Jump to content

ஆந்திரா கோங்குரா சட்னி ( புளிச்ச கீரை )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13501858_1035777653135957_54407274690285

இது ஆந்திர மதிய உணவின் மூச்சு காற்று எனவே கூறலாம்.

எனது மாஸ்டர் சுப்பையா நாயுடு இந்த சட்னியை செய்வதில் கில்லாடி.

இதற்கு சென்னை மக்களும் இதன் சுவைக்கு அடிமை.

இதில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் மிகவும் அதிகமாக உள்ளது.

தேவையான பொருட்கள்

வறுப்பதற்கு
கோங்குரா கீரை ( புளிச்ச கீரை ) 300 கிராம் 
எண்ணெய் 1 தேக்கரண்டி 
வரமிளகாய் 13
கொத்தமல்லி கொட்டை 2 மேஜைக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி

மற்றவை

சீரகம் 1 தேக்கரண்டி 
வெங்காயம் 1 கப் ( பொடியாக நறுக்கியது )
பூண்டு 3 பற்கள்

தாளிக்க 
எண்ணெய் 3 மேஜைக்கரண்டி 
பூண்டு 4 பற்கள் பொடியாக நறுக்கியது 
உளுந்து பருப்பு 1 தேக்கரண்டி 
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி 
வரமிளகாய் 3
கடுகு 1/2 தேக்கரண்டி 
சீரகம் 1/2 தேக்கரண்டி 
வெந்தயம் 1/2 தேக்கரண்டி

செய்முறை

1. கோங்குரா இலைகளை மட்டும் ஆய்ந்து நன்கு தண்ணீரில் அலசி வைக்கவும்.

2. ஒரு வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய், கொத்தமல்லி பருப்பு மற்றும் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். அதை தனியாக எடுத்து வைக்கவும். மிகவும் கறுகி விட்டால் சட்னியும் கசந்து விடும்.

3. அதே வடைச்சட்டியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோங்குரா கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.

4. இப்பொழுது மிக்ஸியில் பூண்டு , சீரகம் மற்றும் வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்களையும் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர் வறுத்து அற வைத்துள்ள கோங்குரா கீரையையும் சேர்த்து நன்கு அறைக்கவும்.

5. பிறகென்ன வடைச்சட்டியை அடுப்புல வைத்து அதில் தாளிக்க கொடுத்துள்ள பட்டியலில் உள்ள எண்ணெயை ஊற்றவும், காய்ந்ததும் நசுக்கி வைத்துள்ள பூண்டு , பொடியாக நறுக்கிய வெங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு சேர்த்து நன்கு வதக்கவும் . பூண்டும் வெங்காயமும் கொஞ்சம் பொன்னிறமாக மாறியதும் வரமிளகாய், கடுகு மற்றும் சீரகம் வெடிக்க வைத்து கொள்ளவும்.கடைசியாக கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பின்பு தாளிப்பை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கோங்குரா கலவையில் கொட்டி கிளறவும்.

 

FB

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.