Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுனாமி அவலத்தின் உயிர்ச் சிற்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி அவலத்தின் உயிர்ச் சிற்பம்

- பண்டார வன்னியன்

தமிழன் தன்மானப் போராட்டத்தின் மத்தியிலும் அடுத்தவன் அவலத்தை போக்கவும் மதிக்கவும் தவறாதவன் என்பதற்கு ஆனந்தனின் சுனாமி அவலத்தை சித்தரிக்கும் சிலை ஓரு எடுத்துக் காட்டாகும் இது வெறுமனே அவலத்தை மட்டும் எடுத்துக் காட்டவில்லை தமிழன் தனது தன்பத்திலும் அடுத்தவன் துன்பததையும் தன் துன்பமாக ஏற்று நடப்பவன் என்பதையும் இந்த சிற்பம் எடுத்தியம்புகின்றமை பராட்டத்தக்கதாகும்.

20061221002scujaffnask4.jpg

இந்த சிற்பம் சம்பந்தமாக ஓவியர் மாற்கு, ஓவியர் இராசையா, ஓவிய சிற்பி ரமணி, கவிஞர் யாழ் nஐயம், ஓவியர் எஸ்.டி சாமி எனப் பலரும் பல வடிவத்திலும் புகழ்ந்துள்ளாhகள் விமர்சித்துள்ளார்கள்.

ஓவியர் மாற்கு குறிப்பிடுகின்றார் ஆனந்தன் சிற்பக் கல்லூரிகளின் ஊடாக வந்தவரல்ல குருவிடம் கற்க்கவில்லை ஆனால் அதற்குரிய அடிப்படை ஆவணங்கள் மூலம் கற்றறிந்து அதனை ஆழமாக உள்வாங்கி சிற்பங்களை படைக்கத் தொடங்கியவர் அதனால் தான் அவரது ஆக்கங்களில் ஓர் புதுவகையான கலைத்துவத்தை காண்கின்றோம.; இரசிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

20061221003scujaffnaqp7.jpg

இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கோரத் தாண்டவம் நடத்திய சுனாமி கடற் கோள் காரணமாக ஏற்படுத்திய அழிவுகள் இன்றும் அதில் அகப்பட்டவர்களின் மனத்தில் ஒரு வடுவாகவே காணப்படுகின்றதுடன் உறவுகளையும் சொத்துக்களையம் வீடு வாசல்களையம் இழந்தவர்கள் இன்றும் தவித்து நிற்க்கும் நிலமை பரிதாபத்திற்கும் மறக்க முடியாததும் ஆகும்.

இந்த துன்பத்தை பலரும் பல வடிவத்தில் வெளிக் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் குறிப்பாக புத்தகங்கள் ஒலி ஒளி நாடாக்கள் கவிதைகள் என பல வடிவங்களிலும் வெளிவந்தள்ளமை குறிப்பி;டத்தக்கதாகும் ஆனாலும் இன மதம் மொழி கடந்து ஒரு சிற்பமாக இன்று சுனாமி அவலங்களை வெளிப்படுத்தி ஒரு வரலாற்றுச் சிற்பம் வெளிவருகின்றமை உலகிலேயே முதலாவதாக அதுவும் தமிழீழத்தில் உள்ள ஒரு தமிழனால் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

20061221004scujaffnagn2.jpg

சிற்பத்தைப் பற்றி கூறும் போது அனர்த்த நிகழ்வுகள் இடம் பெற்ற அம்பாந்தோட்டை காலி முதல் அம்பாறை மட்டக்களப்பு திருகோணாமலை முல்லைத்தீவு தாழையடி ஆழியவாளை பருத்தித்துறை கீரிமலை வரையான மனத்தை உறுத்தும் சுனாமி அவலங்களை; வெளிப்படுத்தி நிற்பதுடன் குறிப்பாக கிக்கடுவையில் தண்டவாளத்தில் வந்த புகைவண்டி தடம்புரண்டது மற்றும் மட்டக்களப்பு கல்முனையில்; பேபி 81 கதையென நீண்டு திருமலையில் இடம் பெற்ற அவலங்களை வெளிப்படுத்தி முல்லைத்தீவில் தாளையடியில் மட்டக்களப்பில்; சிறார்களின பேரழிவுகள் எனத் தொடங்கி கீரிமலை வரை நிண்டு சென்றுள்ளது

20061221005scujaffnaij6.jpg

யாழ்ப்பாணத்தின் செம்மனி வளைவைக்காட்டி எல்லையிட்டு தலைப் பக்கத்தே சுனாமியின் கதை கூறி நிற்க்கும் காட்சி சிற்பத்தின் அடியில் சுனாமியின் சீற்றத்தை காட்டி மேலே செல்லச்செல்ல சுனாமியின் அனர்த்தங்களை செதுக்கிச் செல்லும் ஆற்றல் மற்றும் இன்றும் பார்ப்பவாகளின் உள்ளத்தை உலுக்கியெடுக்கும் அவலச் சிலைகள் தோண்டியெடுத்துள்ள கிணறுகள் ஆடை கலைந்து அவலப்படுத்திய பெண்டிர்க்கு பாதுகாப்பக் கொடுத்த பனைமரங்கள் எனப் பலதையும் உள்ளதை உள்ளபடி எடுத்து காட்டும் ஒரு சிலை மத ஆலயங்களான கிறிஸ்தவ இந்து பௌத்த ஆலயங்களின் அழிவுகள் சுனாமியில் சிக்குண்டு சிதறிய உயிர்களின் உடல்களின் அவலங்கள் மற்றும் தப்பியவர்களின் நிலைகள் என பல அவலங்களையும் தத்துவரூபமாக சிற்பத்தில் வடித்து ஒரு உயிரோட்டம் மிக்க வரலாற்றை மறைக்க மறுக்க முடியாத சிற்பமாக இந்த சிற்பம் இன்று காணப்படுகின்றது.

20061221006scujaffnaun5.jpg

இந்த சிற்பம் ஓரே மரத்தில் எட்டு அடி உயரத்திலும் பத்தடி சுற்றிலும் செதுக்கப்பட்டு உள்ளது இதனை மல்லாகம் குளமங்காலைச் சோந்த சிற்பியான ஏ.வீ.ஆனந்தன் செதுக்கியுள்ளார். சிற்பம் என்ற கூறுவதிலும் பார்க்க உயிருடன நாளாந்தம் கதை பேசும் அழியா சிற்பம் என்பதே உண்மையாகும் இந்த மரம் கூட சிற்பி சிறுவயதில் இருந்து வளையாடிய ஒரு மரம் என்பதும் அன்று விளையாட இடம் கொடுத்த மரம் இன்று தமிழன் புகழ் பாட சிற்பிக்கு இடம் கொடுத்துள்ளமை காலத்தின் கட்டாயம் என்றே கூறலாம் தமிழர்களுக்கென பல காவியங்கள் உண்டு அதிலும் இன்று மதம் இனம் மொழி கடந்து தத்தவார்த்தமாக நடந்த உண்மையை ஒழிவு மறைவின்றி அடுத்த சந்ததிக்காக உருவாக்கியமை பாராட்டிற்க்கும் வரவேற்பிற்க்கும் உரியதாகும் மரத்திலும் கூட காவியம் வடிக்கலாம் என்பதற்கு சிறந்த ஒரு உதாரணம் இந்த சிற்பமாகும்

வெறும் சிற்பமாக மட்டும் நிற்க்கவில்லை அவலத்தில் தமிழீழ போராளிகள் தமது உயிர் கொடுத்து சுனாமியில் சிக்கிய மக்கள் உயிர் காத்து சேவை செய்த வரலாற்றையும் இந்த ஓவியம் கொண்டுள்ளமை சிறப்பம்சமும் குறிப்பி;டத்தக்கதுமாகும்

20061221007scujaffnakw6.jpg

இதனை எதிர்வரும் 26 ம் திகதி சுனாமி அனர்த்தம் இடம் பெற்ற இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி காங்கேசன்துறை வீதி தெல்லிப்பழையில் உள்ள ஏ.வி ஆனந்தனின் சிற்பாலய கலைக் கூடத்தில் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது

http://www.sankathi.org/news/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் சுனாமி சிற்பம் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் சுனாமி அனர்த்தங்கள் அவலங்களை சித்தரிக்கும் சிற்பம் இன்று பகல் திறந்து வைக்கப்பட்டுள்ளது காலை 10.00 மணிக்க வலி வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் எஸ் முரளிதரன் தலைமையில் இடம் பெற்றது.

மண்டபத்தை யாழ்ப்பாணம் பல் கலைக்ழகத்தின் சமூகவியல் துறை தலைவர் பேராசிரியர் நா சண்முகலிங்கன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார் தெல்லிப்பழை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள சிற்பி ஏ.வி. ஆனந்தனின் சிற்பாலயத்தில் சிலையை யாழ் மாவட்ட மேலதிpக அரசாங்க அதிபர் பா செந்தில் நந்தனால் திறந்து வைக்கப்பட்டது

இந் நிகழ்வில் மங்கள விளக்கினை கலாநிதி செல்வி துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்திரு சௌந்தரநாயகம் அடிகளார் ஏற்றி வைத்தார்கள்

வரவேற்புரையை ஊடகவியலாளர் சச்சிதானந்தன் நிகழ்த்தினார்

தொடர்ந்து ஆசியுரையை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி சுனாமி அனர்த்தத்தில் சிக்குண்டு தப்பிய அருட்தந்தை கஸ்பார் அடிகளார் ஆகியோர் வழங்கினார்கள்

சிற்பி ஏ.வி ஆனந்தன் (கொன்ஸரன்ரையின் )சிற்பத்தின் வடிவமைப்பு பற்றி எடுத்துரைத்தார்

இந் நிகழ்வில் பல நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.