Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் அரசாங்க அதிபர்!

Featured Replies

3934_1463170308_PhototasticCollage-2016-

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறவில்லை என்ற செய்தியின் ஊடாக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் முயற்சிசெய்து வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுவதுடன் அங்கு பொளத்தவிகரை ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது என்ற செய்திகள் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளின் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ள நிலையில் அதனை நேரடியாக சென்று பார்வையிட்ட அரசாங்க அதிபரே அங்கு அத்துமீறிய சிங்கள குடியேற்றம் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளமை அவர் குறித்த சட்டவிரோத சிங்கள குடியேற்றத்தை அங்கிகரிக்கின்றார் என்ற சந்தேகத்தை மட்டு மாவட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது.

அவருடன் சென்ற கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவர்கள் குறித்த சிங்கள குடியேற்றம் மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதியின் ஆதரவில் நடைபெறுகிறது என்று ஆணித்தரமாக சொல்லியும் அதனை அரசாங்க அதிபர் மறுத்துள்ளமையானது மட்டக்களப்பு மக்களுக்கு அரசாங்க அதிபர் துரோகம் செய்ய முயற்சிக்கிறார் என்றே அர்த்தம் கொள்ளவேண்டியுள்ளது.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தை துண்டு துண்டாக பிரித்து பல நூறு ஏக்கர்காணிகளை சிங்கள முஸ்லீம் கம்பனிகளுக்கு நூறு வருட குத்தகைக்கு கொடுத்துள்ள அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவத்தையும் பூர்வீகத்தையும் இல்லாமல் செய்துவருகின்றார்.

இன் நிலையில் சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்துநிறுத்த வேண்டிய அரசாங்க அதிபரே அங்கு அப்படியொன்று நடைபெறவில்லை என்று கூறுவது மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே பார்க்கவேண்டியுள்ளது.

ஏற்கனவே அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கான கடிதம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஆகியோரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே குறித்த சிங்களக் குடியேற்றத்தை மூடி மறைத்து சிங்களத் தலமைகளிடம் நல்ல பெயர்வாங்கி தனது இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு அரசாங்க அதிபர் முயற்சிக்கின்றாரா? என்ற சந்தேகத்தினையே மாவட்ட மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

ஆகமொத்தத்தில் மட்டக்களப்பை முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் அடகுவைத்துவிட்டு மட்டக்களப்பில் உள்ள தமிழர்களை அடிமையாக்கும் செயற்றிட்டங்களை அரசாங்க அதிபர் திருமதி.சார்ள்ஸ் அம்மையார் மேற்கொண்டு வருகின்றார் என்பதையே இவரது செற்பாடுகள் எடுத்துக்காட்டியுள்ளது.

 

3934_1463157605_13.jpg   

3934_1463157605_14.jpg   

3934_1463157605_17.jpg   

3934_1463157605_a2.jpg   

3934_1463157605_e18.jpg  

http://battinaatham.com/description.php?art=3934

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.