Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி, காங்கேசன்துறையை இலக்கு வைக்கும் இந்திய நகர்வுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
president_my3_005.jpg
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பண்புகளை எடுத்துக்காட்டும் மனப்பாங்கு தொடர்பில் இந்திய அரசும் இந்திய மக்களும் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் திரு.எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் இன்று (13) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி, அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக காட்டிய சாதகமான மனப்பாங்கு இந்திய அரசாங்கத்தின் விசேட அவதானத்தைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

President%20Maithripala%20Sirisena.jpg

இதன்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாறு மற்றும் நட்புறவு பற்றி வலியுறுத்திய ஜனாதிபதி தமது இந்திய விஜயம் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு மாத்திரமன்றி அதற்கு அப்பாற் பட்ட நட்புறவும் கட்டியெழுப்பப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இரு தரப்பு கலந்துரையாடல்கள் பயனுள்ளதாக அமைந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அடுத்த மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ்யுடனும் இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்திய அரசு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, புனர்வாழ்வு மற்றும் மீளக்குடியேற்ற நடவடிக்கைகளிலும் மின்சாரம், புகையிரதப்பாதை ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்து செய்ய மேற்கொள்ளப்படும் உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பலாலி விமான நிலையம் மற்றும், காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்துவதற்காக இந்திய அரசு வழங்கும் உதவிகளுக்க ஜனாதிபதி விசேட விதமானக நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

எனவே இரு நாடுகளுக்கும் இடையில் எதிர்காலத்தில் உருவாகவுள்ள கலந்துரையாடல்கள் மூலம் இருதரப்பு உறவுகள் வலுவடைதல் மாத்திரமன்றி, ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் உண்மைக்குப் புறம்பான பரப்புரைகளை சீர்செய்வதற்கும் பயனுள்ளதாக அமையும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிசித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmuyBSXSWiq0A.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.