Jump to content

சுவையான மட்டன் கீமா முர்தபா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கீமா முர்தபா அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு டிஷ். இந்த கீமா முர்தபாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
சுவையான மட்டன் கீமா முர்தபா
 
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - அரை கிலோ
கொத்து கறி - 250 கிராம்
சீனி - ஒரு மேசைக்கரண்டி
பால் - முக்கால் கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு - அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
கரம்மசாலா - ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
முட்டை - 2
கேரட் - ஒன்று
வெங்காயம் - அரை கிலோ
உருளைக்கிழங்கு - ஒன்று
கொத்தமல்லி தழை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 2
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை :

* ஒரு பெரிய பாலுடன் சீனி, உப்பு, சோடா உப்பு சேர்த்து கரைத்து அதை மைதா மாவில் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து, பெரிய அளவுக்கு உருண்டையாக உருட்டி அதில் எண்ணெய் தடவி உருட்டி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

6BE83B67-E1AC-4E02-B5FC-37A601DE1FF3_L_s

* பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பொரித்து வைக்கவும்.

0ACA4BD2-EB68-47CE-945E-B3E68B4B0B63_L_s

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கரம்மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறிக் கொள்ளவும்.

6AC3BC1E-5238-44AA-919D-5AF67C4E8336_L_s

* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொத்து கறியை போட்டு வதக்கவும். பச்சை வாசனை வராமல் இருக்க அதில் இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி போட்டு வதக்கி, 5 நிமிடம் மூடி வைக்கவும்.

* பின்னர் மூடியைத் திறந்து, அதில் நறுக்கின கேரட், உருளைக்கிழங்கை போட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்.

* பிறகு மூடியைத் திறந்து, பிசறி வைத்துள்ள வெங்காய கலவையை போட்டு, சுமார் 10 நிமிடம் பிரட்டி விடவும்.

* அடுத்து அதில் பொரித்த முட்டையை போட்டு அதையும் மசாலாவுடன் சேர்த்து கிளறி விடவும்.

* ஒரு பெரிய தட்டை திருப்பி போட்டு மாவு உருண்டையில் சிறிது மாவை எடுத்து உருட்டி வைத்து தட்டு அளவுக்கு தேய்த்து அதில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். பிறகு நடுவில் ஒரு கைப்பிடி அளவிற்கு மசாலாவை வைத்து, ஒவ்வொரு புறமாக மடிக்கவும்.

* இதே போல் நான்கு புறமும் மடிக்க வேண்டும். உருண்டையாக உருட்டி விடாமல், சதுர அல்லது செவ்வக வடிவில் மாவை மடிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் உள்ளே உள்ள மசாலாவை குவித்து வைக்காமல், சற்று சதுரமாக பரப்பினாற்போல் வைத்துக்கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் சிறிது அளவு ஊற்றி அதில் செய்து வைத்த முர்தபாவை போட்டு மேலே எண்ணெய் ஊற்றி சுற்றி விடவும். பிறகு திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

1A708970-50A0-450F-BF0F-45CED9F96E3F_L_s

* முர்தபாவில் முட்டையை உடைத்து ஊற்றியும் செய்யலாம். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அடித்து கொள்ளவும். அதை முர்த்தப்பாவின் மேலே ஊற்றி பரப்பி விடவும். இருபுறமும் இப்படி முட்டையை தடவி வேக வைத்து எடுக்கவும். 

* இந்த ருசியான முர்தபாவை அப்படியே சாப்பிடலாம். கறி மசாலா தொட்டுக் கொண்டு சாப்பிட இன்னும் சுவையாய் இருக்கும்.

http://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2016/07/08141850/1024270/how-to-make-mutton-Keema-murtabak.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த முன்னாள் ஜிகாதிகள் கையில் ஒட்டு மொத்த சிரியாவும் விழவில்லை. முன்னாள் ஜிகாதிகள் என்பதில் பல ஐஎஸ் ஆட்களும் உண்டு. இவர்களுக்கு பெயர்தான் முன்னாள் ஜிகாதிகளே தவிர இவர்கள் ஐஎஸ் போல மிலேச்சர்கள்தான். IKR எனப்படும் ஈராக்கி கேர்டிஸ்தான் போல சிரியாவில் வடக்கே பல நிலத்தொடர்புள்ள இடங்கள் குர்தி இன போராளிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. முன்னாள் ஜிகாதிகள் எஞ்சிய இடத்தை Free Syrian Army உட்பட்ட ஏனைய குழுக்களுடன் பங்கிடுகிறார்கள். முன்னாள் ஜிகாதிகள் இப்போ துருக்கியின் நண்பர்கள். ரஸ்யா தன் வான், கடற் படை தளங்களை இன்னும் அகற்றவில்லை. அசாத்தை கைவிட்டு விட்டு, இப்போ முன்னாள் கிளரையாளர்களுடன் ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்துகிறதாம்.  இனி சிரியாவில் ஒரு நிழல் யுத்தம் உள்நாட்டு போர் என்ற பெயரில் அரங்கேறும் என்றே நான் நினைக்கிறேன். இதில் முக்கிய பாத்திரம் துருக்கி, ரச்யாவுக்குத்தான் இருக்கும், ஆனால் பலவீனப்பட்டு வடகொரியாவிடம் படைகளை யாசிக்கும் நிலையில் உள்ள ரஸ்யாவால் பெரிதாக எதையும் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை - மேற்கு FSA, குர்தீக்களை போசிக்க முனையலாம் - டிரம்ப் இதில் தலையிடேன் என அறிவித்து விட்டார். உண்மையில் இதில் ஆர்வம் உள்ள எல்லோரும் James Barr எழுதிய The Line in the Sand புத்தகத்தை வாசிக்க வேண்டும். வரைபடத்தை பார்த்தால் தெரியும் சிரியா, ஈராக் பகுதியில் எல்லை ஒரு ரூலரை வைத்து நேர் கோடு அடித்தது போல் இருக்கும். உண்மையில் நடந்ததும் அதுவே. இவை இயற்கையாக அமைந்த இனவழி தேசிய நாடுகள் அல்ல. அசாத், சதாம், கடாபி போன்ற கொடுங்கோலர்களின் இரும்புபிடி உடைய - நாடுகள் இன, மத உட்பிரிவு அடிப்படையில் உடைவது தவிர்க்கவியலாதத்து. மார்ஷல் டிட்டோவுக்கு பின் யூகோஸ்லாவியாவில் நடந்ததும் இதுவே.
    • இதில் ஜோக் என்ன தெரியுமா… நான் புலிகள் தடை செய்த இயக்கங்களில் உயர், மத்திய, கீழ் மட்டத்தில் இருந்த பலருடன் இதை பற்றி கதைத்துள்ளேன், விவாதித்துள்ளேன். அர்ஜூன் அண்ணா போன்ற வாழும் சாட்சிகள் யாழில் எழுதியுள்ளனர். பல வகையான இணையதளங்களில், புத்தகங்களில் பாதிக்கபட்டவர்களே தமக்கு நேர்ந்ததை எழுதியுள்ளனர். அவர்கள் நிலைப்பாட்டில் இருந்து இந்த எழுத்துக்கள் பல இடங்களில் மிகைபடுத்தலாகவும் இருப்பதை கண்டும் உள்ளேன். ஆனால் இங்கே சொல்லப்படும் கதைக்கு இவற்றில் இருந்து கூட ஆதாரம் தருவதாக தெரியவில்லை. கட்டபிராயில் கண்டேன், உரும்பிராயில் கேள்விப்பட்டேன். என்ற அளவில்தான் கதை போகுது. வழமையாக யாழில் மேற்கை எதிர்ப்பதை முழு நேர வேலையாக கொண்டோரை தவிர வேறு எவரும் இதை ஆமோதித்தும் கருத்து எழுதவில்லை.  
    • சிரியாவில் முன்பு தலையை மூடும்படி கட்டாயபடுத்தும் அப்பாவோ சகோதரனோ கணவனோ இல்லாவிட்டால் பெண்கள்  சுதந்திரமாகவே இருந்தனர்.இனி முஸ்லிம் மத குழுக்கள் ஆட்சியில் ஹிஜாப் தான்
    • கட்சிக்குள் தான் வீரம் என்றில்லாமல் கட்சிக்கு வெளியிலும் வீரத்தை காட்ட வேண்டும்.   புத்தர் சிலை வைப்பு குறைந்து விட்டது என நினைத்தேன். ஆங்காங்கே இப்படி குழப்பவாதிகளும் தமது செயலை தொடர்கின்றனர்.
    • அரச செலவில்  இவ்வளவு எண்ணிக்கையில் சமையல்காரர்களெனில் அவர்களும்  நீக்கப்பட வேண்டும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.