Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நானே கடவுள்” ஜக்கி பெண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்.! (காணொளி இணைப்பு )

Featured Replies

“நானே கடவுள்” ஜக்கி பெண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்.!

(காணொளி இணைப்பு )

 

 

ஜக்கி வாசு­தேவ்வின் மாய வலையில் சிக்­கி­யுள்ள எனது இரு மகள்­க­ளையும் மீட்டுத் தாருங்கள் என்று தமிழ்­நாடு வேளாண்மை பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் பேரா­சி­ரி­ய­ரான முனைவர் காமராஜ் கோவை மாவட்ட ஆட்சித் தலை­வ­ரிடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறார்.

கோயம்­புத்தூர் – செம்­மேடு, வெள்­ளி­யங்­கிரி மலை அடி­வா­ரத்தில் ஈஷா யோகா மையம் உள்­ளது. 150 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் விரிந்­துள்ள இந்த மைய­மா­னது, உள்­நிலை மாற்­றத்­திற்­கான சக்தி வாய்ந்த இடம் என்று சொல்­லப்­ப­டு­கி­றது.

இங்கு தியா­ன­லிங்கத் திருக்­கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்­து­ணர்வு மையம், ஈஷா இல்லப் பள்ளி மற்றும் ஈஷா குடி­யி­ருப்­புக்கள் உள்­ளன. ஈஷா அறக்­கட்­ட­ளையை நிறுவி, மதச்சார்­பற்ற, இலாப நோக்கம் இல்­லாத ஒரு பொதுத் தொண்டு நிறு­வ­னத்தை சத்­குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வரு­வ­தாகச் சொல்­லப்­படுகிறது, ஐ.நா.வின் பொரு­ளா­தாரம் மற்றும் சமூ­கப்­பி­ரிவு (ECOSOC) அமைப்பு ஈஷா­விற்கு சிறப்பு ஆலோ­சனை அந்­தஸ்தை வழங்­கி­யி­ருக்­கி­றது.

உலக அளவில் பிர­ப­ல­மாக உள்ள ஈஷா மையத்தின் மீது, தமிழ்­நாடு வேளாண்மை பல்­கலைக் கழ­கத்தில் பேரா­சி­ரி­ய­ராக பணி­பு­ரிந்த முனைவர் காமராஜ் கோவை மாவட்ட ஆட்சித் தலை­வ­ரிடம் அளித்­துள்ள முறைப்­பாட்டில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

எனது மகள்­க­ளான கீதா, லதா இரு­வரும் ஈஷா யோகா மையத்தில் இணைந்­தனர். எம்.டெக். பி.டெக் முடித்து பெரிய நிறு­வ­னங்­களில் பணி புரிந்த இவ்­வி­ரு­வ­ரையும், மூளைச்­ச­லவை செய்து, மொட்­டை­ய­டித்து, சாமி­யா­ராக்கி, நான்தான் கடவுள் எனச் சொல்லி நய­வஞ்­ச­க­மாக ஏமாற்றி விட்டார் ஜக்கி வாசுதேவ். மேலும், எங்­க­ளது சொத்­துக்­களை அப­க­ரிக்கும் நோக்கில், மகள்கள் இரு­வ­ரையும் அடிமை போல நடத்தி வரு­கிறார்.

அமா­வாசை மற்றும் பௌர்­ணமி நாட்­களில் ஊக்க மருந்து கொடுத்து, 30 கி.மீ. தூரம் நடக்க வைத்து கொடு­மைப்­ப­டுத்­து­கிறார். ஈஷா மையத்­துக்கு வரு­ப­வர்­களை கவர்­வ­தற்­காக என் மகள்கள் இரு­வ­ரையும் விற்­ப­னை­யா­ளரைப் போல பயன்­ப­டுத்­து­கிறார். ஈஷா பள்­ளி­களில் படிக்கும் குழந்­தை­க­ளுக்கு நைட்ரஸ் ஆக்­சைட் கொடுப்­பதால், பெற்­றோரை பார்க்கும் போது சிரித்துக் கொண்டே இருக்­கி­றார்கள். இது தொடர்ந்தால், அந்தக் குழந்­தைகள் கோமா நிலைக்குத் தள்­ளப்­ப­டு­வார்கள்

அபா­ய­க­ர­மான இந்தக் கொடு­மை­களைத் தடுத்து, எனது மகள்­களை மீட்டுத் தர வேண்டும் என்று தன் மனை­வி­யுடன் சென்று கோவை மாவட்ட ஆட்சித் தலை­வ­ரிடம் புகார் கொடுத்­தி­ருக்­கிறார் காமராஜ்.

அதே­வேளை காம­ராஜின் மனைவி சத்­ய­ஜோதி மேலும் திடுக்­கிடும் தக­வல்­களை வெளி­யிட்­டுள்ளார்.

அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது, எனது மகள்­களைப் பார்க்க வாரம் ஒரு­முறை ஈஷா யோகா மையத்­துக்குப் போய்க் கொண்­டி­ருந்தேன். என் சின்ன மகள் என்னைப் பார்க்க வரு­வது இல்லை. அவளைப் பொறுத்­த­வ­ரையில் அம்மா, அப்­பா­விடம் கை சோறு இனி சாப்­பிடப் போவ­தில்லை. ஈஷா யோகா மையத்­தி­லேயே செத்­து­விட்டால் மோட்சம் கிடைக்கும் என சொல்­லி­யி­ருப்­பதை நம்­பு­கிறாள். எங்­க­ளிடம் வந்தால் நர­கமாம். நீங்கள் மொட்­டை­ய­டித்­து­விட்டால் அம்மா, அப்பா கல்­யாணம் செய்ய வற்­பு­றுத்­த­மாட்­டார்கள் எனக் கட்­டா­யப்­ப­டுத்தி மொட்­டை­ய­டித்து விட்­டார்கள்.

என் மகள் 40 பவுன் கொண்டு போயி­ருந்தாள். அதை அப்­ப­டியே ஈஷா யோகா மையத்தில் கொடுத்­து­விட்டு சாமி­யார்­க­ளாகி விட்­டார்கள் என் 2 மகள்­களும் ஈஷா யோகா மையத்தில் காலை 7 மணிக்­குள்ளும் இரவு 7 மணிக்­குள்ளும் சாப்­பிட்­டாக வேண்டும். மொட்­டை­ய­டித்­த­வர்­க­ளுக்கு தனியே ஒரு சாப்­பாடு. மற்­ற­வர்­க­ளுக்கு வசிய சாப்­பாடு தனி­யாக கொடுக்­கி­றார்கள்.

ஈஷா என்­கிற யோகா மையமே இருக்கக் கூடாது. ஈஷா யோகா மையத்தில் 5,000 குழந்­தை­க­ளுக்­கான காப்­பகம் உள்­ளது. அந்த 5,000 குழந்­தை­களைக் காப்­பாற்­றி­யாக வேண்டும். என் பிள்­ளை­க­ளை­விட 5,000 குழந்­தை­கள்தான் முக்­கியம். இல்­லை­யெனில் 5,000 குழந்­தை­க­ளுமே நடைப்­பி­ணங்களாக கோமா­வுக்கு போய்­விடும்.

அப்­படி கோமா­வுக்கு போகும் பிள்­ளை­களின் சிறுநீரகங்­களைத் திருடி விற்­கி­றார்கள். அங்கு சிறுநீரகங்­களை திருடி விற்­பனை செய்­வது சர்­வ­சா­தா­ர­ண­மாக நடை­பெ­று­கி­றது. ஈஷா யோகா மையத்தில் பயன்­ப­டுத்­தப்­படும் ஊது­பத்­தியில் போதைப் பொருள் கலந்­தி­ருக்­கி­றது. தலையில் தேய்க்கும் எண்ணெய் உட்­பட அவர்கள் தரும் பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. சிவராத்தி நாளில் 30 கி.மீ. தொலைவுக்கு அலைந்து திரிவதற்காக "ஊக்க மருந்து" தருகிறார்கள். என் மகள்கள் வெளியே வந்துவிட்டால் ஈஷா யோகா மையம் தொடர்பான அனைத்து உண்மைகளும் வந்துவிடும் என்பதால் அவர்களை விட மறுக்கிறது ஈஷா யோகா மையம் என தெரி­வித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/9730

  • தொடங்கியவர்

மொட்டை அடித்து, காவி உடுத்தி... இளம்பெண்களை சிறை வைக்கிறதா ஈஷா யோகா மையம்?

womenissue55011.jpg

"பிரம்மன் என்றால் தெய்வீகம், சார்யா என்றால் பாதை. தெய்வீகப் பாதையில் நடப்பவர்கள்தான் பிரம்மச்சாரிகள். யோக மார்க்கமான துறவறத்தில், முழு உறுதியாக இருக்கும் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் சிஷ்யர்கள், பிரம்மச்சரிய தீட்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த பாதையில் செல்பவர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும்," என அறிவித்து சன்னியாசி முறையை நடத்தி வருகிறது கோவையில் உள்ள ஈஷா யோகா மையம்.

ஆனால், 'தங்களது மகள்களை மூளைச்சலவை செய்து, மொட்டை அடித்து சாமியார்களாக்கி விட்டதாக கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கதறியிருக்கின்றனர் கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதி.  கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் காமராஜ், அவரது மனைவியும். ஈஷா யோகா மையத்தை  மையம் கொண்டு கிளம்பிய இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது இப்போது.

யோகா வகுப்புக்கு வரும் தன்னார்வலர்களை ஆசிரமத்துக்கு அழைத்து, அவர்களை சூழ்நிலையால் ஆக்கிரமித்து, மூளைச்சலவை செய்து சன்னியாசி ஆக்கி,  அவர்களுக்கு மொட்டை போட்டு சாமியார் ஆக்கி விடுவதாக புகார்கள் எழுவது, ஈஷா யோகா மையத்தைப் பொறுத்தவரை புதிதல்ல. காவல்நிலையத்திற்கு செல்லும் புகார்கள் அங்குள்ள குப்பைக் கூடைக்கு சென்றுவிடுவது கடந்தகால நிலைமை. அரிதாவே ஓரிரு புகார்கள் அதிகாரிகள் வரை செல்லும்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் முனைவர் காமராஜ்.  தமிழ்நாடு  வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த இவர், தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி சத்தியஜோதி, மகள்கள் கீதா, லதா ஆகியோருடன் யோகா கற்க ஈஷா மையத்துக்கு சென்றிருக்கிறார். 3 நாள் நடந்த யோகா வகுப்பில் கீதாவும், லதாவும் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.

jakkikamaraj600.jpg

மகள்களுக்கு ஈஷா விரித்ததா வலை?

பின்னர் ஒரு வார வகுப்பு, 10 நாட்கள் வகுப்பு, ஒரு மாத வகுப்பு என ஈஷாவுக்கு தொடர்ச்சியாக சென்ற அந்த பெண்களுக்கு ஒருகட்டத்தில் ஈஷா யோகா மையத்திலேயே பொறுப்புகள் வழங்கப்பட்டன. அங்கேயே தங்கி சேவை செய்து வந்தனர். மாதம் ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். பெற்றோருடன் அவ்வப்போது தொலைபேசியிலும், தேவைப்பட்டால் நேரிலும் தொடர்பில் இருந்தனர்.

ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கீதா, லதா இருவரும் வீட்டிற்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. தொலைபேசியிலும் பேசவில்லை என்பதால் நேரில் சந்திக்க சென்ற காமராஜ்  சத்தியஜோதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மகள்களை பார்க்க அவர்களை ஈஷா யோக மைய நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. பெரிய போராட்டத்திற்குப்பின் மகள்களை பார்த்த காமராஜூம், சத்திய ஜோதியும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றனர். காரணம் மகள்கள் இருவரும் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் சந்நியாசம் பெற்றிருந்தனர். மேலும், 'இனி உங்களை சந்திக்க விரும்பவில்லை' என்றும் கூறி அதிர்ச்சி தந்தனர்.

jakkisathya.jpgதங்களது மகள்களை மூளைச்சலவை செய்து, அடிமை போல் நடத்தி தங்களது சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக காமராஜ்- சத்தியஜோதி தம்பதி பரபரப்பு குற்றச்சாட்டை  ஈஷா மையத்திற்கு எதிராக வைத்துள்ளனர்.

மொட்டைப் போட்டு சாமியாராக்கிட்டாங்க...

இது தொடர்பாக காமராஜ், சத்தியஜோதி ஆகியோரிடம் பேசினோம். " வளர்ற பிள்ளைங்களுக்கு யோகா அவசியம்னு நாங்கதான் அவங்களை ஈஷா யோகா வகுப்புக்கு அழைச்சிட்டுப் போனோம். முதல்ல 3 நாள் வகுப்புல துவங்கி, அடுத்து ஒரு வாரம், 10 நாள்னு தொடர்ச்சியா ஈஷா வகுப்புக்கு போனாங்க. அதுல ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. எம்.டெக் படிச்சிட்டு லண்டனில பெரிய தனியார் நிறுவனம் ஒன்றில் அதிக சம்பளத்தில் வேலை பார்த்து வந்தவர் என் மகள் கீதா. இளைய மகள் லதா பி.டெக் முடிச்சிருந்தா. அந்த நேரத்துல என்னென்னமோ காரணம் சொல்லி, என் இரண்டு பெண்களுக்கும் ஈஷாவிலேயே முக்கிய பொறுப்பு கொடுத்தாங்க.

எங்களுக்கு யோகாவில் ஆர்வம் இருந்ததால ஆரம்பத்தில் அதை நாங்களும் அனுமதிச்சோம். நேரம் கிடைக்கறப்போதெல்லாம் இரண்டு பேரும் வீட்டுக்கு வருவாங்க. வராத சந்தரப்பங்கள்ல நாங்க போய் வருவோம். ஆனால் கடந்த 2 மாதங்களா போன் பண்ணலை; நேர்லயும் வரலை. நேரில் போனபோது மகள்கள் இருவரையும் பார்க்க அனுமதிக்கலை. அதை மீறி சந்திச்சோம். 'சந்நியாசம் வாங்கிட்டோம். இனி எங்களை பார்க்க வராதீங்க'னு எங்களுக்கு எதிராகவே பேச வெச்சிட்டாங்க. அவங்களை வசியம் செய்து இப்படி செய்துட்டாங்க. கல்யாணம் ஆகாம இருக்க ரெண்டு பேருக்கும் மொட்டைப் போட்டு சாமியாராக்கிட்டாங்க.

jakkikamaraj.jpgநான்தான் கடவுள்னு சொல்லியும், மோட்சம் தருவதாகச் சொல்லியும் அவர்களை மூளைச்சலவை செய்து இப்படி பண்ணிட்டார் ஜக்கி வாசுதேவ். இத்தனை வருஷம் எங்க பொண்ணுங்களை மூளைச்சலவை செஞ்சு, அங்கேயே வெச்சுக்கிட்டு, இப்போ எங்களை பாக்க முடியாதபடி பண்ணிட்டாங்க. இதை எங்களால தாங்கிக்க முடியலை. எங்க பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணி, பேரன் பேத்தி எடுத்து வாழணும்னு எங்களுக்கு ஆசை. ஆனால் இப்படி பண்ணிட்டாங்க பாவிங்க” என் கண்ணீர் விட்டனர் காமராஜ்- சத்திய ஜோதி தம்பதி.


“எங்க சொத்துக்களை அபகரிப்பதுதான் அவங்க நோக்கம். அதனாலதான் எங்க குழந்தைகளை அரை போதையில வைச்சு, அடிமை மாதிரி நடத்துறாங்க. அமாவாசை, பவுர்ணமி நாட்கள்ல ஒரு மாதிரி ஊக்க மருந்து கொடுக்கறாங்க. அதை சாப்பிட்ட உடன் 30 கி.மீ. தூரம் வரை நடக்க வைக்கிறாங்க.

எல்லாத்துக்கும் மேல ஈஷாவுக்கு வர்றவங்களை ஈர்க்க, எங்கள் பொண்ணுங்களை விற்பனையாளர் மாதிரி நடத்துறாங்க.
மகள்களை மீட்டுத்தரக்கோரி வடவள்ளி போலீஸ் ஸ்டேசன்ல புகார் தந்தேன். போலீஸ் ஸ்டேஷன்ல அவங்க ராஜாங்கம்தான். எங்க பொண்ணுங்க கிட்ட தனியா பேசக் கூட போலீசும், ஈஷா நிர்வாகமும் அனுமதிக்கலை. ஈஷாவில் உள்ள பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட போதை மருந்துதான். இதனால் பெற்றோர்களை பார்க்கும்போது குழந்தைகள் சிரிச்சுக் கிட்டே இருப்பாங்க. இதனால் கோமா நிலைக்கு கூட குழந்தைங்க போக வாய்ப்பிருக்கு. ஈஷாவில் சிறுநீரக திருட்டும் நடக்கிறது. எங்க பொண்ணுங்க மட்டுமில்லாம இன்னும் நிறைய பெண்கள், குழந்தைங்க அங்கே இருக்காங்க. அவங்களை மீட்கணும். ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுத்து எங்களது மகள்களை மீட்டுத்தரணும்" என்றனர் கண்ணீரைத் துடைத்தபடி.

ஈஷாவில் சந்நியாசம் என்றால்?

"ஈஷாவின் மீது இப்படி பல புகார்கள் வந்திருக்கு. சில புகார்கள் போலீஸ் ஸ்டேஷனோட போய்டும். புகார் கொடுத்த உடன் பொண்ணுங்களை வரச்சொல்வோம். ஈஷா ஆட்களோடதான் வருவாங்க. 'எனக்கு 18 வயசு ஆச்சு. என் விருப்பப்படி தான் சன்னியாசம் எடுத்துகிட்டேன். யாரும் என்னை கட்டாயப்படுத்தலை'னு சொல்வாங்க. சட்டப்படி அதுக்கு மேல நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. அதோட அந்த புகார் முடிஞ்சிடும்," என்றார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

'ஈஷாவில் சந்நியாசம் எடுத்தால் அவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்' என ஈஷா மையத்தை நன்கு அறிந்த சிலரிடம் விசாரித்தோம்.

" ஈஷாவுல சந்நியாசம் எடுக்கிறவங்க முதல்ல குடும்ப தொடர்பை முழுமையா நிறுத்திக்கணும். அவங்களோட கல்விச் சான்றிதழ்கள் முதற்கொண்டு அனைத்து ஆவணங்களும் ஈஷா மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் போயிடும். சம்பந்தப்பட்டவங்க பேர்ல இருக்கிற சொத்து, நகை, பணம் போன்றவை கூட ஈஷாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள்தான் என்னவென்பது தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அரை போதையில்தான் இவர்கள் இருப்பார்கள்," என்றனர் அவர்கள்.

jakkivasudev6002.jpg

'நாங்க யாரையும் கட்டாயப்படுத்தலை'

இது தொடர்பாக ஈஷா மைய நிர்வாகிகளை தொடர்புகொண்டு விளக்கம் கேட்க முயன்றோம். நேரில் சந்திக்க மறுத்தனர். மக்கள் தொடர்பு அலுவலகத்தின் முக்கிய அதிகாரி என்று சொல்லிக்கொண்ட ஒருவரிடம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து தொலைபேசியில் பேசினோம்.

 

" காமராஜின்  மகள்கள் இருவரும் விருப்பப்பட்டேதான் இங்கு வந்தார்கள். எப்போது விரும்பினாலும் அவர்கள் இங்கிருந்து செல்லலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவர்கள் மேஜர் என்பதால் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் 'பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை' என சொல்லிவிட்டார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும். இப்போது விரும்பினால் கூட அவர்கள் இங்கிருந்து செல்லலாம். அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை," என்று சொல்லி நமது அடுத்த கேள்விக்கு வழிகொடுக்காமல் தொடர்பை துண்டித்தார்.


கர்மாக்களை கழிப்பது... துறவறம்!

http://www.vikatan.com/news/tamilnadu/66763-misleading-girls-big-controversy-over-isha-yoga.art

  • தொடங்கியவர்

ஈஷா மையத்தின் சித்ரவதைகள் : முன்னாள் உளவுத்துறை காவலரின் குமுறல்

 

tortured-of-the-isha-yoga-center-former-

சேவா என்கிற பெயரில் குழந்தைகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கி குழந்தைகளை மனரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக உளவுத்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற காவலர் குற்றம்சாட்டி உள்ளார்.

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் இயங்கி வருகின்றது. ஈஷா யோகா மையத்தில் திருமணமாகாத தனது இரு மகள்கள் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் புகார் அளித்திருந்தார்.

தனது இருமகள்களை கட்டாயப்படுத்தி மொட்டையடித்து துறவறம் மேற்கொள்ள வைத்திருப்பதாகவும், அங்குள்ளவர்களுக்கு போதை வஸ்துகள் உட்கொள்ளவைப்பதும், மூளைச்சலவை செய்து சொத்துக்களை எழுதி வாங்குவதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.

இதனையடுத்து, ஈஷா யோகா மையத்தில் பொள்ளாச்சி பகுதியின் ஒருங்கிணைப்பாளராக 8 ஆண்டுகள் பணியாற்றிய செந்தில் என்பவர், அந்த மையத்தின் மீது பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார். யோகா மையத்தினர் கூறுவது முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மதுரை திருப்பாலையம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உளவுத்துறை காவலர் மகேந்திரன் கூறுகையில், ”ஈஷா யோகா மையத்தில் உள்ள சமஸ்கிருத குருகுல பள்ளி குறித்து தொடர்ச்சியாக வந்த செய்திகளால் எனது பிள்ளைகளை அங்கு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது.

இதனையடுத்து எனது மூத்த மகனை 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஈஷா யோகா மையத்தில் செலுத்தி 2012ஆம் ஆண்டு சமஸ்கிருத பள்ளியில் சேர்த்தோம். இதனையடுத்து 2014இல் எனது இளைய மகனை ஏழு இலட்ச ரூபாய் செலுத்தி அவனையும் சேர்த்தோம்.

இந்நிலையில் இரண்டு வருடத்திற்குப் பிறகு ஈஷா யோகா மையத்தில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதில் உங்கள் மகனின் நடவடிக்கை சரியில்லை அதிக கோபம் வருகிறது, படிப்பு ஏறவில்லை உடனடியாக மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள் என்றனர். எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

இதனையடுத்து கேஎம்சிஎச் வைத்தியசாலைக்கு கூட்டிச்சென்றபோது, குழந்தைகள் மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் தரவேண்டும் என்றனர். ஒரு மாதத்திற்கு பிறகு எனது மகனுக்கு கவுன்சிலிங் கொடுத்த மனநல மருத்துவர் உடனடியாக உங்கள் பிள்ளைகளை ஈஷா மையத்தில் இருந்து கூட்டிச் செல்லுங்கள் என்றார்.

என்ன காரணம் என மருத்துவரிடம் கேட்டதற்கு ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார். இதனையடுத்து மதுரைக்குச் சென்று இருவரையும் வேறு பள்ளியில் சேர்த்துவிட்டேன். சிறிது நாட்கள் கழித்தபின் அவர்களாகவே என்னிடம் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சித்ரவதைகள் குறித்து தெரிவித்தனர்.

இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் இலட்சக்கணக்கில் பணமும் பறித்துக்கொண்டு மகன்களையும் கொடுமைப்படுத்திய செயலை ஏற்கமுடியவில்லை. நான் பொலிஸ்; உளவுப்பிரிவில் பணியாற்றி இருப்பதால் அந்த அனுபவத்தோடு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினேன்.

ஈஷா யோகா மையத்தினர் என்னிடம் 9 இலட்சம் ரூபாயை தந்துவிட்டு நடந்த சம்பவங்கள் குறித்து வெளியில் சொல்லக்கூடாது எனக் கடிதம் பெற்று சமரசத்திற்கு வந்தனர். கடந்த பல மாதங்களாக எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் எனது பிள்ளைகள் போல் மற்ற பிள்ளைகளும் பாதிக்கக்கூடாது எனப் பலரிடமும் சொல்லி வந்தேன்.

ஆனால் என்னுடைய பேச்சை யாரும் நம்பவில்லை. தற்போது கடந்த ஒருவாரமாக ஈசா யோகா மையத்தின் முறைகேடுகள் வெளிவந்து கொண்டிருக்கிற செய்திகள் எனக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. ஆகவே, எனது குழந்தைகள் அனுபவித்த வேதனையையும் பதிவு செய்ய வேண்டும். வேறு எந்த குழந்தைகளும் அப்படியான வேதனை அனுபவிக்கக்கூடாது என்கிற நிலையில் இருந்தே மதுரையில் இருந்து சொந்த செலவில் கோவைக்கு வந்துள்ளேன்” என்றார்.

http://www.virakesari.lk/article/9991

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.