Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோ.பத்மநாதனிடம் ஒரு நிமிடம்

Featured Replies

article_1445775293-000.jpg


?         உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
நான் பேர்னாட்ஷோவின் ரசிகன்.  உலகில் மிக முக்கியமான மூவரைச் சொல்லுங்கள் என அவரை ஒரு நிருபர்; கேட்டார். 'முதலாவது சேர்;ச்சில், இரண்டாவது ஸ்டாலின், மூன்றாமவர் பேரைச் சொல்லத் தன்னடக்கம் தடுக்கிறது' என ஷோ கூறினார்.

? நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?

இது எதிர்மறையான கேள்வி.   இளம் வயதில் அரச சேவையில்  - மேலதிகாரிகளோடு முரண்பட்டிருக்கிறேன்.  வயதாக ஆக முரண்படாமல் இணக்கமாக சமூகத்தில் பழகக் கற்றிருக்கிறேன்.

?    இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?

மஹாகவியும் முருகையனும் செய்த „கவிதைச் சமர்... நினைவில் நிற்கிறது.  „மார்க்ஸுன் கல்லறையிலிருந்து ஒரு குரல்... என்று வெங்கட் சாமிநாதன் எழுதியதற்கு எம்.ஏ.நு‡மான் எழுதிய மறுப்புப் பிரசித்தமானது. ஒரு காலத்தில் எங்கள் போர்கள் காணிகளின் எல்லை                     (வேலி)களில் நடந்தன. அந்தப் பயிற்சி இன்று காணி பிடுங்கும் படையினரோடு மோத மக்களுக்கு உதவுகிறது.

?    உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்;கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள்? பெயர் விவரங்களுடன்?

கல்வயல் குமாரசாமி மல்லிகை முகங்களுக்கு எழுதினார்;. கந்தையா ஸ்ரீகணேசன் ஞானத்தில் நீண்டதொரு கட்டுரை எழுதியிருக்கிறார். கோகிலா மகேந்திரன் பல சந்தர்;ப்பங்களில் பேசியும் எழுதியும் உள்ளார். பேராசிரியர்; சிவலிங்கராஜா, அமரர்கள் ஏ.ஜே.கனகரத்தினா, கவிஞர் க.சச்சிதானந்தன், பேராசிரியர் மௌனகுரு, ஓவியர் ஆசை இராசையா,  கவிஞர்கள் ஜெயசீலன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், இ.சு.முரளீதரன், பா.மகாலிங்கசிவம் என வரிசை நீளும்.

?    நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?

குழந்தை ம.சண்முகலிங்கம், செங்கை ஆழியான், முருகையன், நீலவாணன், சத்தியசீலன் ஆகியோர் படைப்புலகம் பற்றி எழுதியிருக்கிறேன்.

?    யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்?

கி.ராஜநாராயணன், அ.முத்துலிங்கம் இருவரையும் உச்சிமேற்கொள்கிறேன்.

?    இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?

அப்படித் தோன்றியதில்லை.

?    இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
Chinua Achebe இன் „ Things Fall Apar...,  Antoine Saint- Exuperi எழுதிய „குட்டி இளவரசன்... ஆகிய நூல்களை வாசிக்கும்போது அந்த உணர்வு ஏற்பட்டதுண்டு.

?    உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
எனக்குப் பிடித்த சஞ்சிகைகள் அற்பாயுசில் நின்று விடுகின்றன.

?    உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமொரு படைப்புக்கான விலை என்ன?

இந்த நாட்டில் எழுத்துக்கு ஏது பொருளாதார மதிப்பு? „கவிதை காலித்தால் ஊரென்ன காசா கொடுக்கிறது?... என்று பாடினார்; மஹாகவி

?    இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?

ஆங்கிலம், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் ஒரு படைப்பு வந்தால் நோபல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.  இந்நிலைமை சரியல்ல.

?    உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?

தமிழ், ஆங்கிலம், ஓரளவு சிங்களம், கொஞ்சம் பிரெஞ்ச்.
 

?    முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரனியல் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
Journalism is Literature in a hurry...என்பர். ஊடகங்களில் அவசரம் இருக்கும் அளவுக்கு ஆழம் இல்லை. இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்... படைக்கிறார்கள். புறநடைகள் இருக்கலாம்.   முகநூலின் வருகையோடு நம் எழுத்தாளர்கள் போராளிகளாகிவிட்டார்கள்.

?    உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?

இல்லத்தை நிர்வகிக்கும் மனைவி, வளர்ந்து ஆளாகிவிட்ட மக்கள் நால்வர், கடைக்குட்டி பெண். ஆண்களுள் ஒருவர் மட்டும் இலங்கையில்.

?    எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?

ஓங்கிக் குத்துவதால் கை தான் வலிக்கும்.

t: http://www.tamilmirror.lk/157446/ச-பத-மந-தன-டம-ஒர-ந-ம-டம-#sthash.a47bZdok.dpuf

 

எழுபதுகளில் எனது அம்மா ஆசிரியராக இருக்கும் பாடசாலையில் ஆரிரியராக வந்தார் .அது நான் சிறு வயதில் படித்த பாடசாலைதான் .தினமும் எனது வீட்டிற்கு முன்பாக சயிக்கிளில் செல்லும்போது காண்பேன் .அந்த நேரம் நாங்கள் ரொம்ப பிஸி ரொம்ப பிஸி .ஒரு தமிழ் பாடசாலை ஆசிரியராக மட்டும் தெரிந்தார் .

எழுபதுகளின் இறுதிகளில் இலங்கை  வானொலியில் இவரின் நாடகம் ஒன்று ஒலிபரப்பானது .பெயர் நினைவில்லை அரச நாடகம் .மிக சோகமான நாடகம் வானொலி கேட்டுக்கொண்டிருந்த குடும்பத்தினர் கண் கலங்கினார்கள் .அன்று அவரில் ஒரு மதிப்பு வந்தது .

எண்பதுகளின் ஆரம்பத்தில் ஸ்கொலர்சிப்பில் இங்கிலாந்து வந்தார் .அவர் வந்த படிக்க வந்த யுனிவெர்சிட்டி லண்டனை விட்டு சற்று தள்ளியிருந்தது .வார விடுமுறை நாட்களில்   லண்டன் வரும்போது  அம்மா ஏற்பாடு செய்து எனது அக்கா  வீட்டில் தான் தங்கினார் அதே வீட்டில் தான் அப்போது நான் இருந்தேன் .காலை எழும்பி அசல் தமிழன் போல தலை மேவி இழுத்து திருநீறு பூசி வெளிகிட்டு ஆனால் கோட் சூட் ரை யுடன்  நிற்பார் .அந்த நாட்களில் தான் அவருடன் கொஞ்சம் பழகினேன் .ஆங்கிலத்தில் டிப்ளோமா ஸ்கொலர்சிப்பில் வந்திருக்கின்றார் என்றவுடன் நம்பமுடியாமல் இருந்தது அதுவும் ஒரு தமிழ் பாடசாலை ஆசிரியர் .

பின்னர் அவரது மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் பல வாசித்தேன் குறிப்பாக ஆபிரிக்க கவிதைகள் . எழுத்தாளர் சுஜாதா கூட இவரை பற்றி சில குறிப்புகள் எழுதியிருந்தார் .

எழு எட்டு வருடங்களுக்கு முதல் இலங்கை சென்ற சமயம் சந்தித்து கதைத்தேன் .மிக எளிமையான அருமையான ஒரு மனிதர் .அறிவுக்கடல் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.