Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷு எதிர் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

பங்களாதேஷுக்கு எதிரான வெற்றி அலையை இங்கிலாந்து அணியினால் தொடர முடியுமா? டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்
2016-10-20 09:46:03

பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ரிலும் தனது வெற்றி அலையைத் தொடர்­வ­தற்கு இங்­கி­லாந்து உறுதி பூண்­டுள்­ளது. ஆனால் அது இல­கு­வாக அமையும் என்று கூறு­வ­தற்­கில்லை.

 

20097england---bangaladesh2.jpgபங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக 2003 முதல் 2010 வரை விளை­யா­டிய 8 போட்­டி­க­ளிலும் இங்­கி­லாந்து வெற்­றி­பெற்­றுள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யா­வை­விட பங்­க­ளா­தே­ஷு­ட­னான டெஸ்ட் போட்­டிகள் அனைத்­திலும் வெற்­றி­பெற்ற இரண்­டா­வது நாடு இங்­கி­லாந்து ஆகும்.

 

எனினும் பங்­க­ளா­தேஷின் அண்­மைக்­கால ஆற்­றல்­களை நோக்­கும்­போது அந் நாட்­டு­ட­னான வெற்றி அலையை இங்­கி­லாந்து தொட­ருமா என்ற கேள்வி எழாமல் இல்லை.
பங்­க­ளாதேஷ் அண்­மைக்­கா­ல­மாக வெளிப்­ப­டுத்தி வரும் ஆற்றல், குறிப்­பாக சொந்த மண்ணில் அதன் திற­மைகள் இக்கேள்­வியை எழுப்பக் கார­ண­மாக அமைந்­துள்­ளது.

 

இங்­கி­லாந்து தனது வெற்றி அலையை பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக தொடர்­வ­தற்கு முயற்­சிக்கும் அதே­வேளை, தனது சொந்த நாட்டில் இங்­கி­லாந்தை முதல் தட­வை­யாக வீழ்த்தும் கங்­க­ணத்­துடன் இத்தொடரை பங்­க­ளாதேஷ் எதிர்­கொள்­ள­வுள்­ளது.

 

டெஸ்ட் குழாம்கள்

 

இங்­கி­லாந்து: அலஸ்­டெயார் குக் (அணித் தலைவர்), மொயீன் அலி, ஸவார் அன்­சாரி, ஜொனி பெயார்ஸ்டோ, ஜேக் போல், கறி பெலன்ஸ், கரத் பட்டி, ஸ்டுவர்ட் ப்றோட், ஜொஸ் பட்லர், பென் டுக்கட், ஸ்டீவன் ஃபின், ஹசீப் ஹமீத், ஆதில் ராஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், க்றிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஜெம்ஸ் அண்­டர்சன்.

 

பங்­க­ளாதேஷ்: (முத­லா­வது டெஸ்ட்­டுக்­கா­னது) முஷ்ஃ­பிக்குர் ரஹிம் (அணித் தலைவர்), தமிம் இக்பால், இம்ருள் கயேஸ், கம்ருள் இஸ்லாம் ராபி, மஹ்­மு­துல்லாஹ், மெஹெதி ஹசன், மொமினுள் ஹக், நூருள் ஹசன், சபிர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், ஷக்கிப் அல் ஹசன், ஷுவாகட்டா ஹொம், சௌம்ய சர்கார், தைஜுல் இஸ்லாம்.
 

http://www.metronews.lk/article.php?category=sports&news=20097

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இங்கிலாந்துக்கான சாதனையை நோக்கி அலஸ்டெயார் குக்
2016-10-20 09:54:55

சித்­தா­கொங்கில் இன்று ஆரம்­ப­மா­ன பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ரான டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­யா­னது இங்­கி­லாந்து அணித் தலைவர் அலஸ்­டெயார் குக்­கிற்கு வர­லாற்று முக்­கியம் வாய்ந்­த­தாக அமை­ய­வுள்­ளது.

 

2009843.jpg

 

 

இந்தப் போட்­டியில் விளை­யா­டு­வதன் மூலம் இங்­கி­லாந்து சார்­பாக அதிக டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டிய வீரர் என்ற மைல்­கல்லை அலஸ்­டெயார் குக் எட்­ட­வுள்ளார்.

 

இங்­கி­லாந்து சார்­பாக அதிக டெஸ்ட் கிரிக்கெட் போட்­டிகளில் விளை­யா­டி­ய­வர்கள் வரி­சையில் முன்னாள் அணித் தலைவர் அலெக் ஸ்டுவர்ட்டும் அலஸ்­டெயார் குக்கும் 133 போட்­டி­க­ளுடன் முத­லி­டத்தில் சம­நி­லையில் இருக்­கின்­றனர்.

 

இந்­தி­யா­வுக்கு எதி­ராக நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதா­னத்தில் 2006 மார்ச் 1 முதல் 5 வரை நடை­பெற்ற டெஸ்ட் போட்­டியில் அறி­மு­க­மான அலஸ்­டெயர் குக், இரண்டு வாரங்கள் கழித்து நடை­பெற்ற போட்­டியில் மாத்­தி­ரமே விளை­யா­ட­வில்லை.

 

அதன் பின்னர் இங்­கி­லாந்து சார்­பாக தொடர்ச்­சி­யாக 131 டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­களில் அலஸ்­டெயார் குக் விளை­யா­டி­வந்­துள்ளார்.
தனது இரண்­டா­வது மகளின் பிறப்­பிற்­காக இங்­கி­லாந்து திரும்­பி­யி­ருந்த குக், திங்­க­ளன்று மீண்டும் பங்­க­ளாதேஷ் சென்­ற­டைந்தார்.

 

இங்­கி­லாந்து அதிக டெஸ்ட்­களில் விளை­யா­டி­யவர் என்ற மைல்­கல்லை எட்­ட­வுள்ள நத்தார் தினத்­தன்று பிறந்த 31 வய­தான குக் இது­வரை விளை­யா­டி­யுள்ள 132 டெஸ்ட் போட்­டி­களில் 29 சதங்கள், 51 அரைச் சதங்கள் அடங்­க­லாக மொத்தம் 10,599 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார்.

 

இலங்­கைக்கு எதி­ராக ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் 2014 டிசம்பர் 16ஆம் திகதி நடை­பெற்ற போட்­டி­யுடன் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்­கிற்கு விடை பகர்ந்த குக்,டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கின்றார்.

http://www.metronews.lk/article.php?category=sports&news=20099

  • தொடங்கியவர்

'அவுட்' ஆன 3 முறையும் டிஆர்எஸ்-சில் தப்பிய மொயின் அலி: இங்கிலாந்து அணி திணறல்

 

 
மொயின் அலி ரிவியூ முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் வங்கதேச வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி.
மொயின் அலி ரிவியூ முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் வங்கதேச வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி.

சிட்டகாங்கில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 3 முறை டி.ஆர்.எஸ். முறையீட்டில் தப்பிய மொயின் அலி, இங்கிலாந்தை ஓரளவுக்கு மீட்டார்.

சிட்டகாங்கில் வங்கதேசம்-இங்கிலாந்து இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சற்று முன் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

வங்கதேச அணியில் 3 அறிமுக வீரர்கள்: கம்ருல் இஸ்லாம் ராபி, மெஹ்தி ஹசன் மிராஸ், சபீர் ரஹ்மான்.

இங்கிலாந்து அணியில் டக்கெட் தன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறார்.

மூன்று முறை பிழைத்த மொயின் அலி:

27-வது ஓவரின் 5-வது பந்தை ஷாகிப் அல் ஹசன் ஓவர் த விக்கெட்டிலிருந்து வீச ஸ்வீப் ஆட முயன்ற மொயின் அலி கால்காப்பில் வாங்கினார், தர்மசேனா அவுட் என்று கையை உயர்த்தினார், ஆனால் மொயின் அலி ரிவியூ செய்தார். அதில் பந்து லேசாக மட்டையில் பட்டது தெரியவர நாட் அவுட் ஆனது.

29-வது ஓவரில் இதே ஷாகிப் அல் ஹசன் மீண்டும் மொயின் அலி பேடில் வாங்கினார். நடுவர் விரலை உயர்த்தினார். மொயின் மீண்டும் ரிவியூ செய்தார். இம்முறையும் ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை தாக்காது என்று தெரியவர அவுட் தீர்ப்பு திருத்தப்பட்டது.

அதே ஓவரில் மீண்டும் 4-வது பந்தில் மீண்டும் மொயின் அலி ஸ்வீப் செய்ய பெரிய முறையீடு மீண்டும் தர்மசேனா கையை உயர்த்தினார், மீண்டும் மொயின் அலி ரிவியூ செய்தார். இம்முறையும் பந்து ஸ்டம்பு லைனுக்கு வெளியே பிட்ச் ஆனது ரிவியூவில் தெரியவர மீண்டும் அவுட் தீர்ப்பு நாட் அவுட் என்று மாற்றப்பட்டது. 6 பந்துகளில் 3 முறை தர்மசேனா கையை உயர்த்தி மூன்று முறையும் டி.ஆர்.எஸ். மொயீன் அலியை காப்பாற்றியது.

இதை விட வங்கதேசத்திற்கு வேதனையான நகைமுரண் என்னவெனில் மொயின் அலி 1 ரன்னில் இருந்த போது மெஹெதி ஹசன் மிராஸ் பந்து கால்காப்பை தாக்க பெரிய முறையீடு எழுந்தது, ஆனால் நடுவர் நாட் அவுட் என்றார், இதனை வங்கதேசம் டி.ஆர்.எஸ். மேல்முறையீட்டு தீர்ப்பை கேட்டிருந்தால் அவுட் என்று தீர்ப்பாகியிருக்கும்.

இந்த தப்பித்தல்களினால் மொயின் அலி தற்போது 63 ரன்களுடன் ஆடி வருகிறார்.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட் செய்ய முடிவெடுத்தது. அறிமுக வீரர் டக்கெட் 14 ரன்களில் அறிமுக ஸ்பின் பவுலர் மெஹெதி ஹசன் மிராஸிடம் பவுல்டு ஆகி வெளியேறினார்.

கேப்டன் அலிஸ்டர் குக் 26 பந்துகளில் 4 ரன்களை எடுத்து ஷாகிப் அல் ஹசனின் நன்றாகத் திரும்பிய பந்து ஒன்றில் பவுல்டு ஆனார்.

பாலன்ஸ் களமிறங்கி 7 பந்துகளில் 1 ரன் எடுத்து மெஹதி ஹசன் மிராஸ் பந்தில் எல்.பி.ஆனார். இதுவும் ரிவியூவில் வந்த அவுட்தான்.

ஜோ ரூட் தனது வழக்கமான பாணியில் சரளமாக 49 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து மெஹதி ஹசன் மிராஸ் பந்தில் எட்ஜ் செய்து வெளியேறினார். ஸ்டோக்ஸ் களமிறங்கி ஒரு சிக்சருடன் 18 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசனின் மீண்டும் ஒரு நல்ல திருப்பம் கண்ட பந்தில் பவுல்டு ஆனார்.

இவர் அவுட் ஆகும் போது வங்கதேசம் 106/.5 என்று திணறியது. அதன் பிறகுதான் மொயின் அலி ஒரு முறை ரிவியூ செய்யப்படாமலும் 3 முறை ரிவியூ செய்தும் தப்பித்தார், கடைசியில் 68 ரன்களில் மெஹதி ஹசன் மிராஸ் பந்தில் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இம்முறை சந்தேகமில்லை.

அறிமுக வீச்சாளர் மெஹதி ஹசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் 19 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ 40 ரன்களுடனும் கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். மொயின் அலி, பேர்ஸ்டோ இணைந்து 88 ரன்களை 6-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

http://tamil.thehindu.com/sports/அவுட்-ஆன-3-முறையும்-டிஆர்எஸ்சில்-தப்பிய-மொயின்-அலி-இங்கிலாந்து-அணி-திணறல்/article9245254.ece?homepage=true

  • தொடங்கியவர்

விறுவிறுப்பான கட்டத்தில் வங்கதேசம்-இங்கிலாந்து டெஸ்ட்

 

 
 
  • 5 விக்கெட்டுகளை 2-வது இன்னிங்ஸில் கைப்பற்றிய ஷாகிப் அல் ஹசன், பென்ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்ப்ற்றிய மகிழ்ச்சியில். | படம். ஏ.பி.
    5 விக்கெட்டுகளை 2-வது இன்னிங்ஸில் கைப்பற்றிய ஷாகிப் அல் ஹசன், பென்ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்ப்ற்றிய மகிழ்ச்சியில். | படம். ஏ.பி.
  • பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். | படம். கெட்டி இமேஜஸ்.
    பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். | படம். கெட்டி இமேஜஸ்.

சிட்டகாங் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் வங்கதேசத்தை 248 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 228/8 என்று மொத்தம் 273 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 2-வது இன்னிங்ஸில் 62/5 என்று கடுமையாகப் போராடிய இங்கிலாந்தை தனது 85 ரன்கள் இன்னிங்ஸினால் ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தி இங்கிலாந்தை மீட்டார். இவரும், ஜானி பேர்ஸ்டோவும் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக பேட்டிங்கிற்கு பகைமையான பிட்சில் 127 ரன்களைச் சேர்த்தது இந்த டெஸ்ட் போட்டியின் திருப்பு முனை அம்சமாகும். பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களை தன் இன்னிங்சில் அடித்தார்.

இருவரும் இன்றைய தினத்தின் கடைசி மணி நேரத்தில் ஆட்டமிழந்தாலும் இங்கிலாந்துக்கு வெற்றி நம்பிக்கை அளிக்கும் ஒரு முன்னிலையை உறுதி செய்தனர். ஷாகிப் அல் ஹசன் அருமையாக வீசி 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

221/5 என்று இன்று காலை தொடங்கிய வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன் (31), 2-வது பந்திலேயே மொயின் அலி (3/75) பந்தை மேலேறி வந்து விளாச முயன்று ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார்.

அடில் ரஷித் (2/58) இரவுக்காவலன் ஷபியுல் இஸ்லாம் (2) விக்கெட்டை வீழ்த்த பிறகு ஸ்டோக்ஸ் இன்னிங்ஸை முடித்து வைத்தார். மெஹதி ஹசனை ஸ்டோக்ஸ் எல்.பி.செய்தார். சபிர் ரஹ்மான் (19) அலிஸ்டர் குக்கின் கேட்சிற்கு ஆட்டமிழந்தார். பிறகு கடைசி விக்கெட்டாக கம்ருல் இஸ்லாம், ஸ்டோக்ஸ் பந்தை ஆடாமல் விட்டு பவுல்டு ஆக ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வங்கதேசம் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

45 ரன்கள் என்ற எதிர்பாராத முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து தொடக்க வீரர்கள் அலிஸ்டர் குக், டக்கெட் ஆகியோர் தொடக்கத்திலேயே இருமுனைகளிலும் ஸ்பின் சோதனையை எதிர்கொள்ள நேரிட்டதில் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டனர். அலிஸ்டர் குக் மெஹதி ஹசன் பந்தை எட்ஜ் செய்ய மஹமுதுல்லா கேட்ச். குக் 12 ரன்களில் அதிர்ச்சி வெளியேற்றம் கண்டார். ஜோ ரூட் 1 ரன் எடுத்து மேலும் அதிர்ச்சிகரமாக ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆன பந்தை முன் கூட்டியே ஸ்வீப் செய்ய தயாராகி ஆடியதால் ஷாகிபிடம் எல்.பி.ஆகி வெளியேறினார்.

உணவு இடைவேளைக்கு முன்னதாக டக்கெட் (15), ஷாகிப் பந்தை ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 29/3 என்று தடுமாறியது. உணவு இடைவேளைக்குப் பிறகு உடனேயே கேரி பாலன்ஸ் (9) தைஜுல் இஸ்லாம் பந்தை ஸ்வீப் செய்து இம்ருல் கயேஸிடம் லெக் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதே ஸ்வீப் ஷாட்தான் ஷாகிப் பந்தில் மொயின் அலியையும் காவு வாங்கியது. முஷ்பிகுர் ரஹிம் நன்றாக அதனைப் பிடித்தார். 62/5 என்ற நிலையில் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ இணைந்தனர்.

இருவரும் நிதானமாக ஆடி தேநீர் இடைவேளையின் போது மேலும் சேதமில்லாமல் 108/5 என்று ஸ்கோரை உயர்த்தினர். அதன் பிறகு வங்கதேச பவுலர்கள் நெருக்கடியை ஏற்படுத்தவில்லை, இதனால் ஸ்டோக்ஸ் தனது அரைசதத்தை மிட்விக்கெட்டில் அடித்த புல்ஷாட் சிக்ஸ் மூலம் கிராண்டாக எட்டினார்.

உறுதுணையாக ஆடிய விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ ஒரு காலண்டர் ஆண்டில் விக்கெட் கீப்பராக அதிக ரன்களை எட்டிய சாதனையை நிகழ்த்தினார். இவர் 47 ரன்களில் இருந்த போது வங்கதேச சீம் பவுலர் கம்ருல் பந்தில் பிளேய்ட் ஆன் ஆனார். ஸ்டோக்ஸ் ஸ்வீப் ஷாட்டிற்கு ஷாகிபிடம் சற்று நேரம் கழித்து வெளியேறினார். ரஷீத்தையும் ஷாகிப் எல்.பியில் வீழ்த்தினார். ஆட்ட முடிவில் கிறிஸ் வோக்ஸ் 11 ரன்களுடனும் பிராட் 10 ரன்களுடனும் களத்தில் இருக்க இங்கிலாந்து 228/8 என்று 273 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஷாகிப் அல் ஹசன் 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/விறுவிறுப்பான-கட்டத்தில்-வங்கதேசம்இங்கிலாந்து-டெஸ்ட்/article9256117.ece

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

#BANvENG பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே இதுவரை நடந்த டெஸ்ட் தொடர்களின் பார்வை – நாளை வரலாறு படைப்பார்களா வங்கப் புலிகள் ?

FB_IMG_1477232709291.jpg

#BANvENG  பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே இதுவரை நடந்த டெஸ்ட் தொடர்களின் பார்வை – நாளை வரலாறு படைப்பார்களா வங்கப் புலிகள் ?

இதுவரை இரு அணிகளுக்கிடையும்  4 டெஸ்ட்  தொடர்கள் (இரு தொடர் இங்கிலாந்திலும் இரு தொடர் பங்களாதேஷிலுமாக) நடந்தேறியுள்ளன. 2003/04 பருவகாலத்திலேயே முதல் முறையாக  டெஸ்ட் அரங்கில் இரு அணிகளும் ஒன்றை ஒன்று சந்தித்தனர். இது இரு அணிகளிடையேயான ஐந்தாவது டெஸ்ட் தொடராகும்.

மொத்தமாக நான்கு தொடரிலும் நடந்த எட்டு டெஸ்ட் போட்டிகளிலும் கிரிக்கெட்டின் தாயகம் வென்றுள்ளதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளிடையேயான டெஸ்ட் தொடரில் ஒரு அணி, ஒரு இன்னிங்சில் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இங்கிலாந்து 2010 ம் ஆண்டு பகுளாதேஷின் சிட்டகொங் நகரில் ஆறு இலக்குகளை இழந்து குவித்த 599 ஓட்டங்கள் காணப்படுகிறது. பங்களாதேஷ் இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற அதிக ஓட்ட எண்ணிக்கையாக 2010 ம் ஆண்டில் டாக்காவில் பெற்ற 419 ஓட்டங்கள் காணப்படுகிறது.

குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் பங்களாதேஷின் 104 ஓட்டங்கள் காணப்படுகையில் வங்கப் புலிகளுக்கு எதிரான இங்கிலாந்தின் குறைந்த ஓட்டமாக 295 காணப்படுகிறது.

fb_img_1477232640403

மிகப்பெரிய வெற்றியாக, இன்னிங்ஸ் அடிப்படையில் 2005 இல் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பெற்ற இன்னிங்ஸ் மற்றும் 261 ஓட்டங்களான வெற்றியும் ஓட்டங்கள் அடிப்படையில் 2003 இல் சிட்டகொங்கில் இங்கிலாந்து பெற்ற 329 ஓட்டங்களான வெற்றியும் இலக்குகள் அடிப்படையில் இங்கிலாந்தின் 9 இலக்குகளாக வெற்றியும் காணப்படுகிறது.

இரு அணிகளிடையேயான டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்கள் குவித்தவராக, இங்கிலாந்து சார்பில் இயன் பெல் ஆறு  போட்டிகளில் பங்கெடுத்து வெறுமனே 7 இன்னிங்சில் 633 ஓட்டங்களையும் பங்களாதேஷ் சார்பில் தமீம் இக்பால் ஐந்து போட்டிகளில் (8 இன்னிங்ஸ்களில்) 505 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

இதுவரையான போட்டிகளில் இரு அணி வீரர்களுமாக 14 சதங்களை குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சை பொறுத்தமட்டில் இங்கிலாந்தின் ஹொக்கர்ட் என்ற பந்து வீச்சாளர் 4 போட்டிகளில் பங்கெடுத்து 23 இலக்குகளை வீழ்த்தியுள்ளார். பங்களாதேஷ் சார்பில் பங்களாதேஷின் சகலதுறைவீரர் சாகிப் அல் ஹசன் அதிக படியாக 19 இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.

253892

இதுவரை, 11 தடவைகள் (ஒரு இன்னிங்ஸில்) ஐந்து இலக்கு பெறுதிகள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் ட்ரெஸ்கோதிக் அதிக பிடியெடுப்புகளை (8 பிடியெடுப்புக்கள்) மேற்கொண்டுள்ளார்.

ME ட்ரெஸ்கோதிக், MP வாகன் ஆகியோர் லார்ட்ஸில் 2005 ம் ஆண்டில் தங்களிடையே பகிர்ந்து கொண்ட 255 ஓட்டங்களே அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாக இருக்கிறது. ஆனால் வெறுமனே 8 போட்டிகளில் 22 சத இணைப்பாட்டங்கள் இரு அணிகளிடையேயான டெஸ்ட் போடடிகளில் பெறப்பட்டுள்ளது.

(தரவுகள் யாவும் இந்த தொடருக்கு முந்தைய போட்டிகளின் படியாகும்)

இரு அணிகளிடையே கடந்த 20ம் திகதி ஆரம்பமான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி  சிட்டகொங்கில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது போட்டி மிர்பூரில் நடைபெறும்.

இப் போட்டியில் பங்களாதேஷ் சார்பில் மூன்று வீரர்கள் (சப்பிர், மெஹெடி, கம்ருல்) அறிமுகமாகி இருந்தனர். ஆனால் பங்களாதேஷுக்கு அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமான இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிகுர் ரஹ்மான், காயம் காரணமாக போட்டிகளில் பங்கெடுக்காது வருகின்றமை பெரும் இழப்பே.

இங்கிலாந்து சார்பிலும் பென் டக்கெட் என்ற இளம் நட்சத்திரம் அறிமுகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் தன் சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் ஒருநாள் சர்வதேச தொடரை இழந்து இருந்தாலும் அண்மைக்காலமாக இளம் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அடைந்து வரும் வளர்ச்சி, (அதுவும் தன்  சொந்த மண்ணில் ஆடுவதால்) இங்கிலாந்துக்கு மிகப் பெரிய ஒரு போராட்டத்தை வழங்கும். அல்லது ஒருபடி மேல் சென்று இங்கிலாந்திற்கு அதிர்ச்சியை கொடுத்து வெற்றி பெற்று வரலாறு படைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

fb_img_1477232689975

இந்நிலையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இறுதி நாளான நாளை பங்களாதேஷ் வெற்றி பெற்று வரலாறு படைக்க இரு விக்கெட் கைவசமுள்ள நிலையில் 33 ஓட்டங்கள் தேவையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் இத்தொடர் விறு விறுப்பான நல்ல தொடராக அமையும் என்பதில் ஐயமில்லை.

 

fb_img_1477232640403 fb_img_1477232668641 fb_img_1477232689975 fb_img_1477232701173 fb_img_1477232709291

http://www.reeshinternational.com/vilaiyattu/கிரிக்கெட்-செய்திகள்/banveng-பங்களாதேஷ்-மற்றும்-இங்/

  • தொடங்கியவர்



பங்களாதேஷை வென்றது இங்கிலாந்து
 

article_1477303676-TamileedeLEAD_2410201பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், மிகவும் இறுக்கமான போட்டியில், சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், பங்களாதேஷ் அணி 22 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

சிட்டகொங்கில் இடம்பெற்ற இப்போட்டியில், 5ஆவது நாளான இன்று, 2 விக்கெட்டுகள் கைவசமிருக்க, 33 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, மேலதிகமாக 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, இறுதி 2 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. அவ்வணிக்காகத் தனித்துப் போராடிய அறிமுக வீரர் சபீர் ரஹ்மான், ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களுடன், மைதானத்தில் கவலையுடன் நின்ற காட்சி, அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இங்கிலாந்து அணிக்காக சகலதுறைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தியதோடல்லாமல், இன்று வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இங்கிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ், இப்போட்டியின் நாயகனாகத் தெரிவானார்.

ஸ்கோர் விவரம்...

இங்கிலாந்து 293/10 (துடுப்பாட்டம்: மொய்ன் அலி 68, ஜொனி பெயர்ஸ்டோ 52, ஜோ றூட் 40, கிறிஸ் வோக்ஸ் 36. பந்துவீச்சு: மெஹெடி ஹஸன் மிராஸ் 6, ஷகிப் அல் ஹஸன் 2, தைஜுல் இஸ்லாம் 2 விக்.)

பங்களாதேஷ் 248/10 (துடுப்பாட்டம்: தமிம் இக்பால் 78, முஷ்பிக்கூர் ரஹீம் 48, மகமதுல்லா 38, ஷகிப் அல் ஹஸன் 31. பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 4, மொய்ன் அலி 3, அடில் றஷீட் 2 விக்.)

இங்கிலாந்து 240/10 (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 85, ஜொனி பெயர்ஸ்டோ 47. பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 5, தைஜுல் இஸ்லாம் 2 விக்.)

பங்களாதேஷ் 263/10 (துடுப்பாட்டம்: சபீர் ரஹ்மான் ஆட்டமிழக்காமல் 64, இம்ருல் கைஸ் 43, முஷ்பிக்கூர் ரஹீம் 39. பந்துவீச்சு: கரித் பற்றி 3, பென் ஸ்டோக்ஸ் 2, மொய்ன் அலி 2, ஸ்டுவேர்ட் ப்ரோட் 2 விக்.

http://www.tamilmirror.lk/184617/பங-கள-த-ஷ-வ-ன-றத-இங-க-ல-ந-த-

  • தொடங்கியவர்

வரலாற்று வெற்றிக்கு அருகில் வந்து தோற்ற வங்கதேசம்

 

 
64 ரன்களில் ஒரு முனையில் தேங்கிய சபீர் ரஹ்மான் சோகம். ஆறுதல் கூறும் ஸ்டூவர்ட் பிராட். | படம்: ஏ.பி.
64 ரன்களில் ஒரு முனையில் தேங்கிய சபீர் ரஹ்மான் சோகம். ஆறுதல் கூறும் ஸ்டூவர்ட் பிராட். | படம்: ஏ.பி.

சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 22 ரன்கள் வித்தியாசத்தில் நெருக்கமான தோல்வி தழுவி ஏமாற்றமடைந்துள்ளது வங்கதேசம்.

வெற்றிக்குத் தேவையான 286 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்கதேசம் இம்ருல் கயேஸ் (43), சபீர் ரஹ்மான் (64), முஷ்பிகுர் (39) ஆகியோர் பங்களிப்பின் மூலம் போராடி 4-ம் நாள் ஆட்ட முடிவில் நேற்று 258/8 என்று இருந்தது. சபீர் ரஹ்மான் 59 ரன்களுடனும் தைஜுல் இஸ்லாம் 11 ரன்களுடனும் நேற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆனால் இன்று சபீர் 64 ரன்களில் நிற்க, எதிர்முனையில் தைஜுல் இஸ்லாம் மற்றும் ஷபியுல் இஸ்லாம் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் பென் ஸ்டோக்ஸ் எல்.பி.முறையில் கைப்பற்றி கனவைத் தகர்த்தார்.

263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இன்று இழந்து சபீர் ரஹ்மானின் கடும் அதிருப்திக்கு மத்தியில் வரலாற்று வெற்றி வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்து கடைசி வரை தனது உறுதியை விட்டுக்கொடுக்காமல் ஆடியது.

94 டெஸ்ட் போட்டிகளில் தங்களது 8-வது டெஸ்ட் வெற்றி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 9 டெஸ்ட்களில் முதல் வெற்றி என்ற கனவுகளை தன்னகத்தே கொண்டு ஆடிய வங்கதேசம் உண்மையில் அபாரமாக இங்கிலாந்தை தோல்வி அச்சுறுத்தலுக்குள்ளாக்கியது.

வெற்றி பெற 33 ரன்கள் என்று தொடங்கிய வங்கதேச வீரர்களில் சபீர் முதலில் கவர் திசையில் 2 ரன்களை எடுக்க, தைஜுல் இஸ்லாம் ஸ்டோக்ஸின் ஷார்டிபிட்ச் பந்தை கீப்பர் தலைக்கு மேல் பவுண்டரி அடித்தார். புதிய பந்து எடுக்கலாம் என்ற நிலையில் அலிஸ்ட குக் பழைய பந்திலேயே தொடர்ந்தார், ஏனெனில் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்சில் பழைய பந்தில் அபாரமாக ரிவர்ஸ் ஸ்விங் செய்தார்.

இந்தப் போட்டியில் மொத்தம் 26 முறை டி.ஆர்.எஸ். முறையினால் தீர்ப்பு வழங்கவோ அல்லது வழங்கிய தீர்ப்பை மாற்றி அமைக்கவோ முடிந்துள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

81-வது ஓவரை வீசிய பிராடின் கடைசி பந்தில் தைஜுல் சிங்கிள் எடுத்தார். இதுவே முடிவுக்கு வழி வகுத்தது, 82-வது ஓவரில் ஸ்டோக்ஸ் சம்பிரதாயத்தை முடித்து வைத்தார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை ஸ்டோக்ஸ் கைப்பற்ற கையாலாகாத்தனத்துடனும், வேதனையுடனும் சபீர் 64 ரன்களில் ஒரு முனையில் நின்றார் வியர்த்தமாக. அந்த சிங்கிளை எடுக்காமல் இருந்திருக்கலாம். ஒரு சிறிய முடிவு ஆட்டத்தின் விதியையே மாற்றுவது என்பதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு சிறப்பு வாய்ந்த குணாம்சம்.

இன்னும் ஒரு போட்டி இருக்கும் நிலையில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அணியில் பாட்டீ 3 விக்கெட்டுகளையும் மொயின் அலி, பிராட், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். வோக்ஸ், ரஷீத் ஆகியோர் முறையே ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/வரலாற்று-வெற்றிக்கு-அருகில்-வந்து-தோற்ற-வங்கதேசம்/article9261865.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.