Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தீர்வைக் குழப்பும் என்பாரை அறிமினே!

Featured Replies

11816.jpg
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 24ஆம் திகதி நடந்த எழுக தமிழ் எழுச்சிப்பேரணி சிலருக்கு தாங்கொணா அதிர்ச்சியைத் தந்துள்ளது.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாதவர்களுக்கு தியாகி திலீபனின் நினைவுதினம் சற்று ஆற்றுப்படுத்தியிருக்கும் என நம்பலாம்.

கடந்த ஆண்டும் தியாகி திலீபனின் நினைவு தினம் நடந்தபோது, அதனை அனுஷ்டிப்பதில் ஆர்வம் காட்டாத சில தமிழ் அரசியல்வாதிகள் இந்த வருடம் முண்டியடித்து நின்றதைக் காணமுடிந்தது.

எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்காத தோசம் நீங்க தியாகி திலீபனை விட்டால் வேறு யாருளர் என்றவகையில் அவர்கள் தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முற்பட்டிருக்கலாம்.

தன் உயிரை தமிழ் மக்களுக்காக ஈகை செய்த ஒரு உத்தம தியாகியின் புனித நாளில் போக்கிலித்தன அரசியலை கைவிட்டு அந்த தியாகத்தை மனம்,  மெய், மொழிகளில் அர்ச்சிகவேண்டும் என்பதே நம் தாழ்மையான கருத்து.

ஏனெனில் இந்த உலகம் தர்மத்தின்; அறத்தின் பாற்பட்டது. அறமே வெல்லும். அறம் தோற்பதுபோல காட்சியளித்தாலும் ஈற்றில் அறம் வெல்வது உறுதி.

ஆனால் எக்காலத்திலும் ஏமாற்றுதல்கள், ஆலாவர்ணங்கள், ஆசாடபூதித்தனங்கள் வெற்றிதரும் என்று எவரும் நினைத்துவிடக்கூடாது.

இது ஒருபுறம் இருக்க, தமிழ் மக்கள் பேரவை  நடத்திய எழுச்சிப்பேரணியால் இனப்பிரச்சினைக்கான தீர்வு குழப்பமடையக்கூடியதான வாய்ப்பு உண்டென ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்று தமிழ் மக்களுக்கு உறுதியளித்தவர்களுக்கு தங்கள் உறுதி மொழி நிறைவேறாது என்ற உண்மை தெரிந்தவுடன் எழுச்சிப் பேரணியை வலிந்திழுத்து பேரணி நடந்ததால்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வு தடைப்படுகிறது என்று கூறமுற்பட்டுள்ளனர்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவு படுத்துங்கள் என அரசிடம் அகிம்ஷை வழியில் கேட்பது கூட தீர்வை பாதிக்கும் என்று சொல்பவர்களை  நாம் என்னதான் செய்யமுடியும்.

ஆனால் ஒன்றுநடந்து முடிந்த எழுக தமிழ் எழுச்சியில் பேரணி இனப்பிரச்சினைக்கான தீர்வை பாதிக்கும் என்றால் நீங்கள் எதற்கு என்ற கேள்வி எழுவது  நியாயமானதே.

பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்மக்கள் ஒன்று திரண்டு தங்கள் குறைகளைக் கூறியதனால் இனப் பிரச்சினைக்கான தீர்வு பாதிக்கப்படும் என நீங்கள் உங்கள் பதவிகளை ராஜனாமா செய்துவிட்டு வீடுகளில் இருப்பதே சாலப்பொருத்துடையது எதையும் எப்படியும் கதைக்கலாம்; புரட்டிப்போடலாம் என்ற சிந்தனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்மக்கள் ஒன்று திரண்டு பேரணியாக நடந்து தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதைக்கூட புரிந்துகொள்ள முடியாமல், பேரணியால் இனப்பிரச்சினைக்கான தீர்வுபாதிக்கப்படும் என்று கூறுவது தமிழ் மக்களின் ஆத்திரத்தை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்பதை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மை கூறிக்கொண்டவர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

இல்லையேல் இப்போது இருக்கின்ற பதவி களுக்கு அடுத்தத் தேர்தலில் ஆபத்து வருவதை எவராலும் தடுக்க முடியாமல் போகும்.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=11816&ctype=news

  • தொடங்கியவர்

உங்களோடு ஒத்து ஊதினால்தான் இனவாத நஞ்சை கக்காதிருப்பீரோ!

 

எழுக தமிழ் பேரணி எவரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரும் எழுச்சியுடன் நடந்ததால் தென் பகுதிப் பேரினவாதிகள் சீறிப்பாய்ந்து இனவாத நஞ்சைக் கக்கத் தலைப்பட்டுள்ளனர்.

இவர்கள் எல்லாம் மனிதப்பிறவிகளா? அல்லது வன விலங்குப் பிறப்புகளா? என்று நினைக்கும் அளவில் பேரினவாதிகள் சிலர் அநாகரிகமாக நடந்து கொள்வதைக் காணமுடிகிறது.

குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது பேரினவாதிகள் சீறிப்பாய்வதன் காரணம்தான் என்ன? என்பது புரியாமல் உள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளை மிக நிதானமாகத் தெரிவிப்பது தவறு என்று பேரினவாதிகள் கரு துகின்றனரா? அல்லது தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரைப் போல் வடக்கின் முதலமைச்சரும் தங்களோடு ஒட்டி உறவாடி தாங்கள் தருகின்ற உதவிகளைப் பெற்று, தமிழ் மக்களுக்காகக் கதைப்பது போல நடித்து அரசுடன் இணங்கிப்போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? என்பது புரியாமலே உள்ளது.

உண்மையில் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மீது பேரினவாதிகள் இன்றுவரை எந்தக்குறையும் கூறியது கிடையாது.
வரவு செலவுத் திட்டத்தின் போது கூட இரா.சம்பந்தர் அரச தரப்பிற்கு ஆதரவாகச் செயற்பட்டார்.

முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சிறில்மத்தியு என்ற அன்றைய அமைச்சரும், நெவில் பெர்ணான்டோ என்ற பாணந்துறை எம்.பியும் அமிர்தலிங்கத்தை படுத்தாப்பாடு படுத்தினர். காலி முகத்திடலில் வைத்து அமிர்தலிங்கத்தைப் பிளக்க வேண்டும் என்று கர்ச்சித்தனர்.

இதற்குக் காரணம் அமிர்தலிங்கம் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகத் தெளிவாக - துணிவாக பாராளுமன்றத்தில் உரையாற்றியதுடன், வெளிநாடுகளுக்கும் நிலைமையைத் தெரிவித்ததேயாகும்.

ஆனால் இன்றைய எதிர்க்கட்சித் தலைவருக்கு பேரினவாதிகள் மிகுந்த மதிப்புக் கொடுக்கின்றனர். அதேவேளை வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் எழுக தமிழ்ப் பேரணியின் இறுதியில் ஆற்றிய உரைகண்டு சீறிப்பாய்கின்றனர்.

எனினும் இந்த சீற்றம் குறித்து தமிழ்த் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காமல் மெளனமாக இருப்பது ஏன்? என்பதுதான் தெரியவில்லை.

வடக்கின் முதலமைச்சர் எழுக தமிழ்ப் பேரணியில் ஆற்றிய உரையை விட; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்து கொண்ட மேடைகளில் ஆற்றிய உரைகளே மிகவும் காத்திரமானவை.

மிகத் துணிச்சலோடு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சொல்ல வேண்டியதை சொல்லியுள்ளார்.
அப்போதெல்லாம் பேசாமல் இருந்த பேரினவாதிகள் பேரணிக்குப் பின்பு இத்துணை ஆவேசம் அடைவது எதற்காக? யாருக்கு உதவி செய்வதற்காக? என்ற கேள்விகள் தமிழ் மக்களிடம் எழவே செய்யும்.

எதுவாயினும் யாரையேனும் காப்பாற்றும் நோக்கில் பேரினவாதிகள் கொக்கரிப்பார்களாயின் அது வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கான பேராதரவை தமிழ் மக்களிடம் மென்மேலும் அதிகரிக்கும் என்பதே உண்மை.

இதைப் பேரினவாதிகள் உணர்ந்து கொள்ளா விட்டாலும் அவர்களுக்குப் பின்னணியாக இருப்போர் உணர்வது அவர்களின் எதிர்காலப் பதவிகளுக்கு ஆரோக்கியமாக அமையும் எனலாம்.  

http://www.valampurii.lk/valampurii/content.php?id=11829&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.