Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்பது அவசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்பது அவசியம்

[ Friday,12 February 2016, 03:17:24 ]   
paplao.jpg

பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்கும் தேசிய மட்டத்திலான கலந்துரையாடலை முன்னெடுப்பது அவசியமானது என ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீவ் வலியுறுத்தியுள்ளார்.

 

கடந்த வாரம் ஸ்ரீலங்காவிற்கான விஜயத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உண்மை, நீதி, இழப்பீடு, மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கான உத்தரவாதம் ஆகியவற்றை மேம்படுத்தும்  விவகாரத்திற்கு பொறுப்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் கிறீவ், சர்வதேச சமூகம் இதனை வலியுறுத்தியுள்ளதாகவும் அதற்கான ஆணை உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களுக்கு தீர்வுகாணும் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பங்கேற்பு முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

ஸ்ரீலங்காவிற்கான தனது விஜயத்தில் அரசாங்க அதிகாரிகளை சந்தித்ததுடன்,  வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு சிவில் அமைப்புக்கள் மற்று பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்ததாக பப்லோ டி கிறீவ்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய பொங்கல் நிகழ்வில் காணாமல் போனவர்கள்  தொடர்பிலான பிரதமர் ரணில் விக்ரம  சிங்கவின் கருத்து காணாமல் போனவர்களின் குடும்பங்களை மேலும் வேதனைக்குட்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிட்ட பப்லோ டி கிறீவ்,  விசேடமாக பாதிக்கப்பட்ட பெண்கள்   கடுமையான கண்காணிப்புக்கு இலக்காகியுள்ளார்கள் எனவும் அவர்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அச்சம் அடைகிறார்கள்  எனவும் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://ibctamil.com/news/index/18602

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.