Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நியூசிலாந்தை துவம்சம் செய்த இலங்கை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை இலங்கையணி நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்தபோது பெரிதாக எனக்குள் எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. ஏனென்றால் சங்கா, மஹேல போன்ற இலங்கையின் தூண்கள் இருந்தபோது இலங்கையணி கடந்த வருடம் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது கூட, நியூசிலாந்து அணியிடன் அடிவாங்குவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. சங்கா தனித்துப் போராடித்தான் பார்த்தார், ஆனால் அணியில் மற்றவர்கள் கைகொடுக்காததால், அவரால் கூட இலங்கையணியை காப்பாற்ற முடியவில்லை. இலங்கையணியின் தேவைக்கும் அதிகமான நிதான விளையாட்டும், வேணுமென்றே தடுத்து ஆடியதும்தான் அவர்கள் டெஸ்ட் தொடரில் தோற்றதற்கான காரணம் என்று அப்போது பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒருநாள்ப் போட்டித் தொடரில் சிறிது வித்தியாசமாக விளையாடி, தொடரில் தோற்றாலும், ஒரு சில போட்டிகளில் சங்காவின் அணுசரணையோடு வென்றார்கள். அதனால் கடந்த வருடப் போட்டித்தொடர் படு பயங்கரத் தோலிவியென்றில்லாமல், இலங்கை வழமையாக வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது கிடைக்கும் அதே வழமையான தோல்வி என்று இருந்துவிட முடிந்தது. 

 

ஆனால் இந்தமுறை அப்படியிருக்கவில்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்.........., அப்படிச் சொல்லமுடியாது, நிச்சயமாகத் தோற்பார்கள் என்கிற எதிர்பார்ப்புடன், இந்தப் போட்டிகளில் அதிக ஆர்வம் நான் காட்டவில்லை. எதிர்பார்த்ததை விட அதி மோசமாக விளையாடத் தொடங்கியது இலங்கை. ரெண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில், ஒரு சில நாட்களில் மட்டுமே சோபித்த இலங்கையணி, கடந்த ஆண்டு விளையாடியதைவிடக் கேவலமாக விளையாடி, தோற்றும் போனது. இதில் குறிப்பிட வேண்டிய விடயம், ரெண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இண்ணிங்ஸ் முடிவில் முண்ணனியில் இருந்த இலங்கையணி, ரெண்டாவது இண்ணிங்ஸில் படுமோசமாக ஆடி, வெறும் 133 ஓட்டங்களுக்குச் சுருண்டுபோக நியூசிலாந்து அணி கேன் வில்லியசனின் அபாரச் சதத்துடன் போட்டியிலும் தொடரிலும் வென்றது. கடந்த ஆண்டு இலங்கையணியிடம் தெரிந்த அதே குறைகள் இம்முறை பலமடங்கு பெரிதாக, அப்பட்டமாகத் தெரிய ஆத்திரம்தான் வந்தது. இனி, இவர்கள் விளையாடுவதைப் பார்ப்பதில்லை என்று முடிவோடு இருந்துவிட்டாலும் கூட, அவ்வப்போது, கைத்தொலைபேசியில் சொடுக்கியும் பார்த்துக்கொள்வேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாள் போட்டித் தொடரில விளையாடத் தொடங்கியபோது, சரி, டெஸ்ட்டில் சொதப்பினார்கள், இதிலாவது சோபிக்கிறார்களா என்று பார்த்தால், இங்கே டெஸ்ஸ்ட்டைக் காட்டிலும் படு கேவலமாக ஆடினார்கள். 

முதலாவது போட்டியில் முக்கிய விக்கெட்டுக்கள் எல்லாம், வெறும் 90 ஓட்டங்களுக்கு (இதில் முதல் 4 விக்கெட்டுக்களும் 10 ஓவர்கள் முடிவதற்குள் புடுங்கப்பட்டு விட்டன !) விழுந்துப்போக, நுவாண் குலசேகரவும், மிலிந்த சிறிவர்த்தனவும் அதிரடியாக ஆடி, அணியின் ஓட்ட எண்ணிக்கையை 188 இற்கு உயர்த்தினர். இதில் வேடிக்கை என்னவென்றால் ஆரம்பத் துடுப்பாட்டக் காரர்களான குணதிலக்க, டில்சான் உற்பட, திரிமாண, சண்டிமால், மத்தியூஸ் ஆகிய ஐவரும் சேர்ந்து பெற்ற மொத்த ஓட்டங்கள் வெறும் 23 மட்டும்தான் என்பது !

நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹென்றி, அபாரமாக பந்துவவீசி 4 விக்கெட்டுக்களைக் கைப்பரற்றியிருந்தார். 

நியுஸீலாந்தணி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடும்போது தயவு தாட்சணியம் பார்க்காமல் அசுரத்தனமாக அடித்தாடியது. அணித்தலைவர் மக்கலம் வெறும் 25 பந்துகளில் 55 ஓட்டங்களை விளாச, மற்றிய ஆரம்பத் துடுப்பாட்டக் காரரான குப்டில் 56 பந்துகளில் 77 ஓட்டங்களைக் குவிக்க, வெறும் 21 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு ஓட்ட நிர்ணயமான 188 ஓட்டங்களை 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் டில்சானைத் தவிர மற்றைய பந்துவீச்சாளர்களெல்லாம் ஓவர் ஒன்றிற்கு 9 ஓட்டங்களுக்கும், அதற்கும் அதிகமாக வாரி வளங்க, அணித்தலைவர் மத்தியூஸோ ஒருபடி மேலே சென்று தான் வீசிய ஒரே ஒரு ஓவரில் 17 ஓட்டங்களைக் கொடுத்து தனது தலைவர் என்கிற பங்கை சிறப்பாக ஆற்றியிருந்தார். 

Edited by ragunathan
எழுத்துப்பிழை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது போட்டிதான் இப்படியென்றால், இரண்டாவது போட்டிபற்றிக் கேட்கத் தேவையில்லை. ஆட்டமென்றால், ஆட்டம், அப்படியொரு ஆட்டம். விளையாடுவது இலங்கையணிதானா என்கிற சந்தேகம் வந்துவிட்டது எனக்கு. இந்தப் போட்டிபற்றி நான் அறிந்திருக்கவில்லையாயினும், போட்டி முடிந்தபின்னர் ஸ்கோர் பார்த்தபோது ஆட்டத்தின் சொதப்பல் புரிந்தது. அணியின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையான 19 ஓட்டங்கள் பந்துவீச்சாளர் ஒருவரால் (வேறு யார், எல்லாம் அந்த நுவான் குலசேகரதான் !) பெறப்பட மொத்த இலங்கையணியும் வெறும் 118 ஓட்டங்களுக்குச் சுருண்டுபோனது.இதில் முதல் 7 துடுப்பாட்டக் காரர்களும் சேர்ந்து பெற்ற ஓட்டங்கள் வெறும் 75 மட்டும்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !

 

நியுசிலாந்தணியின் பந்துவீச்சாளர் மீண்டும் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

 

நியுசிலாந்தணி துடுப்பெடுத்தாடும்போது மக்கலம் இருக்கவில்லை. ஆனால், மக்கலத்தைவிடவும் மூர்க்கத்தனமாக குப்டில் ஆடத் தொடங்கினார். வெறும் 30 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 8 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 93 ஓட்டங்களை விளாசித் தள்ள நியுசிலாந்தணி விக்கெட் இழப்பில்லாமல் வெறும் 8 ஓவர்களில் வெற்றி இலக்கான 119 ஓட்டங்களைக் குவித்துத் தள்ளியது. இலங்கையணிப் பந்துவீச்சாளர்கள் எவருக்கும் இந்தப் போட்டியில் ஓடி ஒளிந்துகொள்ள குப்டில் இடம் கொடுக்கவில்லை. துரத்திதுரத்தித் தாக்கிக் கொண்டிருந்தார். வேகப் பந்துவீச்சாளர் சமீர 2 ஓவர்களில் 41 ஓட்டங்களையும், சுழற்பந்துவீச்சாளர் வண்டர்சே 2 ஓவர்களில் 34 ஓட்டங்களையும் வாரி வழங்க, இலங்கையணி சார்பாகப் பந்துவீசியவர்களில் ஓவர் ஒன்றுக்கு மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக 9.5 ஓட்டங்களை சேனநாயக்க கொடுத்தார் என்றால் நிலமையைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடிணமாக இருக்காது என்று நினைக்கிறேன். 

ஆக, முதலிரண்டு போட்டிகளில் இலங்கையணி சொதப்பிய சொதப்பலைப் பார்த்துவிட்டு, இனி உவங்களோடு மினக்கெடுறதில வேலையில்லை என்று நினைத்துவிட்டு இருந்துவிட்டேன். ஆனாலும், இடைக்கிடை போட்டியின் போக்குபற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் இருந்துகொண்டுதான் இருந்தது.

 

நியுசிலாந்தணி துடுப்பெடுத்தாடத் தொடங்கியபோது முதல் முறையாகப் போட்டிபற்றிப் பார்த்தேன். மக்கலம் இல்லை. ஆனால் குப்டிலும், லேத்தமும் களமிறங்கினார்கள். முதலாவது ஓவரில் வெறும் ஒரு ஓட்டம்தான் பெறப்பட்டது. பரவாயில்லையே, ஆரம்பமஏ நல்லாயிருக்கு என்று யோசித்தேன். மீண்டும் போட்டி பற்றி பார்க்கும்போது 5 ஓவர்களில் விக்கெட் இழப்பில்லாமல் 24 ஓட்டங்கள். பரவாயில்லை, இன்னும் ரண் ரேட் 5 ஐத் தாண்டவில்லை, இப்படியே வைத்திருந்தால் ஒரு 300 ஓட்டத்துக்குள்ள மடக்கலாம் என்று இருந்துவிட்டேன். 

நான் மீண்டும் போட்டியைப் பார்க்கும்போது 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்கள். நல்ல நிலை, இன்னும் சில விக்கெட்டுக்களைக் கைப்பற்றினால் ஒருவாறு 230 - 240 ஓட்டங்களுக்கு சுருட்டிவிடலாம், பிறகு ஏதாவது செய்து (சந்தேகம்தான் !) அந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுவிடலாம் ( முதலிரு போட்டிகளிலும் இலங்கை அணி ஆடிய விதத்தைப் பார்த்த பிறகுமா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது !, எல்லாம் ஒரு நப்பாசைதான் !) என்று நினைத்தேன். ஆனால் நியுசிலாந்தணி துடுப்பாடி முடியும் போது நான் சற்றும் எதிர்பார்க்காத 277 ஓட்டங்களைக் குவித்திருந்தது. இது கஸ்ட்டம், இலங்கையணியால் இதை நினைத்துப் பார்க்க முடியாது. ஆக, மீண்டும் தோற்கப் போகிறார்கள் என்று மனதிற்குள் முடிவெடுத்துவிட்டேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் ஒரு வேலையாக இருந்துவிட்டேன், இலங்கையணி விளையாடத் தொடங்கியபோது பார்க்க முடியவில்லை. ஆனால் நினைவுக்கு வந்தபோது 2 ஓவர்கள் முடிவில் 20 ஓட்டங்கள், விக்கெட் இல்லை என்று அறிந்தபோது, என்ன நடக்கிறது இங்கே என்று சுதாரித்துக் கொண்டேன். குணத்திலக்கவும், டில்சானும் ஆடிக் கொண்டிருந்தார்கள். 

இதில் குறிப்பிட வேண்டிய ஒரு விடயம் புதுமுகம் குணத்திலக்கவின் அபாரமான அதிரடியுடன் கூடிய நேர்த்திய ஆட்டம். 

இலங்கையணியின் ஆரம்பத் துடுப்பாட்டக் காரர்களின் பலம்தான் அணியின் பலமாக இதுவரை, அதாவது 1996 ஆம் அண்டு உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் இருந்துவந்தது. ரொமேஷ் களுவித்தாரணவும், சனத் ஜயசூரியவும் போட்டியின் ஆரம்பத்தில் முதல் 15 ஓவர்களில் விளாசித் தள்ளும் ஓட்டங்களை தளமாக வைத்து பின்னால் வரும் பலமான இடைநிலை துடுப்பாட்டக் காரர்களான அரவிந்த டி சில்வ, ரொஷான் மகனாம, அசந்த குருசிங்க, அர்ஜுன ரணதுங்க, ஹஷான் திலகரட்ண, குமார தர்மசேன ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கையை  கட்டியெழுப்பினர். சிலவேளைகளில் ஆரம்பத் துடுப்பாட்டக் காரர்கள் குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழந்துபோனாலும், பலமான இடைநிலை துடுப்பட்டத்தினால், அந்த இழப்பைச் சமாளித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை கட்டியெழுப்ப முடிந்தது. 96 ஆம் ஆண்டு அரையிறுது, இறுதிப் போட்டிகளில் இந்தியாவிடமும், அவுஸ்த்திரேலியாவிடமும் ஜயசூரிய, களுவித்தாரணவின் ஆட்டம் எடுபடாதுபோக அரவிந்த சில்வாவை அரணாகக் கொண்டு ஏனைய துடுப்பாட்டக் காரர்கள் களம் அமைத்து ஆடியதால் இலங்கையணி இவ்விரு போட்டிகளிலும் வெற்றிபெற்று கோப்பையையும் தூக்கிக் கொண்டது. 

ஜயசூரிய, களுவித்தாரண ஆகியோருக்குப் பிறகு, மிகச் சிறந்த நேர்த்தியான துடுப்பாட்டத்தைக் கொண்ட மாவன் அத்தப்பத்து ஆரம்பத் துடுப்பாட்டக் காரராக வந்தார். அவரும் ஜயசூரியவும் சேர்ந்து பல போட்டிகளில் இலங்கையணியை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். ஆனால் மாவனின் நேர்த்தியான ஆட்டம் ரண்ரேட்டை வேகப்படுத்த அவ்வப்போது தவறிவிட்டிருந்தது. மாவனுக்குப் பிறகு டில்சானும், சங்காவும் ஆரம்பத் துடுப்பாட்டக் காரர்களாக இறங்கினர். இவர்கள் இருவர் பற்றியும் சொல்லத் தேவையில்லை. இதில் சங்கா, இன்றுள்ள துடுப்பாட்டக் காரர்களில் மிகவும் சிறந்தவர் என்று பல வர்ணனனையாளர்களே சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம் ( என்ன, நான் சொல்வது சரிதானே நவீனன்?!). இடைக்கிடையே சனத் ஜயசூரியவின் ஆட்டத்தை பிரதிபலிக்கும் இன்னொரு ஆரம்பத் துடுப்பாட்டக் காரரான குசால் பெரேராவை இறக்கினார்கள். ஜயசூரியவைப்போலவே இவரும் சில ஆட்டங்களில் மின்னி, இன்னும் வேறு ஆட்டங்களில் மறைந்தும் போனார். இறுதியாக தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளைப் பாவித்தார் என்று கண்டறியப்பட்டு 3 வருடங்களுக்குக் கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார். 

ஆக, இப்போது டில்ஷானுக்கு துணையாக ஆரம்பத் துடுப்பாட்டத்தில் இறங்குவது யார் என்கிற நிலையில் புதுமுகம் குணத்திலக்கவை இறக்கிப் பார்த்தார்கள்.  முதலிரு போட்டிகளிலும் சொதப்பிய குணதிலக்க மூன்றாவது போட்டியில் அபாரமாக ஆடினார். பந்துவீச்சாளரின் தலைக்கு மேலான சிக்ஸர்கள், புள் ஷொட்டில் சிக்ஸர்கள், ஹுக் ஷொட்டில் சிக்ஸர்கள், மின்னல் போன்ற ஸ்குயெர் டிரைவுகள், ஆக்ரோஷமான ஸ்ட்ரெயிட் டிரய்வுகள் என்று ஒரு முழுமையான துடுப்பாட்டக் காரரின் சகல ஷொட்களையும் தன்னகத்தே கொண்டு அதிரடியாக ஆனால் நேர்த்தியாக ஆடினார்.ஐவர் இப்படி ஆடுவார் என்று அறிந்திராத நியுசிலாந்தணிப் பந்துவீச்சாளர்கள் திக்கு முக்காடிப் போக, நேரம் எடுக்க எடுக்க குணத்திலக்க அசுரத்தனமாக ஆடத் தொடங்கினார். மறு புறத்தில் டில்ஷான் நிதானமாக ஆட, இலங்கையணியின் ஓவர் ஒன்றுக்கான ஓட்ட எண்ணிக்கை 10 ஐத் தொட்டுக் கொண்டது. இது இலங்கையணி இதுவரை நியுசிலாந்தில் அடைந்திராதது, புதியது. ஆக, தனக்குப் பரிட்சயமில்லாத தளத்தில் குணத்திலக்கவின் அதரடிமேல் சவாரி செய்யத் தொடங்கியது இலங்கை.  இலங்கையணி நீண்டநாள் பார்த்திருந்த, நேர்த்தியான அதிரடி வீரர் ஒருவரை பெற்றுக் கொண்டுள்ளது என்பது எனக்குப் புரிந்தது. 

லானால், துரதிஷ்ட்ட வசமாக வேகப் பந்துவீச்சாளர் ஒருவரின் உடலுக்கு அண்மையாக வந்த பந்தை கட் செய்ய முனைந்த குணத்திலக்க ஸ்லிப்ஸில் பிடி கொடுத்து ஆட்டமிழக்க, பயம் பற்றிக்கொண்டது. ஏனென்றால் அடுத்துக் களமிறங்கியவர் சொதப்பல் மன்னன் திரிமாண ! குணத்திலக்க 45 பந்துகளை எதிர்கொண்டு, 4 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 

ஆனால் ஆரம்பத்தில் தடக்கினாலும், டில்சானுடன் சேர்ந்து திரிமாண் ஆடத் தொடங்கினார். இணைப்பாட்டமாக 111 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் டில்சான் 91 ஓட்டங்களுடன் ரண் அவுட் முறையில் அட்டமிழக்க, திரிமாணவும் சண்டிமாலும் இணைந்தார்கள். இன்னும் 68 ஓட்டங்களைப் பெறவேண்டியிருந்தபோதும்கூட, ஆட்டம் எந்தப் பக்கம் சாயும் என்று அப்போதுகூட தெரிந்திருக்கவில்லை. இன்னும் ஒன்று அல்லது இரண்டு விகெட்டுக்கள் வீழ்ந்தால், நியுசிலாந்து புகுந்து விளையாடிவிடும் என்கிற பயம் இருந்தது. 

ஆனால், சண்டிமாலும், திரிமாணவும் நிதானமாக விளையாடி, இலங்கையணியை வெற்றியிலக்கை நோக்கி இழுத்துச் சென்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், தாம் இலக்கை அடைந்துவிட்டோம் என்பது களத்தில் ஆடிக்கொண்டிருந்த திரிமாணவுக்கோ, சண்டிமாலுக்கோ தெரிந்திருக்கவில்லை. அதுபோல களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த நியுசிலாந்தணிக்குக் கூடத் தெரிந்திருக்கவில்லை. மூன்றாவது நடுவர் தொலைபேசியில் களத்தில் இருந்த நடுவர்களுக்கு உறுதிப் படுத்தியதை அடுத்தே வீரர்களுக்குப் போட்டி முடிந்தது தெரிய வந்தது. 

ஆக, இந்த சுற்றுத்தொடரில் முதலாவது வெற்றியை இலங்கையணி பெற்றிருக்கிறது. அதுவும் மிகவும் பலமான நியுசிலாந்தணியை, 8 விக்கெட்டுக்களால், அதிரடியாக ஆடி, பலமான ஓட்ட எண்ணிக்கையான 276 ஓட்டங்களை 4 ஓவர்கள் மீதமிருக்க அடைந்திருக்கிறது.

 

பார்க்கலாம், இந்த வெற்றி மட்டும்தான் இலங்கையணி நியுசிலாந்தில் பெறப்போகும் வெற்றியா, அல்லது இன்னும் தொடருமா என்பதை !

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் முதலிரு ஆட்டங்களில் வாங்கி கட்டினத மறக்க கூடாது.

நன்றி ரகு  உங்கள் நீண்ட  வர்ணனைக்கு.  நானும் இந்த போட்டியை வேண்டா வெறுப்பாகதான் பார்த்தேன்.

முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பலால்.

இப்படியானதொரு ஆட்டத்தை தொடர்வார்களா என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.