Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் அனல் மின்நிலைய திட்டம் நாட்டிற்கு ஆபத்து! இந்தியாவின் நலனுக்காக TNA ஒத்துழைக்கக்கூடாது!!

Featured Replies

புத்திஜீவிகள் வலியுறுத்தல்-

சம்பூர் அனல் மின்நிலைய திட்டம் நாட்டிற்கு ஆபத்து! இந்தியாவின் நலனுக்காக TNA ஒத்துழைக்கக்கூடாது!!

 


இந்­தியா மற்றும் ஜப்பான் அர­சாங்­கங்­களின் உத­வி­யுடன் சம்­பூரில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வி­ருக்கும் அனல் மின் நிலையம் அப்­பி­ர­தே­சத்தில் வசிக்கும் தமிழ் மக்­க­ளுக்கு மாத்­திரம் பிரச்­சி­னை­யாக அமை­யப்­போ­வ­தில்லை. இதனால் எமது முழு நாட்டினரும் எதிர்­கால சந்­த­தி­யி­னரும் பெரும் பாதிப்­பு­களை எதிர்­கொள்­ளப்­போ­கின்­றனர் என எச்­ச­ரிக்கை விடுத்த புத்­தி­ஜீ­விகள் இது குறித்து தேசிய ரீதியில் தெளிவூட்டும் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்கப்பட வேண்டும் என வும் தெரி­வித்­தனர்.

அத்­துடன் இவ்­வி­வ­கா­ரத்தை தமிழ் தேசி யக் கூட்­ட­மைப்பு பிராந்­திய அர­சியல் நல­னுக்­காக பார்க்­காது அங்­குள்ள மக்கள் மற் றும் அவர்களின் நலன் குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் அவர்கள் வலி­யு­றுத்­தினர்.

சம்பூர் அனல் மின்­நி­லையம் நிர்­மாணிக் ­கப்­ப­டு­மாயின் அதனால் ஏற்­படும் சூழ­லியல் மற்றும் சுகா­தார, சமூக பிரச்­சி­னைகள் குறித்து ஊட­க­வி­ய­லா­ளர்­களை தெ ளிவூட்டும் செய­ல­மர்­வொன்று நேற்று நார­ஹேன்­பிட்­டியி­லுள்ள இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய புத்திஜீவிகளே மேற்கண்டவாறு குறிப்பிட் டனர்.

கொழும்பு பல்­க­லைக்­க­ழக பொரு­ளியல் துறை சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கோபா­லப்­பிள்ளை அமிர்­த­லிங்கம், சிறு­நீரகம் தொடர்­பான நிபுணர் டாக்டர் நிலந்தி, சத­மரி விஜே­துங்க, ஒடாரா குண­வர்­த்தன, ஹிரான் ஜய­வர்­த்தன, சூழ­லியல் ஆர்­வலர் விதுர ரல­பன்­னவ, நீலா மரிக்கார், அசோக அபே­கு­ண­வர்­தன மற்றும் டாக்டர் அனில் கப்ரால் ஆகியோர் கலந்­து­கொண்டு விளக்­க­ம­ளித்­தனர். 

அவர்கள் மேலும் விளக்கமளிக்கையில்,

சம்­பூரில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருக்கும் அனல் மின்­நி­லையத் திட்­ட­மா­னது 200 வரு­ட­கால பழ­மை­வாய்ந்த­தாகும். இந்த திட்டம் நாட்டில் பெரும் அழி­வு­களை ஏற்­ப­டுத்தும். இதனால் பல நாடுகள் இத்­திட்­டத்தை கைவிட்­டுள்­ளன. ஆனால் இந்த நவீன தொழி­ல்நுட்ப உலகில் அனல்­மின்­ நி­லைய திட்­டத்தை அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வி­ருப்­பது வியப்­புக்கு­ரி­ய­தாகும். நாட்டில் மின்­சா­ரத்­திற்­கான தேவைப்­பா­டுகள் அதி­க­மாக இருக்­கின்­றன. எவ்­வித பக்­க­வி­ளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­தாத நீர் மின்­ உற்­பத்தி மற்றும் சூரியசக்தி மூல­மாக மின் உற்­பத்­தியை ஊக்­கப்­ப­டுத்­தலாம். அதனை விடுத்து இவ்­வா­றா­ன­தொரு நாட்­டுக்குப் பொருத்­த­மற்ற பேர­ழிவை ஏற்­ப­டுத்தும் அனல் மின்­ நி­லைய திட்­டத்தை முன்­னெ­டுக்க அனு­ம­தி­ய­ளிக்க முடி­யாது.


இத்­திட்­டத்­தினால் சுற்­றா­ட­லுக்கும் சுகா­தா­ரத்­திற்கும் வாழ்­வா­தா­ரத்­திற்கும் பெரும் பாதிப்பு ஏற்­படும். இப்­பா­திப்­பு­க­ளினால் சமூக பிரச்­சி­னைகள் பல தோன்றும்.

கொடூர யுத்­தத்தால் இடப்­பெ­யர்வு

இப்­ப­கு­தியில் நீண்­ட­கா­ல­மாக மக்கள் வாழ்ந்து வரு­கின்­றனர். தமி­ழர்­களின் குடிப்­ப­ரம்­பலே இப்­ப­கு­தியில் காணப்­ப­டு­கின்­றது. எனினும் 2006 ஆம் ஆண்­டு­களில் அரச படை­க­ளுக்கும் புலிகளுக்கும் கொடூர யுத்தம் ஏற்­பட்­டது. கிழக்கை கைப்­பற்றும் யுத்தம் இப்­ப­கு­தி­யி­லேயே ஆரம்­ப­மா­னது. இங்கு உக்­கிர மோதல்கள் ஏற்­பட்­ட­மை­யினால் மக்கள் அங்­கி­ருந்து இடம்­பெ­யர நேரிட்­டது. அங்கு மக்கள் எவரும் இல்லாத சூழ்­நி­லை­யி­லேயே அரசு அந்­நி­லத்தை அனல்­ மின்­நி­லை­யத்­திற்கு பயன்­ப­டுத்த திட்­டமிட் ­டது. கடந்த அர­சாங்கம் மக்­களை அங்கு மீள்­கு­டி­ய­மர்த்­து­வதில் அச­மந்­தப்­போக்கை கடைப் ­பி­டித்­தது. எனினும் புதிய அர­சாங்கம் சம்­பூரில் மீள்­கு­டி­யேற்றம் செய்­கின்­றது.

சுற்­றா­ட­லுக்கு பாதிப்பு

சம்பூர் என்­பது அனைத்து வளங்­க­ளை யும் கொண்ட ஒரு அழ­கான பிர­தே­ச­மா கும். சுற்­றுலா துறை­யி­னரை கவ­ரக்­கூ­டிய ஒரு பிர­தே­சமாகும். இந்த கிராமத்தின் பெயரின் அர்த்தம் சம்­பூ­ரணம­ானது. அதா­வது அனைத்து வச­தி­க­ளையும் கொண்­டது. இங்கு அனல் மின்­நி­லையம் அமைப்­ப­த னால் அச்­சூழல் அழி­வுறும். அத்­துடன் கடும் வெப்­பமும் வரட்­சி­யு­மான நிலைமை ஏற்­படும்.

கடல் அசுத்­த­மாகும்

அனல் மின்­ நி­லை­யத்­தி­லி­ருந்து வெளி­யேறும் இர­சா­யன மற்றும் திண்மக் கழி­வுகள் கட­லுக்கு திருப்­பி­வி­டப்­படும். இதனால் கிழக்கு கடல் அசுத்­த­ம­டையும். மீன் இனங் கள் அழியும். அத்­துடன் கிழக்கின் கடல் வளங்கள் அழி­வ­டையும்.

வளி மாசுறும்

அனல் மின்­ நி­லை­யத்­தி­லி­ருந்து வெளி யேறும் காப­னீ­ரொட்­சைட்டு, ஓகன் போன்ற வாயு­க்க­ளினால் வளி மாசுறும். இதனால் வடக்கு, வட­மத்­திய, வடமேல் மாகாண வான் பரப்பில் அமில வாயு அதி­க­ரிக்கும்.

விவ­சாயம் பாதிக்கும்

வளி மாச­டைவு கார­ண­மாக திரு­கோ­ண­மலை, அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, குரு­ணாகல், வன்னி போன்ற பகு­தி­களில் அமில மழை பொழியும் நிலைமை ஏற்­படும். இதனால் அங்கு விவ­சாய நிலங்கள் பாதிப்­ப­டையும்.

வாழ்­வா­தாரம் முடங்கும்

விவ­சாய நிலம், கடல் வளம் என்­பன பாதிக்­கப்­ப­டு­வ­தனால் கிண்­ணியா, மூதூர், வெருகல் உள்­ளிட்ட திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் வாழ்­வா­தாரம் முழுமை யாக முடங்கும். அத்­துடன் வட­மத்­திய மாகாணம், வடமேல் மாகா­ணத்­திலும் விவ ­சாய நட­வ­டிக்கை பாதிப்பால் வாழ்­வா­தரம் ஸ்தம்­பி­த­ம­டைந்து மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­படும்.

சுகா­தார பிரச்­சி­னைகள்

தற்­போது அநு­ரா­த­புரம் மாவட்ட மக்கள் சிறுநீரக நோய் பாதிப்­பினால் அவ­தி­யுறும் நிலையில் அமிலம், இர­சா­யன பதார்த்­தங்கள் விவ­சாய செய்கை மற்றும் குடிநீர் என்­ப­வற்றில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். இந்­நி­லைமை மேலும் மோச­ம­டையும். ஏற்­க­னவே நுரைச் ­சோலை மின்­நி­லையம் அமைக்­கப்­பட்­ட தன் கார­ண­மாக புத்­தளம் பகு­தியில் நிலத்­தடி நீரை பயன்­ப­டுத்த நீர் வழங்கல் சபை தடைவிதித்­துள்­ளது. இந்­நி­லைமை கிண்­ணியா, மூதூர், சம்பூர் பகு­தி­களில் ஏற்­ப­டலாம்.

திரு­­மலை துறை­மு­கத்தை கட்­டுப்­படுத்தும் திட்டம்

உல­கி­லுள்ள விசே­ட­மா­ன­தொரு துறை­மு­க­மாக திரு­கோ­ண­மலை இயற்கை துறை­முகம் காணப்­ப­டு­கின்­றது. இதனை தமது கட்­டுப்­பாட்டில் வைத்­துக்­கொள்­வ­தற்கு நீண்­ட ­கா­ல­மாக இந்­தியா, சீனா போன்ற நாடு­க­ளி­டையே போட்டி நிலவி வரு­கின்­றது. அந்த போட்­டியின் விளை­வா­கவே அனல் மின்­நி­லைய திட்­டத்தை சம்­பூரில் முன்­னெ­டுப்­பதில் இந்­தி­யாவும் சீனாவும் போட்டி போட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. இத்­திட்­டத்தை நிறை­வேற்­று­வ­த­னூ­டாக திரு­கோ­ண­மலை துறை முகத்தை அவ­தா­னிப்­பது அவர்­களின் நோக்­க­மா­கவும் இருக்­கலாம்.

இனப்­பி­ரச்­சினை தீர்வும் தேசத்தின் அழிவும்

இனப்­பி­ரச்­சி­னைக்கு தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வொன்றுக்கு இந்­தியா முன்­வந்­துள்­ளது. சம்பூர் அனல் மின்­நி­லைய திட்­டத்தை முன்­னெ­டுக்க இந்­தி­யா­விற்கு இட­ம­ளிக்­கா­விடின் சீனா மூல­மாக இத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­படும். எனவே இந்­தி­யா­விற்கு இடமளிப்பதற்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கிறது. அத்துடன் சம்பூர் பகுதிக்கு அண்மையில் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் இத்திட்டத்தை வேண்டாம் என மக்கள் தெரிவிப்பார்களேயானால் அதனை நான் அரசாங்கத்திடம் எடுத்துக்கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இந்தியாவின் நலனுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படக்கூடாது. சம்பூருக்கும் நாட்டுக்கும் பேரழிவை ஏற் படுத்தும் இத்திட்டத்தை எதிர்க்கட்சி எதிர்க்க வேண்டும்.

அரசியல்வாதிகளின் திட்டமே

சம்பூர் அனல் மின்நிலையத் திட்டம் வெறும் அரசியல் நலன்களுக்கான அரசி யல்வாதிகளின் திட்டமாகவே பார்க்க வேண்டியுள்ளது. இத்திட்டத்தினால் நாட் டின் மின்சார தேவையை மாத்திரம் மையப் படுத்தி பெரும் அழிவை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என்றனர்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130926/language/ta-IN/article.aspx

இவ்வளவு கெடுதலான அனல் மின்நிலையத் திட்டம்  200 வருடப் பழமையான திட்டம் முழு நாட்டிற்கும் கெடுதலானது என்றால் ஏன் அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளது. அரசாங்கத்தின்  மூலம் தடையை ஏற்படுத்தாமல்  கூட்டமைப்பை கோருதல் என்ன ஞாயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.