Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தின் பாரிய பிரச்சனையான கழிவுகளை அகற்றுவதற்கு ‘சுகாதார நில மீள்நிரப்பி’ எனும் திட்டம் அறிமுகம்!

Featured Replies

யாழ்ப்பாணத்தின் பாரிய பிரச்சனையான கழிவுகளை அகற்றுவதற்கு 'சுகாதார நில மீள்நிரப்பி' எனும் திட்டம் அறிமுகம்!

யாழ் மாவட்டத்தின் பாரிய பிரச்சினையாகக் காணப்படும் கழிவகற்றல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் நூலகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா , வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் தவராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், பரஞ்சோதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் கழிவகற்றல் தொடர்பான “சுகாதார நில நிரப்பித் திட்டம் ” ஒன்று முன் வைக்கப்பட்டது. இத் திட்டம் தொடர்பில் திட்டப் பதிப்பாளர் தெரிவிக்கையில்

சுகாதாரமான மிக முக்கியமானதுமான கொரிய அரசாங்கத்தின் அனுசரனையுடன் 34 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இத்திட்டம் இலங்கையில் நான்கு இடங்களில் அமுல்படுத்தப்படுகிறது. இதன் ஒருகட்டமாக சுகாதார நில மீள்நிரப்பித்திட்டம் கீரிமலையில் அமுல்படுத்தபடுகிறது. சுமார் 7மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளதாக திட்டப்பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் பொதுவாக திண்மக் கழிவுகளை உக்கக்கூடிய கழிவுகள் உக்காத கழிவுகள் என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் உக்கக்கூடிய கழிவுகளை சேதனைப்பசளையாகவும் உக்காதவையை மீள்சுழற்சிற்கு உட்படுத்தமுடியும் என்றும் தெரிவித்தார். மேலும் இவ் இரு வகைப்பாட்டிற்குள்ளும் அடங்காத திண்மக் கழிவுகளை அகற்றுவதே பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக தெரிவித்தார்.

தற்பொழுது திண்மக் கழிவுகள் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சுன்னாம்புக்கற்களை அகழ்ந்த இடத்திலேயே திறந்த நிலையில் கொட்டப்படுகின்றன. இவ்வாறு திண்மக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவற்றுள் பிரதானமாக வளி மாசடைகின்றது, மாசடைகின்றது. திண்மக் கழிவுகளில் இருந்து ஊனம் போன்ற திரவம் வழிந்து நிலத்தடிநீருடன் கலந்து நீரினை மாசுபடுத்துகிறது. திண்மக் கழிவுகளில் இருந்து வடியும் ஊனம் எமது மண் வளத்தையும் விவசாயிகளையும் பாதிக்கிறது என தெரிவித்தார்.

மேலும் திண்மக்கழிவுகளை திறந்த வெளியில் போடுவதால் அவை நோய்க்காவிகளின் உறைவிடமாகவும் காணப்படுகிறது. மேலும் எமது உயிர்ப் பல்வகமையை பாதிப்பதோடு இயற்கை அழகையும் பாதிக்கிறது. எனவே இவ்விடயம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கவனமெடுத்து இந்த சுகாதார நில மீள்நிரப்பி திட்டத்தை முன்வைத்துள்ளதாக அத் திட்டப்பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் இத்திட்டத்திகான சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக நிலம் நிலத்தினை சீரமைத்தல், வடிந்து செல்லும் ஊனத்திற்கான வடிகால், கழிவகற்றும் வாகனங்களை கழுவுவதற்கான இடங்கள், நிலத்தடிநீரினை கொண்டு செல்வதற்கான வடிகால்கள் போன்றன கட்டப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் இத்திட்டம் யாழ் மண்ணிற்கு புதுவிதமானதாக காணப்படுவதால் இத்திட்டம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சுகாதார நில மீள்நிரப்பித் திட்டமானது வலிவடக்கில் உள்ள கீரிமலையில் 15 கெக்கெயர் நிலப்பரப்பில் அமையவுள்ளது இதன் முதற்கட்டமாக 2.3 கெக்கயர் நிலத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் அரச காணியிலே அமையவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இத்திட்டத்தின் ஒரு அம்சமாக பாரிய மழை நீர் தேக்கும் தடாகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் நிலத்தடி நீரினை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் நிலத்தடி நீரினை பாதூகாப்பதற்கு கண்காணிப்பு கிணறுகள் அமைக்கப்படும். இதன் மூலம் நிலத்தடிநீர் மாசுபடாது கண்காணிக்கப்படும்,.

மேலும் திண்மக் கழிவுகளில் இருந்தது வடியும் ஊனம் போன்ற திரவத்தை சுத்திகரிப்பதற்கு பாரிய தடாகமும் அமைக்கப்படும் எனவும் தடாகத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு பின்னர் கடலில் விடப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் சுத்திகிப்பு தொட்டியில் இருந்து வெளிப்படும் சுத்திகரிப்பு நீர் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஈரநிலத்திற்கு ஒத்த செயற்கையான அமைப்பிற்குள் விடப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இவ் சுகாதார நில மீள்நிரப்பி திட்டமானது பாரிய செலவில் அமைக்கப்படுவதால் அதனை உரிய முறையில் பாவித்து பயன்பெற வேண்டுமென திட்டப்பணிப்பாளர் தெரிவித்தார்

http://thuliyam.com/?p=40445

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.