Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லைக்கா குழுமத்தின் லைக்கா ஹெல்த் உதயமாகியுள்ளது:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா குழுமத்தின் லைக்கா ஹெல்த் உதயமாகியுள்ளது:-

06 நவம்பர் 2015

லைக்கா குழுமத்தின் லைக்கா ஹெல்த் உதயமாகியுள்ளது:-

லைக்கா மொபைல் குழுமத்தின் மற்றொமொரு அங்கமாக லைக்கா ஹெல்த் உருவாக்கம் பெற்றுள்ளது. நேற்றையதினம் நொவெம்பர் 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு 1 West Ferry Circus, Canary Wharf, London E14 4 HD எனும் முகவரியில் அமைந்துள்ள லைக்கா ஹெல்த், நல நிலையம் லண்டன் மாநகர மேயர் பொரிஸ் ஜோன்சனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


லைக்கா ஹெல்த்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டொக்டர். மன்பிரீத் குலாத்தி இந்த லைக்கா ஹெல்த் நல நிலையம் குறித்து தெரிவிக்கையில்; உயர்ந்த தரத்திலான அதிநவீன சேவையை மருத்துவத்துறைக்கு கொண்டுவருகின்ற வகையில் இந்த நல நிலையம் ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.


லைக்கா ஹெல்த்தின் வளர்ச்சித்திட்டத்தின் அங்கமாக முதலாவது நல நிலையம் Canary Wharf இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு மிகத்துல்லியமான முறையில் நோயினது தன்மையை கண்டறிந்து விரைவான சிகிச்சையினை வழங்கும் நோக்கமாக லைக்கா ஹெல்த் உருவாக்கம் பெற்றுள்ளது.


தனியார் மருத்துவத்துறையாக விளங்கும் இங்கு வெளிநோயாளர் பிரிவில் இதயநோய்கள்,,நரம்பியல், பெண்நோயியல், நரம்பியல் சத்திரசிகிச்சை, நித்திரையின்மை, குடல் நோய்கள், காது- மூக்கு- தொண்டை முதலான நோய்களுக்கான பரிசோதனைகளை மேற் கொள்ளலாம்.


லண்டனின் நிதி மையமான கனரி வோர்ப் (Canary Wharf) பகுதியில் அதி நவீன மருத்துவ ஆய்வு கூடம் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ நல நிலையமானது நோயாளர்களின்  போக்குவரத்துக்கு வசதியாகவும் அமைந்துள்ளது.


நேற்றையதினம் நடைபெற்ற திறப்புவிழாவில் லண்டன் மேயர் பொரிஸ் ஜோன்சன், லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா, திருமதி சுபாஸ்கரன்,பிரதி தலைவர் பிரேம் சிவசாமி மற்றும் அதிகாரிகள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125672/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

"லைக்கா"...  தனது பணவரவைக் கொண்டு....  செய்வது  மகிழ்ச்சியான விடயம்.
ஆனாலும்.... தாயகத்தில்,  உள்ள முன்னாள் போராளிகள்..... நோயினாலும், வேலை வாய்ப்பின்றியும் சிரமப் படுகின்றார்கள்.
அதனை அவர்கள்... நேரடியாக செய்ய சில சிக்கல்கள் இருந்தாலும், யாழ்களத்தினுடாக.... செய்வதில் சிரமம் இல்லை என நினைக்கின்றேன்.
"மனம் இருந்தால்.... இடம் உண்டு".   "லைக்கா....." liebe2.gif :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

mullai2_zpssnzuffyq.jpg

இந்தப் படம்... லைக்காவையும், மனம் சிந்திக்க வைக்கும்... என்ற நம்பிக்கை உள்ளது.
லைக்காவால்.... நேசக்கரத்துக்கு, நேரடியாக... அனுப்ப சிக்கல் இருந்தால்....
யாழ். கள பொறுப்பாளர் திரு. மோகன் அண்ணாவிடம், தொடர்பு கொள்ளலாம். லைக்கா....

படம்: சாந்தியின்... ஒரு, பதிவில் இருந்து எடுத்தது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.