Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மழை வெள்ளத்தினால் தொற்று நோய் அபாயம். பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மழை வெள்ளத்தினால் தொற்று நோய் அபாயம். பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்:-

17 நவம்பர் 2015
மழை வெள்ளத்தினால் தொற்று நோய் அபாயம். பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்:-

மழை வெள்ளத்தினால் தொற்று நோய் அபாயம். பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்:-

மழை வெள்ளத்தினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் பொது மக்களை அவ்வாற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு யாழ்.பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு அதிகாரி வைத்தியர் சு.சிவகணேஸ் அறிவுறுத்தி உள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மழை வெள்ளத்தினால் பரவும் கிருமிகளால் யாழில் வயிற்றோட்டம், வயிற்றுளைவு, செங்கமமாரி, நெருப்புக்காய்ச்சல் போன்ற தெற்று நோய் அதிகளவில் பரவும் வாய்ப்புக்கள் உள்ளன.

குறிப்பாக 15 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை இந்நோய் அதிகளவில் தாக்கும் அபாயம் உள்ளது.

வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 9 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வயிற்றுளைவினாலும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வறிய்றோட்டத்தினாலும், 150 ற்றும் மேற்பட்டவர்கள் நெருப்புக் காய்ச்சலினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், சங்காணை, சண்டிலிப்பாய், ஊர்காவற்றுறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை போன்ற பிரதேசங்களில் உள்ளவர்களை இந் நோய்கள் மிக வேகமாகத் தாக்குவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

யாழ்.மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் ஏற்கனவே குடிநீரில் உள்ள கிருமித் தாக்கம் காரணமாக ஏற்படும் நோய்கள் அதிகளவில் காணப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெற்றத்தினால் குடிநீரில் கழிவு நீர் வெகுவாக கலக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தனால் பலருடைய குடிநீர் கிணறுகளில் வெளி நீர் உட்புகந்துள்ளது. இவ்வாறு உட்புகந்த நீரில் கிருமித்தொற்று அதிகளவில் காணப்படுகின்றது.  

மலம், சிறுநீர் தொற்றுக்கள் நீருடன் அதிகளவில் கலப்பதால் இந் நோய் தாக்கங்கள் அதிகரிக்கின்றன. மேலும் இலையான்  பெருக்கத்தினாலும் இந் நோய் வேகமாக பரவுகின்றன.

குறிப்பாக இந் நோய் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை தாக்குகின்றது. ஆதிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை இந் நோய் வெகுவாகத் தாக்குகின்றது. ஏனவே சிறுவர்களுடைய பாதுகாப்புத் தொடர்பாக பெற்றோர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

தாய்ப்பால் ஊட்டும் குழந்தைகளுக்கு குறிப்பாக 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக தாய்பால் ஊட்டப்பட வேண்டும். ஏனைய குழந்தைகளுக்கான பால்மாவினை மருத்துவரின் சிபார்சின்படியே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் உணவு உட்கொள்ளும் முன்னர் கைகழுவுதலை கட்டாயமாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும், இதுமட்டுமல்லாமல் கொதித்தாறிய நீரினை அனைவரும் பருக வேண்டும். 

தொற்று நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்கான சகல வழிமுறைகளையும் பொது மக்கள் பின்பற்றினாலே தொற்று நோய் தாக்கங்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என மேலும் தெரிவித்தார்.

தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க விஷேட ஏற்பாடு:-


தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க விஷேட வைத்திய ஒழுங்குகள் செய்யப்பட்டு உள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் கடந்த தினங்களில் பெய்த கடும் மழை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக 30 கிழமைக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் 6 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் தாய்மார்களை தொற்று நோய்கள் மிக இலகுவில் தாக்கும் அபாயம் உள்ளது.

அவ்வாறானவர்கள் மிக இலகுவில் தொற்று நோய்களுக்கு உள்ளாகின்றனர். எனவே இவர்கள் விரும்பின் சுய விருப்பின் பேரில் வைத்திய சாலைகளில் அனுமதியாகலாம்.

அவ்வாறு வைத்திய சாலைகளில் அனுமதியானால் அவர்களை தொற்று நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள முடிவதுடன், அவர்களுக்கான சத்துணவுகள்,  மருத்துவ பராமரிப்புக்கள்  மற்றும் மருத்துவ ஆலோசனைகள் என்பவனவற்றை பெற்று கொள்ள முடியும்.

அவ்வாறு பலர் யாழில் உள்ள வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர் சில குடும்ப சூழல் காரணமாக அனுமதியாக விரும்பவில்லை.

இதேவேளை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளன. அதில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடாத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. என மேலும் தெரிவித்தார்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126027/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.