Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு

http://www.pathivu.com

மக்கள் வழங்கிய தகவலையடுத்து இன்று காலை 9 மணியளவில் களுவங்காணி கடற்கரைப்பகுதியில் பகுதியாக புதைந்த நிலையில் சடலம் ஒன்றை சிறீலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர் 29 அகவையுடைய கலைக்குட்டி சந்திரசேகரம் எனவும் இவர் கடந்த 9ம் திகதி களுவங்கேணி கோவிலுக்கு சென்ற போது காணாமல் போனதாக அறியமுடிகிறது.

ஏறாவூரில் புதைக்ப்பட்டிருந்த சடலம் ஒன்று மீட்பு.

மட்டக்களப்பு ஏறாவூர்பகுதியில் புதைக்ப் பட்டிருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூர் களுவங்கேணிப் பிரதேசத்தில் மக்கள் கொடுத்த தகவல்களை அடுத்தே சிறிலங்கா காவல்துறையினரால் இச்சடலம் மீட்கப்பட்டு இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

www.sankathi.com

வாழைச்சேனையில் இரு இளைஞர்கள் கடத்தல்.

வாகரைப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து யூனியன் கொலனியில் தமது உறவினர்களுடன் வசித்து வந்த இரு இளைஞர்கள் கடந்த செவ்வாய்கிழமை இரவு 9.30 மணியளவில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுயள்ளார்கள்.

கடத்தப்பட்டவர்கள் 25 அகவையுடைய என்.தர்மலிங்கம், மற்றும் 27 அகவையுடைய எம்.பாலச்சந்திரன் ஆகியோர் என யூனியன் காலணி குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

www.pathivu.com

திருகோணமலையில் இளைஞர் சுட்டுக்கொலை.

இன்று புதன்கிழமை மாலை கைகள் கட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வரோதிய நகரில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

திருகோணமலை உப்புவெளி பொலிசார் இவரது சடலத்தை திருகோணமலை வைத்தியசாலையில் இனம் காண்பதற்காக ஒப்படைத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

www.pathivu.com

துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு.

திருகோணமலை வரோதியா நகரை அண்டிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் பின்புறமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் திருகோணமலை பாலையூற்றில் வசித்து வந்தவருமான மகேந்திரன் கிரிதரன் (வயது 17) என்பவரது சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உப்புவெளி சிறிலங்கா காவல்துறையினர் சடலத்தை அடையாளம் காணும் பொருட்டு திருமலை பொது மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

www.puthinam.com

Edited by YARLVINO

வவுனியாவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் சுட்டுக்கொலை.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வவுனியா நெளுங்குளம் பாடசாலைக்கு முன்பாக உள்ள தொலைத் தொடர்பு நிலையத்துக்கு அருகில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்டவர் முருங்கன்பிட்டி முருங்கனைச் சேர்ந்த பஸ்தியாம்பிள்ளை செந்தூரன் (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உந்துருளியில் சென்று கொண்டிருந்த போதே இவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

www.puthinam.com

Edited by YARLVINO

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.