Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

இலங்கை எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் செய்திகள்

13584978_1138458046227759_44422668735589

  • Replies 52
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இலங்கை, ஆஸ்திரேலிய அணித்தலைவர்கள் பங்கெடுத்த ஊடக சந்திப்புக்களில் பகிரப்பட்ட கருத்துக்கள். 

 

D3S3081x-780x520

இலங்கை, ஆஸ்திரேலிய அணித்தலைவர்கள் பங்கெடுத்த ஊடக சந்திப்புக்களில் பகிரப்பட்ட  கருத்துக்கள்.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி   3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 T20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாட இலங்கை வந்தடைந்துள்ளது.

நீண்ட இடைவெளியின் பின்னர் முழுமையான தொடரொன்றில் விளையாட வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் இலங்கை வீரர்களான முத்தையா முரளிதரன் சூழல் பந்து வீச்சிலும், திலான் சமரவீர துடுப்பாட்டத்திலுமாக பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தத் தொடர் ஆரம்பமாக முன்இடம்பெறும் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் இடம்பெற்றது.

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பயிற்றுவிப்பாளர் டெரன் லீமன் ஆகியோரோடு இலங்கை அணியின் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் மற்றும் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்டீவ் ஸ்மித்திடம் ,காயத்தில் இருந்து மீண்டுவரும் டேவிட் வோர்னரின் தற்போதைய நிலை என்ன என கேட்ட போது  முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று நம்பிக்கை வெளியிடடார்.

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போதைக்கு உபாதைக்கு உள்ளாகி இருப்பதால் இந்த தொடருக்கு எவ்வாறு ஆயத்தமாகி உள்ளீர்கள் என மத்தியூஸிடம் கேட்ட போது,

துரதிர்ஷ்டவசமான முறையில் எமது வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்து தொடரில் பங்கேற்காத இளம் சூழல் பந்து வீச்சாளர் ஜெப்ரி வெண்டர்சே அவுஸ்திரேலிய தொடரில் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு,அவர் தற்போது கைவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவதிப்பட்டு வருகிறார். ஆனாலும் அவர் விளையாடுவது அசாத்தியமான விடயமாகும் என தெரிவித்தார்.

அத்தோடு காயத்துக்கு உள்ளாகியுள்ள வீரர்களான துஷ்மந்த சமீர, தம்மிக்க பிரசாத் மற்றும் ஷாமிந்த எரங்க ஆகிய வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவார்களா என கேட்ட போது சமீர மற்றும் எரங்க ஆகியோர் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் எனவும் மத்தியூஸ் தெரிவித்தார்.

5 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மண்ணில் போட்டிகளில் பங்கெடுப்பதால் சூழல் பந்து விச்சு சவாலானதாகவே இருக்கும், ஆயினும் திறமையாக விளையாடி தொடரை வெற்றிகொள்வோம் என ஸ்மித் நம்பிக்கை வெளியிடடார்.

தரநிலையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இலங்கை 7 ம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

D3S3010x-780x519 D3S2999x-780x519

http://vilaiyattu.com/16304-2/

  • தொடங்கியவர்
மீண்டும் 'வோண் - முரளி' கிண்ணம்
 
14-07-2016 11:06 PM
Comments - 0       Views - 4

article_1468496216-TamilwamucuLEAD-BOX.jஉலகில் தோன்றிய மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் இருவராகக் கருதப்படும் இலங்கையின் முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோண் ஆகியோரின் பெயரைத் தாங்கிய வோண் - முரளி கிண்ணம், இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் தொடரின் வெற்றியாளர்களுக்கு மீண்டும் வழங்கப்படவுள்ளது.

இதுவரையில் 3 தொடர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவை மூன்றிலுமே அவுஸ்திரேலிய அணி வென்றிருந்தது. இம்முறை இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட தொடரைச் சமப்படுத்தினாலேயே, இக்கிண்ணத்தை அவுஸ்திரேலியா, தன்வசம் வைத்துக் கொள்ளும்.

இலங்கையினதும் அவுஸ்திரேலியாவினதும் நட்சத்திர வீரர்களின் பெயரை இக்கிண்ணம் தாங்கியிருந்தாலும், இலங்கை சார்பில் பெயரைக் கொண்ட முரளிதரன், அவுஸ்திரேலிய அணியின் ஆலோசகராகச் செயற்படுகின்றமை, இக்கிண்ணத்தில் காணப்படும் 2 பெயர்களுமே, அவுஸ்திரேலியாவின் பக்கமாக உள்ள நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் முதல்நிலை டெஸ்ட் அணியாக அவுஸ்திரேலியா உள்ள நிலையில், இலங்கை அணி, 7ஆம் இடத்திலுள்ளது. பாகிஸ்தானுக்கெதிரான தொடரை இங்கிலாந்து வென்று, இந்தத் தொடரை அவுஸ்திரேலியா அணி தோற்றால், முதலிடத்தை அவ்வணி இழக்கும் என்ற நிலை காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/177051#sthash.OoerhjHD.dpuf
  • தொடங்கியவர்
இலங்கை அணியில் பந்துவீச்சாளர்களுக்கு பஞ்சம்?
2016-07-15 10:27:05

(நெவில் அன்­தனி)

 

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக இன்னும் சில தினங்க ளில் வோர்ன்–முரளி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆரம்ப­ மா­க­வுள்ள நிலையில் இலங்கை அணியில் பந்­து ­வீச்­சா­ளர்­க ­ளுக்கு பஞ்­ச­மேற்­ப­டக்­ கூ­டிய ஆபத்து நில­வு­கின்­றது.

 

1797360.jpg

 

வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளான தம்­மிக்க பிரசாத்–துஷ்­மன்த சமீர ஆகி­யோரும் இலங்­கையின் எதிர்­கால சுழல்­பந்­து­வீச்­ சாளர் என வர்­ணிக்­கப்­படும் ஜெவ்றி வெண்­டர்­சேவும் இந் தத் தொடரில் விளை­யாட மாட்­டார்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

இங்­கி­லாந்­துக்­கான கிரிக்கெட் விஜ­யத்­தின்­போது ஒரு போட்­டி­யில்­தானும் விளை­யா­டாமல் உபா­தை­யுடன் நாடு திரும்­பிய தம்­மிக்க பிரசாத் இன்னும் பூரண குண­ம­டை­ய ­வில்லை என அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் கூறினார். 

 

பிரசாத் ஒரு­வேளை கடைசி டெஸ்ட்டில் அல்­லது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் போட்­டி­களில் விளை­யா­டக்­கூடும் என மெத்யூஸ் அரை மன­துடன் கூறி­யுள்ளார்.

 

மற்­றைய இரு­வரும் உபா­தை­யி­லி­ருந்து மீளா­ததால் விளை­யா­ட­மாட்­டார்கள் என அவர் மேலும் தெரி­வித்தார்.

 

சுரங்க லக்­மாலும் இங்­கி­லாந்தில் வைத்து உபா­தைக்­குள்­ளா­கி­யி­ருந்தார். ஷமிந்த எரங்­கவின் பந்­து­வீச்­சுப்­பாணி விதி­க­ளுக்கு முர­ணா­னது என்­பது உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்து அவ­ருக்கு சர்­வ­தேச அரங்கில் பந்து வீச சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால்  தடை­வி­திக்கப் பட்­டுள்­ளது. மற்­றொரு வேகப்­பந்­து ­வீச்­சா­ள­ரான நுவன் பிரதீப் மாத்­தி­ரமே எஞ்­சி­யுள்ளார்.

 

அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் அள­வுக்கு அதி­க­மாக பந்­து­வீசும் அவரும் உபா­தைக்­குள்­ளா­வது அணிக்கு பெரும் நெருக்­க­டியைக் கொடுப்­ப­தாக அமை­கின்­றது.

 

எனவே, அடுத்த வாரம் ஆரம்­ப­மா­க­வுள்ள டெஸ்ட் தொட­ருக்­கான குழாமைத் தெரிவு செய்யும்போது 100 வீதம் தேகா­ரோக்­கியம் உடைய அதி சிறந்த வேகப் பந்­து­வீச்­சா­ளர்கள் குறித்து தெரி­வா­ளர்கள் கவனம் செலுத்­து­வது அவ­சி­ய­மாகும்.

 

இதே­வேளை, இலங்­கையின் பந்­து­வீச்சில் முது­கெ­லும்­பாக இருக்கப் போகின்­றவர் சுழல்­பந்­து­வீச்­சாளர் ரங்­கன ஹேரத் ஆவார். அவ­ருக்குப் பக்­க­ப­ல­மாக மிகவும் சரி­யான ஒரு சுழல்­பந்­து­வீச்­சா­ளரை தெரி­வா­ளர்கள் பெய­ரி­டு­வார் கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

மேலும் இங்­கி­லாந்­துக்கு எதி­ரான போட்­டி­களில் களத்­த­டுப்பில் பிர­கா­சிக்கத் தவ­றிய இலங்கை அணி­யினர் தங் ­களைத் திருத்­திக்­கொண்டு முழு­வீச்சில் களத்­த­டுப்பில் ஈடு­ப­டு­வார்கள் எனவும் அதற்­கான தீவிர பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அணித் தலைவர் மெத்யூஸ் குறிப்பிடுகின்றார்.

 

ஒட்டுமொதத்தத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறந்த வியூகங்களை அமைத்து, சொந்த நாட்டு அனுகூலத்தையும் பயன்படுத்தி திறமையாக விளையாட வுள்ளதாக அவர் கூறினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17973#sthash.5BDZhbfA.dpuf
  • தொடங்கியவர்
வானிலையே பாரிய சவால்: கவாஜா
 
17-07-2016 09:45 PM
Comments - 0       Views - 72

article_1468750739-TamilvvaasaKhawaja.jpஇலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி, தனது முதலாவது டெஸ்ட் போட்டியை ஜூலை 26ஆம் திகதி விளையாடவுள்ள நிலையில், இலங்கையின் வானிலையே பாரிய சவாலாக உள்ளதாக, அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

"வானிலை, பாரியதொரு சவால். மிகவும் வெப்பமானதும் ஈரலிப்பானதுமாகும். இங்குள்ள நிலைமைகள் மிகவும் வேறுபாடானவை, மேற்கிந்தியத் தீவுகளிலும் இந்தியாவிலும் இருப்பதைப் போன்று. மிகவும் அந்நியமானதல்ல, ஆனால் ஓட்டங்களைக் குவிக்கத் தொடங்கியதும், இதமாக உணர்வீர்கள். ஆனால், ஆடுகளம் சேதமடையத் தொடங்கினால், ஓட்டங்களைக் குவிப்பதற்குக் கடினமாக அமையலாம்" எனத் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலேயே அவுஸ்திரேலியா விளையாடிவந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும், சவாலாக அமையுமென, கவாஜா தெரிவித்தார். அவ்வணி, இறுதியாக இவ்வாண்டு பெப்ரவரியிலேயே டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்தது.

"சிறிது காலமாக நாங்கள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. குழாமுக்குள் விளையாடிய போட்டியில், சிவப்புப் பந்து வரும் போது, வித்தியாசமாக இருந்தது. நாள் முழுவதும் களத்தடுப்பில் ஈடுபட்டோம். களத்தில் இருப்பது, எவ்வளவு கடினமென்பதை மறப்பதுண்டு" என அவர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/177248#sthash.L0FVDuLb.dpuf
  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய, இலங்கை அணிகளின் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம். 

 

s1ஆஸ்திரேலிய, இலங்கை அணிகளின் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம்.

இலங்கை வந்துள்ள ஆஸி அணி பங்கெடுக்கும் 3 நாள் பயிற்சி போட்டி இன்று P சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் தலைவர் அணியின் தலைவர் மிலிந்த ஸ்ரீவர்த்தன முதலில் துடுப்பாடும் விருப்பை அறிவித்தார்.

அதன்படி ஆடிய ,இலங்கை கிரிக்கெட் தலைவர் பதினொருவர் அணி 229 ஓட்ட்ங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அணியின் தலைவர் மிலிந்த ஸ்ரீவர்த்தன 53 ஓட்டங்களையும், அசேல குணரத்ன 58 ஓட்டங்களையும், சதுரங்க டி சில்வா 49 ஓட்டங்களையும், சகலதுறை வீரர் தசுன் சானக்க 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆஸ்திரேலிய தலைவர் அணியின் சார்பில் 31 வயதான சூழல் பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ கிபி 5 விக்கெட்டுக்களையும்,மிட்சல் ஸ்ட்ராக் , ஜாக்சன் பிரட் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி இன்றைய நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களைக் குவித்தது.ஷோன் மார்ஷ் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஜோ பெர்ன்ஸ் 64 ஓட்டங்களுடனும், உஸ்மான் கவாஜா 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.போட்டியின் 2 ம் நாள் நாளையாகும்.

s1 s2

s3 

http://vilaiyattu.com/ஆஸ்திரேலிய-இலங்கை-அணிகள/

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் - இலங்கை அணி அறிவிப்பு

13770257_1085723791476314_61603364320997

1.) Angelo Mathews (C) 2.) Dinesh Chandimal (VC) 3.) Dimuth Karunarathna 4.) Kaushal Silva 5.) Kusal Janith Perera 6.) Kusal Mendis 7.) Dhananjaya de Silva 8.) Roshane Silva 9.) Nuwan Pradeep Fernando 10.)Vishva Fernando 11.)Asitha Fernando 12.)Rangana Herath 13.)Dilruwan Perera 14.)Lakshan Sandakan 15.)Suranga Lakmal

 
 
  • தொடங்கியவர்
இலங்கை டெஸ்ட் குழாமில் நான்கு புதுமுகங்கள்
2016-07-22 10:50:28

(நெவில் அன்­தனி)


அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக கண்டி பல்­லே­க­லையில் அடுத்த வாரம் நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டிக்­கான இலங்கை கிரிக்கெட் குழாமில் மிலிந்த சிறி­வர்­த­ன­வுக்கு இடம் வழங்­கப்­ப­ட­வில்லை.

 

18108_36.jpg

அவுஸ்­தி­ரே­லி­யர்­க­ளுக்கு எதி­ராக சர­வ­ண ­முத்து ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் நடை­ பெற்ற போட்­டியில் இலங்­கையர் பதி­னொ­ரு வர் அணிக்கு தலை­மை­தாங்­கிய சிறி­வர்­தன பிர­கா­சிக்கத் தவ­றி­யி­ருந்தார்.

 

இக் குழாமில் நான்கு புதிய முகங்கள் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 18 வய­துான அசித்த பெர்­னாண்டோ, விஷ்வா பெர்­னாண்டோ, லக் ஷான் சந்­தகான், ரொஷேன் சில்வா ஆகி­யோரே குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ள நான்கு புது­மு­கங்­க­ளாவர். 

 

மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டி­வந்த தனஞ்சய டி சில்­வா­வுக்கும் டெஸ்ட் குழாமில் வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

 

ரங்­கன ஹேரத் மற்றும் டில்­ருவன் பெரேரா ஆகிய இரு­வரும் பிர­தான சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளா­கவும் நுவன் ப்ரதீப், சுரங்க லக்மால் ஆகியோர் பிர­தான வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளா­கவும் குழாமில் இடம்­பெ­று­கின்­றனர்.

 

அணித் தலை­வ­ராக ஏஞ்­சலோ மெத்­யூஸும் உதவி அணித் தலை­வ­ராக தினேஷ் சந்­தி­மாலும் வழ­மைபோல் பதவி வகிக்­கின்­றனர்.

 

இவர்களைவிட குசுல் ஜனித் பெரேரா, திமுத் கருணாரட்ன, கௌஷால் சில்வா, குசல் மெண்டிஸ் ஆகியோரும் குழாமில் இடம்பெறுகின்றனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18108#sthash.ecYJqWix.dpuf
  • தொடங்கியவர்

5 புதுமுக வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை

 

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாமில் 5 புதுமுக வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Untitasddadled-1.jpg

18 வயதான வேகப்பந்து வீச்சாளர் அசித பெனார்ண்டோ  மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான விஷ்வ பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் துடுப்பாட்ட வரிசையில் ரொஷான் சில்வா மற்றும் சகலதுறை ஆட்டக்காரரான தனஞ்சய டி சில்வா இணைத்தக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இடது கை பந்தவீச்சாளர்  லக்ஷான் சந்தகன்  அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான  இலங்கை டெஸ்ட் குழாமின் முழுவிபரம் 

அஞ்சலோ மெத்தியுஸ் (அணித்தலைவர்) தினேஸ் சந்திமால் (உப தலைவர்) திமுத் கருணாரத்ன, கவுசல் சில்வா, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, ரொஷான் சில்வா, நுவான் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ,அசித் பெர்னாண்டோ, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால்

http://www.virakesari.lk/article/9327

  • தொடங்கியவர்
வோர்ன்–முரளி டெஸ்ட் தொடர் ஆரம்பம்
புதுமுக நால்வர் இணைப்பு
showImageInStory?imageid=286445:tn
 

(எம்.எம். சில்­வெஸ்டர்)

இலங்­கைக்கு கிரிக்கெட் சுற்­றுலா மேற்­கொண்­டுள்ள அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணிக்கும் இல ங்கை கிரிக்கெட் அணிக்கும் இடை­யி­லான முழு­மை­யான கிரிக்கெட் தொடர் நாளை மறு­தினம் காலை 10 மணிக்கு ஆரம்பமாக­வுள்ள வோர்ன் – -முரளி

கிண்ண டெஸ்ட் தொட­ர் நடைபெறவுள்­ளது.

இச் சுற்றுத் தொடரில் 3 டெஸ்ட் போட்­டிகள், 5 சர்­வ­தேச ஒரு நாள் போட்­டிகள், 2 இரு­ப­துக்கு இரு­பது போட்­டிகள் விளை­யா­டப்­ப­ட­வுள்­ளன.

இத்­தொ­டரின் முத­லா­வது டெஸ்ட் போட்டி கண்டி பல்­லே­கலை மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ள­துடன், இரண்­டா­வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி காலி சர்­வ­தேச மைதா­னத்­தி லும், மூன்­றா­வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ். சீ. மைதா­னத்­திலும் ஆரம்­ப­மாகும்.

மேற்­படி வோர்ன் முரளி கிண்ண டெஸ்ட் தொட ரில் பங்­கு­கொள்ளும் இலங்கை கிரிக்கெட் குழா மின் விப­ரத்தை இலங்கை கிரிக்கெட் சபை கடந்த வியா­ழ­னன்று வெளி­யிட்­டது.

இந்த டெஸ்ட் குழாமில் புது­முக வீரர்கள் நான்கு பேர் இணைக்­கப்­பட்­டுள்­ளமை எதிர்­கால இலங்கை கிரிக்­கெட்­டுக்கு முக்­கி­ய­மா­ன­தொன்­றாகும்.

இதில் முதற்­தரப் போட்­டி­களில் எதி­ரணி துடுப்­பாட்ட வீரர்­களை அச்­சு­றுத்தி வரும் இடது கை மித வேகப் பந்­து­வீச்­சாளர் விஷ்வ பெர்­ணான்டோ, மத்­திய வரிசை வலது கை துடுப்­பாட்ட வீர­ரான ரொஷேன் சில்வா, 'சைனமென்' (chinaman) பாணி­யி­லான இட­துகை சுழற் பந்து வீச்­சாளர் லக் ஷான் சந்­தகான் மற்றும் இளம் வேகப்­பந்து வீச்­சா­ள­ரான அசித்த பெர்­னாண்டோ ஆகி­யோரே இக்­கு­ழாமில் இணைக்­கப்­பட்ட புது­முக வீரர்­க­ளாவர். இவர்கள் கிரிக்கெட் வாழ்வில் முதல் தட­வை­யாக இலங்கை டெஸ்ட் அணிக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளமை விஷேட

அம்­ச­மாகும்.

இவர்­க­ளோடு இங்­கி­லாந்து பய­ண­மா­கி­யுள்ள இலங்கை “ஏ” அணியில் பிர­கா­சித்து வரும் இளம்

வீர­ரான தனஞ்­சய டி சில்­வா­வுக்கு மீண்டும் இல ங்கை டெஸ்ட் அணியில் இட­ம­ளிக்­கப்­பட்டுள்ளது.

சக­ல­துறை வீர­ரான இவர் இங்­கி­லாந்து டெஸ்ட்

தொடரில் இணைக்­கப்­பட்­டி­ருப்­பினும், ஒரு டெஸ்ட்

போட்­டியில் கூட விளை­யாட சந்­தர்ப்பம் அளிக்­கப்­ப­ட­வில்லை.

இலங்கை அணியின் முன்­னணி வேகப்­பந்­து வீச்­சா­ளர்­க­ளான தம்­மிக்க பிரசாத், துஷ்­மந்த சமீர ஆகியோர் காயத்தால் அவ­தி­யு­று­வதால் விஷ்வ பெர் ­ணான்டோ மற்றும் அசித்த பெர்­ணான்டோ ஆகிய

இரு­வ­ரும் விளை­யாடும் பதி­னொ­ரு­வரில் இணைக்­கப்­ப­டு­வ­தற்­கான அதிக வாய்ப்­புகள் உள்­ள­தாக கூற ப்­ப­டு­கி­றது.

அத்­துடன், இலங்­கையின் துடுப்­பாட்­டத்­திற்கு உத்­வே­க­மாக அமைவார் என சக­ல­ராலும் கூறப்­ப ட்டு வந்த லஹிரு திரி­மான்ன டெஸ்ட் குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

அண்­மைக்­கா­ல­மாக நடை­பெற்ற டெஸ்ட் போட்­டி­களில் இவரின் துடுப்­பாட்டம் மெச்­சும்­ப­டி­யாக அமை­யா­ததன் கார­ண­மா­கவே இவர் டெஸ்ட் குழா­ மி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டார். இவ­ருக்கு பதி­லாக அண்­மைக்­கா­ல­மாக துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சித்­து­வரும் ரொஷேன் சில்வா இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

விளை­யாடும் பதி­னொ­ரு­வரில் ரொஷேன் சில்­வா ­வுக்கும் தனஞ்­சய டி சில்­வா­வுக்­கு­மி­டையில் கடு­மை ­யான போட்டி நிலவி வரு­கி­றது.

அண்­மைக்­கா­ல­மாக துடுப்­பாட்­டத்தில் பிர­காசிக் கத் தவ­றிய லஹிரு திரி­மான்­ன­வுக்கு இந்தக் குழா மில் இடம் வழங்­கப்­ப­ட­வில்லை. அதனால் இவ­ரு க்குப் பதி­லாக இந்த இடத்தை எந்த வீரர் நிரப்­பு வார் என்ற கேள்வி எழும்­பி­யுள்ள நிலையில் அந்த இடத்­திற்கு ரொஷேன் சில்வா அல்­லது தனஞ்­சய டி சில்வா 6ஆம் இலக்க வீர­ராக கள­மி­றக்­கப்­ப­டலாம் என எதிர்வு கூறப்­ப­டு­கி­றது.

இந்த டெஸ்ட் குழாத்தில் இளம் சகல துறை வீரர்­க­ளான மிலிந்த சிறி­வர்­தன மற்றும் தசுன் சானக்க ஆகி­யோ­ருக்கும் இடம் வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்கை அணியை பொறுத்­த­மட்டில் ரங்கன ஹேரத்­தையே பந்­து­வீச்சில் பெரிதும் நம்­பி­யுள்ளது. இம்­முறை இணைக்­கப்­பட்­டுள்ள குழாத்தில் 38 வய தும் 124 நாட்­க­ளுடன் ரங்­கன ஹேரத்தே வயது கூடி­ய­வ­ரா­க­வுள்ளார். அத்­துடன் இளம் வீர­ராக இணைக்­கப்­பட்­டுள்ள அசித்த பெர்­ணான்டோ தற்போது 19ஆவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். ரங்கன ஹேரத்தைக் காட்­டிலும் அரைப்­பங்கு வயது கூட அசித்த பெர்­ணான்­டோ­வுக்கு இல்லை என்­பது விஷேட விட­ய­மாகும்.

இலங்கை டெஸ்ட் குழாம்

எஞ்­சலோ மெத்­தியூஸ் (தலைவர்), தினேஷ் சந்­திமால் (உப தலைவர்), திமுத் கரு­ணா­ரத்ன, கௌஷால் சில்வா, குசல் மென்டிஸ், தனஞ்­சய டி சில்வா, ரொஷேன் சில்வா, குசல் ஜனித் பெரேரா, நுவன் பிரதீப், விஷ்வ பெர்­னாண்டோ, அசித்த பெர்­னாண்டோ, ரங்­கன ஹேரத், தில்­ருவன் பெரேரா, லக் ஷான் சந்­தகான், சுரங்க லக்மால்

அவுஸ்­தி­ரே­லிய டெஸ்ட் குழாம்

ஸ்டீவ் ஸமித், டேவிட் வோர்னர், அடம் வோக்ஸ், உஸ்மான் கவாஜா, ஷோன் மார்ஷ், மிட்செல் மார்ஷ், மோயீசஸ் ஹென்­ரி­குயிஸ், பீற்றர் நெவில், ஸடீவ் ஓ கீவ், நதன் லியோன், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வூட், அடம் ஸெம்பா, ஜெக்சன் பேர்ட், ஜோ பேர்ன்ஸ், நெதன் கவுல்­டர்நைல்

 

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=19&editionDate=24/07/2016

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
மத்தியூஸே இலக்கு: ஸ்டார்க்
 
25-07-2016 01:20 AM
Comments - 0       Views - 77

article_1469362035-TamimailstcLEAD-1.jpgஇலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், அழுத்தத்துக்கு மத்தியில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், அவரை இலக்கு வைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கை அணியின் தலைவராக மட்டுமன்றி, முக்கியமான துடுப்பாட்ட வீரராகவும் உள்ள மத்தியூஸ், அண்மையில் இடம்பெற்ற இங்கிலாந்துத் தொடரில் சிறப்பாக விளையாடியிருக்கவில்லை என்பதோடு, இலங்கை அணியும் தடுமாறியிருந்தது.

மறுபக்கத்தில், காலில் ஏற்பட்ட உபாதைக்காக சத்திரசிகிச்சையை மேற்கொண்ட பின்னர், டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றவுள்ள மிற்சல் ஸ்டார்க், டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள அவுஸ்திரேலிய அணியைப் போன்று, சிறப்பான தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

"பாருங்கள், அவர் அழுத்தத்தில் இருக்கிறார். இங்கிலாந்துத் தொடரின் பின்னர் அவர் அழுத்தத்தில் இருப்பார். அத்தோடு, அணித்தலைவராக, அந்த அழுத்தம் அவருக்கு இருக்கும், அத்தோடு திறமையை வெளிப்படுத்தவதற்கான அழுத்தமும் இருக்கும். அதை, (எங்களது தலைவர்) ஸ்டீவ் (ஸ்மித்), எங்களுக்காகச் சிறப்பாகச் செய்கிறார்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஸ்டார்க், "அணித்தலைவராக அவர் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுள்ளதோடு, முன்னுக்கிருந்தும் அணியை வழிநடத்தியுள்ளார். ஆகவே, அஞ்சலோ தனது திறமையை வெளிப்படுத்துவதற்கு, நாம் அதிக அழுத்தத்தை வழங்குவோம் என்பதில் சந்தேகமில்லை. டினேஷ் சந்திமாலோடு சேர்த்து, அவர் எங்களுக்கான பெரிய விக்கெட்டாக இருப்பார்" எனத் தெரிவித்தார்.

பந்துவீச்சாளர்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஸ்டார்க், இலங்கையின் பந்துவீச்சாளர்களில் ரங்கன ஹேரத்தே அனுபவம் வாய்ந்தவர் எனவும், அவரை எதிர்கொண்டு, சிறப்பாக விளையாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத் தூண்களாக இருந்த குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, திலகரட்ண டில்ஷான் ஆகியோர் ஓய்வுபெற்றுள்ள நிலையில், இலங்கை அணியின் அனுபவமற்ற தன்மை தொடர்பாகவும் ஸ்டார்க் கருத்துத் தெரிவித்தார்.

"எங்களுக்கெதிரான அணியில், முக்கியமான அந்த மூன்று பெயர்களும் இல்லாமை, மிக அற்புதமானது. துடுப்பாட்ட அணியில் அனுபவமிக்க அந்த வீரர்களின் காரணமாக, கடினமான தருணங்கள் சில ஏற்பட்டன. இலங்கை அணியில் அனுபவரீதியாக, அவர்கள் சிறிது குறைவாகவே உள்ளார்கள் என்பது வெளிப்படையாது" எனத் தெரிவித்த ஸ்டார்க், இவற்றுக்கு மத்தியில், இலங்கையைக் குறைத்து எடைபோட விரும்பவில்லை. "இங்கிலாந்தில் தொடர் தோல்வியொன்றைச் சந்தித்த பின்னர் வருகிறார்கள், ஆனால் அவர்களது சொந்த நிலைமைகளை அவர்கள் சிறப்பாக அறிவார்கள் என்பதோடு, போராட்டமொன்றுக்குத் தயராக இருப்பார்கள்" என்றார் அவர்.

- See more at: http://www.tamilmirror.lk/177824#sthash.OhjRYRfY.dpuf
  • தொடங்கியவர்

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

J

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது.

இதன்படி இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, இன்று கண்டி - பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.

http://tamil.adaderana.lk/news.php?nid=81984

87/5 (28.1 ov)

  • தொடங்கியவர்

34.2 ஓவர்களில் 117 ரன்களுக்குச் சுருண்டது இலங்கை: ஆஸி. ஆதிக்கம்

 

 
இலங்கை டாப் ஆர்டரை வீழ்த்திய ஹேசில்வுட்டை பாராட்டும் ஆஸி.வீரர்கள். | படம்: ஏ.பி.
இலங்கை டாப் ஆர்டரை வீழ்த்திய ஹேசில்வுட்டை பாராட்டும் ஆஸி.வீரர்கள். | படம்: ஏ.பி.

இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட் போட்டி முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியை 117 ரன்களுக்குச் சுருட்டியது.

பல்லகிலேயில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஞ்சேலோ மேத்யூஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். பிட்சில் கொஞ்சம் ஸ்பின், கொஞ்சம் ஸ்விங் அவ்வளவே, ஆனால் இலங்கை பேட்டிங்குக்கு என்ன ஆனது என்ற கேள்வியே எஞ்சுகிறது.

5-வது ஓவரில் திமுத் கருணரத்னே, மிட்செல் ஸ்டார்கின் வேகமான புல் லெந்த் பந்தை காலில் வாங்கி எல்.பி.ஆனார். தேவையில்லாமல் தொடக்கத்திலேயே ஒரு ரிவியூவையும் விரயம் செய்தார்.

மெண்டிஸும், ஹேசில்வுட் பந்து ஒன்று நன்றாக உள்ளே வர பிளிக் செய்ய முயன்று நேராக வாங்கி எல்.பி.ஆனார். ஜே.கே.சில்வா ஒரு மாறுதலுக்காக ஹேசில்வுட்டின் வெளியே சென்ற அவுட் ஸ்விங்கரை தொட்டு வெளியேறினார். இலங்கை 18/3 என்று ஆனது. 15-வது ஓவரில் ஆஸ்திரேலிய அறிமுக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஓ’கீஃப் அருமையாக ஒரு பந்தை நன்றாக டாஸ் செய்து திருப்ப ஏற்கெனவே கமிட் ஆன மேத்யூஸ் எட்ஜ் செய்தார், ஸ்மித் ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தார், மேத்யூஸ் 15 ரன்களில் அவுட் ஆனார்.

சந்திமால் 54 பந்துகள் போராடி 15 ரன்களில் ஓரளவுக்கு செட்டில் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஹேசில்வுட் பந்து ஒன்று லேட்டாக ஸ்விங் ஆக, இவர் டிரைவ் ஆட எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் நெவிலிடம் கேட்ச் ஆனது. உணவு இடைவேளையின் போது 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று இலங்கை தட்டுத்தடுமாறியது.

இடைவேளைக்குப் பிறகு லயன் புகுந்தார், அவர் டி சில்வா (24, 3 பவுண்டரி 1 சிக்சர்), அதே ஓவரில் தில்ருவான் பெரேரா (0) ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தினார்.

பிறகு குசல் பெரேராவை 20 ரன்களில் பவுல்டு செய்தார், நேராக பந்தை ஆடாமல் விட்டு பவுல்டு ஆனார். ரங்கனா ஹெராத், ஸ்டார்க்கின் அதிவேக யார்க்கருகு பிளம்ப் எல்.பி. ஆனார். நுவான் பிரதீப்பை, ஓ கீஃப் வீழ்த்த இலங்கை அணி 35 ஓவர்கள் தாங்காமல் 117 ரன்களுக்குச் சுருண்டது.

ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட், லயன் தலா 3 விக்கெட்டுகளைச் சாய்க்க, ஸ்டார்க், ஓகீஃப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்ஸில் சற்று முன் வரை மழையால் ஆட்டம் நிறுத்தப்படும் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 0-வில் நுவான் பிரதீப் பந்தில் பிளேய்ட் ஆன் ஆனார். ஜோ பர்ன்ஸ், ஹெராத் பந்தில் 3 ரன்களுக்கு பவுல்டு ஆனார்.

ஆனால் அதன் பிறகு உஸ்மான் கவாஜா (25), ஸ்டீவ் ஸ்மித் (28) ஆகியோர் நிலைநிறுத்தி ஆடி வருகின்றனர்.

http://tamil.thehindu.com/sports/342-ஓவர்களில்-117-ரன்களுக்குச்-சுருண்டது-இலங்கை-ஆஸி-ஆதிக்கம்/article8901725.ece?homepage=true

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலிய - இலங்கை முதல் டெஸ்ட்; 54.2 ஓவர்களில் 12 விக்கெட்கள் சரிவு
2016-07-26 20:45:45

அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல்லேகலையில் இன்று  ஆரம்பமாக வோர்ன் - முரளி கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தேநீர் இடைவேளையின் பின்னர் மழையினால் தடைப்பட்டது.

 

18189lanka---australia.jpg

 

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணியின் இன்னிங்ஸ் 34.2 ஓவர்கள் மாத்திரமே தாக்குப்பிடித்தது. இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

 

மிச்செல் ஸ்டார்க் (51 க்கு 2 விக்.), ஜொஷ் ஹேஸ்ல்வூட் (21 க்கு 3 விக்.), ஆகியோரின் வேகப்பந்துவீச்சும் ஸ்டீவ் ஓ’கீவ் (32 க்கு 2 விக்.), நதன் லியொன் (12 க்கு 3 விக்.) ஆகியோரின் சுழல்பந்துவீச்சும் இலங்கையின் துடுப்பாட்ட வரிசையை ஊடுருவிச் சென்றது.

 

மத்தியவரிசையில் தினேஷ் சந்திமால் (15), ஏஞ்சலோ மெத்யூஸ் (15), புதுமுகம் தனஞ்செய டி சில்வா (24), குசல் பெரேரா (20), மற்றொரு புதுமுகம் லக்ஷான் சந்தகான் (19 ஆ.இ) ஆகிய ஐவரே இரட்டை இலக்கங்களைப் பெற்றனர்.

 

மழை காரணமாக இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தபோது அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

உஸ்மான் கவாஜா 25 ஓட்டங்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18189#sthash.yOopXGdi.dpuf
  • தொடங்கியவர்

இலங்கையின் சுழற்பந்தில் சிக்கியது அவுஸ்திரேலியா ;  முதல் இன்னிங்ஸில் 203 ஓட்டங்கள்

 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில்அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 66 ஒட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளை இழந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் வோர்க்கஸ் மாத்திரம் 47 ஒட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் ஏனைய வீரர்கள் சோபிக்காத நிலையில் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஹேரத் மற்றும் அறிமுக வீரராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் சந்தகன் ஆகியோர்  தலா 4 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி விக்கட்டிழப்பின்றி 6 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

http://www.virakesari.lk/article/9473

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிராக பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் ஆஸி. 203 ரன்களுக்குச் சுருண்டது

அறிமுக டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் லக்‌ஷன் சந்தகன். | படம்: ஏ.எஃப்.பி.
அறிமுக டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் லக்‌ஷன் சந்தகன். | படம்: ஏ.எஃப்.பி.

பல்லெகிலே மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்குச் சுருண்டது.

இலங்கை முதல் இன்னிங்ஸில் 117 ரன்களுக்கு நேற்று ஆட்டமிழக்க 66/2 என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று இடது கை விரல் ஸ்பின்னர் ரங்கனா ஹெராத், மற்றும் அறிமுக இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் லக்‌ஷண் சந்தகன் அகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 79.2 ஓவர்களில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆனால் இலங்கை தன் 2-வது இன்னிங்சில் குசல் பெரேரா விக்கெட்டை மிட்செல் ஸ்டார்க்கின் யார்க்கர் லெந்த் பந்துக்கு எல்.பி.முறையில் இழந்து 6 ரன்கள் எடுத்துள்ளது.

உஸ்மான் கவாஜா 25 ரன்களுடனும், ஸ்மித் 28 ரன்களுடனும் 2-ம் நாளில் தொடங்கினர். ஆனால் 30 ரன்கள் மட்டுமே எடுத்த ஸ்மித் மிகவும் முன்னதாகவே தாக்குதல் ஆட்டத்தை ஆட முயற்சி செய்தார், ரங்கனா ஹெராத் நன்றாக பிளைட் செய்த பந்தை இறங்கி வந்து ஆட முயன்று ஸ்டம்ப்டு ஆனார்.

அடுத்த பந்தே வோஜஸ் காலியாகியிருப்பார். ஹெராத் பந்தை முன்னால் நன்றாகக் காலைத் தூக்கிப் போட்டு ஆட நினைக்க பந்து மட்டையின் உள்விளிம்பைக் கடந்து பேடைத் தாக்கியது. கடுமையான முறையீட்டை நடுவர் மறுத்தார். மேத்யூஸ் ரிவியூ செய்தார், ஆனால் லெக் ஸ்டம்பின் வெளிப்பகுதியை தாக்குவதாக ரீப்ளே காட்ட நடுவர் நாட் அவுட் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது, தப்பினார் வோஜஸ்.

உஸ்மான் கவாஜா 26 ரன்களில் ஹெராத்தின் பந்தில் எல்.பி.ஆனார். பந்தை வேகமாக ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியேயிருந்து உள்ளே கொண்டு வந்தார் ஹெராத் பின்னால் நின்று ஆட முடிவெடுத்த கவாஜா கிளீனாக எல்.பி.ஆகி வெளியேறினார்.

மிட்செல் மார்ஷ், பிரதீப் பந்தில் ஒரு எட்ஜ் பவுண்டரியுடன் எண்ணிக்கையைத் தொடங்கினார். பிறகு ஹெராத்தை பின்னால் சென்று கவரில் ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு பிரதீப்பையும் அதே இடத்தில் ஒரு பவுண்டரி விளாசி தாக்குதல் முறையை கடைபிடித்தார். 70/4 என்ற நிலையிலிருந்து மார்ஷ், வோஜஸ் கூட்டணி ஸ்கோரை 130 ரன்களுக்கு உயர்த்தினர். 97 பந்துகளில் அரைசதக் கூட்டணி அமைத்தனர். தில்ருவன் பெரேராவை மார்ஷ் ஒரு கவர் திசையில் விளாச ஆஸ்திரேலியா இலங்கை ஸ்கோரை கடந்தது.

இந்நிலையில்தான் அறிமுக இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் சந்தகன் ஒரு பந்தை ராங் ஒன்னாக வீச மார்ஷ் 31 ரன்களில் பவுல்டு ஆனார். அருமையான பந்தில் டெஸ்ட் முதல் விக்கெட்டை வீழ்த்தியதை அவர் வெகுவாகக் கொண்டாடினார்.

விக்கெட் கீப்பர் நெவில், ஹெராத்தை அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். உணவு இடைவேளைக்குப் பிறகு மிட்செல் ஸ்டார்க், ஓ’கீஃப் ஆகியோரையும் சந்தகன் வீழ்த்தினார். நேதன் லயன் ஸ்வீப் ஷாட்டில் பீட் ஆகி சந்தகனிடம் எல்.பி. ஆக மீண்டும் அதிக பட்ச தனி ஸ்கோரை எட்டிய ஆடம் வோஜஸ் 115 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து 7வது விக்கெட்டாக பிரதீப்பிடம் அவுட் ஆனார். 146/6 என்ற நிலையிலிருந்து ஓ’கீஃப் 23 ரன்களையும், ஸ்டார்க் 11 ரன்களையும், லயன் 17 ரன்களையும் எடுத்துப் பங்களிப்புச் செய்ய இந்தப் பிட்சில் 150 ரன்களூக்குச் சமமான 86 ரன்கள் முன்னிலையை ஆஸ்திரேலியா பெற முடிந்தது.

http://tamil.thehindu.com/sports/இலங்கைக்கு-எதிராக-பெரிய-ஸ்கோரை-எட்ட-முடியாமல்-ஆஸி-203-ரன்களுக்குச்-சுருண்டது/article8907202.ece

  • தொடங்கியவர்

சாதனையுடன் தடம் பதித்த லக்ஷான் சந்தகன் 

 

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கெதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சாதனையுடன் களமிறங்கியுள்ளார் இலங்கை அணியின் இடது கை பந்துவீச்சாளர் லக்ஷான் சந்தகன்.

248281.jpg

1935 ஆம் ஆண்டுஅவுஸ்திரேலிய அணியின் இடது கை பந்தவீச்சாளர் லெஸ்லி ஸ்மித் தனது முதலாவது போட்டியில் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைபற்றியமையே இடது கை பந்துவீச்சாளர் ஒருவர் முதலாவது போட்டியில் பெற்றுக்கொண்ட அதிக விக்கட்டுகளாகும்.

இந்நிலையில் இடது கை பந்துவீச்சாளரான லக்ஷான் சந்தகன் தனது முதலாவது போட்டியில்  58 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/9510

  • தொடங்கியவர்

தனியொரு வீரராக அசத்தும் குசால் மெண்டிஸ் ; கன்னி சதத்தை எட்டினார்

 

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசால் மெண்டிஸ் டெஸ்ட் அரங்கில் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்து துடுப்பெடுத்தாடி வருகிறார். 

248337.3.jpg

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறி வருகின்ற நிலையில் தனியொரு வீரராக குசல் மெண்டிஸ் தற்போது வரை 121 ஓட்டங்களை பெற்று அணியை வலுப்படுத்தி வருகின்றார்.

மறுமுனையில் உப தலைவர் சந்திமல் 24 ஓட்டங்களை பெற்று துடுப்படுத்தாடிவருகின்றார்.

இலங்கை அணி தற்போதுவரை 4 விக்கட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்று 78 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/9521

  • தொடங்கியவர்

குசால் மெண்டிஸ் நிலையான துடுப்பாட்டம் ; இலங்கை 196 ஓட்டங்களால் முன்னிலை  (படங்கள் இணைப்பு)

Published by Pradhap on 2016-07-28 17:57:34

 

சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவின்போது குசால் மெண்டிஸின் நிலையான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 286 ஓட்டங்களுக்கு ஆறு விக்கட்டுகளை இழந்துள்ளது.

248381.jpg

ஆட்டநேர முடிவின்போது ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற குசால் மெண்டிஸ் தனது முதலாவது சதத்தை கடந்து 169 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

248379.jpg

இரண்டாவது நாள் முடிவில் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை இழந்த இலங்கை அணி 3 ஆம் நாள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் கருணாரத்ன ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்த நிலையில் இக்கட்டான நிலையில் இருந்தது.

248377.jpg

இந்நிலையில் அடுத்து களம் நுளைந்த கவுசல் சில்வா 7 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் மெத்தியுஸ் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இலங்கை அணி 86 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்தது.

248373.jpg

அடுத்ததாக களமிறங்கிய சந்திமால் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துடன் அடுத்து வந்த தனஞ்சய டி சில்வா 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

248371.jpg

எவ்வாறாயினும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 169 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

248365.jpg

அவுஸ்திரேலிய அணி சார்பில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் லையோன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இதேவேளை இலங்கை அணி மூன்றாவது நாள் நிறைவில் 196 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

248351.jpg248349.jpg248345.jpg248337.jpg248335.jpg248333.jpg

http://www.virakesari.lk/article/9534

  • தொடங்கியவர்
சிலிர்த்தது இளம் சிங்கம்
 
28-07-2016 04:56 PM
Comments - 0       Views - 161

article_1469715534-TamilsisingLEAD.jpgஇலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் பல்லேகலயில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், பின்னர் மழை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, ஆறு விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் உள்ளது.

ஆறு ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்தபடி இன்றைய மூன்றாவது நாளினை ஆரம்பித்த இலங்கையணி ஆரம்பத்திலேயே மிற்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் திமுத் கருணாரட்னவை இழந்ததோடு, குறிப்பிட்ட நேரத்தில் கௌஷால் சில்வாவின் விக்கெட்டையும் இழந்திருந்தது.

இவ்வாறாக, ஒரு பக்கமாக குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தாலும் இளஞ் சிங்கமான குஷால் மென்டிஸ் நிதானத்துடன் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்த வண்ணம் இருந்தார்.

கௌஷால் சில்வாவோடு 39 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த மென்டிஸ், அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸுடன் 41 ஓட்டங்களை பகிர்ந்ததோடு, உப அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுடன் 117 ஓட்டங்களை பகிரும்போது, தனது கன்னிச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அதன் பின்னர், அறிமுக வீரர் தனஞ்சய டி சில்வாவுடன் 71 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், தற்போது களத்தில், ஆட்டமிழக்காமல் 169 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார். அவர் தனது ஓட்ட எண்ணிக்கையில், 20, நான்கு ஓட்டங்களையும் ஓர் ஆறு ஓட்டத்தையும் பெற்றார். மென்டிஸோடு, தற்போது களத்தில், ஐந்து ஓட்டங்களுடன் டில்ருவான் பெரேரா காணப்படுகின்றார்.

முன்னர் ஆட்டமிழந்தவர்களில், தினேஷ் சந்திமாள் 42, தனஞசய டி சில்வா 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, மிற்செல் ஸ்டார்க், நேதன் லைன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஸ்டீவ் ஓ‌ஃப் கெவி, மிற்செல் மார்ஷ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின் போதும் 77.4 ஓவர்களே வீசப்பட்டிருந்த நிலையில், நாளைய நான்காவது நாள் ஆட்டம், 15 நிமிடங்கள் முன்னதாக காலை 9.45க்கு ஆரம்பமாகவுள்ளது. ஆடுகளமானது குறிப்பிடத்தக்களவு சுழலை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில், நாளை முழுமையாக ஓவர்கள் வீசப்பட்டால், நான்காவது நாளான நாளையுடன் போட்டி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- See more at: http://www.tamilmirror.lk/178162#sthash.Go5HZuAf.dpuf
  • தொடங்கியவர்

குசால் மெண்டிஸின் அதியற்புதமான சதத்தினால் வலுவான நிலையில் இலங்கை: ஆஸி.க்கு தோல்வி நெருக்கடி

 

 
அருமையான சதம் எடுத்து இலங்கையை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்ற குசல் மெண்டிஸ். | படம்: ஏ.பி.
அருமையான சதம் எடுத்து இலங்கையை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்ற குசல் மெண்டிஸ். | படம்: ஏ.பி.

இலங்கை அணி தனது 2-வது இன்னிங்சில் குசால் மெண்டிஸின் அற்புதமான இன்னிங்ஸ் (169*) மூலம் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 196 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது இலங்கை.

சரளமாக பேட் செய்ய முடியாத ஒரு பிட்சில் குசால் மெண்டிஸ் 6/2 என்ற நிலையில் இறங்கி 143 பந்துகளில் சதம் எடுத்து மேன் மேலும் சென்றார். இவரது 169 ரன்கள் இலங்கை மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை வீரர் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்னதாக கொழும்புவில் 1992-ம் ஆண்டு அசங்கா குருசிங்கா என்ற ஒரு அற்புதமான இடது கை பேட்ஸ்மென் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த 139 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.

இவரது ஆட்டத்தினாலும் சந்திமால், டிஎம். டிசில்வா ஆகியோரது உறுதுணை இன்னிங்சும் அதலபாதாளத்தில் இருந்த இலங்கை அணியை வெற்றி வாய்ப்பை நோக்கி உயர்த்தியுள்ளது. 21 வயதேயாகும் குசல் மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் சதத்தின் மூலம் இலங்கையின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகியுள்ளார்.

அதுவும் மற்ற பேட்ஸ்மென்கள் எவரும் அரைசதத்தையே எடுக்க முடியாத நிலையில் 169 ரன்கள், அதுவும் கடினமான பிட்சில், அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, அதுவும் 3-வது இன்னிங்ஸில் கடும் நெருக்கடியில் எடுக்கப்பட்டது என்பது சாதாரண விஷயமல்ல.

நிறைய தருணங்களில் நேர் மட்டையுடன் ஆடிய மெண்டிஸ், சில வேளைகளில் லெக் திசையில் புல், கட் என்று விளாசவும் செய்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்க இடம் கொடுக்கும் போது கட் ஷாட்களும் வந்தன. ஸ்வீப் ஷாட்களும் அருமை. இப்படியான ஒரு சக்தி வாய்ந்த ஸ்லாக் ஸ்வீப்பில் நேதன் லயன் பந்தை சிக்சருக்கு விரட்டித்தான் குசல் மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார். ஆனால் ஒருமுறை ஹேசில்வுட்டுக்கு அவரது பந்து வீச்சில் அவரிடமே கடினமான கேட்ச் வாய்ப்பை கொடுத்தார், 66-ல் இருக்கும் போது நேதன் லயன் ரவுண்ட் த விக்கெட்டில் வீசும் போது கால்காப்பில் வாங்கினார், கடும் முறையீடை நடுவர் மறுக்க ஆஸ்திரேலியா ஏனோ மேல்முறையீடு செய்யாமல் விட்டது. இப்போது அதற்காக நிச்சயம் வருந்துவார்கள்.

போதாக்குறைக்கு 2 ரிவியூவையும் தேவையில்லாமல் வேஸ்ட் செய்தனர் ஆஸ்திரேலியர்கள். ஆஸ்திரேலிய அணியின் புதுவரவு இடது கை ஸ்பின்னர் ஓ கீஃப் காயமடைந்து வெளியேற, ஸ்மித்தின் பந்து வீச்சு தெரிவு சுருங்கிப் போனது, பகுதி நேர வீச்சாளர்களான வார்னர், வோஜஸ் ஆகியோரை பவுலிங் செய்ய அழைக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்.

மேத்யூஸ், இலங்கை ஸ்கோர் 86 ஆக இருந்த போது 4-வது விக்கெட்டாக லயனிடம் வீழ்ந்தார். அதன் பிறகு மெண்டிஸ், சந்திமால் (42) ஆகியோருடன் இணைந்து 117 ரன்கள் சேர்க்கப்பட்டன. பிறகு டி.எம்.டிசில்வா (36) மெண்டிஸ் இணைந்து 71 ரன்கள் சேர்த்தனர்.

ஆட்ட முடிவில் மெண்டிஸ் 20 பவுண்டரி 1 சிக்சருடன் 169 ரன்களுடனும், எம்.டி.கே. பெரேரா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை ஆட்டத்தின் 4-வது நாள். ஆஸ்திரேலியாவுக்கு சோதனையான நாள்.

http://tamil.thehindu.com/sports/குசால்-மெண்டிஸின்-அதியற்புதமான-சதத்தினால்-வலுவான-நிலையில்-இலங்கை-ஆஸிக்கு-தோல்வி-நெருக்கடி/article8912184.ece?homepage=true

  • தொடங்கியவர்

இலங்கை 353 ஓட்டங்கள் - அவுஸ்திரேலியா 268 ஓட்டங்கள் பெறுமா?

இலங்கை 353 ஓட்டங்கள் - அவுஸ்திரேலியா 268 ஓட்டங்கள் பெறுமா?

 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 353 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பாக குஷல் மெண்டிஸ் 176 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன்படி 268 ஓட்டங்களை நோக்கி அவுஸ்திரேலியா களமிறங்கியுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=82122

 

அவுஸ்திரேலிய அணி வெற்றிக்கு 268 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது இலங்கை (படங்கள் இணைப்பு)

Published by Pradhap on 2016-07-29 15:21:00

 

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றியிலக்காக 268 ஒட்டங்களை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

248451.3.jpg

நேற்றைய ஆட்டநேர முடிவின்போது 282 ஒட்டங்ளுக்கு 6 விக்கட்டுகளை இழந்த நிலையில் இன்று ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி 353 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. 

248447.3.jpg

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் 176 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில், ஹேரத் 35 ஒட்டங்களை பெற்றுகொடுத்து ஆட்டமிழந்தார்.

248445.3.jpg

அவுஸ்திரேலிய அணி சார்பில் மிச்சல் ஸ்டார்க் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் தற்போது துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளைக்கு முன்னர் 3 விக்கட்டுகளை இழந்து 83 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற வேண்டுமானால் இன்னும் 7 விக்கட்டுகள் கைவசம் இருக்க 185 ஒட்டங்களை பெற வேண்டும்.

248443.3.jpg

248441.3.jpg

http://www.virakesari.lk/article/9569

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இலங்கை  117 & 353
அவுஸ்திரேலியா  203 & 83/3 (27.0 ov)

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியாவுக்கு 268 ஓட்ட இலக்கு: இலங்கை வெற்றி பெற இன்னும் 7 விக்கெட்கள் தேவை
2016-07-29 18:56:09

அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 7 விக்கெட்களை வீழ்த்த வேண்டியுள்ளது.

 

18271sri-lanka-vs-ausralia.jpg


கண்டி, பல்லேகலையில் நடைபெறும் இப்போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 117 ஓட்டங்களையும் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 203 ஓட்டங்களையும் பெற்றன.


இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 353 ஓட்டங்களைக் குவித்தது. குசல் மெண்டிஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 176 ஓட்டங்களைக் குவித்தார்.
அவுஸ்திரேலிய அணி இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிஸில்  268 ஓட்டங்கள் எனும்இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இன்றைய 4 ஆம் நாள் ஆட்டமுடிவின்போது அவ்வணி 3 விக்கெட் இழப்புக்கு 83 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

ஜோ பேர்ன்ஸ் (29), டேவின் வோர்ணர் (1), உஸ்மான் கவாஜா (18) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் ரங்கன ஹேரத், தில்ருவன் பெரேரா, லக்ஷான் சந்தக்கன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

 

அவுஸ்திரேலிய அணி 185 ஓட்டங்கள் தேவையான நிலையில் இலங்கை அணி 7 விக்கெட்களை வீழ்த்த வேண்டியுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18271#sthash.ZsWA019s.dpuf
  • தொடங்கியவர்

சர்ச்சைகளை தகர்த்து தடம் பதித்தது இலங்கை (படங்கள் இணைப்பு)

Published by Pradhap on 2016-07-30 15:08:38

 

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 106 ஒட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது.

248499.3.jpg

268 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 161 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

ComnGCTWIAE4-fC.jpg

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடத்தில் உள்ள அவுஸ்திரேலிய அணியை சுழல் பந்தவீச்சால் மிரட்டிய இலங்கை அணி இங்கிலாந்துடன் பெற்ற  தொடர் தோல்வியை ஈடுகட்டியுள்ளது.

248505.3.jpg

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

248507.3.jpg

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

86 ஓட்டங்கள் பின்னடைவில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 353 ஓட்டங்களை பெற்றது.

248441.3.jpg

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் சதத்துடன் 176 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

268 ஒட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 161 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவி கொண்டது.

248447.3.jpg

அவுஸ்திரேலிய  அணி சார்பில்  அணித்தலைவர் ஸ்மித்  55 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணி சார்பில் ஹேரத் 5 விக்கட்டுகளையும், சந்தகன் 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

248451.3.jpg

http://www.virakesari.lk/article/9592

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.