Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையகத்தில் சீரற்ற காலநிலை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Featured Replies

மலையகத்தில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

flood_6.jpg

அந்தவகையில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ்  பகுதியில் Nநுற்று மாலை பெய்த கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மேற்படி தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததால் வெள்ளம் அப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் உட்புகுந்ததால் 70 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

எனினும் நீர் வடிந்து சென்றதன் பின் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விட்டனர்.

இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

அத்தோடு ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதி நேற்றிரவு நீரில் மூழ்கியது. இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மேலும் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தை சேர்ந்த 25 வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்ததனால் மக்கள் இடம் பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். அத்துடன்  நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலரண்டன் தோட்டத்தில் 45 க்கும் மேற்பட்ட வீடுகளும் நீரில் மூழ்கி உள்ளன.

இது தவிர தலவாக்கலை டயகம பிரதான வீதியில் பாரிய கற்பாரைகள் சரிந்து விழுந்ததால் சில மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. அக்கரப்பத்தனை ஹோல்புரூக் நகரத்தில் ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகாமையில் பாரிய மண்மேடுகள் சரிந்த வண்ணம் இருப்பதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதனால் மேலும் அனர்த்தங்கள் நிகழக்கூடும் என மக்கள் கருதுகின்றனர். கடும் மழை காரணமாக பெருமளவு பயிர்ச்செய்கை நிலங்களும் நீரில் மூழ்கி உள்ளன.

மேலும் அக்கரபத்தனை ஆகுரோவா தோட்டத்தில் மண்மேடு சரிந்துள்ளது. இதன்காரணமாக மூன்று வீடுகள் சேதமாகியுள்ளது. அத்தோடு அதே தோட்டத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் பின் பகுதியில் பாரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அக்கரபத்தனை  நல்லதண்ணி தோட்டத்தில் மண்சரிவால் 3 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது.

அத்தோடு லக்ஸபான பிரதேசத்தில் நேற் முதல் பெய்து கடும் மழை காரணமாக லக்ஸபான நீர்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் இரண்டு அங்குலத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், நோட்டன் பகுதியில் பெய்த கடும் மழையினால் விமல சுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு மேலாக வெள்ளம் பெருகெடுத்துள்ளதாகவும், அத்துடன் காசல்ரீ நீர்தேக்கத்தில் அணைக்கட்டுக்கு மேலாக நீர் பெருக்கெடுத்துள்ளது. 

மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீர் நிரம்புவதற்கு இன்னும் ஐந்து அடி மாத்திரமே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சிய மழை பெய்யும் பட்சத்தில் மலையகத்தில் உள்ள ஏனைய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறந்துவிட வேண்டிய நிலை காணப்படுவதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ்பகுதியில் ஆற்றுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மரக்கறி மற்றும் தேயிலை உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

மழை காரணமாக பல இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்புக்களும் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

http://virakesari.lk/articles/2015/11/06/மலையகத்தில்-சீரற்ற-காலநிலை-மக்களின்-இயல்பு-வாழ்க்கை-பாதிப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.