Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் இன்றைய பதிலிலேயே எம் தோழர்களின் மரணம் முடிவாகும் (த.தே.கூட்டமைப்பும் எம்மை ஏமாற்றி விட்டது; பிணையில் விடுதலையான கைதிகள் பகிரங்கப் பேச்சு)

Featured Replies

7928.jpg

தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் இன்று வெளி யிடப்படவுள்ள ஜனாதிபதியின் பதில் திருப்தியாக அமையாவிட்டால் மர ணம் ஒன்றே எமது தோழர்களது முடிவு என சில தினங்களுக்கு முன் னர் பிணையில்  விடுதலையாகிய அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
 உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை யினை வலியுறுத்தி அரசியல் கட்சி கள் செய்யும் தந்திரோபாயங்கள் குறித்து ஊடகங்களுக்கு கைதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

இது தொடர்பில் கைதிகள் சார்பில் கருத்து தெரிவித்த வீரசிங்கம் சுலக் சன் என்பவர் மேலும் கூறுகையில்;,
67 வருட இலங்கை அரசியலில் ஆட்சிப் பீடமேறும் அனைத்து சிங்கள பேரினவாதிகளும், தமிழ் இனத்தினை போலி வாக்குறுதிகளின் மூலம் ஏமாற்றும் அரசியல் தந்திரங்களையே கையாள்கின்றார்கள். இருந்தாலும் இலங்கையில் ஜனவரி 08 ஆம் திகதி நல்லாட்சி ஒன்று ஏற்படும் அதற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கியிருந்தனர்.
ஆதன் பேரிலேயே மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். தமிழ் மக்களுக்கு நல்லாட்சி என்று கூறப்படும் இந்த ஆட்சி மூலம் என்ன நன்மை கிடைத்தது. தமக்குரிய விடுதலையை எதிர்பார்த்து, பல வருடங்களின் பின்பு மன விரக்தியில் சாவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலேயே இந்த நல்லாட்சி அரசாங்கம் நியாயமான தீர்;வினைப் பெற்றுத் தர முன்வராத போதும், தமிழரின் இனப்பிரச்சினையில் எவ்வாறு தமிழ் மக்கள் கௌரவாக வாழக்கூடிய தீர்வு ஒன்றினை இந்த அரசாங்கத்திடம் நாம் எதிர்பார்க்க முடியும்.

இலங்கையில் ஜனவரி 08 ஆம் திகதி நடந்தது நல்லாட்சி மாற்றம் ஒன்று கூறப்படுகின்றது. அது நல்லாட்சி மாற்றம் இல்லை. ஆள் மாறாட்டம் மட்டுமே. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் ஆகியோர் முன்பு உண்ணாவிரதம் இருந்த நேரம் சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்தனர்.
ஆதன்போது, நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் கைதிகள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும்தீர்;த்து வைக்கப்படுமென்று கூறினார்கள். ஜனாதிபதியை நாங்கள் முழுமையாக நம்புகின்றோம் நீங்களும் அவரை முழுமையாக நம்புங்கள் என்று கூறினார்கள். எமது உண்ணாவிரதத்தினையும் இருவரும் இணைந்து நிறைவு செய்து வைத்தார்கள்.

இன்று 17 ஆம் திகதியும் ஆக போகின்றது. சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சாகும் நிலமையில் தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள்.
வாக்குறுதி அளித்து எமது உண்ணாவிரத்தினை நிறைவுசெய்து வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இருவரையும் காணவில்லை.
எமது விவகாரத்தினாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையினை நம்பவைத்து கழுத்தறுத்த நல்லாட்சி அரசுடன் இன்னும் சுமூகமான உறவினை தமிழ் தேசிய கூட்டமைப்பு வைத்துக்கொள்வதன் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்கள். பேரம் பேசும் சக்தியினை எமக்கு அளியுங்கள் என்று கூறி தமிழ் மக்களிடம் வாக்குகளை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, தென்னிலங்கை அரசிடம் பேசிய பேரங்கள் என்ன என்றும் மீண்டும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இந்த நிலையில் ஒரு தமிழ் அரசியல் கைதியேனும் உயிரிழக்க நேரிட்டால், அதற்கான முழுப்பொறுப்பினையும், நிபந்தனையின்றி ஆதரவு வழங்கி அரசை ஆட்சிப் பீடமேற்றி, தொடர்ந்தும், அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே ஏற்க வேண்டும். இந்த ஊடக சந்திப்பால் எத்தகைய பிரச்சினை ஏற்பட்டாலும், அதனை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.
மீண்டும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, நாம் கைதுசெய்யப்படலாம், பிணை ரத்தாகலாம், மீண்டும் சிறையில் அடைக்கப்படலாம். ஆனால், சிறையில் சாவோடு போராடும் எமது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக நாம் எதனையும் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்றும் அவர்கள் உணர்வு பூர்வமாக கூறினார்கள்.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=7928&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.