Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் கோத்தபாய ராஜபக்ஷ துணை ஆயுதக்குழுக்களை வழிநடாத்தினார் – பொன்சேகா!

Featured Replies

அண்மைக்காலகமாக யாழ்ப்பாணத்தைக் கலக்கிவரும் ஆவா குழுவினருக்குப் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவே உள்ளார் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஆவா குழுவினருடன் இராணுவத்துக்கு எந்தவிதத் தொடர்புமில்லையென்பதுடன், தான் போர்க்களத்தில் கடமையாற்றியபோது முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ வடக்குக், கிழக்கில் துணை இராணுவக் குழுக்களை உருவாக்கி செயற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கோத்தபாய ராஜபக்ஷவே கருணா, பிள்ளையான் போன்றோருடனும் இணைந்து செயற்பட்டதாகவும், ஆவாக் குழுவுடன் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் இருந்தால் நிச்சயமாக அதற்குப் பின்னால் கோத்தபாய ராஜபக்ஷவே இருக்க வேண்டுமெனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=47660

  • தொடங்கியவர்

ஆவாகுழுவும் இராணுவமும்; அமைச்சர்கள் மோதல் இன்னும் தகவல்களை வெளியிடுவேன் - ராஜித

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவுக்கும் இராணுவத்துக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக வெளியிடப்பட்டுவரும் தகவல்களால் அரசாங்கத்தின் முக்கிய இரு அமைச்சர்களிடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது. ஆவா குழு தொடர்பில் தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜவர்த்தனவுக்குமிடையிலேயே இம் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆவா குழுவை உருவாக்கியவர்கள் தொடர்பில் விரைவில் இன்னும் அதிகமான தகவல்கள் எனக்கு கிடைக்கும். அப்போது நான் அவற்றை வெளிப்படுத்துவேன் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரதுறை அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆவா குழுவுடன் முழு இராணுவம் தொடர்புபட்டுள்ளதாக நான் கூறவில்லை. மாறாக கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், ஒரு சில இராணுவ அதிகாரிகளுமே ஆவா குழு உருவாக்கத்தில் தொடர்புபட்டிருந்ததாக நான் தெரிவித்திருந்தேன். 
யுத்தம் செய்த இராணுவ வீரர்கள் எதனை செய்தாலும் அதனை சரியென்று ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கு யார் விரும்புகிறார்களோ, அவர்களே ஆவா குழுவை உருவாக்கியிருப்பர்.

ஆனால் முன்னைய அரசாங்கத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் ஒரு சில இராணுவ அதிகாரிகளுமே இந்தக் குழுவை உருவாக்கியதாக நான் குறிப்பிடுகின்றேன். 
எனது கூற்றை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய மறுத்திருந்தார். இதற்காக அனைத்தையும் இராணுவ வீரர்கள் செய்தார்கள் என்று கூறிவிட்டு வெறுமனே இருந்து விடமுடியாது. முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இராணுவ வீரர்கள் யுத்தம் செய்து நாட்டை மீட்டனர் என்பதற்காக அவர்கள் செய்த தவறுகளை அனுமதிக்க முடியாது என அமைச்சர் ராஜித குறிப்பிட்டார்.
எனினும் ஆவா குழுவுடன் இராணுவமோ அல்லது முன்னாள் போராளிகளோ தொடர்புபட்டிருக்கவில்லை என்று இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு - நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் மாலை நடைபெற்றது.
இதன்போது அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வினவினர்.

இதுகுறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. எமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இளைஞர்கள் குழுவொன்று தென்னிந்தியத் திரைப்படத்தைப் பார்த்து உருவாகிய நிலையே காணப்படுகின்றது. அவர்களது உறவினர்கள் அனைவரும் புலம்பெயர் நாடுகளில்தான் உள்ளனர். இவர்கள் தொழில் வாய்ப்பற்ற குழுக்கள். வெளிநாடுகளில் உறவினர்கள் அனுப்புகின்ற பணத்தை வைத்துக்கொண்டு நாள் முழுவதும் மோட் டார் சைக்கிள்களை வைத்து மக்களுக்கு இடையூறு விளைவித்து வருகின்றனர். பய ங்கரவாதிகளோ அல்லது இராணுவத்தினரோ இதனுடன் தொடர்புபடவில்லை. சட்டம், ஒழுங்குடன் காணப்படுகின்ற பிரச்சினையாகும். எனவே தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெறுவதோடு, சிலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர் என்றார்.

மேலும் ஆவா குழுவுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாயவும், இரா ணுவ அதிகாரி ஒருவரும் தொடர்புபட்டிருப்பதாக கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலும், அதேபோல நேற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்த பகிர ங்க குற்றச்சாட்டை நான் நிராகரிப்பதாகவும் ருவன் விஜயவர்த்தன தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் ராஜித சேனா ரத்னவின் குற்றச்சாட்டை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் முற்றாக மறுத்திருப்பதன் ஊடாக அரசாங்கத்திற்குள் ஆவா குழு தொட ர்பாக கருத்து மோதல் இருப்பது அம்பலமா கியுள்ளது.     

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12354&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.