Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிய கப்பல்களை நிறுத்த திருகோணமலையில் புதிய இறங்குதுறை!

Featured Replies

பாரிய கப்பல்களை நிறுத்த திருகோணமலையில் புதிய இறங்குதுறை!

திருகோணமலை கடற்படைத் தளத்தில் பாரிய கப்பல்களை நிறுத்துவதற்கு புதிய இறங்குதுறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.

புதிய இறங்குதுறைமுகத்தைக் கட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார்.

இதற்கமைய, திருகோணமலை டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் 220மீற்றர் நீளமும் 20 மீற்றர் அகலமும் கொண்ட இறங்குதுறையை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய கப்பல்கள் தங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

டொக்யார்ட் கடற்படைத் தளமானது சிறீலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகமாகச் செயற்படுகின்றது.

இங்கு பாரிய கப்பல்கள் தரித்து நிற்பதற்கான இறங்குதுறையை கட்டுவதற்கு 1990ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோதும் பல்வேறு தடங்கல்களால் அது இடைநிறுத்தப்பட்டது.

சிறீலங்காக் கடற்படையானது 2017-2019 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவதற்காக பாரிய ரோந்துக் கப்பல்களை கொள்வனவு செய்யவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=43004

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.