Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளவயதுத் திருமணமும் மாணவர் இடைவிலகலும் பாரிய சவால்

Featured Replies

article_1446357580-sals1.jpg

இளவயதுத் திருமணமும் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய சவாலாக உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

சிறுவர் உரிமைகள் தொடர்பான குறும்படங்களின் தொகுப்பு மற்றும் பாடல் வெளியீட்டு விழா, மட்டக்களப்பு செங்கலடி செல்லம் பிறீமியர் திரைப்பட மாளிகையில் சனிக்கிழமை (31) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு உரையாற்றிய அவர், 'ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தினாலும் ஏனைய சிறுவர் நலன்சார்ந்த அமைப்புகளினாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் சம்பந்தமாக மிக முக்கியமான பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன.

இளவயதுத் திருமணம், பாடசாலையிலிருந்து இடைவிலகல் உட்பட தங்களது எதிர்கால வாழ்க்கையைச் சீர்குலைக்கின்ற நிலைமை காணப்படுவதாக ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.' என்றார்.  

'பாடசாலைக்குச் செல்லவேண்டிய சிறுவர்கள் வீதியில் பொருட்கள் விற்பனை செய்வதை வாகரையில் நாங்கள் அவதானித்திருந்தோம். இருப்பினும், வாகரைப் பிரதேச செயலாளரின் அயராத முயற்சினால் அந்த நிலைமை தற்போது  மாற்றமடைந்துள்ளது.

எமது எதிர்கால வளம் சிறுவர் சமூதாயம். இந்தச் சமூதாயத்தை முளையில் கிள்ளியெறிந்து சீரழிக்காது பாதுகாக்க வேண்டும். சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற மனப்பாங்கு அனைத்துத் தரப்பினரிடமும்  வரவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

article_1446357696-2a.jpg

http://www.tamilmirror.lk/157978/இளவயத-த-த-ர-மணம-ம-ம-ணவர-இட-வ-லகல-ம-ப-ர-ய-சவ-ல-#sthash.2CEVLAVn.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.