Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்மாவட்ட அரசாங்க அதிபருக்கு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கடிதம்!

Featured Replies

யாழ்மாவட்ட அரசாங்க அதிபருக்கு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கடிதம்!

நீதியரசர் க. வி விக்னேஸ்வரன்
முதலமைச்சர் – வடமாகாணம்
எனது இல NP/ CM/Res/0601/2016

திகதி : 06. 09. 2016

என். வேதநாயகன் அவர்கட்கு
அரச அதிபர்
யாழ் மாவட்டம்
யாழ்ப்பாணம்

அன்புள்ள அரச அதிபருக்கு,
இராணுவத்தினால் கையகப்படுத்தப்படும் காணிகளுக்கு கவர்ச்சிகரமான இழப்பீடுகள்.
நீங்கள், உள்ளக இடப்பெயர்வாளர் ஒருவருக்கு அனுப்பியிருந்த கடிதத்தைக் கண்டேன். உண்மையைச் சொல்லப் போனால் மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கா போக்கடி போக்காக இவ்வாறான மூன்று வகை உள்ளக இடப்பெயர்வாளர்களைப் பற்றி, அதாவது நிலங்களை சொந்தமாக கொண்டிருப்பவர்களும் உடனடியாக தங்கள் நிலங்களுக்கு செல்லக் கூடியவர்கள,; ஒரு வகையினர். இன்னொரு வகையினர் நிலங்களை சொந்தமாக கொண்டிருந்தாலும் அங்கு போவதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டியவர்கள். மூன்றாவது வகையினரது நிலங்கள் இராணுவத்தினரால் கையகப் படுத்தப்பட்டு உரிமையாளர்களுக்கு கவர்ச்சிகரமான இழப்பீடுகள் வழங்கப்படப் போவது பற்றியும் குறிப்பிட்டார். அவர் கூறியதுக்கு நீங்கள் கடிதம் மூலம் நடைமுறை வடிவம் கொடுப்பதாக நான் நம்புகிறேன்.

பின்வரும் விடயங்களை கருத்தில் எடுக்க வேண்டும்
1. ஒரு சேரநிகழும் விடயங்களான காணி, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் என்பன குறித்து முற்கூட்டிய ஆலோசனை கலப்பு எதுவும் வடமாகாண சபையுடன் இடம்பெறவில்லை. காணிகளை அல்லது வீடுகளை மீள கையளிப்பது அல்லது அப்படி செய்யாமல் வைத்திருப்பற்கான முடிவானது, மேலிருந்து கீழ் வரையாக ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கையில்லை. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற வகையிலே இவ்வாறான ஒரு செயற்பாட்டை ஆராய்வதற்கும் அதற்கான தேவை மற்றும் அவசியம், மற்றும் சொல்லப்படுகின்றவற்றின் செயதகுதன்மை குறித்தும் கருத்திலெடுப்பதற்கு வடமாகாண சபைக்கு உரிமை இருக்க வேண்டும். இப்போது நாம் போர்க்காலங்களில் வாழவில்லை.

குடிசார் நிர்வாகம் கையேற்றுவிட்டது. மக்களுக்கு எது சிறப்பானது என முடிவு செய்வது சிவில் நிர்வாகமும் மக்களும் மட்டுமேயாகும். வடமாகாண சபையோடு கலந்தாலோசிக்காமல் பாதுகாப்பு அமைச்சின் ஒரு தலைப்பட்சமான முடிவுகள் எதுவும் இருக்க முடியாது. எப்படிப் பார்த்தாலும் நாம் (இப்போது இருப்பில் இருக்கிற சர்வதேசரீதியாக ஏற்கப்பட்ட மனித உரிமைக் கோட்பாடுகள் மற்றும் விழுமியங்களின் வீச்சுக்குள் அடங்குபவையான) மக்களுடைய பாதுகாப்பு திரும்பிச்செல்வதற்கான உரிமை, அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரங்களுக்கான உரிமைகள் பற்றியே நாம் ஆராய்கிறோம்.

2. தேசத்தின் பாதுகாப்பையும் மனிதருக்கான பாதுகாப்பையும் தராசிலிட்டு பார்க்கும் பொழுது போருக்குப் பின் வந்திருக்கும் இந்தக் காலங்களிலே படைத்துறையினர் இவ்வளவு அதிக அளவு ஏக்கர் கணக்கிலான காணிகளை தம்வசம் வைத்திருக்க வேண்டிய தேவை பற்றி கேள்வியெழுப்ப எமக்கு உரித்து இருக்கிறது. இவற்றினுடைய நிலைமைகளை முடிவு செய்யும் போது படைத்துறையினது தெரிவானது முறைப்படியான இராணுவ கருத்திலெடுப்பை அடிப்படையாக கொண்டிருக்க வில்லையென்றும் புறக்காரணங்களையே அடிப்படையாக கொண்டிருக்கின்றன என மெய்ப்பிப்பதற்கு நாம் நிபுணத்துவ சான்றுகளை முன்வைக்க முடியும். அதையும் விட இந்த விவகாரங்கள் படைத்துறையை அளவு குறைத்தலில் இருந்து உதவிகள் வரையான மற்றும் போரிலிருந்து சமாதானத்துக்கான இடைமாறுதல் வரையான விடயங்களோடு தொடர்பு பட்ட பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களை உள்ளடக்கிய ஐநாவின் செப்ரெம்பர் 2015 ஜெனிவா தீர்மானத்தோடுதொடர்பு பட்ட விவகாரங்கள் ஐநா செயலாளர் நாயகத்தின் அண்மைய வருகையின் போது முன்வைக்கப்பட்டன.

3. எம்மோடு கலந்தாலோசிக்காமல் உள்ளக இடப்பெயர்வாளர்களுக்கு கடிதங்களை எழுதுவது இராணுவத்தை திருப்திபடுத்துவதற்காக எம்மை புறமொதுக்கும் செயற்பாடாகவே அமைகிறது.

4. 2017 முடிவிலேயே காணிகளை திருப்பி வழங்க முடியும் என்று கூறுவது ஏன் என்று அறியவிரும்புகிறோம்.

5. தங்களுடைய முகாமை நிறுவ அண்ணளவாக 1,000 ஏக்கர்கள் தேவை என்று மேஜர் ஜெனரல் மகேஸ் என்னிடம் கூறினார். அப்படியாயின் 3,500 ஏக்கர்களை உடனடியாக மீளளிக்கலாம். அவற்றை மீளளிக்காமலிருப்பதற்கு காரணம் எதுவும் தரப்படவில்லை. சமாதான கால இராணுவம் ஒன்று தங்குவதற்கு 1,000 ஏக்கர் தேவை என்பதை எந்த நிலையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எவ்வாறாயினும் 100 ஏக்கர்களை தமவசம் வைத்திருப்பதெனினும் மேலே உள்ள பந்திகள் 1 மற்றும் 2 களில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் ஆலோசனை கலத்தல், ஆராய்தல், மற்றும் மதிப்பீடு செய்தல் முதலியவை மேற்கொள்ளப்பட வேண்டும்,என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

6. எல்லாவற்றுக்கும் மேலாக எமது நிலத்தை நித்தியமாக தம்வசம் வைத்திருக்கப் போகிறோம் என்று இராணுவம் முடிவெடுக்க முடியாது நாங்கள் இராணுவம் அடியோடு மீளப் பெறப்பட்டு போதிய அளவிலான பொலிஸ் படையினரால் மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்றே கேட்டு வருகிறோம். இந்த விடயங்கள் ஒன்றையும் கருத்திலெடுக்காமல் இந்த மாதிரியான கடிதங்களாலும் கவர்ச்சிகரமான இழப்பீடுகளை மக்கள் முன் ஊசலாட விடுவதானது முறையானதாகவோ அல்லது நல்லாட்சி மற்றும் மனிதாபிமான காரணங்களால் வழிநடத்தப் படுவதாகவோ தோன்றவில்லை.

இந்த விடயங்களை கருத்திலெடுப்பதற்கென பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், மாகாண சபையினர், மற்றும் உங்களது திணைக்களத்தினர் ஆகியோர் பங்குபற்றும் அவசர கூட்டமொன்றைக் கூட்டினீர்களாயின் நான் நன்றியுடையவனாயிருப்பேன்.

இதற்கிடையே உள்ளக இடப்பெயர்வாளர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கடிதம் கிடைத்தது பற்றிய உங்கள் அறிவிப்புக்காகக் காத்திருப்பேன்.
அன்புடன்,

ஒப்.: நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்.
முதலமைச்சர்.
வடமாகாணம்.

பிரதிகள்:
1. தளபதி பாதுகாப்புப் படைகள், யாழ்ப்பாணம்.
2. பிரதமரின் செயலாளர், பிரதமர் அலுவலகம், கொழும்பு – 07.
3. கௌரவ. ஆளுனர், வடமாகாணம்.
4. கௌரவ. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,மீள் குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து
விவகார அமைச்சர், கொழும்பு -03.
5. கௌரவ. இரா சம்பந்தன், எதிர்க் கட்சித் தலைவர்.

http://thuliyam.com/?p=40441

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.