Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகத்தி ஆயிரங்காய் காய்த்தாலும்…..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தி ஆயிரங்காய் காய்த்தாலும்….. 

தமிழ் நாட்டில் மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சு+டு பிடிக்க ஆரம்பித்து விட்டன. திமுக, அண்ணா திமுக, வைக்கோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விஜயகாந்தின் தேசிய முற்போக்குத் திராவிட கழகம் என்றெல்லாம் திராவிட மாயையை முன்னிறுத்திப பல்வேறு கட்சிகள் களத்தில் செல்வாக்கோடு நிற்கும்போது, தமிழர் தேசியத்தை முன்னிறுத்தி சீமானை தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட “நாம் தமிழர்” கட்சியும் தன்னால் முடிந்தளவு வெற்றி வாய்ப்பைக் கூட்டிக்கொள்ளப் பாடுபடுகிறது. பாக்கு நீரிணைக்கு இருபுறங்களிலுமுள்ள தமிழர் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு, சோஷலிச சித்தாந்தங்களையும், பாரம்பரிய தமிழர் வாழ்வியலையும் முதன்மைப்படுத்தி ஒரு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கும் குறிக்கோளோடு பல படித்த இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியை வளர்த்தெடுக்கப் பாடுபடுகிறார்கள்.  

கடந்த பல தசாப்தங்களாக திராவிட மாயையில் ஊறிக்கிடந்து தங்களுக்கு நன்கு தெரிந்த திராவிடக்  கட்சிகளின் சின்னத்திற்கே வாக்களித்துப் பழக்கப்பட்டுப்போன தமிழக மக்களின் கைகள், நாம் தமிழர் கட்சியின் சின்னமான எரியும் இரட்டை மெழுகுவர்த்திச் சின்னத்திற்குச் சடுதியாக மாறி வாக்களிக்குமா? அல்லது மாற்றமொன்றைத் தேவையற்றதாகக் கருதி உதாசீனம் செய்துவிடுமா என்பது இன்றுவரை தெளிவில்லாமலேயே இருக்கிறது.

போதிய பணபலமிக்க ஆட்பலம், பத்திரிகை, ரிவி, இணையம் போன்ற ஊடகங்களின் மூலமான பிரச்சார பலம் தேர்தல் கால அனுபவ பலம் உட்பட அனைத்து வளங்களையும் வைத்துக்கொண்டு, தேர்தலை வெகு அனாயாசமாக சந்திக்க முன்னிற்கும் திராவிடக் கட்சிகளைத் தமது பிரச்சார பலத்தாலும், உண்மையும், நேர்மையும் கொண்ட அரசியல் பொருளாதார அணுகுமுறைகளாலும் தோற்கடிக்க வேண்டிய பெரும் சிரம சாத்தியமான நிலைக்குள் நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.  

மக்களைக் கவரும் நடனங்கள், நிகழ்ச்சிகள், கூட்டம் சேர்க்கும் கவர்ச்சி நடிகைகள் உட்பட மக்களை எப்படியெல்லாம் ஒன்றுதிரட்டிப் பெருந்தலைவர்கள் வரும்போது கூட்டத்தைப் பிரமாண்ட நிகழ்ச்சியாக்கி மக்கள் மத்தியில் பிரமிப்பு+ட்டி எவ்வளவு வாக்குச் சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்க்கும் தந்திரங்களை திராவிடக் கட்சிகள் மேற்கொள்ளும்.  அதற்கு அவர்களிடம் தேர்தல்கால முதலீட்டுக்கான போதிய பணபலமுள்ளது. காசு அவர்களுக்குப் பெரிய விடயமேயில்லை. ஆனால் தெரு முனைகளில் நின்று மக்கள் மத்தியில் வாக்குக் கேட்கும் நாம் தமிழர் கட்சிக்கோ அத்தகைய பணவலு இல்லை.  அத்துடன் இத்தகைய இழிவான செயல்முறைகளின் மூலம் மக்களை அரசியலில் ஓர் மாயச்சுழலுக்குள் (விசியஸ் சேக்கிள்) கொண்டு சென்று அரசியல் ஆதாயம் பெற அவர்கள் விரும்பவுமில்லை.  காத்திரமான  பொருளாதார, சமூக, கலை, பண்பாட்டு, அறிவியல், ஆரோக்கிய நலத்திட்டங்களை மக்கள்முன் வைத்து மிகவும் ஆரோக்கியமான வழிமுறைகள+டாக மக்களிடம் நாம் தமிழர் கட்சியின் புத்திஜீவிகள் வாக்குக் கேட்கின்றார்கள். 

சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட அரவாணிகள், மாற்றுத்திறனாளிகள், சாதிப்பிரிவுகள் உட்பட அனைவருக்கும் சமூகத்தில் சம சந்தர்ப்பமும், பங்கும் வழங்கப்படவேண்டும்; என்ற உயர்ந்த நோக்கின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியினர் ஒரு புரட்சிகர விஞ்ஞான சோஷலிசக் கோட்பாட்டுக்குச் சொந்தக்காரர்களாக, பாக்கு நீரிணைக்கு இருபுறங்களிலுமுள்ள தமிழ்நாடு, தமிழீழம் என்னும் இரண்டு தமிழர் தேசியங்களையும் முன்னிறுத்தி மக்களிடம் வாக்குக் கேட்கிறார்கள்.

உண்ட களைப்பில் வந்து நின்று புளிச்சல் ஏப்பம் விட்படி பல லட்சக்கணக்கான மக்கள் முன்னே சில நிமிடங்கள் பேசிவிட்டுப் போகும், பெருந்தலைவர்களுக்குச் சவாலாக மக்களோடு மக்களாக நின்று உள்ளத்தின் அடியிலிருந்து வரும் உணர்ச்சிப் பெருக்கில் தமிழர் தேசியத்துக்காகவும், திராவிட மாயையை உடைத்தெறிவதற்காகவும், ஓர் புதிய வளமிக்க தமிழர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும், உலக அரங்கில் தமிழர் தேசியத்தின் வலுவை அரசியல் ராஜதந்திர ரீதியில் ஸ்தாபிப்பதற்காகவும், நெஞ்சுடையப் பாடுபடும் சீமான் தலைமையிலான எமது உறவுகளைக் கைதூக்கி விடவேண்டியது எமது அனைவரினதும் கடமையாகும்.  புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு உதவிகளை அவர்களுக்காகச் செய்து தமிழரின் பலத்தை சர்வதேசரீதியில் உறுதிப்படுத்த வேண்டியது அவர்களின் தார்மீகக் கடமையாகும்.

நாம் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பெரியார் ஈவேரா அடித்தளமிட்ட திராவிட மாயைக்குள் சிக்குப்பட்டு மீளமுடியாமல் தவிக்கிறோம்.  துரதிஸ்ட வசமாக கன்னடரான ஈவேராவின் திராவிடக் கொள்கை, ஏனைய திராவிட மாநிலங்களில் அணுவளவு கூட வரவேற்பைப் பெறவுமில்லை, வெற்றியடையவுமில்லை.  இளிச்ச வாயன் தமிழன்தான் அதற்கு எடுபட்டான்.  சந்தர்ப்பம் சாதகமாக இருந்ததால் ஆந்திராவிலிருந்து ரிக்கற் இல்லாமல் ரயிலேறி வந்த தட்சணாமூர்த்தி என்னும் கருணாநிதி அண்ணாவின் மறைவோடு தலைமைக் கதிரையில் ஏறிக்கொண்டார்.  இன்று கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களைச் சுருட்டி ஆசியாவிலேயே பெரிய பணக்காரராகித் தள்ளாத தனது 93ம் வயதிலும் அரசியலை விடாமல், தனது குடும்பவாரிசுகளுக்கு தமிழ் நாட்டின் தலைமையைக் கையளித்துவிட்டுச் செல்ல முயன்று கொண்டிருக்கிறார் கலைஞர். அம்மா  ஜெயலலிதாவுக்கு இருந்தால் எழும்ப முடியாது, ஏழுந்தால் இருக்க முடியாது. வருடத்தில் முக்கால்வாசியை நீலகிரிப்பகுதியிலுள்ள கொடாநாட்டு எஸ்டேட்டில் ஓய்வெடுத்தே கழிக்க வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டா.  விஜேகாந்திற்கும் வாக்கு மாறத் தொடங்கிவிட்டது.  

ஈழத் தமிழர்களுக்காக ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்ததோடு தேசியத் தலைவருடன் மிகவும் நெருக்கமாக இருந்த  மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் வை. கோ. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போன்றோரும் கருணாநிதியையும், அம்மா ஜெயலலிதாவையும் வீழ்திவிடவேண்டுமென்று  கங்கணம் கட்டிக்கொண்டு விஜயகாந்த் அழகர்சாமி நாயுடு அவர்களின் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்துடன் தொகுதிப்பங்கீட்டைச் செய்தே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.  இவர்களுடன் சில கம்யு+னிஸ்டுகளும் சேர்ந்து அமைத்துள்ள மக்கள் நலக் கூட்டணி தமிழ்நாட்டில் பல நையாண்டிகளுக்கு ஆளாகிவருகின்றது.  ஆரம்பத்தில் திரு வை.கோ விஜயகாந்த் தான் முதலமைச்சரென்றார் பின்னர் அதை மறுத்தார். இவ்வாறான குழறுபடிகளால் இந்தக் கூட்டணிமீதும் பெரிய நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்றே தோன்றுகின்றது.  

அதற்கும் மேலாய் தமிழர் தேசியத்தை வளரவிடக்கூடாது.  தமிழ்நாடு திராவிடநாடு,  திராவிட இயக்கங்கள் அரசியலதிகாரத்தைப் பிடிக்கப் பிரிந்து நின்று போராடினாலும் தமிழர் தேசியத்தை ஒழிக்கும் விடயத்தில் ஒன்று சேர்ந்து நிற்கவேண்டுமென்று தனது சுயரூபத்தை திரு வை. கோ அவர்கள் வெளிக்காட்டிவிட்டார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை.  அவரொரு தெலுங்கர். திராவிடத்திற்குள்ளிருந்து அவரால் வெளியேற முடியாது.  அதற்குள்ளிருந்து கொண்டுதான் அவரால் அரசியல் செய்ய முடியும்.  ஆதலால் தன்னையும் தன்னையொத்த திராவிடர்களையும் பாதித்துத் தங்களைத் தமிழ்நாட்டு அரசியலிலிருந்து முற்றாக ஓரங்கட்டிவிடக்கூடிய தமிழர் தேசியத்தை முன்னெடுக்கும் நாம் தமிழர் இயக்கத்தை அழித்து விடவேண்டுமென்று கொக்கரிக்கிறார்.  அவருக்கு இப்போது தமிழர் தேசியம் பெரிதாகத் தெரியவில்லை. தன்னையொத்தவர்கள் தமிழ்நாட்டில் அரசியல் செய்து தமிழர்களின் தலையில் தொடர்ந்து மிளகாயரைக்க இடமில்லாமற் போகத் தமிழர் தேசியம் வைத்துவிடும் என்பதுதான் பெரிய கவலையைக் கொண்டுவருகிறது. ஆரம்பத்தில் கருணாநிதி எப்படி தமிழ் இனம், தமிழ் நாடு என்று கதையளந்துவிட்டுப் பின்னர் தமிழர்களைக் காட்டிக்கொடுத்தாரோ அதே வேலையை வைகோ செய்வதற்கும் நெடுநாளாகாது என்பதை ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

“அகத்தி ஆயிரங்காய் காய்த்தாலும் புறத்தி புறத்தியே!” என்பார்கள்.  திராவிடர்களைப் பொறுத்தவரை இது அச்சொட்டாகப் பொருந்துகின்றது.  இங்கு மறைந்த மக்கள் திலகம் எம்ஜீஆர் அவர்களை ஓர் புறநடையாகவே கருதவேண்டும்.  அந்த மாமனிதன் ஓர் மலையாளத் திராவிடனாக இருந்தாலும், தமிழ்த் தேசியத்தின்மீது பற்றுக்கொண்டு தேசியத் தலைவரின் வேண்டுகோளையேற்று கைம்மாறு கருதாது பேருதவி புரிந்தார்.  அதனை தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் மறக்காது மறக்கவும் கூடாது.   

ஆனால் காலம் மாறிவிட்டது.  வெளிமாநிலத் திராவிடர்களிடம் திராவிட உணர்வு அற்றுப்போய்விட்டது. அவர்கள் தங்களை மலையாளிகளாக, கன்னடர்களாக, தெலுங்கர்களாக அடையாளப்படுத்தி அரசியலில் பரிணாமம் பெற்று விட்டார்கள்.  தமிழர்கள் மட்டும்தான் நாம் திராவிடர்கள் என்னும் மாயையில் நெடுங்காலமாக உழன்று இன்றுவரை அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள்.   நாம் தமிழர் என்று தனித்து நிற்பதற்குத் தயங்குகிறார்கள்.  இந்த நிலையை எப்படியும் மாற்ற வேண்டியது உலகத் தமிழர்களின் பெருங்கடமையாகும்.

“தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா….” என்கிறார்   நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.  அந்தத் தலைநிமிர்வை இனியாவது நாம் பெறவேண்டுமானால் “நாம் தமிழர்” என்னும் கோஷத்தோடு எவ்வித தயக்கமுமில்லாமல் திராவிடர்களின் மாயப் பொறியிலிருந்து நாம் விடுபட்டேயாகவேண்டும். தமிழனுக்கென்றோர் நாடு பாக்கு நீரிணையின் வடக்கிலோ தெற்கிலோ உருவாகியே ஆகவேண்டுமென்ற  ஆதங்கமுள்ள எந்தவொரு தமிழனும் இனிமேல் எந்தத் தாமதமுமில்லாமல் தமிழர் தேசியத்திற்காகப் பாடுபடத் துணிவோடு முன்வந்திருக்கும் “நாம் தமிழர்” இயக்கத்தை ஆதரிக்கவேண்டியது மிக அவசியமாகும்.
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா! - பாரதிதாசன்   
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.