Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TVIயின் விற்பனையில் இருந்து 1.6 மில்லியன் டொலர்கள் பொதுமக்களிடமா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TVIயின் விற்பனையில் இருந்து 1.6 மில்லியன் டொலர்கள் பொதுமக்களிடமா ?

 

tvi_television_12001ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம்7ஆம் திகதி தனது உத்தியோகபூர்வஒளிபரப்பை ரொறன்ரோவில்இருந்து ஆரம்பித்து தமிழர்கள்மத்தியில் பொது மக்கள் ஊடகமாகஇதுவரை காலமும் அறியப்பட்ட TVIதொலைக்காட்சி தனிநபர்ஒருவரிடம் விற்பனைசெய்யப்பட்டுள்ளது. இந்தவருடத்தின் ஆகஸ்ட் மாதம் 5ஆம்திகதி தனியார் ஒருவரினால் TVIகொள்வனவு செய்யப்பட்டுஉத்தியோகபூர்வமாககைமாறுகின்றது என்ற செய்திஎத்தனை பேருக்கு ஆச்சரியத்தைஏற்படுமோ தெரியவில்லை.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர்விடுதலையின் பெயரால் கனடாவில் சேகரிக்கப்பட்ட பொதுமக்கள் பணத்தில் பல்வேறு திட்டமிடப்பட்ட முதலீடுகள்மேற்கொள்ளப்பட்டன. வன்னியின் கட்டளையின் கீழான இந்த முதலீடுகளில் வியாபார நிறுவனங்கள், உணவகங்கள்,ஊடகங்கள், கட்டிடங்கள் மற்றும் ஆலயங்களும் அடங்கின. குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு பலமாக இயங்கியகாலகட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஒலி மற்றும் ஒளி ஊடகங்கள் தோற்றுவிக்கப்பட்டு அவற்றின் மூலம் மக்கள்மத்தியில் தாயக விடுதலை குறித்த பிரச்சாரங்கள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன.

இந்தத் திட்ட அட்டவணையில் கனடாவில் முக்கிய முதலீடாக  மூன்று தமிழ் ஊடகங்கள் அமைந்தன. இதில்முதலாவது SCMO தொழில்நுட்பத்தில் இயங்கும் CTR (கனடிய தமிழ் வானொலி). இரண்டாவதாக அறிமுகமானது TVIஎன்ற பெயரிலான தமிழ் தொலைக்காட்சி. இந்த இரண்டு ஊடகங்களின் பலத்துடன் ஒலிபரப்பு அனுமதி பெற்றது CMR (கனடிய பல்கலாச்சார வானொலி). CMR வானொலிக்கான அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான பலத்தை வழங்கியது TVIதொலைக்காட்சி தான் என்பதில் எதிர் கருத்தில்லை.

நமக்கென்றோர் மொழி

நமக்கென்றோர் பண்பாடு

நமக்கென்றோர் தேசம்

நமக்கென்றோர் தொலைக்காட்சி

என்ற அறைகூவலுடன் 2001ஆம் ஆண்டு பொதுமக்களின் ஊடகமாக ஆரம்பமானது TVI  தொலைக்காட்சி. புலம்பெயர்நாடுகளின் ஆரம்பிக்கும் பல்கலாச்சார ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் TVI தொலைக்காட்சியையும் விட்டுவைக்கவில்லை. TVIயின் ஆரம்ப நகர்வுக்கென பொதுமக்கள் பலரும் பொருளாதார ரீதியிலும் சரீர ரீதியிலும்உதவியிருந்தனர். பலரிடமிருந்து கடன் அடிப்படையிலும் பணம் சேகரிக்கப்பட்டது. இவ்வாறு கடன் வழங்கிய எட்டுப்பேருடன் TVIயின் ஒளிபரப்பு அனுமதியைப் பெற காரணியாக இருந்தவரும் இணைக்கப்பட்டு கீழ் குறிப்பிடப்பட்டுள்ளமொத்தம் ஒன்பதுபேர் இந்த  பொது மக்கள்ஊடகத்திற்கு பங்குதாரர்களானார்கள்.

1.மோகன் நடராஜா

2. தாஸ் யுவராஜ்

3. ஸ்ரீகிருஸ்ணன் சுப்ரமணியம்

4. டாக்டர் வடிவேலு சாந்தகுமார்

5. ஞானேஸ்வரன்

6. டாக்டர் கிருபாலினி கிருபாகரன்

7. வைரமுத்து சொர்ணலிங்கம்

8. சிவா சண்முகா

9. திருத்தணி

இவர்களில் எவரும் பணம் கொடுத்து TVI தொலைக்காட்சியில் பங்குகளை கொள்வனவு செய்தவர்கள் இல்லை. மாறாகநம்பிக்கையின் அடிப்படையில் இந்த தொலைக்காட்சி ஊடகத்தை வழிநடத்த தெரிவு செய்யப்பட்டனர். இந்தபங்குதாரர்களுக்கு TVI தொலைக்காட்சியின் நிர்வாக கட்டமைப்பில் நேரடியாக பங்களிப்புக்கள் இருக்கவில்லை. ஆரம்பம்முதல் இன்றுவரை பல்வேறு நிர்வாக மற்றும் ஊழியர்கள் மாற்றத்தை TVI எதிர்கொண்டபோதிலும் பங்குதாரர்களில்மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

2009ஆம் ஆண்டின் பின்னர் இலங்கைத்தீவில் மாத்திரமல்லாது தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் பலமாற்றங்கள் நடந்தேறின. முள்ளிவாய்க்காலின் முடிவானது தாயகத்தில் தனிநாட்டுக்கான விடுதலை குறித்த கனவைதகர்த்தது மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களில் மக்கள் பணத்தில் முதலீடு செய்யப்பட்டு இயங்கிய நிறுவனங்களின்தனிநபர் உரிமை கோரல்கள் ஆரம்பித்தன. இதில் பல சட்டச் சிக்கல்களும் அடக்கம். இதுபோன்ற தனிநபர் உரிமைகோரல்களில் இருந்து தப்பிய ஒரு சில பொதுச் சொத்துக்களில் TVIயும் ஒன்று. தனிநபர் ஒருவரின் பெயரில் இல்லாமல்ஒன்பது பங்குதாரர்களை கொண்டு இயங்கியதால் TVI தனிநபர் உரிமை கோரலில் இருந்து சில காலம் தப்பித்துக்கொண்டது என்பதுதான் உண்மை. ஆனாலும் நிர்வாகிகள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் சமரசநிலைநீடிக்கவில்லை. 2010ஆம் ஆண்டுவரை CMR வானொலியுடன் இணைந்த ஊடகமாக இயங்கிய TVI தனியாகபிரித்தெடுக்கப்பட்டது.


 

இந்த நிலையில் பொருளாதாரம்என்ற மந்திரச் சொல் TVI தொலைக்காட்சியையும்விட்டுவைக்கவில்லை.விளம்பரதாரர்கள் மற்றும்சந்தாக்காரர்களின்எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சிஇதில் கணிசமானது.ஊழியர்களுக்கானகொடுப்பனவுகளில் ஏற்பட்டஇழுபறிகள் பலர் TVIதொலைக்காட்சியை விட்டுவிலகிச் செல்லவும் காரணியாய்இருந்தது. ஒரு காலகட்டத்தில்மின்சாரக் கட்டணம் செலுத்தமுடியாத நிலைக்கும் TVIசென்றுவந்தது. 2009ஆம் ஆண்டுக்கும் பின்னரான களமாற்றங்களும், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களின் பலரதுமனமாற்றமும் TVIக்குள் ஏற்கனவே கடுகளவில் ஆரம்பித்திருந்த உள்ளகப் போரை பூதாகரமாக வெடிக்க வைத்தது.

இருந்தபோதிலும் இந்தத் தொலைக்காட்சி ஒரு மக்கள் சொத்து என்ற எண்ணப்பாட்டில் TVIயை மக்கள் அறக்கட்டளைன்றின்கீழ் இயங்க வைப்பது, சந்தாதாரரை அங்கத்தவர்களாகக் கொண்ட ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகமாற்றுவது போன்ற யோசனைகள் பங்குTVI_1.6_million-dollars1தாரர்களினாலும் நிர்வாகிகளினாலும்விவாதிக்கப்பட்டு இணக்கப்பாடுகள் இல்லாமலும் முடிவுகள் எட்டப்படாமலும்பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கைவிடப்பட்டன.

காலமாற்றத்தில் ஊடக நிலையில் நாளாந்தம் ஏற்படும் மாற்றங்கள் TVIயின்தொடர் இயக்கத்தை சவாலாக்கியது. TVI தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில்மக்கள் மத்தியில் இருந்த தகவல் அறிவதற்கான ஆர்வம் மாற்றம் கண்டுள்ளது.. ‌பல ஆண்டுகாலமாக போரையும் அது சார்ந்த மற்றும் அதனைச் சுற்றியவாழ்வையும் படம்பிடித்து பொதுமக்களின் உணர்வுகளின் உச்சத்தில் ஊடகம்நடத்திய பல ஊடகவியலாளர்கள் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும்போருக்கு பின்னரான களமாற்றத்தை (அல்லது காலமாற்றத்தை) எதிர்கொள்ளத்தெரியவில்லை. தவிரவும், நாளாந்தம் தொடர்பு ஊடகத்தில் ஏற்பட்டுவரும்மாற்றங்களும் இணைய ஊடகங்களின் அன்றாட வளர்ச்சியும்,தென்னிந்தியாவில் இருந்து இலவசமாக எங்கள் வரவேற்பறைவரைஎட்டிப்பார்க்கும் தொலைக்காட்சிகளும் TVI போன்ற பாரம்பரிய ஊடகங்களைஆட்டம் கொள்ளச் செய்தது. தொடரும் சந்தாதாரர்கள் மற்றும்விளம்பரதாரர்களின் வீழ்ச்சியின் எதிரொலியாகவும் TVIயின் இயங்கு நிலைகேள்விக்குறியானது.

சர்வதேச ரீதியில் இயங்கிய தமிழர் (இலங்கை மற்றும் இந்தியா) நிர்வாகத்திலான சில ஊடகங்கள் (மற்றும்நிறுவனங்கள்) TVIயை கொள்வனவு செய்து தம்முடன் இணைத்து செயற்பட வைக்கும் சில முயற்சிகளும் ங்காங்கேநடைபெற்றன. ஆனாலும் இந்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. இவ்வாறான பின்னணியில்தான் TVIதொலைக்காட்சியை தனிநபர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கான நகர்வு மேற்கொள்ளப்பட்டு அது வெற்றியும்கண்டுள்ளது. 1.6 மில்லியன் டொலர்களுக்கு TVI தொலைக்காட்சியை விற்பனை செய்வதற்கு பேச்சுவார்த்தைகள்இடம்பெற்று அதில் இணக்கம் ஏற்பட்டு ஆகஸ்ட் 5ஆம் திகதி இந்த உத்தியோகபூர்வ கைமாற்றம் இடம்பெறுகின்றது. இதுதவிர TVIக்கு எதிராக உள்ள ழக்குக்களை கைவிடுவது மற்றும் நீண்டகாலம் வழங்கப்படவேண்டிய ஊழியர்களின்கொடுப்பனவுகளை வழங்குவதுடன் TVI தாங்கிநிற்கும் கடன்களை வழங்கிமுடிப்பது போன்ற சரத்துக்களும் இந்தகொள்வனவு இணக்கப்பாட்டில் உள்ளன.

இந்த கொள்வனவுக்கு அனுமதி வழங்கும் TVIயின் பங்குதாரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பங்குதாரர்களில் (அல்லதுஅவர்களது பதிலாள் பிரதிநிதிகளில்) நால்வரினால் இந்த கொள்வனவு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்  TVIதனிநபர் ஒருவருக்கு கைமாறுவது உத்தியோகமாகின்றது. இந்த பங்குதாரர்கள் கூட்டத்தில் ஒரு பங்குதாரர்கலந்துகொள்ளவில்லை (சட்டச் சிக்கல்கள் காரணமாக) என்TVI_1.6_million-dollars_2பதும்,இன்னுமொரு பங்குதாரர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லைஎன்பதும் பதிலாள் பிரதிநிதியினால் பங்குதாரர்களின் வாக்குக்கள்செலுத்தப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டியது. இறுதியில்அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் தொழில் அதிபரான ஜெய் ஜெயந்தன்என்பவர் 1.6 மில்லியன் டொலர்களுக்கு TVI தொலைக்காட்சியைகொள்வனவு செய்கின்றார் என்பதுதான் இன்றைய செய்தியாகும். இவர் TVIதொலைக்காட்சியின் அமெரிக்காவிற்கான ஒளிபரப்பு உரிமையை பெறமுன்னர் முனைந்தவர் என்பதும் அதற்காக வழங்கிய முற்பணத்தை கோரிTVI  தொலைக்காட்சிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தவர் என்பதும்கூடுதல் தகவல். இந்தக் கொள்வனவு இணக்கப்பாட்டில் TVIக்கு எதிரானதனது வழக்கை அவர் மீளப்பெற்றுக்கொள்கின்றார்

இந்த விற்பனையின் மூலம் பெறப்படும் 1.6 மில்லியன் டொலர்கள் புதிதாக நிறுவப்படும் பொதுமக்கள் அறக்கட்டளைஒன்றிடம் ஏழு ஆண்டுகால எல்லையில் மாதந்தம் இணக்கம் காணப்பட்டுள்ள தொகை விகிதம் கையளிக்கப்படவுள்ளது.  இந்த நிதியம் நேரடியாக மக்களுக்கு உதவுவதுடன் இலங்கையின் வடக்குக் கிழக்கில் மறுசீரமைப்பு மற்றும்மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுவரும் தொண்டு நிறுவனங்களுக்கும் உறுதுணையாக விளங்கும். திட்டமிட்டபடி TVIதொலைக்காட்சியின் கொள்வனவுக்கான உடன்படிக்கை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் குறிப்பிட்ட நிதியத்தைஅமைப்பதற்கான ஆலோசனை பொதுமக்களிடம் பெறப்படும் என்ற உறுதிப்பாடு இந்த விற்பனையில் ஆர்வம்காட்டியுள்ள (அல்லது ஆதரவு வழங்கியுள்ள) பங்குதாரர்களினால் வழங்கப்படுகின்றது. இந்த விற்பனை மூலம் TVIதொலைக்காட்சியின் சேவையை தடையின்றித் தொடர்வதற்கான வாய்ப்பொன்று ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும்இவர்கள், மக்கள் பொது நிதியம் மூலம் கிடைக்கக்கூடிய உதவி குறித்து மகிழ்வுறுகின்றனர்.

கனடா வாழ் தமிழர் சமூகத்தில் இருந்து தெரிவு செய்யப்படுபவர்கள் பொறுப்பாக இருந்து வழிநடத்தும் வகையில் பொதுநிதியம் அமையும். தமிழர் அமைப்புகளும் இந்த பொது நிதியத்தில் பங்குபற்றலாம். வெளிப்படையான தன்மையில்கனடிய தமிழர்களின் பங்களிப்புடன் இந்த நிதியத்திற்கான அமைப்புமுறை, இயங்கும் தன்மை, யாப்பு முதலியனமுடிசெய்யப்படும் போன்ற விபரங்கள் மாத்திரம் தற்போது பகிரப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் பொதுமக்கள் பணத்திலும் அதிகளவிலான தொண்டர்களின் உழைப்பிலும் ஆரம்பிக்கப்பட்ட ஊடகம்ஒன்று தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இந்த கைமாற்றம்தடுக்கப்படவேண்டும் எனவும் சில பங்குதாரர் களும் முன்னாள் ஊழியர்களும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்தவிற்பனையை இரத்துச் செய்யுமாறு நீதிமன்றம் வரை சென்ற முன்னாள் ஊழியர்கள் அடங்கிய குழுவினரது முயற்சிஒன்று நீதிபதியினால் நிராகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் அண்மையில் நடைபெற்றது.

இருந்தாலும் இன்றைய நிலையில் TVIயின் பெறுமதி 1.6 மில்லியின் டொலர்கள் இல்லை என்பது உட்பட இதில் சிலயதார்த்தங்களை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். இன்றைய மாறிவரும் ஊடக தளத்தில் TVI தொலைக்காட்சியினால்தன்னை தொடர்ந்தும் நிலை நிறுத்த முடியுமா என்ற கேள்வியும் இங்கு அவசியமாகின்றது.

வங்குரோத்து நிலைக்கு தள்ளிச் செல்லும் TVI தொலைக்காட்சி காப்பாற்றப்பட்டுள்ளது என விற்பனைக்கு ஆதரவுதெரிவிக்கும் பங்குதாரர்களும் (அல்லது அவர்களது பிரதிநிதிகளும்) பொதுமக்கள் சொத்தை நிர்வாகிக்கும் பொறுப்பேபாங்குதாரர்களுக்கு உள்ளது மாறாக அதனை தனிநபரிடம் விற்பனை செய்யும் உரிமை எவ்வாறு வந்தது எனமறுதரப்பினரும் (தனிநபர் விற்பனையை எதிர்க்கும்) தமது தரப்பில் நியாயங்களை முன்வைக்கின்றனர்.

இந்த இழுபறிக்கு மத்தியில் மற்றுமொரு விடயம் இங்கு குறிப்பிடப்படவேண்டியுள்ளது. இந்தக் கொள்வனவைமேற்கொள்பவர் CMR வானொலியின் உரிமையாளர் சார்பில் (அல்லது இணைந்து)  இந்தக் கொள்வனவைமேற்கொள்கின்றாரா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை..  இந்தக் கேள்விக்கு நேரடியாக எவரும் பதில் கூறவிரும்பவில்லை என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.  ஆனாலும் CMR நிர்வாகம் TVI தொலைக்காட்சியைதன்னுடன் இணைத்து செயற்படுவதற்கு தன்னை அண்மைக் காலமாக தயார்படுத்திவருவதை உணரமுடிகின்றது.இதுபோன்ற பின்னணியில் அடுத்த சில மாதங்களில் (அல்லது வாரங்களில்) TVI மற்றும்  CMR ஊடகங்கள்  இணைந்தஊடகங்களாக இயங்கினால் அதில் ஆச்சரியப்படுவதற்குமல்ல. மாறாக இது நடைபெறாமல் இருந்தால்தான் அதுஆச்சரியம்.

ஆனாலும் இதில் இன்னுமொரு சிக்கல் உள்ளது. தற்போது அறிவிக்கப்படுவதுபோல் இந்தக் கொள்வனவு மூலம்பெறப்படும் என அறிவிக்கப்படும் 1.6 மில்லியன் டொலர்களைப்  பெறவுள்ள  பொதுமக்கள் அறக்கட்டளை எவ்வாறுஇயங்கும் என்பதில் எந்தவிதமான உறுதிப்பாடுகளும் இல்லை. இது தவிர இந்த 1.6 மில்லியன் டொலர்களை புதிதாகதொலைக்காட்சியை கொள்வனவு செய்பவர்  7 வருடகாலத்தில் முழுவதுமாக கொடுத்து முடிப்பார் என்பதற்கும்வெளிப்படையான  உறுதிப்பாடுகள் இல்லை. இந்த கொள்வனவுத் தொகைக்கு அவர் தனிப்பட்ட நிதி உறுதிப்பாட்டைவழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும் அந்த உறுதிப்பாடு நிறைவேற்றப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்உள்ளது என கேள்வி எழுப்புபவர்களும் உள்ளனர். இவை தவிர வங்குரோத்து நிலைக்கு செல்லும் ஒரு ஊடகத்தைஒருவர் 1.6 மில்லியன் டொலர்களுக்கு ஏன் கொள்வனவு செய்கின்றார் என்ற கேள்வியை எழுப்புவது தவறா?

இந்த குழப்பங்கள் அனைத்திற்கும் யார் பொறுப்பேற்பது என்ற அடிப்படையில் பின்வரும் இரண்டு கேள்விகளை இங்கேஎழுப்பவேண்டும்.

1)   பொதுமக்கள் நிறுவனமாக TVI தொலைக்காட்சியை பாதுகாக்க நியமிக்கப்பட்ட பங்குதாரர்களின் முடிவுகளை கேள்விகேட்கமுடியாத நிலை யாரது தவறு?

2)   TVIக்கு மக்கள் பிரதிநிதிகளாக பங்குதாரர்களை நியமித்தவர்கள் TVI_1.6_million-dollarsதற்போது நிரந்தர மௌனம் காத்துவருவது ஏன்?

இவை தவிர இந்த பொதுமக்கள் அறக்கட்டளைஎன்ற விடயத்தில்தான் பெரும் சிக்கலே உள்ளது.ஏற்கனவே இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம்கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்மநிலையம் – Canadian Tamil Social And Economic Foundation (CTSAEF) என்ற பெயரில் ஒருஅறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டதான அறிவித்தல்வெளியாகி அதில் ஆறு நிறுவனங்கள்இணைந்துகொள்ளும் எனவும் கூறப்பட்டது.ஆனாலும் அன்றைய நிகழ்வின் பின்னர் இந்த தர்மநிலையத்தின் நடவடிக்கைகள் எதுவும் இதுவரைஇருப்பதாக தெரியவில்லை.

இந்த நிலையில் இன்னுமொன்றா (பொதுமக்கள்அறக்கட்டளை)  என மனம் சலித்துக்கொள்வதுஎனக்கு மட்டும்தானா ?

நமக்கென்றோர் மொழி

நமக்கென்றோர் பண்பாடு

நமக்கென்றோர் தேசம்

நமக்கென்றோர் தொலைக்காட்சி

ஆனால் இறுதியில் நமக்கு”?

 

http://ekuruvi.com/tvi-sale-for-1-6-millian/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.