Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியின் அனைத்து குளங்களும் நிரம்பி வான் பாய்கிறது. இரணைமடுவின் எல்லா வான் கதவுகளும் திறப்பு

Featured Replies

கிளிநொச்சியின் அனைத்து குளங்களும் நிரம்பி வான் பாய்கிறது. இரணைமடுவின்  எல்லா வான் கதவுகளும் திறப்பு:


கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து குளங்களும் வான் பாய்கிறது என  கிளிநொச்சி  பிராந்திய  நீர்ப்பாசன  பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார். இரணைமடுக்குளம், அக்கராயன்குளம், புதுமுறிப்புகுளம், கனகாம்பிகைகுளம், கல்மடுகுளம், வன்னேரிகுளம், கரியாலைநாகபடுவான்குளம், பிரமந்தனாறுகுளம் போன்ற பெரியகுளங்கள் உள்ளிட்ட சிறுகுளங்கள் அனைத்தும்  வான் பாய்கிறது.


இரணைமடுகுளத்தின் அனைத்து வான்கதவுகளும் முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது. குளத்திற்கு அதிகளவு நீர் வந்துகொண்டிருக்கின்றமையினால் முழுமையாக எல்லா வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. இயங்காது பூட்டிய நிலையில் இருந்து ஆறாவது வான் கதவும் இன்று கடற்படையின் பொறியியல் பிரிவின் உதவுயுடன் திறக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் சுதாகரன்  குறிப்பிட்டுள்ளார்.


இரனைமடுகுளத்தின் நீர் மட்டத்தை 26 அடியாக  இவ்வருடம் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்ட போதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக 32.5 அடியாக இன்று ஞாயிறு கிழமை மதியம் நீர்  மட்டம் காணப்பட்டது. எனவேதான் எல்லா வான் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. இருந்தும் அதிகரித்த நீர்  குளத்திற்கு வந்துகொண்டிருப்பதாக அவ ர்  தெரிவிக்கின்றார்
  
 அதிகரித்த மழையும் குளங்கள் வான்பாய்வதாலும் பிரதான போக்குவரத்து வீதிகளான பூநகரி மன்னார் ஏ32 வீதியின் மண்டகல்லாறு பகுதியில் ஜந்தடிக்கு மேல் நீர்   பாய்வதனால் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளை முறிகண்டி முழங்காவில் வீதியும் அக்கராயன் பகுதியில் முற்றாக போக்குவரத்துச் செய்ய முடியா நிலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125945/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.