Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த குடும்பமும் சகாக்களும் மேற்கொண்ட ஹெலிகொப்டர் பயணங்களுக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த குடும்பமும் சகாக்களும் மேற்கொண்ட ஹெலிகொப்டர் பயணங்களுக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை:-
08 நவம்பர் 2015

மஹிந்த குடும்பமும் சகாக்களும் மேற்கொண்ட ஹெலிகொப்டர் பயணங்களுக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை:-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினரும், அவரது சகாக்களும் ஹெலிகொப்டர்களில் மேற்கொண்ட பயணங்களுக்கான கட்டணங்கள் இதுவiரியல் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமா ஹெலிகொப்டர்களின் ஊடாக கடன் அடிப்படையில் பயணங்கள் மேற்கொண்ட போதிலும் அந்தக் கடன் இதுவரையில் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து இதுவரையில் விசாரணைகளும் நடத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சோ அல்லது சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் தரப்பி;னரோ செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை அறவீடு செய்வதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஹெலிகொப்டர் பயணங்களுக்காக 31 மில்லியன் பணம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதி முதல் ஜனவரி மாதம் 8ம் திகதி வரையிலான காலப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ 25 தடவைகள் ஹெலிகொப்டர் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இதற்காக 15.08 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் இவை மக்களிடமிருந்து அறவீட செய்யப்படும் வரியின் ஊடாகவே செலவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பெசில் ராஜபக்ஸ, விமல் வீரவன்ச, தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த, தினேஸ் குணவர்தன, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பின்னர் மஹிந்தவிற்கு ஆதரவளித்த சரத் மனமேந்திர உள்ளிட்ட பலரும் இவ்வாறு ஹெலிகொப்டர் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

மஹிந்தவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸ, பத்து கிலோ மீற்றர் தூரத்தையும் ஹெலிகொப்டர் மூலம் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவிற்கு அமைய இந்த பயணங்கள் வழங்கப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஹெலிகொப்டர் பயணங்களுக்கு அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸவே அனுமதியளித்துள்ளதாக தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த கடன்களுக்கான பொறுப்பினை கோதபாய ராஜபக்ஸ ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகின்றதா என்பது தெரியாது எனவும், சட்ட மா அதிபரே இது குறித்து நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் முதற்குடும்பத்தினரிற்கு இலங்கை விமானப்படை விமானங்களில் இலவச பயணங்களை வழங்கியதால் மக்களின் வரிப்பணத்தில் பல மில்லியன் வீணாக்கப்பட்டுள்ளது:-

முன்னாள் முதற்குடும்பத்தினரிற்கு இலங்கை விமானப்படை விமானங்களில் இலவச பயணங்களை வழங்கியதால் மக்களின் வரிப்பணத்தில் பல மில்லியன் வீணாக்கப்பட்டுள்ளது குறித்த விசாரணைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


முன்னைய முதற்குடும்பத்தினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இலங்கை விமானப்படையினரிற்கு 31 மில்லியனிற்கு மேல் செலுத்தவேண்டியுள்ளதாக தெரியவருகின்ற போதிலும்,கடந்த பத்து மாதங்களில் இந்த பணத்தை பெறுவதற்கு பாதுகாப்பு அமைச்சோ அல்லது விமானப்படையினரோ எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இலங்கை விமானப்படையினர் கடன்அடிப்படையிலேயே இந்த பிரயாணங்களிற்கு விமானங்களை  ஹெலிக்கொப்டர்களை வழங்கினர், இன்னமும் செலுத்தப்படாமல் இருக்கின்ற கட்டணங்களை மீள பெறாவிட்டால்,இலங்கை விமானப்படை பாரிய இழப்பை சந்திக்கப்போகின்றது என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டிசம்பர் 2014 முதலாம் திகதி முதல் 2015 ஜனவரி இரண்டாம் திகதி வரை 25 தடவைகள் இலங்கை வமானப்படை விமானங்களை பயன்படுத்தினார், இதற்கான செலவு 15.08 மில்லியன்,ஏழு தடவை விமானப்பயணங்களை மேற்கொண்ட பசில் 4.8 மில்லியனை செலுத்த வேண்டியுள்ளது,என விமானப்படை வடடாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரிலேயே முன்னாள் முதற்குடும்பத்தினருக்கும் அவர்களது ஆதரவாளர்களிற்கும் விமானப்பயண ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் விங்கொமாண்டர் ஜிஹான்செனிவரத்தின தெரிவித்துள்ளார்.

எனினும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே முந்தைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் இவ்வாறான விமானப்பயணங்களிற்கான உத்தரவுகளை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125709/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.