Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
‘கடலில்தான் சீற்றமும் அவதாரம் எடுக்கிறது’
 
 

image_aafc828925.jpgகடல், விடை காண முடியாத விடயங்கள் நிரம்பிய இடம். பலகோடி ஆண்டுகளுக்கு முன்னரே, உயிரினங்களை உருவாக்கிய பெரும் பிரதேசம். 

ஓரறிவு உயிரினங்கள் தோன்றி, பின்பு மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிகள், இங்கு வாழ்ந்த உயிரினங்கள் ஊடாகவே, பூமித்தரையில் மனிதனும் புது இனமானான். 

புவனத்தின் சகல பகுதிகளிலும் சிற்றுயிர், தாவரங்கள், செடி, கொடி, மிருகம், ஊர்வன, பறப்பன என அனைத்தும் தோன்றிடக் காரணமானது இந்தக் கடல்தான். 

மனிதனுக்கு மூத்த குலம் கூட, ஓரறிவு உயிரினம் என விஞ்ஞானம் சொல்கிறது. மனித பரிணாம வளர்ச்சியை, மெஞ்ஞானமும் என்றோ சொல்லிவிட்டது. 

மனித வேட்டையால், ஜீவன்கள் பலகோடி சமாதியடைந்து விட்டன. ஆனால், இன்னமும் கூட, இவைகள்தான் புவனத்தைக் காப்பாற்றி வருகின்றன. நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றோம்? கடல் வளத்தைக் குற்றுயிராக்கி வருகின்றோம். கடலில் மாசு சூழ்ந்தால் பூமிக்கு அழிவு. கடலில்தான் சீற்றமும் அவதாரம் எடுக்கிறது.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

A magnificent strike into the crowd... லவ் யூ தோனி! #HappyBirthdayMSDhoni

 
 
 

மொத்த இந்தியாவுக்கும் தேவையாக இருந்தது ஒரு பிரமாண்ட வெற்றி! 'In the air...sreeshanth takes it!' - இந்தக் கமென்ட்ரியின் முடிவில் மொத்த இந்தியாவும் குதித்தெழுந்தது! கிரிக்கெட் வரலாற்றின் முதல் டி20 சாம்பியன் இந்தியா! முக்கியக் காரணம் கேப்டன் தோனி!

A magnificent strike into the crowd... லவ் யூ தோனி! #HappyBirthdayMSDhoni
 

ஜுலை 6 - ஆண்டுதோறும் இந்தத் தேதியில்... அதுநாள் வரை பார்த்த கிரிக்கெட் போட்டிகள் எல்லாம் கொசுவர்த்திச் சுருள் போல நினைவுக்கு வரும். கூடவே அப்போட்டிகளை பார்த்த இடங்களும், உடனிருந்த மனிதர்களும்! (காதலும் காதலிகளும் கூட). சிலசமயம் ஏதோவென்றை தொலைத்துவிட்ட எண்ணம் உள்ளே துருத்தியபடி நிற்கும். திரும்பிக் கிடைக்காதே என்ற ஏக்கப் பெருமூச்சும் வெளியாகும்! நாஸ்டால்ஜியா எண்ணங்களின் பலன் அது. இவை அத்தனைக்கும் காரணம் தோனி. ஜூலை 7 அவரின் பிறந்தநாள்! அதற்கு முன்தினம் அவரைப் பற்றி குறைந்தபட்சம் சின்ன ஸ்டேட்டஸ் போடவாவது கடந்தகாலத்திற்கு நடை பயில்வோம்தானே! அப்போது உங்களையும் மண்வாசம்போல இந்த எண்ணங்கள் கிளர்ந்தெழுந்து சூழும்தானே! வெல், நீங்கள் நம் கட்சி!

தோனி

என்ன எழுதுவது? தெளிவாக கேட்கவேண்டுமெனில் தோனியைப் பற்றி எழுதாமல் விடப்பட்டது என்ன? பக்கம் பக்கமாக அவரின் வளர்ச்சியைப் பற்றி எழுதித் தள்ளியாயிற்று! டேட்டாக்களும் நம்பர் கேம்களும் அவரின் ரசிகர்கள், விமர்சகர்கள் இருவரிடமும் மலைபோல கொட்டிக் கிடக்கின்றன. பாலிவுட்டில் படமெடுத்து பணமும் பண்ணியாயிற்று! அவர் வாங்கிய கோப்பைகள் பற்றி இன்று மட்டும் ஆயிரக்கணக்கில் பதிவுகள் வெளியாகத்தான் போகின்றன. இன்னும் எழுத என்னதான் இருக்கிறது? 'சரி புதுசா எதுவுமில்லல' என சேவ் செய்த 'Dhoni's Birthday' என்ற வேர்ட் டாக்குமென்ட்டை சட்டென டெலீட் செய்யவும் மனம் வராது! முன்னெழுந்த நாஸ்டாலஜியா எண்ணங்களில் மட்டுமல்ல, இந்த சின்ன தயக்கத்திலும் கூட தோனிதான் நிற்கிறார்.

 

 

ஒவ்வொரு பத்தாண்டுகளும் ஒருதலைமுறை என்பதுதான் இங்கே பொதுவிதி. அப்படி தோன்றும் ஒவ்வொரு தலைமுறைக்கும் சில ஹீரோக்கள் இருப்பார்கள்.  ஆதர்ஷங்கள் அவர்கள். நாம் வளர வளர அந்த ஹீரோவும் வளர்வார் உடன் நடைபோடும் நண்பனைப் போல. 90களில் பிறந்தவர்களுக்கு ரஹ்மான், விஜய், அஜித், நா.முத்துக்குமார், செல்வராகவன் போன்றவர்கள் ஆதர்ஷங்களாக இருப்பதற்கு இந்த நடைபோடுதல்தான் முக்கிய காரணம். அப்படி 90களில் பிறந்தவர்களும் மில்லேனியல்களும் ஆதர்ஷமாக கொண்டாடும் இமேஜ் தோனிக்கு மட்டுமே உண்டு. காரணம், நாம் வளர வளர தோனியும் வளர்ந்தார். அவர் கோப்பை மேல் கோப்பை வாங்குவதைப் பார்த்துதான் நாமும் வளர்ந்தோம்.

 

 

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு இரண்டு மீட்பர்கள் இருக்கிறார்கள். திக்குத்தெரியாத ஆட்டுக்குட்டியாக இந்திய கிரிக்கெட் இருவேறு தருணங்களில் தள்ளாடியபோது அதை மீட்டெடுத்த மீட்பர்கள் கங்குலியும் தோனியும்! சூதாட்டப் புகார்கள், முன்னணி வீரர்கள் மேல் குற்றச்சாட்டுகள், கேப்டனுக்கு வாழ்நாள் தடை என மொத்த இந்தியாவும் துவண்டு நின்றது. தேசத்திற்குத் தேவையாய் இருந்தது ஒரே ஒரு பிரமாண்ட வெற்றி. கிரிக்கெட்டின் மெக்கா லார்ட்ஸ் மைதானத்தில் 2002 நாட்வெஸ்ட் பைனலில் சட்டையைக் கழற்றி கெத்தாகச் சுற்றி அறிவித்தார் அன்றைய கேப்டன் கங்குலி - 'We were thrown down but not destroyed! Here we come!'. பின்தொடர்ந்தது உலகக்கோப்பை வெற்றிநடை! 

தோனி

2007 - இந்திய கிரிக்கெட்டில் மற்றுமொரு இறுக்கமான சூழல். உலகக்கோப்பையின் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது இந்தியா. கோப்பைகள் கண்ட வீரர்களின் வீடுகள் கல்லடிபட்டன. கிரேக் சேப்பலால் நிகழ்ந்த குழப்பங்களில் சீனியர் வீரர்கள் கோஷ்டிகளாக பிரிந்தார்கள். ராகுல் டிராவிட் பதில் சொல்லி சொல்லிக் களைத்துப்போனார். Chaos Everywhere! இப்போதும் மொத்த இந்தியாவுக்கும் தேவையாக இருந்தது ஒரு பிரமாண்ட வெற்றி! 'In the air...sreeshanth takes it!' - இந்தக் கமென்ட்ரியின் முடிவில் மொத்த இந்தியாவும் குதித்தெழுந்தது! கிரிக்கெட் வரலாற்றின் முதல் டி20 சாம்பியன் இந்தியா! முக்கியக் காரணம் கேப்டன் தோனி!

 

 

சிவராமகிருஷ்ணன், ஶ்ரீகாந்த் என தமிழக வீரர்கள் இந்திய அணியில் விளையாடியிருந்தாலும் அவர்கள் கொண்டாடப்படுவதற்கான வெளி குறைவாகவே இருந்தது. ஊடகங்கள் பெருகியபின் வந்த ராபின் சிங், ஹேமங் பதானி, பாலாஜி போன்றவர்களும் நிலையாக நிற்கவில்லை. அந்த வெற்றிடத்தை ஐ.பி.எல் போக்கியது. மஞ்சள் தமிழகத்தின் மதமானது. வெற்றிகளைக் குவிக்க குவிக்க தோனி தமிழகத்தின் செல்லப்பிள்ளையானார். 'தல' ஆனார். இன்று ஜார்க்கண்ட்டை விட தோனியை அதிகம் உரிமைகொண்டாடும் மாநிலம் தமிழ்நாடுதான். சேப்பாக்கத்தின் மூடிய க்ரில் கதவுகளின் இடுக்குவழி எக்கிப் பார்த்து 'தோனீஈஈஈஈஈஈஈஈ' எனக் கத்தும் ஆறுவயது சிறுவனே அதற்கு சாட்சி!  

தோனி

நம் ஆதர்ஷ நாயகர்கள் வெற்றி பெறும்போது உற்சாகம் பற்றிக்கொள்வதைப்போல தோற்று வீழும்போது சோகமும் தொற்றிக்கொள்ளும். தோனி தோல்வியடையும் ஒவ்வொரு முறையும் 'All is well... All is well' என்பது பொது மந்திரமாகிறது. அதற்கேற்றார்போல 'வந்துட்டேன்னு சொல்லு' என எழுந்து நிற்கிறார் தோனி. அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபோதும், கேப்டன் பதவியில் இருந்து விலகியபோதும், சென்னை அணி தடைசெய்யப்பட்டபோதும், இந்த ஐ.பி.எல்லின் ஆரம்பத்தில் சொதப்பியபோதும் சொல்லப்பட்டவை ஒன்றுதான் - 'தோனி கதை முடிந்தது'! ஆனால் ஒவ்வொரு தடவையும் இது முடிவல்ல என புதிய தொடக்கத்திற்கு வித்திடுகிறார் இந்த கம்பேக் ஹீரோ!

இரண்டு தலைமுறைகள் கொண்டாடுவதைப் போல இரண்டு தலைமுறைகளால் அதிகம் விமர்சிக்கப்படுபவராகவும் தோனியே இருக்கிறார். மீம்ஸ், ட்ரோல் என அவரை சர்வதேச ஐகானாக முன்னிறுத்த உதவிய சமூகவலைதளங்களே அவரை விமர்சிக்கும் தளங்களாகவும் இருக்கின்றன. கழுகுக் கண் மீடியாக்கள், முன்னாள் வீரர்கள், அவர்களின் அப்பாக்கள் என வகைதோறும் வறுத்தெடுத்தாலும் சின்னப் புன்னகையோடு கடந்துவிடுகிறார் தோனி! அதுவே அவரை இன்னும் சிலபேருக்கு பிடித்தவராக்குகிறது.

தோனி

 ''You will win some, you'll lose some but the job of the finisher is to finish the job and help others, sharing the experience with others, all those things really matter because I may not be batting tomorrow.'' - இது இந்த ஐ.பி.எல்லில் தோனி உதிர்த்த வார்த்தைகள். ஆம்! திடீரென ஒருநாள் தோனியும் விடைபெற்றுக்கொள்வார். அவரின் வெற்றியை கொண்டாடித் தீர்த்தபோது நம் உடனிருந்தவர்கள் இப்போது கால ஓட்டத்தில் வெகுதூரம் விலகிச் சென்றிருப்பார்கள். அவர் ஆட்டத்தைப் பார்த்து நாம் குதித்து விழுந்த இடங்கள் இப்போது அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருக்கும்.  ஆனால், அந்த அத்தனை நினைவுகளும் 'Dhoniiiiiiiiiii………. finishes off in style, it’s a magnificent strike into the crowd, and it’s an Indian captain, who has been absolutely magnificent! என்ற அந்தக் குரலும் காலத்திற்கும் உடன் நிற்கும்!

https://www.vikatan.com

Bild könnte enthalten: eine oder mehrere Personen

Bild könnte enthalten: 1 Person, lächelnd, im Freien

500 matches, 6,330 runs, 780 dismissals.
#WT20 2007 1f3c6.png? Cricket World Cup 2011 1f3c6.png?Champions Trophy 2013 1f3c6.png?

Happy birthday to one of the finest finishers and quickest hands behind the stumps, the legendaryMS Dhoni!

36788312_10157884479844578_6169862233149931520_n.jpg?_nc_cat=0&oh=8781393b3e9ee7b230b9c655b7dfa314&oe=5BA95C94

  • தொடங்கியவர்

அலங்காரமாக மாறிய பெருந்தொகை பணம்! இலங்கையில் உருவான அழகோவியம்

 

இலங்கையில் முதன்முறையான நாணய தாள்களை கொண்டு வெசாக் கூடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த நிலையில் இலங்கை மத்திய வங்கியினால் அகற்றப்பட்ட நாணயத்தாள்களை கொண்டு இந்த கூடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 100 ரூபா முதல் 5000 ரூபா நாணயத்தாள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாதுக்க, மொரகஹதென்ன ஸ்ரீமஹா விகாரையில் நாணய வெசாக் கூடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த வெசாக் கூடு நிர்மாணிப்பு நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து இரவு பகலாக, வெசாக் கூட்டினை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வெசாக் கூடு காட்சிப்படுத்தல் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இதனை பார்ப்பதற்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com

  • தொடங்கியவர்

இந்தியாவில் முதல் முறையாக பம்பாயில் சினிமா அறிமுகம்

 
இந்தியாவில் முதல் முறையாக பம்பாயில் சினிமா அறிமுகம்
 
இந்தியாவில் 1896-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி திரைப்படம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி என்ற நிறுவனம் மும்பையில் (அப்போது பம்பாய்) இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது.

அன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்றில் இது பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது. 1897-ம் ஆண்டளவில் பம்பாயில் கிளிப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு திரைப்பட கலையகத்தில் தினமும் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.

 

 

 

லண்டன் சுரங்க ரெயில் நிலையங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு - 56 பேர் பலி

 
அ-அ+

லண்டனில் 2005-ம் ஆண்டு ஜுலை 7-ந்தேதி 4 சுரங்க ரெயில் நிலையங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் 56 பேர் பலியானார்கள். 800-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

 
 
 
 
லண்டன் சுரங்க ரெயில் நிலையங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு - 56 பேர் பலி
 
லண்டனில் 2005-ம் ஆண்டு ஜுலை 7-ந்தேதி 4 சுரங்க ரெயில் நிலையங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் 56 பேர் பலியானார்கள். 800-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

ஜி 8 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அன்றைய அமெரிக்கா அதிபர் புஷ், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முக்கிய தலைவர்கள் ஸ்காட்லாந்து வந்திருந்த நிலையில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

* 1799- பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.

* 1807 - பிரான்சின் நெப்போலியனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ரஷ்யாவின் டில்சிட் என்ற இடத்தில் எட்டப்பட்டது.

* 1865 - ஆபிரகாம் லிங்கன் கொலையில் குற்றவாளிகளான நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.

* 1898 - ஹவாய் தீவை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் முடிவில் அதிபர் வில்லியம் மக்கின்லி கையெழுத்திட்டனர்.

* 1917 - ரஷ்யப் புரட்சி: ரஷ்யாவின் இடைக்கால அரசின் பிரதமர் இளவரசர் கியோர்கி லுவோவ் பதவியைத் துறந்தார். அலெக்சாண்டர் கெரென்ஸ்கி பிரதமரானார்.

*  1937 - பசிபிக் போர்: ஜப்பானியப் படைகள் சீனாவின் பெய்ஜிங் நகரை அடைந்தனர்.

* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் தலையீட்டைத் தடுப்பதற்காக அமெரிக்கப் படைகள் ஐஸ்லாந்தில் தரையிறங்கினர்.

* 1941 - இரண்டாம் உலகப் போர்: பெய்ரூட் நகரம் பிரிட்டனால் கைப்பற்றப்பட்டது.

*  1953 - பொலிவியா வழியாக பெரு, நிக்கராகுவா போன்ற நாடுகளுக்கான தனது பயணத்தை சே குவேரா ஆரம்பித்தார்.

*  1959 - வெள்ளிக்கோள் ரெகூலஸ் என்ற விண்மீனை மறைத்தது. இந்நிகழ்வு வெள்ளியின் விட்டம் மற்றும் அதன் வளிமண்டலம் போன்றவற்றை அளக்க உதவியது.

*  1967 - பயாபிராவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

*   1969 - கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலத்துடன் இணைந்து அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

* 1978 - சாலமன் தீவுகள் ஐக்கிய பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது.

* 2006 - சீனாவில் சுரங்கம் தோண்டுவதற்காக வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

* 2007 - புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ்மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

www.facebook.com/vidhya.varadaraj.9

சமூக ஆர்வலர், சமூக ஆர்வலர்னு ஏதோ வேற்றுக்கிரகத்து மனுஷங்களப் பத்திப் பேசுனீங்களே முதல்வர் சார்... அப்போ உங்க ஆர்வம் எது மேலங்க சார்?

twitter.com/HAJAMYDEENNKS

தவழ்வது, நடப்பது, பிறகு மொபைல் பார்ப்பது. இதுதான் இன்றைய குழந்தைகளின் வாழ்வியல் வளர்ச்சி!

112p1_1530615597.jpg

twitter.com/amuduarattai

போட்டோ எடுக்க `ஸ்மைல் ப்ளீஸ்’ என்று சொல்லும்போது, சிரிப்பதைவிட முக்கியம், இருக்கும் தொப்பையை மறைப்பது.

twitter.com/selvachidambara

தேன்மிட்டாய்க்குள் இருப்பது தேன்தான் என நம்பிய பால்யம், சீனிப்பாகு பற்றி அறியாதது!

twitter.com/gips_twitz

``பசுமை வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசுதான் செயல்படுத்த உள்ளது!” - எடப்பாடி பழனிசாமி. எதுவா இருந்தாலும் முதலாளிகிட்ட பேசிக்கங்கனு சொல்றாரு.

112p2_1530615607.jpg

twitter.com/rahimgazali

``புலி, கரடி, சிங்கத்துடன் வாழ்ந்த நான், நண்டுக்கு பயப்பட மாட்டேன்’’ - அமைச்சர் ஜெயக்குமார். அரசியலுக்கு வருவதற்கு முன் `தேவர் ஃபிலிம்ஸில்’ வேலை செஞ்சிருப்பாருபோல.

twitter.com/amuduarattai

பிரபல நடிகர்களைவிட, அதிக `கதைகள்’ கேட்டது, மேனேஜர்களாகத்தான் இருக்கும்.

twitter.com/teakkadai1

திடீர்னு ஒருநாள் தோணும், `இனிமே தனது நிலையை, குடும்பத்தோட நிலையை, சமூகத்தைத் தன்னால் மாற்றவோ, உயர்த்தவோ முடியாது. இருக்கிறது மெயின்டெயின் ஆனாலே போதும்’னு. அந்த நாள்தான் இளமைக் காலத்தோட கடைசிநாள்னு சொல்லிக்கிடலாம்.

twitter.com/manipmp

நீரோ மன்னன் இப்போது இருந்தி ருந்தால், ரோம், பற்றி எரியும்போது ரோடு போட்டுக்கொண்டிருப்பான்.

112p3_1530615620.jpg

twitter.com/Aruns212

கண்ணீர், ஆனந்தத்தில் வருவது, துக்கத்தில் வருவது போக... பைக் ஓட்டும்போது வருவது என்ற மூன்றாவது வகையும் உள்ளது.

twitter.com/Thaadikkaran

ஒரு சந்தேகம் கேட்கும் போதெல்லாம், `எனக்கில்லை, தெரிஞ்சவங்க கேட்டாங்க’னு சொல்லி, நம்ம சந்தேகத்தைத் தீர்த்துக்கிறது எல்லாம் டிசைன்ல இருக்கு!

twitter.com/chithradevi_91

பல அலுவலகங்களில் குட் மார்னிங் என்பது `நான் வந்துட்டேன் பார்த்துக்கோ’ என்பதற்காகவே சொல்லப் படுகிறது.

112p4_1530615631.jpg

twitter.com/Giri47436512

`கரன்ட்’ கண்டுபிடிச்சது முழு நம்பிக்கை! `கரன்ட்’ வந்த உடனே கன்னத்துல போடுறது மூட நம்பிக்கை!

twitter.com/nandhu_twitts

சின்னவயசுல சரியாப் படிக் கலைன்னு கவலைப் படாதீங்க... உங்க குழந்தையோட வீட்டுப் பாடம் உங்களைத் திரும்பவும் படிக்கவைக்கும்!

twitter.com/mallai_mani

கல்யாணத்துக்கு நாள் குறிச்சதுல இருந்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பண்ணுங்க ன்னு ஏகப்பட்ட மெயில் வருது..

என்ன குறியீடு ன்னு புரியல

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

உலகின் 2வது பெரிய பாஸ்கிங் சுறா

  • தொடங்கியவர்

ஒரு நாள், ஒரு காடு, சில பறவைகள்: பறவைக் காதலர் சுப்பிரமணியத்துடன் ஒரு பயணம்

 

 
su2jpg

D-750 நிக்கான் கேமரா, 500 ஜூம் லென்ஸ், கூடவே கேமரா ஸ்டேண்ட். தூக்க முடியாத பையை தூக்கிக் கொண்டு அதிகாலையிலேயே தன்னந்தனியாகவே கிளம்பி விடுகிறார்.

‘உடன் வருகிறேன்!’ என்றபோது அவ்வளவு சுலபமாய் அவர் சம்மதிக்கவில்லை. சில குறிப்பிட்ட நாட்களில் ‘கூப்பிடுகிறேன்!’ என சொல்லி போக்குக் காட்டிவிட்டு தொடர்ந்து கல்தா கொடுத்துக் கொண்டிருந்தவர், ஒரு முறை மிகவும் வற்புறுத்திய பிறகு, ‘இல்லண்ணா, நான் எங்கே போனாலும் தனியா போறதுதான் வழக்கம். பறவை மட்டுமில்லண்ணா, சிறுத்தை, புலி, மர அணில், செந்நாய்னு ஏகப்பட்டது சுத்தற இடம். நம்மால அவனுக டிஸ்டர்ப் ஆகக்கூடாது இல்லீங்களா? அதுக எந்த இடத்துல இருக்கு. எப்படி வாசம் வரும்னு எனக்குத் தெரியும். அதுக்கேத்தாப்ல நான் நடந்துக்குவேன். ஒரு பறவையை எடுக்கணும்னா மூணு மணிநேரம் நாலு மணிநேரம் எல்லாம் காத்திருக்கணும். போனவாரம் கூட சிறுவாணி அடிவாரத்துல ஒற்றையாளா போய் ஒற்றைக் கொம்பன் கிட்ட (யானை) மாட்டிக்கிட்டு மயிரிழையில் தப்பிச்சேன். அது ரொம்ப ரிஸ்க்குண்ணா!’ என்கிறார்.

     
 

‘அதெல்லாம் பார்த்துக்கலாம்!’ என சமாளித்து அவர் பைக்கின் பின்புறம் ஒரு நாள் ஒட்டிக்கொண்டேன். வாளையாறு தொடங்கி சிறுவாணி, மாங்கரை, ஆனைகட்டி, பாலமலை என கோவையில் சூரியன் மறையும் எல்லைக் கோடுகளாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள். ஆங்காங்கே வண்டியை நிறுத்திவிட்டு, நடை பயணம். மலையேற்றம். பள்ளத்தாக்குகள். நிழலால் இருள் சூழ வைக்கும் உயரமான மரங்கள். யானைகள் நுழையாமல் இருக்க போடப்பட்ட அகழிகள். இப்படி சகலத்தையும் கடக்கிறார்.

su1jpg

சுப்பிரமணியன்.

 

‘இதோ இந்த இடத்தில் இப்போதுதான் ஒண்டி யானை கடந்திருக்கிறது!’ என அதன் பாதச் சுவடுகளைக் காட்டுகிறார். பருந்துப் பார்வையுடன், பதுங்கும் பூனையின் லாவகத்துடன் சில இடங்களில் பம்முகிறார். காத்திருக்கிறார். அடர் வனத்தில் கீச்சிடுகிற நாலாவித பறவைகளின் ஓசையும், வண்டுகளின் ரீங்காரம் மட்டுமே கேட்கிறது. விதவிதமான பறவைகளை பல்வேறு கோணங்களில் ‘க்ளிக்’ செய்து தள்ளுகிறார்.

‘அதோ பாருண்ணா. தலை சிவப்புக்கலர்ல தெரியுதே. அவன்தான் ஃபிளம் ஹெட்டட் பேரகீட், இந்த சீசன்ல மட்டும்தான் இவனை இங்கே பார்க்க முடியும். அழகுக்கிளின்னா இவன்தான். சவுத் ஆப்பிரிக்கன் சைடுல எப்படி பஞ்சவர்ணக்கிளியோ, அதுபோல நம் தென்னிந்தியாவில் அபூர்வமான அழகுள்ளவன் இவன்!’ என்கிறார், க்ளிக் செய்து கொண்டே.

su3jpg
 

கரிய நிறத்தில் ஒரு குருவியை பார்த்து, ‘அது என்ன பறவை?’ எனக் கேட்க, அது நம்ம புல் புல் பறவை. அது இங்கே நிறைய இருக்குண்ணா. ரெட் விஸ்க்கர் புல் புல், ரெட் வெண்டட் புல் புல்னு ரெண்டு இருக்கு. அதேமாதிரி வாலாட்டுக் குருவிகளும் நிறைய இருக்கு. அதுல முக்கியமா கிரே வேக்டைல், ஒயிட் ப்ளூடு வேக்டைல்!’ என அதையும் காட்டி விளக்குகிறார். அதைத் தாண்டி சிறுவாணிக் காடுகளில் நிறைந்திருக்கும் தேக்கு மரங்களுக்கு நடுவே நீல நிற முதுகை காட்டிப் பறக்குது ஒரு பறவை. அதை குறிவைத்து நகர்கிறார். ஒரு மணி நேர பின்தொடர்வு. அரைமணிநேரத்திற்கும் மேல் காத்திருப்பு. அந்தப் பறவையை பல கோணங்களில் படம்பிடித்து வந்து காட்டுகிறார்.

‘இதுக்கு முதுகு நீல வண்ணம். மற்றபடி பறக்கும்போதுதான் கீழ்ப்புறமும் நீலமயமாய் மின்னும். இதுக்கு ஆசியன் ஃபேரி ப்ளூ பேர்டுன்னு பேரு. இதன் இறகுகள் நீலம். சிவப்புக் கண். அக்டோபர் தொடங்கி ஜனவரி மாசம் வரை மட்டும்தான் இங்கே ரொம்ப அபூர்வமாக காணப்படும். கேரளத்தில்தான் அதிகம் பார்க்கலாம்!’

இதுபோலவே குயில் போன்ற வால் இருக்கும் ஒயிட் பெல்லிடு ட்ரீ பீ, வெள்ளை வயிறுள்ள ட்ரீ பீ என்றெல்லாம் பறவைகள் படம் பிடித்து வந்து நம்மிடம் காட்டுகிறார்.

su4jpg

அதற்கெல்லாம் தாவரவியல் பெயர்களையும் சொல்கிறார். இந்த பறவைகளை படம் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்த ஒரு பாறையைக் காட்டி. ‘இந்த பாறையில்தான் ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு சிறுத்தையைப் படம் பிடிச்சேன். அவன் எப்படி பார்த்தான்னு நினைக்கிறீங்க. அதுக்குப்புறம் இங்கே வரும்போதெல்லாம் அவன் நினைப்புதான். கண்ணுக்கு அப்புறம் சிக்கவேயில்லை!’ என சொல்லும்போதே உச்சி மரத்தில் கரு, கருவென ஏதோ ஒன்று ஓடுகிறது. ‘அவன் மர அணில். இந்த குரங்குகளால அவனுக்கு தொல்லை. அதுதான் மரத்துக்கு மரம் ஓடறான்!’ என்கிறார்.

சுப்பிரமணியன். கோவை வடவள்ளிக்காரர். டென்னிஸ், கராத்தே, சிலம்பம் கோச்சர். இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் நூற்றுக்கணக்கில் தேசிய அளவில், ஆசிய அளவில் தேர்வு பெற்று பதக்கங்கள் வாங்கி வந்துள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இப்போதும் பயிற்சி கொடுத்து வருகிறார். 1985-ம் ஆண்டில் கராத்தே கற்றுக் கொள்வதற்கு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். இப்படிப்பட்டவருக்கு காடுகளுக்குள் அலைவதும், அங்குள்ள பறவைகளை, வண்ணத்துப்பூச்சிகளை, விலங்குகளைப் படம் பிடிப்பதில் அலாதி ஆர்வம்.

su5jpg
 

அதற்காக வனத்துறையினர் மற்றும் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்தவர்களுடன் ஏற்பட்ட நெருக்கம். 10 ஆண்டுகளுக்கு மேலாகவே லட்சக்கணக்கான புகைப்படங்களை எடுத்துள்ளார். அதில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சி படங்கள், அபூர்வப் பறவைகள் படங்கள் எல்லாம் பிரேம் போட்டு கண்காட்சிகளில் வைத்துள்ளார். தன்னை நாடி வரும் சூழல் ஆர்வலர்களுக்கு இலவசமாகவே அந்தப் படங்களை கண்காட்சிக்காக கொடுத்து திரும்பப் பெற்றுக் கொள்கிறார்.

சுப்பிரமணியன் வீட்டிற்குள் சென்றால் திரும்பின பக்கமெல்லாம் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், வனவிலங்குகள் படங்கள்தான் இறைந்து கிடக்கின்றன. ஷோகேஸில் பார்த்தால் விளையாட்டுப் போட்டிகளில் வாங்கிய கோப்பைகள் நூற்றுக்கணக்கில் குப்பை படிந்து காணப்படுகிறது. மனைவி புற்றுநோயால் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஒரு மகன், மகள் அமெரிக்காவில். ஆங்காங்கே அடிபட்டுக் கிடக்கும் ஆந்தை, கழுகு உள்ளிட்ட பறவைகளை எடுத்து வந்து வீட்டிலேயே சிகிச்சை அளித்து திரும்ப காடுகளில் கொண்டு போய் விடும் பழக்கம் உள்ள சுப்பிரமணியம், அதற்கு சில எதிர்ப்புகள் வந்த நிலையில் பறவைகளை தேடி படம் பிடிக்க காடுகளுக்குள் பயணிக்கலானார். அதுதான் இப்போது இவரின் வீடு நிறைந்தும், இவர் உள்ளம் நிறைந்தும் காணப்படுகிறது.

‘என் வீடு மருதமலை பக்கத்தில்தான். இங்கே மட்டும் 56 வகையான பறவைகள் இருக்கு. அதேபோல் சிறுவாணி, கோவை குற்றாலம், நரசீபுரம், வைதேகி அருவி, வெள்ளியங்கிரி மலை, மதுக்கரை மலை, வாளையாறு பகுதிகளில் மட்டும் 500க்கும் அதிகமான வகைகளில் பறவைகள் இருக்கு. அதில் இதுவரை 200 வகை பறவைகளை நான் படம் பிடிச்சிருப்பேன். இதுக்காகவே ஊட்டி, மசினக்குடி, கூடலூர், கபினி, டாடோபா (கர்நாடகா) கூத்தன்குளம்னு நிறைய இடம் போறேன். அப்படி கபினியில் கறுஞ்சிறுத்தை, டாடோபாவில் புலி படங்கள் கிடைத்தன. நாகையில் கருப்பு மான் நிறைய எடுத்திருக்கேன். இதையெல்லாம் நம்ம வனத்துறைக்கும், பறவை ஆராய்ச்சியாளர்களுக்கும் கொடுத்திருக்கேன்!’என சொல்லும் சுப்பிரமணியன் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்த அடையாளங்களை, பறவைகள் ஓசையையும், இலை தழைகள் அசைவையும் வைத்தே கண்டுணர்ந்து கொள்கிறார். அதை வைத்து தனக்குத்தானே உஷார்படுத்தி நகர்கிறார். அதுவெல்லாம் பழங்குடி மக்களிடம் கற்றுக் கொண்ட பாடம் எனவும் சொல்கிறார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
 
 
நர மாமிசம் ருசிக்கும் விநோத தம்பதி!
 
E_1530245106.jpeg
 

கதைகளில் தான் படித்திருப்போம், நர மாமிசம் புசிக்கும் வினோத மனிதர்களைப் பற்றி! ஆனால், ரஷ்யாவில் ஒரு தம்பதியை, நர மாமிசம் புசித்ததற்காக கைது செய்துள்ளனர்.
ரஷ்யா நாட்டை சேர்ந்தவர், டிமிட்ரி பக்சேவ்; வயது: 35. இவர் மனைவி, நடாலியா; 45 வயது. இத்தம்பதி, 18 ஆண்டுகளாக, 30 பேரை கொன்று, அவர்களின் மாமிசத்தை, சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
அக்கம் பக்கதினர் மூலம் இவ்விஷயம் கசிய, போலீசார் அவர்கள் வீட்டை திடீர் சோதனை நடத்திய போது, எட்டு மனித உறுப்புகள் மற்றும் சதைகள் இருந்துள்ளன. குளிர் சாதன பெட்டியில், மனித மாமிசத்தை சேமித்து வைத்துள்ளனர். அத்துடன், சில மனித உறுப்புகளை ஜாடியில், ஊறுகாய் போன்று ஊற வைத்திருந்ததையும் கைப்பற்றியுள்ளனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, கடந்த, 18 ஆண்டுகளாக, தாங்கள் மனித மாமிசம் சாப்பிட்டு வருதாகவும், 30 பேரைக் கொன்று சமைத்து சாப்பிட்டதாகவும் கூறியுள்ளனர். இது, ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மாயனின் மர்மக் குகை!

 
E_1530245147.jpeg
 

உலகமே ஒரு மர்ம மாளிகை என்பது போல், மெக்சிக்கோ நாட்டில் உள்ள கிழக்கு கடற்கரை அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், நீர்வழிக் குகை ஒன்று கண்டுபிடித்துள்ளனர், அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள். 347 கி.மீ., நீளம் கொண்ட இக்குகை, உலகின் மிகப் பெரிய நீர்வழிக் குகையாக கருதப்படுகிறது.
கடந்த, 15ம் நுாற்றாண்டில், இப்பகுதியில் வாழ்ந்த மாயன் இன மக்கள், இக்குகையை பயன்படுத்தியதாகவும், அவர்களின் பாரம்பரியத்தை பறைசாட்டுவதாகவும் கூறுகின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

 

நான் ஒரு பார்வையில்லா ராஜா!

 

 
E_1530245243.jpeg
 

வெயில் வறுத்தெடுத்த ஒரு பகல் பொழுது...
மதுரை - நத்தம் சாலையில், பாண்டியன் ஓட்டல் பின்புறம் உள்ள ஒரு இளநீர் கடையை நோக்கி பாதங்கள் சென்றன.
தென்னை ஓலையால் வேயப்பட்ட அந்த குடிசை கடையில், அங்குமிங்குமாக, குவியல் குவியலாக இளநீர் காணப்பட்டது. அந்த இளநீர் குவியல்களுக்கு நடுவே உட்கார்ந்திருந்தார் பார்வையில்லாத, ராஜா.
உழைத்து உழைத்து, கருத்துப்போன உடம்பு, பட்டன் இல்லாத பழைய சட்டை, இளநீர் கறை படிந்த லுங்கி, எப்போதோ வாரிய தலை. ஆனால், இது எல்லாவற்றையும் மறக்க செய்யும் வெள்ளந்தியான சிரிப்பு; இதுதான், பார்வையை இழந்தாலும், நம்பிக்கை இழக்காமல் இளநீர் வியாபாரம் செய்யும் ராஜாவின் அடையாளங்கள்.
ரேடியோவில், பழைய சினிமா பாடல்களை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தவர், கடையின் வாசலில் யாரோ வருவதை உணர்ந்து, பாட்டை நிறுத்தி, 'வாங்க... இளநீர் சாப்பிடுங்க...' என்று அன்போடு சொன்னார்.
நாம் யார் என்று அறிமுகம் செய்து கொண்டதும், 'ரொம்ப சந்தோஷம்; நம் கடை இளநீரை சாப்பிட்டு விட்டுதான் பேசணும்...' என்றவர், தட்டிப் பார்த்து, ஒரு இளநீரை தேர்வு செய்து, பின் அரிவாளை எடுத்து, மிக லாவகமாக, நிமிட நேரத்தில் சீவி, நம்மிடம் நீட்டினார். அவரது அன்பை போலவே அமிர்தமாக இனித்தது, இளநீர்.
ராஜாவுக்கு, வயது, 62; தெரிந்தது எல்லாமே இளநீர் விற்பது மட்டுமே... சிறு வயது முதலே மாலைக்கண் நோய் இருந்தது, ஒன்பதாவது படிக்கும்போது, பார்வையில் பிரச்னை அதிகரிக்கவே, படிப்பை நிறுத்தி, இளநீர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இளநீர் வியாபாரத்தில் இவர் முன்னேற முன்னேற, இவரது பார்வைத் திறனோ மிகவும் பின்னேறியது. கடந்த, 10 ஆண்டுக்கு முன், சுத்தமாக பார்வை இல்லாமல் போனது.
பார்வை போனாலும், பதறாமல், தன் கைகளையே கண்களாக்கி, முழு மூச்சாக வியாபாரத்தில் இறங்கினார். பார்வை இல்லாதவர் என்று பரிதாபம் காட்டுவது இவருக்கு சுத்தமாக பிடிக்காது. உடல் வேகும் வரை மத்தவங்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது, அதற்காக சாகும் வரை உழைக்கணும் என்று சொல்லும் இவர், கடந்த பல ஆண்டுகளாக, இதே இடத்தில்தான் இளநீர் கடை வைத்துள்ளார்.
நாகர்கோவில், தேனி பகுதிகளிலிருந்து வரும் இளநீரை, தர வாரியாக பிரித்து, விற்பனை செய்கிறார். இவருக்கு என்று வாடிக்கையாளர்கள் நிறைய உண்டு. இளநீரை கையில் எடுத்து விட்டால், அந்த இளநீர் இவரது கைகளில் பம்பரமாக சுழல்கிறது; அதற்கு மேல் அரிவாள் லாவகமாக வெட்டுகிறது. இதுவரை, ஒரு சிராய்ப்பு கூட கையில் ஏற்பட்டதில்லை. அந்த அளவு அனுபவம்.
இளநீருக்கான பணத்தை கொடுத்ததும், ரூபாய் நோட்டை தொட்டுப் பார்த்தே அதன் மதிப்பை உணர்ந்து, சரியாக மீதி சில்லரை தருகிறார்.
விடிந்ததில் இருந்து இருட்டும் வரை இவருக்கு இந்த கடை தான் உலகம். இருட்டிய பின் ஊமச்சிகுளம், அப்பளக்காட்டில் உள்ள வீட்டிற்கு சென்று விடுவார். மனைவி, குழந்தைகள் உண்டு.
'குடும்பத்தை நடத்துவதற்கு போதுமான வருமானம் வருகிறது; இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்கிறோம். மழை காலத்திலும், குளிர் காலத்திலும் இளநீர் வியாபாரம் சரியாக இருக்காது. அப்போது மட்டும் கொஞ்சம் சிரமம் இருக்கும்; ஆனாலும், கவலைப்பட மாட்டேன்; கடைக்கு வந்துருவேன், யாராச்சும் படியளப்பர்...' என்கிறார், அவருக்கே உண்டான சிரிப்புடன்!
இவருக்கு கொடுக்கப்பட்ட இலவச மனை பட்டாவை, யாரோ ஒருவர் அபகரித்து, இவரை விரட்டி விட்டாராம். என்ன, ஏது செய்வது என்று இவருக்கு தெரியவில்லை. 'இப்படியும் ஏமாற்றக்கூடிய ஆட்கள் இருக்காங்கய்யா...' என்று சொல்லி சிரிக்கிறார். அவரின், அப்போதைய சிரிப்பில், வேதனை மட்டுமே வெளிப்பட்டது.

http://www.dinamalar.com

  • தொடங்கியவர்

ஒரு மீம்: சில அதிர்ச்சிகள்

6chgowdistracted%20boyfriend

‘கவனச் சிதறலுக்கு உள்ளான காதலன்’ (Distracted Boyfriend Meme) என்ற மீமை நீங்கள் பார்த்து ரசித்திருக்கலாம். அந்த மீமின் எண்ணற்ற வடிவங்களையும் அறிந்திருக்கலாம். ஏனெனில், இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட மீம்களில் ஒன்று இது.

இளம்பெண்ணுடன் நடந்து செல்லும் இளைஞர் ஒருவர், தங்களைக் கடந்து செல்லும் வேறு ஒரு யுவதியைத் திரும்பிப் பார்ப்பது, அதைப் பார்த்து உடன் இருக்கும் பெண் ஆவேசமாக முறைப்பது போன்ற ஒளிப்படம்தான் இந்த மீமின் மையம். இந்தப் படம், வழக்கமான படமாக இருப்பதாகப் பலர் நினைக்கலாம். ஆனால், இந்தக் காட்சி நெட்டிசன்களுக்குப் பிடித்துப்போய்விட்டது. உதாரணமாக, ஒரு படத்தில், இரு பெண்களையும் முதலாளித்துவம், சோஷலிசமாகக் குறிப்பிட்டு, கவனம் மாறுவதை உணர்த்தியிருந்தனர். இதே மாதிரி, புதுப்புது மீம்களை உருவாக்கி, இன்றளவும் இணையத்தில் உலவவிடுகின்றனர்.

 

ஆனால், இந்த மீமே கொஞ்சம் பழைய மீம் தான். 2015-ம் ஆண்டில், இது முதலில் அறிமுகமானதாக மீம் வரலாற்றுத் தளமான ‘நோ யுவர் மீம்’ (Know your meme) தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு, இந்த மீம் புதிய வேகம் பெற்று இணையம் முழுவதும் பரவியதும், அதன் விளைவாக, இந்தப் படம் உண்மையில் ஒரு ‘ஸ்டாக் போட்டோ’ என்பதும், அதில் இடம்பெற்றுள்ள மூவரும் மாடல்கள் என்பதும் தெரிய வந்தது. இதுவும் பழைய கதைதான்.

இப்போது புதிய கதையாக, டிவிட்டர் பயனாளி ஒருவர் இந்த மீமை ‘அகழ்வாராய்ச்சி’க்கு உட்படுத்தி, இந்தப் படத்தில் இருக்கும் இளம் பெண் தொடர்பான அதிர்ச்சியான தகவல்களை வெளிபடுத்தியிருக்கிறார். அதாவது அந்த இளம் பெண்ணின் கடந்த காலம் இன்னும் ‘அதிர்ச்சி’யானது என்பதைக் கண்டறிந்துள்ளார். அப்படி என்ன அதிர்ச்சி என அதிர்ந்து போக வேண்டாம். இந்த அதிர்ச்சி முழுக்க முழுக்க சுவாரசியமானது.

இந்த கவனச்சிதறல் காதலன் மீம் இணையத்தில் உலா வரத்தொடங்கியதுமே இதன் பின்னணியை அறிவதில் பலருக்கும் ஆர்வம் உண்டானது. இந்த மீம் ஒரு ஸ்டாக் போட்டோ என்பது தெரிய வந்ததும், அடுத்த கட்டமாக மேலும் துப்பறிந்து, இந்தப் படத்தை எடுத்த ஒளிப்படக் கலைஞர் யார் எனக் கண்டறிந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ஸ்பெயினைச் சேர்ந்த ஆண்டோனியோ குயில்லம் (Antonio Guillem ) எனும் அந்த ஒளிப்படக் கலைஞரின் பேட்டியும் வெளியானது.

6chgowdistracted%20boyfriend%20model1
 

அந்தப் பேட்டியில், ஸ்டாக் போட்டோ எடுப்பது தனது தொழில் என்றும், குறிப்பிட்ட இந்தப் படத்தைத் திட்டமிட்டு எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த மூன்று மாடல்களில் இளைஞரின் பெயர் மரியோ என்றும், பெண்ணின் பெயர் லாரா என்றும் தெரிவித்திருந்தார். மூன்றாமவர் விலகிச்சென்றுவிட்டதால் அவரது பெயரைக் குறிப்பிடவில்லை.

இப்போது எர்னி ஸ்மித் (@ShortFormErnie ) எனும் டிவிட்டர் பயனாளி, இந்த மீம் ஆராய்ச்சியில் புதிய படங்களைக் கண்டறிந்து வெளியிட்டிருக்கிறார். கவனச் சிதறலுக்கு உள்ளான காதலன் படத்தில் உள்ள இளம் பெண்ணின் அதிர வைக்கும் வரலாறு என்று ஒரு குறும்பதிவை அவர் வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, அந்தப் பெண் எதற்கெடுத்தாலும் அதிர்ச்சி அடைபவர் என்பதை உணர்த்தும் வகையில் வரிசையாகச் சில படங்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு படத்தில், அவர் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஸ்மார்ட்போன் திரையை விழி அகல வியப்புடன் பார்க்கிறார்.

இன்னொரு படத்திலும் அந்த பெண், கம்ப்யூட்டர் திரையை அகல விழிகளுடன் பார்க்கிறார். இன்னொரு படத்தில் அவருடைய தோழிகளும் திகைத்து நிற்கின்றனர். அவர் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாலும் திகைக்கிறார், கடிதத்தைப் பிரிக்கும் போதும் திகைக்கிறார் என மேலும் சில படங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார். சும்மா இருக்கும்போது திகைக்கிறார் என்றும் ஒரு படத்தைப் பகிர்ந்திருந்தார். எல்லாப் படங்களிலுமே அந்தப் பெண், அவருக்கு உரியதாக, இணையம் இப்போது அறிந்திருக்கும் ‘டிரேட் மார்க்’ வியப்பையும் திகைப்பையும் வெளிப்படுத்துகிறார்.

இந்தப் படங்கள் எல்லாமே ஸ்டாக் படங்கள்தாம். ஒரு தேர்ந்த மாடலழகியாக, இந்தப் பெண் அவற்றில் விழிகள் அகல வியப்பாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த மீம்களை அவற்றை ஒருசேரத் திரும்பிப் பார்க்கும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. பார்க்கலாம், இந்த மீம் படத்தில், அடுத்த திகைப்பு அல்லது திருப்பம் என்னவாக இருக்கிறது என்று!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வீதியிலும் கலை வண்ணம்

1jpg

வீட்டின் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தால் அங்கங்கே மேகங்கள் திட்டுதிட்டாகத் தெரியும். அவை பறவை, யானை, ஆண், பெண் எனப் பல உருவங்களாகத் தெரியும். அவரவர் கற்பனைக்கு ஏற்ப இந்த உருவப் பிரதிபலிப்பு இருக்கும். ஆனால் இதேபோன்று நாம் பயணிக்கும் இடங்களில் உள்ள பொருட்களை நமக்குப் பிடித்த கற்பனை உருவமாக நினைத்துப் பார்ப்பதும் நடக்கும்.

அப்படி மழைநீர் வடிந்த சுவரில் ஒரு அழகான ஓவியத்தைப் பார்க்க முடியும். இம்மாதிரியான அழகான கற்பனைகளை ஓவியமாக மாற்றியிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் டாம் பாப்.

   
 
2jpg
 

வீதி ஓவியரான பாப், சாலைகளில் இருக்கும் தண்ணீர்க் குழாய், கழிவு நீர்க் குழாய் மூடி போன்ற பொருட்களைக் குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திர ஓவியமாக மாற்றியிருக்கிறார். தடுப்புச்சுவரை இரண்டு பாம்புகள் சந்திப்பது போலவும், கட்டிடத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் குழாயை சிறுவன் சாக்ஸஃபோன் வாசிப்பது போலவும், சிசிடிவி கேமராவை பறவையின் கண்ணாகவும் இவர் தனது கைவண்ணத்தால் மாற்றியிருக்கிறார். அவரின் ஓவியங்கள் இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

3jpg
 

இந்த ஓவியங்களின் மூலம் இவர் இன்ஸ்டாகிராமில் கிட்டதட்ட 2 லட்சம் பின்தொடர்பாளர்களைப் பெற்றிருக்கிறார். இந்த தெருக்களில் காணும் இம்மாதிரிப் பொருள்களை சுவாரசியமான ஓவியமாக மாற்றுவதையே தனது பாணியாகக் கொண்டிருக்கிறார் பாப். அமெரிக்கா மட்டுமல்லாது தைவான், துபாய் போன்ற நாடுகளிலும் டாம் பாப் ஓவியங்களை வரைந்துள்ளார். ‘கல்லிலே கலை வண்ணம் கண்டார்’ என்று கண்ணதாசன் பாடினார். ஆனால் பாப் தனது கண்ணிலே கலை வன்ணம் கண்டு, அதை மற்றவர்களுக்கும் காட்டிவருகிறார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கங்குலி - இந்திய‌ கிரிக்கெட்டின் கபாலி

 

 

‘தாதா’ – இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு பெயர். இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய பெயர். இந்திய கிரிக்கெட்டிற்கு முகவரி அளித்த பெயர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப்போகும் பெயர். சினிமா ரசிகனை ஆட்டுவிக்க பாட்ஷா, கபாலி என்று எத்தனையோ தாதாக்கள் இருக்கலாம், ஆனால் கிரிக்கெட் ரசிகன் உச்சிமுகரும் ஒரேயொரு தாதா – சவுரவ் கங்குலி. ‘பெங்கால் டைகர்’, ‘கொல்கத்தா பிரின்ஸ்’, ‘காட் ஆஃப் ஆஃப்சைடு’ என இவரைக் கொண்டாடிய ரசிகர்களெல்லாம் இன்னும் இவரது ரசிகர்கள் தான். இவரது ஓய்வுக்குப் பிறகு தோனியின்  பின்னாலோ, கோலியின் பின்னாலோ அவர்கள் செல்லவில்லை. தாதாவின் கிரிக்கெட் வர்ணனையை கேட்க‌, அவரது ஆளுமையை ஏன் அவரது பேட்டிகளைக் கூட இன்னுமும் ரசித்துக் கொண்டிருக்கின்றனர் கங்குலி வெறியர்கள். ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் அடித்த சிக்ஸரை பார்த்த பலரது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் கடவுள் இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனான கங்குலி, கேப்டன் என்பதையும் தாண்டி, இந்திய அணியின் காட்ஃபாதராய் விளங்கியவர். ஓய்வுபெற்று 8 ஆண்டுகளாகியும், இந்தியாவில் கிரிக்கெட் மட்டைகள் சுழலும் இடங்களிலெல்லாம் ‘தாதா என்ற கோஷம் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்று 44வது பிறந்தநாள் கொண்டாடும் தாதாவை ஏன் ரசிகர்கள் இந்த அளவிற்கு நேசிக்கிறார்கள்.  தாதாவை இந்திய கிரிக்கெட் ரசிகனால் மிஸ் செய்ய முடியாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளது அவற்றில் சில இதோ...

 

 


அசத்தல் அறிமுகம்:

    கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் தான் கங்குலியின் டெஸ்ட் பயணம் தொடங்கியது. பலம் வாய்ந்த இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்ட சவுரவ், அறிமுக போட்டியிலேயே 131 ரன்கள் குவித்து அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான். அதுமட்டுமின்றி தனது இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்து கிரிக்கெட் உலகிற்கு தனது வருகையை அறிவித்தார். அந்தத் தொடரிலேயே சச்சினுடன் இணைந்து 255 ரன்கள் எடுத்து அச்சமயத்தில் இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு பார்ட்னர்ஷிப்பை அமைத்தார் தாதா. உலக பந்துவீச்சாளர்கள் அனைவரையும் அசர வைக்கும் ஒரு காம்போவிற்கான அஸ்திவாரத்தை தனது முதல் தொடரிலேயே ஏற்படுத்தினார் கங்குலி.

84629.jpg

களம் தாண்டிய பந்துகள்

    இன்று கெயிலோ, வார்னரோ 100 மீட்டருக்கு சிக்சர் அடித்தாலே வாய்பிளக்கும் நாம், ஷார்ஜாவில் கங்குலி அடித்த அடிகளைப் பார்த்திருந்தால்?! ஜிம்பாப்வே நிர்ணயித்த 197 ரன் டார்கெட்டை சச்சினும் கங்குலியுமே ரவுண்டு கட்டி அடித்தனர். அதிலும் கிரான்ட் பிளவர் வீசிய ஒரு ஓவரில் மூன்று முறை பந்துகளை கூறையின் மீது பறக்கவிட்டார். ஒவ்வொரு முறையும் பந்து ஸ்டாண்டுகளைத் தாண்டிப் பறந்த போது ரசிகர்கள் மிரண்டே போயினர். கெயில் போன்று பலம் கொடுக்காமல், வெறும் கிளாசிக்கல் ஷாட்களால் சிக்சர் அடிக்கும் கங்குலியின் ஸ்டைலைக் காணக் கண் கோடி வேண்டும். அதாவது பரவாயில்லை 2003 உலகக்கோப்பையில் கென்யாவுக்கு எதிராக இரண்டு முறை பாலை ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்பி வைத்தார். பந்தை அவுட் ஆஃப் ஸ்டேடியம் அனுப்புவதிற்கு கங்குலியை விட்டால் சிறந்த ஆளில்லை.கங்குலி ஆடியது இன்று உள்ளது போல் பேட்ஸ்மேன் ஃப்ரெண்ட்லி பிட்ச்களில் அல்ல...பந்துகள் எகிறும் பவுன்ஸி பிட்ச்களில்...

அவுட்ஸ்டேண்டிங் ஆல் ரவுன்டர்

    கங்குலி ஃபார்மில் இருக்கும்போது உண்மையிலேயே அவர் பெங்கால் டைகர் தான். எதிரணியை கடித்துக் குதறிவிடுவார். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் 1997ல் நடந்த சஹாரா கோப்பை. பாகிஸ்தானுக்கு எதிரான அத்தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வாங்கி அசத்தினார் தாதா. பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் அசத்திய தாதா அந்த 4 போட்டிகளில் மட்டும் 11 விக்கெட்டும் 205 ரன்களும் எடுத்து அல்ரவுண்டராக ஜொலித்து, அந்தத் தொடரைத் தனக்கான இரையாக்கினார். இதுநாள் வரையில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் கங்குலி தான்.

கேப்டன் அல்ல லீடர்

189707.jpg

   

கேப்டன் – ஒரு அணியை வழிநடத்துபவர். ஆனால் கங்குலியோ இந்திய அணியை வடிவமைத்தவர். சூதாட்டப் புகாரால் சின்னா பின்னமான அணியை ஒருங்கிணைத்து உலக அரங்கில் ஒரு கம்பீர நடை போட வைத்தார் தாதா. அதுவரை இந்தியாவிற்கு என்று இருந்த முகத்தை மாற்றினார். மற்ற அணிகளெல்லாம் பார்த்துச் சிரித்த இந்திய அணியை ஆங்க்ரி பேர்டு மோடுக்கு மாற்றினார் தாதா. அதில் தானே முன்மாதிரியாகவும் விளங்கினார். ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு அதன் சொந்த மண்ணிலேயே சவால் விடுமளவு அணியை சிறப்பாக்கினார் தாதா. அதுமட்டுமின்றி இளம் வீரர்களை ஊக்குவித்து, அவர்களை நட்சத்திரங்களாக்கியவர் கங்குலி. சேவாக், யுவி, ஜாகிர், பாஜி என அந்தப்படை நீண்டு கொண்டே போகும். மிடில் ஆர்டரில் தவித்த சேவாக்கின் திறமையறிந்து, தனது ஓப்பனிங் ஸ்லாட்டையே அவருக்காக விட்டுக்கொடுத்தார் தாதா. அதுதான் தாதா. அணிக்காக எதையும் செய்யக் கூடியவர் அவர். எப்படிப்பட்ட அதிரடி முடிவுகளையும் எடுக்க அவர் தயங்கியதில்லை. வெற்றிகளை கூலாக அணுகும் தோனிக்கும், மைதானத்தில் ஆக்ரோஷம் காட்டும் கோலிக்கும் இன்ஸ்ப்ரேஷன் தாதா தான்.

ஆஸியை ஸ்விட்ச் ஆஃப் செய்தவர்:

    அன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் என்பது ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஸ்லெட்ஜிங்கால் எதிரணியை மனதளவில் தாக்கி வந்த ஆஸி வீரர்களையும், அவர்கள் கேப்டன் ஸ்டீவ் வாக்கையுமே கலங்கடித்தவர் தாதா. 2001 ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸி அணியை வீழ்த்தி அவர்களது 16 போட்டி தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது தாதா அண்ட் கோ. மேலும் அத்தொடரில் டாஸ் போடுவதற்கு லேட்டாக வந்து பிறரை எரிச்சலூட்டும் ஸ்டீவ் வாக்கையே எரிச்சலூட்டினார் தாதா. அப்போதுதான் வெற்றியாலும் தலைகனத்தாலும் பறந்து கொண்டிருந்த ஆஸி அணி தரை தொட்டது. 2004ம் ஆண்டு ஆஸியில் நடந்த டெஸ்ட் தொடரை முதல் முறையாக தாதாவின் தலைமையில் தான் டிரா செய்தது நம் அணி. அதுமட்டுமின்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவின் கடைசிப் போட்டியில் ஆஸியை வீழ்த்தி பேரதிர்ச்சி கொடுத்தது டீம் இந்தியா.


மெக்காவை மெரசலாக்கியவர்

    தாதா என்றாலே இங்கிலாந்து நாட்டவர்களுக்கு 2002 நாட்வெஸ்ட் கோப்பை தான் நினைவிற்கு வரும். கிரிக்கெட்டின் மெக்காவாகக் கருதப்படும் மிகவும் மரியாதைக்குரிய லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்ற பிறகு தாதா சட்டையக் கழற்றி சுற்றிய காட்சி இன்னும் நம் கண் முன்னர் வந்து போகும். தாதாவின் வெறித்தனமான ரசிகனுக்கு அதுதான் மெய்சிலிர்க்கும் தருனம். பிளின்டாப் வான்கடே மைதானத்தில் செய்ததற்காகத் தான் இப்படிச் செய்ததாக தாதா விளக்கம் கூறியிருப்பார். அதற்கு இங்கிலாந்து லெஜெண்ட் பாய்காட், “ என்ன இருந்தாலும் லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா. அங்கு இப்படி செய்யலாமா?” என்று கேட்டிருப்பார். அதற்கு “லார்ட்ஸ் உங்களுக்கு மெக்கா என்றால், வான்கடே தான் எங்களுக்கு மெக்கா” என்று கவுன்டர் சொன்னதெல்லாம் தாதாவின் எவர்கிரீன் ஸ்பெஷல்.

132816.jpg

உலக நாயகன்!

எத்தனையோ வீரர்கள், பிற போட்டிகளில் சிறப்பாக ஆடிவிட்டு உலகக்கோப்பை போன்ற மிகமுக்கிய தொடர்களில் சொதப்புவார்கள். ஆனால் தாதாவோ வோர்ல்டு கப் என்ற பிரஷெரை ஃபீல் செய்ததே இல்லை. இதுவரை 21 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள தாதா 1006 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரியோ 50க்கும் மேல். அதுமட்டுமின்றி 4 சதங்களும் அடித்துள்ள தாதா தான் ஒரு உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன் எடுத்த இந்தியர் (183), ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக சதம் அடித்தவர் (3) என்ற சாதனைகளையெல்லாம் தன்வசப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி தான் கேப்டனான போது தரவரிசையில் எட்டாவது இடத்திலிருந்த அணியை 2003 உலகக்கோப்பையின் இறுதிவரை அழைத்துச் சென்றவர்  இந்த கொல்கத்தா பிரின்ஸ்.

நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்

“இவர் டெஸ்ட் போட்டிகள் விளையாடவெல்லாம் லாயக்கற்றவர். கேப்டன் பதவியை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்” என்று பலரும் தாதாவின் டெஸ்ட் பேட்டிங்கை தூற்றினார்கள். சிங்கத்தின் பிடரியைப் பிடித்துவிட்டு சும்மா இருந்துவிட முடியுமா? எதுக்குமே கவுண்டர் கொடுத்து பழகிய தாதா இதற்கும் பதில் சொல்லக் காத்திருந்தார். அவரிடம் அடிபட பாகிஸ்தானும் அணியும் காத்திருக்க , அவர்களை வேட்டியாடியது வங்க‌ சிங்கம். யுவியோடு இணைந்து 300 ரன்கள் குவித்த தாதா, அந்த இன்னிங்சில் 239 ரன்கள் குவித்து, தன்னை சந்தேகித்தவர்களிடம் திரும்ப வந்துருக்கேன்னு போய் சொல்லு என்று  தன்னை நிரூபித்தார். அவ்வாண்டில் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் கங்குலி தான் இரண்டாம் இடத்தில். அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், அவரது சராசரி 40க்குக் குறைந்ததில்லை என்று சொல்லும்போதே அவரது திறமை நமக்குத் தெரிய வேண்டும்.

கண்கள் கலங்கிய கடைசி தருணம்

95952.jpg


    இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டார். 2008ம் ஆண்டு ஆஸி அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய தாதாவிடம், ஒரு சில ஓவர்கள் கேப்டனாக இருக்கும்படி கூறினார் அப்போதைய தற்காலிக கேப்டன் தோனி. அதன்படி கேப்டனாக சில நிமிடங்கள் விளையாடிய கங்குலி வெற்றி கேப்டனாகவே கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். ஒரு அணியை உருவாக்கி அழகாக்கிய அம்மாமனிதன் தனது கடைசி இன்னிங்சில் டக் அவுட் ஆனது தான் சோகம். ஆனால் கிரிக்கெட்டின் பிதாமகன் பிராட்மேன் கூட தனது கடைசி இன்னிங்சில் டக் தானே!

நோ கங்குலி நோ கிரிக்கெட்

    கொல்கத்தா – கங்குலியின் கோட்டை. மும்பையில் சச்சினுக்கு இருக்கும் ஆதரவை விட கங்குலிக்கு இங்கு இரண்டு மடங்கு ஆதரவு. 2011 ஐ.பி.எல் ஏலத்தில் கங்குலியை புறக்கணித்த கே.கே.ஆர் அணிக்கு கொல்கத்தா ரசிகர்கள் ஆதரவளிக்க மறுத்தனர். தங்களிம் சொந்த ஊர் அணியாக இருந்தாலும் பரவாயில்லை, தங்கள் நாயகனுக்கான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என் நினைத்தார்கள். ‘NO DADA NO KKR’ என்ற கோஷத்தோடு தொடர்ச்சியாக கொல்கத்தா அணியின் போட்டிகளை புறக்கணிக்க, கங்குலியின் செல்வாக்கை உலகறிந்தது. ஒருமுறை ரவி சாஸ்திரி விளையாட்டாக கங்குலியிடம், “மைதானத்தின் ஒரு கேலரிக்கு உங்கள் பெயர் வைக்கப்படவில்லை என்று வருத்தம் இருக்கிறதா?” என்று கேட்க “அந்த மைதானமே என்னுடையது” என்று கொக்கரித்தவர் தாதா.அது உண்மைதான். கொல்கத்தா ஒருகாலத்தில் எப்படி சுபாஷின் கோட்டையாக விளங்கியதோ அப்படி இப்போது இவரின் கோட்டையாக விளங்குகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கழற்றிவிடப்பட்டார் கங்குலி மொத்த மைதானமும் தென்னாபிரிக்காவுக்கு ஆதரவளித்து இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணை கவ்வ வைத்தது. இவர்கள் தாதா ரசிகர்கள் அல்ல தாதா வெறியர்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம். கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சினுக்கு கூட இப்படி டை ஹார்டு ரசிகர்கள் இல்லை.

69844.gif

தாதா – இந்திய கிரிக்கெட்டின் கபாலி

    இந்தியா பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி மழையால் கிட்டத்தட்ட ரத்தாகும் நிலைக்குத் தள்ளப்பட, மைதானத்தற்குள் களம்புகுந்த பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் கங்குலி, துரிதமான நடவடிக்கைகள் மூலம், மைதானத்தை உடனடியாக சீரமைத்தார். அவரது செயல்பாட்டை வேறு எந்த ஒரு நபரும் இதுவரை செய்ததில்லை. கிரிக்கெட்டே கங்குலியை ஒதுக்க நினைத்தாலும், தாதாவிடமிருந்து கிரிக்கெட்டை ஒதுக்கிவிட முடியாது. அதனால் தான் இப்பொழுதும் ஐ.பி,எல் குழுவிலும், பி.சி.சி.ஐ ஆட்சி மன்றக் குழுவிலும் தன்னை இணைத்துக்கொண்டு இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறார்.

தைரியத்தின் மறுபெயர்

    புலியைப் பற்றிக் கூறும்போது அதன் வரியைப் பற்றிக் கூறாமல் விட்டால் எப்படி? தாதா – தைரியத்தின் மறுபெயர். எதற்காகவும் எப்பொழுதும் அஞ்சாதவர். உடனுக்குடன் எதையும் எதிர்க்கும் மனதைரியம் கொண்டவர். அதனால் தான் சூதாட்டப் புகாரில் சிக்கிய ஒரு அணியை அவரால் மீட்டெடுக்க முடிந்தது. முன்னாள் பயிற்சியாளர் சேப்பலுடன் ஏற்பட்ட தகராறாகட்டும், லார்ட்ஸ் நிகழ்வாகட்டும்  அங்கு தாதாவின் சீற்றம் குறைந்ததில்லை. தாதாவின் சொற்கலெல்லாம் அவரது ஆஃப் சைடு கவர் டிரைவ் போலத்தான் அவ்வளவு நேர்த்தியானவை. அதற்கு எடுத்துக்காட்டாக போன வாரம் நடந்த இந்தியப் பயிற்சியாளர் தேர்வு சம்பவம். கங்குலி நேர்கானலில் பங்குபெறவில்லை என்று ரவி சாஸ்திரி குற்றம் சாட்ட, கூலாக பாங்காக்கில் விடுமுறை கழித்தவர் என்று ரவியை ஆஃப் செய்துவிட்டார்.

197177.jpg

இன்றைக்கு அவரது ஆளுமைகளை ரசித்தாலும், மனதில் ஏதோ ஒரு மூலையில் மீண்டும் கங்குலி மட்டையோடு மைதானத்தில் நுழைந்து பந்தை மைதானத்துக்கு வெளியே விரட்ட மாட்டாரா என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. 11 வீரர்களையும் ஆஃப் சைடில் நிற்க வைத்து ஒரு பந்தை வீசிப்பாருங்கள். ஆஃப் சைடில் ப்ந்து பவுண்டரிக்கு செல்லும்.  ஒருசமயம் தாதா கூறிய வார்த்தை “ எனது சுயசரிதை வெளிவந்தால் பலருடனும் பல பிரச்சனை எழும். பெரிய பூகம்பங்கள் வெடிக்கும். அதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறினார். நீங்கள் மட்டுமல்ல தாதா நாங்களும் தான்! ஹேப்பி பர்த்டே டு தி காட்ஃபாதர் ஆஃப் இந்தியன் கிரிக்கெட்!

    மு.பிரதீப் கிருஷ்ணா
   

https://www.vikatan.com

https://giphy.com/gifs/c45LSqnFLEaiI

  • தொடங்கியவர்

சின்ன சின்ன வரலாறு  : பொம்மைக் கதை!

 

 
bommaijpg

நீயும் பொம்மை நானும் பொம்மை...நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை...

இப்படி எல்லாமுமாக இருக்கும் பொம்மையைப்பற்றி கொஞ்சம் ஆராய்ந்தால் என்ன? இந்தச் சிந்தனையின் தொடர்ச்சியே இந்தப் பொம்மைகளின் வரலாறு.

 

மற்ற வரலாறுகளில் இருந்து இது ஒரு விதத்தில் தனிமைப்பட்டுத் தெரிகிறது. காரணம் பொம்மைக்கான வரலாறு இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் நினைவில் அவரின் சிறியவயதுடன் சம்பந்தப்பட்ட ஒரு பொம்மையின் தனி வரலாறு நிச்சயம் இருக்கும். பொது வரலாறைச்சொல்லி உங்கள் தனி வரலாற்றுச் சிந்தனையை தூண்டுவதே கட்டுரையின் நோக்கம்.

கி.பி.2000ல் எகிப்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மரத்தினால் ஆன பாடில் பொம்மைகள், பழமையானவை. இவை எகிப்தின் கல்லறைகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. கை காலகளைப் பிரித்துப் பொருத்தக்கூடிய வகை பொம்மைகளை வைத்துக்கொண்டு கிரேக்க குழந்தைகள் விளையாடியதாக எழுதப்பட்ட வரலாற்றுச் சான்றிதழ்களும் உள்ளன.

ருமேனியர்கள் களிமண், கட்டை , தந்தம் மற்றும் குப்பைகளால் பொம்மைகள் செய்தார்களாம்.இவை குழந்தைகள் புதைக்கப் படும்போது அவர்களுடன் மரணம் நிகழ்ந்த தருணத்தில் பிரபலமான உடைகளைக்கொண்டு மூடப்பட்டு கல்லறைகளில் இருந்து கிடைத்துள்ளன. அதேபோல் புதிதாகக் கல்யாணம் முடித்த ரோம் மற்றும் கிரேக்க நாட்டுப்பெண்களுக்கும், கடவுளுக்குக் காணிக்கையாக பொம்மைகளைச் செலுத்தும் வழக்கமும் இருந்திருக்கிறது.

ஆக, பொம்மைகள் குழந்தைகளின் விளையாட்டுப்பொருளாக மட்டுமல்லாமல், இறைவனுக்கு காணிக்கைப்பொருளாகவும் கருதப்பட்டிருக்கிறது. சில காலகட்டத்தில் குழந்தைகளின் படிப்பிற்கு உதவும் வகையிலும் அவை உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றன.

இதில் ஆச்சர்யமான ஒரு விஷயம். குழந்தைளுடன் சம்பந்தப்படுத்தி பார்க்கப்படும் பொம்மைகள், குழந்தைகள் கைகளில் கிடைக்கவிடாமலும் பாதுகாக்கப்பட்டன. அட, விலை அதிகமாக இருந்திருக்கும் அதனால்தான் என்று தோன்றினால் , ஒரு விதத்தில் இதுவும் சரிதான். இந்தப் பொம்மைகளின் விலை ஓர் உயிர். அதாவது ப்ளாக் மாஜிக் என்று சொல்லப்படும் மாந்திரீக த்தில் உபயோகப்படுத்தும் பொம்மைகள் இவை. பேய் பொம்மைகளாகவும் ஏவல் போன்ற முறைகளுக்கும் ஏவப்பட்ட பொம்மைகள். இவை மந்திர சக்திகள் கொண்ட வகையாக கருதப்பட்டதால் குழந்தைகள் இவற்றின் அருகே செல்லவிடாமல் பாதுகாக்கப்பட்டனர்.

வூடூ போன்ற ப்ளாக் மாஜிக் சமாச்சாரங்களுக்கு ஆப்பிரிக்க நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்ட இந்தப் பொம்மைகள் மிக ஆச்சர்யமாகக் கடவுளின் பிரதிநிதிகளாகவும் பார்க்கப்பட்டன. சடங்குகளில் பொம்மைகள் பிரதான பங்கும் வகித்தன. கல்வி முறைகளுக்கு இவை உபயோகப்படுத்தப்பட்டன.

இந்த வூடூ சமாச்சாரங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமின்றி ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளிலும் கருப்பு மாஜிக்கிற்கு பொம்மைகள் உபயோகத்தில் இருந்தன. யுரோபியன் பப்பட், நக்சி, போக்கியோ போன்ற பொம்மைகள் இந்த வகைப்படும். இதில் வடக்கு ஐரோப்பாவின் கிட்சன் விச், அதிர்ஷ்ட தேவதையாகவே உணரப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் வூடூ பொம்மைகள் கெடுதலையும், ஹோபி கசீனா பொம்மைகள் அதிர்ஷ்டம் கொடுக்கும் பொம்மைகளாகவும் கருதப்பட்டன.

சில பொம்மைகள் அவற்றின் பிரத்தியேக பேருடன் வரலாற்றில் இணைந்துவிடுகின்றன. இதில் வகை சார்ந்த பெயரும் உண்டு. ஒரு பொம்மைக்கான பிரத்தியேக பெயரும் உண்டு. இனியூட் பொம்மைகள் சோப்ஸ்டோன் அல்லது எலும்பினால் செய்யப்பட்டு கம்பளியால் மூடப்பட்டவை.

வடக்கு அமெரிக்காவின் ஆப்பிள் பொம்மைகள் உலர்ந்த ஆப்பிளைத் தலையாக வைத்துச் செய்யப்பட்டவை.

சோளக்கொல்லை பொம்மைகள் பற்றி நான் தனியே சொல்லத் தேவை இல்லை. நம் சினிமாக்களில் மிக அடிக்கடி காட்டப்படுபவை அவை.

பென்னிவூட்ஸ் பொம்மைகள் மரம் இழைத்துச் செய்யப்படுபவை. நம் மரப்பாச்சி பொம்மைகள் போல.

ரஷ்யாவின் மட்ரயோஷ்கா பொம்மைகள் 1890ல் வடிவமைக்கப்பட்டவை. ரஷ்யத் தலைவர்களின் மற்றும் ரஷ்ய கற்பனைக் கதைகளின் பாத்திரங்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்டவை இவை. ஒன்றினுள் ஒன்று செல்லும் விதமாக இவை இருக்கும். உதாரணத்திற்கு மிகவும் பெரிய மட்ரயோஷ்கா பொம்மை ஒரு பெண்ணாகவும் மிகவும் சிறியது ஒரு கைக்குழந்தையாகவும் இருக்கும்.

களிமண் பொம்மைகள் ஜெர்மனியில் 13ம் நூற்றாண்டிலும், மர பொம்மைகள் 15ம் நூற்றாண்டிலும் பழக்கத்தில் இருந்தது. பெக் மர பொம்மைகளும் இங்கேயும் நெதர்லாண்டிலும் மெதுவாக தலைக்காட்டத்தொடங்கின.

சரி இந்தப் பொம்மைகளின் கண்களுக்கு வருவோம். விக்டோரியா மகாராணி காலத்தில் அவர் விருப்பத்திற்கு ஏற்ப நீல வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டன. அதற்கு முன்பு, அதாவது 19ம் நூற்றாண்டிற்கு முன்பு வரை பொம்மைகள் ப்ரெளன் நிறத்தில் கண்சிமிட்டின.

தொழில் மயமாக்குதல் தொடங்கிய உடன், போர்சலீனில் தலை மற்றும் மரம் அல்லது துணி, மரம் என்று ஏதோ ஒன்றில் உடல் செய்யப்பட்டது. பேப்பர் மேஷ் பொம்மைகளும் தனியே நடனமாடத்தொடங்கின.

குழந்தைகளுக்கு இன்றும் என்றும் விருப்பமான டெடிபேர் பொம்மைகள் 1902ல் கண்ணாடி ஷெல்புகளை அலங்கரிக்கத்தொடங்கின. ப்ளாக் டால்ஸ் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு ஆசாமிகளுக்காக வெளிவரத்தொடங்கின.

வித வித உடை, நடை ஆவனையோடு உலா வரும் பார்பீ பொம்மைகள் 1959 லும், ஆக்‌ஷன் பொம்மைகளான ஹீ மேன் சூப்பர்மேன் வகை பொம்மைகள் 1964ல் களத்தில் குதித்தன.

இந்தப் பொம்மைகளைப்பொறுத்தவரையில், இவை நமக்கு ஒரு கிக் கொடுப்பதால் என்னவோ , வைன் பானத்தைப்போலவே நாளாக ஆக மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. உதாரணத்திற்கு ப்ரான்ஸ் நாட்டின் 19ம் நூற்றாண்டின் பிஸ்க்யூ பொம்மைகளின் இன்றைய மதிப்பு குறைந்தது இரண்டாயிரம் டாலர்ஸ்.

சரி, இந்தப் பொம்மைகளுக்கு உடம்பு சரி இல்லாமல் போனால்...அட இருக்கவே இருக்கிறது டால் ஹாஸ்பிடல் . சிரிக்க வேண்டாம். லிஸ்பனில் 1830ல் முதல் முறையாகத் தொடங்கப்பட்டது. ஆஸ்ட்ரேலியா, பாரிஸ் போன்ற நகரங்களிலும் இவை தொடங்கப்பட்டன.

காதைக் கொண்டுவாருங்கள், இங்கே பொம்மைகளை கொண்டு வருவது குழந்தைகளல்ல, அறுபது வயதைக்கடந்த பெரியவர்களே. 43 வருடமாக பாரீசில் இப்படி ஒரு பொம்மை டாக்டர் இதுவரை 30000 பொம்மைகளை சர்வீஸ் செய்திருக்கிறாராம். அட, நம்ம ஊர் பொய் டாக்டர்கள் இதைவிட நிறைய நோயாளிகளைப் பொம்மைகளாக்கி சிகிச்சை கொடுத்து ரெகார்ட் ப்ரேக் பண்ணியிருக்கிறார்கள்!

சரி நம் நாட்டுப் பொம்மைகளைப்பற்றியும் ஒரு சின்னப்பார்வை பார்த்துவிடலாம். சமீபகாலமாக இறக்குமதியான சீன பொம்மைகளும், பார்பி மற்றும் ஜியஜோ பொம்மைகளைத்தான் இந்தத்தலைமுறை அறிந்தாலும், மரத்தினால் ஆன சொப்பு பொம்மைகள், களிமண் செட்டியார் பொம்மை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, மாக்கல் சமையல் செட்டு, மரபாச்சு பொம்மைகள்...இவற்றை நாம் மறக்கமுடியாது மறக்கவும் கூடாது. பிறந்த குழந்தைக்கு மரப்பாச்சுவை இழைத்து தாய்ப்பாலுடன் கொடுத்தது ஒரு காலம். வீட்டில் இந்தப் பொம்மை ஒன்றை வைத்தால் தீமை நெருங்காது என்றும் நம்பிக்கை. நம்பிக்கைகள் இன்றும் இருக்கின்றன....என்ன நம் நாட்டுப் பொம்மையை விட்டு சிரிக்கும் புத்தாவிற்கு மாறிவிட்டோம்.

மொகஞ்சதாரோ, ஹரப்பா காலத்திலேயே இருந்த மரம் மற்றும் உலோக பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் பொம்மைகளுக்கு புகழ்பெற்ற மாநிலம்.ஜெய்ப்பூரின் துணி பொம்மைகளுக்கும் தனி இடம் உண்டு. உதய்பூரின் மர பொம்மைகள், சிட்டோகர்க் டிஸ்ட்ரிக்டில் உள்ள பாஸி, க்வாலியரின் பாடோ பாய் பொம்மை, ஆந்திராவின் கொண்டப்பள்ளி பொம்மைகள், ஹரியானாவின் பொம்மை உருவங்கள், தஞ்சாவூரின் தலையாட்டி பொம்மைகள், திருச்சானூரில் தயாரிக்கப்படும் திருப்பதி பொம்மைகள், விசாகப்பட்டினத்தின் அரக்கு பொம்மைகள்...

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு வேலை இருக்கிறது. சின்ன வயதில் விளையாடிய கரடி பொம்மையைத் தேடப்போகவேண்டும்!

நீங்களுமா?

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

உங்கள் பர்சை பதம்பார்க்கும் அமெரிக்க - சீன வர்த்தகப் போர்

அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடைபெறும் வர்த்தகப் போர் நம்முடைய பர்சுகளை பதம்பார்ப்பது எப்படி என்பதை விளக்கும் காணொளி

  • தொடங்கியவர்

உறவுகளின் அழகியல் - பிபிசி தமிழ் நேயர்களின் ஆச்சரியப் படங்கள் #BBCTamilPhotoContest

"உறவுகள்" என்பதை மையக்கருவாகக் கொண்டு பிபிசி தமிழ் நடத்திய 31ஆவது வார புகைப்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட பிபிசி நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்.

நித்யா ராஜபாண்டியன் Image captionநித்யா ராஜபாண்டியன் அ. டென்னிஸ் Image captionஅ. டென்னிஸ் சுனில் கவாஸ்கர் பார்த்தசாரதி Image captionசுனில் கவாஸ்கர் பார்த்தசாரதி ஆ. வள்ளி சௌத்திரி Image captionஆ. வள்ளி சௌத்திரி BBC News

 

 

BBC News ஆர். கெளதம் Image captionஆர். கெளதம் கார்த்திகேயன் Image captionகார்த்திகேயன் என்.வளசுப்ரமணியம் Image captionஎன்.வளசுப்ரமணியம் ப.கார்த்திகேயன் Image captionப.கார்த்திகேயன் பாலாஜி கணேசன் Image captionபாலாஜி கணேசன்

 

 

https://www.bbc.com

  • தொடங்கியவர்

இந்தியாவின் ரிகானா: வைரலான சத்தீஸ்கர் பெண்

 
 
ripng

ரினி குஜுர் (இடட்து), ரிகானா (வலது)

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாடலான ரினி குஜூரின் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

ரினீ குஜூர் பிரபல கரீபியன் பாடகி ரிகானாவின் தோற்றத்தை ஒத்திருப்பதுதான் அதற்கான காரணம். கடந்த  24 மணிநேரமாக ரினியின் புகைப்படத்துடன், ரிகானாவின் புகைப்படத்தை ஒப்பிட்டு பலரும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தங்கள்  கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

பல வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களும் ரினியை  இந்தியாவின் ரிகானா என்று அவரது புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக ரினி தற்போது உலக ஆளவில் பிரபலம் ஆகியிருக்கிறார்.

மாடலிங் உலகில் தனது நிறம் காரணமாக தான் எவ்வாறு ஒதுக்கப்பட்டேன் என்பதைச் செய்தி நிறுவனங்களிடம் பகிர்ந்திருக்கிறார் ரினி .

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் ரினி கூறுகையில்,  "நான் கருப்பாக இருந்ததால் எனக்கு மாடலிங் துறையில் பல வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. நான் வெள்ளையாக இல்லை. ஈர்க்கப்படும் வகையில் இல்லை என்று என்னை ஒதுக்கியவர்கள் எல்லாம் தற்போது அவர்களது வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புகைப்படக் கலைஞர்கள் நான் ரிகானாவைப் போல் உள்ளதாகக் கூறுவார்கள். ரிகானா அழகானவர் என்பதை மறுக்க முடியாது. அவரைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். அவரை ஆச்சரியப்படுத்த வேண்டும். நன்றி கூற வேண்டும்" என்று ரினி தெரிவித்துள்ளார்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

நீர், மின்சாரம், உணவு எல்லாமிருக்கும் "பூமி கப்பல்"! - அமெரிக்கர் உருவாக்கிய ஆச்சர்ய வீடுகள்

 
 

இவர்களிடம் நான் அதிகம் வாக்குவாதம் செய்வது கிடையாது. பனிப்பாறையில் மோதி டைட்டானிக் உடையப்போவதைப் பற்றி அறியாமல், டைட்டானிக் கப்பலின் மேல் நின்று நடனமாடிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டம் பற்றி எனக்குக் கவலையில்லை.

நீர், மின்சாரம், உணவு எல்லாமிருக்கும்
 

மெல்லிய மஞ்சள் படர்ந்த நிலப்பரப்பு அது. கோரைப்புற்கள் நிறைந்திருக்கும். வெயில் கடுமையாக இருக்கும். அனல் கொதிக்கும். அதுவே குளிர் காலம் என்றால் குளிர் கடுமையாக இருக்கும். அங்கு இந்தக் கட்டடங்கள் படர்ந்து, ஊர்ந்து, எழுந்து, விரிந்து நின்று கொண்டிருக்கும். அந்த நிலப்பரப்பும், அந்தக் கட்டடங்களின் வடிவமும் ஹாலிவுட் படங்களில் வரும் வேற்றுகிரகமோ என்றும் கூட யோசிக்க வைக்கும். ஆனால், அது பூமி தான். அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்திலிருக்கும் டாவோஸ் (Taos) பகுதி. 

பூமி கப்பல்கள்

அந்த இடம் சீரற்று இருந்தது. பொது உலகம் சொல்லும் அத்தனை ஒழுக்கங்களும் அங்கு மீறப்பட்டிருந்தன. அதைப் பார்க்க வரும் பொது மக்களில் பலரும் அந்த இடத்தை அவ்வளவாக ரசிக்கவில்லை. ஆனால், அந்த இடத்தை விரும்பி, அங்கு வீடுகள் கட்டி வாழ்ந்த கூட்டமும் இருக்கத் தான் செய்தது. அதைப் பிடிக்காதவர்கள் அந்த இடத்தை...

 

 

"ஒரே குப்பையாக இருக்கிறது..." 

"இங்கேயா வாழ்கிறார்கள்?"

"இது என்ன நாடோடிகள் வாழும் இடம் மாதிரி இருக்கு!"

"அழுக்கு"

மக்கள் இப்படிச் சொல்வதை சிரித்தபடியே கேட்டுக் கொண்டிருக்கிறார் மைக் ரெனால்ட்ஸ் (Mike Reynolds). 

மைக் ரெனால்ட்ஸ் - அமெரிக்கா

"இவர்களிடம் நான் அதிகம் வாக்குவாதம் செய்வது கிடையாது. பனிப்பாறையில் மோதி டைட்டானிக் உடையப்போவதைப் பற்றி அறியாமல், டைட்டானிக் கப்பலின் மேல் நின்று நடனமாடிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டம் பற்றி எனக்குக் கவலையில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... உங்கள் சிறு வயதில் நீங்கள் பார்த்த நீர்நிலைகள் அப்படியே இருக்கின்றனவா? குடிக்கும் நீர் சுத்தமாக இருக்கிறதா? நீங்கள் பார்த்த விவசாய நிலம் இன்று என்னவாக மாறியிருக்கிறது? உங்கள் சின்ன வயதிலிருந்த மின்சாரத் தட்டுப்பாட்டிற்கும், இப்போதிருக்கும் தட்டுப்பாட்டிற்கும் எவ்வளவு வேறுபாடுகள்? உலக வெப்பமயமாதலின் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. வெயில் காலங்களில் மழைக் கொட்டித் தீர்க்கிறது. மழைக்காலங்கள் எல்லாம் கோடைக்காலங்களாக மாறுகின்றன. உயிரினங்கள் அழிகின்றன. ஆனால், அவசர உலக மனிதன் மட்டும் எது குறித்த கவலையும் இல்லாமல் எதையோ நோக்கி ஓடிக் கொண்டேயிருக்கிறான்.

 
 

 

இந்த ஓட்டம் நெடுங்காலம் தாங்காது. அதை நான் எப்போதோ உணர்ந்துவிட்டேன். அதற்கான விடை தான் இந்த 'பூமி கப்பல்கள்' (Earth Ships). ஆம்...இந்த வீடுகளை நான் அப்படித் தான் குறிப்பிட விரும்புகிறேன்."

நீண்ட தாடிக்குள் இருக்கும் வறண்ட உதடுகளை நனைக்காமல்  பேசுகிறார் மைக். 

அமெரிக்கா - இயற்கை வீடுகள் - பூமி கப்பல்கள்

1969 இல் சின்சினாட்டி பல்கலைக்கழக்கத்தில் கட்டடக் கலை படித்து முடித்தார் மைக். உலகம் முழுக்கவே எண்ணெய் தட்டுப்பாடு நிறைந்திருந்த சமயம். அதன் பொருட்டு பல பொருட்களின் விலைகளும் அதிகமாகியிருந்தன. அப்போது மைக் ஒரு புது முயற்சியில் ஈடுபட்டார். 

பழைய பீர் டின்களைக் கொண்டு கொத்து, கொத்தாக கயிறு கொண்டு கட்டினார். அது செங்கல் போல் செயல்பட்டது. பின்னர், பல தேவையற்ற பொருட்களைக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டினார். 1972யில் தான் உருவாக்கிய முதல் வீட்டிற்கு "தம்ப் ஹவுஸ்" (Thumb House) என்று பெயரிட்டார்.

ஒரு வீட்டை, ஓர் உலகமாக மாற்றத் தொடங்கினார் மைக். அதை முழுக்க, முழுக்க ஒரு தற்சார்பான வீடாக உருவாக்கினார். ஒரு மனிதன் வீட்டில் வாழ 6 அத்தியாவசியமான விஷயங்கள் தேவை என்பது மைக்கின் கருத்து. அந்த 6 விஷயங்களுக்காக அவன் யாரையும், எதையும் (அரசோ அல்லது அரசு சார்ந்த சேவையையோ)  சாராமல் இருக்க வேண்டும் என்பது தான் மைக் வீடுகளின் அடிப்படை. 

1. நீர் - மைக் உருவாக்கும் வீடுகளில் வெளியிலிருந்து எந்தத் தண்ணீர் குழாய் இணைப்புகளும் கிடையாது. முழுக்க, முழுக்க மழை  நீர் சேமிப்பு, கிணறு போன்றவற்றின் மூலம் நீர் மேலாண்மை செய்யப்படுகிறது. 

2. உணவு உற்பத்தி - அடிப்படையான காய்கறிகள் மற்றும் பழங்களை உருவாக்கும் வகையில் இந்த வீட்டின் தோட்டம் அமைக்கப்படுகிறது.

3. கழிவு நீர் - திடக்கழிவு மற்றும் கழிவு நீரை சுத்திகரித்து அதை மீண்டும் பல பயன்பாட்டிற்குக் கொடுக்கும் வசதிகள் இந்த வகை வீடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. 

4. மின்சாரம் - சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் வீட்டிற்குத் தேவையான மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 

5. புறச்சூழலுக்கு ஏற்ற சீதோஷ்ணம் - கொளுத்தும் வெயிலாக இருந்தாலும், நடுங்கும் குளிராக இருந்தாலும் இந்த வீட்டிற்குள் ஒரே மாதிரியான சீதோஷ்ணம் தான் நிலவும். அதற்காக கட்டுமானத்தின் போதே சில இயற்கைத் தொழில்நுட்பத்தின் வசதியோடு வீடுகள் கட்டப்படுகின்றன. 

6. தேவையற்ற பொருட்களிலிருந்து உருவாகும் வீடு - பழைய அலுமினிய கேன்கள், பாட்டில்கள், பழைய கார் டயர்கள் என குப்பையாக தூக்கிப்போடப்படும் பல பொருட்களைக் கொண்டு தான் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன. 

மைக் ரெனால்ட்ஸ் - அமெரிக்கா

ஆரம்பக்காலங்களில், பல பரிசோதனை முயற்சிகளைக் கடந்து, தன்னை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்கத் தொடங்கினார் மைக். அவரின் வீட்டிற்கு அருகிலேயே பலரும் இடங்களை வாங்கி ஒரு சமூகமாக இது போன்ற வீடுகளில் வாழத் தொடங்கினார்கள். ஒரு சமயத்தில் அப்படியாக மைக் கட்டிக் கொடுத்த சில வீடுகளில், சில பிரச்னைகள் உருவாகின. கூரைகள் ஒழுகுவது, சூடு அதிகமாக வீட்டிற்குள் வருவது போன்ற பிரச்னைகள் எழுந்தன. இந்தப் பிரச்னைகள் காரணமாக 1990யில் மைக்கின் கட்டடக் கலை நிபுணர்  உரிமம் அரசால் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் அது போன்ற வீடுகளைக் கட்டவே இல்லை. 
பின்னர், 17 ஆண்டுகால போராட்டத்திற்கு 2007யில் அவருக்கு மீண்டும் உரிமம் அளிக்கப்பட்டது. இப்போது சமீப காலங்களாக பல வீடுகளைக் கட்டுவது, இந்த இயற்கையான தற்சார்பு வீடுகள் குறித்த பாடங்களை எடுப்பது என பிஸியாக இருந்து வருகிறார் மைக். அவர் தான் கட்டும் வீடுகளுக்கு வைக்கும் பெயர்களும் வித்தியாசமாகத் தானிருக்கும் . சமீபத்தில் அவர் கட்டிய வீடுகளின் பெயர்கள் இவை:

1. ஹாபிட் ஹவுஸ் (Hobbit House).

2. வே பீ (Way Bee). 

3. பீனிக்ஸ் (Phoenix).

4. லெமூரியா (Lemuria). 

பூமி கப்பல்கள்

" எனக்கு என்ன பிடிக்கும் என்பதை நான் கண்டுபிடிக்க எனக்கு நீண்ட நாட்களாகின. எனக்குப் பிடித்ததை நான் செய்யத் தொடங்கினேன். அது மக்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. இன்னும் சில ஆண்டுகளின் நான் இறந்து போகலாம். என் நிறுவனமும், நான் உருவாக்கிய இந்த இடமும் கவனிக்கப்படாமல் புறந்தள்ளப் படலாம். ஆனால், மக்கள் இயற்கைச் சார்ந்த தற்சார்பு வாழ்விற்கு மாறியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அதைக் கண்டிப்பாக உணர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்... உணர்வார்கள் என்று நம்புகிறேன்." என்று சொல்கிறார் மைக் ரெனால்ட்ஸ். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இத்தாலி 4-வது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை வென்றது - (9-7-2006)

 

2006-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இத்தாலி அணி, பிரான்சை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. 32 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இத்தாலி- பிரான்ஸ் அணிகள் மோதின. போட்டியின் முடிவில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் கோல் அடிக்கவில்லை. இறுதியாக பெனால்டி சூட் கடைபிடிக்கப்பட்டது.

 
 
இத்தாலி 4-வது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை வென்றது - (9-7-2006)
 
2006-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இத்தாலி அணி, பிரான்சை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. 32 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது.

இதன் இறுதிப்போட்டியில் இத்தாலி- பிரான்ஸ் அணிகள் மோதின. போட்டியின் முடிவில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் கோல் அடிக்கவில்லை. இறுதியாக பெனால்டி சூட் கடைபிடிக்கப்பட்டது.

இதில் இத்தாலி 5-3 என்ற கணக்கில் வென்று உலககோப்பையை 4-வது முறையாக கைப்பற்றியது.

இந்தத் தொடரின் சிறந்த கோல்கீப்பராக இத்தாலியைச் சேர்ந்த பபோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளோஸ் தங்க ஷுவைப் பெற்றார்.

இதற்கு முன் இத்தாலி 1934, 1938 மற்றும் 1982-ம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை கைப்பற்றியிருந்தது.
 

 

 

 

ஒலிம்பிக்கில் 30 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா சேர்ப்பு (9-7-1991)

 

தென்ஆப்பிரிக்கா 1904-ம் ஆண்டும் முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வந்தன. அங்கு ஏற்பட்ட நிறவெறி தாக்குதல் காரணமாக 1964 முதல் 1988 ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. அதன்பின் 30 ஆண்டுகள் கழித்து 1991-ம் நடைபெற்ற ஒலிம்பி்கில் கலந்து கொண்டது. மேலும் இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள் * 1900 - ஆஸ்திரேலிய கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆஸ்திரேலியப் பொது நலவாயத்தின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார். * 1903 - யாழ்ப்பாணத்தில் இந்து வாலிபர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

 
 
 
 
ஒலிம்பிக்கில் 30 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா சேர்ப்பு (9-7-1991)
 
தென்ஆப்பிரிக்கா 1904-ம் ஆண்டும் முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வந்தன. அங்கு ஏற்பட்ட நிறவெறி தாக்குதல் காரணமாக 1964 முதல் 1988 ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. அதன்பின் 30 ஆண்டுகள் கழித்து 1991-ம் நடைபெற்ற ஒலிம்பி்கில் கலந்து கொண்டது.

மேலும் இதே தேதியில் நடந்த முக்கிய சம்பவங்கள்

* 1900 - ஆஸ்திரேலிய கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆஸ்திரேலியப் பொது நலவாயத்தின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார்.

* 1903 - யாழ்ப்பாணத்தில் இந்து வாலிபர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

* 1943 - இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி மீதான தாக்குதலை ஆரம்பித்தனர்.

* 1948 - பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.

* 1982 - ஐக்கிய அமெரிக்க போயிங் விமான லூசியானாவின் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 146 பேரும் தரையில் இருந்த 8 பேரும் கொல்லப்பட்டனர்.

* 1995 - யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

* 2002 - ஆபிரிக்க ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது. தென்னாபிரிக்க அதிபர் தாபோ உம்பெக்கி இவ்வமைப்பின் முதலாவது தலைவரானார்.

* 2006 - சைபீரியாவில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 122 பேர் பலியானார்கள்.

* 2006 - அக்னி III ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. அதன் இரண்டாவது அடுக்கு இயங்க மறுத்தமையால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது.
 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சிக்கலான தருணத்தை எதிர்கொள்வது எப்படி? - யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory

 
சிக்கலான தருணத்தை எதிர்கொள்வது எப்படி? - யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory
 

யதார்த்தம் சொல்லும் கதை

`நம் தலையெழுத்தைத் தீர்மானிப்பது நட்சட்திரங்கள் அல்ல, நாம்தான்’ - விதி குறித்து அழுத்தம் திருத்தமாக இப்படிக் குறிப்பிடுகிறார் நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare). உட்கார்ந்த இடத்திலிருந்து ஆர்டர் செய்து, எங்கேயோ இருக்கும் ஸ்வீடனிலிருந்து ஒரு பொருளை வாங்கலாம்; ஆஸ்திரேலியாவிலிருக்கும் ஒருவருடன் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசலாம்; உலகின் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் விமானத்தில் பறக்கலாம்... அறிவியல், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து... எல்லாத் துறைகளிலும் எத்தனையோ முன்னேற்றங்கள் வந்துவிட்ட காலம் இது. ஆனால், இன்றைக்கும் தலைவிதியை நம்பி, ஜோதிடத்தின் பின்னால் ஓடுபவர்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. ஜாதகம் பார்த்து பெண்ணை நிராகரிப்பவர்கள் முதல், சகுனம் பார்த்து வெளியே செல்பவர்கள்வரை லட்சக்கணக்கில் மனிதர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படை விதியின் மேல் மனிதர்களுக்கு இருக்கும் நம்பிக்கை. தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும் என்கிற அழுத்தமான எண்ணம். `என்னங்க... உங்க பையன் வேலைக்குப் போறானா?’ என்று ஒருவர் கேட்கிறார். மற்றவர் பதில் சொல்கிறார்... `இன்னும் நல்ல வேலையா ஒண்ணும் கிடைக்கலைங்க. விதினு ஒண்ணு இருக்குல்ல... அவனுக்கு வேலை எப்போ கிடைக்கணும்னு இருக்கோ, அப்போதானே கிடைக்கும்?’ இந்தப் பதிலில் அந்தப் பையனின் தகுதி, திறமை, முயற்சி எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, விதி மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. கொஞ்சம் முயன்றால், யார் வேண்டுமானாலும் தலைவிதியைக்கூட மாற்றிவிடலாம். எதிர்காலத்தை கணிப்பதற்கு மிகச் சிறந்த வழி, அதை நம் இஷ்டம்போல் உருவாக்குவதுதான். இந்த யதார்த்தத்தை சுட்டிக்காட்டும் கதை ஒன்று... 

கதை

 

 

எல்லா காலங்களிலும் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள். மத்திய ஐரோப்பாவில் அப்படி ஆணவம் நிறைந்த கொடுங்கோல் அரசன் ஒருவன் ஒரு காலத்தில் இருந்தான். கடுமையான வரி விதிப்பு, கண்டதற்கெல்லாம் தண்டனை... என அவன் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அந்த அரசனுக்கு முக்கியமான ஒரு குணம் இருந்தது. அவனைத் தவிர மற்ற யாரையும் பாராட்டிப் பேசுவது அவனுக்குப் பிடிக்காது. அதற்காக நல்லவர்களோ, திறமைசாலிகளோ, எல்லோர் மனதிலும் இடம்பிடித்திருப்பவர்களோ இருக்க மாட்டார்களா என்ன? இருக்கத்தான் செய்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஒரு துறவி. அவர், அந்த அரசனின் ஆட்சிக்குட்பட்ட சின்னஞ்சிறு கிராமத்திலேயே இருந்தார். குட்டி குடிசை, எளிமையான வாழ்க்கை, வருபவர்களை உபசரித்து, கனிவாகப் பேசி ஆலோசனை சொல்லும் சுபாவம், வைத்திய அறிவு, ஞானம்... இந்த குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் துறவியைப் பிரபலமாக்கிக்கொண்டிருந்தன. 

 

 

துறவியிடம் மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்கள் இருந்தார்கள். அவர்களைவிட அவரின் அன்பான வார்த்தைகளைக் கேட்பதற்கும், ஆசிகளைப் பெறுவதற்காகவும் வருபவர்கள் இன்னும் அதிகமாக இருந்தார்கள். கிராமத்துக்கு வெளியே இருந்த அவரின் சின்னஞ்சிறு குடிசைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வர ஆரம்பித்தார்கள். நாளுக்கு நாள் அந்த எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் அந்தத் துறவி நாடறிந்த ஒருவராகிவிட்டார். எங்கும் அவரைப் பற்றியே பேச்சு. கொடுங்கோல் அரசனின் மந்திரி ஒருவர், அந்தத் துறவி குறித்த தகவலை அரசனின் காதுக்குக் கொண்டு சென்றார். 

துறவி

``அரசே... நம் ஆட்சிக்குட்பட்ட கிராமமொன்றில் துறவி ஒருவர் இருக்கிறாராம். பல சிக்கலான நோய்களுக்குக்கூட மருந்து தருகிறாராம். எத்தனையோ பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஆலோசனை சொல்கிறாராம். `ஞானவான், அற்புதமான மனிதர், தெய்வத்துக்கு இணையானவர், அவரிடம் மகத்தான சக்தி இருக்கிறது, அவருக்குத் தெரியாதது ஒன்றுமில்லை...’ என்றெல்லாம் அவரைக் குறித்துப் பலரும் பேசிக்கொள்கிறார்கள்...’’ 

இன்னும் சிலரிடம் துறவியைப் பற்றி விசாரித்தான் அரசன். எல்லோரும் அந்த மந்திரியைப் போலவே கருத்து சொன்னார்கள். அதையெல்லாம் கேட்கக் கேட்க, அவனுக்குள் பொறாமை கனன்று எரிந்தது. `துறவி ஒன்றும் பெரிய ஆளில்லை, அவரும் சாதாரண மனிதர்தான்... சொல்லப்போனால் எனக்கு முன்னால் அவர் ஒன்றுமேயில்லை’ என்று எல்லோருக்கும் நிரூபிக்க ஆசைப்பட்டான். அதற்காகவே ஒரு திட்டமும் தீட்டினான். அந்தத் துறவியை அழைத்துவரச் சொல்லி, தன் வீரர்கள் சிலரை அனுப்பிவைத்தான். 

வீரர்கள் துறவியை அரண்மனைக்கு அழைத்து வந்தார்கள். அமைதி தவழும் முகம், அருள் பொங்கும் கண்கள், கனிவான புன்னகை... எப்போதும் போலவே இயல்பாக அரசவைக்குள் நுழைந்தார் துறவி. அவரைப் பார்த்தான அரசன். `அவர் மகா ஞானவான். எந்தக் கேள்வி கேட்டாலும், அதற்கு மிகச் சரியான பதிலை அவர் சொல்லிவிடுவார்’ என்று மந்திரிகள் அவனிடம் சொல்லியிருந்தார்கள். அரசன், தன் ஆசனத்துக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு கறுப்புத் துணிப் பையை எடுத்தான். ஏற்கெனவே அதற்குள் ஒரு கிளியைவைத்து, அந்தப் பையை நன்கு சுற்றி, மூடிவைத்திருந்தான். 

 

 

துறவி அரசவைக்குள் வந்து அமர்ந்ததும், அந்த கறுப்புப் பையை எடுத்தான் அரசன். அதற்குள் இருந்த கிளியின் கழுத்தைத் தன் கைகளால் பிடித்துக்கொண்டான். பிறகு துறவியிடம், ``இதற்குள் என்ன இருக்கிறது சொல்லுங்கள் பார்க்கலாம்’’ என்றான். 

``அந்தப் பைக்குள் ஒரு கிளி இருக்கிறது’’என்றார் துறவி. 

அரசன் அசந்துபோனான். `இதற்குள் கிளி இருப்பது இவருக்கு எப்படித் தெரியும்? உண்மையிலேயே இவர் எல்லாம் அறிந்தவராக இருப்பாரோ! இறைவனின் முழு அருள் பெற்ற ஞானியா இவர்?’ என்றெல்லாம் ஒரு கணம் நினைத்தான். ஆனாலும், அவரை எப்படியாவது அவமானப்படுத்திவிட வேண்டும் என்கிற கெட்ட எண்ணம்தான் அவனுக்கு மேலெழுந்தது. அரசன், தன் இரண்டாவது கேள்வியைக் கேட்டான்... ``சரி. இதிலிருக்கும் கிளி உயிரோடு இருக்கிறதா, இறந்துவிட்டதா?’’ 

கிளி

அரசனின் திட்டம் என்னவென்றால், துறவி `கிளி இறந்துவிட்டது’ என்று சொன்னாரென்றால், உயிரோடு கிளியை வெளியே பறக்கவிட்டுவிடுவது; அவர், `கிளி உயிரோடிருக்கிறது’ என்று சொன்னாரென்றால், கிளியின் கழுத்தை நெறித்து `பார்... கிளி இறந்துவிட்டது’ என்று காண்பிப்பது. ஆக, துறவி எந்தப் பதிலைச் சொன்னாலும் வெற்றி அரசனுக்குத்தான். 

இந்த மாதிரிச் சூழ்நிலையில் எல்லோருக்கும், `இருக்கிறது’ அல்லது `இல்லை’ என ஏதோ ஒரு பதிலைச் சொல்வதற்குத்தான் வாய்ப்பிருக்கும். ஆனால், அந்தத் துறவிக் கொஞ்சமும் கலங்காமல் தெளிவாகப் பதில் சொன்னார். ``அரசே, அது உங்கள் கை. கிளி உயிரோடு இருக்க வேண்டுமா, இறக்க வேண்டுமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.’’ 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: மோடி திரைப்படம்

 

 
6chgowmeme%201
6chgowmeme%202
6chgowmeme%204
 
6chgowmeme%206
6chgowmeme%209
 
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பேசும் படம்:

 

 
08CHLRDBALI

A woman performs during a cultural parade for the XL Bali Arts Festival in Denpasar on Indonesia's resort island of Bali on June 23, 2018. / AFP PHOTO / SONNY TUMBELAKA

டந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது

08CHLRDFADYAFAHAD

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான அனுமதி சில வாரங்களுக்கு முன் வழங்கப்பட்டது. கார் ஓட்ட அனுமதிபெற்ற பெண்களில் ஒருவரான ஃபத்தியா ஃபகத் பெருமிதத்துடன் புன்னகைக்கிறார்.

 
08CHLRDMANDSAUR

மத்தியப்பிரதேசத் தலைநகர் போபாலில் எட்டு வயதுச் சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத் தவறிய அரசைக் கண்டித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உருவ பொம்மையை மகிளா காங்கிரஸ் அமைப்பினர் எரித்தனர்.

08chlrdtree

காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் நகரான டெல்லியில் குடியிருப்புகளைக் கட்டுவதற்காக 17,000 மரங்களை வெட்ட அரசு அனுமதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

ஹாங்காங்கில் ஸ்பைடர்மேன்

பட விளம்பரத்திற்காக வெறும் கைகளால் உயரமான கட்டடம் மீது ஏறிய பிரெஞ்சு வீரர்

  • தொடங்கியவர்

பாம்புகளின் இராஜ்சியம் ;சீனாவில் ஒரு வினோத கிராமம்

 

 

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தின் கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமம் சிசிகியாவ். சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது உடல்களின் பல பகுதிகளில் பாம்புக்கடி அடையாளங்களுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். 

 

சீனர்களின் அசைவ உணவில் பாம்புக் கறிக்கு முதலிடம் உண்டு. மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. நிலப்பரப்பில் மட்டுமின்றி, இங்குள்ள நீர்நிலைகளிலும் மீன்களை விட பாம்புகளின் ஆதிக்கம்தான்.

2014_s_02_24_03_SnakeFarmSnakes.jpg

பசிக்கு உணவாக பயன்படுத்தப்பட்ட பாம்புகள் இங்குள்ள மக்களுக்கு செல்வத்தை அள்ளித்தரும் அமுதசுரபியாக பிற்காலத்தில் மாறின. இதனால், பிறபகுதிகளில் உள்ள மக்கள் இந்த கிராமத்தை ‘பாம்பு கிராமம்’ என்றே அழைக்க தொடங்கி விட்டனர்.

இறைச்சியாக மட்டுமின்றி, பல்வேறு கொடிய நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் பாம்புகள் பயன்படுவதால் பாம்புப் பண்ணைகளும், பாம்பு வர்த்தகமும் இங்கு நாளடைவில்  பெருகியது.

குறிப்பாக, கொடிய நச்சுத்தன்மை உள்ள பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷம், அதிகமான விலைக்கு வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுவதால், இங்கு வீட்டுக்குவீடு பெரியதும், சிறியதுமாக பாம்பு வளர்ப்பு தொழில் குடிசைத்தொழிலாகவே மாறிப்போனது.

இந்த தொழிலுக்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டவர் யாங் ஹாங்சாங். இவரை உள்ளூர் மக்கள் “பாம்புகளின் ராஜா” என்று அன்புடன் அழைத்து மகிழ்கின்றனர். 

1970 ஆம் ஆண்டுளில் முதன்முதலாக பாம்பு பண்ணையை ஏற்படுத்தி, பாம்பு முட்டைகளை சேகரித்து, அடைகாத்து, குஞ்சுகளை பொறிக் கவைக்க யாங் ஹாங்சாங் முயன்றபோது அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. வெறும் பத்து சதவீதம் முட்டைகள் மட்டுமே பொறித்தன.

111535_full.jpg

ஆனால், மனம்  தளராமல் இவர் எடுத்த பெருமுயற்சிகளின் பலனாக அடுத்த ஆண்டிலேயே சுமார் 30 ஆயிரம் முட்டைகள் குஞ்சு பொறித்திருந்ததால் அந்நாட்களில் மிகப்பெரிய பாம்பு பண்ணையின் அதிபராக மாறினார் யாங்.

1983 ஆம் ஆண்டுகளில் சீனாவில் வாழ்ந்த மக்களின் சராசரி ஆண்டு வருமானம் வெறும் 10 ஆயிரம் யுவான்களாக மட்டுமே இருந்தபோது, யாங் ஹாங்சாங்-கின் ஆண்டு வருமானம் சுமார் ஒன்றரை லட்சம் யுவான்களாக இருந்தது. இதை வைத்தே இவரது வளர்ச்சியையும், பாம்பு பண்ணை தொழிலில் கிடைத்த லாபத்தையும் யூகித்து கொள்ள முடியும்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்
’முன்னேறுவதற்குத் துன்பங்கள் தேவைப்படுகின்றன’
 

image_87d0358ac8.jpgவாழ்க்கையில் தோற்றுவிட்டோம் என்று கடவுளிடம் சரணடைவதை விடுத்து, காலனுடன் கரைந்து போகின்றார்கள். 

பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையா? வாழ்க்கை சுவாரஷ்யமாக இருக்க இன்ப, துன்ப நுகர்வுகள் கட்டாயம் தேவையானவை. எதையும் தொடர்ந்து அனுபவிக்க முடியாது. சலிப்புத் தட்டும்; மாற்றங்கள் களிப்பை உண்டாக்கும். அவைகூட, சில சமயம் வெறுப்பையும் தரும். 

ஆனால், எதையும் மனமுவர்ந்து ஏற்பதுவே, வாழ்க்கையில் அனுபவ ஞானத்தைத் தரும். முன்னேறுவதற்குத் துன்பங்கள் தேவைப்படுகின்றன. 

எளிதாகக் கிடைக்கும் பொருளின் அருமை, தெரிந்து விடாது. எதிர்ப்படும்  கஷ்டங்கள், வாழ்வின் வழி எதுவெனக் காட்டுகின்றன. 

சும்மா கிடைத்தால் சோம்பேறியாவோம். உடலை வருத்தி உழைத்தால், உலகத்தில் நிமிர்ந்து ஓங்கலாம். 

தோல்வியில் இருந்து விடுபட, வாழ்க்கையை மாற்றிக்காட்டு.புதுவழி தேடு; நெஞ்சில் துணிச்சலைத் துணையாக்கு.

வருந்தி அழுவதைவிட, நிமிர்ந்து வாழ்வது மேல்; எழு, நட, ஓடு, வெற்றிகொள்.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று : ஜூலை 10
 

image_9ef4a8eb98.jpg1935 : 1922 முதல் போரில் ஈடுபட்டு வந்த பொலிவியாவும் பரகுவையும் போரை நிறுத்த உடன்பட்டன.

1940 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜேர்மனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.

1940 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.

1944 : இரண்டாம் உலகப் போர் - பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1944 : இரண்டாம் உலகப் போர் - கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.

1945 : ஆத்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.

1956 : இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1957 : கனடாவில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி அரசு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது.

1967 : இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு நாள் போர் முடிவுக்கு வந்தது.

1984 : தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.

1982 : சிரிய அரபு இராணுவம் லெபமானில் இஸ்ரேலியப் படையினரை தோற்கடித்தனர்.

1986 : மண்டைதீவுக் கடல் படுகொலைகள் – யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990 : இலங்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.

1996 : வடக்கு அயர்லாந்தில் சின் பெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

1997 : கெமர் ரூச் தலைவர் போல் போட் வடக்குக்குத் தப்பியோட முன்னர், தனது பாதுகாப்புத் துறைத் தலைவர் சோன் சென் மற்றும் அவரது 10 குடும்ப உறுப்பினர்களையும் சுட்டுக் கொல்வதற்கு உத்தரவிட்டார்.

1998 : முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25 க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.

1999 : கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.

2002 : இரண்டு மனிதர்களின் நரம்பு மண்டலங்களுக்கு இடையில் முதல் நேரடி மின்னணுத் தொடர்புப் பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் கெவின் வாரிக் என்பவரால் நடத்தப்பட்டது.

2003 : நாசாவின் இஸ்பிரிட் தளவுலவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

2006 : ஈழத்தமிழர் படுகொலைகள், 2006 – மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.

2017 : உலக எக்ஸ்போ கண்காட்சி கசக்கஸ்தான், அஸ்தானா நகரில் ஆரம்பமானது.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

வாழ்வில் நாம் இழக்கக் கூடாதது எது? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 

வாழ்வில் நாம் இழக்கக் கூடாதது எது?

வாழ்வில் நாம் இழக்கக் கூடாதது எது? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory
 

கதை

`உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களைப் பேணி, பாதுகாத்து வையுங்கள்; முதுமைக் காலத்தில் அவை உங்களுக்கு சுகமான ஒரு மெத்தையை உருவாக்கித் தரும்’ - இப்படிக் குறிப்பிடுகிறார் அமெரிக்க நாவலாசிரியரும் நாடக ஆசிரியருமான பூத் டார்க்கிங்டன் (Booth Tarkington). உண்மையில் அழகான விஷயங்கள் என்பது பணமோ, சொத்தோ அல்ல; இனிமையான நினைவுகளும் தருணங்களும்தான். அவற்றை நாம் நினைத்து நினைத்துக் கொண்டாடாவிட்டால், அவை நம்மைக் கடந்து போய்விடும். அதை நாம் மொத்தமாக இழந்துவிடுவோம். ஓய்வு காலத்தில், முதுமையில் அந்தத் தருணங்களில்லாமல் கொஞ்சமே கொஞ்சம்கூட நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இது ஒருபுறமிருக்கட்டும்... முதுமையை ஒரு நோய்மையாகக் கருதி விலகி ஓடுகிறவர்கள்தாம் நம்மில் அநேகம் பேர். அயலார், முன்பின் அறிமுகமில்லாத முதியவர்களை விட்டுவிடுவோம். நம் வீட்டிலேயே இருக்கும் பெரியவர்களின் குரலுக்கு செவி சாய்ப்பவர்களேகூட இங்கே குறைவு. முதுமையைக் காரணம் காட்டி அவர்களைத் தனிமைப்படுத்துவது, வேறெங்காவது உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைப்பது, முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுவது... இவையெல்லாம் நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகள். ஆனாலும், முதியோருக்கு இரங்கும் நல்ல உள்ளங்களும் இங்கே இருக்கத்தான் செய்கின்றன. இந்த இரு விஷயங்களையும் இணைக்கிற புள்ளியாக இருக்கிறது இந்தக் கதை... 

அமெரிக்காவின் நியூயார்க் நகரம். நள்ளிரவு நேரம். ஒரு கால் டாக்ஸி டிரைவர் ஒரு வீட்டின் முன்னால் தன் காரை நிறுத்தினார். தான் சரியான முகவரிக்குத்தான் வந்திருக்கிறோமா என்பதை, தன் மொபைல்போனில் குறிப்பிட்டிருந்த முகவரியோடு வைத்து சரிபார்த்துக்கொண்டார். பிறகு, மெதுவாக கார் ஹாரனை அடித்தார். அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியே வருவதாகத் தெரியவில்லை. தன் மொபைல் போனில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு கால் போட்டார். யாரும் எடுத்துப் பேசவில்லை. மேலும் ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தன. வேறு எந்த டிரைவராக இருந்தாலும், அந்த இரவு நேரத்தில் கால் டாக்ஸிக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆர்டரை கேன்ஸல் செய்துவிட்டு, வேறு வேலையைப் பார்க்கப் போயிருப்பார்கள். அந்த டிரைவர் ஓர் இளைஞர். கொஞ்சம் பொறுமைசாலி. காரைவிட்டு இறங்கினார். ஜன்னலிலிருந்து தெரிந்த சிறு வெளிச்சத்தைத் தவிர, வீடு இருள் சூழ்ந்திருந்தது. 

 

 

முதிய பெண்மணியின் கதை

டிரைவர், `உள்ளேயிருக்குறவங்களுக்கு நம்ம உதவி ஏதாவது தேவைப்படுமோ?’ என்று நினைத்தார். கதவை மெள்ளத் தட்டினார். உள்ளேயிருந்து ஒரு பெண்மணியின் தளர்ந்த குரல் கேட்டது... ``ரெண்டே நிமிஷம்... இதோ வந்துர்றேன்...’’ 

 

 

டிரைவர் காத்திருந்தார். சில நிமிடங்களில் கதவு திறந்தது. அவர் ஒரு முதிய பெண்மணி. வயது எப்படியும் எழுபத்தைந்தைத் தாண்டியிருக்கலாம் என்பதுபோல, முகத்திலும் உடலிலும் சுருக்கங்கள். அவர், டிரைவரைப் பார்த்து மென்மையாகச் சிரித்தார். இழுத்துப் போகும்படியான ஒரு சின்ன சூட்கேஸைப் பிடித்திருந்தார். அந்த டிரைவர் சூட்கேஸை வாங்கிக்கொண்டார். மூதாட்டி, அவரின் தோளைப் பிடித்துக்கொண்டு மிக மெதுவாக எட்டுவைத்து நடந்தார். அவரால் ஓரடியைக்கூட சீராக எடுத்துவைக்க முடியவில்லை. நடக்கும்போது மூட்டுவலியால் அவர் துடிக்கிறார் என்பதும் அந்த இளைஞருக்குத் தெரிந்தது. ஆனால், முதிய பெண்மணியின் நடை வேகத்துக்கு ஈடு கொடுத்து மிக மெதுவாக அவரும் எட்டுவைத்து நடந்தார். 

``உங்க அன்புக்கு ரொம்ப நன்றி’’ என்றார் மூதாட்டி. 

``அது பரவாயில்லை. நான் என்னோட பேசஞ்சர்களை இப்படித்தான் நடத்துவேன். இது என் அம்மா எனக்குக் கத்துக் கொடுத்தது.’’ 

``ஓ... உங்க அம்மா நல்லா இருக்கணும்...’’ 

இதைக் கேட்டு டிரைவர் சிரித்துக்கொண்டார். முதிய பெண்மணி காருக்குள் ஏற உதவி செய்தார். அவருடைய சூட்கேஸை டிக்கியில் வைத்தார். தன் இருக்கையில் அமர்ந்து, தன் மொபைலை எடுத்தார். அந்த மூதாட்டியை இறக்கிவிடவேண்டிய முகவரியை மனதில் பதித்துக்கொண்டார். ``கிளம்பலாமா மேடம்?’’ என்றார். 

``போகலாம்... ஆனா, எனக்காக நீங்க டவுண்டவுன் வழியாகப் போக முடியுமா?’’ 

``அது சுத்து வழியாச்சே மேடம்?!’’ 

``எனக்கும் அது தெரியும். எனக்கு ஒண்ணும் அவசரமில்லை. டவுண்டவுன்ல சில இடங்களை நான் திரும்பப் பார்க்கவேண்டியிருக்கு. ப்ளீஸ்...’’ 

டிரைவர் ஒரு கணம் அந்த மூதாட்டியின் தளர்ந்த முகத்தைப் பார்த்தார். பிறகு ``நீங்க சொல்ற வழியிலேயே போகலாம் மேடம்’’ என்றார். மூதாட்டி வழிகாட்ட, அந்த வழியில் காரைச் செலுத்திக்கொண்டு போனார் டிரைவர். முதிய பெண்மணி ஓரிடத்தில் காரை நிறுத்தச் சொன்னார். கார் கண்ணாடியை இறக்கிவிட்டுவிட்டு, ஒரு பெரிய கட்டடத்தைப் பார்த்தார். யாரிடமோ சொல்வதுபோல டிரைவரிடம் சொன்னார்... ``இந்த ஆபிஸ்லதான் நான் வேலை பார்த்தேன். லிஃப்ட் ஆபரேட்டர் வேலை. ஒரு நாளைக்கு எத்தனைவிதமான மனுஷங்களைப் பார்ப்பேன் தெரியுமா? அது ஒரு காலம்...’’ அவர் கண்கள் கனவில் மிதப்பது தெரிந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு கிளம்பச் சொன்னார். அடுத்து, அவர் காரை நிறுத்தச் சொன்ன இடம் ஒரு பழைய வீடு. 

 

 

``கல்யாணம் ஆனதுக்கப்புறம் நானும் என் கணவரும் இந்த வீட்டுலதான் 48 வருஷம் குடியிருந்தோம்... இல்லை... சந்தோஷமா வாழ்ந்தோம்...’’ அவர் கண்களில் நீர் துளிர்த்தது. கார் கிளம்பியது. இதுபோல அந்த மூதாட்டி வேறு சில இடங்களிலும் நிறுத்தச் சொன்னார்... அவரும் அவர் கணவரும் அடிக்கடி போகும் ரெஸ்ட்டாரன்ட், அவர் படித்த கல்லூரி, சிநேகிதியின் வீடு, டான்ஸ் ஆடிய ஹோட்டல்... இப்படியே இரண்டு மணி நேரங்கள் நகரின் பல இடங்களை அந்த முதிய பெண்மணி சுற்றிப் பார்த்தார். 

பிறகு சொன்னார்... ``எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நாம போகவேண்டிய இடத்துக்குப் போகலாம்.’’ 

டிரைவர் காரைச் செலுத்தி, குறிப்பிட்ட அந்த முகவரிக்கு வந்து நிறுத்தினார். காரை நிறுத்திய பிறகுதான் வாசலில் இருந்த போர்டைப் பார்த்தார். அது ஓர் இல்லம்... நோயாளிகளும், பராமரிக்க ஆளில்லாமல் அந்திமக் காலத்தை நெருங்கிக்கொண்டிருப்பவர்களும் தங்கும் விடுதி. ஆங்கிலத்தில் `Hospice’ என்று சொல்வார்கள். 

மூதாட்டி மெதுவாக காரிலிருந்து இறங்கியபடியே சொன்னார்... ``என்ன பார்க்குறீங்க... எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லை. இனிமே தனியா என்னால இருக்க முடியாதுனுதான் இங்கே வந்திருக்கேன்.’’ 

அதற்குள் அந்த கட்டடத்துக்குள்ளிருந்து இரண்டு பணியாளர்கள் காரை நோக்கி வந்தார்கள். அவர்களில் ஒருவர், தான் கொண்டு வந்திருந்த வீல் சேரில் முதிய பெண்மணியை உட்காரச் சொன்னார். உட்கார்ந்தபடியே மூதாட்டி கேட்டார்... ``நான் உங்களுக்கு எவ்வளவு குடுக்கணும்னு நீங்க சொல்லவே இல்லியே?’’  

``ஒண்ணும் குடுக்க வேண்டாம்.’’ 

``ரெண்டு மணி நேரத்துக்கும் மேல என்னை கார்ல கூட்டிக்கிட்டு சுத்தியிருக்கீங்க. ஒண்ணும் வேணாம்னு சொல்றீங்களே?’’ 

``அதை வேற பயணிகள்கிட்ட வசூல் செஞ்சுக்குறேன் மேடம்’’ என்ற டிரைவர், அந்த முதிய பெண்மணியை மென்மையாக அணைத்துக்கொண்டார். 

முதியோர் இல்லம்

``ரொம்ப அற்புதமான நிமிடங்களை எனக்கு மீட்டுக் கொடுத்ததுக்கும், எனக்காக நேரம் செலவழிச்சதுக்கும் ரொம்ப நன்றி’’ புன்முறுவலோடு சொன்னார் மூதாட்டி. 

அவரிடம் விடை பெற்றுக்கொண்டு காருக்குத் திரும்பினார் டிரைவர். அந்த விடுதியின் கதவு அறைந்து சாத்தப்படுவது கேட்டது. அந்த இளம் டிரைவருக்கு அந்தச் சத்தம், ஒரு மனுஷியின் வாழ்க்கைக் கதவை இறுக மூடுவதைப்போலவே தோன்றியது. 

***  
 

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.