித்ததில் ஒரு காவல்படை உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1984 - கான்ஸ்டன்டீன் செர்னென்கோ சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார்.
 
* 1985 - கொக்கிளாய் ராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
 
* 1990 - இரண்டு ஜெர்மனிகளும் இணைவது குறித்த இரண்டு-கட்டத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
 
* 1996 - நேபாள மக்கள் புரட்சி மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
 
* 2001 - எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 400 பேர் வரை கொல்லப்பட்டனர்.
 
 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இயற்கை வழங்கிய சிறந்த தோட்டங்கள்- புகைப்படத் தொகுப்பு

2018 ஆம் ஆண்டு சர்வதேச தோட்டக்கலை புகைப்படக் கலைஞர்களின் போட்டியில் பிரேசிலிலுள்ள ஸெராடோ என அறியப்படும் பரந்த சுற்றுச்சூழல் மண்டலத்தின் புகைப்படம் முதலிடம் பெற்றுள்ளது.

பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவை சேர்ந்த மார்சியோ கேப்ராலின் எடுத்த இந்த புகைப்படத்திற்கு 'ஸெராடோ சன்ரைஸ்' என்று தலைப்பிட்டிருந்தார்.

Luminescent flowers beneath a sunrise

உருளுவது போன்ற தோற்றமுடைய மலைகள், சீனாவில் ட்சஜியாங் மாகாணத்தில் பொன்னிறத்தில் தோன்றும் அரிசி பயிரிடுதலை காட்டுகின்றன, இந்த புகைப்படம் ஷௌஃபெங் ட்சாங் அவர்களால் எடுக்கப்பட்டது.  உருளுவது போன்ற தோற்றமுடைய மலைகள், சீனாவில் ட்சஜியாங் மாகாணத்தில் பொன்னிறத்தில் தோன்றும் அரிசி பயிரிடுதலை காட்டுகின்றன, இந்த புகைப்படம் ஷௌஃபெங் ட்சாங் அவர்களால் எடுக்கப்பட்டது.

டோர்செட், ஸ்டோபரோ ஹீத் தேசிய இயற்கைப் பாதுகாப்பிடத்தில், ஊதா புதர் செடியை கம்பள விரிப்பை போல மார்க் பேவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

டோர்செட், ஸ்டோபரோ ஹீத் தேசிய இயற்கைப் பாதுகாப்பிடத்தில், ஊதா புதர் செடியை கம்பள விரிப்பை போல மார்க் பேவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

 

 

ஜெர்மனியில் பவாரியாவில் நிலவு கேட் என்று அழைக்கப்படும் ஹாபிட் கதவு ஒன்றை கண்டுபிடித்து அன்னி கிரீன்-ஆர்ட்டேஜ் புகைப்படம் எடுத்துள்ளார்.

ஜெர்மனியில் பவாரியாவில் நிலவு கேட் என்று அழைக்கப்படும் ஹாபிட் கதவு ஒன்றை கண்டுபிடித்து அன்னி கிரீன்-ஆர்ட்டேஜ் புகைப்படம் எடுத்துள்ளார்.

 

சீனாவின் யுன்னனிலுள்ள மலைகளில் மூலிகை குணமுடைய இந்த அழியும் விளிம்பிலுள்ள செடி உயரமாக வளர்ந்துள்ளதை ஈய் ஃபான் படம் பிடித்துள்ளார்.

  சீனாவின் யுன்னனிலுள்ள மலைகளில் மூலிகை குணமுடைய இந்த அழியும் விளிம்பிலுள்ள செடி உயரமாக வளர்ந்துள்ளதை ஈய் ஃபான் படம் பிடித்துள்ளார்.

 

ஒளியை ஒருமுகப்படுத்தி மர அமைப்பின் தோற்றத்தை உருவாக்கி காட்டியுள்ளார் வட அயர்லாந்தை சேர்ந்த ஸ்டீவ் லோரி.

 

ஒளியை ஒருமுகப்படுத்தி மர அமைப்பின் தோற்றத்தை உருவாக்கி காட்டியுள்ளார் வட அயர்லாந்தை சேர்ந்த ஸ்டீவ் லோரி.

இத்தாலியில் பைட்மண்டில் உள்ள வால் பஸ்காக்னாவை எடுத்துள்ள இந்தப் படப்பிடிப்புக்கு மியூரோ ட்ரோன்டோ மிகவும் பாராட்டப்பட்டார்.

இத்தாலியில் பைட்மண்டில் உள்ள வால் பஸ்காக்னாவை எடுத்துள்ள இந்தப் படப்பிடிப்புக்கு மியூரோ ட்ரோன்டோ மிகவும் பாராட்டப்பட்டார்.

ஆஸ்திரியாவின் வியன்னாவில் காட்டு வெள்ளெலி ஒன்று மலர் ஒன்றை முகர்ந்து பார்க்கிறது. ஹென்றிக் ஸ்ப்ரான்ஸ் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

ஆஸ்திரியாவின் வியன்னாவில் காட்டு வெள்ளெலி ஒன்று மலர் ஒன்றை முகர்ந்து பார்க்கிறது. ஹென்றிக் ஸ்ப்ரான்ஸ் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

 

இந்தப் பனியால் மூடிய நிலப்பகுதி லக்சம்பர்க்கில் உள்ள அன்செம்பர்க் புதிய கோட்டையில் மரியான் மாஜெரஸால் படம் பிடிக்கப்ப்பட்டது.

இந்தப் பனியால் மூடிய நிலப்பகுதி லக்சம்பர்க்கில் உள்ள அன்செம்பர்க் புதிய கோட்டையில் மரியான் மாஜெரஸால் படம் பிடிக்கப்ப்பட்டது.

லில்லி பட்டைகளை ஒன்றன் மீது ஒன்று இருக்க செய்து, அவற்றின் அழகையும், சிக்கல் நிறைந்ததையும் காட்டியதன் மூலம் கருத்து வரையறை பிரிவில் கத்தன் பால்டோக் விருது வென்றார்.

லில்லி பட்டைகளை ஒன்றன் மீது ஒன்று இருக்க செய்து, அவற்றின் அழகையும், சிக்கல் நிறைந்ததையும் காட்டியதன் மூலம் கருத்து வரையறை பிரிவில் கத்தன் பால்டோக் விருது வென்றார்.

 

கிழக்கு சுஸெக்ஸில் ஜான் குளோவர் இந்த சூரிய உதயத்தை படம் பிடித்துள்ளார்.

 

கிழக்கு சுஸெக்ஸில் ஜான் குளோவர் இந்த சூரிய உதயத்தை படம் பிடித்துள்ளார்.

வேல்ஸில் குயேநடிலில் தன்னுடைய கூட்டை கட்டுவதற்காக தாவரங்களை தேடுகின்ற கறுப்பு நிற பெண் பறவை சற்று இளப்பாறுவதை ஆலன் பிரைஸ் கண்டுள்ளார்.

வேல்ஸில் குயேநடிலில் தன்னுடைய கூட்டை கட்டுவதற்காக தாவரங்களை தேடுகின்ற கறுப்பு நிற பெண் பறவை சற்று இளப்பாறுவதை ஆலன் பிரைஸ் கண்டுள்ளார்.

 

வேல்ஸில் கார்மாதென்ஷீரில் அபெர்கிளாஸ்னி தோட்டத்தில், ஆகஸ்ட் மாதம் காண கிடைக்கும் பழங்கள் மற்றும் பூக்களின் எழில்மிகு காட்சியை நிகல் மின்கால் படம் பிடித்துள்ளார்.

வேல்ஸில் கார்மாதென்ஷீரில் அபெர்கிளாஸ்னி தோட்டத்தில், ஆகஸ்ட் மாதம் காண கிடைக்கும் பழங்கள் மற்றும் பூக்களின் எழில்மிகு காட்சியை நிகல் மின்கால் படம் பிடித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் இந்த கம்பளிப்பூச்சியின் வண்ணமயமான மொஹிகான் வேறுபட்டதொரு சிகை அலங்காரம், மிங்குய் யுவான் என்பரால் படம் எடுக்கப்பட்டது.

சீனாவின் வுஹான் நகரில் இந்த கம்பளிப்பூச்சியின் வண்ணமயமான மொஹிகான் வேறுபட்டதொரு சிகை அலங்காரம், மிங்குய் யுவான் என்பரால் படம் எடுக்கப்பட்டது.

 

ஸ்லோவேனியாவில் உள்ள கோலிக்காவின் உச்சியில் உள்ள சரிவு மே மாத இறுதியில் காட்டு நரிசிஸால் மூடப்பட்டிருப்பதை அன்னே மேனூரும் படமாக்கியுள்ளார்.

ஸ்லோவேனியாவில் உள்ள கோலிக்காவின் உச்சியில் உள்ள சரிவு மே மாத இறுதியில் காட்டு நரிசிஸால் மூடப்பட்டிருப்பதை அன்னே மேனூரும் படமாக்கியுள்ளார்.

ஹெலெனியத்தை பூவில் தன்னுடைய இளம் சிலந்தியை பாதுகாத்து கொள்வதற்காக ஒரு சிலந்தி வலை ஒன்றை உருவாக்கியது நெதர்லாந்தை சேர்ந்த ஹேன்ஸ் வான் ஹோர்ஸ்சனால் பார்த்துள்ளார்.

ஹெலெனியத்தை பூவில் தன்னுடைய இளம் சிலந்தியை பாதுகாத்து கொள்வதற்காக ஒரு சிலந்தி வலை ஒன்றை உருவாக்கியது நெதர்லாந்தை சேர்ந்த ஹேன்ஸ் வான் ஹோர்ஸ்சனால் பார்த்துள்ளார்.

கனடாவின் யூக்கோன் எல்லையிலுள்ள டூம்ஸ்டோன் டெர்ரிடோரியல் பூங்காவோடு உள்ள பார்வையில் ஆண்ட்ரியா போஸ்ஸி எடுத்த இந்தப் புகைப்படம் ஒரு பிரிவில் முதலிடம் பிடித்தது.

கனடாவின் யூக்கோன் எல்லையிலுள்ள டூம்ஸ்டோன் டெர்ரிடோரியல் பூங்காவோடு உள்ள பார்வையில் ஆண்ட்ரியா போஸ்ஸி எடுத்த இந்தப் புகைப்படம் ஒரு பிரிவில் முதலிடம் பிடித்தது.

 

லண்டனில் கிவ்விலுள்ள அரச உயிரியல் பூங்காவில் சூரியனால் ஒளியேற்றப்பட்டதைபோல இந்தப் பூக்களை அலிசன் ஸ்டேய்ட் கேமரா கண்களால் படம் பிடித்துள்ளார்

லண்டனில் கிவ்விலுள்ள அரச உயிரியல் பூங்காவில் சூரியனால் ஒளியேற்றப்பட்டதைபோல இந்தப் பூக்களை அலிசன் ஸ்டேய்ட் கேமரா கண்களால் படம் பிடித்துள்ளார்

 

ஜெர்மனியில் முழுமையாக பூத்திருந்த விஸ்டாரியாவைக் புகைப்படம் எடுத்ததற்காக வோல்கர் மைக்கேல் பாராட்டப்பட்டார்.

 

ஜெர்மனியில் முழுமையாக பூத்திருந்த விஸ்டாரியாவைக் புகைப்படம் எடுத்ததற்காக வோல்கர் மைக்கேல் பாராட்டப்பட்டார்.

உலர்ந்த மலர்களை படம் பிடித்து வழங்கிய தொகுப்புக்கு ஃபிரண்டிஸெக் ரெருச்சா பாராட்டப்பட்டார்.

உலர்ந்த மலர்களை படம் பிடித்து வழங்கிய தொகுப்புக்கு ஃபிரண்டிஸெக் ரெருச்சா பாராட்டப்பட்டார்.

ஸ்காட்லாந்தில் மூடுபனி மற்றும் மழையில் மூடியிருந்த தனிமைப்படுத்தப்பட்டிருந்த பைன் மரத்தொகுதியை வில்லியம் டோரே படம் பிடித்துள்ளார்.

 

ஸ்காட்லாந்தில் மூடுபனி மற்றும் மழையில் மூடியிருந்த தனிமைப்படுத்தப்பட்டிருந்த பைன் மரத்தொகுதியை வில்லியம் டோரே படம் பிடித்துள்ளார்.

 

பிளம் பழத்தின் இந்த வாழ்க்கை முடிவு புகைப்படம் மசுமி ஷியேஹாராவால் எடுக்கப்பட்டது.

பிளம் பழத்தின் இந்த வாழ்க்கை முடிவு புகைப்படம் மசுமி ஷியேஹாராவால் எடுக்கப்பட்டது.

 

அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் நோய்களால் வட அமெரிக்காவின் தேனீக்களின் இடம்பெயர்வை உணர்த்துவதற்காக, கிளே போல்ட் ஒரு புகைப்படத் தொடரை படம்பிடித்திருந்தார்.அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் நோய்களால் வட அமெரிக்காவின் தேனீக்களின் இடம்பெயர்வை உணர்த்துவதற்காக, கிளே போல்ட் ஒரு புகைப்படத் தொடரை படம்பிடித்திருந்தார்.

பிற செய்திகள்:

http://www.bbc.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மழை வந்தால் லீவு... போலிக் கண்கள்... ஆந்தைகள் பற்றிய அதிகம் அறியப்படாத தகவல்கள்!

 

லகில் இரவில் விழித்திருக்கும் பறவை எது என்று கேட்டால், அதற்குப் பெரும்பாலானோரின் பதில் 'ஆந்தை' என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இவ்வுலகில் 174 வகையான பறவைகள் இரவில் விழித்திருக்கின்றன. ஆந்தை இனத்தில் மொத்தம் 133 வகைகள் உள்ளன. அவற்றில் ஆந்தைகள் கண்கள் பெரியதாகவும், பார்க்கும் திசையை மாற்றுவதற்கு முழுத் தலையையும் திருப்பிப் பார்க்கும் தன்மையும்கொண்டவை. ஆந்தை தூரப்பார்வை கொண்டது. பல ஆந்தைகள் முழு இருட்டிலும்கூட ஒலியைத் தொடர்ந்து வேட்டையாடும் தன்மை கொண்டவை. இதுபோல பல பொதுவான தகவல்கள் தெரிந்திருக்கலாம். ஆனால் ஆந்தையைப் பற்றி சில தகவல்கள் இன்னும் தெரியாமல் இருக்கத்தான் செய்கின்றன. அதில் சில சுவாரஸ்யமான தகவல்களை காணலாம். 

 

ஆந்தை தகவல்கள்

 

- மிகப் பெரிய கொம்புகளுடைய ஆந்தை தனது இறக்கைகளைப் பயன்படுத்தி தண்ணீரில் கடினமாக நீந்தக் கூடிய தன்மை கொண்டது. நீரில் நீந்திக் கரையேறும்போது கொம்பு ஆந்தைகள் தனது இறகினை உலர்த்தும். அப்போது மனிதர்களைக் கண்டால் தாக்கும்

- ஆந்தைகள் இரவில் மட்டும் விழித்திருப்பதில்லை, பெரும்பாலான ஆந்தைகள் பகலிலும் விழித்திருந்து இரை தேடும். 

- ஆந்தை இனங்களில் 14 வகையான முதுகெலும்புகளைக் கொண்ட ஆந்தைகள் இருக்கின்றன. இந்த முதுகெலும்புகள் மூலம் 270 டிகிரி கோணத்தில் தலையைத் திருப்ப முடியும். 

- கியூபாவில் வசித்துவந்த உலகின் மிகப்பெரிய ஆந்தை கியூபா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆந்தை 3.6 அடி உயரம் உள்ளது. இவ்வளவு பெரிய ஆந்தை பறந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால், அப்படிப் பறந்திருந்தால் இதுதான் உலகில் அதிக உயரம் பறக்கும் பறவையாக இருந்திருக்கும். இந்த ஆந்தையின் கால்களைப் பார்க்கும்போது, மனிதனுக்கு இணையான வேகத்தில் ஓடும் என்றே சொல்லலாம்.  

பறவை

- கொடிய வகை ஆந்தைகள் மத்தியக் கிழக்கு நாடுகளில் விவசாயிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்துகிறது. ஆம், இந்த ஆந்தைகள் ஒரு வருடத்திற்கு 6,000 எலிகளை உண்ணும். அதனால் விவசாயிகளுக்கு எலித் தொல்லை இருக்காது. இதனால் விவசாயிகள் கொடிய ஆந்தையை நண்பனாகவே பார்க்கின்றனர். விவசாயிகளின் நண்பன் என்று எல்லோரும் மண்புழுவைத்தான் சொல்வார்கள். அந்த வரிசையில் இந்த ஆந்தையையும் சேர்த்துக்கொள்ளலாம்.

- ஆந்தைக்கு முன்பக்கம் உள்ள இரண்டு கண்களைப் போன்றே தலையின் பின்புறமும் இரண்டு கண்கள் உண்டு. ஆனால், அதில் உண்மையான கண்கள் இருக்காது. எதிரிகள் தனக்குப் பின்னாலிருந்து தாக்காமல் தப்பிப்பதற்காகத்தான் அந்தப் பொய்க் கண்களைக் கொண்டிருக்கும். 

பறவை

- பொதுவாகப் பெண் ஆந்தைகள், ஆண் அந்தைகளை விட பெரியதாக இருக்கும். 

- ஆந்தை மழையின்போது வேட்டையாடாமல் கூட்டுக்குள் இருந்து விடும். பெரும்பாலான ஆந்தைகளுக்கு இறக்கைகள் மிருதுவாக இருப்பதால் மழையின்போது பறக்க முடியாமல் போய்விடும். 

- ஆந்தை தனக்கென்று தனியாகக் கூடுகளை அமைத்துக்கொள்ளாது. மற்ற பறவைகளால் கைவிடப்பட்ட கூட்டைத்தான் ஆந்தைகள் அதிகமாக விரும்பும். 

- ஒவ்வொரு கால்களிலும் இரண்டு வலிமையான கூரிய நீளமான நகங்களைக்கொண்டிருக்கும். இதன் மூலமாகத்தான் இரையைப் பிடித்து உண்ணும். 

- பனி ஆந்தைகள் அதிகமான தொலைவு பறக்கும் தன்மைகொண்டது. 3,000 மைல் தொலைவு வரை நில்லாமல் பறக்கும் தன்மை கொண்டது. 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

காதல் சாக்லெட்!

 

Desktopjpg

 

காதலர் தினம் அன்று இதயங்களை மட்டுமல்ல பரிசுகளையும் பரிமாறிக்கொள்கிறார்கள் காதலர்கள். இதுவரை யாரும் கொடுக்காத புதுமையான பரிசு பொருட்களை தேடி அலைவதிலும் காதலர்களுக்கு அலாதிப் பிரியம்தான். எந்தப் பரிசு பொருள் கொடுத்தாலும், அதோடு சேர்த்து ஒரு சாக்லெட்டையும் சேர்த்துக்கொடுப்பது காதலர்களின் வழக்கம்.

sujathajpg

சுஜாதா

அந்த வகையில் சாக்லெட்டையே பரிசாக மாற்றி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த சுஜாதா சிவகுமார். கேக், சாக்லெட் ஆகியவற்றை வீட்டிலேயே செய்து விற்பனை செய்துவரும் இவர், காதலர் தினத்துக்காக சாக்லெட் வடிவிலான தாஜ்மகால், இதய வடிவ சாக்லெட், மணப்பெண்ணை பல்லக்கில் தூக்கிச்செல்லும் சாக்லெட், சாக்லெட் கிப்ட் பாக்ஸ், இதழ் வடிவில் செய்யப்பட்ட சாக்லெட், சாக்லெட்டில் செய்யப்பட்ட கம்மல், டலார் என காதலர்களுக்கு சாக்லெட்டை முழுமையாக டெடிகேட் செய்திருக்கிறார்.

காதலர்களுக்கான புதுமையான சாக்லெட்டுகளை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்த “The Sweet Pop -Chocs N Cakes” என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தையும் தொடங்கியிருக்கிறார் சுஜாதா.

படங்கள்: ஜே.மனோகரன்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

அப்பவும் இப்பவும் எப்பவும் ஹீரோ ரேடியோதான்..! #WorldRadioDay

 
 

ரேடியோ

 

சமைத்துக்கொண்டே சீரியல் பார்க்க முடியாது. சாப்பிட்டுக்கொண்டே கிரிக்கெட் பார்ப்பதுகூட முழுமையாக இருக்காது. ஆனால், சமைத்துக்கொண்டே ரேடியோ கேட்கலாம். சாப்பிட்டுக்கொண்டே ஸ்கோர் கேட்கலாம். ரேடியோ எப்போதும் வலிமையான ஓர் ஊடகம்தான். நம் அன்றாட வாழ்வில் பெரும்பாலான சமயங்களில் நாம் நுகரும் சாத்தியமிருக்கிற ஓர் ஊடகம்.

 

யுனெஸ்கோ அமைப்பு வானொலி இவ்வுலகிற்கு ஆற்றிய முக்கிய பங்கினைக் கருத்தில்கொண்டு அதைச் சிறப்பிக்கும் விதமாக  2011-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பிப்ரவரி 13-ம் தேதியை  "உலக வானொலி நாளாக" அறிவித்தது.

நாம் தற்போது அனுபவித்து வரும் பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் ரேடியோதான் ஆதாரமாக இருந்தது. தற்போதைய கேட்ஜெட் உலகத்தில் வேண்டுமானால் வானொலி ஒரு சாதாரண கருவியாகக் கருதப்படலாம். ஆனால், அது அறிமுகமான காலத்தில் அதன் தாக்கம் என்பது மிகப் பெரியது. உலகில் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் நடக்கக்கூடிய விஷயங்களை மற்ற இடங்களுக்குத் தெரியப்படுத்தலாம் என்பதே அப்போது பெரிய ஆச்சர்யம். அத்தகைய மாற்றத்தை நிகழ்த்த ஒரு விஞ்ஞானி படையே முயன்றது. "நிக்லோ டெஸ்லா, ஜேம்ஸ் மேக்ஸ்வெல் ஆரம்பித்து இதற்கு இறுதி வடிவம் தந்த மார்கோனி"வரை வானொலி பல்வேறு பரிணாமங்களைத் தாண்டி வந்துள்ளது.

இத்தாலி கண்டுபிடிப்பாளரான மார்கோனி கம்பியில்லா தொலைத் தொடர்பு சாதனத்தை உருவாக்க விரும்பினார். ஆனால், அதற்கான சரியான வடிவமைப்பு கிடைக்காமல் மிகவும் போராடினார். இறுதியாக "ஹென்றி ஹெர்ட்ஸ்" என்ற ஆராய்ச்சியாளர் தனது ஆராய்ச்சியில் தொலைபேசி கம்பிகளுக்கிடையேயான கருத்தினை முன்னிறுத்தி ஹெர்ட்ஸ் வேவ்ஸ் என்றொரு சமன்பாட்டை நிறுவினார். யதேச்சையாக இதைப் பார்த்த மார்கோனிக்கு இதை வைத்து ஆராய்ச்சி செய்யலாமே எனத் தோன்றுகிறது. 

1895-ம் ஆண்டு மார்கோனிக்கு முதல் ரேடியோ சிக்னல் கிடைத்தது முதல் இன்று நாம் கடைசியாக கேட்ட எப்.எம்.ஒலிபரப்பு வரை வானொலியின் பங்களிப்பினால் நிகழ்ந்த நிகழ்வுகள் அளப்பரியது.

முதலில் இந்த முயற்சியைப் பலரும் நகைக்கத் தொடங்கினர் என்பதே உண்மை. ஆனாலும், மார்கோனி மனம் தளராமல் தனது ஆராய்ச்சியை இங்கிலாந்து சென்று தொடர்ந்தார். அங்கு அவருக்கு வெற்றி கிடைத்தது. அதன்பிறகு மார்கோனியின் புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. பிறகு தனக்கென்று ஒரு நிறுவனத்தை தொடங்கினார். முதல் உலகப்போர் சமயத்தில் ஒரு நாட்டின் பலத்தினை அறிய அதற்கு எவ்வளவு ரேடியோ ஸ்டேசன்கள் இருக்கின்றன என எதிர்நாட்டினர் ஆராயும் அளவிற்கு அவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. 

உலகம் முழுவதும் தற்போது முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ரேடியோ ஸ்டேஷன்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் எண்பதுக்கும் அதிகமான ரேடியோ நிலையங்கள் இயங்குகின்றன. பேரிடர் காலங்களில் சாதாரண மக்கள் செய்தியறிய ரேடியோவையே நம்பி உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தீமில் உலக ரேடியோ தினம் கொண்டாடப்படுகிறது,இந்த வருடம் "ஸ்போர்ட்ஸ் மற்றும் ரேடியோ" என்ற தீமில் கொண்டாடப்பட உள்ளது. 

ரேடியோ டே மற்றும் வேலன்டைன்ஸ்-டே கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான வேலைகளை முடித்துவிட்டு ஆன்-ஏர்-இல் பறந்துகொண்டிருந்த மதுரையின் சில ஃபேவரைட் RJ-க்களை சில மணிநேர காத்திருப்பிற்குப் பின் எட்டிப்பிடித்தோம்.

ஆர்.ஜே. சிக்கந்ததர்  (ஹலோ எஃப் எம்.)

" ஆர்.ஜே புரொஃபைல் எனக்கு உணர்வுபூர்வமானது. மக்களை என்டர்டெயின் பண்றது சாதாரண விஷயம் இல்ல. ரேடியோல நான் சொல்ற நல்ல விஷயத்தை நாலு பேர் ஃபாலோ பண்ணும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் மீடியா ரேடியோ.

சிக்கந்தர்ரேடியோ அண்ட் ஸ்போர்ட்ஸ்  தீம்  மக்களுக்கானது ஸ்போர்ட்ஸ்ல சாதிச்ச நெறைய பேர்  நம்ம ஊருலயும் இருக்காங்க. கோபி கண்ணன், ரஞ்சித், மாரியப்பன் இப்படி லிஸ்ட் பெருசு. அவங்களோட அனுபவத்தையும்  வெற்றியையும் பகிர்வதன் மூலமா விளையாட்டு பற்றிய ஆர்வத்தையும் விழிப்புஉணர்வையும் ஏற்படுத்துவதுதான் ஹலோ எஃப்.எம் மின் ப்ளான். சமீபத்துல திருநெல்வேலியில 45 வயது நிறைந்த பெண்மணி இளவட்டக் கல்ல அசால்ட்டா தூக்கி பின்பக்கம் போடுறாங்க.  நம்ம பழக்க வழக்கங்கள் மாறினாலும் நம்ம மரபு இன்னும் மாறல. சிலம்பம், தாயம், கிட்டி, சொட்டாங்கல் இப்படி நலிந்துபோன மரபு விளையாட்டுகளை கொண்டாடும்விதமா கிராமிய திருவிழாக்களை  முன்னெடுப்பதும் இந்த வருடத்தோட ஷெட்யூல்."

ஆர்.ஜே. சேது   (சூரியன் எஃப்.எம்)

சேது

"என்டெர்டெயின்மென்ட தாண்டி, சமூகத்தின் மீது அதிக அக்கறை எடுத்துக்குற மீடியா ரேடியோ. ஜல்லிக்கட்டு நிகழ்வுக்குப் பிறகு, நமது மரபு விளையாட்டு சார்ந்த விழிப்புஉணர்வு  மக்களிடம் வரத்தொடங்கியிருக்கு. கபடிபோல மற்ற  நாட்டுப்புற  விளையாட்டுகளும் உலக அளவில் அங்கீகரிக்கப்படணும். நம்ம ஊர்ல இருந்து நிறைய வீரர்கள் உலக அரங்கில் இந்தியாவை புரொஜக்ட் பண்ணணும். அரசும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதற்கான முதல் அடியாக இந்த நாள் அமையும்".

 

ஆர்.ஜே ஜாக்சன் துரை (ரேடியோ மிர்ச்சி)



ஜாக்சன் துரை

மற்ற ஊடகங்களைப்போல் ரேடியோவுக்கு தனியா டைம் ஸ்பெண்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. 'வழித்துணைபோல நானும் வருவேன்'ங்கிற  நா.முத்துகுமாரின் வரிகள் ரேடியோவுக்கும் பொருந்தும்.  எங்களுக்கு எல்லா நாளும் ’ரேடியோ டே’ தான். நான் ஹாக்கி பிளேயர். அதனால இந்த வருஷ தீம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். மேலும் நம்ம மரபு விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்கு நினைவுகூரும் விதமாக இந்த நாளையும் வருஷத்தையும் கொண்டாடப் போறோம்.


 ஆர்.ஜே.  தினேஷ் (ரேடியோ சிட்டி)



தினேஷ்

"பொதுவா எஃப் எம் மை தியேட்டர் ஆஃப் மைண்ட்னு (Theatre of mind) சொல்லுவோம். எங்களோட வார்த்தைகளில்  உருவாகும் உங்களுடைய  உலகம். எத்தனையோ மீடியா இருந்தும் பிரதமர் மோடி ' மன் கி பாத்' னு ஒரு நிகழ்ச்சியை  வானொலியில ஏன் பண்ணணும்? ஏன்னா ரேடியோ சுலபமா மக்களுடன் கலக்கிற ஊடகம்.  ஆரம்பத்துல இருந்து இப்போ வரை ரேடியோவுக்கான முக்கியத்துவம் குறையல. 

120 கோடி மக்கள்தொகை இருக்குற நம்ம நாட்டில் இரண்டே இரண்டு  வீரர்கள்  உலக அரங்கில் இந்தியாவின் பிரதிநிதியா கலந்துக்கிறது  வலியைக் கொடுக்குது. ரேடியோ சிட்டி மூலமா பாரா ஒலிம்பிக்ஸ்கான ஃபண்ட் கலெக்‌ஷன் இப்படி சில விஷயங்கள்  விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் பண்ணியிருக்கோம்.   நம்ம ஊர் விளையாட்டு வீரர்களைக் கௌரவப்படுத்துற விதமா இந்த நாள் அமையும்.

 

நம்மைத் தட்டிக் கொடுக்க மாட்டாங்களானு ஏங்குற நெறைய பேர் இருக்காங்க. கோலியையோ தோனியையோ அங்கீககரிச்ச அளவுக்கு  மற்ற வீரர்களையும் நாம அங்கீகரிக்க ஆரம்பிக்கணும்."என முடித்துக்கொண்டார்.

ரேடியோ என்பது ஒன்-வே கம்யூனிகேஷனாகக் கருதப்பட்டாலும்,அது ஏற்படுத்தும் தாக்கம் பல்வேறு தருணங்களில் 'எக்கோ'வாக எதிரொலிப்பதை உணர்ந்திருப்பீர்கள்.

ஒலி வழியே மக்களை எண்டர்டெயின் செய்துகொண்டே, தகவல்களையும், அறிவையும் ஊட்டிக்கொண்டு இருக்கின்ற இந்த ஒலி வழி ஊடகத்தின் பணி மகத்தானது.அர்ப்பணிப்பிலும் இன்பம் காணும் வகையில் தொழிலை விரும்பிச் செய்யும் ரேடியோ துறை நண்பர்களுக்கும் அவர்களின் பணியை ஊக்குவித்து சிறக்க வைத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கும் உலக ரேடியோ தின வாழ்த்துக்கள்.

https://www.vikatan.com

 

 

இன்று (பிப்.13) உலக வானொலி தினம்: மீனவர்களுக்கு ‘வாட்ஸ்அப்’ வானொலி சேவை அறிமுகம்

 

 
pamban-fsihermen-radio

பாம்பனில் வானொலி கேட்கும் மீனவர்.

உலக வானொலி தினத்தை முன்னிட்டு, ராமேசுவரம் அருகே பாம்பனில் இயங்கிவரும் கடல் ஓசை 90.4 சமுதாய வானொலி நிலையம், வாட்ஸ் அப் வானொலி சேவையை இன்று (செவ்வாய்க்கிழமை) அறிமுகப்படுத்துகிறது.

தொலைக்காட்சி, இணையம், மொபைல்போன் என பல்வேறு தொடர்பு சாதனங்கள் வந்தாலும் வானொலிக்கு தனி இடம் உண்டு. வானொலியை உலகுக்கு தந்த மார்க்கோனி 20.07.1937 அன்று மறைந்தார். அவர் மறைந்து 81 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட மக்களுக்கு வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி, கல்வி அளிக்கும் தகவல் களஞ்சியமாகவும் வானொலிகள் செயல்பட்டு வருகின்றன.

   
kadalosai-children%20program

கடல் ஓசை வானொலியில் குழந்தைகள் நிகழ்ச்சியில் உரையாற்றும் சிறுவன்.

03.11.2011 அன்று ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) 36-வது பொதுச்சபை கூட்டத்தில் உலக வானொலி தினத்தை அறிவிக்க வேண்டும் என ஸ்பெயின் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் யுனெஸ்கோ பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.

கடந்த 04.02.2017 அன்று ராமேசுவரம் அருகே பாம்பனில் நேசக்கரங்கள் அறக்கட்டளை சார்பில், உலகிலேயே முதன்முறையாக ‘கடல் ஓசை’ என்ற பெயரில் மீனவர்களுக்கான பிரத்யேக சமுதாய வானொலி நிலையத்தை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், உலக வானொலி தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில், கடந்த ஓராண்டாக ஒலிபரப்பப்பட்டு வரும் கடல் ஓசை சமுதாய வானொலி வாட்ஸ் அப் வானொலி சேவையை இன்று (செவ்வாய்கிழமை) முதல் தொடங்குகிறது. இதுகுறித்து கடல் ஓசை வானொலியின் நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட மீனவ இளைஞர்களுக்கு அகில இந்திய வானொலி வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளித்து, இளைஞர்களாலேயே 'கடல் ஓசை’ சமுதாய வானொலி 90.4 என்ற அலைவரிசையில் கடந்த ஓராண்டு காலமாக இயங்கி வருகிறது.

கடல் ஓசை வானொலியில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து செல்லும் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு சுனாமி, புயல் சின்னம், கடல் சீற்றம் போன்ற ஆபத்தான காலங்களில் மீனவர்கள் செய்ய வேண்டியது என்ன?, கடலில் அபாயகரமான பகுதிகள் எவை? அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள் ஆகிய தகவல்கள் ஒலி பரப்பப்பட்டு வருகின்றன.

kadalosai-radio%20station

பாம்பனில் உள்ள கடல் ஓசை சமுதாய வானொலி நிலையம்.

 

மேலும் மீனவர்களுக்கான மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்கள், மீனவக் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு, மீனவப் பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, சுகாதாரமான முறையில் மீன்களை கையாள்வது, மீன் சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி, குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நிகழ்ச்சி, மன்னார் வளைகுடா, பாக். ஜலசந்தி கடல் பகுதியில் வசிக்கும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கடல் ஓசை வானொலியிலும் www.kadalosaifm.com இணையதளத்திலும் கேட்கலாம்.

முன்னோடி வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது ஆலோசனையின் பேரில், உலக வானொலி தினத்தை முன்னிட்டு கடல் ஓசை வானொலியில் ஒலிபரப்பப்படும் தகவல்களை நேயர்களிடம் உடனுக்குடன் பரிமாறிக் கொள்வதற்கு வசதியாக வாட்ஸ் அப் வானொலி சேவையை +91 7094439999 என்ற எண்ணிலிருந்து துவங்குகிறோம்.

kadalosai-students%20program

கடல் ஓசை வானொலியில் உரையாற்றும் திருப்புல்லாணி அரசு பள்ளி மாணவர்கள்.

 

வானொலி நிகழ்ச்சி குறித்தும் நேயர்கள் தங்களின் கருத்துகளை இதன் மூலம் உடனுக்கு டன் தெரியப்படுத்துவதன் மூலம் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் அவை இடம்பெறும் என்றார் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சேலை அணிந்து 'ஸ்கை டைவிங்': தாய்லாந்தில் இந்தியப் பெண் புதிய சாதனை

 
skydiving-in-sari

சீத்தல் ரானே மகாஜன்   -  பட உதவி:ஐஏஎன்எஸ்

மஹாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த சாகசங்களில் ஈடுபடும் பெண் சீத்தல் ரானே மகாஜன் சேலை அணிந்து, 'ஸ்கை டைவிங்'  செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

வழக்கமாக விமானத்தில் இருந்து குதித்து 'ஸ்கை டைவிங்' செய்பவர்கள் அதற்குரிய உடலை ஒட்டிய இறுக்கமான ஆடை அணிந்துதான் குதிப்பார்கள். ஆனால், சீத்தல் ரானே மகாஜன், மஹாரஷ்டிரா பெண்கள் அணியும் 'நவ் வாரி சேலை' அணிந்து விமானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்துள்ளார்.

பெண்கள் அணியும் வழக்கமான சேலையின் 5.4 மீட்டர் அளவாகத்தான் இருக்கும். ஆனால், மஹாராஷ்டிரா மாநில பெண்கள் அணியும் நவ் வாரி சேலையின் நீளம் 8.25 மீட்டர் இருக்கும். இந்த சேலை அணிவதும், அதை நழுவாமல் பராமரிப்பதும் மிகவும் கடினமானதாகும்.

ரானே மகாஜன் இந்த சாதனையை தாய்லாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான பட்டாயா நகரில் நேற்று (12-ம்தேதி) செய்தார். விமானத்தில் இருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து நவ் வாரி சேலை அணிந்து ரானே குதித்தார்.

சாதனை நிகழ்த்திய பின் ஸ்கை டைவிங் மையத்தில் இருந்து ரானே மகாஜன் நிருபர்களுக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''சர்வதேச மகளிர் தினம் அடுத்த மாதம் வருகிறது. அதற்காக வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என சிந்தித்தேன். வழக்கமாக நாட்டில் பெண்கள் அணியும் சேலைக்கு பதிலாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாரம்பரியாக கட்டப்படும் நவ் வாரி சேலை அணிந்து ஸ்கே டைவிங் செய்ய முடிவு செய்தேன்.

வழக்கமான சேலையைக் காட்டிலும் நவ் வாரி சேலை மிகவும் நீளமானது. கட்டுவதும், அதை அவிழ்ந்துவிடாமல் அடிக்கடி சரிசெய்வதும் முக்கியம். இந்த சேலையை அணிந்த பின், விமானத்தில் இருந்து குதிக்கும்போது அவிழ்ந்துவிடாமல் இருக்க, பல்வேறு சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்தேன்.

இறுக்கமாக சேலையை அணிந்து, ஆங்காங்கே குண்டூசிகளை வைத்து தைத்துக்கொண்டேன். உடலில் இருந்து நழுவும் சாத்தியமுள்ள இடங்களில் எல்லாம் இறுக்கினேன். அதன்பின்தான் குதிக்கத் தயாரானேன்.

இந்தியப் பெண்கள் சேலை அணிந்து தங்களின் வழக்கமான பணியைத் தவிர்த்து, இதுபோன்ற சாதனைகளையும் செய்ய முடியும் என்பதையும் இதன் மூலம் நிரூபித்து இருக்கிறேன். விமானத்தில இருந்து குதிக்கும் இந்த சாகசத்தை கடந்த 11-ம் தேதி செய்ய நினைத்து இருந்தேன். ஆனால், திடீர் மழையும், வானிலையும் சரியில்லாததால், 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தேன்.''

இவ்வாறு ரானே மகாஜன் தெரிவித்தார்.

பத்ம ஸ்ரீ விருது வென்றவரும், 2 மகன்களுக்கு தாயான ரானே மகாஜன், இதுவரை 18 முறை விமானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்து விருதுகளை வென்றுள்ளார். மேலும், 6 சர்வதேச சாதனைகளையும் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 704 முறை ஸ்கை டைவிங் செய்து, சர்வதேச, உள்நாட்டு விருதுகளை வென்றுள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம்தேதி முதல் முறையாக அண்டார்டிகாவில் உள்ள வட துருவத்தில் ரானே மகாஜன்  எந்தவிதமான பயிற்சியும் இன்றி மைனஸ் 37 டிகிரி குளிரில் ஸ்கை டைவிங் செய்தார். ரஷ்ய ஹெலிகாப்டரில் இருந்து 2,400 அடி உயரத்தில் இருந்து குதித்து ரானே ஸ்கை டைவிங் செய்த முதல் பெண் எனும் சாதனை படைத்தார்.

2 ஆண்டுகளுக்கு பின் 2006-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி அண்டார்டிகாவில் விமானத்தில் இருந்து 11 ஆயிரத்து 600 அடி உயரத்தில் குதித்தார். இதன் மூலம், உலகிலேயே 23 வயதில் இந்த சாதனையைச் செய்த பெண் எனும் பெருமையை ரானே பெற்றார்.

2008ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி 750 அடி உயரத்தில், புனே நகரில் ஹாட் ஏர் பலூனில் திருமணம் செய்து கொண்டு ரானே, வித்தியாசமாக சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com

 

 

  • தொடங்கியவர்

காதலர் தின ஸ்பெஷல்! - ஜுங்கா படத்தின் ``கூட்டிப்போ கூடவே பாடல்’’ வெளியீடு

 
 

காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் சேதுபதி நடித்துள்ள ஜுங்கா படத்திலிருந்து ’கூட்டிப்போ கூடவே’  பாடலின் லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

 

கூட்டிப்போ கூடவே லிரிக் வீடியோ

 

 

விஜய் சேதுபதி, சாயிஷா சேகல் , மடோனா செபாஸ்டியன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஜுங்கா'. இதற்குத்தானே ஆசைப்பாட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இப்படத்தை இயக்கியுள்ளார். 6 ஆண்டுகளுக்குப் பின்னர், விஜய் சேதுபதி - கோகுல் கூட்டணி இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. படத்தின் டீசர் எற்கெனவே வெளியாகி பெரிய ஹிட்டடித்தது.

இந்தநிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் சிங்கிள் ட்ராக் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சித்தார்த் விபின் இசையில் 'கூட்டிப்போ கூடவே' என்ற இந்தப் பாடலை லலிதானந்த் எழுதியுள்ளார். சத்யபிரகாஷ் மற்றும் ரனினா ரெட்டி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஜுங்கா படத்தின் பெரும்பாலான பகுதி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் மீதமுள்ள பகுதிகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது . ஒரு கேங்க்ஸ்டர் காமெடி படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை விஜய் சேதுபதி தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.           

 

  • தொடங்கியவர்

 

எழுபதுகளில் தற்போது பல்வேறு நவீன தங்கும் விடுதிகளில்,

தற்போது பல்வேறு நவீன தங்கும் விடுதிகளில், கதவுகளைத் திறக்க பிளாஸ்டிக் சாவி அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், 1970-களில் அத்தகைய வசதி அறிமுகமானது, நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

  • தொடங்கியவர்
  • காதலர் தினத்தில் இலங்கையில் மலர்ந்துள்ள ஆபத்தான மலர்கள்!

    உலகளாவிய ரீதியில் நாளையதினம் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

    பெப்ரவரி மாதத்தில் வெலன்டைன் எனப்படும் மலர்கள் மலரும் காலமாகும்.

    இந்த மலர் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சியாக காணப்பட்டாலும் புற்றுநோயயை ஏற்படுத்தும் ஆபத்தான மலர் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

    இலங்கையில் இந்த மரங்களை வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகின்றது.

    எனினும் இதன் ஆபத்தான நிலைமையை அறியாமல் சிலர் இன்னமும் இந்த மரத்தை பாதுகாப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

    இந்நிலையில் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் இந்த வெலன்டைன் மரத்தின் மலர்கள் பெருமளவு மலர்த்துள்ளன.

    இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

     

    625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

    625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

    625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

     

http://www.tamilwin.com

  • தொடங்கியவர்

‘அவள் பிரகாசிக்கட்டும்..!’ சரோஜினி நாயுடு பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு!

 

சரோஜினி நாயுடு

 
Chennai: 

ணக்குப் பாடம் என்றாலே, இன்றும் சில குழந்தைகளுக்குப் பாகற்காயைவிடக் கசப்பாகவும் வெறுப்பாகவும்தான் இருக்கிறது. அதேநேரத்தில், குறுகிய காலத்துக்குள் விரைவாய்க் ‘கணக்கு’ப் போட்டு கோடீஸ்வரர்களாகிவிடுவதில் இன்றைய அரசியல்வாதிகள் மிகத் திறமையானவர்களாக இருக்கிறார்கள். இன்றைய குழந்தைகளுக்கு வாய்ப்புக் கிடைக்காததாலும், அதிகமான அழுத்தத்தால் பந்தாடப்படுவதாலுமே இப்படியான வெறுப்புக்கு ஆளாகிறார்களே தவிர, மற்றபடி அரசியல்வாதிகளைவிட நம்மூர் குழந்தைகள் அதிகத் திறமையுள்ளவர்கள். அப்படியான அதிகத் திறமைகளுடன் விளங்கியவர்தான் நாம் பார்க்கப்போகும் இந்தக் கட்டுரையின் சிறுமி. 

 

ஆம், அந்தச் சிறுமி ஒருநாள் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார். எவ்வளவு முயற்சி செய்தும் அவருக்கு விடை சரியாக வரவில்லை. ஒருகட்டத்தில், அந்தக் கணக்கின்மீது வெறுப்பு வந்து புத்தகத்தையே மூடிவைத்துவிட்டார். பிறகு, வேறொரு நோட்டை எடுத்து... தன் மனதில் தோன்றிய எண்ணங்களைக் கவிதையாக எழுதிக்கொண்டிருக்கும்போது... அவருடைய தந்தை அருகில் வந்து, “என்னம்மா... கணக்குப் போட்டுவிட்டாயா” என்றார் மிகவும் கனிவுடன். பதில் சொல்லாது பயத்தில் இருந்தார் சிறுமி. உடனே அவர் எழுதிய நோட்டை எடுத்துப் பார்த்த தந்தை, ஆச்சர்யமடைந்தார். ‘மாஹர் முன்னீர்’ எனும் தலைப்பில் அந்த நோட்டின் 60 பக்கங்களுக்குப் பெர்சிய மொழியில் கவிதை நாடகம் வடித்திருந்தார் அந்தச் சிறுமி. அதில் நாட்டுப்பற்று, வரிக்குவரி மிளிர்ந்தது. அவருடைய கவிதை நடையைக் கண்டு பிரமித்துப்போனார்; பெருமிதமடைந்தார். 

சரோஜினி நாயுடுபிறகு மகளிடம், “உனக்கு கணக்குப் பிடிக்கவில்லை என்றால், என்னிடம் கூறியிருக்கலாமே” என்றவர், “இனிமேல் உனக்குத் தோன்றும் கவிதைகளை இந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதி வா” என்று ஒரு புதிய நோட்டைக் கொடுத்து அவரை மேலும் எழுத ஊக்குவித்தார். பின் அந்தச் சிறுமியின் தந்தை, தன் மகள் எழுதிய அந்தப் பெர்சியக் கவிதை நாடகத்தை ஹைதராபாத் நவாப்புக்கு அனுப்பிவைத்தார். படித்துப் பார்த்த நவாப்... அந்தச் சிறுமியை அழைத்து, “இதை, நீதான் எழுதினாயா” என்று அவர் சந்தேகத்தோடு கேட்டார். அதற்கு அந்தச் சிறுமி, தன்னிடமிருந்த ஆங்கிலக் கவிதை நோட்டை எடுத்து நீட்டினார். 1,300 வரிகள் கொண்ட ‘தி லேடி ஆஃப் தி லேக்’ என்ற கவிதையைப் படித்த நவாப், அந்தச் சிறுமியைப் பாராட்டித் தன்னுடைய செலவிலேயே அவரை இங்கிலாந்துக்குப் படிக்க அனுப்பினார். இன்றும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள், இந்தச் சிறுமியின் தந்தையைப் போன்று அல்ல... தாம் ஆசைப்படும் எண்ணத்தைப் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் என்ற நினைப்பில். 

அதனால்தான் இன்று பல குழந்தைகள் பெற்றோரின் கண்டிப்புக்கு ஆளாகி, தாம் விரும்பும் துறையில் சாதிக்க முடியாமலும், எதிர்த்துக் குரல்கொடுக்க முடியாமலும் அமுங்கிவிடுகின்றனர். குறிப்பாக, குழந்தைகளின் ஆசைகளைப் பெற்றோர்கள் தீர்த்துவைப்பதுதானே முறை? அதைத்தானே அந்தச் சிறுமியின் அப்பா செய்தார். அதேபோல், அந்தச் சிறுமியுடைய தாயாரும் இருந்தார். வங்காள மொழியில் பாடல்கள் புனைந்து பாடுவதில் வல்லவரான அந்தச் சிறுமியின் தாயார், ஒரு டைரி வைத்திருந்தார். அவர், ஒரு நவராத்திரி சமயம்... தனது டைரியைத் திறந்த பார்த்தபோது... அதில், தன்னுடைய மகளின் கையெழுத்தில் இரண்டு புதிய பாடல்கள் இருப்பதைக் கண்டு வியந்துபோனார். பின், தன் மகளைப் பாராட்டி அவரும் ஊக்கமளித்தார். அந்தச் சிறுமியின் பெற்றோர், மற்றவர்களைப்போல் இல்லாமல் தன் மகள் விரும்பும் துறையில், ‘அவள் பிரகாசிக்கட்டும்’ என முழுமையாக அவரை விட்டனர். இதனால்தான் பின்னாளில் அவர் உருது, தெலுங்கு, வங்காளம், இந்தி, ஆங்கிலம், பெர்சியம் என ஆறு மொழிகளில் இலக்கியங்களைச் சரளமாக எழுதியும் பொதுமேடைகளில் பேசியும் பாராட்டுப் பெற்றார். 

பின்னாளில் புகழ்பெற்ற புரட்சி மங்கையாக வலம்வந்த அந்தச் சிறுமி,“குடிமக்களைக் கொடிய விலங்குகள்போல் வேட்டையாடலாமா; நிரபராதிகளையும், நிராயுதபாணிகளையும் ‘சுட்டேன்... சுட்டேன்... தோட்டா தீரும்வரை சுட்டேன்’ என்ற ஜெனரல் டயர், குண்டுமாரி பெய்தது நியாயமா; ஆங்கிலேயரின் வீரம் இதுதானா; ஆங்கிலேய ஜனநாயகத்தின் நீதி இதுதானா; மகளிருக்கு மரியாதை செய்வதாய்க் கூறிக்கொள்ளும் ஆங்கிலேயர்கள் இந்தியப் பெண்மணிகளை நிர்வாணமாக நிறுத்தலாமா; கசையடி கொடுத்து அபலைகளைக் கதறியழச் செய்யலாமா; பாலியல் வன்புணர்வு செய்யலாமா; என் சகோதரிகளை மானபங்கம் செய்த சண்டாளர்களை நியாயத்திலும் நாகரிகத்திலும் மேலானவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் ஆங்கிலேயர்கள் ஏன் தண்டிக்கவில்லை; பயங்கரமான காட்டுமிராண்டி ஆட்சி நடத்திய முரடர்களை ஆங்கிலேயப் பாராளுமன்றம் பாராட்டியதே... நீதியா அது” என்று ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து லண்டனில் உள்ள கிங்ஸ்லீ ஹாலில் அனல்வீசும் உரையாற்றினார். 

சரோஜினி நாயுடு

ஒருகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தின் புரட்சிப் பெண்ணாக மாறிய அந்தச் சிறுமி, ஒருமுறை லாகூர் கல்லூரியில் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தார். அவரை வரவேற்றுப் பேசிய அந்தக் கல்லூரி மாணவர் மன்றத்தின் செயலாளர் ஒருவர், “I have great pleasure in welcoming in our midst India's most public woman” என்றார். அதாவது, “இந்தியாவின் மிகுந்த செல்வாக்குப் பெற்ற பெண்” என்ற அர்த்தத்தில், “India's most public woman” என்று பேசினார். ஆனால், இதன் பொருள் தவறானது. இதைக் கேட்ட அந்தப் புரட்சிப் பெண் (சிறுமி), அந்த மாணவர் மன்றத்தின் செயலாளர் தவறாகச் சொன்னதைக் கேட்டு கோபமோ, வருத்தமோ அடையவில்லை. மாறாக, அவர் தன் பதிலுரையில் இப்படிச் சொன்னார். “அந்த மாணவர் சொன்னதுபோல என்னால் செல்வாக்குப் பெற இயலாது. ஆங்கிலம் மிகவும் ஆபத்தான மொழி. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால்கூடத் தவறான அர்த்தங்களையும் விபரீத விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். எனவேதான், அந்த ஆங்கில மொழிக்குரியவர்கள் இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறோம்” என்றார் சாதுர்யமாக. அவருடைய பேச்சைக் கேட்டு, கூட்டத்தில் உள்ள அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். 

 

இப்படித் தன்னுடைய பேச்சாலும், எழுத்தாலும் புகழ்பெற்ற அந்தச் சிறுமி வேறுயாருமல்ல... ‘கவிக்குயில்’ என்று போற்றப்பட்ட சரோஜினி நாயுடு. அவருடைய பிறந்த தினம் இன்று.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

காதல் நோயின் அறிகுறிகள் என்ன? #Valentines_Day

 
 
காதல் நோயின் அறிகுறிகள் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள்.

வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய், ஞாபகம் வருகிறதா? ). எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த அறிகுறிகள் என்ன ?

வியர்க்கும் கைகள், பசியின்மை ( "பாலுங்கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடி" ), முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது, இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை .

காதலுக்கு பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டமும் ஒருவிதமான ரசாயனப் பொருட்களால் தூண்டப்படும் உடல் ரீதியான மாற்றங்களால் ஆட்டுவிக்கப்படுகின்றது.

முதலில் காமம் தோன்றும் ஒரு கட்டம் - இது அடிப்படையான பாலியல் ரீதியான ஒரு வேகம்.

காதல் நோயின் அறிகுறிகள் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இது ஈர்ப்பு நிலைக்கு இட்டுச் சென்று பின்னர் உணர்வு ரீதியாக ஒன்று சேரும் நிலைக்கும் பின்னர் அதுவே நீண்ட கால உறவுக்கும் வழி வகுக்கிறது.

ஆனால், இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் வரவேண்டியதில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் ஹெலன் ஃபிஷர். இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.

"உங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சகாவுடனோ அல்லது கல்லூரியிலோ அல்லது உங்கள் சமூக வட்டத்தில் இருப்பவர் ஒருவருடனோ உங்களுக்கு ஏற்படும் ஒரு வித ஆழமான பற்றை , நேசத்தை நீங்கள் உணரலாம். இது மாதங்கள் அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் கனிந்து மாற்றம் பெற்றும் திடீரென நீங்கள் அவர் மீது காதல் வயப்படுவீர்கள்" என்று ஃபிஷர் பிபிசியிடம் கூறினார்.

எனவே பற்று முதலில் வருகிறது. அதன் பின்னர் மிகவும் ஆழமான காதல் , பின்னர் பாலியல் வேகத்துடன் தொடர்புள்ள உணர்வுகள் .... அல்லது நீங்கள் ஒருவரால் பாலியல் ரீதியாகக் கவரப்படலாம், அவர் மீது அதற்கு பின்னர் காதல் ஏற்படலாம், அதன் பின்னர் அவர் மீது ஆழமான பற்று அல்லது உணர்வுகள் ஏற்படலாம்.... அல்லது முதலில் ஒருவருடன் பாலியல் உறவு கொள்வதற்கு முன்னரேயே அவர் மீது நீங்கள் கண்மூடித்தனமாகக் காதல் கொள்ளலாம்" என்கிறார் அவர்.

இந்த ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவிதமான ரசாயனப் பொருட்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காதல் நோயின் அறிகுறிகள் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

காதல் படிகள் !

  • காமம்:

காமம் என்பது செக்ஸ் ஹார்மோன்களான டெஸ்டொஸ்டீரோன் (testosterone) மற்றும் ஈஸ்ட்ரோஜென் (oestrogen) போன்றவற்றால் உந்தப்படுகிறது. டெஸ்டொஸ்டீரோன் என்ற ஹார்மோன் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது பெண்களின் பாலியல் உணர்வுகளிலும் பெரும் பங்கு வகிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

  • ஈர்ப்பு:

இந்தக் கட்டம் காதலில் வீழ்ந்து மற்ற எல்ல விஷயங்களையும் காதலர்களால் சிந்திக்கக்கூட முடியாத நிலை. அவர்கள் உண்மையில் பசியை இழப்பார்கள். தூக்கம் தேவைப்படாது. தங்கள் காதலரைப் பற்றியே பகல் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.

இந்த ஈர்ப்பு கட்டத்தில் "மோனோமைன்கள்" (monoamines) என்றறியப்படும் நரம்புகள் மூலம் செய்திகளைச் சொல்லும் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

காதல் நோயின் அறிகுறிகள் என்ன?படத்தின் காப்புரிமைCENTRAL PRESS

டோபோமைன் (Dopamine) இது ஒரு வகை ரசாயனம். இது கோக்கெயின் மற்றும் நிக்கோட்டினோரெபின்ப்ரின் என்றவைகளால் தூண்டப்படுகிறது. இதற்கு அட்ரினலின் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதுதான் காதலர்கள் உடலில் வியர்வையை உருவாக்குவது, இதயத்தை படபடக்கச் செய்வது போன்ற வேலைகளைச் செய்யும் பொருள்.

செரொட்டோனின் என்ற மற்றொரு ரசாயனம் காதல் விவகாரத்தை ஏற்படுத்தும் ரசாயனங்களில் மிகவும் முக்கியமானது. இதுதான் காதல் வயப்பட்டவர்களை தற்காலிகமாக பைத்திய நிலைக்குத் தள்ளும் வில்லன் !

  • பற்று, பாசம்:

இந்த கட்டம் ஈர்ப்புக் கட்டத்துக்கு அடுத்து ஏற்படுவது. அந்த உறவு நீடிக்கவேண்டுமென்றால் இந்த பற்று மிகவும் அவசியம். ஈர்ப்பு நிலை தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளைத் தவிர வேறொன்றும் உற்பத்தி ஆகாது!

இந்தப் பற்று என்பது மேலும் நீண்ட காலம் நீடிக்கும் ஒரு உறுதிப்பாடு என்று சொல்லலாம். இந்தப் பிணை அல்லது பந்தம்தான் காதலர்களை ஒன்றாகப் பிணைத்து வைத்து, அவர்கள் குழந்தைகள் பெற்றெடுக்க உதவுகிறது.

காதல் நோயின் அறிகுறிகள் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த "பற்று" கட்டத்தில், இரண்டு ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. நரம்பு மண்டலத்தில் சுரக்கும் இந்த இரு ஹார்மோன்கள் சமூகப் பற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

இது தவிர வேறு இரண்டு ரசாயனன்கள் உடலில் விளையாடுகின்றன.

  • வேசோப்ரெஸ்ஸின் (Vasopressin):

நீண்ட கால உறவு என்ற கட்டத்தில் ஒரு முக்கிய ரசாயனம் இது. இந்த ரசாயனம் ஆண்களால் அடக்கப்படும்போது, காதலர்களுக்கிடையே நிலவும் பந்தம் உடனடியாகக் குறைகிறது.

விசுவாசம் இழப்பது, துணைவரை( அல்லது துணைவியை) புதிய காதலர்களிடமிருந்து பாதுகாக்கத் தவறுவது போன்றவை இதனால் ஏற்படுகின்றன.

காதல் நோயின் அறிகுறிகள் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆக்ஸிடோசின் (Oxytocin) என்ற இந்த ரசாயனம் ஹைபொதலாமஸ் என்ற சுரப்பியால் வெளியிடப்படுகிறது. இது குழந்தைப் பேறு காலத்தின் போது சுரக்கிறது. இதுதான் தாய்ப்பால் உருவாக உதவுகிறது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பந்தம், பிணைப்பு ஏற்பட உதவுகிறது.

இது காதலர்கள் அல்லது தம்பதியர் இருவர் உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் "பாலியல் உச்சகட்ட" நிலையிலும் வெளியாகிறது. இதுதான் வயது வந்தவர்களுக்கு இடையே பிணைப்பு ஏற்பட உதவுவதாகக் கருதப்படுகிறது.

அதிகம் உடலுறவு கொள்ளக் கொள்ள, தம்பதியருக்கிடையே பிணைப்பு ஆழமாகிறது என்கிறது இந்தக் கருத்தாக்கம் !

"ஆதலினார் காதல் செய்வீர் உலகத்தீரே", எனலாமா ?

http://www.bbc.com/

Bildergebnis für valentines day

  • தொடங்கியவர்

1990 : பெங்­களூர் விமான விபத்தில் 92 பேர் பலி

வரலாற்றில் இன்று

பெப்ரவரி – 14

 

273 : ரோமில் பாதி­ரியார் புனித வலன்டைன் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு கொல்­லப்­பட்டார். அவரின் நினை­வாக வலன்டைன் தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. (அவர் கொல்­லப்­பட்ட வருடம் 269, மற்றும் 270 எனவும் கூறப்­ப­டு­கி­றது)

1421 : நெதர்­லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பர­வி­யதில் 10,000 பேர் வரையில் உயி­ரி­ழந்­தனர்.

1477 : இங்­கி­லாந்தில் அச்­சி­யந்­தி­ர­சா­லையில் அச்­சி­டப்­பட்ட முத­லா­வது நூலான “Dictes or Sayengis of the Philosophres” வில்­லியம் கக்ஸ்டன் என்­ப­வரால் வெளி­யி­டப்­பட்­டது.

Indian_Airlines_Airbus_A320-Copy-copy.jp1493 : கொலம்பஸ் புவேர்ட்டோ ரிக்கோ என இன்­ற­ழைக்­கப்­படும் நாட்டை முதன்­மு­றை­யாகக் கண்­ணுற்றார்.

1803 : ஹெயிட்டி புரட்­சியின் கடைசிப் பெரும் போர் இடம்­பெற்­றது. இது ஹெயிட்டி குடி­ய­ரசு என்ற மேற்கு அரைக்­கோ­ளத்தின் முத­லா­வது கறுப்­பினக் குடி­ய­ரசு அமைக்­கப்­பட வழி­வ­குத்­தது.

1863 : டென்­மார்க்கின் ஒன்­பதாம் கிறிஸ்­டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென்­மார்க்­குக்குச் சொந்தம் என அறி­விக்கும் சட்­ட­மூ­லத்­துக்கு ஒப்­ப­மிட்டார். இது 1864 இல் ஜேர்­மன்-­ டென்மார்க் போர் ஏற்­பட வழி­வ­குத்­தது.

1883 : கன­டாவும் ஐக்­கிய அமெ­ரிக்­காவும் ஒரே நேர எல்­லை­களை வகுத்துக் கொண்­டன.

1903 : பனாமா கால்­வாய்க்கு தனிப்­பட்ட உரி­மையை ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு வழங்கும் உடன்­பாடு பனா­மா­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1909 : நிக்­க­ரா­கு­வாவில் இரண்டு அமெ­ரிக்­கர்கள் உட்­பட 500 புரட்­சி­யா­ளர்கள் அர­சுப்­ப­டை­யினால் கொல்­லப்­பட்­டதை அடுத்து ஐக்­கிய அமெ­ரிக்கா இரண்டு போர்க்­கப்­பல்­களை அந்­நாட்­டுக்கு அனுப்­பி­யது.

1918 : லத்­வியா ரஷ்­யா­விடம் இருந்து சுதந்­தி­ர­ம­டை­வ­தாக அறி­வித்­தது.

1924 : ஐ.பி.எம். நிறு­வனம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1926 : ஜோர்ஜ் பேர்னாட் ஷா தனக்கு வழங்­கப்­பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.

1943 : உக்­ரேனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்த 6,000 யூதர்கள் நாஸிப் படை­க­ளினால் கொல்­லப்­பட்­டனர்.

1947 : நியூ­ஸி­லாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்­தகத் தொகுதி ஒன்றில் இடம்­பெற்ற தீயில் 41 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1978 : கயா­னாவில் ஜிம் ஜோன்ஸ் என்­ப­வரின் மக்கள் கோயிலில் இடம்­பெற்ற கொலை மற்றும் தற்­கொலை நிகழ்­வு­களில் 270 குழந்­தைகள் உட்­பட 918 பேர் இறந்­தனர்.

1979 : ஆப்­கா­னிஸ்­தானில் அமெரிக்கத் தூதுவர் அடோல் டப், ஆயுதக் குழு­வொன்­றினால் கடத்தி கொல்­லப்­பட்டார்.

1987 : லண்­டனில் கிங் க்ரொஸ் சுரங்க ரயில் நிலை­யத்தில் இடம்­பெற்ற தீயில் 31 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1989 : ஈரா­னிய ஆன்­மிகத் தலைவர் கொமெய்­னி­யினால் சல்மான் ருஷ்­டிக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

1990 : இந்­தி­யாவின் பெங்­களூர் நகரில் இன்­டியன் எயார்லைன்ஸ் விமா­ன­மொன்று விபத்­துக்­குள்­ளா­னதால் 92 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2004 : மொஸ்­கோவில் நீரியல் பூங்­கா­வொன்றின் கூரை இடிந்­ததால் 25 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2005 : லெப­னானின் முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரி, பெய்ரூத் நகரில் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

2005 : உலகின் மிகப்பெரிய வீடியோ பகிர்வு இணையத்தளமான யூ ரியூப் ஆரம்பிக்கப்பட்டது.

2011 : பஹ்ரெய்னில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

http://metronews.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.