Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முழு அரச மரியாதைகளுடன் இன்று சோபித தேரரின் இறுதிச்சடங்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியை இன்று பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் அரச மரியாதையுடன் நடைபெறும். இதற்காக பாராளுமன்ற வளாகத்திலும் வீதி போக்குவரத்திலும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பொதுமக்கள் தமது உயர்வான கெளரவத்தை அன்னாருக்கு பெற்றுத் தர வேண்டுமென இதற்கான ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியை இன்று பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் அரச மரியாதையுடன் நடைபெறும். இதற்காக பாராளுமன்ற வளாகத்திலும் வீதி போக்குவரத்திலும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பொதுமக்கள் தமது உயர்வான கெளரவத்தை அன்னாருக்கு பெற்றுத் தர வேண்டுமென இதற்கான ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

   

சோபித்த தேரரின் இறுதிக்கிரியைகளில் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 1900 பொலிஸார் இன்றைய தினம் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சோபித தேரரின் பூதவுடல் கோட்டே ஸ்ரீ நாகவிஹாரையிலிருந்து பாராளுமன்ற வளாகத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். பாராளுமன்ற வளாகத்திற்குள் மஹா சங்கத்தினருக்கான 5 ஆயிரம் ஆசனங்களும் அதி முக்கியஸ்தர்களுக்காக 4 ஆயிரம் ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பாராளுமன்ற எம்.பிக்கள்,ஆளுநர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் வருகை தரவுள்ளனர். வெளிநாட்டு தூதுவர்களுக்காக 44 ஆசனங்கள் இங்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக பூதவுடலுடனான ஊர்வலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.

கொட்டே ஸ்ரீ நாகவிஹாரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் பூதவுடலுக்கு நேற்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு வந்து இறுதியஞ்சலி செலுத்தினர். இம் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. இவர்களை முறையாக அணி வகுக்கச் செய்ய பாதுகாப்பு பிரிவினர் பெரும் பிரயத்தனங்களை எதிர்கொண்டனர்.

இன்றைய தினம் சோக தினமாக பிரகடனம் செய்யப்பட்டிருப்பதால் அரச நிறுவனங்களில் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும் வீடுகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வாகனங்களில் மஞ்சள் கொடியினை பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள், திரையரங்குகள், மேல் மாகாணத்திலுள்ள பிரிவெனாக்கள் இன்று மூடப்படும்.

சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான நிகழ்வுகள் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேரடி ஒளி, ஒலிபரப்பு செய்யப்படும்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=144583&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.