Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பான்கீ மூனின் வருகையும் தொடரும் அடக்குமுறையும்

Featured Replies

showImageInStory?imageid=294546:mr

 

ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் பல­த­ரப்­பி­ன­ரி­ டை­யேயும் பர­ப­ரப்­பையும் பல்­வேறு எதிர்­பார்ப்­புக்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த பின்­ன­ ணியில் பல சம்­ப­வங்கள் நடந்­தே­றி­யுள் ளன.

 மனித உரிமை மீறல்கள், போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் என்­ப­வற்­றிற்குப் பொறுப்பு கூறும் வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அர­சாங்கம் பல ஒப்­பு­தல்­களை அளித்­தி­ருந்­தது.

ஆயினும் உள்­நாட்டில், அத்­த­கைய ஒப்­பு­ தல்­க­ளுக்கு முர­ணான வகையில் பல நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. அத்­துடன் அவற்­றுக்கு நேர் முர­ணான வகையில் அர­சியல் ரீதி­யா­கவும், அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு ரீதி­யா­கவும் சாதா­ரண அர­சி­யல்­வா­திகள் தொடக்கம், அரச தலை­வர்­க­ளான ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர் ஈறாக பல கருத்­துக்­களும் வெளி­யி­டப்­பட்டு வந்­தன. 

இருந்­த­போ­திலும், ஐ.நா. செய­லாளர் நாய­கத்தின் வருகை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட தும், அவ­சர அவ­ச­ர­மாக வடக்கில் காணி விடு­விப்பு மற்றும் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­கான நட­வ­டிக்­கைகள் தொடர்பில் சாத­க­மான கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டன. சில செய ற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்தன. 

இந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­காக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர சுமார் மூன்று தினங்கள் யாழ்ப்­பா­ணத்தில் தங்­கி­யி­ருந்து வலி­காமம் வடக்கில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்கள் தங்­கி­யி­ருந்த சபா­பதி முகாம் உள்­ளிட்ட பல இடங்­க­ளுக்கும் விஜயம் செய்­த­துடன் பல­ரையும் சந்­தித்துப் பேசி­யி­ருந்தார். 

அதே­வேளை, ஐ.நா. செய­லா­ள­ரு­டைய வரு­கை­யா­னது, பல்­வேறு வடி­வங்­களில் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும், நாட்டின் இறை­மைக்­கும்­ கூட பாதிப்பு ஏற்­ப­டுத்தப் போகின்­றது என்ற வகையில் நாட்டின் தென்­ப­கு­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த பிர­சா­ரங்­களில் ஒன்­றாக, சிங்­களத் தீவி­ர ­வாத அமைப்­பா­கிய இரா­வணா பலய அமைப்பைச் சேர்ந்­த­வர்கள் கொழும்பு ஐ.நா. அலு­வ­ல­கத்தின் எதி­ரிலும், கொழு ம்பு கோட்டை ரயில் நிலை­யத்­திற்கு எதி­ரிலும் கொழும்பில் தங்­கி­யி­ருந்த அவரை நாட்­டை­விட்டு வெளி­யே­று­மாறு கோரி ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் தீவிர ஆத­ர­வா­ளர்­க­ளினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த இந்த ஆர்ப்­பாட்­டங்­களில் சிவி­லி­யன்­க­ளுடன் பௌத்த பிக்­கு­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர். விடு­த­லைப்­பு­லி­க­ளினால் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளாகக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த சில­ரது புகைப்­ப­டங்­களைக் கொண்ட சுலோக அட்­டை­களை  அவர்கள் தாங்­க­ியி­ருந்­தனர். அவற்றில் 'யு.என். எங்கே போயி­ருந்தாய்?', 'உனது உதவி எங்­க­ளுக்குத் தேவை­யி ல்லை. திரும்பிப் போ' போன்ற வச­னங்­க ளும் அந்த சுலோக அட்­டை­களில் பொறிக்­கப்­பட்­டி­ருந்­தன. 

இந்தப் பேர­ணியில் கலந்து கொண்­டி­ருந்த பௌத்த குரு­மார்கள் பெரி­ய­வர்­க­ளா­கவும், சற்றே இளை­ய­வர்­க­ளா­கவும், அதே­வேளை, முதிர்ச்சி பெற்ற தோற்­றத்தைக் கொண்­ட­வர்­க­ளா­கவும் காணப்­பட்­டார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் அணிந்­தி­ருந்த காவி உடை அவர்­களின் வய­துக்­கு­ரிய முதிர்ச்சி என்­ப­வற்­றுக்கு அப்பால், குழப்­ப­வா­தி­க­ளாக நடந்து கொண்­டதை, தொலைக்­காட்சி ஊட­கங்கள் காட்­டி­யி­ருந்­தன. அத்­துடன், அர­சியல் நாக­ரிக­மற்ற அவர்­களின்  சிங்­கள இன, மத­வா­தத்தின் உச்­ச­கட்டப் போக்­கையும் அந்தக் காட்­சிகள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன. 

ஏட்­டிக்குப் போட்­டி­யான கவ­ன­யீர்ப்புச் செயற்­பா­டுகள்

அவன்காட் மெரிடைம்ஸ் செகி­யு­ரிட்டி என்ற நிறு­வ­னத்­திற்கு நாட்டின் தென்­மா­காண கடற்­ப­ரப்பில் மிதக்கும் ஆயுதக் களஞ்­சி­யத்தைக் கொண்­டி­ருப்­ப­தற்கு நிய­ம ­விதி முறை­க­ளுக்கு முர­ணான அனு­ம­தி­ய­ளித்­ததன் மூலம் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்த­பாய ராஜ­பக்­ ஷ அர­சாங்­கத்­திற்கு 11.4 பில்­லியன் ரூபா நட்டம் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்டில் அவர் உட்­பட எட்டுப் பேரை செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி விசா­ர­ணைக்­காக ஆஜ­ரா­கு­மாறு கொழும்பு நீதவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. 

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐ.நா. செய­லாளர் நாய­கத்தை மகிழ்ச்­சிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே நீதி­மன்­றத்தின் இந்த அழைப்­பாணை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்று பாராளுமன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில நடத்­திய செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்றில் கூறி­யி­ருக்­கின்றார். 

சின்­னஞ்­சி­றிய நாடா­கிய இலங்­கையின் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்த கோத்தபாய ராஜ­பக்­ ஷவை விசா­ர­ணைக்கு வரு­மாறு உள்ளூர் நீதி­மன்றம் ஒன்று அழைப்­பாணை விடுத்­தி­ருப்­பது, சர்­வ­தேச அமைப்­பா­கிய ஐ.நா. மன்­றத்தின் செய­லாளர் நாய­க­மா­கிய பான் கீ மூனை எந்த வகையில் மகிழ்ச்­சிப்­ப­டுத்தும் என்­பது தெரி­ய­வில்லை. 

அர­சி­ய­லுக்­காக என்­னென்ன வகை­களில் எவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைக்­கலாம் என்ற வரை­யறை எது­வு­மற்ற நிலை­யி­லேயே இன­வாத தீவிரப் போக்­கு­டைய சிங்­கள அர­சி­யல்­வா­திகள் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். 

ஆனால், சாதா­ரண அர­சியல் சிந்­தனை கொண்­ட­வர்­கள்­ கூட தங்­களை அர­சியல் கோமா­ளி­க­ளாகக் கரு­து­வார்­களே என்ற அர­சியல் நாண­மில்­லாத அள­வுக்கு தீவிர இன­வாத அர­சியல் போக்கும், மத ஒடுக்­கு­முறை சார்ந்த செயற்­பாடும் ஐ.நா. செய­லா­ளரின் வரு­கை­யின் ­போது வெளிப்­பட்­டி­ருந்­தது. 

யுத்­தத்தின் பின்னர் முனைப்பு பெற்­றுள்ள பல்­வே­று ­பி­ரச்­சி­னை­களில் ஒன்­றா­கிய காணா­மல் ­போ­யுள்­ள­வர்­களின் பிரச்­சி­னைக்கு நம்­ப­க­மான தீர்வு ஒன்றைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கோரி, அவ­ரு­டைய வரு­கைக்கு முதல் நாளா­கிய காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான சர்­வ­தேச தினத்­தன்று வடக்கு கிழக்குப் பிர­தேங்கள் மட்­டு­மல்­லாமல் கொழும்­பிலும் கூட கவ­ன­யீர்ப்புப் போராட்ட நட­வ­டிக்­கை கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. 

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர் கள் தொடர்பில் பொறுப்புக் கூறு­கின்ற அர­சாங்­கத்தின் பொறி­மு­றையில் சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மாக இடம்­பெற்­றி­ருக்க வேண்டும் என்­பதை இந்தப் போராட்­டங்கள் ஒரே குரலில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தன. அதே­வேளை, ஐ.நா. மன்றம் போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உண்­மை­யான நீதி கிடைப்­ப­தற்கு நிலை­மாறு கால நீதி முன்­னெ­டுப்பில் இணைப்­பங்­கா­ளி­யாக இலங்கை அர­சாங்­கத்­துடன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் ஒன்றைச் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு முக­மாக இந்தப் போராட்­டங்­களில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந் ­தது. 

கன­கரா­யன்­குளம் சம்­பவம் 

இந்த நிலை­யில்தான், வடக்கே வவு­னியா கன­க­ரா­யன்­கு­ளத்தில் ஒரு சம்­பவம் இடம்­பெற்­றி­ருந்­தது. 

கன­க­ரா­யன்­குளம் குறி­சுட்ட குளம் அம்மன் கோவில் வளவில் அமைக்­கப்­பட்­டி­ருந்த புத்தர் சிலை ஒன்று இனம் தெரி­யா­த­வர்­க­ளினால் உடைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தச் சம்­பவம் குறித்து தமிழ் மற்றும் சிங்­கள இணை­ய­த்த­ளங்கள், வானொலி, தொலைக்­காட்சி போன்ற ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யிட்­டி­ருந்­தன. 

ஐ.நா. செய­லாளர் நாயகம் கொழும்பை வந்­த­டைந்த அன்­றைய தினம் அதி­கா­லையில் நடை­பெற்ற இந்தச் சம்­பவம் நாட்டின் தென்­ப­கு­தியில் தீவிர பௌத்த மத­வா­திகள் மத்­தியில் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இருப்­பினும் அவர்கள் வழ­மைக்கு மாறாக மிகுந்த கட்­டுப்­பாட்­டுடன் நடந்து கொண்­டி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.

இந்தச் சிலை உடைக்­கப்­பட்­டதை அறிந்­ததும் உட­ன­டி­யாக சம்­பவ இடத்­திற்கு விரைந்த கன­கரா­யன்­குளம் பொலிஸார் சிலையின் உடைந்த பாகங்­க­ளையும் உடைக்­கப்­ப­டாமல் இருந்த சிறிய புத்தர் சிலை­யையும் பொலிஸ் நிலை­யத்­திற்கு எடுத்துச் சென்­றி­ருந்­தனர். விசா­ர­ணை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டன. 

இந்­தச்­ சம்­பவம் குறித்து வவு­னியா மாவட்ட சிவில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பொறுப்­பான பொலிஸ் அதி­காரி பிய­சிறி பெர்­னாண்­டோவின் ஏற்­பாட்டில், கன­க­ரா­யன்­குளம் பொலிஸ் நிலை­யத்தில் பொறுப்­ப­தி­காரி இன்ஸ்­பெக்டர் ஜயந்த தலை­மையில் அந்த பொலிஸ் நிலை­யத்தில் வவு­னியா தலை­மைப் பொலிஸ் இன்ஸ்­பெக்டர் உள்­ளிட்ட முக்­கிய பொலிஸ் அதி­கா­ரிகள், மாவட்ட சிவில் பாது­காப்பு குழுவின் முக்­கி­யஸ்­தர்கள் கன­க­ரா­யன்­குளம் பிர­தேச ஊர் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் நடத்­தப்­பட்ட ஆலோ­சனைக் கூட்­டத்தில் இந்த சிலை­யு­டைப்பு சம்­பவம் வவு­னி­யா­விலும், நாட்டின் ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் மோச­மான எதிர் விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­ விடக் கூடாது என்­பது குறித்து அச்சம் வெளி­யிட்டு, நிவா­ரண நட­வ­டிக்­கை­யாக கூடிய விரைவில் அங்கு ஒரு சிலையை நிறுவ வேண்டும் என கேட்­டுக் ­கொண்­டனர்.

அந்த ஆலோ­சனை பொலிஸ் தரப்பில் வர­வேற்­கப்­பட்­ட­துடன் அதற்­கான ஏற்­பா­டு­களும் உட­னடி­யாகச் செய்­யப்­பட்­டன. இத­னை­ய­டுத்து, சிங்­கள ஜாதிக பலய என்ற அமைப்பின் செய­லாளர் அறம்­பே­பொல ரத்த­ன­சார தேரரின் தலை­மை­யி­லான குழு­வினர் புதிய புத்தர் சிலையைக் கொண்டு வந்து அதனை பிர­திஷ்டை செய்­தனர்.  

அப்­போது கருத்து வெளி­யிட்ட ரத்­த­ன­சார தேரர் 'புத்தர் சிலை உடைக்­கப்­பட் டமை பற்றி அறிந்­ததும், இந்தப் பிர­தே­சத்தில் உள்ள பௌத்த மதத் தலை­வர்­க­ளு டன் தொடர்பு கொண்டு விசா­ரித்­த­போது, இன­வாத நோக்­கத்­துடன் இங்­குள்­ள­வர்­க­ளினால் இந்த சிலை உடைக்­கப்­ப­ட­வில்லை என்­பதைத் தெரிந்து கொண்டோம்.   இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக சில தீய சக்­திகள் இதனைச் செய்­தி­ருக்­கின்­றன என்­பதை நாங்கள் புரிந்து கொண்டோம். இத­னை­ய­டுத்து,  நேர­டி­யாக இங்கு வந்து, இங்­குள்ள தமிழ் மக்­க­ளு­டைய ஆத­ர­வுடன் அதே இடத்தில் புதிய புத்தர் சிலை­யொன்றை நாங்கள் பிர­திஷ்டை செய்­துள்ளோம். இது ­போன்ற சம்­பவம் இனி­மேலும் இடம்­பெ­றாத வண்ணம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் அதி­கா­ரி­க­ளிடம் கோரி­யி­ருக்­கின்றோம்' எனத் தெரி­வித்தார். 

அதே­நேரம் தனி­யா­னதோர் இடத்தில் பரா­ம­ரிப்­ப­வர்கள் எவ­ரு­மற்ற நிலையில் புத்­த­பெ­ரு­மானின் சிலை­யொன்று வைக்­கப்­பட்­டி­ருந்­தமை குறித்து அவர் அதி­ருப்தி வெளி­யிட்­டி­ருந்தார். அத்­துடன் அந்தச் சிலையை உரிய முறையில் பரா­ம­ரிப்­ப­தற்கு வச­தி­யாக பௌத்த ஆலயம் ஒன்றில் கொண்டு சென்று வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை வவு­னியா அர­சாங்க அதி­ப­ருடன் கலந்து பேசி நட­வ­டிக்கை எடுக்கப் போவ­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார். 

இவ்­வாறு இந்த புத்தர் சிலை உடைப்பு சம்­பவம் சுமு­க­மாகக் கையா­ளப்­பட்­ட­போ­திலும் சில சிங்­களத் தீவிர மத­வா­தி­களும் ஊட­ கங்­களும் மத­வாத கருத்­துக்­களை வெளி­யி­டு­வதை உட­ ன­டி­யாக நிறுத்­திக்­கொள்­ள­வில்லை. 

புத்தர் சிலையின் பின்­னணி 

கண்­டி­யையும் யாழ்ப்­பா­ணத்­தையும் இணைக்­கின்ற பிர­தான வீதி­யா­கிய ஏ9 வீதியின் 216 ஆம் மைல்கல் பகு­தியில் உள்ள குறி­சுட்­ட­குளம் அம்மன் கோவில் வளா­கத்தில் அந்தப் பிர­தே ­சத்து மக்கள் கடும் யுத்த மோதல்கள் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­தி­ருந்த போது, 2008 ஆம் ஆண்­ட­ளவில்  இந்த புத்தர் சிலை படை­யி­னரால் வைக்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அம்மன் கோவில் காணியில் அந்தக் கோவில் கட்­டி­டத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் வளர்ந்­தி­ருந்த ஓர் அரச மரமே இந்த புத்தர் சிலையை வைப்­ப­தற்கு படை­யி­னரைத் தூண்­டி­யி­ருக்க வேண்டும் என நம்­பப்­ப­டு­கின்­றது. 

யுத்த மோதல்கள் 2009 ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, 2010 ஆம் ஆண்டு கன­க­ரா­யன்­கு­ளத்தில் மீள்­கு­டி­யேற்றம் நடை­பெற்ற போது அங்கு வந்த மக்கள் குறி­சுட்ட குளம் அம்மன் கோவி­ல­ருகில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டி­ருப்­பதைக் கண்டு உள்­ளுக்குள் அதிர்ந்து போனார்கள். ஆயினும் அது ­பற்றி அவர்கள் வாய் திறக்­க­வில்லை. ஐம்­பது வருடங்க­ளுக்கு மேல் பழைமை வாய்ந்த அம்மன் கோவிலில் தமது வழ­மை­யான பூஜை வழி­பா­டு­களைச் செய்து வந்­தனர். 

பௌத்த மதத்தின் விசேட தினங்­களில் மாத்­திரம் அந்த புத்தர் சிலைக்கு படை­யினர் மலர்­களை வைத்து விளக்­கேற்­றினர். அதனைத் தவிர வேறு எவரும் அந்த புத்தர் சிலையைக் கவ­னித்­த­தில்லை. ஏ9 வீதியில் போய் வந்­த­வர்­களின் கண்­க­ளுக்கு ஒரு காட்சிப் பொரு­ளாக மாத்­தி­ரமே அந்த புத் தர் சிலை அமைந்­தி­ருந்­தது. இந்தச் சூழ்­நி­லை­யி­லேயே இந்த புத்தர் சிலையை இனந்­தெ­ரி­யா­த­வர்கள் உடைத்­தி­ருக்­கின்­றார்கள். 

இந்தச் சிலை உடைப்பு என்­பது சாதா­ரண ஒரு நிகழ்­வல்ல. ஓர் அர­சியல் நோக்­கத்­திற்­கா­கவே இந்தச் சம்­பவம் நடை­பெற்­றி­ருக்­கின்­றது என்­பது பெரும்­பா­லா­ன­வர்­களின் கருத்­தாக உள்­ளது. 

புத்­த­பெ­ரு­மானைப் பிர­தி­ப­லிக்­கின்ற புத்தர் சிலையை மிகுந்த மரி­யா­தை­யு­டனும் பக்­தி­யு­ட­னுமே தமிழ் மக்கள் நோக்­கு­கின்­றார்கள். ஆயினும் புத்தர் சிலையும் பௌத்த விஹா­ரையும் தமிழ் மக்கள் செறிந்து வாழ்­கின்ற பாரம்­ப­ரிய பிர­தே­சங்­களில் அர­சியல் நோக்­கத்தைக் கொண்ட ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கைக்­கு­ரிய ஆயு­த­மாக – கரு­வி­யாக சிங்­கள பௌத்த மத­வா­தி­க­ளினால் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வது அவர்­களின் மனங்­களில் பெரும் துய­ரத்­தையும் தீராத கவ­லை­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

இதனால், தமிழ் மக்­களின் தாயகப் பிர­தே­ச­மா­கிய வடக்கு கிழக்குப் பிரதே­சங்­களில் புத்தர் சிலையும் பௌத்த விஹா­ரையும் சிங்­க­ள­வர்­க­ளு­டைய ஆக்­கி­ர­மிப்பின் அடை­யா­ளங்­க­ளா­கவே மாறி­யி­ருக்­கின்­றன. அங்­குள்ள மக்கள் இந்த பௌத்த மதச் சின்­னங்­களின் மூலம் தாங்கள் ஒடுக்­கப்­ப­டு­வ­தா­கவும், அடக்­கப்­ப­டு­வ­தா­க­வுமே உணர்­கின்­றார்கள். 

வன்­மு­றைகள் எது­வு­மில்­லாமல் மென்­மை­யாக, வணங்கிப் போற்­றப்­பட வேண்­டிய பௌத்த மதச் சின்­னங்­களை நிறு­வும் ­போது என்ன செய்­வது எவ்­வாறு தங்­க­ளு­டைய எதிர்ப்பைத் தெரி­விப்­பது என்று தெரி­யாமல் அவர்கள் தடு­மாறி த்திகைக்க நேர்ந்­தி­ருக்­கின்­றது. 

புத்தர் சிலையின் ஊடான ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­யா­னது கடந்த 1980 களி­லேயே வவு­னி­யாவில் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. வவு­னியா கச்­சே­ரிக்கு எதிர்ப்­பு­றத்தில் ஏ9 வீதியும் ஹொர­வப்­பத்­தானை வீதியும் சந்­திக்­கின்ற முக்­கிய சந்­தியில் தொல்­பொருள் ஆராய்ச்சி நிலைய அலு­வ­லகம் ஒன்றைத் திறந்த ஆட்­சி­யா­ளர்கள், அங்கு புத்தர் சிலை­யொன்றை நிறு­வி­யி­ருந்­தார்கள். இந்த நட­வ­டிக்கை அப்­போது வவு­னியா வாழ் மக்­களின் முழு­மை­யான எதிர்ப்பைச் சம்­பா­தித்தி­ருந்­தது. 

வவு­னியா மாவட்­டத்தில் பழங்­கா­லத்து கட்­டி­டங்கள் தென்­பட்ட தமிழ் மக்கள் பாரம்­ப­ரி­ய­மாக வசித்து வந்த கிரா­மப்­பு­றங்­களில் தொல்­பொருள் ஆய்வு நடத்­து­வ­தாகக் கூறி பழைமை வாய்ந்த பௌத்த மதச் சின்­னங்­க­ளையும் புத்தர் சிலை­க­ளையும் கண்­டெ­டுத்துக் கொண்டு வந்து வைப்­ப­தற்­கான காட்சிக் கூட­மா­கவும் அலு­வ­ல­க­மா­கவும் இந்த நிலையம் அமைக்­கப்­பட்­டது. 

பான் கீ மூன்....

அப்­போது திடீ­ரென ஒரு நாள் காலை அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்த சிலையைக் காண­வில்லை. இனந்­தெ­ரி­யா­த­வர்கள் யாரோ அதனை வேரோடு அகற்றி எடுத்துச் சென்­றி­ருந்­தார்கள். இந்தச் சம்­பவம் வவு­னியா நக­ரிலும் மாவட்­டத்­திலும் பெரும் பதற்றத்தையும் பேரச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. உட­ன­டி­யாகச் செயற்­பட்ட அதி­கா­ரிகள் அவ்விடத்தில் முன்னர் இருந்­த­திலும் பார்க்க பெரி­ய­தொரு புத்தர் சிலையைக் கொண்டு வந்து நிறுவி, அதற்கு பொலிஸ் பாது­காப்பும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அந்தச் சிலை இப்­போதும் அவி­டத்தில் காணப்­ப­டு­கின்­றது. 

அடக்­கு­மு­றை­களின் போக்கு 

புத்த மதத்­தையும், புத்தர் சிலை மற்றும் பௌத்த விஹா­ரை­களை தமிழ் மக்கள் எதிர்ப்­ப­வர்­க­ளாக இருந்­தி­ருந்தால், யுத்த மோதல்கள் இடம்­பெற்ற போது, வவு­னியா, கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம், யாழ் தீவ­கப்­ப­கு­திகள் என்­பன விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்த காலத்தில் அந்தப் பிர­தே­சங்­களில் காணப்­பட்ட புத்தர் சிலை­க­ளையும் பௌத்த விஹா­ரை­க­ளையும் முற்­றாக அழித்­தொ­ழித்­தி­ருப்­பார்கள். 

ஆனால் அவ்­வாறு எந்த ஒரு சம்­ப­வமும் நடை­பெ­ற­வில்லை. மாறாக கிளி­நொச்­சியில் உள்ள பௌத்த விஹா­ரையில் பௌத்த பிக்கு ஒருவர் விடு­த­லைப்­பு­லி­களின் காலத்தில் பாது­காப்­பாக வாழ்ந்து வந்­துள்ளார். பௌத்த விஹா­ரைக்கும் எந்­த­வி­த­மான தீங்கும் இடம்­பெ­ற­வில்லை. 

தமிழ் மக்கள் பிற மதங்­களை மதித்து நடப்­ப­வர்­க­ளா­கவே இருந்து வந்­துள்­ளார்கள். இதனால் தமிழ் மக்கள் மத வன்­மு­றை­களில் ஈடு­பட்­ட­தாக வர­லாற்றில் பதி­வுகள் இடம்­பெ­ற­வில்லை. ஆனால் பௌத்த மத­வா­திகள் எவ்­வ­ள­வுக்கு எவ்­வ­ளவு ஏனைய மதச் சின்­னங்­க­ளையும் ஏனைய மதங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளையும் மத ரீதி­யாக ஒடுக்க முடி­யுமோ அந்த அள­வுக்கு அடக்கி ஒடுக்கி வந்­துள்­ளார்கள். வன்­மு­றை­களில் ஈடு­பட்டு வந்­துள்­ளார்கள். 

இதனை வர­லாறு பதிவு  செய்­தி­ருக்­கின்­றது. 

இலங்­கையில் மத சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றை­களைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள ஐநாவின் இன மத ஒடுக்கு முறைக்கு எதி­ரான குழு அத்­த­கைய ஒடுக்­கு­முறைச் சம்பவங்கள் பாரதூரமான குற்றச் செயல்களாக புதிய அரசியலமைப்பில் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கோரியிருக்கின்றது. 

இன மத ரீதியான ஒடுக்கு முறைக்கு எதிரான ஐநாவின் சாசனங்களில் கூறப்பட்டுள்ளவற்றை  ஏற்றுக் கொண்டுள்ளவாறு  அதற்குரிய சட்டங்களை நிறைவேற்றி அவற்றை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத் திருக்கின்றது. 

பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்காத இடங்களில் பௌத்த மதச் சின்னங்களையும் வழிபாட்டு இடங்களையும் நிறுவுவதென்பது மத ரீதியான ஒடுக்குமுறைச் செயற்பாடாகவே நோக்கப்படுகின்றது. 

இது மென்போக்கிலான அரசியல் வன்முறையாகவே கருதப்படுகின்றது. அடக்குமுறையில் ஈடுபடுபவர்களுக்கு இது மிகவும் வசதியானதொரு அடக்குமுறை உத்தியாகக்  கைக்கொள்ளப்படுகின்றது. இத்தகைய மத ஒடுக்குமுறை நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற இடங்களில் எதிர்வினையாக இடம்பெறுகின்ற சிலை உடைப்புச் சம்பவங்களைத் தவிர்க்க முடியாது என்பதே அவதானிகளின் கருத்தாகும். 

மத ரீதியான அடக்குமுறைக்கு ஆளாகுபவர்கள் சட்ட ரீதியான நிவாரணங்களையும் நீதியையும் பெற்றுக் கொள்வதற்கு சட்டத்தில் வழிவகை செய்யப்படுவதுடன், அவை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஐநா வலியுறுத்தியிருக்கின்றது. 

இன மத ரீதியான அடக்குமுறைச் செயற்பாடுகள் குறித்து ஐநாவின் இன மத ஒடுக்குமுறைக்கு எதிரான குழு இலங்கை அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ள ஒரு சந்தர்ப்பத்திலேயே வெளிப்படையான அடக்குமுறை சார்ந்த சம்பவங்கள் ஐநாவின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போது இடம்பெற்றிருக்கின்றன. 

இந்த நிலைமை இலங்கை அரசாங்கத்திற்கும் நாட்டின் பெரும்பான்மை இன மக்களுக்கும் அரசியல் ரீதியாவும் மனித உரிமைச் செயற்பாட்டு ரீதியிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதற்கே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=03/09/2016

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.