Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாசனைத் திரவியங்களின் பயன்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

நல்லனவெல்லாம் தரும் சுக்கு! 

தென் தமிழகத்தில் பிரபலமான சொலவடை ஒன்று உண்டு... ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை. சுப்பிரமணியனை மிஞ்சிய சாமி இல்லை.’ சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இவற்றில் மட்டுமல்ல… சீன மருத்துவத்திலும், ஜப்பானின் கம்போ மருத்துவத்திலும், கொரியனின் சுஜோக் மருத்துவத்திலும் முதன்மையான இடம் சுக்குக்கு உண்டு. சிவப்பு இந்தியர்களும் சுக்கை தங்கள் மருத்துவத்தில் பிரதானமான பொருளாக வைத்திருக்கிறார்கள். இது, இஞ்சியாக இருக்கும்போது அலாதியான பல மருத்துவப் பயன்களைக் கொடுக்கும்; காய்ந்து சுக்கானதும் வேறு பல நல்ல பலன்களைக் கொடுக்கும்.

`காலை இஞ்சி, மதியம் சுக்கு, மாலை கடுக்காய் அருந்த…’ என சித்த மருத்துவப் பாடலே உண்டு. காலை பல் துலக்கியதும் இஞ்சியையும், மதியம் சுக்குத் தூளையும் உணவுக்கு முன் எடுத்துக்கொள்வதன் மூலம், நோய்கள் பலவற்றை நம்மை அணுகாமல் காத்துக்கொள்ள முடியும் என்கிறது இந்தப் பாடல். இனி, சுக்கின் பலன்களைப் பார்ப்போம்… 

* பித்தத்தைச் சீராக்காவிட்டால், குடல் புண்கள் ஏற்படும். மலச்சிக்கல் உண்டாகும். வயிற்று உப்புசம், தலைவலியோடு ரத்தக்கொதிப்பும் ஏற்படும். உளவியல் சிக்கலுக்குக்கூட அடித்தளம் இடும். சுக்குத்தூள் ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னைகளை வேரறுக்கும் ஒன்று. சுக்கு, பித்தத்தை சமன்படுத்தும். 

* லேசான காய்ச்சல் தலைவலிக்கு சுக்குத்தூளை வெறும் தண்ணீரோடு கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். சில சமயங்களில் சுக்கு, குழந்தைகளின் தோலைப் புண்ணாக்கிவிடும். எனவே, எட்டு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த சுக்கு பற்றுப் போடக் கூடாது. 

சுக்கு காபி

* சுக்கு, கொத்தமல்லி விதை இரண்டையும் சம அளவு எடுத்து, காபித்தூள் போலப் பயன்படுத்தி கஷாயம் செய்து, அதனுடன் பனைவெல்லம் சேர்த்து, வாரம் இருமுறை மாலை வேளைகளில் சாப்பிடலாம். அஜீரணம் உள்ளவர்களுக்கு அந்தப் பிரச்னைஓடிப்போகும். 

* பித்தத்தால் வருவது மைக்ரேன் தலைவலி. அதோடு இலவச இணைப்பாக வயிற்றுவலியும் வந்துவிடும். சுக்குத்தூள் மைக்ரேன் தலைவலிக்கு மிகச் சிறந்த மருந்து. மூன்று சிட்டிகை சுக்குத்தூளைத் தேனில் குழைத்து, உணவுக்குப் பின் காலையும் மாலையும் என 45 நாட்கள் சாப்பிட்டுவர, தலைவலி காணாமல் போய்விடும். 

இஞ்சி

* இஞ்சியின் மேல்தோலை சீவி, சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறப்போட்டு, காலையில் அந்தத் தேனோடு சேர்த்துச் சாபிட்டால் தலைவலி சரியாகும். 

* சில பெண்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய நாட்களிலும், மாதவிடாய் தொடங்கிய முதல் நாளிலும் பித்தத் தலைவலி வரும். இதற்கு மருந்தாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ‘இஞ்சி ரசாயனம்’ நல்ல மருந்து.

* கருவுற்ற காலத்தில் வரும் பித்த வாந்திக்கு, மிகச் சிறிய அளவு சுக்குத்தூளை எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும். 

* சிலருக்கும் பயணத்தின்போதும், மலைப் பயணத்தின்போதும் குமட்டல் ஏற்படும். அதற்கு சுக்குத்தூள் சிறந்த மருந்து. 

* சுக்குக் கஷாயத்தை நல்லெண்ணெயில் காய்ச்சி, சுக்குத்தைலம் தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்துக் கடைகளில் வேறு சில மூலிகைகளோடு கலந்தும் சுக்குத்தைலம் கிடைக்கும். இதைத் தலையில் தேய்த்தால், சைனஸால் வரும் தலைவலி சரியாகிவிடும். 

* காதுக்குள் இரைச்சல் கேட்கும் பிரச்னை (Minears), காதில் சீழ் கோக்கும் நோய் (CSOM), காது இரைச்சலால் தடுமாற்றம் (வெர்டிகோ) பிரச்னைகளுக்கு சுக்குத்தைலம் தேய்த்துக் குளிப்பது நல்ல பலனைத் தரும். 

* 25 ஆண்டுகளுக்கு முன்பே நியூயார்க் அகாடமி ஆஃப் சயின்ஸ், சுக்கு பக்க விளைவு இல்லாத தலைவலி மருந்து என்பதை உறுதிசெய்திருக்கிறது. 

இஞ்சி ரசாயனம் செய்முறை

இஞ்சி 50 கிராம், சீரகம் 50 கிராம் எடுத்துக்கொள்ளவும். இஞ்சியின் மேல்தோலை சீவி, சிறு துண்டுகளாக்கவும். அதன் ஈரத்தன்மையைப் போக்க, மின்விசிறிக் காற்றில் உலர்த்தி எடுக்கவும். ஒரு வாணலியில் சிறுதுளி நெய்விட்டு, இஞ்சியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். சீரகத்தையும் துளி நெய்யில் வறுக்கவும். வறுத்த இஞ்சி, சீரகம் இரண்டையும் பொடித்துக்கொள்ளவும். 100 கிராம் பனைவெல்லம் அல்லது நாட்டு வெல்லத்தில் இந்தப் பொடியைச் சேர்த்துக் கிளறி, ஒரு பாட்டிலில் போட்டு அடைத்து வைத்துக்கொள்ளவும். இஞ்சி ரசாயனம் தயார். 

http://www.vikatan.com/news/health/73057-health-benefits-of-dry-ginger.html?artfrm=related_article

  • 4 months later...
  • தொடங்கியவர்

சீரகம் ஒரு மருத்துவ மூலிகை

image_8803d94690.jpg

மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை! உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை!

சீரகம்=சீர்+அகம்..!

அகத்தைச் சீர்செய்யும் சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. Cumin என்ற வார்த்தையே அரேபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப்பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது. தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது.

சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –(anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic) வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப்பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு  சாப்பிட்டால், அதிக பேதிப் போக்கு நிற்கும்.

சிறிது சீரகத்துடன், நெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது.

செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

http://www.tamilmirror.lk/medical/சீரகம்-ஒரு-மருத்துவ-மூலிகை/142-204771

 

  • கருத்துக்கள உறவுகள்

 Kein automatischer Alternativtext verfügbar. Bildergebnis für வசம்பு

வசம்பு.

நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.
அதனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.

வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.

கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது. பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது.

பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

இது குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது. 

சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாகவும் பயன்படுத்தலாம்.

நன்றி  Save Farmers.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.