Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசீலாந்து எதிர் ஸ்ரீலங்கா டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.
 
இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. print.png
 
 

 
இலங்கையுடன் நடைப்பெறயுவுள்ள டெஸ்ட் போட்டிக்காக நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான 12 பேர் கொண்ட அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது

அதனடிப்படையில் , கடந்த போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாத அனுபவம் வாய்ந்த வீரர்களான மார்டின் கப்டில் மற்றும் மார்க் க்ரேக் ஆகியோர் தொடர்ந்தும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 10 ம் திகதி டனேடீன்னில் ஆரம்பமாகவுள்ளது.
 
  • தொடங்கியவர்

11183440_930837420296785_319078418567396

  • தொடங்கியவர்
நியூஸிலாந்தில் இன்று ஆரம்பமாகும் பயிற்சிப் போட்டியில் இலங்கை
2015-12-03 10:35:54

13567angelomathews_w0eqd3syalml1dfk7amy7நியூ­ஸி­லாந்­துக்கு கிரிக்கெட் விஜயம் செய்­துள்ள இலங்கை கிரிக்கெட் அணி இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள மூன்று நாள் பயிற்சிப் போட்­டியில் நியூ­ஸி­லாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் பதி­னொ­ருவர் அணியை எதிர்த்­தா­ட­வுள்­ளது.

 

இந்த மூன்று நாள் கிரிக்கெட் போட்டி குவின்ஸ் ட­வுனில் நடை­பெ­ற­வுள்­ளது.
எழுச்­சியை நோக்­கிய பாதையில் சென்­று­ கொண்­டி­ருக்கும் இலங்கை அணி அங்­குள்ள சீதோ­ஷ்ண நிலைக்கும் ஆடு­க­ளங்­களின் தன்­மைக்கும் தன்னை தயா­ரித்­துக்­கொள்­வ­தற்கு இந்தப் பயிற்சிப் போட்டி பெரிதும் உதவும்.

 

ஏஞ்­சலோ மெத்யூஸ் தலை­மை­யி­லான இலங்கை அணி சிறந்த பயிற்­சியைப் பெறும் பொருட்டு டெஸ்ட் அணியில் விளை­யா­ட­வுள்ள பதி­னொ­ரு­வரை இப் போட்­டியில் பரீட்­சிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

எனவே, இன்­றைய போட்­டியில் இலங்கை சார்­பாக திமுத் கரு­ணா­ரட்ன, உதார ஜய­சுந்­தர, கித்­ருவன் வித்­தா­னகே, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்­திமால், ஏஞ்­சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), மிலிந்த சிறி­வர்­தன, டில்­ருவன் பெரேரா, தம்­மிக்க பிரசாத், சுரங்க லக்மால், ரங்­கன ஹேரத் ஆகியோர் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக விளை­யா­டுவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

பந்­து­வீச்சில் மிலிந்த சிறி­வர்­தன, டில்­ருவன் பெரேரா, தம்­மிக்க பிரசாத், சுரங்க லக்மால், ரங்­கன ஹேரத் ஆகி­யோ­ருடன் ஜெவ்றி வெண்­டர்சே, நுவன் பிரதீப், துஷ்­மன்த சமீ­ரவும் இணைய வாய்ப்­புள்­ளது.

 

பயிற்சிப் போட்டியில் குழாமில் உள்ள 15 பேரும் துடுப்பாட்டத்திலும் களத்தடுப்பிலும் மாறி விளையாட அனுமதி உள்ளது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=13567#sthash.fwnOC0tz.dpuf
  • தொடங்கியவர்

இலங்கையை வீழ்த்துவோம் மக்கலம் தெரிவிப்பு

December 05, 2015

நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அணியை நியூசிலாந்து வீழ்த்தும் என்று தெரிவித்துள்ளார் நியூசிலாந்தின் தலைவரான மக்கலம். தொடர் தொடர்பாக மக்கலம் தெரிவிக்கையில் – ‘ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்ததை வைத்து நியூசிலாந்து பலவீனமாக உள்ளது என்று எவரும் எடைபோட்டுவிடக்கூடாது. 3

இரண்டாவது ஆட்டத்தில் லையனின் ஆட்டமிழப்பு தொடர்பான தீர்ப்பு எமக்குச் சாதகமாக அமைந்திருந்தால் நிச்சயம் நாம் தொடரைச் சமன் செய்திருப்போம். எல்லா அணிகளையும் போலவே சொந்த மண்ணில் நாம் பலமானவர்கள்தான். இலங்கை அணியில் இருக்கும் வீரர்களில் பலர் நியூசிலாந்தையும் அதன் ஆடுகளங்களையும் இப்போதே அறிகிறார்கள்.

இதுவே இலங்கையின் பெரும் பலவீனம். மகேலெ, சங்கா இல்லாதமை அந்த அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றைப் பயன்படுத்தி நிச்சயம் இலங்கையை வீழ்த்துவோம்.’ என்றார்.

http://www.onlineuthayan.com/sports/?p=4526&cat=2

  • தொடங்கியவர்

தம்மிக பிரசாத்துக்கு பதில் விஷ்வ பெர்னாண்டோ
 
 

article_1449407385-Tamilprasainjeruvis.jநியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கைக்கான குழாமில் இடம்பெற்றிருந்த அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் தம்மிக பிரசாத்துக்கு பதிலாக, இதுவரையில் இலங்கையணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத விஷ்வ பெர்னாண்டோ குழாமில் இடம்பெற்றுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு எதிராக இலங்கையணி விளையாடிய பயிற்சிப்போட்டியில் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசியிருந்த தம்மிக பிரசாத், முதுகுப் பகுதியில் காயமடைந்திருந்தார்.

கடந்தாண்டு ஐக்கிய அரபு எமீரகத்தில் பாகிஸ்தானுக்கெதிராகவும், பங்களாதேஷிலும், இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான குழாமில் விஷ்வ பெர்னாண்டோ இடம்பெற்றிருந்த போதும், அவர் அணியில் இடம்பிடித்திருக்கவில்லை. நியூசிலாந்து ஏ அணிக்கெதிராக இடம்பெற்ற இரண்டு உத்தியோபற்றற்ற டெஸ்ட் போட்டிகளில் ஜெப்ரி வன்டர்ஸேக்கு அடுத்ததாக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்த தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றியவர்களில் இரண்டாமிடத்தை பெற்றதோடு, இலங்கையின் முதற்தரப் போட்டித் தொடரான பிறிமியர் லீக் தொடரின் 2014-15 பருவகாலத்தின் ஒன்பது போட்டிகளில் பங்குபற்றி 21.97 என்ற சராசரியில் 40 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதேவேளை, கடந்தாண்டில் இலங்கையணி சார்பாக சிறப்பாக செயற்பட்டிருந்த தம்மிக பிரசாத் காயமடைந்தமை, இலங்கையணிக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நியூசிலாந்துக்கெதிரான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடருக்கான குழாமிலும் தம்மிக பிரசாத் இடம்பெற்றுள்ளபோதும், அவர் அந்தப் போட்டிகளுக்கிடையில் குணமடைவார் என எதிர்பார்க்கப்படவில்லை. டெஸ்ட் போட்டிகளுக்கான குழாமில் மட்டுமே விஷ்வ பெர்னாண்டோ பெயரிடப்பட்ட போதும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கும் இவரை குழாமில் வைத்திருப்பதற்கான திட்டத்தைக் கொண்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/160741#sthash.txX5hFIj.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இலங்கை அணியைப் புகழ்கிறார் மக்கலம்
 
 

article_1449678148-tamililankasurjbMcCulஇலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களையும் துடுப்பாட்ட வீரர்களையும், நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம், புகழ்ந்துள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி, நாளை அதிகாலை 3 அணிக்கு (இலங்கை நேரப்படி) ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, டுனேடினில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான தம்மிக்க பிரசாத், காயம் காரணமாக இத்தொடரிலிருந்து வெளியேற்றப்பட, துடுப்பாட்ட வீரர் குசால் பெரரா, தடை செய்யப்பட்ட மருந்துப் பாவனை காரணமாக, குழாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால், நியூசிலாந்து அணிக்கு இலகுவான வெற்றி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், குறைத்து மதிப்பிடப்படுகிறார்கள் எனத் தெரிவித்த மக்கலம், அவர்களுக்கு அனுபவம் குறைவென்ற போதிலும், இலங்கை அணியில் மிக உயர்தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோரின் ஓய்வின் பின்னர், இலங்கையின் துடுப்பாட்ட வரிசையில் அனுபவமின்மை காணப்படுகின்ற போதிலும், அணியின் சிரேஷ்ட வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால் இருவரையும், மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக அவர் இனங்கண்டார். அத்தோடு, அஞ்சலோ மத்தியூஸை அவர், உலகத்தரம்வாய்ந்த துடுப்பாட்ட வீரரென வர்ணித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/161014#sthash.8G4iYeRS.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் வலுவான நிலையில் நியூசிலாந்து

 

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது நாளில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்  இழப்பிற்கு 409 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

martin_guptil.jpg

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

 

இத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நியூசிலாந்தின் டன்டினில் இடம்பெற்று வருகின்றது.

Martin_Guptill.jpg

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

 

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதலாம் நாள் ஆட்டநேர முடிவில்  90 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 409 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையிலுள்ளது.

Brendon_McCullum.jpg

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி  சார்பாக மார்டின் குப்தில் 156 ஓட்டங்களையும் வில்லியம்ஸன் 88 ஓட்டங்களையும் மெக்குலம் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

Dushmantha_Chameera.jpg

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லக்மல் , பிரதீப் மற்றும் சாமிர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

பிரக்வெல் 39 ஓட்டங்களுடனும் வெக்னர் ஓட்டமெதனையும் பெறாது ஆடுகளத்தில் உள்ளனர்.

Udara_Jayasundera.jpg

http://www.virakesari.lk/article/902

  • தொடங்கியவர்
நியூசீலாந்து   431
ஸ்ரீலங்கா      197/4 (81.0 ov)
  • தொடங்கியவர்
 
நியூசிலாந்துக்கெதிராக இலங்கை போராட்டம்
 
 

article_1449821713-rsz_228791.jpgநியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் தமது முதலாவது இன்னிங்சில் ஆடி வரும் இலங்கையணி நான்கு விக்கெட் இழப்புக்கு 197 ஓட்டங்களைப் பெற்று போராடி வருகிறது.

தற்போது களத்தில், தினேஷ் சந்திமால் 83 ஓட்டங்களுடனும் கிரித்துவன் விதானகே 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழ்க்காமல் உள்ளனர். முன்னதாக, திமுத் கருணாரட்ன 84 ஓட்டங்களுடன் ஆடமிழந்திருந்தார்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ட்ரெண்ட் போல்ட், டிம் சௌத்தி, நீல் வாக்னர், மிட்செல் சந்தர்ந தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

முன்னதாக, நியூசிலாந்து அணியானது தமது முதலாவது இன்னிங்சில் 431 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. அவ்வணி, சார்பாக துடுப்பாட்டத்தில், மார்ட்டின் கப்தில் 156 ஓட்டங்களையும் பிரண்டன் மக்கலம் 75 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக நுவான் பிரதீப் நான்கு விக்கெட்டுகளையும் துஷ்மந்த சமீர இரண்டு விக்கெட்டுக்களையும் அஞ்சலோ மத்தியுஸ், மிலிந்த சிரிவர்த்தன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்

- See more at: http://www.tamilmirror.lk/161210#sthash.O7vQAFuK.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இலங்கைக்கெதிராக நியூசிலாந்து பலமான நிலையில்
 
 

article_1449904527-228887.jpgநியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  விளையாடி வரும் இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் தமது இரண்டாவது இன்னிங்சில் ஆடி வரும் நியூசிலாந்து அணியானது ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களைப் பெற்று மொத்தமாக இலங்கையணியை விட 308 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தற்போது களத்தில் டொம் லதாம் 72 ஓட்டங்களுடனும் கேன் வில்லியம்ஸன் 48 ஓட்டங்களுடனும் ஆட்டமிழ்க்காமல் உள்ளனர். முன்னதாக, மார்ட்டின் கப்தில் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை ரங்கன ஹேரத் வீழ்த்தியிருந்தார்.

முன்னதாக இலங்கையணி தமது முதலாவது இன்னிங்சில் 294 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் இலங்கையணி சார்பாக திமுத் கருணாரட்ன 84 ஓட்டங்களையும்  தினேஷ் சந்திமால் 83 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக டிம் சௌத்தி, நீல் வாக்னர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட்,  மிட்செல் சந்தர் தலா இரண்டு விக்கெட்டினையும்  கைப்பற்றினர்.

முன்னதாக, நியூசிலாந்து அணியானது தமது முதலாவது இன்னிங்சில் 431 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. அவ்வணி, சார்பாக துடுப்பாட்டத்தில், மார்ட்டின் கப்தில் 156 ஓட்டங்களையும் பிரண்டன் மக்கலம் 75 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக நுவான் பிரதீப் நான்கு விக்கெட்டுகளையும் துஷ்மந்த சமீர இரண்டு விக்கெட்டுக்களையும் அஞ்சலோ மத்தியுஸ், மிலிந்த சிரிவர்த்தன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்

- See more at: http://www.tamilmirror.lk/161279/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2-#sthash.6Gk7eGX4.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
நியூசீலாந்து   431 & 267/3d
ஸ்ரீலங்கா        294 & 109/3 (50.1 ov)
  • தொடங்கியவர்
நியூசிலாந்து - இலங்கை: தப்பிக்குமா இலங்கை?
 

article_1450001691-Tamildrnz5dsLEADilandநியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இன்றைய நான்காவது நாள் முடிவில், இலங்கை அணி போராட்டத்தை வெளிப்படுத்தினாலும், நியூசிலாந்து அணிக்கே வெற்றிக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

ஒரு விக்கெட்டை இழந்து 171 ஓட்டங்களுடன் இன்றைய  நான்காவது நாளை ஆரம்பித்த நியூசிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களுடன் தனது இனிங்ஸை இடைநிறுத்தியது.

துடுப்பாட்டத்தில் டொம் லேதம் ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும் கேன் வில்லியம்ஸன் 71 ஓட்டங்களையும் மார்ட்டின் கப்டில் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சமீர ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

405 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி அல்லது 160 ஓவர்களில் ஆட்டமிழக்காவிட்டால் வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணி, பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலாவது விக்கெட்டுக்காக, 26.2 ஓவர்களில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தது இலங்கை. இது, இவ்வாண்டில் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை, முதலாவது விக்கெட்டுக்காகப் பதிவுசெய்த இரண்டாவது 50-ஓட்ட இணைப்பாட்டமாகும்.

திமுத் கருணாரத்ன ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, இலங்கை அணி 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, அறிமுக வீரராக ஜயசுந்தரவும் ஆட்மிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்காக 45 ஓட்டங்கள் பகிர்ந்தபோதும், 51ஆவது ஓவரின் முதலாவது பந்தில், குசால் மென்டிஸ் ஆட்டமிழந்தார். அந்நாளில் 19.5 ஓவர்கள் மேலதிகமாகக் காணப்பட்ட போதிலும், மென்டிஸின் விக்கெட்டைத் தொடர்ந்து, மழை கடுமையாகப் பெய்ததையடுத்து, மேலதிகமாக ஒரு பந்தும் வீசப்படவில்லை.

துடுப்பாட்டத்தில் குசால் மென்டிஸ் 46 ஓட்டங்களையும் டினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், டிம் சௌதி 2 விக்கெட்டுகளையும் நீல் வக்னர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் இறுதிநாளான நாளை, 7 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் 296 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெறுவதற்கோ அல்லது 90 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி, போட்டியை வெற்றி தோல்வியாக்கவோ இலங்கையால் முடியுமா என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.

- See more at: http://www.tamilmirror.lk/161361/%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-#sthash.tWpio09S.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நியூசிலாந்து அணி அபார வெற்றி

December 14, 2015

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் டுனெடினில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 122 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 திகதி ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

during day five of the First Test match between New Zealand and Sri Lanka at University Oval on December 14, 2015 in Dunedin, New Zealand.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 431 ஓட்டங்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக மார்டின் கப்டில் 156 ஓட்டங்களையும், வில்லியம்சன் 88 ஓட்டங்களையும், மெக்கலம் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் பரதீப் 4 விக்கெட்டுகளை வீழத்தினார்.

இதையடுத்து பதிலுக்கு முதலாவது இணிங்சை தொடங்கிய 294 ஓட்டங்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக, கருணரத்ன 84 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில், சவுத்தி, வாக்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 137 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இணிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 3 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இலங்கையை துடுப்பெடுத்தாட அழைத்து. அணியின் அதிகபட்ச ஓட்டமாக, லெத்தம் 109 ஓட்டங்களையும், வில்லியம்சம் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில், ஹேரத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

405 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 282 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக, தினேஷ் சந்திமால் 58 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில், சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியில் ஆட்ட நாயகனாக நியூசிலாந்து அணியின் மார்டின் கப்டில் தேர்வு செய்யப்பட்டார்.

http://www.onlineuthayan.com/sports/?p=5628&cat=2

  • தொடங்கியவர்
முதல் இனிங்ஸில் அதிருப்தி: மத்தியூஸ்
 

article_1450086916-Tamillowmathi1LEAD-Boநியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தமைக்கான முக்கியமான காரணங்களாக, முதல் இனிங்ஸில் இலங்கை பந்து வீசிய விதத்தையும் அவ்வணியின் முதல் துடுப்பாட்ட இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய விதத்தையும், அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் பந்துவீசத் தீர்மானித்த இலங்கை அணி, ஓர் ஓவருக்கு 4.48 ஓட்டங்கள் என்ற அடிப்படையில் 431 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தது. துடுப்பெடுத்தாடும் போது, 294 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.

'மோசமான பந்துகள் பலவற்றை வீசியிருந்தோம். நியூசிலாந்து போன்ற துடுப்பாட்ட வரிசைக்கெதிராக அவ்வாறு பந்துவீச முடியாது. ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை எடுக்க வேண்டியிருந்தது, ஆனால் அதை நாம் செய்திருக்கவில்லை" என மத்தியூஸ் தெரிவித்தார்.

'அத்தோடு, முதல் இனிங்ஸ் துடுப்பாட்டத்தில், அதிக கவனத்துடன் விளையாடியிருந்தோம். அவர்களை நாம், எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகம் மதித்தோம்" என அவர் குறிப்பிட்டார்.

கருத்துத் தெரிவித்த நியூசிலாந்து அணித்தலைவர், இலங்கை அணிக்கெதிராக முடிவுகளைப் பெறுவது கடினமானது எனவும், 5ஆவது நாளில் மத்தியூஸூம் டினேஷ் சந்திமாலும் காணப்பட்ட நிலையில், கடினமான வேலையாக அமையும் என்பதை அறிந்திருந்ததாகவும் தெரிவித்தார். அவர்களிருவரும் உலகத்தரமிக்க துடுப்பாட்ட வீரர்கள் எனத் தெரிவித்த அவர், அடுத்த போட்டியிலும், நியூசிலாந்து அணிக்குக் கடும் சவாலாக அவர்கள் அமைவார்கள் எனக் குறிப்பிட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/161464#sthash.7giVxfkl.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஹமில்டன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதமாக்கப்பட்டுள்ளது: இலங்கைப் பயிற்றுநர்
 
 

article_1450265924-tamilbedgreenLEAD.jpgநியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ள ஹமில்டன் ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்குச் சாதமாக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அணியின் பயிற்றுநர் ஜெரோம் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி டுனேடினில் இடம்பெற்ற போதே, அதிக குளிராக இருந்ததாக வீரர்கள் முறைப்பட்டிருந்த நிலையில், ஹமில்டனில் இன்னமும் அதிகமான குளிர் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், குளிரை விட, ஹமில்டன் ஆடுகளம், இலங்கை வீரர்களுக்கு இன்னமும் சவாலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடுகளம் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜெரோம் ஜயரத்ன, 'தனக்குக் கிடைத்த தகவல்களின்படி, ஹமில்டன் ஆடுகளமானது, நேரம் செல்ல, சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக அமையும். ஆனால், நியூசிலாந்து வீரர்களுக்குச் சாதமாக அமையும் வண்ணம் இந்த ஆடுகளம், தயார் செய்யப்பட்டுள்ளதென நான் நினைக்கிறேன். அது, புரிந்துகொள்ளப்படக் கூடியது ததான்" என்றார். ஆடுகளத்தில், 18 மில்லி மீற்றர்களுக்கும் அதிகமான புல், ஆடுகளத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆடுகளம், டுனேடினை விட அதிகளவு துள்ளியெழும் தன்மையை வழங்குமெனத் தெரிவித்த ஜயரத்ன, ஆடுகளத்தைப் பார்க்கும் போது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி வழங்குமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக, இலங்கையின் துடுப்பாட்டம் குறித்து அதிக கவனம் திரும்பியுள்ளது.

முதலாவது போட்டியில், இலங்கை அணி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. நியூசிலாந்தை விட 50.4 ஓவர்கள் அதிகமாகத் துடுப்பெடுத்தாடியிருந்த இலங்கை, அவ்வணியை விட 122 ஓட்டங்கள் குறைவாகப் பெற்றிருந்தது.
முன்னைய காலங்களில், 75 ஓவர்களை விட அதிகமாகத் துடுப்பெடுத்தாடாத நிலை காணப்பட்ட போதும், இப்போட்டியில் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடியமை வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர், எனினும், ஓட்டங்களைப் பெறுவது குறித்தும் கவனஞ்செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/161697#sthash.zIt8uZ2h.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலங்கை 4 விக்கட்டுக்களை இழந்த நிலையில் துடுப்பெடுத்தாடுகிறது

இலங்கை 4 விக்கட்டுக்களை இழந்த நிலையில் துடுப்பெடுத்தாடுகிறது

 

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டுனெடினில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 4 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்ங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இலங்கை அணி சார்பாக சந்திமால் 47 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
  • தொடங்கியவர்

இலங்கை எதிர் நியூ சீலாந்து - 2வது டெஸ்ட் போட்டி

மழையினால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 264 ஓட்டங்கள்.
அணித் தலைவர் மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 63.
(4000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய இவருக்கு இன்னும் ஒரு ஓட்டம் தேவை)

மிலிந்த சிறிவர்த்தன - 62.

12366442_956826837699344_635123598220434

  • தொடங்கியவர்

நியூ­ஸி­லாந்து­க்கெதிரான இரண்டா­வது டெஸ்டில் இலங்கை  துடுப்பாட்டம்

 

நியூ­ஸி­லாந்து அணிக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Dinesh_Chandimal.jpg

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்­டிகள், 5 ஒருநாள் போட்­டிகள் மற்றும் 2 இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

 

இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த வியாழக்கிழமை நியூசிலாந்தின் டன்டினில் இடம்பெற்றது.

 

இப் போட்டியில் நியூசிலாந்து அணி 122 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.

 

இந் நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான மிக முக்கியமானதும் இறுதியுமான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஹமில்டனில் ஆரம்பமாகியது.

 

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

 

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

 

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சிறிவர்தன 62 ஓட்டங்களையும் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

 

நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் போல்ட் மற்றும் சௌத்தி ஆகியோர்  தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் 63 ஓட்டங்களுடனும் சாமிர ஓட்டமெதனையும் பெறாத நிலையிலும் ஆடுகளத்திலுள்ளனர்.

http://www.virakesari.lk/article/1143

  • தொடங்கியவர்

சமீரவின் பந்துவீச்சில் தடுமாறும்நியூஸிலாந்து அணி

 

இலங்கையின் இளம்பந்து வீச்சாளரான துஸ்மந்த சமீர தனது அதிரடி பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியை அதிரவைத்தார்.

229311.jpg

229289.jpg

229283.jpg

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாளாகிய இன்று 12.4 ஓவர்கள் பந்து வீசி 47 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை எடுத்தார்.

இலங்கை தனது முதலாவது இன்னிங்ஸில் 292 ஓட்டங்களை பெற்றது. தனது முதலாவது இனிங்ஸை தொடர்ந்து நியூஸிலாந்து அணி 232 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுக்களை இழந்து 60 ஓட்டங்கள் பின்னடைவில்தடுமாற்றத்தில் உள்ளது. 

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டாவதும் டெஸ்ட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/1186

  • தொடங்கியவர்
நியுசிலாந்து வெல்லும் நிலையில் print.png
 
 

 
இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்தது. 

இன்றையதினம் 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியுசிலாந்து அணி, ஆட்ட நேரம் நிறைவடையும் போது, 5 விக்கட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியுசிலாந்து 237 ஓட்டங்களையும், இலங்கை 292 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.

இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கை 133 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. 

இதன்படி இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு நியுசிலாந்து இன்னும் 47 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.

12359848_1025052884224040_86592839054922

  • தொடங்கியவர்

மண்ணைக் கவ்வியது இலங்கை - டெஸ்ட் தொடர் நியூஸிலாந்து வசம்

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முதலாவதாக இடம்பெற்ற டெஸ்டில் நியூஸிலாந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கெமில்டன் நகரில் கடந்த 18ம் திகதி ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை 292 ஓட்டங்களைப் பெற்ற வேளை, சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

பின்னர் களமிறங்கிய நியூஸிலாந்து 237 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்படி 55 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இலங்கை தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.

எனினும் எந்தவொரு வீரரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் வரிசையாக வௌியேற, 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனையடுத்து 189 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த நியூஸிலாந்து, இன்றைய நான்காம் நாளில், ஐந்து விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியுள்ளது.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-0 என நியூஸிலாந்து வசமாகியுள்ளது.
  • தொடங்கியவர்

இரண்டாவது டெஸ்ட் தோல்விக்கு துடுப்பாட்ட வீரர்களே காரணமாம்

December 22, 2015

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணி அடைந்த தோல்விக்கு துடுப்பாட்ட வீரர்களின் திறன் இன்மையே காரணம் என்று சாடியுள்ளார் இலங்கை அணித்தலைவர் மத்தியூஸ்.
நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் நேற்று நிறைவுக்கு வந்தது. இதில் இலங்கை அணி 5 இலக்குகளால் தோல்வியடைந்தது.

 

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 71 ஓட்டங்கள் வரை இலக்குகள் இழப்பில்லாமல் இருந்தது. ஆனால் இறுதி 62 ஓட்டங்களுக்குள் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்ட வீரர்களின் இந்தத் தடுமாற்றமே இலங்கையின் தோல்விக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார் மத்தியூஸ்.

அவர் மேலும் தெரிவிக்கையில் – ‘இரண்டாவது டெஸ்ட்டை வெற்றிபெற்று தொடரை சமப்படுத்துவோம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் திடீர் தடுமாற்றம் காட்டிவிட்டனர். அவர்களின் ஆட்டத்தில் போராட்டத் தன்மை இல்லை. இரு இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்திருந்தால் ஆட்டத்தை குறைந்த பட்சம் சமப்படுத்தியிருக்கலாம்’ என்றார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6387&cat=2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.