Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடலாசிரியர் நா.முத்துகுமார் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி

Featured Replies

article_1471157037-CpzI0iHVIAELbIs.jpg

வியட்நாம் வீடு சுந்தரம், பஞ்சு அருணாச்சலம், ஜோதிலட்சுமி ஆகிய திரையுலக பிரமுகர்கள் மறைவு அடுத்தடுத்து நடந்ததால் அந்த அதிர்ச்சியில் இன்னும் மீளாத கோலிவூட் திரையுலகினர்களுக்கு இன்று காலை மேலும் ஒரு அதிர்ச்சியாக இளம் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம் அடைந்ததாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமாருக்கு இன்று கடுமையான காய்ச்சல் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் மரணம் அடைந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

41 வயதே ஆன கவிஞர் நா.முத்துகுமார் தங்க மீன்கள் திரைப்படத்துக்காக எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலுக்கும், 'சைவம்' திரைப்படத்துக்காக எழுதிய 'அழகே அழகே எதுவும் அழகே' என்ற பாடலுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/179407/ப-டல-ச-ர-யர-ந-ம-த-த-க-ம-ர-மரணம-த-ர-ய-லக-னர-அத-ர-ச-ச-

  • தொடங்கியவர்

ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே...!- நாமுத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்

இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவு கொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். "மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு" என்று சொன்னவர், "வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு" என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.


தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன். "உன் சொந்த ஊர் எது தம்பி," என்று ஒருமுறை கேட்டேன். "காஞ்சி அண்ணா," என்று சொன்னார். "அண்ணாவே காஞ்சிதான்," என்றேன். கோவையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் என் தலைமையின் கவிதைபாட வந்தார். "சிறந்த வரிகளை அரங்கில் மீட்டு; நீ பிறந்த ஊர் காஞ்சி என்பதைக் காட்டு" என்று அவரை அறிமுகம் செய்தேன். இன்று மரணம் அவர் மெளனத்தையே கவிதையாக்கிவிட்டது. அவர் வாழ்ந்த பெருமையை அவர் பாடிய பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும். நா.முத்துக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், கலை உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மரணத்தின் சபையில் நீதி இல்லை என்பதை மறுபடி உறுதிப்படுத்திக்கொள்கிறேன். -

வைரமுத்து

http://tamil.filmibeat.com/news/vairamuthu-s-tribute-na-muthukkumar-041689.html?utm_source=spikeD&utm_medium=CD&utm_campaign=adgebra

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் மரணமும் அதிர்வுகளும் ஒரே பார்வையில்

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமார்இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 41.சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு முறைவென்றவர் கவிஞர் முத்துக்குமார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் ஜூலை 12, 1975-ம்ஆண்டு பிறந்தவர் நா முத்துக்குமார். காஞ்சிபுரம் பச்சையப்பன்கல்லூரியில் கல்விப் படிப்பை முடித்தவர், ஆரம்பநாட்களிலிருந்தே எழுவதில் நாட்டம் கொண்டார். பிரபலஇயக்குநர் மறைந்த பாலு மகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள்உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான்மூலம் வீரநடை படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.அதன் பிறகு ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்கள் அத்தனைப்பேருடனும் பணியாற்றியவர் நா முத்துக்குமார். இளையராஜா, ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ்குமார்,ஹாரிஸ் ஜெயராஜ் என அத்தனைப் பேருடனும் மிகவும்நட்பாகவும் இணக்கமாகவும் இருந்தவர் நா முத்துக்குமார்.குறிப்பாக யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷுக்கு மிகநெருக்கமான நண்பராகத் திகழ்ந்தார். யுவன் சங்கர் ராஜாஇசையில் தங்க மீன்கள் படத்துக்காக இவர் எழுதிய 'ஆனந்தயாழை மீட்டுகிறாய்... ' பாடலுக்கு முதல் தேசிய விருதினைவென்றார்.

அடுத்து ஜிவி பிரகாஷ் இசையில் சைவம் படத்தில் இடம்பெற்றஅழகே அழகே... பாடலுக்காக இரண்டாவது தேசிய விருதினைவென்றார். தொடர்ந்து பத்தாண்டுகள் தமிழ் சினிமாவின்முதன்மை பாடலாசிரியராகத் திகழ்ந்தார் நா முத்துக்குமார்.சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றவர், அங்கு ஹார்வர்டுபல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கானநிதி திரட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்று தன் பொறுப்பைநிறைவேற்றினார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார்,இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். நா முத்துக்குமாருக்குமனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

முத்துக்குமாரின் தன் நலம்பேணாத்தற்கொலையால் கோபமே: கமல் ஹாஸன் 
 

இன்று மாரடைப்பால் மரணம் அடைந்த கவிஞர் நா.முத்துக்குமார் மீது கோபமே என கமல் ஹாஸன் ட்விட்டரில்தெரிவித்துள்ளார். இரண்டு முறை தேசிய விருது வாங்கியபாடலாசிரியரும், கவிஞருமான நா. முத்துக்குமார் இன்றுமாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார். 41 வயதில்முத்துக்குமார் மரணம் அடைந்துள்ளது திரையுலகினரைபேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மரணம் அடையும் வயதா இது, அதற்குள் உங்களுக்கு என்னஅவசரம் என்று இயக்குனர் பாண்டிராஜ் உள்பட பல திரையுலகபிரபலங்கள் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்
இந்நிலையில் இது குறித்து கமல் ஹாஸன் ட்விட்டரில்கூறியிருப்பதாவது, நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம்பேணாத்தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும் நட்பிற்குநன்றி.

உங்களை மிஸ் பண்ணுகிறேன் என் நண்பரே. நீங்கள் விட்டுச்சென்ற வார்த்தைகளுக்காக நன்றி. நாங்கள் உங்கள்கவிதைகளை ரசிப்பதில் பாதி அளவாவது நீங்கள் வாழ்க்கையைரசித்தீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே...!-நாமுத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்துஇரங்கல்

இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும்எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்கஇயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன்பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர்.அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம்களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த்திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். "மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு" என்றுசொன்னவர், "வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு"என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

 

தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்கவேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்றுஇளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதேஎன்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதேஎன்று வேதனைப்படுகிறேன். "உன் சொந்த ஊர் எது தம்பி,"என்று ஒருமுறை கேட்டேன். "காஞ்சி அண்ணா," என்றுசொன்னார். "அண்ணாவே காஞ்சிதான்," என்றேன். கோவையில்நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் என் தலைமையின்கவிதைபாட வந்தார். "சிறந்த வரிகளை அரங்கில் மீட்டு; நீபிறந்த ஊர் காஞ்சி என்பதைக் காட்டு" என்று அவரை அறிமுகம்செய்தேன். இன்று மரணம் அவர் மெளனத்தையேகவிதையாக்கிவிட்டது. அவர் வாழ்ந்த பெருமையை அவர்பாடிய பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும்.நா.முத்துக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், கலைஉலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறேன். மரணத்தின் சபையில் நீதி இல்லைஎன்பதை மறுபடி உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.

நா. முத்துக்குமார் மரணம் அதிர்ச்சியும், வருத்தமும் தருகிறது..கருணாநிதி இரங்கல்

கவிஞர் நா. முத்துக்குமாரின் மறைவு அதிர்ச்சி தருவதாக திமுகதலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். நா.முத்துக்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கை: திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர்நா.முத்துக்குமார் அவர்கள் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.
 

தமிழ்த் திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரைபதித்த கவிஞர் முத்துக்குமார் "தங்கமீன்கள்" என்றதிரைப்படத்தில் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்"" என்றபாடலுக்காகவும் "சைவம்" திரைப்படத்தில் "அழகே அழகே"என்ற பாடலுக்காகவும் தேசிய விருதுகள் பெற்ற கவிஞர். என்மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட தம்பிநா.முத்துக்குமாரின் மறைவினால் வாடும் அவரதுகுடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

முத்துக்குமார் இறந்ததை நம்பவே முடியவில்லை.. ஜி.விபிரகாஷ்; இதயமே நொறுங்கி விட்டது.. அதர்வா

பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணம் திரையுலகைஉலுக்கிப் போட்டுள்ளது. யாராலும் அவரது மரணத்தை நம்பமுடியவில்லை. முத்துக்குமார் இறந்து விட்டாரா என்றுதான்அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் உள்ளனர். நா. முத்துக்குமாரின்மரணச் செய்தி பரவிய வேகத்தில் அவரது மரணத்திற்குஇரங்கல்கள் குவிந்து வருகின்றன. திரையுலகினர் பலரும்டிவிட்டர், பேஸ்புக்கில் தங்களது சோகத்தையும்,அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அவருடன்பணிபுரிந்த பலரும் அவரது மரணத்தால் பெரும்சோகமாகியுள்ளனர். அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல்உள்ளனர்.

நம்ப முடியவில்லை -ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் நா. முத்துக்குமாருடன் நெருக்கமாக பழகி வந்தவர்.இருவரது கூட்டில் வெளியான பாடல்கள் பல சூப்பர் ஹிட்ஆகியுள்ளன. முத்துக்குமாரின் மறைவு குறித்து பிரகாஷ்வெளியிட்டுள்ள டிவிட்டில், என்னால் நம்ப முடியவில்லை.எனது படங்களில் மட்டும் 200 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.மிகப் பெரிய இழப்பு. அவரது குடும்பத்துக்கு கடவுள்தான் பலம் தரவேண்டும் என்று வேதனை வெளியிட்டுள்ளார்.

அதிர்ச்சியாக இருக்கிறது - நடிகர் பிரசன்னா நடிகர் பிரசன்னாவெளியிட்டுள்ள டிவிட்டில், அதிர்ச்சியாக இருக்கிறது. பெரும்சோகமாக இருக்கிறது. மிக மிக அவசரமான மரமம் இது. அவரைஅத்தனை பேரும் மிஸ் செய்வோம்.

ஷாக்கிங் செய்தி இது...சரத்குமார் நடிகர் சரத்குமார்வெளியிட்டுள்ள செய்தியில் கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா. முத்துக்குமார் நம்முடன்இல்லை என்பது அதிர்ச்சி தருகிறது. ஒரு நல்ல ஆத்மாவை நாம்இழந்துள்ளோம் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

அதிர்ச்சி தருகிறது.. நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நடிகர் கணேஷ்வெங்கட்ராம் வெளியிட்டுள்ள செய்தியில், அதிர்ச்சி தருகிறது.பெரும் வேதனையாக உள்ளது. அவரது குடும்பத்துக்கு எனதுஆழ்ந்த இரங்கல்கள்.

உங்களை மிஸ் பண்ணுவோம்... நடிகர் சதீஷ் நடிகர் சதீஷ்வெளியிட்டுள்ள டிவிட்டில், நா. முத்துக்குமார் சாரின் மரணச்செய்தி பெரும் அதிர்ச்சி தருகிறது. அவரது குடும்பத்துக்கு எனதுஇரங்கல்கள். அவரை அனைவரும் மிஸ் செய்வோம் என்றுகூறியுள்ளார்.

நம்பவே முடியவில்லை.. நடிகர் சித்தார்த் நடிகர் சித்தார்த்வெளியிட்டுள்ள டிவிட்டில், என்னால் நம்பவே முடியவில்லை.சாகும் வயதா இது. கடவுல் அவரது குடும்பத்துக்குப் பலம்தரட்டும். மிகப் பெரிய இழப்பு. மிக மிக சோகமான நாள் இன்றுஎன்று வேதனையை வெளியிட்டுள்ளார்.

மிகப் பெரிய இழப்பு... பாடகி சின்மயி பாடகி சின்மயிவெளியிட்டுள்ள செய்தியில், திரைத்துறைக்கு மிகப் பெரிய மிகமோசமான இழப்பாகும் இது. மிக மிக துரிதமான மரணம் என்றுவேதனை தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய இழப்பு..ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தியில், திரைத்துறைக்குஇன்னொரு மிகப் பெரிய இழப்பு. அவரது மரணச் செய்தி அதிர்ச்சிதருகிறது. என்ன ஒரு திறமையான பாடலாசிரியர் என்றுகூறியுள்ளார்.

 

இதயம் உடைந்து சிதறியது போல உள்ளது... நடிகர் அதர்வாநடிகர் அதர்வா வெளியிட்டுள்ள செய்தியில், இதயமே சுக்குநூறாக நொறுங்குவது போல உள்ளது. நா. முத்துக்குமார் சாரின்மரணத்தை நம்ப முடியவில்லை. அவரது ஆத்மா சாந்திஅடையட்டும். அவரது குடும்பத்துக்கு அனைத்துப் பலமும்கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார் அதர்வா.

அத்தனை பேரையும் அழ வைத்து விட்டுப் போய் விட்டாயேமுத்துக்குமார்! 

மரணம் இயற்கைதான்... ஆனால் முத்துக்குமாரின் மரணத்தைமனம் ஏற்க முடியவில்லை. அழுது புலம்புகிறது. எத்தனையோஇழப்புகளை சந்தித்து விட்ட போதிலும் முத்துக்குமார் இல்லைஎன்ற செய்தி மனதை அழுத்திப் பிசைகிறது. செய்திகேள்விப்பட்ட ஒவ்வொருவரையும் அழ வைத்து விட்டார்முத்துக்குமார். அத்தனை பேரும் பெரும் அதிர்ச்சியில்மூழ்கியுள்ளனர். மொத்தமாக அத்தனை பேரையும் துயரத்தில்ஆழ்த்தியிருக்கிறது முத்துக்குமாரின் மரணம். அத்தனை பேரின்செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர் முத்துக்குமார். இவரதுஎழுத்துகளுக்கு எல்லாத் தரப்பிலும் ரசிகர்கள். வயதுவித்தியாசம் இல்லாமல் ரசித்து மகிழ வைத்தது இவரதுஎழுத்துக்கள்.

எல்லோருக்கும் செல்லப்பிள்ளை எல்லோரிடமும் சிரித்த முகம்.கேட்கும் பாடலை உடனே தருவது. வார்த்தைகளில் ஜாலம்காட்டாமல் உயிர்ப்போடு ஒவ்வொரு வரியையும் எழுதுவது.

சமூகத்திற்காகவும் குரல் கொடுத்த பெரிய மனிதன்சம்பாத்தியத்துக்காக மட்டுமல்லாமல், சமூகஅவலங்களுக்காகவும் தனது தமிழ் மூலம் குரல் கொடுப்பது..நிச்சயம் முத்துக்குமார் மிகப் பெரிய மனிதன்.

தந்தை - மகளின் தேசிய கீதம் ஒவ்வொரு தந்தை - மகளுக்கும்,தேசிய கீதமாகவே மாறிப் போய் விட்டது, இவருக்கு முதல்தேசிய விருதை வாங்கி கொடுத்த ஆனந்த யாழை மீட்டுகிறாய்பாடல்.

மீள முடியாத சோகம் சைவம் படத்தில் 2வது முறையாக இவர்விருது வாங்கியபோது ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும் மகிழ்ந்துகளித்தது. எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்றேதெரியவில்லை.

மீள முடியாத சோகம் சைவம் படத்தில் 2வது முறையாக இவர்விருது வாங்கியபோது ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும் மகிழ்ந்துகளித்தது. எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்றேதெரியவில்லை.

அநியாயமான மரணம் உடல் நிலையை சரியாக பார்த்துக்கொள்ளாமல் இப்படி எல்லோரையும் பரிதவிக்க விட்டு போய்விட்டார் முத்துக்குமார். திரையுலகுக்கு பேரிழப்பு என்றுவெறுமனே சொல்லி விட முடியாது. ஒட்டுமொத்த தமிழுக்கும்இவரது மரணம் மிகப் பெரிய இழப்பு.. காரணம், முத்துக்குமார்நல்ல கவிஞர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. நிச்சயம்அநியாயமான மரணம்... !

போய் வா என் தம்பி.. தமிழ் உள்ளவரை நீ இருப்பாய்.. நா.முத்துக்குமாருக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி

பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணத்திற்கு நாம் தமிழர்கட்சித் தலைவர் சீமான் இரங்கலும், வேதனையும்தெரிவித்துள்ளார். தமிழ் உள்ளவரை, மொழி உள்ளவரைமுத்துக்குமாரும் நிலைத்திருப்பார் என்று அவர் புகழாரம்சூட்டியுள்ளார் சீமான். சீமான் இயக்கிய வீர நடை படம்மூலமாகத்தான் பாடலாசிரியராக தமிழ்த் திரையுலகில்அறிமுகமானார் நா. முத்துக்குமார். அன்று தொடங்கிய அவரதுபாட்டு வரிசை நிற்காமல் தொய்வில்லாமல் தமிழ்நெஞ்சங்களை தாலாட்டி வந்தது. இன்று நின்று போய் விட்டது.முத்துக்குமார் மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்து அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் ஆருயிர்த் தம்பி எனது ஆருயிர் தம்பியும் புகழ்பெற்றதிரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் மறைவுற்றசெய்திகேட்டு ஆழ்ந்த மனத் துயரில் சிக்கித் தவிக்கிறேன். என்தம்பி முத்துக்குமார் தமிழ்த் தேசிய இனத்தின் மாபெரும்இளங்கவி. ஏறத்தாழ 1,500க்கு மேல் எழுதி திரைப்பட பாடல்களைதன் அழகு தமிழால் உயிர்ப்பிக்கச் செய்த மாபெரும்திறமையாளன்.

கவிஞன் மட்டுமல்ல, மிகச் சிறந்த தமிழுணர்வாளன் என் தம்பிநா.முத்துக்குமார் அவர்களின் ஆழ்ந்த மொழி நுட்புலமும், சிறந்தசொல்லாட்சி முறைமைகளும் அரிதிலும், அரிதானவை. அழகுதமிழை அள்ளி எடுத்து இசைமொழியில் அதனைப் பொருத்தும்அவனது திறமையைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன்.அந்த வியப்புதான் என் தம்பி முத்துக்குமாரை நான் இயக்கியவீரநடை' திரைப்படத்தின் பாடலாசிரியராக அறிமுகம்செய்யத்தூண்டியது. வெறும் கவிஞனாக மட்டுமில்லாமல்மிகச்சிறந்த தமிழுணர்வாளனாக தன் இனத்திற்கு நேருகின்றஅநீதிகளைக் கண்டு தன் வார்த்தை சவுக்கினை எடுத்துவிளாசுகிற கலகக்காரனாக என் தம்பி முத்துக்குமார் திகழ்ந்தான்.

தமிழனை தலைநிமிரச் செய்த என் தம்பி அரசியல் களத்தில்நான் முன்னெடுத்த எல்லா முயற்சிகளிலும், அவனது வாழ்த்துஅழகு தமிழ் கவிதையாய் வந்துகொண்டே இருந்தது. தேசியவிருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றுதமிழனின் திறமையை தலைநிமிரச் செய்த என் தம்பி இன்றுமறைந்துபோனது தனிப்பட்ட அளவில், வாழ்நாளில் நான்அடைந்திருக்கிற பெருந்துயர். வார்த்தைகளால் விவரிக்கமுடியாத மாபெரும் இழப்பொன்றை தமிழ்த்தேசிய இனத்தின்படைப்புலகம் இன்று அடைந்திருக்கிறது.

புகழ் வணக்கம் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினரில் ஒருவனாக நின்று துயரில்நானும் பங்கேற்கிறேன். விழிகள் முழுக்க நிரம்பி ததும்பும்கண்ணீர்தாரைகளால் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களுக்குபுகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

என்றென்றும் என் தம்பியின் நினைவுகளுடன் என்றென்றும் என்தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் நினைவுகளோடும், அவன்ஆழ்மனதில் கிளர்ந்து கொண்டிருந்த தமிழின விடுதலை என்கிறகனவுகளோடும், அவன் அண்ணனாகிய நிச்சயம் பயணிப்பேன்என அவனிடத்தில் நான் உறுதிகூறுகிறேன்

போய் வா தம்பி போய் வா என் தம்பி! இம் மொழியுள்ளவரைஉன் கவி இருக்கும். தமிழ் உள்ளவரை நீயிருப்பாய் என்று தனதுஅறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134930/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.