Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

முதலை வாயுடன் அபூர்வ வகை குளத்து மீன் (படங்கள்)

 

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடக்கு கோணம் என்னும் ஊரில் உள்ள குளத்தில் சில நபர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வலையில் பிடிப்பட்ட அபூர்வ மீன் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 

fish%20kumari.jpg

மீனின் தலை பகுதி முதலை வாய் போலவும், உடல் பகுதி மீன் போலவும் அமைந்திருந்தது. இம்மீனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

பாம்பு வகை மீன்கள் உள்ள நிலையில் முதலை வகை மீன்கள் உருவாகியிருப்பது மக்களை  வியப்பில் ஆழ்த்தியுள்ளது

http://www.vikatan.com/news/article.php?aid=55012

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

12193643_10154054850344578_8703758150192

  • தொடங்கியவர்

இன்று

1795 - ஆங்கிலேயரிடமிருந்து டச்சு படைகள் இலங்கையை கைப்பற்றியது.

 

1981 - பல்கலைக்கழக மாணவர்களுக்கு முதல் முறையாக புலைமைப்பரிசில் வழங்கப்பட்டது.

 

1922 - பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.

   

1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

  •  

    1840 - குளோட் மொனே -  பிரெஞ்சு ஓவியர் (இ. 1926)
       

    1889 - ஜவகர்லால் நேரு -  இந்தியப் பிரதமர் (இ. 1964)
       

    1930 - எட்வேர்ட் வைட் -  நாசா விண்வெளி வீரர் (இ. 1967)
       

    1931 - இரா. பெருமாள் ராசு -  இந்தியக் கவிஞர்
       

    1954 - காண்டலீசா ரைஸ் -  ஐக்கிய அமெரிக்காவின் 66வது செயலாளர்
       

    1971 - அடம் கில்கிறிஸ்ற் - அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.

  • தொடங்கியவர்

12240952_942102965838398_275800002439926

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர், அசத்தல் விக்கெட் காப்பாளர் - கண்ணியத்தோடு நடந்துகொள்ளும் கனவான் அடம் கில்கிறிஸ்ட்டின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

நவ.: 14: நேரு பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

 

 நேருவைப்பற்றிய பல்வேறு பரப்புரைகள் எந்த அளவுக்கு உண்மையானவை ? 

மாபெரும் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த தேசத்தின் விடுதலைப்போரில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நேரு இந்தியாவின் முதல் பிரதமராக இருந்ததால் ஏகத்துக்கும் விமர்சிக்கப்படுகிற ஒரு தலைவராகஇருக்கிறார் . நேரு இங்கிலாந்தில் போய்த் தன் உயர்கல்வியை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார் ;மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று ஐரோப்பாவுக்குச் சிறப்புத் தொடர்வண்டி வைத்து கூட்டிப்போகிற அளவுக்கு அவர் வீட்டில் செல்வவளம் இருந்தது . மேற்கில் அவர் செய்த பயணங்கள் அவரைச் சோசியலிசம் நோக்கி ஈர்த்தன . 

காந்தியின் கீழே இந்திய விடுதலைப்போரில் பங்குகொண்ட மூவாயிரம் நாட்களுக்கு மேலே சிறையில் கழித்தவர் அவர். சொந்த தந்தையைச் சிறையில் சிறப்பு உணவு சாப்பிடக்கூடாது என மறுத்தவர் .நேரு மோதிலாலுக்குப் பின் காங்கிரசின் தலைவர் பதவிக்கு வந்தார். தன் மகளின் முகத்தை இளவயதில் பெரும்பாலும் பார்த்ததே இல்லை ; சிறையில் இருந்து உலக வரலாற்றை மகளுக்குப் போதித்த ஒரே தந்தை இவராகத்தான் இருக்க முடியும் . 

பேரன் பிறந்த பொழுது சிறையை விட்டு மன்னிப்பு கேட்டால் அனுப்புகிறோம் என்ற பொழுது மறுத்தவர் , தெருவில் போலீஸ் வாகனம் போகும் பொழுது விளக்கு வெளிச்சத்தில் பேரனை தூக்கி இந்திரா காண்பிக்கப் பார்த்துவிட்டு ,”இவர்கள் வெளிச்சத்தில் வாழவேண்டும் என்று தான் நாங்கள் இருளில் உழல்கிறோம்!”என்று கடிதம் எழுதினார் இந்தியாவின் பிரதமர் ஆனதும் நாட்டைக் கட்டமைக்கும் வேலையில் இறங்கிய நேரு இரண்டு விஷயங்களில் தெளிவாக இருந்தார் . நாடு எப்பொழுதும் மதச்சார்பின்மை கொண்ட நாடாகவே இருக்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். கோயில்களுக்குப் போவதையும்,மதத்தலைவர்களைச் சந்திப்பதையும் அவர் தவிர்த்தே வந்தார்.

nehru4.jpg



இந்துக்களுக்கு என்று பொதுவான சிவில் சட்டத்தை நேரு அம்பேத்கரின் விருப்பபடி கொண்டுவர முயல அதை மதவாதிகள் மற்றும் பழமைவாதிகள் எதிர்த்தார்கள். நேரு தன்னைக் கைவிட்டு விட்டதாக அம்பேத்கர் மனம் வெதும்பி பதவி விலகினார். நேரு அச்சட்டங்களைத் தனித்தனி சட்டங்களாக உடைத்து நிறைவேற்றி அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினார் 

"மதவாதமும்,வகுப்புவாதமும் ஆபத்தானவை. அவை இந்த நாட்டுமக்களைப் பிளவுபடுத்தலை அனுமதிக்க முடியாது. அவற்றை ஓட்டுக்களைப் பெற பயன்படுத்துவதை விட அவமானமில்லை. அப்படி மதவாதம் மற்றும் வகுப்புவாதம் மூலம் பெறும் ஒரு ஓட்டு கூட எனக்கு வேண்டாம். அவற்றைத் தொடர்ந்து எதிர்ப்பேன்" என்று முழங்கிய தலைவர் அவர் கேரளாவில் பாதிரியார்கள் அவருக்காக ஓட்டு சேகரிக்கிறார்கள் என்று அறிந்ததும் அப்படிச் செய்வது தவறு என்று கடுமையாகக் கண்டித்தார் அவர். 

”நாம் எந்த அளவுக்கு ஒன்று சேர்ந்து முன் செல்கிறோமோ அந்த அளவுக்கு நாடு வளமை பெறும்.அரசியலில் மதத்தை என்றும் இறக்குமதி செய்யக்கூடாது !”என்பது நேருவின் வரிகள் . நேரு வாரிசு அரசியலை கொண்டுவந்தவர் இல்லை. இந்திரா அவர் காலத்தில் கட்சியில் ஓரங்கட்டபட்டே இருந்தார் . சாஸ்திரி,தேசாய்,காமராசர் எனப் பல மூத்த தலைவர்கள் இருந்தார்கள், நேருவின் காலத்தில் கட்சியின் ஜனநாயகம் பலமாக இருந்தது . கட்சி தலைவர்கள் இவர் சொல்வதை எல்லாப் புள்ளிகளிலும் கேட்கவில்லை ; இவரின் சொல்லை மீறி மெட்ராஸ் மாகாணத்தில் பிரகாசம் முதல்வர் ஆனார் . 

அவர் காலத்தில் உட்கட்சி தேர்தல்கள் அருமையாக நடந்தன.

nehru1%281%29.jpg



மிகக்குறைந்த அளவிலேயே எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்த பொழுதும் அவர் காலத்தில் தான் நெடுநேரம் விவாதங்கள் நடந்தன. நேரு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் போராட்டங்கள் எழுந்த பொழுது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துப் பிரிக்க அனுமதி கொடுத்தார். 

ஹிந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாடு கொதித்து எழுந்த பொழுது உங்களுக்கு எப்பொழுது விருப்பமோ அப்பொழுது ஹிந்தியை சேர்த்துக்கொள்ளலாம் என்று விட்டுக்கொடுத்தார் இது போலவே இவரின் வார்த்தையை மீறி ராஜேந்திர பிரசாத் சோம்நாத் ஆலயத்துக்குப் போனார். காந்தியின் படுகொலையின் பொழுது ஆர் எஸ் எஸ் இயக்கமும் சம்பந்தப்பட்டு இருந்தது என்ற இவரின் கூற்றைப் படேல் நிராகரித்தார். எல்லாரின் குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கிற ஒருவராக நேரு இருந்தார். சிறுபான்மை இன மக்களைக் காப்பதை தன் முக்கியப் பணியாக நேரு கருதினார். 

நேரு வாழ்நாள் முழுக்கப் பிறர் கருத்தை மதிக்கிற ஜனநாயகவாதியாக இருந்தார்; யார் வேண்டுமானாலும் தன்னை விமர்சனம் செய்யலாம் என அறிவித்து இருந்தார்.மாடர்ன் ரீவியு என்கிற பத்திரிக்கையின் இந்த வரிகளைப்பாருங்கள் ,”நேரு சர்வாதிகாரி;அவருக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது ; சீசரைப் போன்ற புகழ் மற்றும் அதிகாரத்தோடு அவர் திகழ்கிறார். அவரை இப்படியே இருக்க அனுமதிக்கக் கூடாது “இதை எழுதியது யார் தெரியுமா ஜவஹர்லால் நேரு அவர்களே தான். இந்தியாவில் தேர்தல்களின் பொழுது ஒட்டுமொத்த மக்களில் பத்தில் ஒரு சதவிகிதத்தினரை நேரடியாக சந்தித்து தேர்தல் அரசியலுக்குள் இந்தியாவை வெற்றிகரமாக அழைத்துச் சென்றார் 

யாரேனும் திட்டி கார்டூன் போட்டால் இன்னமும் நன்றாக விமர்சியுங்கள் எனக் கூப்பிட்டு பாராட்டுவார் நேருவிடுதலை பெற்றதும் நேரு இந்தியாவின் பிரதமர் ஆனார் .அப்பொழுது அவர் “tryst with destiny ” (விதியோடு ஒரு ஒப்பந்தம்)என ஆற்றிய உரை உலகப்புகழ் பெற்றது .உலகமே தூங்கிக்கொண்டு இருக்கிற பொழுது இந்த நாடு விழித்தெழுகிறது.இந்த நாட்டின் மிகப்பெரும் நல்ல உள்ளங்களின் நோக்கம் எல்லா மக்களின் கண்ணீரை துடிப்பதே ஆகும் ;அது நடக்கும் வரை நம் பணி ஓயாது !”என்பது அதன் சாரம்.

 

பாரளுமன்ற ஜனநாயகத்தை முழுவதும் மதித்த நேரு எதிர்கட்சிகள் பலமில்லாத காலத்திலும் தீவிரமான விவாதங்களை முன்னெடுத்தார். அவரின் கட்சி நபர் சபை கட்டுப்பாட்டை மீறியதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை அவரே கொண்டு வந்தார் விடுதலை பெற்ற பின் பல்வேறு நாட்டு நிர்மாணத்திட்டங்களை ஊக்குகுத்தார். அணைகள், தொழிற்சாலைகள், விவசாயம் என எல்லாவற்றிலும் மக்களை ஊக்குவித்து ஈடுபடச் செய்தார்.அணைகளைத் திறக்க போனால் அதைக் கட்டிய எளிய தொழிலாளியை விட்டே அதைத் திறக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.இந்தியாவின் பிரதமராகப் பதினேழு ஆண்டுகள் தொடர்ந்து சேவை புரிந்து இருக்கும் நேருவின் சாதனை இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது

nehru%283%29.jpg



விதிகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்,விடுதலைக்குப் பின் எல்லாவீட்டிலும் ரேஷன் முறை அமலுக்கு வந்தது.நேரு எளிய மக்கள் நிற்கும் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். க்ளார்க் பதறியடித்து வந்து “முன்னே வாருங்கள் “என்ற பொழுது.” விதி எல்லாருக்கும் பொதுவானது” என மறுத்துவிட்டார். ஓட்டுபோட்ட சட்டையைப் போட்டுக்கொண்டு வீட்டை ஒன்பது ரூபாய் மிச்சம் பிடித்து வாழ்ந்தவர் நேரு என்பது இன்றைக்கு ஆச்சரியமான செய்தியாக இருக்கலாம். 

அலகாபாத் வீட்டில் ஒழுங்காக வரி கட்டவில்லை என்று ராம் மனோகர் லோகியா குற்றச்சாட்டை எழுப்பிய பொழுது நேரு பொறுமையாக அந்தக் கேள்வியை எடுத்துக்கொண்டு பதிலளித்தார். ஆதாரங்களோடு அதிகமாகவே வரி கட்டியதை ஆதாரங்களோடு தெளிவு செய்ததும் லோகியா மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். 

ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ,முதலமைச்சர்களோகுற்றவாளிகள் அல்லது அதைத் தடுக்கத் தவறியவர்கள் என்று விசாரணையின் முடிவில் அவர்களை வீட்டுக்கு அனுப்ப அவர் யோசிக்கவில்லை. கெய்ரோன்,டி.டி.கே,மாத்தாய் என்று பெரிய பட்டியலே சொல்லலாம். நேரு அவர்களைக் கண்டும் காணாமல் இருந்தார் என்று சொல்லக்கூடும். அதே சமயம் நேரு அவர்கள் மீதான நீதி விசாரணையில் தலையிடவில்லை என்பதை நேர்மையாகப் பதிவு செய்ய வேண்டும். 

நேரு உலக நாடுகளின் ஒற்றுமைக்காகப் பஞ்சசீலக் கொள்கைகளை உருவாக்கினார். இக்கொள்கை மூலம் உலகம் அமைதிப் பாதையில் சென்றது. அணிசேராக் கொள்கையைக் கடைபிடித்துத் தாயகத்தின் மதிப்பை உலகநாடுகளிடையே உயர்த்தினார். பல மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலனி நாடுகளின் விடுதலையைக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றினார் .இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அமைச்சராக அவரே செயல்பட்டார். பல்வேறு ஆசிய மற்றும் ஆப்ரிக்க காலனிகளின் விடுதலைக்கு காரணமானார்

nehru6.jpg



வடகிழக்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தன்னுடைய செயலாளர்கள் ஆக்கி இந்தியாவை விட்டு வடகிழக்கு வெளியேறுவதை அவர் தடுத்தார். ஆதிவாசிகளிடமும் பரிவோடு அவர் நடந்து கொண்டார். நேருவின் பொருளாதாரக் கொள்கைகள் பெருந்தோல்வி என்று இன்றைக்கு நாம் சொன்னாலும் வலிமையான அறிவியல் பீடங்கள் அவற்றால் உண்டாகின. நீர்ப்பாசனம்,நிலங்களை ஒழுங்காகப் பகிர்ந்தளித்தல்,அனைவருக்கும் கல்வி,சுகாதாரம் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தாமல் போனது அவரின் தோல்விகள் 

இந்திராவின் பேச்சைக்கேட்டு ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கேரளா அரசை கலைக்கிற வேலையை அவர் செய்தது பலரை அதிரவைத்தது. ,அணிசேரா கொள்கை என்று சொல்லிக்கொண்டு இருந்தவர் சோவியத் ரஷ்யா ஹங்கேரியை தாக்கிய பொழுது மவுனம் சாதித்தார். கடிதங்களில் தன் எதிர்ப்பை காட்டினாலும் வெளிப்படையாக அதைப் பதிவு செய்யவில்லை அவர் 

சீனாவின் சிக்கலில் நேருவை தொடர்ந்து வில்லனாக்கும் போக்கு இன்றைக்கு ஹெண்டெர்சன் அறிக்கையால் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால்,ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் வகுத்த கோட்டை ஏற்க மாட்டேன் என்று அடம்பிடித்த மாவோ தனக்குச் சாதகமாக மஞ்ச்சூ பகுதியை அதே ஆங்கிலேய ஏகாதிபத்தியம் வழங்கிய பொழுது ஏற்றுக்கொண்டார். இந்தியாவில் சீன அக்சாய் சின்னில் சாலை அமைத்தது என்பதற்கு எழுந்த கடும் கண்டனத்துக்குப் பிறகே நகரும் முடிவை நேரு எடுத்தார். 

சீனாவிலும் மூன்று கோடி மக்கள் மரணத்தால் தனக்கு விழுந்து கொண்டிருந்த செல்வாக்கை மாவோ நிலைநாட்ட வேண்டிய சூழல் இருந்தது. திபெத்தை சீனாவிடம் இருந்து பிரிக்க நேரு எண்ணுகிறார் என்கிற தவறான எண்ணம் அவர்களுக்கு இருந்தது என்றால் நேரு சீனாவை ஒரு எதிரி என்று இறுதிவரை நம்ப மறுத்தார். அவர் சீனாவை ஏகத்துக்கும் நம்பி அது முதுகில் குத்தி தோல்வியைப் பரிசளித்த பொழுது நொறுங்கிப்போனார் என்பது அவரின் மரணத்தைத் துரிதப்படுத்தியது. 

நேரு ஆண்ட பதினேழு வருடத்தின் ஆகச்சிறந்த தாக்கம் எதுவாக இருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்ட பொழுது ,”என்னுடைய அழுத்தமான சுவடாக ஜனநாயகம் இருக்கும் !” என்று அவர் சொல்லியிருந்தார். அதுவே நடந்தது. உலகப்போருக்குப் பின் விடுதலையடைந்த பெரும்பாலான நாடுகள் எப்படி ஜனநாயகத்தைக் கைவிட்டன என்பதைக் கவனித்தால் நேருவின் சாதனை புரியும். முதல் தேர்தலில் அவர் இந்தியாவின் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கு மக்களைச் சந்தித்து ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 
 

nehru2.jpg


நேரு தனக்குப் பின் ஒரு வாரிசை நியமிக்காமல் விலகியதற்குக் காரணம் அதை மக்களும்,அவர்களின் பிரதிநிதிகளும் தேர்வு செய்யட்டும் என்று எண்ணியதே காரணம்.இந்திரா காந்தி நேருவின் மறைவுக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்த தன்னுடைய தோழியிடம் அமெரிக்கா கிளம்பிப்போய் அங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்று யோசிப்பதாகக் கடிதம் எழுதினார் என்பதில் இருந்தே நேரு இந்திராவை தன்னுடைய வாரிசாகப் பார்க்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். 
நேருவை வாழ்நாள் முழுக்கத் தீவிரமாக விமர்சித்த D.F.கரக்கா இப்படி அவரின் உறுதியை புகழ்ந்தார் ,"நேரு தன்னுடைய வாரிசை பற்றி எந்தக் குறிப்பிடுதலையும் செய்யாதது மெச்சத்தக்கது. நேரு தனக்குப் பின் வருகிறவர்களுக்கான பணி அது என்பதில் உறுதியாக இருந்தார். அவர் அதைப்பற்றிக் கவலைப்படவே இல்லை." 

நேருவை ராமச்சந்திர குகாவின் வரிகளில் அவர்களை இப்படி வர்ணிப்பது சரியாக இருக்கும். காந்தியை போல அவர் இன, மத, ஜாதி மற்றும் வரக்க,பாலின மற்றும் புவியியல் வேறுபாடுகளைக் கடந்தவர். இஸ்லாமியர்கள் நண்பராகக் கொண்டு இந்து அவர்,அவர் ஒரு பிராமணராக இருந்தாலும் ஜாதி விதிகளை அவர் பின்பற்றவில்லை,வட இந்தியராக இருந்தும் தென்னிந்தியர்கள் மீது அவர் இந்தியை திணிக்காதவர், பெண்கள் மதிக்கவும், நம்பவும் கூடிய ஒரு ஆண் அவர்." சிறியன சிந்தியாத நேருவை நினைவு கூர்வோம்.

nehruphotos.jpg

சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

 

http://www.vikatan.com/news/article.php?aid=55032

  • தொடங்கியவர்

கொதிக்கும் எண்ணெய்...வேகும் பக்கோடா... வெறும் கையால் எடுக்கும் ஆச்சர்ய மனிதர்! (வீடியோ)

 

அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் சாலையோர கடையில் வெறும் கையால் கொதிக்கும் எண்ணெயில் பக்கோடா பொரித்து எடுக்கும் அதிசயம் நிகழ்த்தி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறார் அலகாபாத் ராம் பாபு.

இந்திய அளவில் எண்ணெயில் பொரித்து எடுக்கும் பலகார வகைகள் பிரபலமானவை. வடை,அதிரசம்,முறுக்கு இப்படி தென்னிந்தியாவில் பல்வேறு சுவைமிக்க பலகாரங்கள் உள்ளன.அதே போல வடஇந்திய மக்கள் மத்தியில் சமோசா,பக்கோடா உள்ளிட்ட பலகாரங்கள் பிரபலமானவை.


உத்தரப்பிரதேசம் மாநிலம், அலகாபாத்தில் சாலையோரத்தில் கடை வைத்து சுவையான பக்கோடா தயாரித்து விற்பனை செய்துவருகிறார்  60 வயதான ராம் பாபு. இவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்.காரணம் ராம் பாபு, சுவையான பக்கோடாவை வெறும் கையால் கொதிக்கும் எண்ணெயிலிட்டு பொரித்து எடுத்து தருகிறார். இதற்காகவே ராம்பாபுவிடம்  நாள்தோறும் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.

இது பற்றி ராம்பாபு கூறுகையில், எனது 14 வயதில் இருந்து இந்த பக்கோடா தயாரிப்பு விற்பனை தொழில் செய்து வருகிறேன், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் பக்கோடா பொரித்து எடுப்பது எனது ஸ்பெஷல். இதற்காகவே வாடிக்கையாளர்கள் எனக்கு அதிகம்.வெறும் கையால் பக்கோடா பொரிப்பது குறித்து தகவல் அறிந்த சிலர் டாக்டர்களிடம் அழைத்துச் சென்று கையை பரிசோதித்தினர்.ஆனால் எந்த வித்தியாசத்தையும்  அவர்களால் காண முடியவில்லை என்றும் மற்ற  மனிதர்கள் கைகளைப் போலத்தான் இருக்கிறது என்றும்  கூறினர்.இது கடவுள் எனக்கு அளித்த பரிசாகவே கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=55045

  • தொடங்கியவர்

12241338_942103635838331_706211302644804

தமிழ், மலையாளம், ஹிந்தி எனப் மொழிகளிலும் கலக்கி வரும் நடிகையும் பாடகியுமான மம்தா மோகன்தாஸின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

இவ்விளம்பரம் சொல்லும் விழிப்புணர்வுச் செய்தி மிக மிக இலகுவானது : ஆனால் அவசியமானது!

 

 

  • தொடங்கியவர்

12249595_10154067997509578_2420531990778

  • தொடங்கியவர்

சுட்டிக்குழந்தை முதல் காக்காமுட்டை வரை - தேசியவிருதுக் குழந்தைகள் சிறப்புக்கட்டுரை

 

றியா வயது, சொல்வதைப் புரிந்து நடிப்பை வெளிப்படுத்துவதே சவாலான காரியம். இதில் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதும் பெற்றால் கண்டிப்பாக அவர்கள் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டியவர்கள்தானே. இதோ இதுவரை தமிழில் தேசியவிருது பெற்ற குழந்தை நட்சத்திரங்கள் பற்றிய ஒரு சிறப்புத்தொகுப்பு. 

 பேபி ராணி- இவர் தான் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற முதல் இந்திய சினிமா குழந்தை. குழந்தைக்காக என்னும் படத்திற்காக 1967ல் வாங்கினார். ஹாலிவுட்டின் பேபி’ஸ் டே அவுட் படத்தைப் பார்த்து நம்மூர் சுட்டிக்குழந்தையை காப்பி செய்தார்கள் என் நாம் நினைத்தால் அது தவறு. பேபி’ஸ் டே அவுட்டின் ஒரிஜினல் வெர்ஷன் இதுதான். மூன்று திருடர்களால் கடத்தப்படும் குழந்தை, அந்தக் குழந்தைக்காக இவர்கள் நல்லவர்களாக எப்படி மாறுகிறார்கள் என்பதே மீதிக்கதை. மொத்தக் கதையின் கருவும் பேபி ராணி என்பதை மிக அழகாக உள்வாங்கி நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

baby%20rani.jpg


ஷாம்லி: மீண்டும் சிறந்த குழந்தைக்கான தேசிய விருது கிடைக்க சுமார் 23 வருடங்கள் ஆகின. 1991ல் வெளியான மணிரத்னத்தின் அஞ்சலி படம் தான் அதை நிறைவேற்றியது. வெறும் மூணு வயதுக்குழந்தை இப்படி நடிக்க முடியுமா என இந்தியாவையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம். படம் முழுக்க குழந்தைகள் தான் என்றாலும் 3 வயதில் தேசிய விருது பெற்ற குழந்தை ஷாம்லி தான். பயம், சோகம், அடம்பிடிப்பது, அழுவது இப்படி சீனுக்கு சீன் அசத்தல் நடிப்பைக் கொட்டியிருப்பார்.

snapshot20090624005923%281%29.jpg


ஸ்வேதா - 1998ம் ஆண்டு மல்லி படத்திற்காக விருது பெற்றார். 10 வயது ஸ்வேதா,தனது குடும்ப ஏழ்மை காரணமாக பணம் சம்பாதிக்க குச்சிகளைப் பொறுக்கி விற்கும் ஒரு சிறுமி வாயிலாக காடு, விலங்குகள், இயற்கையின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய படம். ஸ்வேதாவின் அருமையான நடிப்பும், எதார்த்தமான நடவடிக்கைகளும் அவரது கேரக்டருக்கு தேசியவிருதைப் பெற்றுத்தந்தது.

Malli.jpg


உதயராஜ் - இப்போது, இந்தச் சிறுவன் படங்களில் ஹீரோக்களுக்கு நண்பராக நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவர், 2001ல் வெளியான நிலாக்காலம் படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர். பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள். அவர்களுக்குத் தோழியாக ஒரு பிரபல நடிகையின் மகள் என இவர்கள் மூவரின் ஒரு நாள் பிக்னிக் தான் படம். குழந்தைகளின் அறியாமை, அவர்களீன் சின்னச் சின்ன சந்தோஷம் என மூன்று குழந்தைகளும் அவ்வளவு அழகான நடிப்பு. எனினும் உதயராஜின் நடிப்பு, காண்போர் மனதை உருக்கும்.

maxresdefault%20%281%29.jpg



ஸ்வேதா: மல்லி படத்துக்காக விருது வாங்கிய ஸ்வேதாவே மீண்டும் 2001ல் வெளியான குட்டி படத்திற்காகவும் விருது வாங்கினார். ஒரு பணக்கார குடும்பத்தில் குழந்தைத் தொழிலாளியாக வேலை செய்யும் பெண். அவள் அனுபவிக்கும் கொடுமைகள் என படம் முழுக்க ஸ்வேதாவின் நடிப்பு கண்டிப்பாக காண்போரை உருக்கி விடும். இரண்டு முறை தேசியவிருது பெற்ற குழந்தை ஸ்வேதாவாகத்தான் இருப்பார்.

maxresdefault%20%282%29.jpg



கீர்த்தனா : நடிகர், இயக்குநர் பார்த்திபனின் மகள். 2002ல் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்காக தேசிய விருது. இலங்கை தம்பதியருக்கு மகள், தமிழ் தம்பதியருக்கு வளர்ப்பு மகள். அம்மாவை பார்க்க நினைக்கும் கீர்த்தனா செய்யும் ரகளைகளும், ஏக்கமும், அன்பின் வெளிப்பாடும் என படம் முழுக்க முழுக்க கீர்த்தனா. படத்தில் நடித்த மற்ற முக்கிய நடிகர்களைக் கூட மறக்கடித்திருப்பார்.

photography_movies_10.jpg


 கிஷோர் , ஸ்ரீராம்: 2009ம் ஆண்டு வெளியான பசங்க படம். மொத்தப் படமும் ஸ்லாகிக்க வேண்டிய படம் தான். குழந்தைகள் அவர்களின் மன நிலை. அவர்களுக்குள் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள் என படம் பார்க்கும் நம்மையும் குழந்தைகளாக மாற்றிவிட்ட படம். அதில் இரண்டு ஹீரோக்கள் கிஷோரும், ஸ்ரீராமும் தான் படத்தின் தூண்கள். அருமையாக நடித்திருப்பார்கள்.

16THSTILLS_213373g.jpg



சாதனா: 2013ல்  தங்க மீன்கள் படத்துக்காக சாதனாவுக்கு விருது கிடைத்தது. ஒரு மத்தியதரவர்க்க அப்பா மகள்  இருவருக்குமான பாசப் போராட்டம் தான் படம். படிப்பு வரவில்லை, ஒரு திறமையும் இல்லை என திட்டும் ஆசிரியர்கள், நினைத்தது கிடைக்கவில்லை, வீட்டின் ஏழ்மை என ஒன்று சேர்ந்து சாதனாவை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது என்பதே படத்தின் கரு. அப்பாவிடம் உருகிஉருகிப் பேசுவதும், ஸ்கூலில் அதிகப்பிரசங்கித் தனமாக நடப்பதும் என சாதனா நடிப்பில் அப்ளாஸ் அள்ளிய படம்.

Thanga_Meengal_New_Movie_Stills7fecd5dce


 விக்னேஷ், ரமேஷ்: 2014ல் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த காக்கா முட்டைகள். ஒரு பீட்சாவுக்காக போராடும் இரு குழந்தைகளின் வாழ்க்கையை எதார்த்தமாக, எளிமையாக, உருக்கமாகச் சொன்ன படம். சமுதாயத்தின் மேல்தட்டு மக்களை சற்றே அசைத்துப்பார்த்த படம் எனவும் சொல்லலாம். இதில் பீட்சா சாப்பிட இரு குழந்தைகளும் செய்யும் முயற்சிகளும், சொதப்பல்களும் என நடிப்பில் அசத்திகாண்போரை சிந்திக்க வைத்தனர் இந்த இரு சிறுவர்களும். 

kaaka-muttai-movie_2429224f.jpg

 இதில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா(1959) படத்தில் இந்தியாவின் பிரசிடெண்ட் ஆஃப் கோல்ட் மெடல் வாங்கி இந்தக் குழந்தைகள் பயணத்திற்கு முதல்முதலில் வேறு விதமாக அடித்தளம் அமைத்தவர் கமல்ஹாசனே.

Kamal-Haasan-Childhood-pictures-1.jpg

குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்...

http://www.vikatan.com/cinema/article.php?aid=55040

  • தொடங்கியவர்

12193560_10154054723459578_5955854427840

  • தொடங்கியவர்
  • இன்று
    • 1505 - போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.

       

      1948 - இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

       

      1971 - இலங்கை கலாச்சார வாரியம் நிறுவப்பட்டது.

       

      1971 - தென்னை அபிவிருத்தி சபை நிறுவப்பட்டது.

1978 - இந்தோனேஷியாவிற்கு சொந்தமானது ஒரு விமானம் கிம்புளப்பிட்டிய நீர்கொழும்பு பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.

2000 - இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.

   

2007 - வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சானியாவை ஏன் நாம் காதலிக்கிறோம் தெரியுமா?

 

லக விளையாட்டு மைதானங்களில் 'மேட் இன் இந்தியா' லேபிள்கொண்ட‌ சாதனையாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிலும்  பெண் சாதனையாளர்கள் யார் என்று தேடினால்... நூற்றாண்டுக்கு ஒருவர்தான் சிக்குவார்.

கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் பெருமையை பி.டி. உஷா தூக்கி நிறுத்த, இப்போது சானியா மிர்சா,  சாய்னா நேவால், தீபிகா, ஜோஷ்னா என பலர் படையெடுத்திருக்கிறார்கள். அவர்களில் மீடியா டார்லிங்கான சானியாவுக்கு இன்று பிறந்த நாள்!

டென்னிசில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா இப்போது உலகின் நம்பர் 1 வீராங்கனை.
கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் ஹீரோக்களும் மட்டுமே பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பரங்களை ஹோல்சேல் துண்டைப் போட்டு ஆக்கிரமித்திருந்த நேரத்தில், சானியா மிர்ஸாதான் இந்தியாவின் அதிகம் சம்பாதித்த முதல் விளையாட்டு வீராங்கனையாக உருவெடுத்தார்.

அர்ஜீனா விருது, ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருது, மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை வாங்கியிருக்கிறார் சானியா. தெற்காசியாவின் நல்லெண்ண தூதராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆறு வயதிலேயே டென்னிஸ் விளையாட ஆரம்பித்துவிட்ட சானியாவின் புகழில் விஞ்சி நிற்பது டென்னிஸ் திறமையா அல்லது அவர் அழகு பதுமை என்பதலா என்று பட்டிமன்றம் வைக்குமளவுக்கு புகழ் பெற்றதால்தான் விளம்பரங்களிலும் ஜொலிக்க முடிந்தது.

sanos.jpg

இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், ஸ்கர்ட் அணிந்து டென்னிஸ் விளையாடுவது முதல் விளம்பரங்களில் நடிப்பது வரை அவரை கட்டம் கட்டின சர்ச்சைகள். பத்தும் பத்தாதற்கு அவர் பிரியாணி சாப்பிடுவதை எல்லாம் விமர்சித்தார்கள்.   அவர் நன்றாக விளையாடினாலும் ’ஆங்... எதிராளி பலவீனமானவர்’ என்பார்கள். அவுட் ஆஃப் ஃபார்ம் என்றால் ‘பொண்ணுகிட்ட சின்சியாரிட்டியே இல்லை’ என்பார்கள்.

பாகிஸ்தானியரைக் காதலித்து திருமணம் செய்ததை ‘நேஷனல் சென்சேஷன்’ ஆக்கினார்கள். திருமணத்துக்குப் பிறகு அவர் பாகிஸ்தான் பிரஜை ஆகக்கூடாது என்று உத்தரவிட்டார்கள். கல்யாணம் முடிந்து இத்தனை வருடங்கள் கழித்தும் குழந்தை இல்லை என்பதையும் விவாதப் பொருள் ஆக்கினார்கள்.
11201929_1022516054473851_45990781129458
ஆனால், சானியா எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. அதுதான் அவர்  கெத்து.  அதுதான் அவருடைய பிராண்ட் இமேஜ்!

சானியா இன்றும் தன் தந்தையின் பெயரைத்தான் உபயோகப்படுத்துகிறார். இன்னமும்
அவர் சானியா மிர்ஸாதான். சானியா மாலிக் இல்லை. பெண்களுக்கு சானியா மிர்சா மாதிரி திறமை வேண்டும் என்று கேட்காமல்,சானியா மிர்சா மாதிரி இளமை வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் நம் கவிஞர் பெருமக்கள் ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக சானியா  களத்திலும் பயிற்சியிலும் சிந்திய வியர்வை... இன்று அவரை ரேங்கிங்கில் உச்சாணியில் நிறுத்தி வைத்திருக்கிறது. அது வெறுமனே அதிர்ஷ்டத்தால் விளைந்ததல்ல. 

ஆக, இந்தியப் பெண்களின் திறமைக்கும் தீர்க்கத்துக்கும் அடையாளமாக இருக்கும் சானியாவின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்துக்களை சொல்வதோடு நம் கடமை முடிந்துவிடுமா என்ன? வருடம் முழுவதுக்குமே நம் நல்லாதரவை நாம் அவருக்கு வழங்குவோம்.
வீ ஆல் லவ் சானியா!

http://www.vikatan.com/news/article.php?aid=55076

  • தொடங்கியவர்

மகன் தந்தைக்காற்றும் உதவி!

குழந்தைகள் நலனுக்காக நிதி திரட்ட, மான்செஸ்டரில் நடந்த கண்காட்சி கால்பந்து போட்டியில் பிரிட்டன் - அயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் பிரிட்டன் அணிக்காக விளையாடிய பெக்காமுக்கு மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய அவரது மகன் புரூக்லீன் பெக்காம்.

12234915_1022639447794845_13901143840973

  • தொடங்கியவர்

காட்டுக்குள்ளே திகில் பயணம்!

 

வெல்கம் மோக்லி

 

‘‘மோக்லி, பத்திரமா தப்பிச்சி ஓடு.’’

p18a.jpg

இதைப் படித்த உடனே ‘ஜங்கிள் புக்’ நினைவுக்கு வருமே? எழுத்திலும், கார்ட்டூன் தொடரிலும் கலக்கிய ஜங்கிள் புக், நம்முடைய கண்களுக்கு ரொம்பவும் அருகில் வரப்போகிறது.

ஜங்கிள் புக் கதையை 1967-ல் கார்ட்டூன் படமாக வெளியிட்ட வால்ட் டிஸ்னி நிறுவனம், இப்போது 3D அனிமேஷன் படமாகத் தயாரித்துவருகிறது. இதில், மோக்லி மட்டுமே மனிதர். மற்ற கதா பாத்திரங்கள் எல்லாம் அனிமேஷனாக உருவாக்கப்பட்டவை.

p18b.jpg

இது, இந்தியக் காட்டில் நடக்கும் கதை. காட்டுக்குள் வந்துவிட்ட குழந்தை மோக்லியை, விலங்குகள் வளர்க்கும். அவற்றுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து அவன் காப்பாற்றுவான். இதில், அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் சேத், மோக்லியாக வந்து கலக்கப்போகிறான். செப்டம்பர் 15 அன்று இந்தப் படத்தின் ட்ரெய்லர், இணையத்தில் வெளியிடப்பட்டது. 10 நாட்களில் ஒன்றரைக் கோடி முறை பார்க்கப்பட்டிருக்கிறது. ‘அயர்ன் மேன்’ படத்தின்  இயக்குநர் ஜான் ஃபவ்ரியூ, இந்தப் படத்தை இயக்குகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரலில் படம் வெளியாகிறது. உலகமே டபுள் எதிர்பார்ப்புடன் மோக்லியையும் அவன் நண்பர்களையும் பார்க்கக்  காத்திருக்கிறது.

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=110859&sid=3377&mid=4&utm_source=facebook&utm_medium=ChuttiVikatan&utm_campaign=6

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 16
 
 

article_1447644191-z.jpg1532: தென் அமெரிக்காவில் இன்கா சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னரான அதாஹூவல்பா ஸ்பானிய தளபதி பிரான்சிஸ்கா பிஸாரோவின் படைகளினால் கைது செய்யப்பட்டார்.

1943: ஜேர்மனியில் நோர்வேயினால் நிர்வகிக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையமொன்றின் மீது அமெரக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின.

1944: ஜேர்மனியின் டுயெரென் நகரை  நேச நாடுகளின் படைகள் நிர்மூலமாக்கின.

1945: ரொக்கட் தயாரிப்பு தொழில்நுட்பத்திற்காக ஜேர்மனிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியிலாளர்களை அமெரிக்க இராணுவம் இரகசியமாக இணைத்துககொண்டது.

1945: யுனெஸ்கோ அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1965: சோவியன் யூனியனின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கிரகத்தை நோக்கி ஏவப்பட்டது. மற்றொரு கிரகத்தில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் அதுவாகும்.

1988: பாகிஸ்தானில் பலவருடங்களின் பின்னர் நடைபெற்ற சுயாதீன தேர்தல் மூலம் பாகிஸ்தான் பிரதமராக பெனாஸிர் பூட்டோ முதல் தடவையாக தெரிவானார்.

1997: சீனாவில் ஜனநாயகத்திற்கான போராட்டங்களில் ஈடுபட்ட வெய் ஜிங்ஷேங்க் 18 வருடகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் மருத்துவ காரணங்களால் விடுவிக்கப்பட்டார்.

2000: பில் கிளின்டன், வியட்னாம் யுத்தத்தின் பின்னர் வியட்னாமிற்குச் சென்ற முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.

- See more at: http://www.tamilmirror.lk/159178/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.AthG0spZ.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அழகு மயிலாட

  • தொடங்கியவர்

இன்று அன்று | 1995 நவம்பர் 16: சகிப்புத்தன்மையை கொண்டாடும் நாள்!

 
inru_2622321f.jpg
 

இந்தியாவில் இன்றைய தேதியில் சகிப்புத் தன்மையின் அவசியம் குறித்து பெரிய அளவில் விவாதம் நடந்துவருகிறது. நவம்பர் 16-ஐ உலகச் சகிப்புத்தன்மை நாளாக அனுசரிப்பதாக 1995-ல் ஐ.நா. அறிவித்தது நம்மில் பலருக்கு நினைவிருக்காது.

‘இயற்கையாகவே மனிதர்களில் பல்வேறு பிரிவினர் இருக்கிறார்கள். உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பிரிவினர் ஒற்றுமையாக வசிக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி சகிப்புத்தன்மைதான்’ என்று ஐ.நா. அறிவித்தது. மனித உரிமை தொடர்பான சட்டங்களை முறையாகக் கையாள்வது, வெறுப்புக் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தகுந்த தண்டனை வழங்குவது, பிரச்சினைகள் ஏற்படும் சமயங்களில் சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு பொதுமக்களே நடவடிக்கைகளில் இறங்குவதைத் தடுப்பது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஐ.நா. அறிக்கையில் இடம்பெற்றன.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் விழாக்கள் உலகமெங்கும் நடத்தப்படுகின்றன.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-1995-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/article7883332.ece

  • தொடங்கியவர்

ஸ்டார் ஃபிட்னெஸ்

 

 

டி வில்லியர்ஸ்

கிரிக்கெட்டின் இன்றைய ஹாட், டாப், கிளாஸ், மாஸ் பேட்ஸ்மேன்... தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டி வில்லியர்ஸ. டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்திலும் “அதுக்கும் மேல” என ரன்களைக் குவித்துவருகிறார். வருடம் முழுதும் விளையாடிக்கொண்டே இருப்பவர் எப்படி தனது ஃபிட்னெஸைப் பராமரிக்கிறார்?

p10a.jpg

dot3%285%29.jpgபோட்டிக்கு முந்தைய நாள் அதிகமாக நெட் பிராக்டீஸ் செய்வது என்பது, பரீட்சைக்கு முந்தைய நாள் விழுந்து விழுந்து படிப்பது போன்றதுதான் என்பது டி வில்லியர்ஸ் கருத்து. “அதிகமான பிராக்டீஸ் நம்மைச் சோர்வுறச் செய்யும். அடுத்த நாள் போட்டிக்குப் போகும்போது பாதி ஸ்டாமினாவை இழந்திருப்போம். எனவே, உடற்பயிற்சி உட்பட எந்தப் பயிற்சிகளானாலும், தினமும் செய்ய வேண்டும்” என்கிறார்.

dot3%285%29.jpg“தொடர்ந்து மூன்று நான்கு மணி நேரம் பயிற்சி செய்வதைவிட, 20 நிமிடங்கள் தீவிரமான பயிற்சியும் அதன் பின், சிறிது ஓய்வு மீண்டும் பயிற்சி எனத் தொடர்வது நல்ல பலனைத் தரும்” என்கிறார் இந்த ரன் மிஷின்.

dot3%285%29.jpgடி வில்லியர்ஸ்க்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட் அல்ல... டென்னிஸ். ஆனால், எந்த விளையாட்டு விளையாடினாலும் ரன்னிங் தேவைப்படும். எனவே, ஓட்டப்பயிற்சிதான் உடற்பயிற்சிக்கெல்லாம் தாத்தா!” என்கிறார்.

dot3%285%29.jpgமைதானத்தின் எந்த மூலைக்கும் டி வில்லியர்ஸால் பந்தை அடிக்க முடியும். அதற்கு முக்கியக் காரணம், அவர் உடல் அத்தனை ஃப்ளெக்ஸிபிள். இதற்கான சிறப்பான உடற்பயிற்சிகளை மேற்கொள்வாராம். ‘நம் தேவை என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றார் போல நம் உடலை தயார்ப்படுத்துவது முக்கியம்’ என்பது இந்த சிக்ஸ் மேனின் சின்சியர் அட்வைஸ்.

dot3%285%29.jpgஉடற்பயிற்சிக்கும் அன்றைய காலநிலைக்கும் தொடர்பு உண்டு என்கிறார் டி வில்லியர்ஸ். உலகம் முழுவதும் சுற்றுபவர் என்பதால், அந்தந்த நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தனது உடற்பயிற்சிகள் மாறும் என்கிறார். வெயில் நாட்களில் வெளியில் ஓடாமல் இண்டோர் பயிற்சிகள் நல்லது என்பது இவரது டிப்ஸ்.

மார்ட்டினா ஹிங்கிஸ்

மார்ட்டினா ஹிங்கிஸ்க்கு வயது 35. ஆனால் இந்த வருடம் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருக்கிறார். எப்படி இது சாத்தியமானது என்றால் “மனதையும் உடலையும் நான் சொல்வதைக் கேட்கும்படி வைத்திருக்கிறேன்” என்கிறார், இந்த சுவிஸ் தேவதை.

p11a.jpg

dot3%285%29.jpg“ஃபிட்னெஸ் என்பது ஒரு பயணம். எனது குழந்தைப் பருவத்தில் இருந்தே தொடரும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைதான் என் வெற்றி ரகசியம். உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான லைஃப்ஸ்டைல் என்ன என்பதைச் சொல்லிக்கொடுங்கள்” என்கிறார் மார்ட்டினா.

dot3%285%29.jpgஹிங்கிஸின் பெற்றோர் இருவரும் டென்னிஸ் வீரர்கள். பிரபல வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவாவின் நினைவாகத்தான் மார்ட்டினா ஹிங்கிஸ் என்ற பெயரை வைத்தார்களாம். நவரத்திலோவாவிடம் உங்களுக்கும் என்ன பிடிக்கும் என்றால், அவரது ஃபிட்னெஸ் என்கிறார் ஹிங்கிஸ். ஃபிட்னெஸ் என்பதற்கும் ஒரு ரோல்மாடல் வைத்துக்கொள்வது மிகவும் நல்லது என்பது ஹிங்கிஸ் சொல்லும் முக்கியமான பாயின்ட்.

dot3%285%29.jpg“எனது டென்னிஸ் வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை என்றாலும், எனது உடற்பயிற்சிகளும் டயட்டும் தொடர்ந்திருக்கும். ஏனெனில், அது என் வாழ்க்கைக்கானது, வி்ளையாட்டுக்கானது மட்டும் அல்ல” என்பது ஹிங்கிஸின் மந்திரச் சொல்.

dot3%285%29.jpg“மதியம் இரண்டு மணிக்கு மேல் கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிட மாட்டேன் என்பது மட்டும் என் டயட் ரூல். மற்றபடி, சாக்லேட் கேக்கூட சாப்பிடுவேன். டயட் என்பது நமக்குத் தேவையான உணவைச் சாப்பிடுவது, சாப்பிடாமல் இருப்பது அல்ல” என்கிறார் ஹிங்கிஸ்.

dot3%285%29.jpgகடற்கரையோர நகரங்களில் இருப்பவர்களை, அங்கே ஜாகிங் செல்லச் சொல்கிறார் ஹிங்கிஸ். அது மனதுக்கும் உடலுக்கும் எக்ஸ்ட்ரா புத்துணர்ச்சியை அளிக்கும் என்பது அவரது அனுபவப் பாடம்.

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=112512

  • தொடங்கியவர்

மறுசுழற்சி வீடுகள்: இது கூடல்ல... என் கனவு வீடு!

 
 
  • பத்து கண்டெய்னர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சொகுசு வீடு
    பத்து கண்டெய்னர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சொகுசு வீடு
  • 32 கண்டெய்னர்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அலுவலகம்
    32 கண்டெய்னர்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அலுவலகம்
  • இயற்கைத் தோட்டம்
    இயற்கைத் தோட்டம்
  • முகமது அஸ் ரி தன் வீட்டின் சமையலறையில்
    முகமது அஸ் ரி தன் வீட்டின் சமையலறையில்

இருபத்தாறு வயதே நிரம்பிய முகமது அஸ் ரி அப்துல் ரஹிம் தனது புத்திசாலித்தனமான முடிவுக்காகச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறார். மலேசியா நாட்டின் க்வால லங்காட்டின் மாவட்டத்தில் வசிக்கும் இவர் ஒரு சிஸ்டம் டெவலப்பர். மென்பொருள் துறையில் வேலைசெய்தாலும் இவரது மாத வருமானம் 3,500 மலேசிய ரிங்கிட்கள்தான். இன்னும் திருமணம் செய்துகொள்ளாத இந்த பேச்சிலருக்கு எல்லோரையும் போல சொந்த வீட்டுக் கனவு இருக்காதா என்ன?

தனது மாத ஊதியம்போல் எத்தனை மடங்கு வீட்டுக் கடன் கிடைக்கும் என வங்கியின் படியேறி விசாரித்தபோது அவருக்கு அதிர்ச்சி. பதினைந்து லட்சம் மலேசிய ரிங்கிட்களை வீட்டுக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதை 30 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தவேண்டும்; முதல் 7 ஆண்டுகள் வட்டியை மட்டுமே செலுத்த முடியும் என்று தெரிந்துகொண்டதும் தெறித்து ஓடிவந்திருக்கிறார்.

“அத்தனை நீண்டகால வீட்டுக் கடனுக்காக என் வாழ்க்கையையே அடமானம் வைக்க வேண்டியிருக்கும் என்ற ஞானத்தைப் பெற்றுக் கொண்டேன். என்றாலும் என் மாதச் சம்பளத்தில் பாதியை நான் தங்கி வந்த அறைக்கான வாடகையாகக் கொடுத்துவந்தது இனியும் தொடரக் கூடாது என்று முடிவு செய்தேன். அப்போதுதான் பயன்படுத்தப்பட்ட ஷிப்பிங் கண்டெய்னர்களை மறுசுழற்சி முறையில் பட்ஜெட் வீடுகளாக மாற்ற முடியும்; அதன்மூலம் சுற்றுச்சூழலுக்கும் நம்மால் நன்மை செய்ய முடியும் என்பதை இணையம் வழியே படித்தேன். அந்த கனமே என் கனவு வீட்டுக்கான ஐடியா பிறந்துவிட்டது” என துள்ளலாக பேட்டியளித்திருக்கிறார்.

அஸ் ரி செய்தது இவ்வளவுதான். ஐந்தே ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வண்ணம் 75 ஆயிரம் மலேசிய ரிங்கிட்டுகளை தனிநபர்க் கடனாகப் வாங்கியவர் அதைக் கொண்டு தான் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கம்போங் என்ற இடத்தில் 2, 400 சதுர அடி விவசாய நிலத்தை வாங்கியிருக்கிறார். தனது நிலத்தை சீர்திருத்திய கையோடு பழைய ஷிப்பிங் கண்டெய்னர்கள் விற்கும் கடைக்குச் சென்று 20 அடி நீளம் கொண்ட இரண்டு கண்டெய்னர்களை வாங்கிவந்து தனது வீட்டை உருவாக்கிவிட்டார் அஸ்ரி.

இவரது கண்டெய்னர் வீட்டில் ஒரு சமையலறை, கழிவறை, சொகுசான படுக்கையறை உண்டு. கண்டெய்னரின் மேல்பகுதியில் பிளாஸ்டிக் ஷீட்டுகளைக் கொண்டு ஒரு படிப்பறையும் உருவாக்கிவிட்டார்.

அஸ்ரி இத்துடன் நின்றுவிடவில்லை. தனது நிலத்தைச் சிறிய இயற்கை விவசாயப் பண்ணையாகவும் மாற்றிவிட்டார். தன் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை இங்கேயே விளைவித்துக்கொள்ளும் அஸ் ரி, கூடுதல் வருமானம் ஈட்ட ஸ்டீயா செடிகளை இங்கே பயிரிட்டு விற்பனை செய்கிறார். அஸ் ரியின் வீட்டுக்கு வரும் அவரது நண்பர்களை வரவேற்கிறது ‘இது கூடல்ல.. என கனவு’ என்ற நல்வரவுப் பலகை.

அஸ் ரி மட்டுமல்ல, ஷிப் கண்டெய்னர்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி அகதிகளுக்கு வீடு அமைத்துத் தரும் முறை உலகின் பல நாடுகளில் பரவிவருகிறது. அகதிகளுக்கு என்றில்லாமல் கண்டெய்னர்களைப் பயன்படுத்தி அலுவலகம், பள்ளிக்கூடம் கூட்டுக் குடியிருப்பு போன்றவற்றை அமைத்துப் பயன்படுத்தும் முயற்சி ஐரோப்பாவின் பலநாடுகளில் சுற்றுச்சுழல் ஆர்வலர்களிடையே வேகமாகப் பரவிவருகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் தொழிலாளர்களுக்கான விடுதிகள், தற்காலிக அலுவலங்கள் கண்டெய்னர்கள் கொண்டு அமைக்கப்பட்டுவருகின்றன.

http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/article7876323.ece?widget-art=four-all

  • தொடங்கியவர்

12227134_1022985237760266_70608689150008

15 ஆண்டுகளுக்கு முன்  Old Trafford இல் குழந்தையாக புருக்லீன் பெக்காம்...நேற்று அதே  Old Trafford இல்கால்பந்து வீரராக!

  • தொடங்கியவர்

12240966_942902755758419_648983611408203

புதிய பாதை விரித்து புதுமைப்பித்தனாக புதுமை படைக்கும் புதுமை விரும்பி...
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கவிஞர், படைப்பாளி என்று பல அவதாரம் எடுத்து ரசிக்க வைக்கும் - 'கிறுக்கல்கள்' புகழ் R.பார்த்திபனின் பிறந்தநாள் நேற்று..

  • தொடங்கியவர்

 

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்

12239471_1022682331123890_92143202895057

இப்போ தமிழ்நாட்டுக்காரன்!

யாருக்குப்பா தண்ணி வேணும் கேரளாவுக்கா கர்நாடகாவுக்கா...!

  • தொடங்கியவர்

11234993_942890005759694_167387766718615

உலகின் அதிவேக, அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கியவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய பயிற்றுவிப்பாளருமான வக்கார் யூனிஸின் பிறந்தநாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.