Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் தீர்மானத்தை எதிர்த்தார் டெனீஸ்வரன்!

Featured Replies

கூட்டமைப்பின் தீர்மானத்தை எதிர்த்தார் டெனீஸ்வரன்!

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதில் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு ஆதரவாக வடக்கு மாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப. டெனீஸ்வரன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று முன்தினம் வவுனியா மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் தற்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் குருகுலராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் றிசாட் பதியுதீன் இணைத் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கூடி வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைப்பது என்பது தொடர்பாகத் தீர்மானம் எடுத்தனர்.

அதன்படி பொருளாதார மத்தியம் நிலையம் ஓமந்தையில் அமைக்கவேண்டுமெனவும், அதற்கான வேலைகளை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் முதலமைச்சர் ஆரம்பிக்கவேண்டுமெனவும், இல்லாவிட்டால் தாண்டிக்குளம் காணியை வழங்கவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த தீர்மானத்திற்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனைவரதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக இணைத்தலைவரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

இதன்போது அமைச்சர் டெனீஸ்வரன் தாண்டிக்குளந்தான் எனது விருப்பம். அதைத் தரவில்லை, தற்போது ஏன் அதைக் குழப்புகிறீர்கள் என அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு ஆதரவான கருத்தை முன்வைத்தார்.

இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு டெனீஸ்வரனுக்கும் மீண்டும் வாய்த்த தர்க்கம் ஏற்பட்டது.

http://thuliyam.com/?p=46074

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.