Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி கைது!

Featured Replies

சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜரான உதலாகம என்ற இந்த அதிகாரி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

லசந்த விக்ரமதுங்க கொலையுடன் இந்த அதிகாரிக்கு தொடர்பு இருப்பதற்கான தெளிவான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் சுமார் 20 இராணுவத்தினரடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/crime/01/111105

 

  • தொடங்கியவர்

லசந்த தாக்குதலுக்கு பரிசாக ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மேஜர் உதலாகம!

நேற்றுமுன்தினம் இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரி மேஜர் உதலாகம, லசந்த விக்கிரமசிங்க தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ஜேர்மனின் இலங்கைக்காக தூதுவர் அலுவலகத்தில் சேவையாற்றுவதற்கு இராணுவ புலனாய்வு பிரிவின் பரிந்துரையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சார்ஜன் மேஜர் உதலாகம லசந்த தாக்குதலின் முக்கிய சந்தேகநபராக இரகசிய பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

2009ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற லசந்தவின் தாக்குதலை நேரில் கண்டவர்கள் பலர் இது தொடர்பில் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியிருந்தாலும் தற்பொழுது இவ்வாக்குமூலம் அனைத்தும் காணாமல் போயுள்ளது.

இது தொடர்பில் முதலாவதாக கைது செய்யப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதில் அடையாள அணிவகுப்பு நடத்தாமல் விடுதலை செய்ததாக விசாரணைக்கு பொறுப்பான ஓய்வுபெற்ற உதவி பொலிஸ்மா அதிபர் கீர்த்தி கஜநாயகவுக்கு அரச புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் சீ.என்.வாகிஷ்ட உத்தரவிட்டுள்ளதாக இதுவரை தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் கீர்த்தி கஜநாயக மற்றும் சீ.என்.வாகிஷ்ட ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லசந்த தாக்குதலுக்கு பரிசாக ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சார்ஜன் மேஜர் உதலாகம ஜேர்மனியின் இலங்கைக்காக தூதரகத்தில் மூன்றரை வருடங்களாக சேவையாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டதன் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி 'நேற்று கைது செய்யப்பட்ட சார்ஜன் மேஜர் லசந்த தாக்குதலில் எவ்வித தொடர்புமில்லை. இரகசிய பொலிஸார் தேசிய பாதுகாப்பு தொடர்பில் விளையாடுகின்றனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற அழுத்தம் காரணமாக இதுவரை இராணுவ புலனாய்வு பிரிவு சரிந்துள்ளதுடன் அன்று யுத்தத்தின் போது பாரியளவு சேவையாற்றிய புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்ட அழுத்தம் தொடர்பில் இன்று யாரும் பேச மாட்டர்கள். மிகவும் வருந்தத்தக்க சூழ்நிலை' என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை பொலிஸின் சிரேஷ்ட அதிகாரி 'யுத்தத்தில் உள்வாங்கி யாராலும் கொலை செய்ய முடியாது. கொலையாளிக்கு இராணுவ முத்திரை கொடுப்பதில்லை.

லசந்த தாக்குதல் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் சம்பவமாகும்.

இராணுவ அதிகாரி என்பதனால் இதனை மறைத்த காலமும் இருந்தது. நீதியை மறைக்க நினைத்தால் நிச்சயமாக பிரதிவாதிகளின் மனம் வலிக்கும். தாங்கள் சரியானதை செய்தால் பயப்படத் தேவையில்லை. தனக்கு மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக இதனை செய்ததாக கூறினால் அதற்கான விவரங்கள் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் ஊடாக வழங்க முடியும் என தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இலங்கையினுள் நியாயமான சட்டத்தினை மீண்டும் உருவாக்குவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியினை பாராட்டியுள்ளதோடு இது தொடர்பில் கவனம் செலுத்தி வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/crime/01/111165

  • தொடங்கியவர்

உதலகம புலிகளின் கருணா அணியுடன் இணைந்து செயற்பட்டவர்! ஆங்கில ஊடகம்!

லசந்தவின் கொலை தொடர்பில் கைதானவர், விடுதலைப் புலிகளின் விடயத்தை கையாளும்பணியில் ஈடுபட்டவர் என ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சண்டேலீடர் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் டிஎம்ஐஎன்று கூறப்படும் இலங்கை இராணுவ உளவுப்பிரிவின் முதலாம் தர அதிகாரி கடந்தவெள்ளிக்கிழமை இரவே கைது செய்யப்பட்டு விட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் நேற்று பிற்பகலே அவரின் கைது தொடர்பில் இலங்கையின் பொலிஸ் தரப்புஉத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

பிரேமாநந்த உதலகம என்ற இந்த அதிகாரி, சீஐடியினரின் தீவிரமான விசாரணையின்பின்னரே கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

இவர், மீது கண்கண்ட சாட்சியை கடத்தியதுடன் அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தகுற்றச்சாட்டும் சுமத்தப்படடுள்ளது.

இவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற கருணா அணியுடன் இணைந்து,விடுதலைப் புலிகளின் விடயத்தை கையாளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

அதன்போதுஉதலகம, டிஎம்ஐயின் தலைவர் கபில் ஹெந்தவிதாரணவின் கீழ் செயற்பட்டு வந்தார்.

2010ம் ஆண்டில் இவர், இலங்கையின் ஜேர்மனிய தூதரகத்திலும் சேவையாற்றினார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/crime/01/111167

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.