Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலுவிழந்த சிங்கள கடற்படைக்கு இந்தியா பிச்சை போடுமா?

Featured Replies

சிங்கள ஆய்வாளர்களின் கூற்று கொள்கையளவில் (வுhநழசல) சரியாகலாம் ஆனால் களத்தில் பிரதிகூலமானதே. இரண்டு பீரங்கிகளை ஒரு கலத்தில் பொருத்துவதைவிட இரு கலங்களில் பொருத்தி தாக்குவது தாக்குதல் கலங்களின் மற்றும் பீரங்கிகளின் இயங்குத்தன்மையை இரு மடங்காக அதிகரிப்பதுடன். கலங்கள் தாக்குதலில் சேதமடையின் இழப்பையும் 50 விகிதத்தால் குறைவடைய செய்துவிடும் என்பது தான் உண்மை.

டோராக்களின் வீழ்ச்சியை தடுப்பதற்கு சிங்கள ஆய்வாளர்கள் முன்வைக்கும் முக்கியமான கருத்து யாதெனில். தாக்குதிறனிலும், தூரவீச்சிலும் கூடிய 30 மி.மீ பீரங்கிகளை டோராக்களில் தற்போது உள்ள 2,000 மீ தூரவீச்சுக் கொண்ட 23 மி.மீ பீரங்கிகளுக்கு மாற்றீடாக பொருத்துவதாகும். அதன் மூலம் டோராக்கள் களத்தில் எவ்வாறு மேலோங்கும் என்பதற்கு பின்வரும் காரணிகளை முன்வைக்கிறார்கள்.

࠼ஃகழவெ, 3,000 மீ. தூர வீச்சுக்கொண்ட 30 மி.மீ பீரங்கி மூலம் அதிக தொலைவில் வைத்து கடற்புலிகளை முறியடித்து விடுவது.

࠼ஃகழவெ, 30 மி.மீ பீரங்கியின் சூட்டு பின்னுதைப்பை (சுநஉழடை கழசஉந) தாங்கக்கூடிய வலிமை புலிகளின் படகுகளுக்கு கிடையாது.

࠼ஃகழவெ, 30 மி.மீ போன்ற கனரக ஆயுதங்களை கறுப்புச்சந்தையில் புலிகள் வாங்க முடியாது.

இவை தான் 30 மி.மீ பீரங்கிகள் மூலம் டோராக்களை காப்பாற்றுவதற்கு சிங்கள ஆய்வாளர்களால் முன்வைக்கப்படும் காரணிகள். புலிகளை பொறுத்தவரை ஆயுதங்களை வாங்கிவிட்டு அதனை பொருத்தும் வாகனங்களுக்காக காத்திருப்பவர்கள் அல்லர். கிடைக்கும் வளங்களை கொண்டு அடித்தளங்களை அமைப்பவர்கள். இன்றும் 0.5 பிறவுணிங் கலிபரை நம்பியிருக்கும் சிங்களப்படையின் நீருந்து விசைப்படகு புலிகளின் கைக்கு வந்ததும் 20 மி.மீ ஒலிகனை காவுவது எவ்வாறு?

டாங்கிகள் மற்றும் ஆட்டிலறிகளை கனரக கரையோர பாதுகாப்பு பீரங்கிகளாகவும் (ளுவசழபெ உழயளவயட பரளெ) பயன்படுத்த முடியும் என சிங்களப்படைக்கு கற்றுக்கொடுத்தவர்களும் புலிகள் தான். அதனால் தான் முன்னர் கரையில் இருந்து 6 மைல் தொலைவில் கம்பீரமாக ரோந்து சென்ற சிங்களக் கடற்படை படகுகள் தற்போது 20 கடல் மைல்களுக்கு அப்பால் ஒளித்து ஓடுகின்றன.

30 மி.மீ பீரங்கிகளை கறுப்புச்சந்தையில் வாங்க முடியாது என்ற ஆய்வாளர்களின் வாதத்திற்கு சிங்களப்படை தளபதி அண்மையில் அமெரிக்காவில் கூறிய கருத்தையே பதிலாக கொள்ள முடியும்.

அதாவது போர் நிறுத்த காலத்திற்கு முன்னர் புலிகள் 122 மி.மீ பீரங்கிகள் 02 ஐயும், கனரக (120 மி.மீ) மோட்டார்கள் 20 ஐயும் கொண்டிருந்ததாகவும். தற்போது 20, 122 மி.மீ பீரங்கிகளையும், 80 கனரக மோட்டார்களையும் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவரது கூற்றின்படி புலிகள் போர்நிறுத்த காலத்தில் கனரக ஆயுதங்களை வாக்கியிருப்பதாகவே கொள்ளமுடியும். 122 மி.மீ ஆட்டிலறிகள், 120 மி.மீ மோட்டார்களை சுலபமாக கொள்வனவு செய்யலாம் என்றால் 30 மி.மீ பீரங்கியை கொள்வனவு செய்வதில் பெரும் சிரமங்கள் இருக்கப்போவதில்லை.

மேலும் புலிகளின் முக்கிய ஆயுத வழங்குனராக செயற்படுவது சிங்கள அரசு தான். 122 மி.மீ ஆட்டிலறி, 120 மி.மீ மோட்டார்கள், வு-55 ரக டாங்கிகள், 23 மி.;மீ பீரங்கிகள் எல்லாவற்றையும் புலிகளுக்கு முதலில் வழங்கியது சிங்களப்படைகள் தான். எனவே கொள்வனவு செய்யப்படும் 30 மி.மீ பீரங்கியும் புலிகளிடம் சிக்குவதற்கு அதிக காலம் எடுக்கப் போவதில்லை.

இந்த ஆயுதப் பலப்படுத்தல்களுக்கு அப்பால் டோராக்களின் பாதுகாப்பிலும் அதன் தொழில்நுட்பம் தொடர்பான நம்பிக்கையிலும் சிங்களப் படைகளுக்கு பேரிடியாக வீழ்ந்தது 09.11.2006 அன்று வடமராட்சி கிழக்கில் நிகழ்ந்த கடற்சமர் தான். இந்தச்சமரில் தான் முதன் முதலாக டோராக்களின் மாலுமிகள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். கைது செய்யப்பட்ட மாலுமிகள் டோராக்கள் தொடர்பான பெறுமதி வாய்ந்த தகவல்களையும், சமராடும் நுட்பங்களையும், தப்பியோடும் தந்திரங்களையும் (இது அவர்களை இடைமறித்து தாக்க உதவும்) புலிகளிடம் தெரிவிப்பார்கள் என்பது உண்மை.

புலனாய்வு தகவல்கள் ஆனாலும் சரி ஆயுததளபாடம் தொடர்பான தகவல்கள் ஆனாலும் சரி 'ஒரு வார்த்தை ஆயிரம் புகைப்படங்களை விட மேலானது". ஏனெனில் மனித மனங்களையும் போர்க்கள உத்திகளையும் அறியும் ஆற்றல் புகைப்படங்களுக்கு கிடையாது. இந்த போர்கள உத்திகள் தான் 1953 இல் நிகழ்ந்த கொரியப் போரில் பின்பற்றப்பட்டன. சீனா வடகொரியாவிற்கு ஆதரவாகவும் அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவாகவும் களமிறங்கிய போரே கொரியப் போர் என்றாலும் அமெரிக்காவும், சோவியத்தும் தமது படைப் பலத்தை பரிசோதித்த களமாகவே இந்தப்போர் அமைந்தது.

அமெரிக்காவின் ஆயுத தொழில்நுட்பத்தை அறிவதற்கு சோவியத்தும், சோவியத்தின் ஆயுத தொழில்நுட்பத்தை அறிவதற்கு அமெரிக்காவும் மோதிய களம் தான் கொரியன் வளைகுடாப் போர். வடகொரியா மற்றும் சீனா விமானப்படை பயன்படுத்திய சோவியத்தின் மிக் ரக விமானங்களின் போரிடும் இரகசியத்தை அறிவதற்காக அவற்றை கைப்பற்றவும், சுட்டு வீழ்த்தப்படும் விமானிகளை கைது செய்து விசாரிக்கவும் அமெரிக்கா தீவிரம் காட்டியது. அதே போலவே சோவியத்தின் விமானப்படை விமானிகள் வடகொரிய விமானிகளின் உடையில் போர் விமானங்களை ஓட்டியதுடன் அமெரிக்காவின் போர் விமானங்களை கைப்பற்றவும் மிக்கினால் சுட்டு வீழ்த்தப்படும் விமானங்களின் விமானிகளை கைது செய்து விசாரிக்கவும் முயன்றார்கள்.

வடகொரியா மற்றும் சீனாவின் எல்லைப்பகுதிகளில் கைது செய்யப்பட்ட அமெரிக்கா விமானிகளை வடகொரியாவின் ஆயுதப்படைகளின் உடைகளில் இருந்த சோவியத்து அதிகாரிகள் விசாரணை செய்ததாக மீண்டு வந்தவர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காணாமல் போன 50 இற்கு மேற்பட்ட அமெரிக்க விமானிகளில் பாதிப்பேர் தான் போரின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். மீதிப்பேர் என்ன ஆனார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எனினும் அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களின்படி அவர்கள் மேலதிக விசாரணைக்காக சோவியத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

எனவே டோராவின் மாலுமிகளின் கைதும் டோராவின் பலத்திற்கு வீழ்ந்த மற்றுமொரு அடியாகத்தான் சிங்கள அதிகாரிகள் கருதுகின்றனர். டோராக்களின் அழிவு கடற்படையை முடக்கிவிடும் என்பதும் கடற்படையின் முடக்கம் தரைப்படையின் அழிவிற்கு வழிவகுத்து விடும் என்பதுடன் போரின் போக்கும் மாறிவிடும் என்பதும் இராணுவ வல்லுனர்களால் உணரப்பட்ட கள யதார்த்தம். இதனால் தான் சிங்களப்படை தனது கடற்படையின் மறுசீரமைப்பிலும், கடற்கண்காணிப்புக்கு இந்திய கடற்படையின் ஆதரவை பெறுவதில் கங்கணம் கட்டிநிற்கிறது.

அதன் ஓரங்கமே மகிந்தவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஐபக்சா கடற்படையில் இணைந்தது. அதாவது துவண்டுபோன கடற்படையின் மனோபலத்தை அதிகரிக்கும் முயற்சி இது. இவை தவிர அதிகரிக்கப்பட்ட பாதுகாப்புச் செலவில் கடற்படைக்கான ஒதுக்கீடும் அதிகம் என்பதுடன் இழக்கப்பட்ட படகுகளுக்கு மாற்றீடான படகுகளையும், நவீன ஆயுதங்களையும் வாங்கிக்குவிக்கும் முயற்சியிலும் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த மாற்றீடுகள் சமர்க்களத்தில் பலமாக உள்ள கடற்புலிகளை எதிர்கொள்ள போதுமானதல்ல என்பதும், நாட்டின் முழுக் கடற்பகுதியையும் பாதுகாக்க சிங்கள கடற்படையால் முடியாது என்பதும் அரசுக்கு உள்ளுரப்புரிந்த விடயம்.

இதை ஈடு செய்வதற்காகவே தென்னாசியாவின் பலமான கடற்படையான இந்தியக் கடற்படையை சமர்க்களத்துக்குள் இழுத்து விட சிங்கள தேசம் துடியாய் துடிக்கிறது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா 1987 களில் இந்தியப்படைகளை இலங்கைக்குள் இழுத்துவிட்டது போன்றதான தந்திரம் இது.

இந்திய கடற்படையை பொறுத்தவரை பிரேமதாசா மற்றும் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தின் போது தகவல்களை பரிமாறுதல், பயிற்சியளித்தல், ஆயுதத் தளபாட விநியோகம் என பலவழிகளில் மறைமுகமாக உதவியே வந்துள்ளது. இந்த உதவிகளை இந்திய மத்திய அரசு பெருமளவில் மறைக்க முயன்ற போதும் சிங்கள அதிகாரிகள் மூலம் அவ்வப்போது தகவல்கள் வெளிவருவதுண்டு. 1990 களின் இறுதிப்பகுதியில் உலங்குவானூர்தி தளத்தை கொண்ட ரோந்துக்கப்பலையும் இந்தியா இலங்கைக்கு வழங்கியிருந்தது.

போர்நிறுத்த காலத்திலும் இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை கடற்படையை பலப்படுத்தும் முயற்சியில் முனைப்பாக ஈடுபட்டதும் உண்டு. அமெரிக்கா ரோந்துக்கப்பலை வழங்கியதுடன் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தது. இந்தியக் கடற்படை சிங்களக்கடற்படையுடன் கூட்டுப்பயிற்சிகளையும் மேற்கொண்டிருந்தன. இதுவும் போர்நிறுத்தம் சிதைந்து போனதுக்குரிய காரணிகளில் ஒன்றாக இன்று கருதப்படுகின்றது.

தற்போதைய நிலையில் சர்வதேச நாடுகள் வழங்கும் ஆயுத தொழில்நுட்ப உதவிகளால் சிங்களக்கடற்படையின் பலத்தை தக்கவைக்க முடியுமா என்பது தான் முக்கிய கேள்வி.

ஏனெனில் 1980 களில் ஈழப்போர் உக்கிரம் பெற்ற காலம் தொட்டு சிங்களக் கடற்படை அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான், சோவியத்து ஒன்றியம், இந்தியா போன்ற முன்னனி நாடுகளின் ஆயுதம், பயிற்சி, தொழில்நுட்பம் போன்ற உதவிகளைப் பெற்றே புலிகளுடன் மோதி வந்துள்ளது.

எனவே தற்போது ஆயுத தொழில்நுட்ப உதவிகளை பெற்றாலும் கடற்புலிகளை தோற்கடிக்க முடியாது என்ற நிலைக்கு சிங்கள அரசு தள்ளப்பட்டுள்ளது என்பதே உண்மை. எனவே தான் கூட்டு ரோந்து, கூட்டுக்கண்காணிப்பு என்ற வார்த்தைகள் மூலம் இந்தியக்கடற்படையை நேரடியாக களத்துக்குள் இழுத்துவிட முனைந்து நிற்கிறது.

சிங்கள அரசின் தூதுவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், ஜனாதிபதி போன்றோரின் அடிக்கடியான இந்தியப் பயணத்தின் இரகசியமும் அது தான். விஜயம் செய்த அனைவரும் கடற்படை உதவி தொடர்பாகவே இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வந்தது நாம் அறிந்ததே. யாழ். குடாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து உணவுப்பொருட்களை விநியோகம் செய்ய சிங்கள அரசு முன்னின்றதும் அந்த உணவுப்பொருட்களின் மூலம் தனது படையினரின் தேவைகளையும் நிறைவேற்றும் நோக்குடன் தான்.

தனது முழுக் கடற்பிரதேசத்தையும் பாதுகாக்க முடியாத அரசு கடற்படையின் சில கட்டளை மையங்களுக்கு கீழ் உள்ள கடற்பிரதேசங்களை பொருளாதார அபிவிருத்திகளை காரணம் காட்டி சில ஆசிய நாடுகளுக்கு கொடுத்து விடவும் ஆர்வமாக உள்ளது. சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு இந்தியாவை இழுப்பதன் மூலம் திருமலை கடற்பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். மன்னாரில் எண்ணை படிவுகளை அகழ்வதற்கு சீனாவை அழைப்பதன் மூலம் வடமேற்கு கடற்பிரதேசத்தை பாதுகாக்கவும் திரைமறைவில் முயன்று வருகின்றது.

கூட்டு ரோந்து என்ற மாயைக்குள் சிக்கி புலிகளுடன் மோதுவதற்கு இந்தியக் கடற்படை தயாராக இல்லை. தப்பித்தவறி மோதலுக்குள் சிக்குப்பட்டு இந்தியக் கடற்படையின் படகோ அல்லது கப்பலோ சேதமடைந்தால் அல்லது மூழ்கினால். அது இந்திய அரசியலில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதுடன் தென்னாசியாவின் பொருளாதாரப் போட்டியிலும் இந்தியாவிற்கு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். 8000 மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஈராக் அமெரிக்காவின் அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தை விட 25 மைல்கள் தொலைவில் உள்ள தமிழீழம் அதிக தாக்கத்தை இந்திய அரசியலில் ஏற்படுத்தக்கூடியது. இப்படி ஒரு மாற்றத்தை 1989 களில் இந்திய அரசு சந்தித்தும் இருந்தது.

மேலும் 1987 களில் கையை சுட்டுக்கொண்டது போல மீண்டும் ஒருமுறை சுட்டுக்கொள்ள இந்தியா விரும்பாததற்கான காரணியாக உலகின் மிக நவீன இராணுவமான அமெரிக்கப்படை ஈராக்கில் கண்ட தோல்வியையும், இந்த வருடம் இஸ்ரேலியப்படைகள் லெபனானில் கண்ட தோல்வியும் கொள்ளலாம். இந்த இரு நடவடிக்கைகளும் இலங்கை விடயத்தில் இந்தியாவையும் சரி வேறு நாடுகளையும் சரி விலகி நிற்கவே தூண்டியுள்ளன.

ஆனால்; நேரடியற்று மறைமுகமாக சிங்களக்கடற்படையை பலப்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டே வருகின்றது. ஆபத்துக்கள் அற்ற ஆயுத உதவி என்ற போர்வையில் ஆயுதங்களையும். இந்தியக் கடற்படைத்தளபதிகள் ஊடாக சிங்களக்கடற்படைக்கு ஆதரவான அறிக்கைகள் விடுவதன் மூலம் அவர்களின் உளவியல் உறுதியை அதிகரிக்கும் முயற்சியையும் இந்திய மத்திய அரசு கைவிடவில்லை.

'இலங்கை கடற்படையினருடன் இந்திய கடற்படையினர் இணைந்து செயற்படுவர்" என இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா கூறியுள்ள கருத்து துவண்டு போன சிங்களக்கடற்படையின் மனவலிமையை தூக்கி நிறுத்த எடுத்த முயற்சியாகவே கருதப்படுகின்றது. அரசியல்வாதிகள் கருத்துக்கள் கூறினால் சர்ச்சையாகிவிடும் ஆனால் ஒரு படைத்தளபதி கருத்து கூறினால் அதை நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம் என்று சமாளித்துவிடலாம் என்பது தான் இந்திய மத்திய அரசின் திட்டம்.

இது தான் மகிந்தரின் இந்திய விஜயத்தின் பின்னர் கடற்படைத்தளபதி கூறிய கருத்தின் காரணம். அதாவது மகிந்தரை குளிர்விக்கவும் சமகாலத்தில் தமிழ்நாட்டில் எதிர்ப்பு அலைகள் தோன்றாமல் இருக்கவும் இந்திய மத்திய அரசு போட்ட நாடகம். ஏனெனில் அரசின் அனுமதியின்றி அயல்நாடு தொடர்பான கருத்தை தளபதி தன்னிச்சையாக வெளியிட்டிருக்க முடியாது என்பது வெள்ளிடை மலை. இது மட்டுமல்லாது சிங்கள அரசின் கடற்படைக்கு அண்மையில் வழங்கப்பட்ட ஆயுத உதவி வெளிச்சத்திற்கு வந்ததும் இந்திய மத்திய அரசின் இரட்டை முகத்தை தெளிவாக அம்பலப்படுத்தி உள்ளது.

உலக அரங்கில் அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடாக சிங்கள அரசு தரப்படுத்தப்பட்ட பின்னரும் இந்தியா உதவி வருவது உலக ஜனநாயக விழுமியங்களை மீறும் செயலாகவே கொள்ள முடியும்.

கடற்புலிகளின் பலமும், மக்களின் எழுச்சியும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் உத்வேகம் பெற்ற உரிமைக் குரல்களும் இந்திய அரசின் நேரடி உதவிகளை தடுத்து நிறுத்தினாலும் பிச்சை போடுவது போன்று இந்திய மத்திய அரசு செய்து வரும் ஆயுத, உளவியல் உதவிகள் முற்றாக நிறுத்தப்படவில்லை. இதை நிறுத்துவதற்கு தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அத்தனை மக்களும் ஒரணியில் திரளவேண்டும் என்பது தான் இன்றைய காலத்தின் தேவை.

பொறுமையின் எல்லையை கடந்த புலிகளும், போராடுவதை தவிர வேறு வழிகளே இல்லை என நிர்க்கதியாக்கப்பட்ட மக்களும் ஆர்ப்பரித்து எழப்போகும் வேளையிது. இந்த தருணத்தில் மலையே குறுக்கே வந்தாலும் மோதிப்பார்த்து விடுவது என்பது தான் விடுதலை வேண்டி நிற்கும் மக்களின் ஒருமித்த கருத்தாக இருக்கமுடியும். இந்த ஆர்ப்பரிப்பின் முன் சிங்களக்கடற்படை எம்மாத்திரம்?

http://www.tamilnaatham.com/articles/2006/dec/arush/23.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.