Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களைக் காப்பாற்றுவதை விட அரசைக் காப்பாற்றுவதா முதற்பணி?

Featured Replies

11658.jpg

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் இந்த நாட்டில் ஒரு பெரும் தமிழின அழிப்பு நடவடிக்கை தொடர்ந்தது.

அப்போது ஆட்சிப்பீடத்தில் இருந்தவர்கள் எதுவும் செய்வார்கள் என்ற ஏக்கம் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி தென்பகுதி மக்களிடமும் இருந்தது என்பது உண்மையே.

இத்தகையதோர் சூழ்நிலையில்தான் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. உலக நாடுகளின் ஊக்கமும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களின் கூட்டும் சேர தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவோடு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆகினார்.

எனினும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆனதும் ஒரு பெரிய பிரச்சினை முடிந்து போனதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் உணர்ந்து கொண்டமைதான் மிகப்பெரும் துரதிர்ஷ்டம் ஆகிற்று.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து தமிழ் மக்கள் நியாயமான விடயங்களை எதிர் பார்த்தனர். இருந்தும் அவை இன்றுவரை சாத்தியமற்றே காணப்படுகின்றது.

உண்மையில் ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுடன் உடன்படிக்கை ஒன்றை செய்திருக்க வேண்டும். அவ்வாறானதொரு உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தால், தமிழ் அரசியல் கைதிகள் இன்று விடுதலை பெற்றிருப்பர். இதுபோல பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவுகட்டியிருக்க முடியும்.

இருந்தும் அதை நாம் செய்யாதது எங்கள் அரசியல் பலவீனம் என்றே கூறவேண்டும்.
ஏனெனில் இதுவிடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமை மிகவும் நுணுக்கமாகச் செயற்பட்டதுடன் இன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்தில் இருந்துகொண்டு செய்கின்ற அத்தனை இராஜதந்திரங்களும் ஜனாதிபதித் தேர்தலின் போது அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை தான்.
என்ன செய்வது எங்களிடம் எதிலும் இராஜதந்திர நுட்பம் இல்லை என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

இருந்தும் மற்றவர்களிடம் படித்தல் என்ற விடயத்திலேனும் நாம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் எங்கள் தமிழ் அரசியல் தலைமையானது தமிழ் மக்களைக் காப்பாற்றுவது என்பதை விட தற்போதைய அரசைக் காப்பாற்றுவதே தனது கடமை என்பது போல செயற்படுவதைக் காணும் போது இதென்ன நாசகாரம் என்று எண்ணத் தோன்றுகிறது.

நல்லாட்சிக்கு எதிராக நாம் அகிம்சை வழிப் போராட்டம் நடத்துவது போல ஆகாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நினைக்கிறது.

தாம் அகிம்சை வழிப் போராட்டம் நடத்தினால் அதனைப் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ­ ஆட்சிக்கு வந்துவிடுவார் என்று கூட் டமைப்புக் கூறுவது மகா தவறு.

மகிந்த ராஜபக்ச ­ மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கின்ற பொறுப்பு தற்போதைய ஜனாதிபதி மைத்திரியிடமும் பிரதமர் ரணிலிடமுமே உள்ளது.

முன்னைய ஆட்சியில் எத்தனையோ சட்ட விரோ தச் செயல்கள் உள்ளதாக அரசு கூறும்போது; புதிய அரசியல் கட்சியை மகிந்த ஆரம்பித்தால் அவரின் சாயத்தை வெளுக்கச் செய்வேன் என்று ஜனாதிபதி மைத்திரி கூறும் போது, மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார் அதற்கு நாம் விடக்கூடாது என்று நம் அரசியல் தலைமை நினைப்பது, அவ்வாறு கருத்துரைப்பது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான ஒன்றே அன்றி வேறில்லை எனலாம். 

எனவே தமிழ் அரசியல் தலைமையின் முதல் பணி தமிழ் மக்களை பாதுகாப்பதாகவே இருக்கும். இதற்காக அகிம்சை வழிப் போராட்டத்தை முன்னெடுப்பது தவிர்க்க முடியாததது.

இந்நிலையில் இந்தத் தார்மீக கடமையை உணர்ந்து இனியும் விட்டால் நிலைமை மோசமாகும் என்பதை அறிந்து தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 24-ம் திகதி அகிம்சை வழியில் முன்னெடுக்கவுள்ள மாபெரும் பேரணிக்கு தங்கள் பூரண ஆதரவை வழங்குவது தர்மத்தை நிலைநாட்டும் உன்னத கடமையாகும்.
 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=11658&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.