Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவில் அமையவேண்டும் என வலியுறுத்தி மாபெரும் போராட்டம்!

Featured Replies

பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவில் அமையவேண்டும் என வலியுறுத்தி மாபெரும் போராட்டம்!

பொருளாதார மத்திய நிலையம் வவுனியா எல்லைக்குள் - தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, வவுனியா மாவட்டத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்ட பொருளாதார மத்திய நிலையம், வேறு மாவட்டத்துக்கு மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசினால் கடந்த ஆண்டு பட்ஜட்டில், வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு 400 மில்லியன் ரூபா முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டது. இதற்குரிய காணியை இனங்காண்பதில் இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. பொருளாதார மத்திய நிலையம் வவுனியா நகரிலிருந்து மூன்று கிலோ மீற்றர் சுற்றாடலில் அமைக்கப்பட வேண்டும். இந்த நிபந்தனை கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வலியுறுத்தி வருகின்றது. இதனால் நகரிலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள தாண்டிக்குளம் காணி அடையாளப்படுத்தப்பட்டது.

ஆனால், அந்தக் காணியை, பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு விடுவிக்க வடக்கு மாகாண அரசு மறுத்துள்ளது. அதேவேளை, வடக்கு மாகாண சபை அடையாளப்படுத்திய ஓமந்தை மாணிக்கபுரம் காணி, நகரிலிருந்து 9 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது என்றும், அந்தக் காணி தனியாருக்கு உரியது என்றும் தெரிவித்து மத்திய அரசு அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. இந்தத் திட்டத்தை விரைந்து ஆரம்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிடின் வேறு மாவட்டத்துக்கு திட்டம் மாற்றப்படக் கூடும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திலேயே அமைய வேண்டும் என்று விவசாயிகள் - வியாபாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். அதனை வலியுறுத்தி வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதமும் அனுப்பியுள்ளனர். இதற்கு எந்த முடிவும் தெரிவிக்கப்படாத நிலையில், இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூர் விளைபொருள் விற்பனை சங்கம் அமைதிப் பேரணியை நடத்தியது. இன்று காலை 9.30 மணிக்கு தினச் சந்தையில் மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட விவசாயிகள், மொத்தக் கொள்வனவாளர்கள், விற்பனையாளர்கள் எனப் பலரும் ஒன்று கூடினர். அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டனர். பசார் வீதி - தர்மலிங்கம் வீதி வழியாக கொரப்பொத்தானையூடாக வவுனியா மாவட்டச் செயலகத்தைப் பேரணி சென்றடைந்தது. மாவட்ட அரச அதிபரிடம் இதன்போது மனுக் கையளித்தனர். இந்தப் போராட்டத்துக்கு வவுனியா மாவட்டத்திலுள்ள தினச் சந்தை முழுமையாக மூடப்பட்டு ஆதரவளிக்கப்பட்டது.

ஜனாதிபதி, வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண முதலமைச்சர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை அமைச்சர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு மனுவின் பிரதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மனுவில், "வவுனியாவில் 35 வருடங்களுக்கு மேலாக எந்த விதமான அடிப்படை வசதிகளுமின்றி உள்ளூர் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்யும் சந்தையானது இயங்கி வருகின்றது. போதிய இடவசதிகளின்றி காணப்படுகின்றது. விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்தநிலைமையில் நவீன வசதிகள், மேலதிக உற்பத்திப் பொருட்களை சேமித்து வைக்கக் கூடிய குளிரூட்டி அறைகளைக் கொண்டதுமான மத்திய நிலையம் வவுனியாவில் அமைவது விவசாயிகளாகிய எமக்கு ஓர் வரப்பிரசாதமாகும். அதிலும் வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக இருக்கும் வவுனியா மாவட்டத்தில் இவ்வாறான நிலையம் அமைவது வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்ட விவசாயிகளுக்கும் நன்மை கிடைக்கும். இதற்கான காணி தெரிவில் சில பிரச்சினைகள் இருப்பதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகின்றது.

பொருளாதார மத்திய நிலையானது வவுனிய நகருக்கு அண்மையில் அமைய வேண்டும் என்பதே 35 வருடங்களாக மாவட்டத்தின் விவசாயிகளுடன் இணைந்து சேவை செய்து வரும் சங்கத்தினதும், மாவட்டத்தின் விவசாயிகளினதும் ஒருமித்த கருத்தாகவுள்ளது. குறிப்பாக உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகள் அதன் மூலம் பெறும் பணத்தைக் கொண்டு தமது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான விவசாய உள்ளீடுகளை கொள்வனவு செய்தல், அவர்களுக்குத் தேவையான இதர பொருட்கள் கொள்வனவு செய்தல், வங்கி வேலைகள் மற்றும் அரச திணைக்களங்கிலுள்ள அன்றாட வேலைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இடத்தெரிவு அமைதல் வேண்டும். ஏற்கனவே பிரதேச செயலாளரால் முன்மொழியப்பட்ட தாண்டிக்குளம் விவசாயப் பண்ணையின் பயிர்ச் செய்கைக்கு உட்படாத தெற்கு எல்லையில் அமைந்துள்ள மேட்டுக்காணியில் மேற்படி மத்திய நிலையம் அமைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://malarum.com/article/tam/2016/05/07/14482/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%A

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.