Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவைதான் ஐபோன் 7-ன் ரகசியங்களா? #iPhone7

Featured Replies

இவைதான் ஐபோன் 7-ன் ரகசியங்களா? #iPhone7

apple.jpg

ப்பிள் ரசிகர்களுக்கு இன்றைய இரவுதான் சிவராத்திரி. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஐபோன் 7 மற்றும் ஆப்பிள் வாட்ச் - 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ நகரில், பில்கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியம் இந்த நிகழ்ச்சிக்காக தயாராகி வருகிறது. 7,000 பேர் வரை கொள்ளும், அந்த அரங்கில், டெக்னாலாஜி ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில், இன்று இரவு புதிய ஐபோன் பிறக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இணையத்தில் லைவ்வாக காணவும் முடியும்.  ஐபோன் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருந்தாலும், கூட கபாலி ஓபனிங் சீன் போல, இன்னும்  அதுபற்றிய புதுப்புது தகவல்கள் லீக் ஆகிக்கொண்டே இருக்கின்றன. அதுபற்றிய லேட்டஸ்ட் அப்டேட்தான் இந்தக் கட்டுரை. 

(இந்தக் கட்டுரையை நல்லா படிச்சுக்கங்க ப்ரோ.. இதுதான் நீங்கள் படிக்கும் கடைசி ஐபோன் லீக்ஸ் பற்றிய கட்டுரை. ஏனெனில், இன்று இரவு ஐபோன் வெளியாகிவிட்டால், பிறகு அதைபற்றிய அலசல்களும், விவாதங்களும் துவங்கிவிடும் அல்லவா? எனவே படையப்பா சிவாஜி போல, கடைசியாக ஒருமுறை ஐபோன் பற்றி பாத்துடுவோமா?)

கசியவிட்ட ஹாங்காங் ஆப்பிள்:

ஐபோன் 7 வருவது தெரிந்தாலும், அதில் எத்தனை மாடல்கள் வரும் என்பது தெரியாத புதிராகவே இருந்தது. ஆனால் ஐபோன் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில், அதனை பற்றிய தகவல்கள் பற்றி ஹாங்காங்-ன் ஆப்பிள் வலைதளத்தில் வெளியானது. வெளியான சில மணிநேரங்களிலேயே சேர்க்கப்பட்ட தகவல்கள் நீக்கப்பட்டது. இயர்போன் வாங்கும் பகுதியில், ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் என அதில் தெரியவர, அதை கேட்ச் செய்துவிட்டனர் ஐபோன் பாய்ஸ். ஆக இந்த இரண்டு மாடல்கள்தான் வரும் என முடிவுக்கு வந்துள்ளனர். மேலும் 3.5 mm ஆடியோ ஜாக் இருக்குமா, இருக்காதா என குழப்பம் இன்னும் தொடர்கிறது. சோ..ப்ளீஸ்..வெயிட்!

apple2.jpg

புதுசா என்ன இருக்கு?

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் டிஸ்பிளேவில் எந்த மாற்றமும் இல்லாமல் 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் அளவிலேயே இருக்கும் என தெரிகிறது.  ஐபோன் 7 பிளஸ் இரண்டு, 12 மெகாபிக்சல் கேமராவுடனும், ஐபோன் 7 ஒரு 12 மெகாபிக்சல் கேமராவுடனும் வெளியாகலாம். ஐபோன் 7 மாடல்களில் இன்டர்னல் மெமரி 16 ஜி.பிக்கு பதில் 32 ஜி.பியாக மாறலாம். மேலும் இம்முறை 25 ஜி.பி மெமரியை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என்கின்றனர் ஆப்பிள் பீப்பிள்ஸ். அத்துடன் கூடுதலாக Deep Blue மற்றும் Space Black ஆகிய இரு வண்ணங்களில் வெளியாகலாம். ஐபோன் 2 ஜி.பி ரேம் அல்லது 3 ஜி.பி ரேம் மற்றும் ஆப்பிள் A10  பிராஸசரை கொண்டிருக்கலாம். 

iphone-7-blue.jpg

 

வடிவமைப்பை பொறுத்தவரை மெல்லியதாகவும், வாட்டர் ரிசிஸ்டண்ட் வசதிகளுடன் இருக்கும். ஆப்பிள் ஐபோன் 7, 32 ஜி.பியின் விலை 53,100 ரூபாய், 128 ஜி.பி 61,200 ரூபாய் மற்றும் 128 ஜி.பியின் விலை 71,300 ரூபாயாகவும் இருக்கும் எனவும் எர்திர்பார்க்கப்படுகிறது.  ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ், 32 ஜி.பியின் விலை 61,100 ரூபாய், 128 ஜி.பி 69,200 ரூபாய் மற்றும் 128 ஜி.பியின் விலை 79,300 ரூபாயாகவும் இருக்கலாம்.. கடந்த ஆப்பிள் ஐபோன் 6 எஸ் போல் அல்லாமல் இந்த போன் மிகுந்த வரவேற்பை பெறும் என ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது. எனவே ஐபோன் உற்பத்தியை 10 சதவீதம் அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் வரும் 16-ம் தேதி முதலும், இந்தியாவில் தீபாவளி பட்ஜெட்டைக் குறிவைத்து, அக்டோபரிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

http://www.vikatan.com/news/information-technology/68117-will-this-be-the-new-iphone-7-feature.art

ஒன்றுமே இல்லாத சாதா போனை ஏக எதிர்பார்ப்புக்கு எகிறவைத்து விற்கிறதில் அமெரிக்கனை மிஞ்ச ஆள் கிடையாது .oneplus 3 phone இரண்டு சிம் கார்ட்  விலையும் குறைவு  பாவிப்பில் மற்ற போன்கள் கிட்டவும் வராது என்னிடம்  oneplus 1 இரண்டு சிம் உள்ளது whatsapp,முகநூலுக்கு ஒன்றும் தொடர்புக்கு ஒன்றுமா உபயோகத்தில் உள்ளது இதுவரை பிரச்சினை இல்லை .

 

  • தொடங்கியவர்

ஆப்பிள் வாட்ச், சூப்பர் மேரியோ, கலக்கல் ஆப்பிள் நிகழ்ச்சி அப்டேட்ஸ்!

*ஆப்பிள் நிறுவனத்தின் ட்விட்டர் அக்கவுன்ட்டில் அவசரப்பட்டு, தனது புதிய ஐபோன் 7, ஐபோன் 7 ப்ளஸ் போன்களைப் பற்றி ட்வீட் செய்துவிட்டது ஆப்பிள்.

* ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் லென்ஸ் கேமரா உள்ளது. ஐபோன் 7 வாட்டர் ரெஸிஸ்டன்ட் என்பது பெரிய ப்ளஸ்.

14237688_2021409798085420_49907883554371

* செப்டம்பர் 16ம் தேதி அன்று புக்கிங் ஸ்டார்ட்ஸ்!

* ஆப்பிள் வாட்சில் போக்கிமான் கோ

* ஐபோனில் புதிய சூப்பர் மேரியோ 

* ஆப்பிள் ஸ்டோரில் 140 பில்லியன் டவுன்லோடுகள்

* ஆப்பிள் மியூசிக்கில் 17 மில்லியன் பயன்பாட்டாளர்கள்

14287609_1068520049870609_1621813944_n.j

* ஆப்பிள் சிஇஓ டிம் குக் ஆப்பிள் நிகழ்ச்சி மேடைக்கு வந்தார்

http://www.vikatan.com/news/information-technology/68124-apple-event--iphone-7-launch-updates.art

  • தொடங்கியவர்

ஆப்பிள் வாட்ச், சூப்பர் மேரியோ, கலக்கல் ஆப்பிள் நிகழ்ச்சி அப்டேட்ஸ்!

* எதிர்பார்த்தபடியே ஐபோன் 7-ல் ஆடியோ ஜாக் இல்லை!!

iphonee.jpg

* 25 சதவிகிதம் அதிக ப்ரைட்னஸ், கலர் மேனேஜ்மென்ட், 3டி டச் வசதி கொண்டது ஐபோன் 7

* ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் மாடல்களில் வெளியாகிறது.

* ஐபோன் 7-ல் 7 MP FaceTime HD செல்ஃபி கேமரா, 12 MP பின்புற கேமரா

* வெளியானது ஐபோன் 7…இது தான் ஐபோன் 7-ன் ஃபர்ஸ்ட் லுக் 

iphone%207.JPG

*ஆப்பிள் நிறுவனத்தின் ட்விட்டர் அக்கவுன்ட்டில் அவசரப்பட்டு, தனது புதிய ஐபோன் 7, ஐபோன் 7 ப்ளஸ் போன்களைப் பற்றி ட்வீட் செய்துவிட்டது ஆப்பிள்.

* ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் லென்ஸ் கேமரா உள்ளது. ஐபோன் 7 வாட்டர் ரெஸிஸ்டன்ட் என்பது பெரிய ப்ளஸ்.

http://www.vikatan.com/news/information-technology/68124-apple-event--iphone-7-launch-updates.art

புதுமையின் உச்சம் : ஏர்பாட்ஸ் - ஐந்து மணிநேரம் நீடிக்கும் பேட்டரி கொண்ட வையர்லெஸ் ஹெட்போன்ஸ்

ipods.JPG

ipods1.jpg

* எதிர்பார்த்தபடியே ஐபோன் 7-ல் ஆடியோ ஜாக் இல்லை!!

  • தொடங்கியவர்

வெளியாகியது ஐ-போன் 7 : விலை தெரியுமா?

 

 

 

உலகமே எதிர்ப்பார்த்த புதிய பொழிவுடன் ஐ-போன் 7, மாதிரிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கையடக்கத் தொலைபேசி தயாரிப்பில் முன்னணி உள்ள ஆப்பிள் நிறுவனமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 6 மற்றும் 6 எஸ் கையடக்கத் தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியது. 3806E63100000578-3778252-The_iPhone_7_wi

அதே போன்று இந்தாண்டின் ஐபோன் 7 மாதிரிகளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில்  புதிய மாதிரி ஐபோன் 7, ஐ போன் 7 பிளஸ், மற்றும் கைக்கடிகாரம் 2 மாதிரிகள்  அறிமுகப்பட்டுத்தப்பட்டன. 

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த அறிமுக விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் ஐபோன்களை அறிமுகம் செய்து, அதன் சிறப்பம்சங்கள் கூறினார்.

 

இந்த கையடக்கத் தொலைபேசியில் இருக்கும் புதிய வசதிகள் குறித்து டிம் குக் தெரிவிக்கையில்,

 

சூப்பர் மெரியோ ரன்:

ஆப்பிள் ஐபோன் 7 இல் உலகில் பிரபலமான மரியோ விளையாட்டு அறிமுகமாகிறது. மக்கள் அதிகம் இந்த விளையாட்டை பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.DF0f5fdf.jpg

 

ஆப்பிள் கைக்கடிகாரம் மாதிரி 2:

ஆப்பிள் கைக்கடிகாரம் மாதிரி 2 அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய ஆப்பிள் வாட்சின் டிசைனில் எந்த வித மாற்றமும் இல்லாமல் தண்ணிருக்குள் 50 மீட்டர் ஆழம் வரை ‛வோட்டர் புரூப்' மற்றும் ‛ஸ்விம் புரூப்' அம்சம் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கைக்கடிகாரம் டூயல் - கோர் புரசசர் உடன் வேகமாக செயல்படும் திறன் கொண்டது. மேலும் கைக்கடிகாரத்தில் ஜி.பி.எஸ்., வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.3806D7E300000578-3778252-A_new_Watch_ver

 

ஜொக்கிங் மற்றும் ஓட்ட பயிற்சி பெறுபவர்களுக்கு பயன்பெறும் வகையில் ஆப்பிள் நிறுவனம் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பல்வேறு மேம்பாடுகளை கொண்ட நைக் பிளஸ் கைக்கடிகாரத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை இலங்கை மதிப்பில் சுமார் 54 ஆயிரம் ரூபாய் ஆகும்.3806D01A00000578-3778252-Jeff_Williams_o

 

போக்கிமேன் கோ:

உலகம் முழுவதும சமீபத்தில் மிகவும் பிரபலமான ‛போக்கிமேன் கோ' விளையாட்டு ஆப்பிள் கைக்கடிகாரத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3806E4BE00000578-3778252-image-a-74_1473

ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் :

ஐபோன் 7 ‛வோட்டர்- டஸ்ட் புரூப்' வசதியுடன் வருகிறது. இந்த கையடக்கத் தொலைபேசி ஜெட் பிளக், பிளக், கோல்ட், சில்வர், ரோஸ் கோல்ட் ஆகிய வர்ணங்களில் வெளியாகிறது. fs0fsf1561fdfs.jpg

ஆப்பிள் 7 பிளஸ்சில் பிரதான கெமரா 12 மெகா பிக்சல் தரத்தில் 2லென்ஸ் உடன் வெளியாகியுள்ளது. இந்த 2 லென்ஸ் 56.எம்.எம்., ஒப்டிகல் சூம் வசதிக்காக ஒரு லென்ஸ{ம், வைட் ஹேங்கிள் வசதிக்காக மற்றொரு லென்ஸ{ம் கொடுக்கப்பட்டுள்ளது.

3807191000000578-3778252-The_iPhone_7_plfsdfd6f2dfsfs.jpg

ஐ.ஓ.எஸ். 10 இயங்குதளம்

இந்த போன் ஐ.ஓ.எஸ். 10 இயங்குதளத்தில் செயல்பட கூடியது.

3806AC2000000578-3778252-The_handset_wil

ஹெட் போன் 

ஐபோன்7 மற்றும் 7 பிளஸில் ஸ்டிரியோஸ்பிக்கர் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக ‛வயர்லெஸ் - ஹெட் போன் ' வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்டுள்ளது.

f0dfd1f5d1fdfd.jpg

ஐபோன் 7 ல் வை-பை இணைப்புடன் 14-15 மணி நேரம் செயலில் இருக்கும் அளவிற்கு பேட்டரி மேம்படுத்தப்பட்டுள்ளது.

380715F300000578-3778252-The_new_159_wir

ஐ-கிளவுட்:

ஐபோன்7 ஐயும் மற்ற ஆப்பிள் தயாரிப்புகளையும் இனைக்கும் வகையில் ஐ-கிளவுட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏனைய ஆப்பிள் தயாரிப்புகளுக்கு கோப்புகளை பரிமாற்றம்செய்ய முடியும்.

3806CC1B00000578-3778252-The_new_Watch_a

ஆப்பிள் பே:

ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ‛ஆப்பிள் பே' வை பயன்படுத்தும் வகையில் ‛என்.எப்.சி.,' தொழினுட்ப வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம பணபரிமாற்றம் செய்யமுடியும்.

 

பியுசன் புரொசசர்:

ஐபோன் 7 பியுசன் புரொசசர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புரொசசர்  சுமார் 3.3 பில்லியன் டிரான்சிஸ்டர்களை கொண்டு செயல்படுகிறது. அதனால் இதன் செயல்திறன் பல மடங்கு அதிகமாக இருக்கும்

3806E4BE00000578-3778252-image-a-74_1473

அதிக சேமிப்புத்திறன்:

ஐபோன் 7 ல் புதிதாக 128 மற்றும் 256 ஜி.பி., உள்ளடக்க மெமரியுடன் வெளியாகிறது. குறைந்தபட்சமாக 32 ஜி.பி., போனும் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

3806B1B000000578-3778252-Apple_is_alsop_

விலை: 

ஐபோன் 7 இன் ஆரம்ப விலை ரூ. 95000 (32 ஜிபி), ஐபோன் 7 ப்ளஸ் தொடக்க விலை ரூ. 112847 (32 ஜிபி) எனவும் கூறப்படுகிறது. 

இருப்பினும் அதிகார்பூர்வ விலை பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. ஐ-போன் 7, 7 ப்ளஸ் மாதிரி கையக்கத் தொலைபேசிகள் அமெரிக்க சந்தைகளில் செப்டம்பர் 16 முதல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 

அதற்கான இணைய முன்பதிவு நாளை முதல் ஆரம்பமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

http://www.virakesari.lk/article/11110

  • தொடங்கியவர்

#iphone7: ஆப்பிள் எடுத்த முடிவு சரிதானா?

a2.jpg

ப்பிளின் புதிய ஐபோன்களோடு, சில சர்ச்சைகளும், சிக்கல்களும் சேர்ந்தே வெளியாகியிருக்கின்றன. அதாவது ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன்களில் “ஹெட்போன் ஜாக்” எனப்படும் பாடல் கேட்பதற்கான வொயரை சொருகும் 3.5 மிமீ போர்ட்டை நீக்கியுள்ளது. இதற்குப் பதிலாக, வயர்லெஸ் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தும் வகையில் “ஏர்பாட்ஸ்” என்னும் வயர்லெஸ் ஹெட்போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், மறுபக்கம் ஆதரவும் இருக்கின்றன. ஆப்பிள் செய்தது சரிதானா?

இதற்கு ஆப்பிள் சொல்லும் காரணம் என்ன?

ஐபோன்களிலிருந்து ஹெட்போன் ஜாக் நீக்கப்படும் தகவலை அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பில் சில்லேர் கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அறிவித்தார். அப்போது “கடைசியாக இருப்பது ஒரே வார்த்தைதான்: நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் மூலம் முன்னேறி, நம்மை முன்னேற்றிடும் புதிய விஷயங்களை செய்வதே அது” என்றார்.  நூறு வருடங்களுக்கும் மேலான, ஆடியோ ஜாக் எல்லாம் பழசு. இனி எல்லாம் வயர்லஸ்தான். அதற்கு இதுவே முதல்படி எனக் கூறியிருக்கிறது ஆப்பிள். அதற்காக ஆப்பிள் சொல்லும் காரணங்கள் இவைதான்.
         1. "ஒவ்வொரு வருடமும் மக்கள் புதுப்புது சிறப்பம்சங்களை எங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். எனவே தான் ஐபோன்களின் வடிவமைப்பு, வாட்டர் ப்ரூப், சிறந்த பேட்டரி போன்றவற்றை பூர்த்தி செய்வதற்காக ஹெட்போன் ஜாக்கை நீக்கியுள்ளோம்"
         2. மேலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும்போது இதுபோன்ற கருத்துக்கள் சகஜம்தான் எனக்கூறும் ஆப்பிள், இன்னும் சில வருடங்களில் மக்களிடையே நாம் ஏன் இத்தனை வருடமாக வயர்லெஸ் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுமென்றும் சவால்விடுகிறது.

a3.jpg

இனி பழைய “ஹெட் போன்களை” ஐபோனில் பயன்படுத்த வழியே இல்லையா?

         உங்களின் பழைய ஹெட்போன்களையும் புதிய ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ்சில் பயன்படுத்தலாம். ஆனால் அதை நேரடியாக இல்லாமல் அதற்குரிய “அடாப்டர்” மூலம் லைட்னிங் போர்ட் எனப்படும் நாம் மொபைலை சார்ஜ் ஏற்றும் பகுதியில் இணைத்து பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் அந்த அடாப்டர், ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் வாங்கும்போது இலவசமாக வழங்கப்படும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. 

ஆடியோ ஜாக்கை நீக்கியதால் ஏற்படும் பிரச்சனைகள்:

a4.jpg

நமது பழைய ஹெட் போன்களை பயன்படுத்தி பாடல் கேட்க வேண்டுமென்றால் நம்மிடம் எப்போதும் அந்த அடாப்டர் இருக்க வேண்டியது அவசியம். நம்மில் பலபேர் மொபைலை சார்ஜ் ஏற்றிக்கொண்டே பாடல் கேட்பது வழக்கம். ஆனால் அது இனி சாத்தியமில்லை. ஏனெனில் அந்த அடாப்டர் இணைக்கப்பட்டிருப்பது நாம் மொபைலை சார்ஜ் ஏற்றும் “லைட்னிங் போர்ட்” ஆகும். எனவே ஒரே சமயத்தில் பாடல் கேட்டுக்கொண்டே மொபைலை சார்ஜ் ஏற்றுவது சாத்தியமில்லை. ஆடியோ ஜாக்கை நீக்கியதற்காக ஆப்பிள் நிறுவனம் சொல்லும் காரணங்களை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆடியோ ஜாக்கோடும், ஐபோனை விட சிறந்த பேட்டரி திறனும், வாட்டர் ப்ரூப்  உள்ள மொபைல்களை மற்ற நிறுவனங்கள் ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் இந்த விளக்கம் போதுமானதாக இல்லை.
மேலும் நாம் பயன்படுத்தும் மொபைல், டேப்லட், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற மின்னணு பொருட்களில் அத்தியாவசமான தேவை என்று நாம் நினைக்கும் வசதிகளை ஆப்பிள் நீக்குவது இது முதல் முறையல்ல. அவ்வாறு ஆப்பிள் நீக்கியவற்றில் முக்கியமான விஷயங்களை கீழே காணலாம்.

பிளாப்பி டிஸ்க்:

1976 முதல் 1998 வரை பிளாப்பி டிஸ்க் என்னும் கணினிகளுக்குக்கிடையே தகவல் பரிமாற உதவும் முக்கியமான வழி. அப்போது பயன்பாடு உச்சத்தில் இருந்தது. அதில் அதிகபட்சம் 1.4 எம்பி தகவல்களை மட்டுமே சேமிக்க முடியும் என்பது வேறு கதை. ஆனால் 1998-ம் ஆண்டு ஆப்பிளின் ஐமேக் ஜி-3 என்னும் கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோது, பிளாப்பி டிஸ்க் நீக்கப்பட்டு நாம் தற்போது பயன்படுத்தும் யூஎஸ்பி சேர்க்கப்பட்டது. அப்போது பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் இப்போது நாம் பயன்படுத்தும் யூஎஸ்பிக்கு அதுவே தொடக்கம்.

டிவிடி டிரைவ் :

இன்றுவரை நாம் பயன்படுத்தி வரும் டிவிடிக்களை கிட்டத்தட்ட ஆப்பிளின் ஐமேக் கம்ப்யூட்டர்கள் மற்றும் மேக்புக் லேப்டாப்களிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னரே நீக்கிவிட்டனர். குறைந்து வரும் டிவிடி பயன்பாடு, அதிகரித்து வரும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்பாடு மற்றும் கணினியின் வடிவமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்களுக்காக டிவிடி டிரைவ் நீக்கப்பட்டதாக அப்போது, கூறப்பட்டது.

a1.jpg

இப்போதும் கூட, "ஆப்பிள் எடுக்கும் இதுபோன்ற அதிரடி முடிவுகளால்தான் இன்னும் முன்னணியில் இருக்கிறது. இதுதான் ஆப்பிளின் ஸ்டைலே!" என்கிறது ஒரு க்ரூப். "அப்படி இயர்போன் போர்ட்டை நீக்கும் அளவுக்கு, அப்படி என்ன அதில் குறை இருந்தது?" என்கிறது ஒரு க்ரூப். இது ஆப்பிளின் துணிச்சலா? சறுக்கலா? வழக்கம் போலவே, காலத்தின் கையில்தான் விடை இருக்கிறது!

http://www.vikatan.com/news/information-technology/68211-why-apple-just-eliminated-the-headphone-jack-from-the-iphone-7.art

  • 2 weeks later...

2016, செப்டம்பர் மாத தொடக்கத்தில்,  ஐபோன் 7  மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் ஐ அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வைத்து ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஐபோன் 7, 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி கொள்ளளவில் கிடைக்கின்றது.  இதன் விலை அமெரிக்க டாலரில் $649 இருந்து $849 வரையாகும். இந்திய மதிப்பில் 43 ஆயிரத்திலிருந்து 56 ஆயிரம் ரூபா வாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐபோன்  7, 4.7” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடன் 3டி தொடுதிரை கொண்டது. இதன் தடிமன் 7.1 மி.மீ.  இதன் எடை 138 கிராம்.

4 ஜிபி ரேம் நினைவகத்துடன் , ஆப்பிளின் விஷேட A10 பியூசின்  சிப்கள் முதல் முறையாக பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 2.4GHz பிராசஸர் பொருத்தியுள்ளதால் அதிக ஆப்ஸ்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தல் மற்றும் அதிக நேரம் பேட்டரி சார்ஜ் நீடித்தல் போன்றவற்றை அதிக வசதிகளாக தரலாம் என எதிர்பார்க்கின்றனர்.

ஐபோன் 7 12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.  3ஜி நெட்ஒர்க்கில் 7எஸ் மாடலில் 14 மணிநேரம் இயங்கும் பேட்டரி உள்ளது 
ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ்-ல் முதல் முறையாக இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.  ஹெட் போன் ஜாக் நீக்கி வயர்லெஸ் ஆடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள். அதற்காக ஆப்பிள் புதிதாக வயர்லெஸ் “ஏர்பாட்ஸ்” என்னும் ஹெட் போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்டர் ப்ரூப் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் போன்றவைகளுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஐபோன் 7 வெளியாகிய நாட்களுக்கு அண்மையிலேயே சாம்சங்க் இற்கு சோதனைக்காலம் ஆரம்பமானது.  சாம்சங்கின் கேலக்ஸி நோட் 7 தொலைபேசிகள் வெடிக்கத்தொடங்கியதுடன் அவற்றை உடனடியாக மீளப்பெறுவதாக அறிவித்தது சாம்சங்க்.

சாம்சங்க் கேலக்ஸி நோட்7 - ஐ பயன்படுத்த வேண்டாம் - சாம்சங்க் நிறுவனம் அறிவிப்பு

ஹேட்போன் ஜாக் ஐ முழுமையாக நீக்கிய ஆப்பிள் அதற்கு பதிலாக சார்ஜ் செய்யும் இடத்திலேயே பொருத்தக்கூடிய (lightning connector ) ஹெட்போன்களை தருகின்றது. எனினும் தனியாக Lightning to 3.5 mm Headphone Jack Adapter ஐயும் தருகின்றது. இதை தவறவிட்டால் 9 டாலர்களுக்கு வாங்க வேண்டும். எவ்வாறாயினும் சார்ஜ் செய்துகொண்டு இசையையும் கேட்க வேண்டுமென்றால் அதற்காக மேலும் 49 டாலர்கள் செலவு செய்து  iPhone Lightning Dock ஐ வாங்க வேண்டும்.


ஐபோன் 7 வெளிவந்ததை அடுத்து ஐபோன் 6 மற்றும் 6 ப்ள்ஸின் விலைகளில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.  இதன்படி இந்தியாவில் ரூபாய் 22000 வரை விலை குறைந்துள்ளதாக தெரியவருகின்றது.

ஐபோன் 7 முதல் பார்வை வீடியோ

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.