Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

100 நாள் ஆட்சி... 110 காட்சி!

Featured Replies

100 நாள் ஆட்சி... 110 காட்சி!

கவர் ஸ்டோரி

 

அ.தி.மு.க. ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்துவிட்டன. சினிமா பட ரேஞ்சுக்கு 100-வது நாள் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. நூறு நாட்களில் செய்த சாதனைகளைப் பட்டியல்போட்டு பல கோடி ரூபாய் செலவில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்திருக்கிறது. ஆனால், இந்த விளம்பரங்களைத் தாண்டி, வேறுவிதமாக இருக்கிறது யதார்த்தம்.

p2.jpg

100 நாட்களில் நடந்த ‘110’ காட்சிகள் இங்கே.

1.     தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக ஓட்டுக்கு பணம் கொடுக்கும் புகாரில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

2.     ரூ.570 கோடி கன்டெய்னர் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

3.    ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை பதவியேற்றபோது, எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு 12-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது.

4.     சட்டமன்றத்தில் எதிர்க் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு அகர வரிசைப்படி இருக்கைகள் ஒதுக்காமல்போன விவகாரம்.

5.    நான்கு வழக்கறிஞர்கள் சென்னையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

6.    திண்டிவனம் ஊராட்சித் தலைவர் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம்.

7.     ஓசூர் சர்வேயர் குவளைச்செழியன் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு காரில் வைத்து எரிக்கப்பட்டது.

8.     ரூ.43 லட்சம் மதிப்புள்ள மருந்துப் பொருள்களுடன் சென்ற கன்டெய்னர் லாரி, திருவொற்றியூரில் வைத்து துப்பாக்கிமுனையில் கடத்தல்.

9.     ‘746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது பற்றி அரசு எப்போது முடிவெடுக்கப்போகிறது? ஏன் இழுபறி நீடிக்கிறது?’ என உயர் நீதிமன்றம் கண்டனம்.

10.     சென்னை கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சிறார் குற்றவாளிகள் தப்பி ஓட்டம்.

11.    சாதனை ஆட்சி என விளம்பரம் கொடுக்கும் தமிழக அரசு பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

12.    நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் சுவாதி கொலை.

13.    அம்பத்தூரில் கிணற்றில் தள்ளி தாய் கொலைசெய்யப்பட்டது உட்பட ஒரே நாளில் 9 கொலைகள்.

14.     கோவையில் போலீஸ் போல நடித்து, நகைக்கடை அதிபரிடம் 3.90 கோடி ரூபாய் கொள்ளை.

15.     சுதந்திர தின விழாவில் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நகராட்சிகளுக்கு விருது வழங்கல்.

16.    சுவாதி கொலையாளி என குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் பற்றிய சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பதில் போலீஸ் மெத்தனம்.

17.     சட்டசபையில், 79 எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட்.

p2a.jpg

18.     போலீஸ் குவிக்கப்பட்ட கோட்டையில் காவல் துறை மானிய கோரிக்கை.

19.     எதிர்க் கட்சித் தலைவர்கள், ஊடகங்கள் மீது போடப்பட்ட 213 அவதூறு வழக்குகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கண்டனம். ‘பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களை சகித்துக்கொள்ளவேண்டும். எடுத்ததற்கு எல்லாம் அவதூறு வழக்குப்போடுவது, அரசாங்கம் சரியாக செயல்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது’ என சுப்ரீம் கோர்ட் சாட்டை.

20. குறைந்த வருவாய் உள்ள டாஸ்மாக் கடைகள் மட்டும் மூடல்.

21.     போட்டி சட்டசபையை லைவ் செய்ததால், கோட்டையில் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கும் இடம் மாற்றம்.

22. திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி பகுதிகளில் மர்ம காய்ச்சலில் அடுத்தடுத்து மரணங்கள்.

23.     ரயிலில் கொண்டு செல்லப்பட்ட பணம் 5.75 கோடி ரூபாய் கொள்ளை.

24.     மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த பெண், மருத்துவமனை ஊழியர்களால் துரத்தி அடிக்கப்பட்டது.

25. டி.எஸ்.பி. விஷ்ணு ப்ரியா வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம்.

26.     பட்டினப்பாக்கம் நந்தினி திருடனிடம் போராடி உயிரை விட்ட சம்பவம்.

27.     உசிலம்பட்டி ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வான நீதிபதி என்பவரின் வீட்டிலேயே கஞ்சா பறிமுதல்.

28.     மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு.

29.     பட்டினம்பாக்கம் டாஸ்மாக் கடையை மூடக்கோரி 10 நாட்கள் தொடர் போராட்டம். போலீஸ் தடியடி.

30.     லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ-வுக்கு பணம் தர சிறுவன் அஜீத்குமார் பிச்சை எடுத்த கொடுமை.

31. ‘    கட்சித் தலைவர் என்னை அறைந்தார். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என நாடாளுமன்றத்தில் ராஜ்ய சபா எம்.பி-யான சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு.

32.     காஷ்மீர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ராஜ்ய சபா எம்.பி நவநீதகிருஷ்ணன், “காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்” எனப் பாடியது.

33.     பச்சமுத்து கைது விவகாரத்தில் போலீஸ் காட்டிய மெத்தனம். அதற்கு உயர் நீதிமன்றம் வைத்த குட்டு.

34.     குப்பைக் கிடங்கு விவகாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் குப்பைக் கிடங்கு அருகிலேயே குடிசை போட்டுத் தங்கியிருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுரை சொன்னது.

35.     ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞானதேசிகன், அதுல் ஆனந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

36.     சென்னை ராயபுரத்தில் பட்டப் பகலில் 50 லட்சம் ரூபாய் நகை, பணம் கொள்ளை.

37.     வேளச்சேரி சூப்பர் மார்க்கெட்டில் 102 சவரன் நகைக் கொள்ளை.

38.     அண்ணா நகரில் 100 சவரன் நகைக் கொள்ளை.

39.     பாலாறு தடுப்பணையை எதிர்த்து விவசாயி சீனு தற்கொலை.

40.     காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்ற அரசியல் கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு.

p2c.jpg

41.    சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைக்கட்டும் விவகாரத்தில் மெத்தனம்.

42.     கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளச் சேதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்கிற எதிர்க் கட்சிகளின் கோரிக்கை புறக்கணிப்பு.

43.    ‘நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வேலையில் அரசாங்கம் மெத்தனம் காட்டுகிறது. அரசாங்கம் அதை தீவிரமாக கவனத்தில் கொள்ளவில்லை என்றால், அந்த வேலையை நீதிமன்றம் எடுத்துச் செய்யும்’ என நீதிமன்றம் அதிரடி.

44.    அரசு ஊழியர்களுக்கு எதிராக லஞ்சப் புகார் கொடுக்க அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்.

45.    2013-சட்டத்திருத்தத்தின் படி, புதிய வக்பு வாரியங்களை அமைக்காமல் இருந்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்.

46.     சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மெத்தனம் காட்டியதற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்.

47.    மேட்டூரில் அரசு கண் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை செய்துகொண்டவர்களின் கண் பார்வை பறிபோனது.

48.     தனியார் பள்ளிகளில் தடுக்கப்படாத கட்டணக்கொள்ளை.

49.     சென்னை அயனாவரத்தில் போலீஸ் வேன் மோதி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு.

50.     ஓசூரில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற ஏட்டு முனுசாமி கொலை.

51.    யானைகளின் தொடர் மரணத்தில் அரசின் அலட்சியம்.
52.     கணினி ஆசியர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருந்தும் நிரப்பப்படாதது..

53.     மார்பிங் போட்டோ, லஞ்சம் கேட்ட போலீஸ். சேலம் வினுப்பிரியா தற்கொலை.

54.     பட்டப்பகலில், சென்னையில் தொழிலதிபர் திருமாறன் மீது வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி.

55.     மணலியில் 70 பவுன் நகை, லட்சக்கணக்கான ரூபாய் பணம் கொள்ளை.

56.     மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகுந்து வழக்கறிஞர் மீது கொலை முயற்சி.

57. கழிவுகளை அகற்றும் வேலையில், தனியார் ஹோட்டல்களில் 5 பேர் உயிரிழப்பு.

58.    பிளாட்பாரக் குழந்தைகள் காணமல் போன விவகாரத்தில், “பணக்கார வீட்டுக் குழந்தைகள் காணாமல் போனால்தான், போலீஸ் செயல்படுமா?” என நீதிமன்றம் காட்டம்.

59.     போதை சாக்லெட்டுகள் நடமாட்டம் அதிகரிப்பு.

p2b.jpg

60.    ‘நீதித் துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர்’ என     உயர் நீதிமன்றம் விமர்சனம்.

61.     சென்னை சூளைமேட்டில் மது என்ற பெண்ணை கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் 116 சவரன் நகை கொள்ளை.

62.    ‘எழுத்தாளர்களின் உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். மாதொரு பாகன் பிரச்னையில் அரசாங்கம் கடமையில் இருந்து தவறி இருக்கிறது’ என நீதிமன்றம் கண்டனம்.

63.     விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் குளறுபடி.

64.    தாதுமணல் கொள்ளை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இழுத்தடித்தது.

65.    பொது இடங்களில் புகைபிடிப்பதற்குத் தடை செய்துள்ள சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுரை.

66.    ஹெல்மெட் கட்டாயம் உள்ளிட்ட விவகாரங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம்.

67.    நாகப்பட்டினம், சிவகங்கை, அரியலூர் உட்பட பல மாவட்டங்களில் கோயில்களில் முடிவுக்குக் கொண்டுவரப்படாத தீண்டாமைக் கொடுமை.

68.     சென்னை மயிலாப்பூரில் ஒரே நாளில் 3 பெண்களிடம் கொள்ளை.

69. ஆட்டோ ஓட்டுனரையும் அவருடைய மகனையும் அடித்துத் துவைத்த போலீஸ்.

70.    அம்மா கொடுத்த ஐடியாவால்தான் ஹிலாரி போட்டியிடுகிறார் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான ராமு சட்டசபையில் பெருமிதம்.

71.    ஒரு தலைக் காதலால் தீ வைத்து நவீனா மரணம்.

72.     சட்டசபை நிகழ்ச்சிகளை அரசு அதிகாரிகளுக்கு மட்டும் நேரடி ஒளிபரப்பும் விவகாரத்தில் எதிர்ப்பு.

73.     சட்டசபை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கையைப் புறக்கணிப்பு.

74.     ‘வயக்காட்டு பொம்மைகள்’ விவகாரம் சட்டசபையை கொந்தளிக்க வைத்தது.

75.  மணலியில் அ.தி.மு.க கவுன்சிலர் வெட்டிக்கொலை.

76.     திருப்பூரில் பூட்டிய வீட்டில் 92 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை.

77.     திருச்சியில் ஹோட்டல் அதிபர் மனைவி, மருமகளை கட்டிப்போட்டு கொள்ளை.

78.     தஞ்சை சாலியமங்கலத்தில் கலைச்செல்வி, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது.

79.    தேனி மாவட்டத்தில் வனத்துறையினர் பாலியல் துன்புறுத்தல்.

80.     சென்னை தாம்பரத்தில் பெண் டாக்டரின் வீட்டுக்குள் புகுந்து 100 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை.

81.     பட்ஜெட் தாக்கல் முடிந்த பிறகு 110-விதியின் கீழ் துணை பட்ஜெட் போடும் அளவுக்கு திட்டங்கள் அறிவிப்பு.

82.     சேலம் பியூஷ் மனுஷ் சிறையில் தாக்கப்பட்டதாக எழுந்த விவகாரம்.

83.     பிஞ்சுக் குழந்தைக்கு மதுவை ஊட்டப்பட்ட சம்பவம்.

84.     மெடிக்கல் சீட்டுக்காக கோடிக்கணக்கில் மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தலைமறைவாகிய மதனை கண்டுபிடிக்க முடியாதது.

85.     ‘நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்’ என நீதிமன்றம் எச்சரிக்கை.

86.     அமைச்சரவை பதவியேற்று இரண்டு நாட்கள் கழித்து, 4 அமைச்சர்களை நியமித்து நியூமராலஜி கணக்கை நிலைநிறுத்தியது.

87.     திருவான்மியூரில், தொழிலதிபர் ஒருவர் வீட்டில், 150 பவுன் நகை பணம் கொள்ளை.

88.     நந்தனத்தில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் கொள்ளை.

89.    தீண்டாமைக் கொடுமையின் காரணமாக, நாகப்பட்டினத்தில் தலித் மக்கள் மதம் மாறப்போவதாக அறிவிப்பு.

90.     காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகமால் தவறியது.

91.    ‘அண்ணா நூலகத்தை முறையாக தமிழக அரசு பராமரிக்கவில்லை என்றால், அதற்கு நீதிமன்றம் தனியாக ஒரு குழுவை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்’ என சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது.

92.     சேலத்தில் தொழிலதிபர் ராஜ்குமார் உள்பட 4 பேர் கடத்தப்பட்டு, இரண்டு கோடி ரூபாய் கேட்டு மிரட்டப்பட்டனர்.

93.    ‘விதிமுறைகளை மீறி ஃப்ளெக்ஸ் பேனர்கள். அவற்றை அகற்ற தமிழக அரசுக்கு தைரியம் இல்லையா என உயர் நீதிமன்றம் கேள்வி.

94.     ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனராக சிறப்புப் புலனாய்வுக்குழு ஐ.ஜி குணசீலனுக்கு இரண்டாவது முறையாக 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு.

95.    அரசின் பல துறைகளுக்கு செயலாளர்கள் இல்லை.

96.    சட்டசபை நடைபெற்று வரும்போது அமைச்சர் சண்முகநாதன் நீக்கம்.

p2d.jpg

97.     தொடரும் மணல் கொள்ளை.

98.     சென்னையில் நீதிபதி ஸ்ரீஜா சுப்பிரமணியம் வீட்டின் பூட்டை உடைத்து 400 பவுன் தங்க நகைகள் உட்பட ரூ.1 கோடி கொள்ளை.

99.    நெய்வேலி மந்தாரக்குப்பம் நகைக்கடையில் சுரங்கப்பாதை அமைத்து 60 லட்சம் தங்க நகைகள் கொள்ளை.

100. கரூர் பொறியியல் கல்லூரியில் மாணவி சோனாலி கொடூரமாக அடித்துக் கொலை.

101.    தொடரும் நில அபகரிப்பு சம்பவங்கள்.

102.    சென்னை எழும்பூரில் உலகப்புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ரோகிணி கொடூரக்கொலை.

103.    சர்க்கரை ஆலைகள் நிலுவைத்தொகை வழங்கவில்லை என விவசாயிகள் தொடர் போராட்டம்

104.    ஆளும் கட்சிக்கு ஆதரவான அதிகாரிகளுக்கு ஓய்வு பெற்ற பிறகும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

105. சிறையில் இருந்தபடி நடிகை ராதாவை செல்போனில் மிரட்டிய ரவுடி.

106.    பல்கலைக் கழங்கங்கள் பலவற்றில் துணை வேந்தர்கள் இல்லை.

107. திருவண்ணாமலையில், வீட்டுக்குள் ஸ்கேன் சென்டர் வைத்து கருக்கலைப்புகள் செய்த பெண்.

108.    இரண்டரை லட்சம் கோடி கடன். பட்ஜெட்டில் அறிவிப்பு.

109.    மானியக் கோரிக்கைகளில் துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிடாமல், 110 விதியில், முதலமைச்சரே வாசிப்பு.

110. தொடரும் ஏ.டி.எம் கொள்ளைகள்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.