Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனர்வாழ்வுத் திட்டத்துக்கு அரசியல் கைதிகள் இணக்கம்! - தற்காலிகமாக உண்ணாவிரதம் இடைநிறுத்தம் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புனர்வாழ்வுத் திட்டத்துக்கு அரசியல் கைதிகள் இணக்கம்! - தற்காலிகமாக உண்ணாவிரதம் இடைநிறுத்தம் 
[Tuesday 2015-11-17 10:00]

அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் துரித விடுதலை திட்டத்துக்கு தமிழ் அரசியல் கைதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதுடன், கடந்த 9 நாட்களாக மேற்கொண்டு வந்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் துரித விடுதலை திட்டத்துக்கு தமிழ் அரசியல் கைதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதுடன்,
கடந்த 9 நாட்களாக மேற்கொண்டு வந்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் துரித விடுதலை திட்டத்துக்கு தமிழ் அரசியல் கைதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதுடன், கடந்த 9 நாட்களாக மேற்கொண்டு வந்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.


எனினும் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரையில் தமது விடுதலைக்காக முன்வைக்கப்பட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்படாது போனால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட அறிவித்தலை சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்கக்கோரி 263 அரசியல் கைதிகள் 14 சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்குப் புனர்வாழ்வு வழங்கி அவர்களை விடுதலை செய்வதற்கு அரசு நேற்று இணக்கம் தெரிவித்திருந்தது.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின்போதே தமிழ் அரசியல் கைதிகளுக்குப் புனர்வாழ்வு வழங்கல் என்ற கோரிக்கையை அரசு சாதகமாகப் பரிசீலித்து அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், பயங்கரவாதத் தடுப்பு - குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்குபற்றியிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட அரசின் தீர்மானத்தை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார உள்ளிட்டோர் நேற்று மாலை மகஸின் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளிடம் தெரிவித்தனர்.

"புனர்வாழ்வளிப்பது குறித்து தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்த விருப்புக்களை கருத்தில்கொண்டு நீதிதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள 85 கைதிகளுக்குப் புனர்வாழ்வளிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய புனர்வாழ்வுக்கான முதற்கட்ட குழுவினர் எதிர்வரும் 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

அதேவேளை, பிணை வழங்கும் பிரிவில் உள்ள 62 கைதிகளில் இன்று (நேற்று) வரைக்கும் 39 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 23 பேரும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் பிணையில் விடுவிக்கப்படுவார்கள். அதேவேளை, நீதிமன்றால் தண்டனை வழங்கப்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுப்பார்" என்று மகஸின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளிடம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தும் தமது முடிவை இன்று அறிவித்துள்ளனர்.
http://www.seithy.com/breifNews.php?newsID=145002&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.