Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெடிச்சி வெளியிடாத பின்னூட்டங்கள் இங்கே........

Featured Replies

பெடிச்சி என்னும் வலைப்பதிவர் போர் பற்றியும், தேசியம்,தேசம்,தியாகம்,மாவீரம

  • தொடங்கியவர்

12 Responses to “*”படிக்கத் தூண்டாத” பெருங் கதை - யுத்தம்”

-/பெயரிலி. Says:

January 5th, 2007 at 12:43 am

/ அது தருகிற அத்தனை அழிவுகளையும் மறுத்து, இங்கு வந்திருந்து, நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிற அத்தனை நியாயங்களையும் மறுபரிசீலிக்க வேண்டும்./

/தேசம், தேசீயம், தியாகம், அர்ப்பணம், மாவீரம்

இந்தச் சொற்களெல்லாம் கலைகிறபோது -அவற்றில் நாம் நம்பிய அர்த்தம் அழிஞ்சுபோற போது - இறுதியில், என்னதான் எஞ்சுகிறது என்பதாய்க் கேட்கிறது. /

இவை முக்கியமானவை; ஆனால், இவற்றுக்கு மாற்றாக இப்போதிருப்பதிலும்விட மேலான வழியென்ன என்பதைத் தேடுகையிலே, ‘மொடேர்ன் ரைம்ஸ்’ல் சுழலும் இராட்சத இயந்திரத்தின் சக்கரப்பற்களிலே சார்லி சப்ளின் அவ்வியக்கத்துக்கு மாற்றாகச் செய்யப்போனதன் விளைவுதான் தெரிகிறது. வெறுமனே, தேசியம், மாவீரம் என்ற பதங்களை நிறுத்துவதாலேமட்டும் நல்ல விளைவு சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை. மாவீரர்தினங்கள் வெறும் சடங்குகளே- ஆக மிஞ்சிமிஞ்சிப்போனால், புலம்பெயர்ந்தவர்களின் குற்றவுணர்வுகளுக்குக் கிடுகுவேலை போட்டுமூடிக் கொஞ்சகாலம் வைக்கவுதவும் சடங்குகள். அமெரிக்கப்போர்வீரர்களின் பெற்றோரின் செவ்விகளையும் ஈராக்கியபெற்றோரின் செவ்விகளையும் கேட்கையிலே இப்படியாகத்தான் “சீ” என்று போரிலும் தன்னிலும் வெறுப்பெனத் தோன்றுகிறது. ஆனால், அம்மேகம் கலைகையிலே இருக்கும் யதார்த்தம், இலகுவிலே ஒரு நூலை அறுத்துப் பொம்மலாட்டத்தை நிறுத்தக்கூடியதாகத் தெரியவில்லையே?

  • தொடங்கியவர்

நாரதர் Says:

January 5th, 2007 at 4:38 am

யுத்தம் கொடியது என விரல் சூப்பும் குழந்தைக்கும் தெரியும்.தமிழ் மக்கள் மேல் திணிக்கப்பட்ட இந்தக் கொடிய யுத்தத்தை இல்லாது செய்ய உங்கள் மாற்று வழி தான் என்ன? பாதுகாப்பான புகலிடத்தில் இருந்து இவ்வாறு மகா புத்திசாலிகளைப் போல் ‘தீர்வு’ என்ன என்பதைப் பற்றிப் பேசாது ,செயற்படாது எழுதுவது கபடத் தனம் அன்றி வேறென்ன? உங்கள் கவலைகள்,கண்ணீர் என்பன போலியானவை இல்லையா? உங்களைப் போன்ற போலிகளை விட மக்களோடு மக்களாக இருந்து ஒரு தீர்வுக்காகாப் போராடுபவர்கள் மேலானவ்ர்கள்.போலியான எழுத்துக்கள் மக்களின் சோகத்திற்கு முடிவு கட்டி விடாது.

போரை நிறுத்த அதனை எதிர்த்துப் போராடுவதை விட எமக்கு வேறு என்ன வழி இருக்கிறது? உங்களின் எழுத்துக்கள் இந்த நிதர்சனமான உண்மையை மறைக்கும்

கபடத் தனமானவையாக இல்லையா?

மக்கள்,கண்ணீர்,கவலை எங்கிற உங்கள் உணர்வு பொங்கும் சொற்களின் பின்னால் இருக்கும் வெறுமை கலைந்து போகிற போது என்ச்சி இருப்பது உங்களின் போலித்தனம் மட்டுமே.

  • தொடங்கியவர்

P.V.Sri Rangan Says:

January 5th, 2007 at 2:55 pm

பொடிச்சியின் மொழியைப் படித்த பின்பும் யுத்தத்தையும்,மக்களையும் பற்றி நாரதர் மழலை பேசுகிறார்!

எனக்கோ ஒரு முது மொழிதாம் ஞாபகம் வருகிறது!

“ஞானியோ நிலவைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்க,சிஷ்யனோ ஞானியின் சுண்டு விரலை நோக்கினானாம்”இது நாரதருக்கு மட்டுமல்ல பொடிச்சியிடம் கேள்வி கேட்பவர்கள் அனைவருக்கும் பொருந்தும்!

உருப்படியானவொரு பதிவு-நம் மக்களிடம் எஞ்சியிருக்கும் கண்ணீரின் தொகுப்பு இது.

இதைப் புரிந்து கொள்ள முனைகிறேன்.

  • தொடங்கியவர்

நாரதர் Says:

January 5th, 2007 at 4:42 pm

சிரி ரங்கன் ,

புரியாமல் எழுதுதல் தான் ஒருவரை ஞானி ஆக்கிறது என்பதைக் கேட்டால் சிரிப்புத் தான் வருகிறது.’மொழி’ என்பது எதற்காக என்று கொன்சம் யோசிச்சுப் பாரும்.உஙகளை நீங்களே ஞானிகளாக்க புரியாத மொழியில் எழுதுவது போல் இருக்கிறது.உங்களுக்கு நீங்களே புரியாமல் எழுதி ஆளை ஆள் மாறி மாறிப் பாராட்டிக் கொள்ளுங்கோ.யார் கண்டு கொள்ளப் போகிறார்கள்.

நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அழிக்காமால் சொந்த அபிப்பிராயங்களை எழுதுவது எந்த கருத்தாடல்களுக்கும் நேர்மை ஆகாது.

நிதர்சமான உண்மைகளும், நியாயமும் ,அறமும் உங்களை எப்போதும் கேள்வி கேட்டுக் கொண்டு தான் இருக்கும்.மேலும் இதில் மேலும் எழுதி மற்றவர்களின் நேரத்தையும் பொடிச்சியின் பதிவையும் வீணாக்க விரும்பவில்லை.

பொடியங்களின் பதிவில் உமது ஞானம் நன்றாகப் போகிறது.முடிந்தால் யாழ்க் களம் வாரும் கருத்தாடலைத் தொடரலாம்.

மீண்டும் கேட்கிறேன் மக்களின் கண்ணீருக்கான உங்கள் தீர்வு என்ன? அதற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?

நாரதர் Says:

January 5th, 2007 at 5:00 pm

முரண்பட்ட சிந்தனைகளில் இருந்து பிறக்கும் குழப்பமான கருத்துக்கள், குழப்பமான மொழி நடையில் வெளி வருகிறது.தெளிவான சிந்தனை தெளிவான மொழியில் வரும்.’மொழி நடை’ தொடர்பாடலின் இலக்கு அல்ல, கருத்துப் பரிமாற்றமே தொடர்பாடலின் இலக்கு.தெளிவான கருத்துக்களைக் காவாத மொழி நடையால் யாருக்கு என்ன பயன்? சொந்தக் குழப்பங்களால், மற்றவர்களையும் குழப்பி விட்டேன் என்று தற்பெருமை பேசிக் கொள்ளலாம்.

  • தொடங்கியவர்

பொடிச்சி Says:

January 5th, 2007 at 5:24 pm

நன்றி பெயரிலி, நாரதர், சோமி,சிறீரங்கன், செல்வநாயகி…

நாரதர்: உங்களது பின்னூட்டத்திற்கான எனது பதில் இதுதான்: கடந்த 24,25 வருடங்களிற்கு மேலாக இனப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ‘எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லாமல்’ என்கிற அதே நிலமைதான் இத்தனை வருடங்களிற்குப்பிறகும் ‘நிதர்சனமாகவும்’ இருக்கிறது.

இதில்

ஈழத்தில் பிறந்த அனைத்து மக்களும் நடக்கின்ற யுத்தம் தொடர்பாக “தீர்வு” சொல்லவேண்டும், வேறெந்த கஸ்ரங்களையும் சொல்லக் கூடாது என்றால் அதற்கொரு (விதண்டாவாத) பதிலும் என்னிடம் இல்லை. அதேபோல, யுத்தம் கொடியது என எல்லோருக்கும் தெரியும் என்பதற்காக அமெரிக்காவில் ஈராக்/எந்த யுத்தத்திற்கெதிராக ஊர்வலம் போய் அதை மக்கள் எதிர்ப்பதற்கான தேவை இல்லை என்று சொல்ல முடியாது. (அல்லது அப்படிப் போய் என்ன பிரியோசனம் என்று கேட்கலாம், எல்லாவற்றையும் குறித்து கேட்கின்ற உரிமை எங்கள் எல்லோருக்கும் இருக்கவே இருக்கிறது).

யுத்தம் பற்றிய எனது அபிப்பிராயம் கபடனத்தனமாக போலித்தனமாக உங்களுக்குத் தோன்றுவதற்கு உங்களுக்கான காரணங்கள் இருக்கின்றன என்பதற்காக,நடக்கின்ற நிகழ்வுகள் தொடர்பான எனது உணர்வுகளை எழுதாமல் இருக்க முடியாது. அதை எழுதுவது எனக்கு முக்கியம். நான் நேசிக்கிற, நேசித்த போரிட்ட, இனிமேலும் போரிடப் போகிற எல்லா மனிதர்களுடைய நினைவும் எஞ்சியிருக்கிற அவர்கள் உயிர்வாழ்தல்மீதான விருப்பமும் மட்டுமே என்னிடம் இருக்கிறது. அவற்றால் என்ன பயன் என்று கேட்கலாம். இந்த 25 வருடங்களாக நடந்தவை எல்லாம் பயனுள்ளவை என்றால் அதன் குழப்பமான, புரியாத எழுத்துநடையை உடைய, “யாருக்கும் புரியாத” அதன் பிறழ்வுகள் என இதை சகித்துக் கொள்ளுங்கள்!

  • தொடங்கியவர்

நாரதர் Says:

January 5th, 2007 at 6:07 pm

முதலில் பொடிச்சி உங்கள் நேர்மையான பதிலுக்கு நன்றி.

மனித வரலாற்றில் யுத்தம் இல்லாத காலம் என்று எங்காவது உள்ளதா? வரலாற்றில் எவ்வகையிலும் தீர்க்க முடியாத முரண்கள் யுத்தங்களால் தான் தீர்க்கப் பட்டு வந்துள்ளன.

மனித வரலாற்றில் இருந்து எங்களது அனுபவம் வேறு பட்டது அல்ல.எங்களுக்கு தீர்வு வேண்டுமென்றால் யுத்தம் அவசியம் ஆகிறது.தீர்வு இல்லை என்றால் எமது சோகம் ஒரு தொடர் கதை தான். நீங்களும் யுத்தத்தின் சோகம் பற்றிப் பதிவுகளை எழுதிக் கொண்டிருப்பீர்கள் உங்கள் பிள்ளைகளும் புலத்தில் இருந்து எழுதுவார்கள். நான் கேட்க்கும் கேள்வி மிக அடிப்படையானது.யுத்தம் வேண்டாம் என்றால் இந்த முரணை எவ்வாறு தீர்க்கலாம் என்று நீங்கள் சொல்கீறீர்கள் என்பது தான்.

மேலும் யுத்தத்திற்கு எதிராக ஊர்வலம் போவது பற்றிக் கூறி உள்ளீர்கள், இதனால் என்ன பயன் கிடைத்துள்ளது? நாமும் பல ஆண்டுகளாக ஊர்வலம் போனவர்கள் தான்.இராக்கிலும்/ ஆப்கானிலும் முரண்கள் எதிர் யுத்தத்தினால் தானே எதிர்கொள்ளப்படுகின்றன? இந்த அரசுகள் எவை ஆவது ஊர்வலம் போவதால் முரண்களுக்கு தீர்வைக் கண்டுள்ளனவா?

உங்கள் உணர்வுகள்,கவலைகள் எவருக்குமே தீர்வைத் தந்துவிடாது.அவை உங்கள் சொந்த மனதை ஆற்றலாம் ஆனால் மக்களின் துயரை நீக்காது.நீங்கள் பதிவிடுவது உங்களுக்காக இருக்கலாம், ஆனால் எனது கேள்விகளும் ,கரிசனையும் மக்கள் துயர் தீர வேண்டும் எங்கிற அவாவால் எழுவன.யுத்தம் பற்றி உங்கள் கவலையான பதிவுகள்,யுத்தங்களை 25 வருடங்களில் அல்ல எப்போதுமே நிற்பாட்டி விடாது.

யுத்திற்கான காரணிகளை அகற்றுவதே யுத்ததிற்கான நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.யுத்தத்தை அதன் காரண காரியங்களில் இருந்து அன்னியப் படுத்திப் பார்க்க முடியாது.உங்கள் பதிவுகள் உங்கள் சுய தேவைக்கானவை என்பதில் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது,தாராளமாக நீங்கள் பதிவிடலாம்.ஆனால் மக்களின் பெயரால் மக்களின் துயாரால் என்று பதிவிடுவது , போலியானது என்பதையே சுட்டிக் காட்டினேன்.இதனையே என்னால் சகித்திக் கொள்ள முடியாது உள்ளது.

  • தொடங்கியவர்

P.V.Sri Rangan Says:

January 5th, 2007 at 6:52 pm

நாரதரே,நல்ல விளக்கம் சொன்னீர்!

நான் சொன்ன மொழியென்பதன் அர்த்தம்-”கற்பிதங்களைக் கடந்த மானுட நேசிப்பின் உறுதியான பற்று”என்ற பொடிச்சியின் உணர்வைக் குறித்ததாகும்.நீங்களோ இயக்கவாத மாயைக்குள் காவிக்கொள்ளும் “போர்” குறித்தானதும்,மக்கள் குறித்தானதுமான கால் நூற்றாண்டுக்கும் மேலான அதிகாரத்துவ-ஆதிக்கப் பேச்சோடு கருத்தாட வந்துள்ளீர்கள்.இங்கே நீங்கள் பொது அப்பிப்பிரயத்தையோ அல்லது சமுதாயத்தின் மொத்தவுணர்வையோ பிரதி பலிப்பதாகப் பாசாங்கு செய்யும் கருத்தானது, இயக்கவாதக் குறுகிய நலன்களின் எல்லைக்குட்பட்டது என்பதை நீங்கள் கூறும்”முரண்பட்ட சிந்தனையில் இருந்து பிறக்கும் குழப்பமான கருத்துக்கள்…”என்ற பெரும் கண்டுபிடிப்பில் தொனிக்கிறது.

மொழி நடையையோ அல்லது கருத்துப் பரிமாற்றம் குறித்தோ நாம் எதுவுமே கூறவில்லை!

நீங்களாகக் கோணங்கித் தனமானக் கற்பனை செய்து,எம்மைத் தூற்றும் பரணியோடு”சிரி”ரங்கன் என்று வம்பளந்து கத்திக் கொள்கிறீர்கள்!நாம் நெடுகச் சிரித்தே இருக்கிறோம்-எமது போராட்டத்தின்,அரசியல் முன்னெடுப்பின் செல் நெறி கண்டு.கூடவே அழுதும் புலம்புகிறோம், அந்தச் செல் நெறி நமக்களித்துவரும் தொடர் துன்பங்கள் கண்டு!!

“கருத்துக்களைக் காவாத மொழி நடையால் யாருக்கு என்ன பயன்?”இதையேதாம் நாமும் இப்படிக் கேட்கிறோம்:”மக்களைச் சாராத-மக்களின் அனைத்து வாழ்வாதாரத்தைப் பாதுகாக்காத,குடிசார்வுரிமைக

  • தொடங்கியவர்

நாரதர் Says: Your comment is awaiting moderation.

January 6th, 2007 at 11:23 am

பெடிச்சி முதலில் மன்னிக்கவும், என்னை நோக்கி பல கேள்விகள் சிரி ரங்கனால் ,எழுப்பப் பட்டுள்ளதால் இதை இங்கே எழுத வேண்டி இருக்கிறது.

சிரி ரங்கன் ,

உமது புலம்பல்களில் எதுவுமே நான் கேட்ட ‘உமது தீர்வு’ பற்றி ஒன்றுமே இல்லையே? நான் புலிகள் என்ன செய்கிறார்கள் , அவர்களின் தீர்வு பற்றியா கேட்டேன்? உமது தீர்வு என்ன? அதற்காக நீர் என்னத்தை செய்துள்ளீர்.

நீர் டாக்குத்தர் கருணானந்தம் என்று ஏபிசிடி எழுதினதைப் பற்றியோ, என்னைக் கொல்லப் போறாங்கள் நான் இனிப் பதிவிட மாட்டன் என்று அனுதாபமும் ஆரவாரமும் செய்ததைப் பற்றி நான் கேட்கவில்லை.போர் வேண்டாம் புலிகள் வேண்டாம் என்றால் ஏன் நீங்கள் உங்கள் ‘தீர்வை’ முன் வைத்து ஒரு இயக்கத்தைக் கட்ட இயலாது? அப்படி நீங்கள் யுத்தம் அற்ற மக்களைப் பலி கொல்ளாத ஒரு தீர்வை மக்கள் முன் வைத்து , ஒரு அமைப்பை நிறுவி தமிழருக்கு ஒரு தீர்வை வழங்குவீர்கள் என்றால் மக்கள் உங்கள் பக்கம் தானே? மக்கள் சக்தி மிகப் பெரிய சக்தி அல்லவா? ஏன் உங்களால் பின் நூட்டக் கயமைகளுக்கு அப்பால் எவரையுமே ,உங்கள் கருதுக்களுக்கு ஏற்றதாக ஒன்று படுத்தி அமைப்பாக்க முடியவில்லை? ஏன் உங்கள் சொந்த வாழ்க்கையைப் பாத்துக் கொண்டு உங்கள் சொந்த நலங்களைப் பார்த்துக்கொண்டு, கரீபயனுக்கு கொலிடே போய்க் கொண்டு ,பொழுதுபோக்குக்காக உங்கள் ஞானத் தனத்தை மட்டுமே முன் நிறுத்திக் காட்ட போலியான கவலைகளையும் உனர்வுகளையும் வெளிக்காட்டுகிறீர்கள்.இது ஒரு போலியானதாக உங்களுக்குப் படவில்லையா? போலியானவ்ர்களை நம்பி எவர் வருவார்? நீங்கள் முதலில் உங்கள் சொல்லிலும், செயலிலும் நேர்மையானவரா?

யாழ்க் களத்தில் நீங்கள் கருத்துக்களை மட்டுறுத்த முடியாது.வேறு பெயர்களில் வந்து உங்களுக்கு நீங்களே பின்னூட்டம் இடமுடியாது.கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

உமது கேள்விகளுக்கு ஒரே பதில் தமிழர்களுக்கான தீர்வை மக்கள் முன் வைத்து மக்களாதரவுடன் இயங்கும் ஒரே இயக்கம் விடுதலைப் புலிகளே.எவரும் எவ்வளவும் போலியாக எழுதலாம்,எவனொருவன் தான் முன் வைக்கும் தீர்வுக்காக தனது உயிரை வாழ்வை அர்ப்பணிக்கிறானோ அவனே உண்மையான மனித நேயன்.அவர்களுக்கே நான் எனது ஆதரவைக் கொடுக்கமுடியும்.தமிழ் மக்களும் அவ்வாறே.உண்மையும்,நீதியும்,அ

  • தொடங்கியவர்

Leave a Reply

Name : நாரதர்

Mail

Website:

//***யுத்தத்தால்****, முழு இலங்கையுமே வறுமைக் கோட்டுக்குக் கீழ் மக்களைத் தள்ளி,அவர்களைச் சாகடிக்கும் போது,அந்த மக்கள் தமது இருப்புக்காகவும்,தமது உழைப்பை நியாயமாகத் தமது நலனுக்கான தேசியப் பொருளாதாரத்தை கட்டியொழுப்புவதற்கும்,அதைப் பாதுகாக்கவும் ஆளும் சிங்கள-தமிழ் அந்நியக் கைக்கூலித் தரகு முதலாளிய வர்க்கத்துக்கெதிராகப் போராடித் தமது தேசத்தைக் கட்டியெழுப்புவதே ****தீர்வு*****.//

ஆகவே 'உமது தீர்வு' என்று ஒன்றும் கிடையாது.மேல நீரே எழுதி இருப்பதின் படி ***யுத்தத்தால்*** தான் மக்களுக்குத் ****தீர்வு**** வரும்.பிறகென்ன நீரும், புலிகளும், நானும் சொல்வதைத் தானே கூறி உள்ளீர்.இதில் வேறு கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது?

  • தொடங்கியவர்

கடைசிப் பின்னூட்டமிட்ட போது பின்னூட்டம் இடுவது தடுக்கப்பட்டது.

Sorry, but your comment has been flagged by the spam filter running on this blog: this might be an error, in which case all apologies. Your comment will be presented to the blog admin who will be able to restore it immediately.

You may want to contact the blog admin via e-mail to notify him.

கடைசி இரண்டு பின்னூட்டங்களையும் இதுவரை பெடிச்சி வெளியிடவில்லை.வெளியிடுகிறார எனப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

Edited by narathar

  • தொடங்கியவர்

பொடிச்சி Says:

January 7th, 2007 at 12:21 am

//அதாவது -முடிவாக - இந்தப் பதிவை எனது ‘சுய’ தேவைக்காக எழுதினதாயும் நீங்கள் மக்களின் துயரையும் முன்வைத்து பேசுவதாகச் சொல்கிறீர்கள்! //

//நடக்கின்ற நிகழ்வுகள் தொடர்பான எனது உணர்வுகளை எழுதாமல் இருக்க முடியாது. அதை எழுதுவது எனக்கு முக்கியம். நான் நேசிக்கிற, நேசித்த போரிட்ட, இனிமேலும் போரிடப் போகிற எல்லா மனிதர்களுடைய நினைவும் எஞ்சியிருக்கிற அவர்கள் உயிர்வாழ்தல்மீதான விருப்பமும் மட்டுமே என்னிடம் இருக்கிறது. அவற்றால் என்ன பயன் என்று கேட்கலாம். //

நீங்கள் சொன்னதைத் தான் நான் திரும்பச் சொல்லி உள்ளேன்.உங்களிடம் விருப்பமும், உணர்வுகளும் மட்டுமே இருபதாகத் தான் எழுதி உள்ளீர்கள்.எனது கருத்தாடலின் அடிப்படையே இது தான் .வெறும் உணர்வும் ,விருப்பமும் மக்களின் துயரை நிற்பாட்டி விடாது என்று சொல்கிறேன்.துயரை நிறுத்தாமல், நிறுத்த முயற்ச்சிக்காமல் வெறும்

துயரப்படுகிறேன் என்று சொல்வது போலித் தனமானது என்பதையே சொல்லி உள்ளேன்.

//ஆனால்,

எனது எழுத்து போலித்தனமாக இருப்பதற்கு உங்களுக்கான காரணங்கள் இருக்கின்றன என்று சொன்னேனே தவிர, அது தனிப்பட்டது, எனது சொந்தத் துயரம் என சொல்லவில்லை.

அவற்றை எழுதக் கூடாதென்று இல்லை.//

உங்களை எழுத வேண்டாம் என்று சொல்ல வில்லையே,தாராளமாக எழுதுங்கள்.உங்களைப் போன்றவர்களின் எழுத்தில் இருக்கும் போலித் தனத்தை வெளிக் கொணர எங்களைப் போன்றவர்களும் எல்லாத் தளங்களிலும் எழுதுவோம்.

//போரில் பிள்ளையை இழந்த ‘விசரி’ தெருவில் திரிகிறதோ,

யாழ்ப்பாணத்தில் சனம் தலையிலடித்துக்கொண்டு திரிகிறதோ, ‘தனிப்பட்ட’ துயரங்கள் என்றால் - எதுதான் “மக்கள்” துயரம்?//

உங்களின் கருத்தாடலை மீண்டும் பாருங்கள்.போர் கொடியது, மக்கள் துயரப்படுகிறார்கள்.அதனால் போர் வேண்டாம். நல்லது அப்படியாயின் இந்த முரணை எப்படித் தீர்க்கலாம் என்று சொல்றீர்கள்? நான் என்ன் சொல்கிறேன் வேறு வழி இல்லை என்று.வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் என்று. நீங்கள் சொல்கிறீர்கள் எனக்கு வழி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று. நான் கேட்கிறேன் வழி சொல்ல உங்களுக்கு முடியாதைத் தான் நாங்கள் சொல்கிறோம் இதைத் தவிர வேறு வழி எங்களுக்குத் தெரியவில்லை என்று.இதற்கு உங்கள் பதில் என்ன?

//தனது நாட்டு நிகழ்வுகள் குறித்து’மக்களின் பெயரால்’ ‘மக்களின் துயரால்’ அல்லது எதன் அடிப்படையில் ஒருவர் எழுதலாம் என்பதை, அல்லது எப்படி எழுதினால் உங்களைப் போன்ற ஒருவருக்கு “போலித்தனமற்றதாக” இருக்குமோ அப்படித்தான் எழுதவேண்டுமென்று எந்தக் கடப்பாடுகளும் கிடையாது.. //

எவரும் எவ்வாறும் எழுதலாம். நீங்கள் எழுதுபவற்றினால் எழும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அழிக்கத் தானே வேண்டும்.உங்கள் எழுத்தில் போலித் தனம் இருப்பதாக நான் கருதுகிறேன்.அதற்காகவே உங்களிடம் கேள்வி கேட்கிறேன்.எழுதுவதற்கு உங்களுக்கு இருக்கும் அதே உரிமை உங்கள் எழுத்தைப் பற்றிக் கேட்க எனக்கு இருக்கிறது.ஈற்றில் வாசிப்பபவர்கள் ஒவ்வொரு வரும் இந்தக் கருத்தாடலின் அடிப்படையில் ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.அதில் உங்கள் போலித் தனம் அவர்களுக்கும் விளங்கும் போது ,எனது நோக்கம் நிறை வேறுகிறது.

//உலகத்தில் யுத்தம் நடக்கும். அழிவுகள் நடக்கும். என் பிள்ளை, என் பிள்ளையின் பிள்ளை காலத்திலும் நடக்கும் என்று சொல்லிவிட்டு இருப்பவர்களால் அல்ல -சிறியதேனும்- மாற்றங்கள் நடந்திருக்கிறது. அமெரிக்கா போன்ற வெள்ளைஆதிக்க தேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் -ஊடகங்களின் பல்வேறுபட்ட பிரச்சாரங்களையும் தாண்டி- யுத்தத்தை எதிர்த்துப் போனார்கள் என்றால் அது பெரிய விடயம்தான். நெடுகிலும் சொல்ற மாதிரி வியட்னாமை உ-ம் காட்டலாம், மக்கள் எழுச்சியில் படை திரும்பியது என்று. படை திரும்பி வரும் வரையில் இழப்பு நடந்துதானே என்று பதிலுக்குக் கேட்கலாம், அதற்காக -யுத்தமென்றால் சகஜமென்று - ஒன்றும் செய்யாமல் இருந்து மேலும் கொலைகளை நடக்க விட முடியுமா?//

யுத்தம் கொடியது, பயங்கரவாதம் கொடியது, இவற்றை இவை நிகழும் சூழலில் இருந்து அன்னியப் படுத்திப் பார்த்தால் இவை எல்லாமுமே கொடியது தான். நீங்கள் வாழும் கனடேய தேசத்தில் தவழும் அமைதியும் சாந்தமும் உலகினின் இன்னொரு பிரதேசத்தில் நடக்கும் கொடூரமான் யுத்ததின் மேல் தான் கட்டி எழுப்பப்படுள்ளது.அங்கே நிகழும் மனித அவலங்களின் மேல் சுகமாக இருந்து கொண்டு தான், நீங்கள் அமைதியாக எழுதுகிறீகள் யுத்தம் கொடியது என. நீங்கள் வாழும் கனேடிய தேசத்திலும் கல்லறைகள் இருக்கின்றன,அங்கேயும் மகனை இழந்த ஒரு தாய் இருக்கிறாள்.தேசியம், தேசம் என்ற கற்பிதங்களினால் கட்டப்பட்ட கனேடிய தேசத்தில் பாதுகாப்பாக இருந்து தான் உங்களால் தேசம்,மாவீரம் என்பவை வெறும் கற்பிதங்கள் என்று கேள்வி எழுப்ப முடிகிறது.அதாவது கறிபிதங்களின் மேல் ,கல்லறைகளின் மேல் நின்று கொண்டே இன்னொரு தேசத்தை இன்னொரு கல்லறையைக் கற்பிதம் எனச்சொல்ல முடிகிறது.இது எனக்கு போலித் தனமானதாகப் படுகிறது.உங்களுக்கு?

//ஈராக்கில் அமெரிக்க உள்-நுழைவிற்குப் பிறகு அமெரிக்க இராணுவத்துடன் மட்டுமல்ல மோதல், தமக்குள் மதப்பிரிவுகளும் தான் சண்டை பிடித்து சாகின்றன. மட்டக்களப்பு-வன்னி பிளவில் இரண்டு புறமும் கொல்லுவது போல. இறந்தது என்னவோ பிள்ளைகள்தான்.//

இந்த இறப்பை நிற்பாட்ட என்ன செய்யலாம் என்று சொல்கிறீகள், நான் மேலே கேட்ட கேள்விகளுக்கான பதிலை இன்னும் சொல்லாமல் ,வெறும் யுத்தத்தின் அவலங்களைச் சொல்வதே போலியான கரிசனை என்கிறேன்.

/25 வருடங்களாக, நீங்கள் நம்புகின்ற சொல்லுகின்ற விதமான “தீர்வில்” நடக்கிற யுத்தம் தந்தவை என்ன?

இருதரப்பும் போரிட, அப் பிரதேசங்களை விட்டு இடம்பெயர்ந்துகொண்டிருக்கு

  • தொடங்கியவர்

//பொறுக்கி Says:

January 6th, 2007 at 4:23 pm

நான் ஒரு உதிரி. என்னிடம் எந்த ஒரு அரசியற் திட்டமும் இல்லை. எந்த ஒரு தீர்வும் இல்லை. ஆனால் நான் உணர்வுகளுள்ள மனிதனாகவும், விடுதலைப் போராட்டம் என்பது உரிமைகளுடன் வாழ்வதற்கான போராட்டம் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதாலும் யுத்தத்தின் கொடுமைகளைப் பற்றி கதைப்பேன், எழுதுவேன்.//

கதையுங்கள்,எழுதுங்கள் யார் வேண்டாம் என்றது, உதிரிகளுக்கு இதைத் தவிர வேறு என்னத்தைச் செய்யமுடியும்? ஆனால் மக்களின் பெயரால் என்று மட்டும் சொல்லதீர்கள் ஏனென்றால் நீங்கள் உதிரிகள்.உதிரிகள் மக்கள் அல்ல.பொழுது போக இணயத்தில், புலத்தில் இருந்து எழுதும் மக்களில் சிறு பகுதியினர்.யுத்தம் என்பது போராட்டத்தின் ஒரு பகுதி என்னும் போது அது தவிர்க்க முடியாததாக இருக்கும் போது, அதன் கொடுமைகள் பற்றி மட்டுமே பேசுவது என்பது போலித் தனமானது.

//ஒடுக்குமுறையை எதிர்த்துத்தான் போராட்டம். ஒடுக்குமுறையின் ஒரு வடிவமாக இலங்கையரசு தமிழர் மீது போரைத் திணித்தது. இதனை எதிர்த்து ஆரம்பித்தது ஈழவிடுதலைப் போர். காலப் போக்கில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் அதிகாரமிக்க சக்திகளே தமது சொந்த மக்களையும் ஒடுக்கினர். ஒடுக்குமுறையை எதிர்ப்பது புரட்சிகரம்/போராட்டம் என்றால், ஒடுக்குறை எந்தப்பக்கத்திலிருந்து வந்தாலும் எதிர்க்கப்படும். //

நிச்சயமாக மக்கள் ஆதரவு இன்றி எந்த விடுதலைப் போராட்டமும் சாத்தியம் இல்லை.எந்தப் போராட்ட அமைப்பும் மக்கள் மத்தியில் நிலை கொள்ளமுடியாது.

ஆயுதங்கள் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது.ஆயுதங்களால் மக்கள் ஆதரவைப் பெற முடியாது.எனக்குத் தெரிந்தவரை மக்கள் ஆதரவுடன்,மக்களால் கட்டப்பட்டுள்ள ஒரே இயக்கமாகத் தெரிவது விடுதலைப்புலிகள் இயக்கமே.வெறு எதாவது இருந்தால் சொல்லுங்கள் தேடிப் பார்க்கிறேன்?

//இலங்கை அரசின் ஒடுக்குமுறையை/போரை எதிர்ப்பதற்கு தீர்வு ரெடியாக பொக்கற்றில் இருக்க வேண்டும் என்றால், அரசை எதிர்க்கும் மக்கள் போராட்டம் சாத்தியமேயில்லை. மக்கள் போராடாத எந்தப் போராட்டமும் வென்றதில்லை. //

போராடுவது தான் தீர்வு என்கிறேன் நான்.போராட்டமே பிழை என்பது தானே உங்கள் வாதம்.போராட்டம் தீர்வு இல்லை என்றால் உங்கள் பொக்கற்றில் என்ன தீர்வு இருக்கிறது என்பது தான் எனது கேள்வி?மக்கள் தான் போராடுகிறார்கள்.புலிகள் தான் மக்கள் ,மக்கள் தான் புலிகள்.மக்களால் கட்டமைக்கப்பட்டது தான் புலிகள் இயக்கம்.புலிகள் வானில் இருந்து உதித்த அசுரர்கள் இல்லை.

மக்கள் வேறு புலிகள் வேறு என்பது உங்கள் கற்பிதம்.

//விடுதலைப் போராட்டத்தில் யுத்தம் ஒரு வடிவமேயழிய அதுவே போராட்டமல்ல. ஈழப் போராட்டத்தில் யுத்தமே, யுத்தம் மட்டுமே விடுதலைப் போர் என்று காட்டப்படுகிறது. //

இவ்வாறு காட்டுவது நீங்கள் தான் ஒழிய போராடும் சக்திகளோ ,போராடும் மக்களோ அல்ல.ஏனெனில் இப்படியான கற்பிதங்கள் மூலம் தான் உங்களால் புலிகளை விமர்சிக்க முடியும்.ஆனால் புலிகள் சகல தளத்திலும் போரட்டத்தை முன் நக்கர்த்தி வருகிறார்கள்.அண்மையில் புலத்தவர் மத்தில் ஏன் புலிகள் இராணுவ ரீதியாக அமைதி காக்கிறார்கள் என்று ஒரு பெருங் கேள்வி எழும்பியது.அதற்குப் பதில் புலிகள் போராடுவது யுத்தத்தால் மட்டும் அல்ல என்பதே.யுத்தம் பல வழி முறைகளில் ஒன்றே ஒழிய, அதுவே ஒரே வழி முறை கிடையாது.ஆனால் அவசியமான வழி முறைகளில் யுத்தமும் ஒன்று.யுத்தம் என்பது அதி தீவிர வன் முறையே.அதி தீவிர வன் முறை தேவைப்படும் தருணங்களில் அது பாவிக்கப்படுகிறது.மென் முறமையான அரசியற் பேச்சுவார்த்தைகள் ,அதி தீவிர வன்முறையான யுத்ததின் தொடர்ச்சியே ஒழிய ,இவை இரண்டும் போராட்ட வழி முறைகளின் வெவ்வேறு வடிவங்களே அன்றி, ஒன்று இன்னொன்றுக்கு மாற்றீடான, தனித்து இயங்கக் கூடிய முறமைகள் கிடையாது.யுத்தம்,சமாதானம் ,பேச்சுவார்த்தை என்பன ஒரு தொடரின் பகுதிகளே அன்றி அவை ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்ற 'தனித்துவங்கள்'அல்ல.

//யுத்தத்ததில் போராளிகளுக்கு சற்றும் குறையாத தியாகத்தை மக்கள் செய்துள்ளார்கள். தொடர்ந்தும் செய்துகொண்டுள்ளார்கள்.

போரளிகளே மக்கள்,மக்களே போராளிகள்.இவை வேறு வேறானவை என்பது உங்களின் கற்பிதம்.

//யுத்தத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மக்கள் அது குறித்து கேள்வி எழுப்புவார்கள். தம்மை ஒடுக்கும்போது அதற்கெதிராகக் குரல் கொடுப்பார்கள். தமது சோகங்களுக்காக அழுவார்கள். சொந்தப் பிரதேசங்களில் விடுதலையின் பேரால் இந்தக் குரல்கள் அடக்கப்படுமாயின் அது வேறிடங்களில் ஒலிக்கும். உலகம் பெரிது.//

நான் முன்னர் எழுதயதையே மீண்டும் எழுதுகிறேன்.மக்களின் ஆதரவைப் பெறாத, மக்களின் குரலை, மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்காத எந்த இயக்கமும் மக்களிடம் நிலை பெற முடியாது.ஒரு இயக்கம் மக்களில் தங்கி மக்களால் வளர்த் தெடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அந்த இயக்கம் மக்களின் அபிலாசைகளை மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்ததால் தான்.மக்கள் என்ன நினைகிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத் தான் இது பிரதிபலிக்கிறது.வெறும் உதிரிகளான நீங்கள் புலத்தில் இருந்து இது தான் மக்களின் எண்ணம்,இது தான் மக்களின் அரசியல் அபிலாசை,இது தான் மக்களின் வேட்கை என்று வெறும் போலியான கற்பிதங்களை மட்டுமே எழுத முடியும்.

//யுத்தத்தை நேசிப்பவர்கள் யுத்தத்தை தவிர வேறுவழியில்லை என்றும், யுத்தத்தை எதிர்க்காமல் வாயைப் பொத்திக்கொண்டு இருக்கும்படியும் சொல்லலாம். ஆனால் கொக்கட்டிச்சோலை, குமுதினிப் படகு என்று தொடரும் இலங்கையரசின் இனவெறியிலும், போராளிகளாகவும், துரோகிகளாகவும் தம்மை அழித்துக் கொண்டும் இழந்துகொண்டும் இருப்பவர்கள் மக்கள்.

போராட்டங்கள் வாழ்வதற்கே, சாவதற்கல்ல.//

யுத்தத்தை எவனும் நேசிப்பதிலை.அவ்வாறாகக் காட்ட விழைவது நீங்கள் தான்.யுத்தம் போராட்டத்தின் ஒரு தவிர்க்க முடியாத வழி முறையாக இருக்கிறது.எமது எதிரியே போராட்டத்தின் வழி முறைகளைத் தீர்மானிகிறான்.மக்களில் இருந்து தான் போராளிகள் உருவாகிறார்கள்.மக்களின் அபிலாசைகளை அவர்களின் வேட்கைகளைப் பிரதிபலிக்கும் இயக்கமே மக்களிடம் நிலை கொள்ள முடியும்,வளர முடியும்.உதிரிகளான நீங்கள் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மக்களின் அபிலாசைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள்.அதனால் மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள்.இப்போது புலத்தில் இருந்து உங்கள் கற்பிதங்களை, மக்களின் சோகம் என விற்க முயலுகிறீர்கள்.உங்கள் மனதில் மக்கள் பற்றிய கரிசனை இல்லாது, மக்களால் கட்டப்பட்ட புலிகள் மேலான காழ்புணர்வே மேலோங்கித் தெரிகிறது.அதனாலயே போராட்ட வழி முறைகளில் யுத்தமும் ஒன்று என்று சொல்லி விட்டு, பின்னர் அது தேவையற்றது எனவும் ஒன்றுக்கு ஒன்று முரணாகச் சொல்ல முடிகிறது.

  • தொடங்கியவர்

//போராளிகளை போராளிகளுடைய வாழ்வை கற்பிதமென்று நான் சொல்லவில்லை. அவ் வாழ்வின் பின்னான துயரத்தையும் பிரச்சார வார்த்தைகள் சொல்லாத உணர்வுகளையும் மட்டும்தான் சொல்ல முயன்றேன்.//

கீழே நீங்கள் எழுதியது,

//தேசம், தேசீயம், தியாகம், அர்ப்பணம், மாவீரம்

இந்தச் சொற்களெல்லாம் கலைகிறபோது -அவற்றில் நாம் நம்பிய அர்த்தம் அழிஞ்சுபோற போது - இறுதியில், என்னதான் எஞ்சுகிறது என்பதாய்க் கேட்கிறது//

தேசம்,தேசியம்,தியாகம்,அர்ப்ப

பெடிச்சி என்னும் வலைப்பதிவர் போர் பற்றியும், தேசியம்,தேசம்,தியாகம்,மாவீரம

Edited by வர்ணன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.