Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்வியைகுழப்புவதற்கு திட்டமிட்டு பல சதிகள் (வழிப்படைந்திருக்குமாறு விக்னேஸ்வரன் பேச்சு)

Featured Replies

8119.jpg

எமது வடபகுதியின் மூலதனமாக விளங்கக் கூடிய கல்வியைக் குழப்புவதற்கு திட்டமிட்ட பல சதிகள் நடைபெற்று வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து;ளார். 
மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்பப் பீடக் கட்டடத் தொகுதி திறப்பு விழா நேற்றைய தினம் நடைபெற்றது அதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததர். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

பாடசாலை மாணவர்களிடையே தற்போது துர்ப்பழக்கங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தி அம் மாணவர்களைக் கல்வியறிவில் மிகப் பின்தங்கியவர்களாக மாற்றுவதற்கு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
கல்வி நடவடிக்கைகளை குழப்பி அதன் மூலம் எமது வருங்காலச் சந்ததியினரை ஒரு அடிமைப்பட்ட சமூகமாக மாற்றுவதற்கும் திட்டமிட்டே பல சதிகள் இங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சதி என்று ஏன் குறிப்பிடுகின்றேன் என நீங்கள் எண்ணக்கூடும். மேலை நாடுகளில் போதைப்பொருட் பாவனையை மாணவர்களிடையே புகுத்துவதற்குச் சில மாணவர்களை இதற்கெனத் தேர்ந்தெடுத்து அவர்களைப் போதைப் பொருள் அடிமைகளாக மாற்றிய பின்னர் அவர்கள் மூலமாக ஏனைய மாணவர்களுக்கு போதைப் பொருள் பாவனையைப் பழக்குவதற்கு திட்டமிட்டு ஒவ்வொரு அடையாளப்படுத்தப்பட்ட அத்தகைய மாணவனையும் ஒவ்வோர் பகுதியில் உள்ள பாடசாலைகளில் புதுமுக மாணவர்களாகச் சேர்த்துக் கொண்டு அவர்கள் மூலமாக இந்தப் போதைப் பொருள் பாவனையை ஏனைய மாணவர்களுக்கு மிகவும் இலகுவாக பழக்குவதற்கு எத்தனிக்கின்றார்கள். இதே முறைமை எமது பகுதியிலும் பின்பற்றப்படுவதாக அண்மையில் கிடைக்கப்பெற்ற சில செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. வெளியில் இருந்து வந்து வடமாகாணத்தில் குடிகொண்டிருக்கும் நபர்களே இதற்குப் பொறுப்பு என்று கூறப்படுகிறது. 

போதைப் பொருள்ப் பாவனையானது புற்றுநோய் உடலில் பரவுவதற்கு ஒப்பானது. ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது மின்சாரச் சிகிற்சை மூலமாகவோ குணமடையச் செய்து விடலாம். ஆனால் நிலைமை முற்றி விட்டால் விளைவுகள் துன்பகரமானதாகவே அமையும். அதே போன்று தான் போதைப் பொருட் பழக்க வழக்கங்கள் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் இப் பழக்கங்கள் திருத்தப்படலாம். இல்லை என்றால் அப் பழக்கத்தின் கோரப் பிடிக்குள் நின்று தப்ப முடியாது.
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனியுங்கள். அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகங்கள் ஏற்படுகின்ற போது அவர்களின் நடவடிக்கைகள் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு அவர்கள் பிழையான வழிகளில் செல்வது கவனிக்கப்பட்டால் அதற்கான ஏற்ற பரிகாரங்கள் தேடப்படல் வேண்டும்.
வர முன் காப்பதே சிறந்தது. போதைப் பொருட் பாவனை பிள்ளைகளிடையே பரவத் தொடங்கி விட்டால் அதனைக் கட்டுப்படுத்துவது மிகச் சிரமமும் செலவு மிக்கதாகவும் மாறிவிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=8119&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.