Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
உலகில் உயிர்வாழும் மிக வயதான நபர்
 

இஸ்ரேலைச் சேர்ந்த 112 வயதான நபர் ஒருவர், உலகில் உயிர்வாழும்  மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 

 

155114823126.jpg

 

இஸ்ராயேல் கிறிஸ்டல் எனும் இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் ஹைஃபா நகரிலுள்ள தனது வீட்டில் வைத்து கின்னஸ் சாதனை சான்றிதழ் கையளிக்கப்பட்டது.

 

கின்னஸ் சாதனைப் பதிவுகள் குழுவின் தலைவர் மார்கோ பிரிகெட்டி இச் சான்றிதழை கையளித்தார். அன்றைய தினம் அவரின் வயது 112 வருடங்கள் மற்றும் 178 நாட்களாக இருந்தது. 

 

யூதரான இவர் அடோல்வ்  ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் நாசி வதை முகாமிலிருந்து தப்பியராவார். 1903 செப்டெம்பர் 15 ஆம் திகதி போலந்தின் ஸார்னோவ் நகரில் பிறந்தவர் இஸ்ராயேல் கிறிஸ்டல். அப்போது ரஷ்ய சாம்ராஜ்யத்தின் கீழ் போலந்து இருந்தது.

 

1943 ஆம் ஆண்டு அஷ்விட்ஸ் வதை முகாமில் இஸ்ராயேல் கிறிஸ்டலின் குடும்பத்தினரும் அடைக்கப்பட்டனர். அங்கு கிறிஸ்டலின் மனைவி உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப் படுகிறது.

 

ஜேர்மனியரின் படையெடுப்பின்போது இத் தம்பதியின் பிள்ளைகள் இரு வரும் உயிரிழந்தனர். 1950 ஆம் ஆண்டு ஹைபா நகருக்கு இஸ்ராயேல் கிறிஸ்டல் இடம் பெயர்ந்தார். 

metronews.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்- விஞ்ஞானிக்குள் ஒரு இசைக்கலைஞன்!

 

albert%20eisten350.jpgந்தக் குழந்தை பிறந்தபோது அதன் தலை மட்டும் அளவில் பெரியதாக இருந்தது, அதன் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. அந்தக் காலத்தில் மருத்துவர்களும்,  என்ன காரணத்தால் இப்படி தலை பெரிதாய் ஆகியிருக்கிறது என்பதைக் கண்டறிய முடியாமல் தவித்து இருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் பாட்டி,  முதல் முறையாக அக்குழந்தையைப் பார்த்த போது "அய்யய்யோ! பெரிசா இருக்கே! தலை ரொம்ப பெரிசா இருக்கே!” என்று அழுது புலம்பி இருக்கிறார். மருத்துவர்கள், பெற்றோர்கள் எல்லோருடைய கவலைகளும் சில தினங்கள்தான், பிறகு தானாகவே தலை சரியாகி இருக்கிறது.

ஒரு குழந்தை தன்னுடைய மழலைக் குரலால்,  'அம்மா...' எனத் திக்கித் திக்கி அழைக்கும் அந்த முதல் வார்த்தைதான் ஒரு தாய்க்கு கிடைக்கக் கூடிய மிகப் பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்றாய் இருக்க முடியும். ஆனால், இக்குழந்தை இரண்டு வயது வரை சரியாய் பேசக் கூட முடியாத குறைபாட்டோடு இருந்து இருக்கிறது. துறுதுறு என குறும்பு செய்து திரியும் ஒரு குழந்தை,  தன்னைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் குதூகலத்தோடு வைத்திருக்கும். ஆனால், இந்தச் சுட்டியோ ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் ஒரு துறவியைப் போல அமைதியாய் இருந்திருக்கிறது. இந்தக் கவலைகளோடு கூட, சரியான கவனிப்புத் திறனும் இல்லாதிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள் அதனுடைய பெற்றோர்கள்.

கவனிப்புத் திறன் சரியாய் இல்லாமல் இருப்பதைக் கண்டறிந்தது கூட அந்தக் குழந்தையின் ஒரு செயலால் தான். அந்தக் குழந்தைக்கு இரண்டரை வயதானபோது, புதிதாய்ப் பிறந்த அதன் தங்கையை முதல் முறையாகப் பார்த்தபோது, “இந்தப் பொம்மைக்கு சக்கரமே இல்லியே எப்படி இது போகும்" எனத் திக்கித் திக்கிக் கேட்டிருக்கிறது அந்தக் குழந்தை. ஆறு வயதில் பள்ளியில் சேர்த்த போது, ஆசிரியர்களும் இவன் ஒரு மக்குக் குழந்தை என பெற்றோரிடம் சொல்லி இருக்கிறார்கள்.

இத்தனைக் குறைபாடுகளோடு பெற்றோரைக் கவலைக்கு உள்ளாகிய ஒரு குழந்தை, ஆசிரியர்களால் மக்கு என அழைக்கப்பட்ட ஒரு குழந்தை எப்படி இயற்பியல் துறையில் மிகப் புரட்சிகரமான கோட்பாடுகளை வெளியிட்டு, இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த அறிவியல் அறிஞராக பெயரெடுத்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஐன்ஸ்டைனின் சிறுவயது வாழ்க்கையை, அவரின் செயற்பாடுகளைப் பார்க்க வேண்டும்.

அவர் சிறு வயதில் பேசமுடியாமல் இருந்தது, கவனிப்புத் திறன் குறைவாய் இருந்தது எல்லாமே உண்மை. அவை படிப்படியாக சரியாகி வந்ததும் உண்மை. ஆனால், ஆசிரியர்கள் அவரை மக்கு என்றழைத்தது? அது மட்டும் உண்மையாக இல்லை. காரணம், அன்றைய கல்விமுறையின் மீது ஐன்ஸ்டைனுக்கு வெறுப்பு இருந்தது. அதுவும் ஆறு அல்லது ஏழு வயதிலேயே.

அந்தக் காலத்தில் பள்ளிகள் அனைத்துமே மதம் சார்ந்தவையாக இருந்தன. ஐன்ஸ்டைனின் குடும்பம் யூத மதத்தைச் சேர்ந்ததாய் இருந்தாலும், அவரது தந்தை ஹெர்மான், ஐன்ஸ்டைனை ஒரு கத்தோலிக்க (கிறித்துவத்தின் ஒரு பிரிவு) பள்ளியில் சேர்த்தார். சில காலம் கழித்து இன்னொரு யூத மத பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளிகள் மட்டும் மத நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல், பாடத்திட்டங்களும் மதம் சார்ந்தவையாக இருந்தன. எளிமையான அறிவியல் விசயங்கள் கூட மதம் சார்ந்த பார்வையுடனே போதிக்கப்பட்டன. ஐன்ஸ்டைனுக்கு சிறு வயதில் கடவுள் மீதான பக்தி இருந்தாலும், இப்படி அறிவியலை மதம் சார்ந்து போதிக்கப்படுவதில் விருப்பம் இல்லை.

அதேபோல, அன்று ஆசிரியர்கள் புத்தகத்தில் என்ன இருக்கிறதோ, அதை மனனம் செய்து அப்படியே ஒப்புவிக்க வேண்டுமென எதிர்பார்த்தார்கள். ஆனால், ஐன்ஸ்டைனோ தான் எவ்வாறு விளங்கிக் கொண்டாரே அப்படியே பதில் சொல்லவும், எழுதவும் செய்தார். எக்கச்சக்க சந்தேகங்களை ஆசிரியர்களை நோக்கிக் கேள்விகளாக வீசினார். சில ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்ததைச் சொன்னார்கள், சிலரோ ஒரு குட்டிப்பையன் கேள்வி கேட்பதா என பொருமினார்கள். இந்த சுதந்திரச் சிந்தனையும் கேள்வி கேட்கத் தூண்டிய தேடல் நிறைந்த மனமும் கொண்ட ஐன்ஸ்டைனைத் தான், அந்தக் கால கல்வி போதித்த ஆசிரியர்கள் மக்கு என்ற முத்திரையைக் குத்தி, பள்ளி படிப்பை முடிக்க ஓராண்டு இருந்த நிலையில் பள்ளியை விட்டு வெளியேறச் செய்தார்கள். அதன் பிறகு, அவர் எதிர்பார்த்த மாதிரியான கல்வியை வழங்கிய ஸ்விட்சர்லாந்து நாட்டு கல்வி நிலையம் ஒன்றில் படிப்பைத் தொடர்ந்தார்.

ஐன்ஸ்டைனுடைய இந்த சுதந்திர சிந்தனைக்கும், எதையும் ஆராய்ந்து கேள்வி கேட்கும் குனத்திற்குமான அடிப்படையெல்லாம் அவருடைய ஐந்து வயதிலிருந்தே துவங்குகிறது.

ஐந்து வயதில் உடல் நிலை சரியில்லாமல் படுத்திருந்த ஐன்ஸ்டைனுக்கு, அவரது தந்தை ஒரு காந்தத் திசைகாட்டியை (Magenetic Compass) வழங்கினார். அவர் முதன்முதலில் தொட்டுப் பார்த்த அறிவியல் சார்ந்த ஒரு பொருள் அதுவாகத்தான் இருக்கக்கூடும். அந்தத் திசைகாட்டியை எந்தப் பக்கம் திருப்பினாலும், அந்த முள் அதற்கேற்றவாறு திரும்பி எப்படி ஒரே திசையைக் காட்டுகிறது என்று யோசிக்கத் தொடங்கினார். கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி தன் மாயக்கரங்களைக் கொண்டு இந்த முள்ளை இயக்குவதாகக் கணித்தார். அந்த கண்ணுக்குத் தெரியாத சக்தியின் பெயர் காந்தவிசை என்று புரியாத வயது அது. இருந்தாலும், அவர் அதைப் பற்றி யோசிக்கத் தொடங்கியதில் இருந்து துவங்கியது அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மை.

பின்னாட்களில் பொருட்களுடைய இயக்கம், அவை ஏன் அப்படி இயங்குகின்றன, அதை இயக்குவது எது? இந்த மாதிரியான விசயங்களை அவர் யோசிக்க அடித்தளமாக இருந்தது அந்தக் காம்பஸ் தான். இந்தப் பொருட்களைப் பார்த்து யோசிக்கும் திறமை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பின்னாட்களில் பொருட்களை நேரடியாகத் தொட்டு ஆய்வு செய்யாமலேயே அந்தப் பொருட்களுக்கான கோட்பாடுகளை உருவாக்கிய ஒரு விஞ்ஞானியாக அவரை உருவாக்கியது. என் மேசை மேல் இருக்கும் தாளும், பென்சிலும் தான் என் ஆய்வுக்கருவிகள். என் மூளைதான் ஆய்வகம் என்று அவரை சொல்ல வைத்தது.

மிகப்பெரிய ஆளுமைகள் எல்லோருடைய இளம்பிராயத்தையும் பார்த்தால் அவர்களுடைய அறிவை விசாலமாக்கியவை எல்லாம் புத்தகங்களாக மட்டுமே இருக்கும். அதுவும் அறிவியல் சார்ந்த புத்தகங்களை விடவும், அவர்களுடைய குனாதிசயங்களை வடிவமைத்த புத்தகங்கள் பெரும்பாலும் கதைகளாகவும், தேவதைக் கதைகளாகவுமே (Fairy tales) இருந்திருக்கின்றன. அது போலவேதான் ஐன்ஸ்டைனுடைய வாழ்விலும் நடந்திருக்கிறது.

albert%20eisten300.jpgஐன்ஸ்டைனுடைய வீட்டில் ஒரு நூலகம் இருந்தது. அவருடைய தந்தை மற்றும் சித்தப்பாவுடையது. அவருடைய 12-ம் வயதில் வரைகணிதம் (Geometry) தொடர்பான ஒரு புத்தகம் கிடைக்கிறது. இந்தப் புத்தகம் அவருக்கு கணிதம் மீதான காதலை ஏற்படுத்துகிறது. மதத்தின் தொடர்புடைய அறிவியலை மட்டுமே பள்ளி போதித்துக்கொண்டிருந்த வேளையில், ஆற்றலும் பொருளும் (Energy and Matter) என்ற புத்தகத்தை அவருடைய வீட்டிலிருந்த நூலகத்தில் படித்தார். மதக் கருத்துகள் இல்லாத வகையில் எளிமையாக அறிவியலை இந்த புத்தகம் போதித்தது. பள்ளியில் கணிதத்திலும், இயற்பியலிலும் சிறப்பான மதிப்பெண்களையே பெற்றார்.

பள்ளியில் போதிக்கப்பட்ட கணிதம் அவருக்கு வெறுப்பானதாய் இருந்தாலும், வீட்டில் அவருடைய சித்தப்பா ஜேக்கப் ஐன்ஸ்டைனுக்கு கணிதத்தை அருமையாக போதித்தார். அல்ஜீப்ராவைப் பற்றி அவர் கதையாகவே ஐன்ஸ்டைனுக்கு படம் நடத்தினார். அதாவது இப்படி, 'அல்ஜீப்ரா என்பது ஒரு விளையாட்டு. பெயர் தெரியாத ஒரு சிறு விலங்கைத் தேடிக் காட்டுக்குப் போகிறோம். முதலில் அந்த விலங்குக்கு X எனப் பெயர் வைக்கிறோம். தேடிக் கண்டுபிடித்த பிறகு அதற்குப் பெயர் சூட்டுகிறோம்.'

இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் கூடவே இன்னொரு அருமையான துணையும் அவருக்குக் கிடைத்தது. யூத மத வழக்கப்படி ஒரு ஏழை மாணவருடன் ஐன்ஸ்டைனுடைய குடும்பம் வாரம்தோறும் தங்களுடைய உணவைப் பகிர்ந்து கொண்டார்கள். அந்த ஏழை மருத்துவ மாணவரின் பெயர் Max Talmud. ஐன்ஸ்டைனுடைய அறிவை விரிவாக்கியதில் இவருடைய பங்கு மிக முக்கியமானது. வாரந்தோறும் அவர் வரும்போதெல்லாம் ஐன்ஸ்டைனுக்காக ஒரு புத்தகத்தைக் கொண்டு வருவார். அவர்தான் ஐன்ஸ்டைனுக்கு கணிதம், இயற்பியல், தத்துவம் போன்ற துறைகளில் பெரும் ஆர்வத்தை வர வழைத்தவர். இவர் அறிமுகப்படுத்திய புத்தகங்களில் அறிவியல் புனைகதைகள் பல ஐன்ஸ்டைனை தீவிரமாக யோசிக்க வைத்தன.

பள்ளியில் இவர் கற்றுக்கொண்டதை விடவும் இவருடைய வீட்டின் நூலகத்திலிருந்த புத்தகங்களே ஐன்ஸ்டைனை பெரிய அறிவாளியாகச் செதுக்கியது என்றால் மிகையில்லை. இப்படி விசாலமான அறிவைக்கொன்டு அவர் பள்ளியில் ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்க, ஆசிரியர்களோ இவரை வெறுத்தார்கள். 'இவன் தொடர்ந்து பள்ளியில் படித்தால் பிற மானவர்களையும் கெடுத்துவிடுவான்' என்றே அஞ்சினார்கள். இவனைப் பள்ளியிலிருந்து எப்படி விலக்குவது என அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். இப்படி மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கல்விமுறையை வெறுத்த ஐன்ஸ்டைனும் இந்தப் பள்ளியிலிருந்து வெளியேறிவிட யோசித்துக்கொண்டிருந்தார். பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு இன்னும் ஓராண்டு இருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததைக் காரணம் காட்டி பள்ளியிலிருந்து வெளியேறினார்.

இவருடைய சிந்தனை முறைக்கு ஒத்து வரும் பள்ளியாக சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்த ஸ்விஸ் பெடரல் பாலிடெக்னிக்கில் சேர்ந்து படிக்க சென்றார். அங்கு நடந்த நுழைவுத் தேர்வில் கணிதத்தையும், இயற்பியலையும் தவிர வேறு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், இவருக்கு கணிதத்தில் இருந்த திறமையைக் கண்டு, அவர் முடிக்காமல் விட்ட பள்ளிப் படிப்பை ஸ்விட்சர்லாந்திலெயே இருந்த ஒரு பள்ளியில் முடிதுட்விட்டு வந்தால் இங்கு படிக்க அனுமதி தருவதாக, அந்தக் கல்லூரியின் முதல்வர் உறுதியளித்தார். அதேபோல பள்ளிப்படிப்பை முடித்தபிறகு அந்தக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அதன்பிறகு நடந்தவை எல்லாம் வரலாறு.

பதினாறு வயதிலேயே, தான் விரும்பிய வகையில் கல்வி கற்பதற்காக தன் நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்குச் சென்று படிக்கும் அளவிற்கு மனஉறுதி உடையவராகவும், அறிவின் மீதான தீராக்காதலுடையவராகவும் இருந்தார். கல்வியில் மட்டுமல்ல, சிறு வயதிலிருந்தே வயலின் வாசிப்பதிலும் திறமையானவராக விளங்கினார். வயலின் வாசிக்கும் பழக்கம் அவருடைய தாயிடமிருந்து அவருக்கு வந்திருந்தது. பெரும் விஞ்ஞானியாக ஆனபிறகும், வயலினை விடாமல் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார்.

vikatan

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

 
einstein_2774020f.jpg
 

உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர்

 

சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த புகழ்பெற்ற அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) பிறந்த தினம் இன்று (மார்ச் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# ஜெர்மனியில் யூதக் குடும்பத்தில் (1879) பிறந்தார். தந்தை ரசாயனத் தொழிற்சாலை உரிமை யாளர். படிப்பில் மிகவும் மந்தமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது. அப்பா தந்த காம்பஸ் கருவியை ஓயாமல் ஆராய்ந்துவந்தார். இளம் வயதில் வயலின் கற்றார்.

# உறவினர் ஒருவர் இவருக்கு கணிதம், அறிவியல் கற்பித்த தோடு, பல நூல்களை படிக்கச் சொன்னார். இதனால் கணிதம், அறிவியலில் இவருக்கு அளவில்லா ஆர்வம் பிறந்தது. சுவிட்சர்லாந்தின் சுவிஸ் ஃபெடரல் பாலிடெக்னிக்கில் பயின்றார். காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது.

# இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டனின் விதி களை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற ‘சார்பியல் கோட்பாடு’ பிறந்தது. அதுவரை ஏற்கப்பட்டுவந்த பிரபஞ்சம் குறித்த அடிப்படைக் கொள்கைகளை இவரது கோட்பாடு மாற்றியமைத்து அறிவியல் உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

# குவான்டம் இயந்திரவியல், புள்ளியியல் இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார்.

# பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

# இவரை யூத இயற்பியலாளர் என்று முத்திரை குத்திய ஹிட்லர் நிர்வாகம் இவரை கொலை செய்ய திட்டமிட்டது. இதனால், 1933-ல் அமெரிக்கா சென்றார். நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக இணைந்தார். வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருந்தவர், அமெரிக்க குடியுரிமையும் பெற்றார். ஒருங்கிணைந்த புலக்கோட்பாடு விதியை 1950-ல் வெளியிட்டார்.

# ‘அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்’ என்று உறுதியாகக் கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டு, ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்தியதை நினைத்து, தாங்கமுடியாத வேதனைக்கு ஆளானார்.

# எளிமையானவர். ரயிலில் 3-வது வகுப்பில்தான் செல்வார். நகைச்சுவை உணர்வு கொண்டவர். தன் ஆராய்ச்சி தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார். சில சமயங்களில் தன் வீட்டு முகவரியையேகூட மறந்துவிடுவாராம்!

# மகாத்மா காந்தி மீது மிகுந்த பக்தி, மரியாதை கொண்டவர். ‘‘நம் காலத்து மனிதர்களில் உலகிலேயே தலைசிறந்த மாமனிதர் காந்தி’’ என்று புகழ்ந்துள்ளார். தன் அறையில் காந்திஜியின் படத்தை மாட்டிவைத்திருந்தார். ‘குழந்தைகள் கற்க விரும்புவதையே அவர்கள் கற்க வேண்டும். மனிதநேயத்தை கற்றுத்தராத கல்வி கல்வியே அல்ல’ என்பார்.

# இவரது உடல்நிலை 1955 ஏப்ரலில் மோசமானது. ‘விடைபெறும் நேரம் வந்துவிட்டது, கண்ணியமாக விதியை எதிர்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறி அறுவை சிகிச்சை செய்துகொள்ள மறுத்துவிட்டார். மருத்துவமனையில் அடுத்த நாள் காலை அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 76.

  • தொடங்கியவர்
1877 : முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியது
 

வரலாற்றில் இன்று...

மார்ச் - 15

 

685varalaru.jpgகி.மு 44:- ரோமன் குடியரசின் மன்னன் ஜூலியஸ் சீசர், மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்டர்களால் குத்திக் கொல்லப்பட்டான். 

 

933 : பத்து வருடகால அமைதிக்குப் பின்னர் ஜேர்மனிய மன்னன் முதலாம் ஹென்றி ஹங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தார். 
1493: - கொலம்பஸ், அமெரிக்காவுக்கான தனது முதலாவது பயணத்தை   முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்பினார். 

 

1776 : தற்போதைய அமெரிக்க மாநிலமான தெற்கு கரோலினா பிரித்தானியாவிடம் இருந்து சுதந் திரம் பெறுவதாக அறிவித்தது. பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும். 

 

1802 : இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது. 

 

1848 : ஹங்கேரியில் புரட்சி வெடித்தது. சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஹாப்ஸ்பேர்க் ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண் டியதாயிற்று. 

 

1877 : முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் ஆரம்பமானது. 

 

1917 : ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் சார் மன்னன் முடி துறந்தார். 

 

1922 : எகிப்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முறையாக விடுதலையடைந்த பின்னர் முதலாம் ஃபுவாட் எகிப்தின் மன்னனானார். 

 

1943 : இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனியப் படைகள் யுக்ரைனின் ஹார்க்கொவ் நகரை சோவியத் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர். 

 

1961 : தென் ஆபிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து வெளியேறியது. 

 

1970 : எக்ஸ்போ '70 உலகக் கண்காட்சி ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமானது. 

 

1985 : முதலாவது இணைய டொமைன் பெயர்  (symbolics.com) பதியப்பட்டது. 

 

1988 : ஈராக்கியப் படைகள் குர்திஷ் நகரான ஹலப்ஜா மீது இரசாயன நச்சுக் குண்டுகளை வீச ஆரம்பித்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர். 

 

1990 : மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவானார். 

 

1991 : இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்மனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து ஜேர்மனி முழுமையான விடுதலையைப் பெற்றது. 

 

2007 : இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர்.

.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாக்கில் மனித முகம்

k.jpg

அம்­பாறை வரிப்­பத்­தான்­சேனை பிர­தேச கடை­யொன்­றி­லி­ருந்து மூதாட்டி ஒருவர் கொள்­வ­னவு செய்த பச்சைப் பாக்கு ஒன்­றினுள் மனித முகம் தென்­பட்ட அதி­சய நிகழ்­வொன்று இடம்­பெற்­றுள்­ளது.

இது­பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

இறக்­காமம் பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வுக்­குட்­பட்ட வரிப்­பத்­தான்­சேனை 1ஆம் பிரிவு ,அம்­பாறை பிர­தான வீதியில் வசித்­து­வரும் சீனித்­தம்பி பாத்­தும்மா எனும் 70 வயது மதிக்­கத்­தக்க வெற்­றி­லை­போடும் பழக்­க­மு­டைய மூதாட்டி ஒருவர் தனது வீட்­டுக்கு முன்­பா­க­வுள்ள சில்­ல­றைக்­கடை ஒன்றில் பச்சைப் பாக்­கு­களை வாங்கி அதி­லொன்றை வழமைபோல் வெற்­றிலை போடு­வ­தற்­காக பாக்­கு­வெட்­டியால் நறுக்­கி­ய­போதே குறித்த பாக்­கினுள் மனித முகம் தென்பட்டுள்ளது. இந்த அதி­சய காட்­சியை இப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள மக்கள் பலரும் வியப்புடன் குறித்த மூதாட்டியின் வீட்டுக்கு சென்று பார்வையிட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

.virakesari

  • தொடங்கியவர்

மார்ச் 15: ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட தினம் இன்று - சிறப்பு பகிர்வு

 

சீசரின் அப்பா மற்றும் இவர் இருவருக்கும் ஒரே பெயர் . இவர் பிறந்த காலத்தில் ரோமில் செல்வ juliascesar.jpgவளம் மிகுந்த மக்களுக்கான ஆதரவானவர்கள் செனட்டிலும் ஒரு புறம் ,எளிய மக்களுக்கு ஆதரவான பொதுச்சபையிலும் இருந்தனர் . சுல்லா முதல் கூட்டத்துக்கும், மரியஸ் என்பவர் இரண்டாவது கூட்டத்துக்கும் தலைவர். உள்நாட்டுப்போராக வெடித்த அந்த மோதலில் சுல்லா வென்றார் ; மரியசின் உறவினரான சீசரை நாடு கடத்தாமல் பிறரின் பரிந்துரை காப்பாற்றியது ..

சீசர் ராணுவத்தில் சேர்ந்து ஆசியா மைனரில் சில பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் எடுத்தார். பிற்காலத்தில் அங்கே போரிடுகிற பொழுது தான் ,”கண்டேன் ,வென்றேன் !” என்கிற வரிகளை உதிர்த்தார் . சுல்லாவின் மறைவுக்கு பின், நாடு திரும்பி வழக்குரைஞர் தொழில் செய்தார், பேச்சுக்கலையில் சிறந்துவிளங்க ரோட்ஸ் தீவில் கற்கப்போய் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டார்; பணம் கொடுத்து தப்பி வந்து அவர்களை சிலுவையில் அறைந்து கொன்றார் . நாடு திரும்பிய சீசர் அரசியலில் ஈடுபட்டார். பல்வேறு பதவிகளை வகித்தார். அய்பீரியாவின் ( (ஸ்பெயின், போர்ச்சுகல்).) ஆளுநர் ஆனார்.

ரோம் திரும்பிய சீசர் கான்சல் எனும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்-பட்டார், எண்ணற்ற நில சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் அதை மக்களின் பார்வைக்கு வைத்தார் . பதவிக்காலம் முடிந்ததும் பிரான்ஸ் பெல்ஜியம் பகுதிகளை உள்ளடக்கிய கால் பகுதிக்கு ஆளுநர் ஆகி அதை பல்வேறு போர்களுக்கு பின் முழுவதும் வென்றார். ராணுவத் தளபதியாகப் புகழ் பெற்றிருந்த பாம்பே, பெரும் செல்வந்தரான கிராசஸ், மற்றும் ஜுலியஸ் சீசர் ஆகியோர், தங்களிடையே உடன்படிக்கை செய்து கொண்டு மூவராட்சி ஏற்படுத்தி ரோம் சாம்ராஜ்யத்தை ஆண்டனர்.

போர்க்களம் ஒன்றில் சிராசஸ் கொல்லப்பட, நீயா நானா போட்டி சீசர் மற்றும் பாம்பே இடையே வந்தது .சீசரின் படைகள் கலைக்கப்பட வேண்டும் ,அது சர்வாதிகாரத்துக்கு வழி விடும் என்றார் பாம்பே ... போர் மூண்டது ;பலகால இழுபறிக்கு பின் பர்சாசலஸ் என்ற இடத்தில் நடந்த போரில், பாம்பேயைச் சீசர் தோற்கடித்தார். அங்கிருந்து எகிப்துக்கு பாம்பே சென்றார். ஆனால் அங்கு சீசரை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஆசை கொண்ட
எகிப்திய மன்னன் தாலமி அவரை கொன்றான்

அந்நாட்டு மன்னர் டாலமிக்கும் சீசருக்கும் நடந்த போரில் டாலமி இறந்தார். அவரின் மனைவி கிளியோபட்ராவை பார்த்து காதல் கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் மனிதர் .நாட்டின் இணையற்ற வெற்றி வீரனாக நின்ற அவர் சென்ற பக்கமெல்லாம் வென்று சாதித்தார் சர்வாதிகாரி ஆகிவிடுவார் மனிதர் என கருதிய செனட் அவரின் படைகளை விட்டுவிட்டு சாதாரண குடிமகனாக நாட்டுக்கு வர சொன்னது. செனட்டின் முடிவை மீறி நாட்டுக்கு படைகளோடு வந்து செனட் படைகளோடு மோதினார் நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வென்று ரோமின் வாழ்நாள் சர்வாதிகாரியானார் சீசர்.

juliascesar1.jpg

குடியாட்சி போனதே என அவர் மகன் போல பாவித்த ப்ரூட்டஸ் முதலியவர்கள் கொதித்தார்கள்; அவரை கொல்ல திட்டமிட்டார்கள் .செனட் அரங்கிற்கு வந்த பொழுது பலர் சேர்ந்து தாக்கி அவரை கொல்ல முயன்ற பொழுது அவர்களை எதிர்த்து கொண்டிருந்த சீசர் ப்ருட்டசும் கத்தியை உயர்த்துவதை பார்த்ததும் ,"நீயுமா குழந்தையே ?" என சிலர் சொன்னதாக ஒரு வரலாற்றாசிரியர் குறிக்கிறார் .ஆனால் தான் எதையும் கேட்கவில்லை என்றே அங்கே இருந்த பிளினி முதலியோர் குறித்து உள்ளனர் .

எனினும் ”யூ டூ ப்ரூட்டஸ் ?”என கேட்டுவிட்டு அவர் எதிரிகளின் தாக்குதலை தடுக்காமல் இறந்து போனார் என்பது மக்களின் மத்தியில் பரவிப்போனது .அதையே ஷேக்ஸ்பியரும் தன் நாடகத்தில் வடித்தார் .நல்ல எழுத்தாளரும் ஆன சீசரின் புகழ் பெற்ற வாசகம் “சாவுக்கு அஞ்சி வாழ்வதைவிட, போராடி வீரனாக சாவதேமேல் “.சர்வாதிகாரத்தை விதைக்க முயன்ற அவர் நாயகனாக கொண்டாடப்படுவது வரலாற்றின் வினோதம் தான்.

vikatan

  • தொடங்கியவர்

10452421_1070570549651377_21111656282536

நம்பி வாங்க ..சந்தோசமாக போங்க மல்லையா ..

  • தொடங்கியவர்

1534973_1002143676500993_587274610995024

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர், முன்னாள் உப தலைவர் மொஷின் கானின் பிறந்தநாள்.
இவர் திரைப்பட நடிகராகவும் கலக்கி இருந்தார்

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

மார்ச் 15: முதல் ரத்த வங்கி அமைக்கப்பட்ட நாள் இன்று..

பர்னாட் பாண்டஸ் என்கிற அமெரிக்க டாக்டர் 1937ல் அமெரிக்க மருத்துவ கல்லூரியோடு இணைந்திருந்த மருத்துவமனையில் ரத்த வங்கியை துவக்கினார். ரத்த வங்கி என்ற வார்த்தையை முதன்முதலில் அவர் தான் உருவாக்கினார்.

  • தொடங்கியவர்

பெருஞ்சிக்கலில் எதிர்நீச்சல் போட்டு வளர்ந்த வால்மார்ட் வால்டனின் வெற்றி கதை!

 

இன்றைக்கு உலகின் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் தமிழ் படத்துல வர்ற மாதிரி ஒரே பாட்டுல பணக்காரர்கள் ஆனவர்கள் இல்லை. ஒவ்வொரு வெற்றியாளனுக்குப் பின்னாலும் மிகப் பெரிய கதை இருக்கிறது.

இன்றைக்கு சில்லறை வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் வால் மார்ட் நிறுவனத்தை உருவாக்கிய சாமுவேல் வால்டனின் கதையும் அவற்றில் ஒன்று.

sam-walton.jpg

அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் உள்ள எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்த (great depression) காலத்தில் எதிர்நீச்சல் போட்டு வளர்ந்தவர். குடும்பத்தின் வறுமையைப் போக்க செய்தித் தாள் போட ஆரம்பித்தார்.

சின்ன சின்ன வேலைகளை செய்தவர், தனது 26 வது வயதில் ஒரு பல்பொருள் கடையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு வெறுமனே வேலையை மட்டும் செய்யாமல் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். விரைவில் சொந்தமாக ஒரு கடையை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் கொழுந்து விட ஆரம்பித்தது.

கடன் வாங்கித் தனது முதல் கடையை ஆரம்பித்தார். கடையைப் பெரிய அளவில் விரிவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விரைவிலேயே இரண்டாவது கடையை திறந்தார். இப்படி வரிசையாக கடைகளைத் திறந்ததோடு இல்லாமல் சில்லறை வர்த்தகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனையுடன் ஜூலை 2, 1962 ஆம் ஆண்டு தனது முதல் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டை தொடங்கினார்.

Wal-Mart_Small-town_Roots.jpg

வாடிக்கையாளர் தான் நமக்கு முதலாளி, அவர்களின் தேவை என்னவோ அதை நிறைவேற்றுவது தான் முதல் கடமை, எந்த நேரத்திலும் எங்கேயும் குறைந்த விலை என்ற சாம் வால்டனின் இந்த உத்திகள் தான் வால் மார்ட் நிறுவனத்துக்கு அசைக்க முடியாத அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

தான் செய்கின்ற வேலையை நேசிப்பது. அப்படி நேசிப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் அந்த வேலையை சிறப்பாக செய்வதற்காக முயற்சிப்பது. இப்படி நாம் இருந்தால்தான் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அதே போல் ஒரு உந்துதல் ஏற்பட்டு அவர்களும் வேலையை நேசிக்க ஆரம்பிப்பார்கள். இப்படி குழுவாக நேசத்துடன் வேலையை செய்யும் போது வெற்றி சுலபமாகிவிடுகிறது என்பது அவரது வெற்றிக்கான கொள்கை.

ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்குகளில் தனது தொழிலை வளர்த்துக்கொண்ட வால்மார்ட் விரைவில் உலகின் முக்கியமான இடங்களில் எல்லாம் தனது கடையை நிறுவியது.  2000-லேயே அமெரிக்க வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வழியாக ஷாப்பிங் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது.

இன்றைக்கு வால்மார்ட் 27 நாடுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை கொண்டு, 20 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுடன் உலகின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது இந்தியாவில் சிறுகடைகளை, வியாபாரிகளை நசுக்கியது என்பது வேறு கதை.

ஆனால் இத்தகைய பிரம்மாண்ட நிறுவனத்தை உருவாக்கிய சாமுவேல் வால்டன் ஆரம்பத்தில் செய்தித்தாள் போட்டவர் என்பதை மறைந்துவிடக்கூடாது.
வால்டனின் வெற்றிக்கான பொன் மொழிகளுக்கு இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்:

 http://www.vikatan.com/personalfinance/article.php?aid=12230

vikatan

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 
 

 

குட்டி `தல'யின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்தான் கடந்த வார ஆன்லைன் வைரல். வேட்டி-சட்டையில் ஆத்விக் வலம்வர, மைக் பிடித்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியது, அக்கா அனோஷ்கா. தம்பிக்காக ஸ்பெஷல் கவிதை ஒன்றையும் அனோஷ்கா எழுதி வாசிக்க, `தல' செம ஹேப்பி!

p22a.jpg

ஹாலிவுட்டில், சீரியலில் இருந்து சினிமா நடிகையாக புரமோஷன் பெற்றிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. 90-களில் ஹிட் அடித்த `பே வாட்ச்’ சீரியல், இப்போது சினிமா ஆகிறது. இதில் ரெஸ்லிங் புகழ் ‘தி ராக்’ ஜான்சனுடன் இணைந்து நடிக்கிறார் பிரியங்கா. படம் 2017-ல் ரிலீஸ்!

p22b.jpg

`ரூம்' படத்துக்காக ஆஸ்கர் வென்றிருக்கும் பிரீ லார்சனின் அடுத்த படம் `பாஸ்மதி புளூஸ்'.சயின்ட்டிஸ்ட்டான  பிரீ, அப்பாவுடன் சேர்ந்து மரபணு மாற்று அரிசியைக் கண்டுபிடிக்கிறார். அந்த அரிசியை இந்தியாவில் உள்ள விவசாயிகளிடம் விற்கச் சொல்லி அனுப்புகிறது பிரீ பணிபுரியும் நிறுவனம். அவர் இந்தியாவில் சந்திக்கும் பிரச்னை களையும், இந்திய விவசாயிகளின் உண்மை நிலையையும் சொல்கிறது படம்!

p22c.jpg

ஸ்ரீதேவி, அடுத்த சுற்றுக்கு ரெடி. அம்மணியின் அடுத்த புராஜெக்ட், ‘Mom’. சித்திக்கும் வளர்ப்பு மகளுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்தான் கதை. ஸ்ரீதேவியின் வளர்ப்பு மகளாக நடிக்கிறார் அக்‌ஷராஹாசன்.

லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு ஆஸ்கர் கிடைத்த பரபரப்பை மிஞ்சியிருக்கிறது, கேரளா மாநில திரைப்பட விருதுகள். சிறந்த நடிகருக்கான விருதை துல்கரும், சிறந்த நடிகைக்கான விருதை பார்வதியும் வென்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் ‘பிரேமம்’ படத்துக்கு ஒரு விருதுகூடக் கிடைக்க வில்லை. ‘இந்த விருதுகளுக்குப் பின்னால் பெரிய அரசியல் இருக்கிறது’ என `பிரேமம்’ ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொந்தளிக்க, ‘விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்’ என ஸ்மைலியுடன் ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன்!

p22e.jpg

p22f.jpg

p22d.jpg

 

கோலிவுட் ஃபார்முலா பாலிவுட்டுக்கும் பரவியிருக்கிறது. பெரிய செலவில் தயாரிக்கப்பட்டு, பல ஆயிரம் கோடிகளுக்கு விற்கப்பட்ட `தில்வாலே' பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் அவுட். நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு 50 சதவிகிதம் பணத்தைத் திருப்பிக்கொடுத்திருக்கிறார் ஷாரூக் கான். அதேபோல `தமாஷா' பட நஷ்டத்துக்கும் தங்கள் பங்காக தீபிகா-ரன்பீர் இருவரும் இணைந்து தயாரிப்பாளருக்கு 15 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்களாம்!

vikatan

  • தொடங்கியவர்
மெக்ஸிகோவின் கவர்ச்சி பொலிஸ் குழு கலைக்கப்பட்டது
 

மெக்ஸிகோ பொலிஸ் திணைக்களத்தினால் ஸ்தாபிக்கப்பட்டிருந்த பெண்களை மாத்திரம் கொண்ட “கவர்ச்சி” பொலிஸ் குழு கலைக்கப்பட்டுள்ளது.  

 

15537PAY-Police-Director-has-dissolved-a

 

இப் பொலிஸ் குழுவிலுள்ள உத்தியோகத்தர்கள் உடலுடன் ஒட்டியவாறான இறுக்கமான சீருடைகளை அணிவதற்குப் பெயர் பெற்றிருந்தனர்.

 

சீருடையுடன் 4.7 அங்குல உயரமான குதி உயர்ந்த பாதணிகளையே இவர்கள் அணிந்தமை குறிப்பிடத்தக்கது. 20 பெண்கள் இக் குழுவில் அங்கம் வகித்தனர். 


15537police.jpg

 

மெக்ஸிகோ பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ரொனால்டோ இயூஜினோ ஹைல்டுகோவினால் இக் குழு ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.


பொலிஸ் திணைக்களத்தின் சமூக நடவடிக்கைகளில் இக் குழுவினரை ஈடுபடுத்துவது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என அவர் கருதினார்.


15537Mexican-president-Enrique-Pena-Niet

 

மெக்ஸிகோவின் ஜனாதிபதி எரிக் பேனா நியெட்டோ 2013 ஆம் ஆண்டு இப் பொலிஸ் குழுவினர் சகிதம் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்ததால் இக் குழுவினர் பிரபலமடைந்தனர். 


இப் பொலிஸ் குழுவை சிலர் வரவேற்ற போதிலும், வேறு சிலர் இக்குழு தொடர்பாக அதிருப்தி தெரிவித்தனர். இந் நிலையில், மெக்ஸிகோ பொலிஸ் திணைக்களத்தின் புதிய பணிப்பாளரினால் இக்குழு கலைக்கப்பட்டுள்ளது.

 

இக் குழுவினால் பொலிஸ் திணைக்களத்தின் மதிப்புக்கு பங்கம் ஏற்படுவதாக இத் தீர்மானத்துக்  காரணம் கூறப்பட்டுள்ளது. இக் குழுவில் இடம்பெற்றிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது மெக்ஸிகோ பொலிஸ் திணைக்களத்தின் ஏனைய பிரிவுகளில் வழக்கமான பொலிஸ் சீருடையுடன் பணியாற்றுகின்றனர்.

www.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விளம்பரத்தில் கலக்கும் சானியா- மாலிக் ஜோடி

 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நடித்த விளம்பரம் ஒன்று பாகிஸ்தானை கலக்கி வருகிறது. கணவன், மனைவியான மாலிக்- சானியா இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பலவற்றை ஒப்பிட்டு பேசுவது போன்று இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது

 

  • தொடங்கியவர்

12132529_1002142653167762_51688758979360

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கொலின் க்ரொஃப்ட்டின் பிறந்தநாள்.
Happy Birthday @colin croft

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

மார்ச் 15: உலக நுகர்வோர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது

நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ம் தேதி, உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது; அதன் மீது நடவடிக்கை எடுத்தல்; சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய

நோக்கங்கள் ஆகும்.

  • தொடங்கியவர்

இந்தியாவின் முதல் குட்டி விமான அறிவிப்பாளர்!

 

ந்தியா சற்று நிதானமாக முன்னேறி வந்தாலும்,  இந்தியர்களின் பெயரும் திறமைகளும் ஜெட் வேகத்தில் முன்னேறி வருகிறது.

பல இந்திய பிரபலங்களின் வரிசையில் தற்சமயம் மும்பையைச் சேர்ந்த 8 வயது மாணவன் யாஷஸ் தஸ்ஸானி சேர்ந்துள்ளான். முதன்முறையாக உலகம் முழுக்க லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸால் நடத்தப்பட்ட "Your Announcement Contest"ல்,  9 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 குழந்தைகளில் யாஷஸ் முதலிடம் பெற்றுள்ளான். இதற்கு இவனுக்குக் கிடைத்தது அரிதிலும் அரிதான வாய்ப்பு. ஆம், விமானத்தினுள் நேரடி அறிவிப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கேபின் குழுவினருடன் இணைந்து,  ஃப்ராங்ஃபர்ட் செல்லும் விமானத்தில் அனைத்து பயணிகள் முன்னிலையிலும் அறிவிப்பு செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளான் நம் யாஷஸ். இதோடு மட்டுமல்லாமல், ஐரோப்பாவில் தனக்கு விருப்பமுள்ள இடத்திற்கு இரண்டு பேரோடு செல்ல இலவசமாக விமான பயணச்சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.

luf1.jpg

இதைக் குறித்து தெற்கு ஆசியாவின் இயக்குனர் வொல்ஃப்காங்க் வில் கூறுகையில், " குழந்தைகளுக்கு பறப்பது என்றாலே குஷிதான். அதுவும், விமானத்தின் உள்ளேயே நேரடி அறிவிப்பு செய்வது என்றால் கேட்கவே வேண்டாம். யாஷஸ் தன் கனவை நிறைவேற்றிக் கொண்டதற்கும், அவனுடைய திறமைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். எங்கள் வாடிக்கையாளர்களில் குழந்தைகள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த போட்டியில் இந்தியர்கள் அதிகளவில் கலந்து கொண்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் எங்கள் உறவைப் பலப்படுத்துவதாகவும் உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

luf2.jpg


லுஃப்தான்ஸாவைச் சேர்ந்த சிறந்த ஜூரி நபர்கள் இணைந்து,  15 பேர் கொண்ட பட்டியலை உருவாக்கி,  அதிலிருந்து ஆன்லைன் ஓட்டுப்பதிவின்மூலம் வெற்றியாளரை தேர்ந்து எடுத்து உள்ளனர். யாஷஸ் லுஃப்தான்ஸா விமான எண் 007ல் மனம் நிறைந்த வணக்கம் கூறுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

இவ்வளவு தனித்திறமை உள்ள யாஷஸ்,  மும்பையிலுள்ள ஜி.டி.மெமோரியல் பள்ளியில் படித்து வருகிறான்.

யாஷஸ் வெற்றி பெற்றதை அறிவிக்க,  லுஃப்தான்ஸாவில் இருந்து  ஒரு குழு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சிகளையும், இறுதியாக யாஷஸின் நேரடி அறிவிப்பையும் கீழே வீடியோவில் பார்க்கலாம்.


vikatan

  • தொடங்கியவர்

10603605_1123912997627940_31814278217458

பூரிப்பு

  • தொடங்கியவர்
மீண்டும் ஸ்டைலிஷ் தமிழச்சி
 

article_1458021650-2.jpg

ஆரம்பம் திரைப்படத்தில் ஆர்யாவுடன் ஸ்டைலிஷ் தமிழச்சி என்று ஆடிப்பாடி இரசிகர்களின் மனதைக் கவர்ந்து, ஆரம்பம் திரைப்படத்துக்குப் பின் காணாமல் போன அக்ஷரா, தற்போது ஜெயம் ரவியின் போகன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகின்றார்.

கன்னடத்தைச் சேரந்த அக்ஷரா, சினேகன் ஹீரோவாக நடித்த உயர்திரு 420 திரைப்படத்தில் அறிமுகமானதுடன் தொடர்ந்து துப்பாக்கி, ஆரம்பம் மற்றும் இரும்புக்குதிரை போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இருந்த கொஞ்ச நாட்களாக காணாமல் போயிருந்த அக்ஷரா, தற்போது ஜெயம் ரவியின் போகன் திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடிக்கின்றார்.

'முதன்முறையாக பொலிஸ் வேடத்தில் நடிக்கிறேன். எனக்கு சண்டைக் காட்சிகளும் உள்ளன. அதுகுறித்து நினைத்தாலே சிலிர்ப்பாக இருக்கிறது. ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜுலி போல எக்ஷன் காட்சிகளில் அசத்தும் வாய்ப்பு போகன் மூலம் எனக்குக் கிடைத்துள்ளது' என்கிறார் அக்ஷரா.

article_1458021668-4.jpg

.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
1978 : இத்தாலியின் முன்னாள் பிரதமர் கடத்தப்பட்டார்
 

வரலாற்றில் இன்று

மார்ச் - 16

 

686varalaru-16-03.jpgகி.மு597: ஜெரு­ச­லேமை பாபி­லோ­னி­யர்கள்  கைப்­பற்­றினர்.

 

1190 : சிலுவைப் படை­யினர் இங்­கி­லாந்தின் யோர்க் நகரின் யூதர்­களைப் படு­கொலை செய்ய ஆரம்­பித்­தனர். பல யூதர்கள் தற்­கொலை செய்து கொண்­டனர்.

 

1792 : சுவீடன் மன்னன் மூன்றாம் குஸ்டாவ் சுடப்­பட்டார். இவர் மார்ச் 29 இல் இறந்தார்.

 

1926 : முத­லா­வது, திர­வ-­ எ­ரி­ பொ­ரு­ளினால் உந்தும் ஏவு­க­ணையை மசா­சுசெட்ஸ் மாநிலத்தில் ரொபர்ட் கொடார்ட் என்­பவர் செலுத்­தினார்.

 

1939 : பிரேக் நகர அரண்­ம­னையில் இருந்து ஹிட்லர் பெஹே­மியா, மொரா­வி­யாவை (தற்­போயை செக் குடி­ய­ரசு பிராந்­தியம்) ஜேர்­ம­னியின் ஒரு பகு­தி­யாக அறி­வித்தார்.

 

1942 : முத­லா­வது வி-2 ஏவு­கணை ஏவப்­பட்­ட­போது அது வெடித்துச் சித­றி­யது.

 

1945 : இரண்டாம் உலகப் போரில் பிரித்­தா­னி­யாவின் 20 நிமிடக் குண்­டு­வீச்சில் ஜேர்­ம­னியின் வூர்ஸ்பேர்க் நகரின் 90  சத­வீ­த­மான பகுதி அழிந்­தது. சுமார் 5,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1962 :  பசிபிக் சமுத்­தி­ரத்தில்  அமெ­ரிக்க விமானம் 107 பய­ணி­க­ளுடன் காணாமல் போனது.

 

1963 : இந்­தோ­னே­ஷி­யாவின் பாலி தீவில் ஆகூங்க் எரி­மலை வெடித்­ததால் 11,000 பேர் வரை இறந்­தனர்.

 

1968 : வியட்நாம் போர்: மை லாய் என்ற இடத்தில் பெண்கள், குழந்­தைகள் உட்­பட 350 முதல் 500 வரை­யி­லான வியட்­நா­மி­யர்கள் அமெ­ரிக்கப் படை­யி­னரால் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

 

1969 : வெனி­சூ­லாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 155 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1978 : இத்­தா­லியில் 1963 முதல் 1968 வரை பிர­த­ம­ராக பதவி வகித்த அல்டோ மோரோ, இத்­தா­லிய செம்­ப­டை­யி­னரால் கடத்திச் செல்­லப்­பட்­டனர். பின்னர் அவர் கொல்­லப்­பட்டார். 

 

1988 : ஈராக்கில் குர்­திஷ் நக­ரான ஹலப்­ஜாவில் நச்சு வாயுத் தாக்­கு­தலில் சுமார் 5000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1989 : எகிப்தில் பிரமிட் ஒன்­றுக்கு அருகில் 4400 வரு­டங்கள் பழை­மை­யான மம்மி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. 

 

2005 : ஜெரிக்கோ பிராந்­தி­யத்தை பலஸ்­தீ­னத்­துக்கு இஸ்ரேல் அதி­கா­ரபூர்வமாக கைய­ளித்­தது.

 

2006 : மனித உரி­மை­க­ளுக்­கான ஐ.நா. அமைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு ஐ.நா.வின் பொதுச்­சபை ஆத­ர­வாக வாக்­க­ளித்­தது.

 

2014 : யுக்ரைனின் கிரைமியா பிராந்தியத்தில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில், யுக்ரைனிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர்.

/www.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12829199_1002906333091394_67451548592846

1996இல் இலங்கை கிரிக்கெட் அணி உலகக்கிண்ணம் வென்ற நேரம் இலங்கை அணிக்கு பயிற்றுவித்த டேவ் வட்மோரின் பிறந்தநாள்.

இப்போது சிம்பாப்வே அணியின் பயிற்றுவிப்பாளராக விளங்கும் வட்மோர் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரராவார்.
Happy Birthday Dav Whatmore

  • தொடங்கியவர்

ஆசியாவின் மிகப்பெரிய துலீப் மலர் தோட்டம் காஷ்மீரில் உள்ள தால் ஏரிக்கரையில் அமைந்திருக்கிறது. காஷ்மீரின் பிரசித்திப்பெற்ற சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்று. தற்போது இந்த தோட்டம் பார்வையாளர்களுக்காக திறதுவிடப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களில் லட்ச்சக்கணக்கான மலர்கள் பூத்துக்குலுங்கும் அழகைக்கான பார்வையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

10362933_691375050965040_447762606841143

tulip-13

kashmir-tulip-garden

FS_014045113A10061151-NSEW1

did-you-know-largest-tulip-garden-of-asia-is-in-india-asterfire.img

article-0-194669C4000005DC-647_964x647

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

500 ஆண்டுகள் பழமையான கப்பலின் சிதைவுகள் மீட்பு ; வாஸ்கொடகாமாவின் கப்பலாக இருக்கலாம் ! ( காணொளி இணைப்பு )

ஓமன் கடற்பகுதியிலிருந்து ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட கப்பலின் சிதைந்த பகுதி போர்த்துகீச மாலுமி வாஸ்கொடகாமாவின் பாதுகாப்பு கப்பலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

d18c3ae5dbc7b18125bda54a6591cb85.jpg

500 ஆண்டுகளுக்கு முன்னர் வாஸ்கொடகாமா இந்தியா செல்லும் வழியில் நொறுங்கிய எஸ்மரால்டா  கப்பலின் சிதைந்த பாகங்கள் என நம்பப்படுகிறது.

 

ஐரோப்பிய ஆய்வாளர்கள் குழு ஒன்று இதுகுறித்து நடத்திய ஆய்விலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 ஓமன் நாட்டின் தோபர் பகுதியில் 1503 ஆம் ஆண்டு அந்த கப்பல் மூழ்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

இந்த ஆய்வு தொடங்கும் முன்னர் வரலாற்று பதிவுகளும் இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பியவர்களின் கருத்துகளையும் ஆராய்ந்த பின்னரே முடிவுக்கு வந்ததாக அந்த ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

கப்பல் மூழ்கியதாக ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து ஒட்டுமொத்தமாக 2800 பொருட்களை ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர்.

 

இதில் எஸ்மரால்டா கப்பலில் பயன்படுத்திய மணி ஒன்றையும் மீட்டுள்ளனர். இந்த மணி 1498 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

 

புதிதாக மீட்கப்பட்டுள்ள இந்த தொல்பொருள்களின் உதவியுடன் வாஸ்கொடகாமா குறித்து மேலும் பல தகவல்களை உலகிற்கு வழங்கலாம் என ஆய்வாளர்கள் கருகின்றனர்

 

4f23d57d1aa846986e20fa348d58f4a2.jpg

ஓமன் அரசு இதற்கு முன்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு கப்பல் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் பகுதியில் முதன்முறையாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டது.

 

தொடர்ந்து 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டும் அங்கிருந்து மீட்கப்பட்ட தொல்பொருட்களை பத்திரப்படுத்தியும் வருகிறது.

34323b566995e86ace3024e5c162591b.jpg

இந்தியா நோக்கி வாஸ்கொடகாமாவின் இரண்டாவது வருகையின் போது அவருடன் பயணமான இரண்டு கப்பல்களில் ஒன்று ஓமான் பகுதியில் மூழ்கிய எஸ்மரால்டா என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

விளையாட வயது ஒரு தடையா?... நம் கண்களைக் குளமாக்கும் டிவி விளம்பரம்!

 

சமீபத்தில் பாராஷுட்டின் சமூக சிந்தனை வாய்ந்த ஒரு விளம்பரத்தைக் காண நேரந்தது. உண்மையில் இளைஞர்களை சிந்திக்கத் தூண்டும் விளம்பரம். விளம்பரத்தின் துவக்கத்தில் சாந்திவான் என்னும் ஒரு முதியோர் இல்லம்.

அதில் ஹோலி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதைப் பார்த்த ஒரு பெரியவர் உடனே உடைகளை மாற்றி விட்டு சிறுபிள்ளை போல் கலர் பொடி பாக்கெட்டுகளையும் மறைத்து வைத்துக் கொண்டு செல்கிறார். அங்கே சென்றால் தன் வயதொத்த நண்பர்கள் அமைதியாக நாற்காலியில் அமர இவரும் அமைதியாகி விடுகிறார்.

 addparachute.jpg

 

இன்னும் சில இளைஞர்கள் கலர் பொடி பாக்கெட்டுகளுடன் வருவதைப் பார்த்து விட்டு இவரும் கலர் பொடிகளை பாக்கெட்டில் இருந்து எடுத்தால் அவர்களோ நெற்றியில் பொட்டு  மட்டும் சிறிய அளவில் பூசி விட்டுச் செல்கிறார்கள். பெரியவர் முகம் வாடி கலங்கி நிற்கிறார்.

சிறிது நேரத்தில் அங்கே இருக்கும் ஒரு பெண்மணி இவர் மீது கலர் பொடிகளைப் பூசி விட்டுச் சிரிக்க ஆட்டம் ஆரம்பமாகிறது. உண்மையில் விளையாடவும், மகிழ்ச்சியைப் பரிமாறவும் வயது ஒரு தடை இல்லை என்பதை அழகாக சித்தரிக்கிறது அந்த வீடியோ. பெரியவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது அவர்களிடம் சந்தோசமாக பேசி விளையாட வேண்டும் என்பதையும் அருமையாகச் சுட்டுகிறது. நல்ல படங்கள், டிவி நிகழ்ச்சிகள் மட்டுமல்ல நல்ல விளம்பரங்களைக் கூட மக்கள் ஆதரிப்பார்கள் என்பதற்கு உதாரணமாக இந்த வீடியோ தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைகளில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவைக் காண: 

#KhulKeKheloHoli

vikatan

 

  • தொடங்கியவர்
உடற்பயிற்சி மூலம் இலட்சக்கணக்கானோரை கவர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்
 

சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளரான யுவதியொருவர் உடற்பயிற்சி நிபுணராக பிரபல்யமடைந்துள்ளார். 


155601.jpg

 

23 வயதான ஸியூ டோங்ஸியாங் எனும் இந்த யுவதி சீனாவின் டேலியன் நகரிலுள்ள டேலியன் கலை மற்றும் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார் அதேவேளை உடற்பயிற்சி ஆலோசகராவும் விளங்குகிறார்.

 

155603.jpg

 

இந்நிலையில், தான் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களையும் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் புகைப்படங்களையும் கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளங்களில் டோங்ஸியாங் வெளியிட, அப் படங்கள் வேகமாக பரவ ஆரம்பித்தன.

 

அதையடுத்து ஸியூ டோங்ஸியாங்கின் அபிமானிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

 

155602.jpg

 

அழகும் அறிவும் கொண்ட ஸியூடொக்ஸியாங் லட்சக்கணக்கானோரை கவர்ந்துள்ளார். இப்போது சமூக வலைத்தளப் பிரபலங்களில் ஒருவராகிவிட்டார் ஸியூ டோங்ஸியாங்.

 

டுவிட்டரைப் போன்ற சீன சமூக வலைத்தளமான வெய்போவில் சுமார் 3 இலட்சம் பேர் ஸியூ டோங்ஸியாங்கை பின் தொடர்கின்றனர். தற்போது தனது உடற்பயிற்சித் திட்டங்களையும் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.


155604.jpg

 

சீன ஊடகங்கள் ஸியூ டோங்ஸியாங்கை தேவதை ஆசிரியை என வர்ணிக்கின்றன. பகுதி நேரமாக மொடலிங்கிலும் ஸியூ டோங்ஸியாங் ஈடுபடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஸியூ டோங்ஸியாங் டேலியன் பல்கலைக்கழக விரிவுரையாளர் குழாமின் உத்தியோகபூர்வ அங்கத்தவர்களில் ஒருவர் அல்லர் என சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்தனர்.

 

155605.jpg

 

ஆனால், அவர் கலைப்பாடங்களை கற்பிக்கிறார் என பல்கலைக்கழக மாணவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சீன தொலைக்காட்சி நாடகங்கள், கேம் ஷோ போன்றவற்றிலும் ஸியூ டோங்ஸியாங் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

www.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

p99_1.jpg

பேசாத பேச்சு!

``வந்திருப்பவர்களிடம் முதலில் பேசு... வராதவர்களிடம் அப்புறம் பேசலாம்’’ - மணப்பெண்ணின் செல்போனை வாங்கிவைத்தார் தாத்தா!

- கி.ரவிக்குமார்


ஞானம்

p99_2.jpg


கணவன் வாங்கிவந்த காய்கறிகளைப் பார்த்த  மனைவி, “பரவாயில்லையே... நீங்களும் காய்கறி வாங்கக் கத்துக்கிட்டீங்களே! எல்லா காய்கறியிலயும் பூச்சி அரிச்சிருக்கு. கெமிக்கல் பூச்சிக்கொல்லி  தெளிக்காத நல்ல காய்கறிதான்” – மனம்விட்டுப் பாராட்டினாள்!


- கீர்த்தி


நடிப்பு

p99_3.jpg

`ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியயயட்...’ - செல்போன் வீடியோவில் கத்திக்கொண்டிருந்த மகளைப் பார்த்து விக்கித்து நின்றவரின் பக்கத்தில் வந்தவள் ``டப்ஸ்மாஷ் சூப்பரா பண்ணியிருக்கேன் இல்லப்பா!” என்றாள்!

- எஸ்.ரமணி


சின்ன மீன்...

பெரிய மீன்!

p99_4.jpg

வீடு கட்ட வாசலில் கொட்டிவைத்திருந்த ஜல்லி, மணல் குவியலைப் பார்த்து சத்தம்போட்ட  கவுன்சிலருக்கு 5,000 ரூபாய் தந்து தள்ளிக்கொண்டு போனான்...

 1,000 ரூபாய் வாங்கிக்கொண்டு அவனை கவுன்சிலராக்கிய அப்பாவி !

- ஸ்ரீ ரங்கம்  ஏ.எஸ்.முரளி


சுதந்திரம்?!

p99_5.jpg


சுதந்திர தின விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர் சிறைக்குள் இருந்த கைதிகள்!


- சொக்கம்பட்டி தேவதாசன்


அனுபவம்... அறிவு!

p99_6.jpg

“நல்லா படிக்கிறவங்ககூடச் சேர்ந்தாதான் படிப்பு வரும். இவங்ககூட ஏன்டா சேர்ற?”  “அப்பதாம்ப்பா,
அவங்க நல்லா படிப்பாங்க!”

- கி.ரவிக்குமார்


ஒன்று எங்கள்  சாதியே...

p99_9.jpg


சாதிக் கலவரத்தால் ஊரே அடித்துக்கொண்டு ரத்த‌க்களமான பிறகு, ஒற்றுமையாக விலங்கு மாட்டிக்கொண்டு ஒரே வண்டியில் ஏறினர் கலவரத்துக்குக் காரணமானவர்கள்!

- கா.ரமேஷ்


ஆடுகளம்

p99_8.jpg

10 வயதில் கோல்ஃப், கிரிக்கெட், டென்னிஸ் என எல்லாமே விளையாடுகிறான் பையன்...
வீடியோ கேம்ஸில்!

- பெ.பாண்டியன்


சந்தேகம்

p99_7.jpg

``உன் ஆபீஸுக்கு போன் பண்ணினேன். நீ வரலைனு சொன்னாங்க. எங்கே போயிருந்த?” -

சந்தேகமாகக் கேட்டவனிடம், காட்டமாகச் சொன்னாள்...

“உங்க ஆபீஸுக்கு!”

- கி.ரவிக்குமார்


பாடம்!

p99_10.jpg

நூறு முறை படித்தபோதும் புரியாத கூட்டு வட்டியும், தொடர் வட்டியும் புரியத் தொடங்கியது...
வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும்போது!

vikatan

  • தொடங்கியவர்

அவதானம்..! உங்கள் அந்தரங்கள் வெளிச்சத்துக்கு வரும் அபாயம் 

 

பெண்கள் மற்றும் தம்பதிகள் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கமரா மூலம் உங்கள் அந்தரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதை தடுக்க புதியமுறை உங்களுக்காக ......!!

self-recording-hidden_camera.JPG
முதலில் அறைக்கு வெளிச்சம் வராமல் அறைக்கதவு,ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் கையடக்க தொலைபேசியில்  உள்ள கமராவை ஆன் செய்யுங்கள், மேலும் கையடக்க தொலைபேசியில்   புகைப்படம் எடுக்கும்போது வரும் flash வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள்.


இப்போது புகைப்படத்தை கவனியுங்கள். ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.. இதைவைத்து அறையினுள் இரகசிய கேமரா பொருந்தியுள்ளதை அறியலாம்.

virakesari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.