Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன:-

14 ஜனவரி 2016
 

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை ஆறு குண்டுவெடிப்புச்சம்பவங்களும் துப்பாக்கிபிரயோகங்களும் ஜகார்த்தாவின் பிரபலமான வணிகவளாக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.குறிப்பிட்ட பகுதியிலேயே பல வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
உடனடியாக கிடைத்துள்ள  புகைப்படங்களில் குண்டுவெடிப்பில் சிக்கிய பலியானவர்களின் இருவரின் உடல்களை காணமுடிகின்றது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127866/language/ta-IN/article.aspx

 

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தாவில் பல இடங்களில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச் சூடு
------------------------------------------------------------
இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தாவில் பல இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. நகர் முழுவதும் துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டுவருகின்றன.

இந்த குண்டு வெடிப்புகளில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஜகார்தாவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டர் உட்பட பல இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது.

பத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.

இவர்களில் பலர் இன்னமும் பாதுகாப்புப் படையினரோடு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்திருக்கும் அதிபர் ஜோகோ விடோடோ, அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு கூறியிருக்கிறார்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்த தகவல்கள் ஏதும் தெரியவில்லை.

கடந்த காலங்களில் இந்தோனேஷியாவில் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன. இஸ்லாமிய அரசு என்று சொல்லிக்கொள்ளும் குழு விடுத்த மிரட்டலின் காரணமாக புத்தாண்டை ஒட்டிய தினங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பல இடங்களில் உடல்கள் கிடக்கும் படங்களும் காயமடைந்தவர்கள் தூக்கிச்செல்லப்படும் படங்களும் தற்போது வெளியாகிவருகின்றன.

பொதுமக்களும் காவலர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையின் தேசிய செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

முதன்முதலாக ஜகார்தாவில் உள்ள ஷரினா ஷாப்பிங் மையத்தில் குண்டுகள் வெடித்தன. இதையடுத்து, ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் அங்கே குவிக்கப்பட்டனர்.

ஆங்காங்கே குண்டுகள் வெடிப்பது குறித்த செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

பல தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்த ஸ்டார் பக்ஸ் காஃபி நிலையத்திற்குள் நுழைந்த மூன்று பேர் ஒரு குண்டை வெடிக்கச் செய்ததாகவும் அதற்குப் பிறகு துப்பாக்கியால் சுட்டதாகவும் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தோனேஷியா உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடு என்றாலும் பெரும்பாலும் மதச்சார்பற்ற முறையிலேயே செயல்பட்டு வருகிறது. ஆனால், சமீப காலமாக தீவிரத் தன்மைகொண்ட குழுக்கள் அங்கு பெருகிவருகின்றன.

12507327_10153202459570163_8958067794390

12552896_10153202459560163_8856360583316

12400792_10153202459585163_2985656158490

72361_10153202459690163_6140071793475331

11048754_10153202459720163_6697636359971

 

 

 

இந்தோனேசிய குண்டுவெடிப்பு: பதறவைக்கும் வீடியோ காட்சி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.