Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் வழங்க கடுமையான கட்டுப்பாடுகள்: சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

இலங்கை பிரஜைகளுக்கு அகதி அந்தஸ்தை வழங்கும் நடவடிக்கையில் மேலும் பல கடுமையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தற்போது இலங்கையின் களநிலவரத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சுவிஸ் இன்போ.சிஎச் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சுவிஸின் குடிவரவு செயலகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையின் மனித உரிமை நிலவரங்களில் பாரிய குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன

சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்தல் என்பது இதற்கு ஒரு உதாரணமாகும்.

எனவே ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் என்போர், அரசியல் அகதிகள் என்ற நிலைக்கு விண்ணப்பிப்பதில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவுள்ளதாக சுவிஸ் குடிவரவு செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்களுக்கு சுவிஸில் பாதுகாப்பு அவசியம் இல்லை.

எனினும் அகதி அந்தஸ்து வழங்குவதில், மனித உரிமை விடயங்களின் தனிப்பட்ட தவிர்க்க முடியாத காரணங்கள் கருத்திற்கொள்ளப்படும் என்றும் அந்த செயலகம் குறிப்பிட்டுள்ளது.

2016ம் ஆண்டு மே மாதம் இறுதிவரை 1316 இலங்கையர்கள் அகதி அந்தஸ்துக்கு கோரியுள்ள நிலையில் தேங்கியுள்ளன.

5000 பேர் சுவிட்ஸர்லாந்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதில், 3674 பேர் அகதி அந்தஸ்தை பெற்றவர்களாவர்.

1613 பேர் நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளனர். எனினும் சுவிஸ் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை தமிழர் தரப்புக்கள் ஏற்க மறுத்துள்ளன.

ஈழத் தமிழர்களுக்கான சுவிஸ் பேரவையின் உதவி தலைவர் அன்னா அன்னூர், விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாக இருந்தவர்கள் நாடு கடத்தப்பட்டு விமான நிலையத்துக்கு சென்றிறங்கும்போது சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2009ம் ஆண்டில் போர் முடிந்த போதும் இன்று வரை அரசியல் கைதிகள்விடுவிக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/110371

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிட்சர்லாந்து நாட்டில் இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு புகலிடம் வழங்க இனிமேல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அந்நாட்டு குடியமர்வு துறை அலுவலகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

சுவிஸ் குடியமர்வு துறை அலுவலகமான SEM சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு சுவிஸில் புதிதாக புகலிடம் வழங்குவதில் கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகள் தற்போது ஓரளவிற்கு சீரடைந்துள்ளது என சுவிஸ் அரசு நம்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

’’தற்போது இலங்கையில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. குறிப்பாக, கருத்து சுதந்திரம், பொது இடங்களில் கூடுவது உள்ளிட்ட மனித உரிமைகள் தற்போது வளர்ச்சி அடைந்துள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் இலங்கையில் இருந்து புகலிடம் கோரி வரும் அந்நாட்டு குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு அகதி அந்தஸ்த்துடன் புகலிடம் அளிப்பதற்கு கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளும் தற்போது குறைந்து வருகிறது.

எனினும், மனித உரிமைகள் தொடர்பான சில விடயங்களில் முன்னேற்றம் இல்லை என்பதால், தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும்போது தனிக்கவனம் செலுத்தப்படும்.

நடப்பாண்டு மே மாதம் இறுதி வரை 5,000 இலங்கை குடிமக்கள் சுவிஸில் நுழைய அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3,674 நபர்களுக்கு அகதி அந்தஸ்த்துடன் புகலிடம் அளிக்கப்பட்டுள்ளது.

1,316 நபர்களின் புகலிடக் கோரிக்கை மனுக்கள் தற்போது நிலுவையில் உள்ளன. மேலும், 1,613 நபர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும், இவர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழலில் உள்ளனர்.

ஈழத்தமிழர்களுக்கான சுவிஸ் கவுன்சிலின் துணை தலைவரான Anna Annor என்பவர் 47 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ’’இலங்கை நாட்டிற்கு திரும்பிச் செல்லும் தமிழர்கள் அனைவரையும் ‘தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு’ ஆதரவானவர்கள் என அந்நாட்டு அரசு முடிவு செய்கிறது.

இதன் விளைவாக, கொழும்பு விமான நிலையத்திலேயே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறையிலும் அடைக்கப்படுகிறார்கள்.

2009ம் ஆண்டு யுத்தத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களில் பலரை அந்நாட்டு அரசு இதுவரை விடுதலை செய்யவில்லை.

எனினும், கடந்த 2014ம் ஆண்டு முதல் இலங்கை நாட்டில் சூழல்கள் மாறியுள்ளன. கடந்த ஜனவரி முதல் பெப்ரவரி வரை இலங்கை நாட்டிற்கு திரும்பியவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சுவிஸில் புகலிடம் கோரும் இலங்கை குடிமக்கள் மீது கடுமையான நிபந்தனைகள் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/swiss/01/110756

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.