Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிகாவின் மகன் விமுக்தியை அரசியலுக்கு கொண்டு வர முனைகிறதாம் இந்தியா! - சிங்கள ஊடகம் கூறுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகாவின் மகன் விமுக்தியை அரசியலுக்கு கொண்டு வர முனைகிறதாம் இந்தியா! - சிங்கள ஊடகம் கூறுகிறது. 
[Sunday 2015-11-08 08:00]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மகன் விமுக்தி குமாரதுங்கவை அரசியலில் ஈடுபடுத்த இந்தியா முயற்சிப்பதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே விமுக்தியை அரசியலில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இந்திய முயற்சித்து வருகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்று பிணைப்பினை மேலும் வலுப்படுத்திக் கொள்ள, இந்தியாவுடன் எப்போதும் நட்புறவு பேணிய பண்டாரநாயக்க குடும்பத்தின் உறுப்பினர் ஒருவரை அரசியலில் களமிறக்குவது மிகவும் நம்பகமானது என இந்தியா கருதுகின்றது. இந்த விவகாரம் குறித்த இந்திய உளவுப் பிரிவான றோவின் உயர் அதிகாரியொருவர் பண்டாரநாயக்க குடும்பத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

எனினும், சந்திரிக்காவின் இரண்டு பிள்ளைகளும் எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை என்பதுடன் தாயும் அரசியலில் ஈடுபடக் கூடாது என எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றார்கள். கடந்த தேர்தல்களின் போது சந்திரிக்கா அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கும் பிள்ளைகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். எவ்வாறெனினும் விமுக்தி விரும்பினால் அரசியலில் ஈடுபடுவதனை தாம் தடுக்கவில்லை என சந்திரிக்கா கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் பிரபல மிருக வைத்தியரான விமுக்தி குமாரதுங்கவிற்காக அதி நவீன மிருக வைத்தியசாலை ஒன்றும் தங்குவதற்கு வீடு ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பது குறித்து இன்னமும் விமுக்தி தீர்மானிக்கவில்லை என பண்டாரநாயக்க குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமுக்தி இலங்கையில் அரசியலில் ஈடுபட்டால் அவர் எதிர்நோக்கும் பிரதான சவால் மொழிப் பிரச்சினையாகும், ஏனெனில் விமுக்திக்கு சரளமாக சிங்கள மொழி பேச முடியாது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.
http://www.seithy.com/breifNews.php?newsID=144285&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.